Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வை இழுத்தடித்தால் மீண்டும் வெடிக்கும் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தீர்வை இழுத்தடித்தால் மீண்டும் வெடிக்கும் போர்
news
por.jpg
தமிழ் மக்களின் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். தீர்வுக்குக் காலம் கடத்தினால் பிரச்சினை பூதாகரமாகும். மீண்டும் ஒரு போராட்டம் தோன்றக்கூடும். அது மிகவும் அபாயகரமானது. 
 
எம்மால் அதிலிருந்து மீள முடியாது என கோட்டை நாகவிகாராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான வண. மாதுலுவாவே சோபித தேரர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
இனவாத, மதவாத போராட்டம் ஆரம்பித்தால் அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கடந்த 30 வருட கால அனுபவம் எமக்கு இருக்கின்றது. மீண்டும் அவ்வாறான தொரு நிலை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியயழுப்ப வேண்டும். 
 
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையை ஏற்படுத்தினால் இந்தப் பயணத்தைத் தொடரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என எமது அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அதில் சர்வதேசதின் தலையீடுகள் இடம்பெறும். அது மிகவும் அபாயகரமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
 
இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வைக் காணப்து என்பது குறித்து நாம் இதுவரையில் எந்தத் தீர்மானமும் க்ஷ யோசனையும் முன்வைக்கவில்லை. ஏனெனில் நாம் அதைத் தனியாக செய்ய முடியாது. இனப்பிரச்சினை என்பது பாரிய ஒரு பிரச்சினையாகும். 
 
நாம்அனைவரும் ஒன்றிணைந்து பேச்சு நடத்திதான் அதற்கான தீர்வைக் காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
03 ஆகஸ்ட்டு 2014, ஞாயிறு 8:30 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்

  • கருத்துக்கள உறவுகள்

வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்

 

இதென்ன.... அநியாயமாய் கிடக்கு.

தலைப்பில் என்னவோ இருக்க..... மருதங்கேணி  என்னவோ எழுதுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த செய்திக்கு அடுத்து கறுப்பி இணைத்த இணைப்பின் தலைப்புதான் நான் பதிந்தது.
 
எனக்கு என்னமோ இரண்டு தலைப்பிற்கும் எதோ தொடர்பு இருப்பது மாதிரி தெரியு ....
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேரர் போன்றோரை உதாசீனம் செய்யாமல் ஆதரவு செய்து தெற்கில் ஒரு முற்போக்கு சிந்தையை கட்டி எழுப்புவது, தமிழ் அரசியல் கட்டிகளின் கடமை. செய்வார்களா?

#கட்சி#

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேரர் போன்றோரை உதாசீனம் செய்யாமல் ஆதரவு செய்து தெற்கில் ஒரு முற்போக்கு சிந்தையை கட்டி எழுப்புவது, தமிழ் அரசியல் கட்டிகளின் கடமை. செய்வார்களா?

#கட்சி#

 

முற்போக்கு சக்திகளை விட பிற்போக்கு சக்திகள்தான் அதிகம் தெற்கில்.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வார்த்தைகளால் எச்சரிக்காமல் இந்தத் தேரர் அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஆரம்பிப்பாரா ?

ஒரு இனவாதம் அதற்கு எதிரான இனவாதத்தை வளர்க்கும். எதிரானவர்கள் போல் மேலோட்டமாக தெரிந்தாலும் எல்லா இனவாதிகளும ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. முற்போக்கான சிங்கள சக்திகள் தமிழ் இன வெறியர்களை எரிச்சல் படுத்துகின்றன என்பதுற்கு இந்த களத்தில் வரும் கருத்துக்களே சாட்சி. தமிழருக்கெதிரான சிங்களவரின் நிகழ்வுகள் தமிழ் இனவாதிகளை குசிப்படுத்துகின்றன. தமிழருக்கு ஆதரவான சிங்களவரின் குரல்கள் தமிழ் இனவாதிகளை எரிசலடையவைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒரு தேரர் தெற்கில் பட்ட பாட்டை இத்தேரர் அறியாமல் இருப்பதால் இவர் அப்பாவி தேரர் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனவாதம் அதற்கு எதிரான இனவாதத்தை வளர்க்கும். எதிரானவர்கள் போல் மேலோட்டமாக தெரிந்தாலும் எல்லா இனவாதிகளும ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. முற்போக்கான சிங்கள சக்திகள் தமிழ் இன வெறியர்களை எரிச்சல் படுத்துகின்றன என்பதுற்கு இந்த களத்தில் வரும் கருத்துக்களே சாட்சி. தமிழருக்கெதிரான சிங்களவரின் நிகழ்வுகள் தமிழ் இனவாதிகளை குசிப்படுத்துகின்றன. தமிழருக்கு ஆதரவான சிங்களவரின் குரல்கள் தமிழ் இனவாதிகளை எரிசலடையவைக்கின்றன.

 

முற்போக்கு சக்திகள் என்றால் என்ன ?அடையாளம் காட்ட முடியுமா? ஒரு காலகட்டத்தில் வாசுதேவாநாணயக்கராவும் முற்போக்கு சக்திதான்.....சிறிலங்காவை பொருத்தவரை முற்போக்குசக்தி என்று ஒன்றுமில்லை எல்லோரும் இனவாத ,மதவாத சக்திதான்....முற்போக்குசக்தி என அடையாளம்காட்டி அரசியலுக்குள் வந்தவ்ர்கள் எல்லோரும் பின்பு பிற்போக்கு சக்தியாக போனது சிறிலங்காவின் சரித்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.