Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப்பிடிச்சுத்தான் என்ன செய்யப்போறம் ????

 

  • Replies 128
  • Views 75.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப்பிடிச்சுத்தான் என்ன செய்யப்போறம் ????

 

ஆ....ஏறி மிதிச்சு உழக்கிப்போட்டு முன்னேறத்தான்

 

சுமே நாங்களாக முயற்சிக்காவிட்டால் நாம(பெண்கள்) என்னைக்குமே பின்தங்கிய நிலையிலதான் இருக்கவேண்டும் யாரும் பட்டுக்கம்பளத்தில் பாதை விரித்து தங்கத்தாம்பாளத்தில் பட்டம் தரமாட்டார்கள். சிறு பிராயத்தில் ஆண்களுடன் சேர்ந்தோடி வெற்றிபெறும் நாம் ஏன் பருவவயது வந்தவுடன் கோட்டை விட்டுவிடுகிறோம்? விரக்தியா? விட்டுக் கொடுப்பா? ஆளுமையற்ற பலவீனமா? :rolleyes:

11. வல்லினம், மெல்லினம், இடையினம் (இது எனக்குப் பிடித்த இனம்)

12. அளபெடை

உயிரளபெடை, ஒற்றளபெடை

13. இடையில்

14. குறில், ஃ, வல்லின உயிர்மெய்

15. குற்றியலிகரம்

 

வாலி நீங்கள் கூறிய இடையினத்தை பற்றி வாத்தியாருக்கு புரியவில்லை. உங்களுக்கு மாக்ஸ் (லைக்) போட்டுள்ளார்.

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்..?- ஒரு தரம்

வாத்தியார்..?? - ரெண்டு தரம்

வாத்தியார்..??? - மூனு தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்..?- ஒரு தரம்

வாத்தியார்..?? - ரெண்டு தரம்

வாத்தியார்..??? - மூனு தரம்

 

வருட விடுமுறை முடிந்தவுடன் கள்ளம் படிக்காமல் ஒழுங்காகப்  பள்ளிக்கு வந்த வன்னியருக்கு வந்தனங்கள். :D

தொடர்ந்து படிப்போம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

வருட விடுமுறை முடிந்தவுடன் கள்ளம் படிக்காமல் ஒழுங்காகப்  பள்ளிக்கு வந்த வன்னியருக்கு வந்தனங்கள். :D

தொடர்ந்து படிப்போம் 

 

 

நன்றி ஐயா.

தாமதமாக, தயக்கமாக வகுப்பிற்கு வருவோருக்கு "ஜிகிடி" ஒன்றை காட்டுங்கள், அப்புறம் மாணவர் கூட்டம் பிச்சுக்கொண்டு போகும்!  sgentil.gif

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 5
 

 

 

கீறிட்ட இடத்தை நிரப்புக

21)செய்யுள்களில் சொற்களில் வரும் ............ எழுத்துக்களைக்
குறிலாக மாற்றி அந்தச் சொல்லின் ஓசையைக் குறைப்பது..................  விகாரம் ஆகும்

22)......................  விகாரத்தில் சொல்லில் இல்லாத ஒரு எழுத்தை மேலதிகமாக இணைத்துவிடுவார்கள்

23)பொருள் மாறாமல், செய்யுளில் வரும் சொல்லின் ஏதாவது  
எழுத்துக்களை நீக்கிவிடுவது ................... விகாரம் எனப்படும்

24)செய்யுளில் வரும் சொல்லின் முதற் சொல்லை இல்லாமல் எழுதுவது .................... எனப்படும்

25)சொல்லின் இறுதியில் வரும்  எழுத்தை இல்லாமற் செய்து எழுதுவது ...................... எனப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாஞ் உள்ளேன் ஐயா.. 02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 5

 

 

 

கீறிட்ட இடத்தை நிரப்புக

21)செய்யுள்களில் சொற்களில் வரும் ............ எழுத்துக்களைக்

குறிலாக மாற்றி அந்தச் சொல்லின் ஓசையைக் குறைப்பது..................  விகாரம் ஆகும்

22)......................  விகாரத்தில் சொல்லில் இல்லாத ஒரு எழுத்தை மேலதிகமாக இணைத்துவிடுவார்கள்

23)பொருள் மாறாமல், செய்யுளில் வரும் சொல்லின் ஏதாவது  

எழுத்துக்களை நீக்கிவிடுவது ................... விகாரம் எனப்படும்

24)செய்யுளில் வரும் சொல்லின் முதற் சொல்லை இல்லாமல் எழுதுவது .................... எனப்படும்

25)சொல்லின் இறுதியில் வரும்  எழுத்தை இல்லாமற் செய்து எழுதுவது ...................... எனப்படும்

 

வாத்தியார அவர்களே,

இப்போதான் விடுப்பு முடித்து வீட்டிலேயிருந்து வந்திருக்கிறோம், நீங்கள் தேர்வு என்றவுடன் வரும் மாணாக்கர்களும் மட்டம் போட்டுவிட்டு திரையரங்கிற்கு பறந்துவிட்டனர், அவர்களை எந்த திரையரங்கில் பிடிப்பதோ? :lol:

 

மேலே பாருங்கள் ஒருத்தர் வகுப்பிற்குள்ளேயே மாதோடு களிநடனம் புரிகிறார்..

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
வினாக்கள்  பகுதி 5
 
கீறிட்ட இடத்தை நிரப்புக
 
21)செய்யுள்களில் சொற்களில் வரும் நெடில் எழுத்துக்களைக்
குறிலாக மாற்றி அந்தச் சொல்லின் ஓசையைக் குறைப்பது செய்யுள் விகாரம் ஆகும்
 
22) விரித்தல் விகாரத்தில் சொல்லில் இல்லாத ஒரு எழுத்தை மேலதிகமாக இணைத்துவிடுவார்கள்
 
23)பொருள் மாறாமல், செய்யுளில் வரும் சொல்லின் ஏதாவது  
எழுத்துக்களை நீக்கிவிடுவது தொகுத்தல் விகாரம் எனப்படும்
 
24)செய்யுளில் வரும் சொல்லின் முதற் சொல்லை இல்லாமல் எழுதுவது முதற்குறை எனப்படும்
 
25)சொல்லின் இறுதியில் வரும்  எழுத்தை இல்லாமற் செய்து எழுதுவது கடைக்குறை எனப்படும்
 
 
 
பி.கு:
மாதோடு களிநடனம் புரிந்தாலும் நான் உங்கள் மாணவன் வாத்தியார்.... :rolleyes: 
மா தோட்டுடன் எங்கள் சிவன் மாதுடன் களிநடனம் புரியலாம் நான் புரியக்கூடாதா..,??  :o
இந்து சமயத்தையே இது கேவலப் படுத்துகிறது. :(
ராசவன்னியரைக் கண்டித்து வையுங்கள் வாத்தியார். :blink:
 
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவர்களே, நானும் மூளையை கழட்டி கழுவி கசக்கிப் பார்த்தேன்.. ஒன்றும் நினைவிற்கு வரவில்லை.. அடுத்த வாங்கியில் உட்கார்ந்திருந்த 'பாஞ்ச்' விடைத்தாளை மேலே வைத்துவிட்டு, மாந்தோட்டு மாதோடு ஆடப் போய்விட்டார்.. :o

 

அந்த விடைத்தாளில், எனது பெயரை போட்டு உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்..! :icon_idea:

விடை சரியாக இருந்தால், மதிப்பெண்ணும் பரிசும் எனக்கு..!
விடை தவறாக இருந்தால், தங்களின் பிரம்படி, களிநடன ஜோடிக்கு..!

'டீல்' ஓக்கேயா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஐயா,

பாஞ்ச் 'களிநடனம்' ஆட போய்விட்டார்.. :o:unsure:

 

நீங்களும் "ஆத்துக்காரி கூப்பிடுறா..!" என குசினியில் ஐக்கியமாகிவிட்டீர்கள் போல் தெரியுது.. :lol::D

 

வகுப்பிற்கு வெளியே ஒருத்தர், "பாரு.. பாரு.. நல்லா பாரு..! பயாஸ்கோப்ல படத்தைப் பாரு..!"ன்னு வருத்தி அழைக்கிறார்.. :icon_idea::rolleyes:

 

 

indian_bioscope.jpg

 

 

 

நான் வகுப்பில் இருக்கட்டே..? போகட்டே..? :(  :rolleyes:

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் பெயரும் சிறீலங்கா தடைப்பட்டியலில் இருப்பதாகக் கேள்வி... மைத்திரி வந்துவிட்டார் பத்திரமாகப் போய்வரலாம் என்று போனவராம். போனவர் போனவர்தானா... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் பெயரும் சிறீலங்கா தடைப்பட்டியலில் இருப்பதாகக் கேள்வி... மைத்திரி வந்துவிட்டார் பத்திரமாகப் போய்வரலாம் என்று போனவராம். போனவர் போனவர்தானா... :o

 

வாத்தியார்  மேல் மாணவர்களுக்குக்  கோபம் இருக்கலாம்.

அதற்காக இப்படியா? :D:lol: :lol:

 

உங்கள் பதில்கள் எல்லாம் சரியாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது.  :)

 

குஞ்சுமித்து கோழி முடமாகிவிடுமா வாத்தியார்..??  :D  

 

குஞ்சின் கோபமும் கோழிக்கு இன்பமே.  :rolleyes:   :lol:

 

என் விடைகள் சரி என்றால் வன்னியரும் விண்ணில் பறப்பார்.laughter.gif

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்  மேல் மாணவர்களுக்குக்  கோபம் இருக்கலாம்.

அதற்காக இப்படியா? :D:lol: :lol:

 

உங்கள் பதில்கள் எல்லாம் சரியாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்

 

மாணவர்களின் மேலுள்ள கோபத்தில், வாத்தியார் சரியான விடைக்கு பச்சை கொடுத்து ஆசீர்வதிக்கவும் மறந்திட்டார்.. :lol:

 

(ஒருவேளை,  'மா தோட்ட' மகளிரை பார்த்து நிலைகுலைந்திருப்பாரோ? :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது.  :)

 

குஞ்சுமித்து கோழி முடமாகிவிடுமா வாத்தியார்..??  :D  

 

குஞ்சின் கோபமும் கோழிக்கு இன்பமே.  :rolleyes:   :lol:

 

doubt.jpg

 

பாஞ்ச்.. எனக்கொரு டவுட்டு...!

 

 

நீங்க சொன்னதுல கோழி யாரு..? குஞ்சு யாரு? :(

அவ்ளோ பெரிய கோழி ஏறி மிதிச்சா, குஞ்சு நசுங்கிடாதா? :o

அப்போ கோழியின் கோபம் குஞ்சுக்கு இன்பமா..? துன்பமா? :huh:

 

சொல்லுங்கோ பாஞ்ச்..  (டிஸ்யூம்.. டிஸ்யூம்..) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்க சொன்னதுல கோழி யாரு..? குஞ்சு யாரு? :(

 

"குஞ்சு"   இதிலை 'கு' வை நீக்கி 'பா' போட்டுப் பாருங்க குஞ்சு யாரென்று புரியும். கோழியும் யாரென்று புரியும்.  :D

 

 

 

அவ்ளோ பெரிய கோழி ஏறி மிதிச்சா, குஞ்சு நசுங்கிடாதா? :o

 

"தாமரை மலர் கொண்டு
உடல் செய்த ஓவியமே,
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்?"
 
"மீன்களைச் சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை;
காதலைச் சுமக்கையிலே
காதலனும் பாரமில்லை!  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் மேலுள்ள கோபத்தில், வாத்தியார் சரியான விடைக்கு பச்சை கொடுத்து ஆசீர்வதிக்கவும் மறந்திட்டார்.. :lol:

 

(ஒருவேளை,  'மா தோட்ட' மகளிரை பார்த்து நிலைகுலைந்திருப்பாரோ? :icon_idea: )

 

வைத்துக் கொண்டு வஞ்சகம் பண்ணுவேனா :D .கையிருப்பில் இல்லை.

இருந்தவற்றை எல்லாம்  விஸ்வா அள்ளிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள "வாத்தியார்" அவர்கள் குசினிக்குள் ரொம்ப 'பிசி'யாக இருப்பதால் :lol:, நம்மூர் (அதாங்க மதுரை-மேலூர்) 'பசுநேசன்' அவர்கள் கெளரவ ஆசிரியராக ஒரு நாள் நமக்கு தமிழ் பாடம் சொல்ல வந்துள்ளார்.. :o

 

Methai-Movie-stills-001.jpg

 

 

ஊக்க அறிவிப்பு:

 

வருகை தரும் அனைத்து மாணவமணிகளுக்கும் அக்மார்க் பசும்பால், பசு நெய், பசும்பால் மா அடங்கிய பொதி ஒன்று 'பசுநேசன்' சார்பாக வழங்கப்படும்.. :icon_idea:
 

 

 

இனி தமிழ் வகுப்பு...

 

 

methai-movie-pictures0151.jpg

 

 

அ- அம்மா. மாடு இப்படித்தான் கத்தும்.

ஆ- ஆடு. மாடு மாதிரியே ஆடும் பால் கொடுக்கும். புல்லு தின்னும்.

இ- இலை. மாடு இலை தழைகளை நன்றாக உண்ணும்.

ஈ- ஈ. மாட்டு மேல உன்னி வந்துட்டா, அது உடம்புல ஈ மொய்க்க ஆரம்பித்துவிடும்.

உ- உடுக்கை. பூம் பூம் மாட்டுக்காரன் உடுக்கை அடித்து மாட்டை வைத்து வித்தை காட்டுவான்.

ஊ- ஊரு. 'ஊரு விட்டு ஊரு வந்து' படத்துல எனக்கு மாட்டோட ஒரு காம்பினேசனும் இல்லை. ஏன்னு டைரக்டர் கிட்ட கேட்டா, நீங்களே மாடு மாதிரிதான இருக்கீங்க. அது வேற எதுக்கு? ன்னு சொல்லிட்டார்.

எ- எருமை மாடு. இது சோம்பேறியான மாடு. மிகவும் மெதுவாக நடக்கும்.

ஏ- ஏலக்காய். பசு மாட்டு பால்ல ஏலக்காய் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஐ- ஐயம். ஐயம்னா சந்தேகம். உங்களுக்கு மாடுகளை பத்தி ஏதாச்சும் சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க.

ஒ- ஒட்டகம். இதுவும் மாடு மாதிரியே ஒருவகையான விலங்கு. சக மாணாக்கர் ராசவன்னியரிடம் கேளுங்கோ விலாவாரியா சொல்லுவார்.

ஓ- ஓட்டம். மாட்டு வண்டி ஓட்டம்னா (பந்தயம்) என்னை ஜெயிக்க எவனுமே இல்லை.

ஓள- ஓளவயார். இவர் கைல ஒரு கம்பு வச்சிருப்பார். மாடு மேய்க்கும்போது அந்த மாதிரி கம்பு இருந்தாதான் சரியா மாடு மேய்க்க முடியும்.

 

சிரிப்பு போலீஸ்

 

 

வயசுப் பிள்ளைகளே,

 

நாளையும் மறக்காமல் தமிழ் வகுப்பிற்கு வந்துவிடுங்கள், உங்க செண்பகம் 'அண்ணி'தான் வகுப்பெடுக்கப் போறார்..! :icon_mrgreen:

 

SUNANATH.PNG

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

..

வயசுப் பிள்ளைகளே,

 

நாளையும் மறக்காமல் தமிழ் வகுப்பிற்கு வந்துவிடுங்கள், உங்க செண்பகம் 'அண்ணி'தான் வகுப்பெடுக்கப் போறார்..! :icon_mrgreen:

 

SUNANATH.PNG

 

செண்பகம் 'அண்ணி', பாஞ் போன்ற 'லொள்ளு' மாணவர்களைக் கண்டு வகுப்பெடுக்க வராமல் போயிட்டார்.. :unsure::(

 

இனி வழக்கமான யாழ் 'வாத்தியார்' தான் வரவேண்டும்..! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகம் 'அண்ணி', பாஞ் போன்ற 'லொள்ளு' மாணவர்களைக் கண்டு வகுப்பெடுக்க வராமல் போயிட்டார்.. :unsure::(

 

இனி வழக்கமான யாழ் 'வாத்தியார்' தான் வரவேண்டும்..! :lol:

 

 

ராசவன்னியர் அவர்களே! உங்கள் ஆதங்கம் புரிகிறது!! தவறு என்னுடையதல்ல. வாத்தியார் எங்களை நேரில் கண்டுவிட்டதுதான் காரணம். :o 
 
முதியோர்களால் இளம்பெண்கள் அனுபவிக்கும் வேதனைச் செய்திகளை வாத்தியார் நிறையவே படித்து எங்களையும் அவர்களோடு சேர்த்துக் கணித்துவிட்டார். அதனால் அவர் ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார். இப்போ முதியோருக்கான தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றைத் திறப்பதற்காக ஓடித்திரிவதாகக் கேள்வி. :(  :lol:  :lol:  
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

...
முதியோர்களால் இளம்பெண்கள் அனுபவிக்கும் வேதனைச் செய்திகளை வாத்தியார் நிறையவே படித்து எங்களையும் அவர்களோடு சேர்த்துக் கணித்துவிட்டார். .. 

 

 

நீங்கள் முதியோர்களா? உங்கள் இருவரையும் பார்த்தால் அப்படி தெரியவில்லையே? :):lol:

 

உங்கள் தன்னடக்கத்தை மெச்சவேண்டும்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4

விரைவில் ஆரம்பம்

 

இந்த வகுப்பிற்கு வராதவர்கள், வர  நேரமில்லாதவர்கள்,
மழை வரட்டும் எனப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்,
வெயிலுக்குக் கூட எட்டிப்பார்க்காதவர்கள்  என
அனைவரும் கட்டாயம் வகுப்பிற்கு வரவேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் வருகிறேன்..

 

ஆனால் பரீட்சைகள் ரொம்ப வைக்கக் கூடாது.. :lol:

 

'பிட்' அடிக்க அனுமதித்தால் நல்லது! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.