Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயஇன்பம் சரியா, தவறா?...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Self+doubt.png
 
சுயஇன்பம் சரியா தவறா?...
ஆதிகாலம் தொட்டே நமது கலாச்சாரத்தில் சுய இன்பம் என்பது மிகப்பெரிய தவறு, பாவம் என்றே போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.ஆண்களின் சுய இன்பத்தையே மிகப்பெரிய அசிங்கமாக... தவறான செய்கையாக, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக...போதித்து வந்த சமூகம் பெண்களின் சுய இன்பத்தைப்பற்றி சமூகத்துக்கு தெரியாமலேயே நசுக்கியிருக்கிறது.
 
போதாத குறைக்கு இன்னும் தெருவோர லேகிய மருத்துவர்கள் வேறு பல்வேறு பத்திரிக்கைகளில் தங்களது லாட்ஜ் விஜயத்தை பரப்புவதோடு நில்லாமல், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தோன்றி சிறு வயதில் அனுபவித்த சுய இன்பப்பழக்கத்தினால்தான் பல ஆண்கள் ஆண்மைக்குறைவுவிரைவு ஸ்கலிதம், உறுப்பு சிறுத்துப்போதல் போன்ற பல குறைகளுக்கு ஆளாவதாக கதை கட்டி ‘’வாங்கடா... உங்கள காப்பாத்த உங்க அப்பன் நான் இருக்கேன்டா... வந்து என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கோங்கடா... வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்காதீங்கடா...’’ன்னு கூப்பாடு போட்டு சுய இன்பம் அனுபவிக்கும் இளவட்டங்கள் மனதில் ஒரு இனம்புரியா பயத்தையும், அது சரியா தவறா என்று ஏற்கனவே குழம்பியிருக்கும் மனதில் மேலும் குழப்பத்தையும் விதைப்பதில் நம்பர் ஒன்னாக பணியாற்றுகிறார்கள்...
 
“இறைக்கிற கிணறுதான் ஊறும்”...என்று சுய இன்பம் அனுபவிக்கும் இளவட்டங்கள் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும் இன்னமும் ஒரு பயம் அவர்கள் மனதிலிருந்து அகலவில்லைதான்...
 
6.jpg
 
கலவியறிவில் இந்த சுய இன்பத்தை பற்றிய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் விதமாக இதைப்பற்றிய உண்மைத் தகவல்களையெல்லாம் போட்டுடைக்க வேண்டியது இன்றைய தலைமுறைக்குத் தேவையான முக்கிய விஷயமெனக் கருதுவதால் இரண்டாம் பாகத்திலேயே இதைப்பற்றி எழுதவேண்டிய கட்டாயம்...
 
சுய இன்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்தகவல்கள் என்னென்ன?...
Ø  சுய இன்பம் என்பது பொதுவாக ஒருவர் தனது உடம்பின் பாகங்களை, அதுவும் குறிப்பாக செக்ஸ் உறுப்புகளை செக்ஸூவல் மகிழ்ச்சி தரும் விதத்தில் தானே தொட்டும், தடவியும் இன்னபிற வகையிலும் செயல்பட்டு இன்பம் அனுபவித்தலாகும்.
Ø  சுய இன்பம் என்பது பொதுவானதொரு பாதுகாப்பான செக்ஸ் விளையாட்டுதான்.
Ø  சுய இன்பத்தினால் பல நல்ல ஆரோக்கியப்பலன்களும் இருக்கின்றன.
நம்மில் பலருக்கு சுய இன்பத்தை பற்றி பேசுவதென்பதே ஒரு பாவப்பட்ட, அசிங்கமான செயலாகத்தெரியலாம்.
 
பழங்காலத்திலிருந்தே சுய இன்பத்தை பற்றி நிலவி வரும் பல கருத்துக்களால் இன்றளவும்கூட நமது சமூகத்தில் சுய இன்பம் என்ற சொல் மூஞ்சை சுழிக்கச்செய்வதாகத்தான் உள்ளது. இந்த பழைய கருத்துக்களால்தான் இன்னமும் சுய இன்பம் ஒரு அசிங்கமான உணர்வையும், தவறு செய்கிறோமோ என்ற உணர்வையும், ஒரு பய உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுய இன்பத்தை பற்றிய உண்மைத்தகவல்களை ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் அறிந்து தெளிதல் வேண்டும். சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு பொதுவான இயற்கையான விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
 
5.jpg
 
சுய இன்பம் சாதாரணமானதொரு செய்கைதானா?...
சுய இன்பம் மிகச்சாதாரணமான பொதுவானதொரு செய்கைதான். பெரும்பாலும் சுய இன்பம் உச்சகட்ட இன்பத்தில்தான் முடிகிறது. உலகின் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் பத்தில் ஏழு ஆண்களும், பத்தில் ஐந்து பெண்களும் சுய இன்பத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றது. இது பெரும்பாலும் டீன் ஏஜ் தலைமுறையில் பொதுவாக நிகழ்வதாகும்.
 
வழக்கமாக சுய இன்பம் அனுபவிப்பது எந்த வயதில் தொடங்குகிறது?...
சுய இன்பம் அனுபவிப்பது ஒருவரது வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். பெரும்பாலான குழந்தைகள் தாங்கள் வளரும் போது, அதாவது தங்களது உடல் உறுப்புகள் வளர்ச்சியடைந்து மாற்றம் காணத்தொடங்கும் போது சுய இன்பத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் தங்களது குறிப்பிட்ட உறுப்புகளை தொடுவது ஒருவித மகிழ்ச்சியை கொடுப்பதாக உணருவார்கள். பெரும்பாலான கட்டுரைகள் குழந்தைகள் 3 முதல் 6 வயதிலிலேயே செக்ஸீவல் உணர்வில்லாத ஒருவித இன்பத்தை தங்களது உறுப்புகளை தொடுவதன் மூலம் அனுபவிப்பதாக தெரிவிக்கின்றன.
 
இளைய தலைமுறை சுய இன்பம் ஒரு சாதாரணமான விஷயம் என்பதையும், அது எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கிய விஷயமாகும். அது போலவே அவர்கள் சுய இன்பம் என்பது தனிமையில், மறைவாக அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
 
மக்கள் ஏன் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்?...
பல்வேறு ஆய்வுகளில் சுய இன்பத்துக்கான காரணங்களாக மக்கள் தெரிவித்திருப்பது இதுதான்...
Ø  சுய இன்பம் செக்ஸீவல் டென்ஷனிலிருந்து விடுதலை அளிக்கிறது.
Ø  சுய இன்பம் செக்ஸீவல் ஆனந்தத்தை அளிக்கிறது.
Ø  துணை இல்லாதபோதும் செக்ஸ் சுகத்தை அனுபவித்துக்கொள்ள உதவுகிறது.
Ø  ரிலாக்ஸேசனை வழங்குகிறது.
 
பெரும்பாலும் செக்ஸ் பார்ட்னர் இல்லாதவர்களும், கல்யாணமாகதவர்களும்தான் சுய இன்பத்தை அனுபவிப்பதாக நினைக்கிறார்கள். இது மிகத்தவறானதொரு கூற்று. திருமணமானவர்களும், சரியான செக்ஸ் பார்ட்னர் அமைந்தவர்களும்கூட ரெகுலராக சுய இன்பத்தையும் அனுபவிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
சுய இன்பம் அனுபவிப்பதன் பலன்கள் என்னென்ன?...
சுய இன்பம் மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதில் எவ்வித குற்றவுணர்ச்சியும், குழப்பமுமில்லாமல் சுய இன்பத்தை அனுபவிப்பது பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது. சுய இன்பம் மட்டுமே அனுபவிப்பதனால் பால்வினை நோய் மற்றும் தேவையற்ற கர்ப்பம் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
 
அது மட்டுமின்றி சுய இன்பம்தான் ஒருவரது செக்ஸீவாலிட்டி குறித்து அறிந்து கொள்ள உதவுவது. அதாவது எந்த உறுப்பு, எந்தவிதமான செய்கைகள் உச்சகட்ட செக்ஸீவல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவக்கூடியது. இது செக்ஸ் பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸ் உறவிலும் உச்சகட்ட மகிழ்ச்சியை பெறுவதற்கான முன்னோட்ட வழிகளை தெரிவிக்கக்கூடியது.
 
சுய இன்பமானது...
  Ø  ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்
  Ø  பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸை, உடல் மற்றும் மனரீதியாக மேம்படுத்தும்
  Ø  ஒரு உடல் உச்சகட்ட செக்ஸ் இன்பத்தைப்பெறுவதற்கு எவ்வாறு மீட்டப்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ள உதவும்.
  Ø  உச்சகட்ட மகிழ்ச்சியை அடையும் வழிமுறைகளை மேம்படுத்த உதவும்.
  Ø  செக்ஸூவல் திருப்தியை அளிக்க உதவும்.
  Ø  தூக்கத்தை மேம்படுத்தும்.
  Ø  இதயத்துக்கும், நுரையீரலுக்கும் ஒரு சரியான உடற்பயிற்சியாய் அமையும்.
  Ø  செக்ஸூவல் துணை இல்லாதவர்களுக்கும் செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும்.
  Ø  தூக்கத்தில் வரும் செக்ஸ் கனவுகளினால் ஆடைகளும், பெட்ஷூட்டும் நனையும் வண்ணம் தானே வெளியேறும் விந்துவைக்கட்டுப்படுத்தும்.
  Ø  செக்ஸ் குறைபாடுகளுக்கான ட்ரீட்மெண்ட்டாக அமையும்.
  Ø  மன அழுத்தத்தை குறைக்கும்.
  Ø  செக்ஸூவல் டென்ஷனிலிருந்து விடுபட உதவும்
  Ø  எதிர்காலத்தில் ஆண்களுக்கு வரவிருக்கும் ப்ராஸ்டேட் கேன்சருக்கான வாய்ப்புகளைக்குறைக்கும்.
  Ø  மாதவிடாய் குறைபாடுகளையும், தசை வலிகளையும் நீக்கும்.
  Ø  பெண்களை கட்டுப்பாடில்லாமல் யூரின் கசியும் பிரச்சினை, கருப்பை இடம் மாறுதல்(Prolapse) பிரச்சினை போன்றவற்றிலிருந்து காக்கும்.
 
மியூச்சுவல் சுயஇன்பம் என்றால் என்ன?...
பெரும்பாலும் சுய இன்பம் என்பது ஒருவர் தனியாக தனக்குத்தானே அனுபவித்துக்கொள்வதுதான் என்றாலும், இதில் ஒருவர் தானும் தனது செக்ஸ் பார்ட்னரும் ஒருவர் முன்னிலையில் மற்றவருமாய் சுய இன்பத்தை அனுவிப்பதும், ஒருவருக்கு மற்றவருமாய் சுய இன்பத்தை அனுபவிக்கச்செய்வதும்தான் மியூச்சுவல் சுய இன்பம் என்பது...
 
ஒருவர் தனது செக்ஸ் பார்ட்னருடன் மியூச்சுவல் சுய இன்பத்தை அனுபவிக்கும்போது கர்ப்பம் மற்றும் தேவையற்ற பால்வினை நோய்களிலிருந்து காத்துக்கொள்வதோடு வழக்கத்தைவிட அதிகமான செக்ஸூவல் மகிழ்ச்சியையும் பெறலாம்.
 
மியூச்சவல் சுய இன்பத்தினால் ஒருவர் தனது செக்ஸ் துணையின் உணர்வுகளையும், அவர்களுக்கு உச்சபட்ச செக்ஸூவல் மகிழ்ச்சியைக்கொடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
 
சுய இன்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?...
சுய இன்பத்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதுதான் உண்மை.
 
சுய இன்பத்தினால் ஏற்பட வாய்ப்புள்ள ஒரே பாதிப்பு ஸ்கின் எரிச்சல் மட்டும்தான்...ஆனால் அதற்கும் மார்க்கெட்டில் ஏகப்பட்ட லூப்ரிகண்ட்ஸ் குவிந்து கிடக்கின்றன.
 
சுய இன்பத்தின் அளவுகோலும், அளவுக்கதிகமான சுய இன்பமும்...
சுய இன்பம் அனுபவிக்கும் பெரும்பாலானவர்களின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வி ‘’நாம் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கிறோமோ?... நாம் சுய இன்பத்துக்கு அடிமையாகி விட்டோமோ?...’’ என்பதுதான்.
3.jpg
சுய இன்பம் என்பது போதைப்பழக்கம் போன்று ஒருவரை அடிக்ட் ஆகச்செய்யும் வாய்ப்புகளேயில்லை என்பதையும், அதுவொரு நார்மலான விஷயம்தான் என்பதையும் எந்தச்சூழ்நிலையிலும் மனதிலிருந்து அழிக்கவேண்டாம்.
 
சுய இன்பத்துக்கு எவ்வித அளவுகோலும் கிடையாது. ஒரு சிலர் ஒரு நாளுக்கு ஒரு முறை என்றும், ஒரு சிலர் ஒரே நாளில் நாலைந்து முறை வரையிலும்கூட சுய இன்பத்தை அனுபவிப்பார்கள். அது அவரவரது செக்ஸூவல் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் பொருத்தது. தனது உடலுக்கு காயத்தை ஏற்படுத்தாதவரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஒரே நாளில் சுய இன்பத்தை அனுபவிக்கலாம்.
 
அதிக முறை அனுபவிக்கும் சுய இன்பத்தினால் ஒருவரது அன்றாட வாழ்க்கைமுறை பாதிக்கப்படாதவரையிலும் அது நிச்சயம் அளவுக்கதிகமானது இல்லை...
 
பெரும்பாலும் சுய இன்பம் அனுபவிப்பவர்களில் 50%க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் இன்னமும் அதைவொரு குற்றவுணர்வுடனே அணுகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுய இன்பம் அனுபவிக்கும் எவரும் அதைவொரு தவறான செய்கையாக நினைத்து எவ்வித குற்ற உணர்விற்கும் ஆளாகத்தேவையில்லை என்பது அவசியமானதொரு செய்திதான்.
 
சுய இன்பம் அனுபவிக்கும் சரியான வழிமுறைகள் என்னென்ன?...
சுய இன்பம் அனுபவிக்க பலவிதமான வழிமுறைகளும், செக்ஸ் டாய்ஸ்களும் கொட்டிக்கிடந்தாலும் இதுதான் சரியான வழிமுறை என்று எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதுதான் உண்மை.
 
ஒருவர் தனது உடலுக்கு காயம் ஏற்படுத்தாமல் உச்சபட்ச செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும் எவ்வித வழிமுறையையும் தனது சுய இன்பத்துக்கு கையாளலாம்.
 
(பொது இடங்களில் பலர் முன்னிலையில் சுய இன்பம் அனுபவிப்பது பலரையும் முகத்தை சுழிக்கச்செய்யும் தவறான செய்கை என்பதை மட்டும் கட்டாயம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.)
 
சுயஇன்பம் - கட்டுக்கதைகளும்... உண்மையும்...
காலகாலமாக சுய இன்பத்தை பற்றி நிலவும் கட்டுக்கதைகள் ஏராளம்... அவற்றின் உண்மை என்னவென்று பார்க்கலாமா?...
 
சுய இன்பமானது...
  Ø  ஒரு போதும் உள்ளங்கையிலோ இல்லை இன்னபிற வித்தியாசமான இடங்களிலோ முடி முளைக்கச்செய்யாது...
  Ø  ஒரு போதும் பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்தாது.
  Ø  ஒரு போதும் செக்ஸ் உறுப்புகளை சிறிதாக்கவோ, நிறம் மாறவோ, தோற்றம் மாறவோ செய்யாது.
  Ø  ஒரு போதும் உடல் வளர்ச்சியை தடுக்காது.
  Ø  ஒரு போதும் ஆண்மைக்குறைவையோ, மலட்டுத்தன்மையையோ ஏற்படுத்தாது.
  Ø  ஒரு போதும் ஒருவரை அடிக்ட் ஆக்கும் பழக்கமல்ல.
  Ø  ஒரு போதும் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல.
  Ø  ஒரு போதும் மனநிலையை பாதிக்காது.
  Ø  ஒரு போதும் ஒருவரை ஓரினச்சேர்க்கைவாதியாக்காது.
 
9.jpg
 
ஆகவே மக்களே சுய இன்பம் என்பது மனித உடலில் நிகழும் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்பதை புரிந்துகொண்டு இதில் யாரும் எவ்வித குற்றவுணர்விற்கும் ஆளாகவேண்டியதில்லை என்பதை தெரிந்து கொள்வதோடு, தெரியாத உங்கள் நண்பர்கள் யாராவது இருந்தால், இனி அவர்களுக்கும் விளக்கிச்சொல்லுங்கள்...

 

 
நன்றி தமிழ்மணம்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இணிப்புக்கு நன்றிகள் ....இணைப்புக்கு நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இது இனிப்பான செய்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இது இனிப்பான செய்தியா?

 

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

ஆத்துக்காரி கொலிடே போய்விட்டதால் ,புத்தன் அப்படி தடுமாறிவிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்துக்காரி கொலிடே போய்விட்டதால் ,புத்தன் அப்படி தடுமாறிவிட்டார்.

 

இந்த இணைப்பை வாசித்த பின்புதான் அப்படி ஒரு விசயம் இருக்கு என்று எனக்கு தெரியுமுங்கோ:D

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிட்டம் ,

 

இணைப்பை வெளிவிட்டதுக்கு நன்றி  சிறி...!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு என்று தான் எழுத வெளிக்கிட்டேன் ....ஆனால் அது ...

'கை' வழுக்கி இனிப்பாக போய்விட்டது புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்
சரியா தவறா ?
அப்படி என்று ஒரு முடிவை எடுத்து விட்டு சொன்னால்தான் 
நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியா தவறா ?

அப்படி என்று ஒரு முடிவை எடுத்து விட்டு சொன்னால்தான் 
நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம்.

 

“இறைக்கிற கிணறுதான் ஊறும்”... என்று சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன தயக்கம். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

“இறைக்கிற கிணறுதான் ஊறும்”... என்று சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன தயக்கம். :D

ஆனால் அடிக்கடி ஒட்ட இறைத்தால் தண்ணீர் உவர்ப்பாக மாறிவிடும் அபாயமும் உண்டு சிறியர்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இறைக்காமல் விட்டாலும் கரையை உடைத்துக்கொண்டு சுனாமியடிக்கும் தம்பி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுவரைக்கும் எனக்கு அவசியமே வரேல்லை....அந்தளவுக்கு ஜாலியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கு k61.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.