Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கோர்வாட் அனுபவங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான படங்களையும்,தகவல்களையும் இணைக்கும் ஆதித்ய இளம்பிறையனுக்கு நன்றிகள். தொடருங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14835592214_4f6dde9def_o.jpg

 

 

அருமையான புகைப்படங்களுடன் தகவல்கள்.

 

கலாச்சார ரீதியில் தாய்லாந்தும் கம்போடியாவும் ஒரேமாதிரி தோன்றுகிறது.

 

பகிர்விற்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் தகவல்களுக்கும், படங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் ஆதித்ய இளம்பிறையன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://www.facebook.com/photo.php?v=10154365277455637 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

நிழற்படம் நன்று. இணைப்பிற்கு நன்றி சுபேஸ்.

அங்கோர்வாட்டை கட்டியது தமிழன்தான் என்று சும்மா சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்க்கான காரணங்களையும் தெளிவாகசொல்ல வேண்டும். இல்லையென்றால் நமக்கு நாமே சொல்லி சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான்.

உங்கள் பயண அனுபவங்களின் தொகுப்பும் படங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றது.  தொடருங்கள் நன்றி!

  • தொடங்கியவர்

தொடர்ந்து உற்சாகப்படுத்தும் ராசவண்ணியன் , சுபேஸ் , யாயினி மற்றும் தமிழினிக்கு எனது நன்றிகள்.

அங்கோர்வாட் கோவில் கிட்டத்தட்ட 600 அடி அகலம் கொண்ட அகழிகளால் நாற்புறமும் சூழப்பட்டுள்ளது. அகழிகளுக்கு நடுவே உள்ள இடத்தின் மொத்த அடக்கம் நான்கரை கிலோ மீட்டர். இந்தக் கோவிலின் நுழைவு வாயில் மேற்கு திசையில் உள்ளது. மேற்கு திசையில் உள்ள நுழைவாயிலை அடைந்ததும் கற்களால் செய்யப்பட பாலத்தை உபயோகித்து அகழியை கடக்க வேண்டும். அகழியை கடந்ததும் வெளிப்புற வாயிலை அடையலாம். வெளிப்புற வாயிலில் சிறிய கோபுரம் உண்டு. இங்கு உள்ள கற்களில் தேவதை சிற்பங்கள் ஆங்காங்கே செதுக்கப்பட்டிருக்கும். வெளிப்புற வாயிலைக் கடந்ததும் அரை கிலோ மீட்டருக்கு ஒரு கற்பாதை உள்ளது. இதன் இருமருங்கிலும் நாக உருவங் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்படிருக்கிறது. இந்தக் கற்பாதை தரையிலிருந்து சுமார் 10 மீட்டர் உரத்தில் இருக்கிறது. பாதிக்கு அப்பால் உள்ள சமவெளிகள் புற்களாகவே இருக்கிறது. முன்னாளில் அங்கேயும் தண்ணீர் இருந்திருக்குமோ என்னவோ?? அதற்க்கான அடையாளங்கள் அதிகம் தென்பட்டன.

14673111609_d425307bdc_b.jpgஇரண்டாவது நுழைவாயிலை நோக்கி by aavai_murali, on Flickr

பாதையின் முடிவில் இரண்டாவது கூடத்தை அடையலாம். இந்தக் கூடத்தில் தான் அங்கோர்வாட்டை உலகிற்கு பேரதிசயமாக உணர்த்தியச் சிற்பங்கள் சுவர்களில் வடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது நுழைவாயிலை அடைந்ததும் வலதுபுறமாக திரும்பினால் அந்தச் சுவர்களில் முதலில் இருப்பது மகாபாரதப் போர் சிற்பங்கள் தான்.  சிற்பங்களில் முதலில் வீர்கள் அணிவகுத்து வருகிறார்கள் பின்பு தளபதிகள் தேர்களிலும் யானைகளிலும் வருகிறார்கள். பின்பு போர் உக்கிரத்தை அடைகிறது, பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடத்தி வைக்கப்படிருக்கிறார்(படம் பார்க்க:பீஷ்மர் அம்பு படுக்கையில் - அங்கோர்வாட் சுவர்). பக்கத்திலே ஐந்து பாண்டவர்களையும் காண முடிகிறது. காண்ணன் தேர்ச் சக்கரத்தை தூக்குவதையும் காண முடிந்தது. அடுத்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுக்கும் சிற்பம் அதைத் தொடர்ந்து சூர்யவர்மன் போர்கள் .. அவன் காலத்தில் மக்கள் ஆட்சி.

14673120568_2e014b6741_b.jpgகர்ணன் தேர்ச் சக்கரத்தை தூக்குவது by aavai_murali, on Flickr

அப்புறம் இராமாயணம். வாலியின் உடலை வைத்துக்கொண்டு மற்ற குரங்குகள் சோகம் சொட்ட அமர்ந்து இருப்பது.

14856658231_0f31fabf80_b.jpgவாலியின் உடலுடன் மற்ற வானரங்கள் by aavai_murali, on Flickr

பதிவுக்கு நன்றிகள் ஆதித்ய இளம்பிறையன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமை இளம்பிறையன் கட்டுரையும் படங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதித்ய இளம்பிறையன்.

  • தொடங்கியவர்

வேந்தன், சுமேரியர் மற்றும் யாயினி உங்களது உற்சாகத்திற்கு நன்றி.

எழுத நேரம் கிடைக்காமையால் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் நேரத்தில் எழுத வேண்டி இருக்கிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும் கள உறவுகளே..

இரண்டாவது கோபுரத்தை சுற்றி முடித்ததும் செங்குத்தாக உள்ள படிகளில் ஏறி மூன்றாவது கோபுரத்தை அடைந்தாகி விட்டது. அங்கு விஸ்ணு சிலைக்குப் பதிலாக புத்தர் சிலையைத்தான் காண முடிந்தது. சித்திரங்களை ஒவ்வொரு கல்லாக பார்த்து ரசித்தாயிற்று. கிட்டத்தட்ட மதியம் மூன்று மணியை நெருங்கி விட்டது. கோவிலைச் சுற்றியுள்ள கானகமும், கானகத்திலிருந்து வரும் காற்று அகழியில் அமிழ்ந்து குளிர்ந்த தென்றலாய் வருடும்போது வியர்வை உறையுமே... ஆகா அந்த சில்லென்று ஒரு சிலிர்ப்பு !! சில நொடிகளே நின்று சென்றாலும் நினைவை விட்டகலாது. அயற்சியின் காரணமாக அங்கேயே தூங்கி விடலாம் என்று தோன்றியது.

காது அடைக்க ஆரம்பித்துவிட்டது. செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கு ஈய வேண்டும் தானே.. பக்கத்தில் இருக்கும் கடையை தேட ஆரம்பித்தோம். செல்லும்போதே சின்னக் சின்னக் குழந்தைகள் எங்க கடைக்கு வாங்க...  எங்க கடைக்கு வாங்க.. என்று பிடித்து இழுக்காத குறைதான்.. "ஏஞ்சலினா ஜோலி கடை எண் 3" என்று எழுதப் பட்ட கடைக்கு சென்றோம்.  தாகத்தை தீர்க்க ஒரு இளநீரும் கொஞ்சம் சோறு, காய்கறி கலந்த குருமா(vegetable curry). "ம்ம்ம் திவ்யம்மான சாப்பாடு!! "

14876490101_0389f62677_o.jpgமதிய உணவு by aavai_murali, on Flickr

இங்கிருந்து கிளம்பும் போதே என் நண்பன் ஒருவன் சொன்னான். "மச்சி போனவுடனே ஒரு துண்டு வாங்கிப போட்டுக்கோ.. !! அந்த ஊர் ஆளு மாதிரியே இருக்கும் என்று" சாப்பிட்டு முடித்ததும் சரி ஒண்ணு  வாங்குவமே என்று விசாரிக்க ஆரம்பித்தோம்..

பதின்ம வயதில் இருந்த அந்த பெண் பார்ப்பதற்கு ஒன்றும் அழகு இல்லை. ஆனால் அந்தக் கனிவான பார்வையும், குளிர்ந்த மொழியும், பேசிய தொனியும்.. என்ன விலை சொன்னதோ அதற்க்கு அதிகமாக ஒரு டாலர் கொடுத்துவிட்டு வந்தோம். சில நிமிடங்களே பேசினாலும் அடுத்த நாள் முழுவதும் அந்தப் பெண் முகம் அடிக்கடி அடிக்கடி நினைவில் வந்து சென்றது. அப்படி ஒரு வசீகர பேச்சு..   அங்கோர்வாட்டின் அகலாத நினைவுகளில் அந்த பெண் சித்திரமும் ஒன்று .. கற்சிற்பங்களோடு அந்தக் கன்னியின் முகமும் கலந்து விட்டது.

மாலையில் அங்கோர்வாட் கோவிலுக்கு அருகே (700 மீட்டர்) தொலைவில் மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது.

அதற்க்கு "பினாம் பேக்கன்(Phnom Bakheng)" எற்று பெயர். அங்கு சூரியன் மறையும் நேரம் அருமையாக இருக்கும் என்று சொன்னார்கள்.இந்தக் கோவில் அங்கோர்வாட் கட்டுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

14856417636_6af926f673_b.jpgசிவன் கோவில் by aavai_murali, on Flickr

14879060242_1f2563bbb2_b.jpgசிவன் கோவில் by aavai_murali, on Flickr

  • தொடங்கியவர்

இணையத்தில் கிடைத்த சில படங்கள்

 

phnom-bakheng-sunset-panorama-view.jpg

Bakheng%281%29.jpg

 

phnom_bakheng_sunset_view.jpg

 

phnom_bakheng_best_sunset.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.