Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்ற மாதிரி படித்த ஞாபகம்.
 
  • Replies 128
  • Views 75.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 ஏன் விடைகள் பிழை என்று விளங்கப்படுத்துங்கோ வாத்தியார்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்ற மாதிரி படித்த ஞாபகம்.
 
குறுமை என்றால் என்ன அர்த்தம் ??? குறுகியதா ???

  • கருத்துக்கள உறவுகள்
வாத்தியார்! நான் எல்லாம் சரியாக எழுதினால் உங்கட விட்டில ஒருபெட்டி மாம்பழம் கொடுத்து வினாப்பகுதி 2 கேள்விபதில் பேப்பரைப் படித்த கதை வெளிவந்திடும் அதுதான் பிழையாய் எழுதினனான்.  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால்

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்றும்

குற்று + இயல் + உகரம் என்றும்

அதைவிடக் குறு + இயல் + உகரம் என்று பிரிப்பது சிறப்பு என்றும் என் அம்மா கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தண்மை + நீர் = தண்ணீர்

வெம்மை + நீர் = வெந்நீர்

அதே அடிப்படையில் குறுமைதான் சரிவரும் என நினைக்கிறேன். மையீற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி விதியின்படி மை போய் ஏனைய விதிகளின் பின் குற்றியலுகரம் ஆகும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால்

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்றும்

குற்று + இயல் + உகரம் என்றும்

அதைவிடக் குறு + இயல் + உகரம் என்று பிரிப்பது சிறப்பு என்றும் என் அம்மா கூறினார்.

இலக்கணத்தில் சொற்கள் பல வகையில்  புணர்ச்சி கொள்கின்றன.

இங்கே குற்றியலுகரம்  என்ற சொல்லைப் பிரிக்கும் போது

வரும் சொற்கள் ஏதாவது ஒரு பொருளை உணர்த்தி நிற்க வேண்டும். அந்த வகையில் குற்று அல்லது குறு என்பதன் பொருள் என்ன எனக் கூற முடியுமா? :D

ஆகவே அது பிழை.

குறுமை + இயல் +உகரம் என்பதே சரியாகும்.

குறுமை என்பது ஒரு பண்பும் பெயர்ச்சொல். குறுகி  நிற்கும்அல்லது குறைந்து நிற்கும் என்பது பொருள்   

பண்புப் பெயர்ச்சொற்கள் மையை இறுதியாகக் கொள்ளும்போது புணர்ச்சியின் போது  அந்த மை அழிந்து விடுகின்றது. அங்கு மை கெட்டவுடன்  ற் என்ற வரிசையில்  எழுத்து  இருந்தால் அது இரட்டிப்பாகும்.அதாவது குறுமை  யில் மை கெட்டு று இரட்டிப்பாகி ற்று என வந்து இயல் எனற சொல்லுடன் சேர்ந்து குற்றியலாகிப் பின்னர் உகரத்துடன் சேர்ந்து குற்றியலுகரம் ஆகின்றது.

உதாரணம்

சிற்றூர்     சிறுமை + ஊர்     

வெற்றிலை     வெறுமை + இலை

இவற்றின் இறுதி (மை) கேட்டுப் போக   நடுவில் உள்ள ஒற்று( என்பது ற் வரிசை) இரட்டித்துப் புணர்ந்துள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
வாத்தியார்! வாத்தியார்தான்!! ஆனாலும் வாத்தியார்..... இன்றைய உலகம் நீதியின்படி நடப்பதில்லை. தான் இயற்றிய சட்டப்படிதான் நடக்க முயல்கிறது. சட்டம் தெரியாதவர்களே நீதியின்படி நடக்கமுற்பட்டு மாண்டுபோகிறார்கள். அதன்வழி நீங்கள் தந்த பாடத்தில், குறுமை + இயல் +உகரம் என்பதே குற்றியலுகரம் ஆகும் என்ற விளக்கம் எந்த இடத்திலும் எழுதப்படவில்லை. நாங்கள் எங்கள் ஞானத்தின்வழி எழுதி நொந்துபோனோம். :(   
 
  • கருத்துக்கள உறவுகள்

குறு என்பதும் குறுகி நிற்பதைத்தானே குறிக்கும்.

பாடு என்பதில் எப்படி அரை மாத்திரை என்று விளக்கம் கொடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறு???? என்பதும் குறுகி நிற்பதைத்தானே குறிக்கும்.

பாடு என்பதில் எப்படி அரை மாத்திரை என்று விளக்கம் கொடுங்கள்

 பசு என்ற சொல்லையும் காசு என்ற சொல்லையும் உச்சரித்துப்பாருங்கள்

பசு என்ற சொல்லில்  உள்ள உகரத்தைவிட காசு என்ற சொல்லில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.

ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வரும் உகரத்தின் அளவு ஒரு மாத்திரை.

ஒரு சொல்லின் இறுதியில் உகரம் வரும் போது அந்தச் சொல் தனி ஒரு குற்றெழுத்தில் ஆரம்பித்து ஒரு உகரத்தையும் மட்டுமே கொண்டிருந்தாலும்   அதன் அளவு ஒரு  மாத்திரை ஆகும் . இவை  இரண்டு எழுத்துச் சொற்களாக இருக்கும்.(பசு,கொடு,பகு,அழு,அது,பெறு,படு)

சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லின மெய்களைச் சேர்ந்த (க்,ச்,ட்,த்,ப்,ற்) உகரங்கள் மட்டுமே தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 3

11)மெய்யெழுத்துக்கள் மூன்றுவகைப்படும்
அவை யாவை?

12)பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியைமிகைப்படுத்துவார்கள். அதை இலக்கணத்தில் எவ்வாறு அழைப்பர்?
அது எத்தனை வகைப்படும்?
அவற்றின் பெயர்கள் யாவை ?

13) ஆய்த எழுத்து  எப்போதும் ஒரு சொல்லின் ......... வரும்.
கீறிட்ட இடத்தை நிரப்பவும்    

14)ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு .................. அடுத்து .................. அதற்கடுத்ததாக ஒரு ................. இருக்கும்.

கீழே இருக்கும் சொற்களைச் சரியாகக்  கீறிட்ட  இடத்தில் நிரப்பவும்

வல்லின உயிர்மெய்யெழுத்துமே
குறில் எழுத்தும்
ஆய்தமும்

15)ஒரு சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் இருக்கும்போது அந்தச் சொல்லுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டி வரும் அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் யகரம் இருந்தால் இரண்டு சொற்களும் சேரும்போது ............ தோன்றுகின்றது

கீழே உள்ள விடைகளில் ஒன்று மட்டும் சரியானது .கீறிட்ட இடத்தை நிரப்பவும்
ஐகாரக்குறுக்கம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
குற்றியலுகரம்
 
  • கருத்துக்கள உறவுகள்

11. வல்லினம், மெல்லினம், இடையினம் (இது எனக்குப் பிடித்த இனம்)

12. அளபெடை

உயிரளபெடை, ஒற்றளபெடை

13. இடையில்

14. குறில், ஃ, வல்லின உயிர்மெய்

15. குற்றியலிகரம்

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
வினாக்கள்  பகுதி 3
 
11)மெய்யெழுத்துக்கள் மூன்றுவகைப்படும் அவை யாவை?
       அவை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
 
12)பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில்    
     ஒலியைமிகைப்படுத்துவார்கள். அதை இலக்கணத்தில் எவ்வாறு அழைப்பர்? அது எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயர்கள் யாவை ?
     அவை இரண்டு வகைப்படும்.   அவற்றின் பெயர்கள் உயிரளபெடை. ஒற்றளபெடை ஆகும்.
 
13) ஆய்த எழுத்து  எப்போதும் ஒரு சொல்லின் இடையிலே வரும்.
கீறிட்ட இடத்தை நிரப்பவும்.
   
14)ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு குறில் எழுத்தும் அடுத்து ஆய்தமும் 
அதற்கடுத்ததாக ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்துமே இருக்கும்.
கீழே இருக்கும் சொற்களைச் சரியாகக்  கீறிட்ட  இடத்தில் நிரப்பவும்
வல்லின உயிர்மெய்யெழுத்துமே
குறில் எழுத்தும்
ஆய்தமும்
 
15)ஒரு சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் இருக்கும்போது அந்தச் சொல்லுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டி வரும் அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் யகரம் இருந்தால் இரண்டு சொற்களும் சேரும்போது குற்றியலிகரம் தோன்றுகின்றது
 கீழே உள்ள விடைகளில் ஒன்று மட்டும் சரியானது .கீறிட்ட இடத்தை நிரப்பவும்
ஐகாரக்குறுக்கம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
குற்றியலுகரம்
 
வாத்தியார், நான் வினாக்கள்  பகுதி 2ல், 6வது கேள்விக்கான விடையில் இயல் +உகரம் என்ற  இரண்டு சொற்களைச் சரியாக எழுதியுள்ளேன் ஆகவே அது 100% மும் அது பிழையாகாது. பிழைக்கு எத்தனைவீதம் கழிக்க வேண்டுமோ கழித்துவிட்டு முக்கால் சரி, அரைச் சரி, கால் சரி என்று போடலாம்தானே.  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

...

எங்கேயோ கேட்ட குரல்...!  :lol:

binl0j.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதங்கம் வாத்தியாரை அசைக்காது விட்டாலும், ராசவன்னியரின் இதயத்தையே ஊடுருவிச் சென்றுவிட்டது.Think_of_You.gif நன்றி ஐயா! fruehling7.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நான் வினாக்கள்  பகுதி 2ல், 6வது கேள்விக்கான விடையில் இயல் +உகரம் என்ற  இரண்டு சொற்களைச் சரியாக எழுதியுள்ளேன் ஆகவே அது 100% மும் அது பிழையாகாது. பிழைக்கு எத்தனைவீதம் கழிக்க வேண்டுமோ கழித்துவிட்டு முக்கால் சரி, அரைச் சரி, கால் சரி என்று போடலாம்தானே.  :(

சகல விடைகளுக்கும் வாலி மற்றும் பாஞ்ச் ஆகியோரின்  பதில்கள் சரியாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் வாலி மற்றும் பாஞ்ச்.

இப்படி நான்கு முறை காற்புள்ளி எடுத்தால் மொத்தமாக இரண்டு புள்ளிகள் கிடைத்துவிடும். அதனால் அரைப்புள்ளி காற்புள்ளி கிடையாது :D :D :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 4

16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது
குறுகாமல் தனது  ................  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்

17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி .................. மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக.

19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான................... மாத்திரை அளவிலிருந்து குறைந்து

  ............ மாத்திரையாக ஒலிக்கும்.

20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ............ எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்
 
  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக தேர்வு எழுத முயற்சித்துள்ளேன், பதில்கள் பின்வருமாறு: :)

வினாக்கள்  பகுதி 4:

16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது குறுகாமல் தனது  இரண்டு  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்

17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக. கேள் + மியா

19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்.

20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்.

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதங்கம் வாத்தியாரை அசைக்காது விட்டாலும், ராசவன்னியரின் இதயத்தையே ஊடுருவிச் சென்றுவிட்டது.Think_of_You.gif நன்றி ஐயா! fruehling7.gif

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

எ ல்லாமும் தங்களிடம் பயின்ற கலைதான் சித்திர வித்தகரே. நான் ஒரு ஏகலைவன் என முன்பே கூறியுள்ளேன். அத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருகைதந்த தங்கள் வரவுக்கும் நன்றி. பிட்டடிக்க ஆளில்லாமல் தவித்திருந்தேன். smilie_denk_17.gif smilie_thanks_019.gif

  • கருத்துக்கள உறவுகள்
வினாக்கள்  பகுதி 4
  
16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது குறுகாமல் தனது  இரண்டு  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்
 
17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது
 
18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக.
கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதினால் கேள் + மியா என வரும். 
 
19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து   கால் மாத்திரையாக ஒலிக்கும்.
 
20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்
 
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் படிப்பிக்கிற பஞ்சியில கேள்வியே போட்டுக்கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

பாஞ்சின் கண்களுக்கு மட்டும் தெரிவதுபோல் யாராவது வகுப்புக்கு வந்துள்ளார்களோ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் சார் அனைத்துக்கேள்விகளுக்கும் சரியான பதில்களை வழங்கியுள்ளார்.
பாஞ்ச் அவர்களைப் பின்பற்றிச் சரியான விடைகளைத் தந்திருக்கின்றார்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் சார் அனைத்துக்கேள்விகளுக்கும் சரியான பதில்களை வழங்கியுள்ளார்.

பாஞ்ச் அவர்களைப் பின்பற்றிச் சரியான விடைகளைத் தந்திருக்கின்றார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்

எ ல்லாமும் தங்களிடம் பயின்ற கலைதான் சித்திர வித்தகரே. நான் ஒரு ஏகலைவன் என முன்பே கூறியுள்ளேன். அத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருகைதந்த தங்கள் வரவுக்கும் நன்றி. பிட்டடிக்க ஆளில்லாமல் தவித்திருந்தேன். smilie_denk_17.gif smilie_thanks_019.gif

தவளையும் தன்வாயால் கெடும்.  :(  :o

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்றது ஒருநாள் வகுப்புக்கு வந்துவிட்டு விலாசம் காட்டக்கூடாது என்று எல்லாரும் யெட் வேகத்தில எங்கோயோ போட்டினம் நாம மட்டும் கட்டைவண்டியிலும் கால் நடையிலும்.... இவர்களை எட்டிப்பிடிக்கமுடியாது போலிருக்கே.... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.