Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

No automatic alt text available.

இன்று பிப்ரவரி 4.......... 
உலகப் புற்றுநோய் தினம்...!!.....

புற்றுநோய் மனித இனத்தை மிக வேகமாக அழித்து வருகிறது.......
நம் தேசத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரும் மனித அழிவு இது....!.........
அதை எதிர்த்து போராடுவோம் இணைந்து.......
ஒன்றாக இணைந்து 
புற்றுநோய் அரக்கனை ஒழிக்கப் பாடுபடுவோம்........!!...

இலங்கையில் சுதந்திர தினமென்றும் சொல்றாங்களே பிள்ளை உண்மையா?

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓர் எலி ஏன் சீக்கிரம் செத்துப்போகிறது? ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்நாள் ஏன் நாட்கணக்கில் மட்டுமே இருக்கிறது? மனிதன் எப்படி இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறான்? இவை எல்லாம் புதிரான தகவல்கள்.

எல்லா உயிர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உள்ள இதயத் துடிப்புகள் சமமானவை. சில பிராணிகள் விரைவாகத் துடித்து முடிந்து போகின்றன. சில நிதானமாகத் துடித்து நின்று வாழ்கின்றன.

‘உடலின் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) நிறையைப் பொருத்து அமைகிறது’ என்று க்ளீபர் என்பவர் கண்டுபிடித்தார். அதாவது, ஒரு பசுவைவிட அணிலின் எடை ஆயிரம் மடங்கு குறைவு. ஆயிரத்தின் வர்க்கமூலம் 31. முப்பத்தொன்றின் வர்க்கமூலம் 5.5. எனவே, பசுவின் இதயத் துடிப்பு அணிலின் இதயத் துடிப்பைவிட 5.5 மடங்கு குறைவு. அதனால், அது அணிலைப்போல 5.5 மடங்கு அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. இதுவே உயிர் ரகசியம்.

 

நாம் அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு, நலிவடையும் பாகங்களைப் பழுதுபார்க்க நம் உடல் கற்றுக்கொண்டதுதான் காரணம். மிகவும் தாமதமாக இனவிருத்திச் செய்யும் பருவத்தை நாம் அடைவதற்கும் இதுதான் காரணம். ஓர் எலி இரண்டாம் பிறந்த நாளை கொண்டாடுவதுகூட கடினம். மனிதன் எளிதில் 82-வது பிறந்தநாளைக்கூடக் கொண்டாடிவிட முடியும்.  நம் வாழ்நாளை நீட்டிப்பதற்கு உடலை நாம் புரிந்துகொண்டது முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக ரத்தத்தைப் பற்றி!  

 

இதயம் எப்படி செயல்படுகிறது என்ற குழப்பத்தில் மனிதன் இருந்தபோது, அதில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஃபேப்ரிகஸ். பெரிய வெய்ன்களில் பெரிய வால்வு இருப்பதைக் கண்டுபிடித்தார். அவை எப்படி பணியாற்றுகின்றன என்பதையும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். ஆனாலும், வெய்ன்கள் மூலமாக ஒரு திசையில்தான் ரத்தம் செல்ல முடியும் என்பதை உணர முடிந்தது. அதற்கு மேல் என்னாகிறது என்பதைப் பற்றி அவரால் அறிய முடியவில்லை.  

சில நேரங்களில் ஆசிரியர்கள் செய்ய முடியாததை, அவர்களின் மாணவர்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஃபேப்ரிகஸுக்கு ஹார்வி என்கிற மாணவர் இருந்தார். அவர், இதயத்தைக் கூர்ந்து படித்தார். ரத்தம் இதயத்துக்கு வெய்ன்கள் மூலமாகச் செல்வதையும், அவை திரும்பி வராதபடி வால்வுகள் தடுப்பதையும் கண்டுபிடித்தார். இதயத்தில் இருந்து ஆர்ட்டரிகள் மூலமாக ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு வெளியே செல்வதையும், அந்த ரத்தம் திரும்பி வராமல் இருக்க ஆர்ட்டரியில் வால்வு இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு ஆர்ட்டரியை ரத்தம் ஓட முடியாதபடி கட்டினால், இதயம் உப்புவதைக் காண்பித்தார். வெய்னைக் கட்டினால் இதயம் உப்பாமல் இதயத்துக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஒரு பகுதி உப்புவதைக் காண்பித்தார்.

1628-ம் ஆண்டு 72 பக்கங்களே கொண்டே ஹார்வியின் புத்தகம் வெளியானது. எல்லா குறிப்புகளிலும் தன் முதல் எழுத்தைப் பதிவுசெய்வது ஹார்வியின் வழக்கம். அவருடைய குறிப்புகள் இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 1615-ம் ஆண்டே ரத்தச் சுழற்றியைப்பற்றி கண்டுபிடித்திருந்தாலும், 15 ஆண்டுகள் கழித்து தயக்கத்தோடுதான் வெளியிட்டார் என்பது புரிகிறது. அது மருத்துவத் துறையின் ஒரு புரட்சிகரமான புத்தகம்.

பழமைவாதத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடிய மருத்துவர்கள், ஹார்வியைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஹார்வி இருக்கும் வரை ஆர்ட்டரியையும் வெய்ன்களையும் இணைக்கும் ரத்தக்குழாய்களைப் பற்றிய நுண்மை கண்டுபிடிக்கப்படவில்லை.  

உடல் என்பது ஒன்றுக்கொன்று பின்னப்பட்ட செயல்பாட்டுக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்கிற கருத்து உருவாக, ஹார்வியின் கண்டுபிடிப்பு உதவியது. ஆர்ட்டரிகளையும் வெய்ன்களையும் இணைக்கிற நுண்குழாய்கள் மார்செல்லோ மால்ஃபிகியால் கண்டுபிடிக்கப்பட்டது. மைக்ராஸ்கோப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் அது சாத்தியமானது. அவரே லென்ஸ்களைப் பயன்படுத்தி உடல் பற்றிய நுட்பங்களைக் கண்டுபிடித்தார். கேப்பிலரிஸ் என்கிற நுண்குழாய்கள் மூலம் பல பரிமாற்றங்கள் நடப்பதை அவர் கண்டுபிடித்தார்.

ஆன்டன்வான் லீவான் ஹுக் என்கிற ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்ராஸ்கோப்புகளைக் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்.  தட்டுப்படுவதையெல்லாம் அவர் அந்தக் கருவியில் வைத்துப் பார்ப்பது வழக்கம். அப்படி, தலைப்பிரட்டையின் வாலிலும், தவளையின் காலிலும் ரத்தச்சுழற்சியை முதலில் அவர் கண்டுபிடித்தார். ஒருநாள் தேங்கிக்கிடந்த சாக்கடை நீரைத் தன்னுடைய மைக்ராஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது, வெறும் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்கள் தென்பட்டன. அவற்றுக்கு உயிர் இருப்பதற்கான அத்தனை லட்சணங்களும் தெரிந்தன. அவற்றை அவர் ‘அனிமல்க்யூல்’ என்று அழைத்தார். அதுவே பின்பு, ‘முதல் விலங்குகள்’ என்று பொருள்படும் புரோட்டோசோவா என்கிற கிரேக்கச் சொல்லைத் தரித்துக்கொண்டது. அதன் மூலமே மைக்ரோபயாலஜி என்கிற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது.  

ராபர்ட் ஹுக் என்கிற இங்கிலாந்து விஞ்ஞானி, உயிரியல் வளர்ச்சியில் மைல்கல்லாகக் கருதப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை முன்வைத்தார்.  அவர் மைக்ராஸ்கோப்களால் வசீகரிக்கப்பட்டவர். அவற்றின் மூலம் பார்த்தவற்றை அவர் அழகான ஓவியங்களாகத் தொகுத்து 1665-ம் ஆண்டில் மைக்ரோக்ராஃபியா என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் இருந்த ஓர் ஓவியத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை அவரே அப்போது உணரவில்லை. கார்க் மரத்தின் ஒரு துண்டை மைக்ராஸ்கோப்பில் பார்த்து அவர் வரைந்திருந்த ஓவியமே அது. அதில் சின்ன செவ்வக அறைகளால் ஆன ஒரு சித்திரம் இருந்தது. அதற்கு செல் என்று பெயரிட்டார். செல் என்றால் சிறிய அறை என்று பெயர்.  

18-ம் நூற்றாண்டில் மைக்ராஸ்கோப்களின் வளர்ச்சி போதிய அளவு எட்டியதும் உயிரியல் கண்டுபிடிப்புகள் தேங்க ஆரம்பித்தன.  1820-ம் ஆண்டு அக்ரோமேட்டிக் மைக்ராஸ்கோப்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது மறுபடியும் உயிரியல் பாய்ச்சலில் செல்ல ஆரம்பித்தது.  

விஞ்ஞானிகள் சில நேரங்களில் இல்லாதவற்றையும் கற்பனை செய்துகொள்ளத் தொடங்கினர். கண்ணுக்குத் தெரியாதவற்றை எல்லாம் பார்க்க முடிந்ததும், ஆர்வத்தின் உந்துதலால் எதை எதையோ சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டனர். விந்துவில் மனித உருவங்கள் இருப்பதைப்போல படங்கள் வரைந்து காண்பித்தனர். அந்த மனித உருக்குள் இன்னொரு மனித உரு ஒளிந்திருப்பதைப்போல எல்லாம் காட்சிப்படுத்த ஆரம்பித்தனர் இது பரிணாம வளர்ச்சிக்கு முற்றிலும் தடையான ஒன்று.

இந்தக் கருத்தை நோக்கி எதிர்க்கணையை முதலில் செலுத்தியவர், காஸ்பர் ஃபிரடெரிக் உஃல்ப் என்கிற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. அவர் 1759-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ‘செடியின் வளரும் தண்டு பாகுபடுத்தப்பட்ட, பொதுவான படிவங்களைக் கொண்டுள்ளது. அது வளர வளர பாகுபாடு அடைந்து ஒரு பகுதி மலராகவும், இன்னொரு பகுதி இலையாகவும் மாறுகிறது. அதைப்போலவே முட்டைக்குள் இருக்கும் கரு வளர வளர பாகுபாடு அடைந்து தலை, சிறகு, கால் போன்ற கோழிக்குஞ்சின் பாகங்கள் உருவாகின்றன’ என்பதை அவர் ஆய்வு செய்தார். சிறிது சிறிதாக சிறப்படைவதும், தனி பாகங்களாக உருவாவதும் நடக்கின்றன என்பது அவரால் முன்மொழியப்பட்டது.  

ஜேவியர் பிகாட் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர், ‘உடம்பின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட தோற்றத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவற்றில் இருக்கும் செல்களின் தொகுப்பே’ என்றார். அதை அவர் திசுக்கள் என்று அழைத்தார். அவரே ஹிஸ்டாலஜி என்கிற திசு இயலை தொடங்கிவைத்தவர். மனித உடலின் உறுப்புகள் வெவ்வேறு திசுக்களால் ஆனவை. இதயத்தில் இருக்கும் திசுக்களும், கல்லீரலில் இருக்கும் திசுக்களும் வேறுபட்டவை.  

ராபர்ட் ஹுக் முன்வைத்த செவ்வக செல்களின் உள்ளே பிசுபிசுவென்ற திரவம் இருப்பதை, செகஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த பர்க்கின்ஜி என்கிற விஞ்ஞானி முன்வைத்தார். முட்டைக்குள் இருக்கும் உயிருள்ள கரு பொருளை அவர் புரோட்டோபிளாசம் என்று அழைத்தார்.  

செல்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட உயிரியல் அறிஞர்கள், உயிருள்ள திசுக்கள் எல்லாவற்றிலும் அவை இடம்பெற்றிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர். ஷ்வான் என்பவர் தாவரங்கள் மட்டுமல்ல, விலங்குகளும் செல்களால் நிர்மாணிக்கப்பட்டவை என்கிற கருத்தை முன்வைத்தார்.  ஒவ்வொரு செல்லும் ஒரு மெல்லிய சவ்வால் மூடப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் முன்வைத்தார். ஷ்லீடன், ஷ்வான் என்கிற இருவருமே சைட்டாலஜி என்கிற செல்கள் பற்றிய புது அறிவியல் கிளை தொடங்க காரணமாக இருந்தார்கள்.  

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கொல்லிக்கர் என்பவர் முட்டையும், உயிரணுவும் தனித்தனி செல்கள் என்பதை முன்வைத்தார். கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இருக்கும் பறவைகளின் முட்டையும் தனி செல்தான் என்பதையும் அவர் தெரிவித்தார். சினையான முட்டையும் தனி செல்லே என்பதை அவர் உறுதிப்படுத்தினார். விலங்குகளுக்குள் உள்ள வேறுபாட்டை அவற்றின் செல்களின் வளர்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ரத்தமும் பணமும் ஒரே குணமுடையவை. இரண்டும் சுழற்சியில் இருந்தால்தான் ஆரோக்கியம்!

படித்தலிருந்து...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரமாமுனிவர்... கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.

Tamil...Tamil..Tamil.!

வீரமாமுனிவர்... கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர். கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர். அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர். தமிழ் மீது தீராக் காதல் கொண்டார் என்பது வரலாறு.

தமிழில் 23 நூல்களை இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார். தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார். அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர்.

தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் சுவடி தேடிய சாமியார் எனப்பெயர் பெற்றார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் - போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே, பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

36 ஆண்டுகள் இடையறாத தமிழ் பணியாற்றிய அவர் இதே தினத்தில் (பிப்ரவரி 4) மறைந்தார். இவரின் தேம்பாவணி நூலை உரையோடு படிக்க http://www.tamilvu.org/library/l4310/html/l4310por.htm

- பூ.கொ.சரவணன்

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !!

குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம் !! "வாமா மீனாம்மா என்ன டவுனுக்கு போய்ட்டு வந்தியா?" என்று அடுத்த வீட்டு பாட்டியம்மா விசாரணை !!

காலை எழுந்து பல்விளக்கியதும் காபி! (அது இல்லைன்னா சரிப்படாது!! ) அதன் பின்னால் செய்தித்தாள் !! அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும்! அப்புறம் பழையது ! தொட்டுக் கொள்ள வடுமாங்காய், மோர்மிளகாய், அப்புறம் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் வேலை !!

அதன் பின்னால் குளியல்! கொஞ்சம் நேரம் பூஜை. முடிந்ததும் ஊரிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ செல்லுதல், வழிபாடு! முடித்து விட்டு வந்தால் பதினோரு மணிக்கு சாப்பாடு!! அதன் பின்னால் வாசல் திண்ணையில் ஒத்த வயதுடைய அக்கம் பக்கத்து கிழங்களுடன் அரட்டை, சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே விமர்சனம்! சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால் கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி !!

மதியம் இரண்டு மணி நேரம் தூக்கம்! மாலை ஒரு காபி ! கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை! அப்புறம் கோவிலுக்கு ஆறு மணி பக்கம் ! அங்கு தரிசனத்துக்கு பின்னால் ஒரு ஏழெட்டு டிக்கெட்டுகள் உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு எட்டு மணி வரை !!

பின் வீடு திரும்பி எளிய டிபன் நாலு இட்லி அல்லது இரண்டு சப்பாத்தி ! கொஞ்சம் பால் ! ராத்திரி திண்ணையில்பாய் விரித்துக் கொண்டு அக்கம் பக்கம் தோஸ்துகளுடன் இருட்டில் பேசிக் கொண்டே படுக்கை ! தூக்கம் வரும் போது தூங்கிப் போகுதல் !! முடிந்தால் வாசலில் உள்ள வேப்பமரத்தின் கீழே கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம் !!

செல்போன் இல்லை, கணினி இல்லை, டிவி இல்லை, பேஸ்புக் இல்லை, வாட்ஸ்அப் இல்லை எதுவுமே இல்லை ! உடலில் நோயுமில்லை மனதில் கவலையுமில்லை !! வாய்க்குமா???

 

Thanks: FB

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையில் (பருத்தித்துறை) உள்ள பெரியவளவு வரத வினாயகர் ஆலய முன் மண்டப தூண்கள் இடிக்கப் பட்டமை தொடர்பில் மிகுந்த கண்டனத்தை தமிழ் சமூகம் தெரிவிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

முந்தாநாள் அந்த தூண்கள் இடித்துக் கொட்டிய மண் மலையைப் பார்த்தேன், ஒரு கோயிலையே இடித்துக் கொட்டியிருப்பது போலிருந்தது .

சுமார் அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் அந்த தூண்களைப் பற்றி ஆயிரம் ஞாபகங்கள் உண்டு. கை பிடித்து நடந்ததிலிருந்து வெயில் காலங்களில் அரப்புத் தட்டி விளையாடுவது, அதன் மறைவுகளுக்குள் அவல் சுண்டல் கை மாற்றியது வரை இன்னும் இன்னும் கதைகளை இந்த தூண்கள் கொண்டிருக்கின்றன.

இதனை மக்களின் பொது முடிவின்றி தான்தோன்றி தனமாக ஒரு சிலரின் அராஜகப் போக்கினால் நிகழ்த்தியமை என்பது கடும் கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தித்துறை போன்ற புராதனங்கள் நிறைந்த ஊரில் இப்படி கேட்டுக் கேள்வியில்லாமல் உடைத்தெறிந்து கொண்டு போனால் வரலாற்றில் நமக்கு மிஞ்சப் போவது என்ன என்பதை ஊர் இளைஞர்களும் ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.

கிருசாந்...

Image may contain: sky, house, tree and outdoor

 

 · 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாகவே இருக்கும் (சேகுவரா)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி தர்மபுரம் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் ஒரு இல்லத்தின் முகப்பாக மாவீரர் துயிலும் இல்லம்.

Image may contain: one or more people, people standing and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people and outdoor
Theepachelvan Pratheepan
 
 

பளை மத்திய கல்லூரியில் 06.2017 நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இல்லம் ஒன்றின் முகப்பு. தணியாத தாகம்.

 · 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளவயதினரை சுண்டியிழுக்கும் மேற்கு நாகரிக மோகம்-----படித்தது --நம் சிந்தனைக்கு

 

மனித குலம் கடந்து வந்த பாதையை வரலாற்றுப் பதிவுகள் வாயிலாக கற்கின்ற போதுதான் ‘நாகரிகம்’ என்பதற்கான நிஜமான அர்த்தம் எதுவென்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.நாகரிகம் என்பது ஆடையலங்காரங்களிலோ அன்றி பகட்டுத்தன்மையான போலியான வாழ்க்கைக் கோலங்களிலோ வெளிப்படுவதன்று. மனித இனத்தின் அறிவியல் வளர்ச்சியும் அதன் வாயிலாக அவன் பெற்றுக் கொண்ட நவீனமான வாழ்க்கை மேம்பாடுகளுமே உண்மையான நாகரிகமாகும் என்பதே பொருத்தமான கருத்தாக அமைகிறது. 

இக்கருத்துடன் நோக்குகையில் மனித குலத்தின் அறிவியல் சார்ந்த வளர்ச்சியே நாகரிகம் என்பதாகும். அவ்விதமான படிப்படியான நாகரிக வளர்ச்சியைக் கற்பதே வரலாறு என்பதன் பொருளாகும்.நாகரிகம் என்பதன் உள்ளார்ந்த பொருளை ஆராயுமிடத்து போலித்தனமான வாழ்க்கைப் பண்புகளை மற்றொரு சமூகத்திடமிருந்து பிரதி பண்ணுவதென்பதே நாகரிகம் என்று அர்த்தமாகாது. அறிவியலில் முதிர்ச்சியடைந்த சமூகமொன்றிலிருந்து எமது வாழ்வு முறைக்குப் பயன் தருவதாக அமைகின்ற அம்சங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து எமது விழுமியப் பண்புகள் பிறழ்வுறாத விதத்தில் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே நாகரிகமென்பதற்கான அனுகூலமான அம்சம் எனலாம். 

வரலாற்று ஆசிரியரான பேர்க்ஹாட் என்பவர் கூறியிருக்கும் கருத்தொன்றை இவ்விடத்தில் மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக அமையலாம்.“வரலாறு என்பது ஒரு யுகத்தில் எழுதிப் பாதுகாத்து வைக்குமளவுக்கு பெறுமதியான விடயங்களை அதற்கு முன்னைய யுகமொன்றிலிருந்து தேடிக் கண்டுபிடித்துக் கொள்வதாகும்.” இதுவே பேர்க் ஹாட் கூறியிருக்கும் கருத்தாகும். இக்கருத்தானது வரலாறு என்ற பதத்துக்கு மாத்திரம் ஏற்புடையதல்ல. நாகரிகம் என்பதற்கான பொருளையும் பேர்க்ஹாட் என்ற வரலாற்றாசிரியரின் கருத்துடனேயே சமாந்தரமாக வைத்து நோக்க வேண்டியிருக்கிறது. 

அதாவது கடந்த கால வரலாற்றில் இருந்தோ அன்றி மற்றொரு பிரிவினரிடமிருந்தோ எமது வாழ்வு முறைக்குச் சாதகமாகப் பொருந்தக் கூடியவற்றை மாத்திரமே பிரதிபண்ணி அடியொற்றிக் கொள்ள வேண்டுமென்று கூறுவதில் தவறில்லை. மனித நாகரிகம் தொடர்பான இத்தகைய ஆய்வுகளுடன் நோக்குகின்ற போது ‘வலன்ரைன்ஸ் டே’ எனப்படுகின்ற காதலர் தினக் களியாட்டங்களை எத்தகைய நாகரிக வரையறைக்குள் உள்ளடக்குவதென்பது குழப்பமானதொரு விடயமாகவே தோன்றுகிறது. 

காதலர் தினத்தை நாளை கொண்டாடுவதற்காக உலகம் இன்றைய தினத்திலேயே தயாராகி நிற்கிறது. மேற்குலக மக்களின் வாழ்வியல் கலாசாரத்துடன் நோக்குகின்ற போது காதலர் தினமென்பது அவர்களுக்கெல்லாம் பிரமாதமானதொரு சமாச்சாரமல்ல. காதலர் தினம் தோற்றம் பெற்றதே மேற்குலகில்தான். மனித உள்ளத்தின் நுண்ணிய மெல்லுணர்வுகளை மனதினுள் பூட்டி வைத்து அந்தரங்கமாக வெளிப்படுத்துவதிலுள்ள ஆத்ம மகிழ்ச்சியின் அர்த்தம் புரியாத மக்களாக மேற்குலக மக்களைக் கொள்ளலாம்.ஆடையலங்காரத்தினால் மேனியை மறைத்து வைக்க முடியாததைப்போன்று மென்மையான உணர்வுகளைக் கூட பக்குவமாக மறைத்து வைத்திருக்கத் தெரியாமல் வெளிப்படையாக வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்டவர்கள் அவர்கள். ஆகவேதான் காதலர் தினத்தன்று ஆணும் பெண்ணும் வெளிப்படையாகவே அன்பைப் பரிமாறிக் கொள்கின்ற கண்காட்சி வைபவமாக ‘வலன்ரைன்ஸ் டே’ என்பதனை அவர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு என்பதன் பேரில் இறுதிவரை ஒளிந்திருக்கின்ற ஆனந்தமயமான உணர்வின் அர்த்தத்தையே அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. 

மேற்கு நாடுகளில் வாழ்கின்ற காதலர்களைப் பொறுத்த வரை நாளைய தினமானது அவர்களது தேசிய விழாவாகவே மிளிரப் போகின்றதென்று கூறினாலும் அது தவறாகாது. அவர்களது வாழ்க்கைத் கலாசாரமும் நாகரிகத் தன்மையும் அவ்வாறான கொண்டாட்டங்களுடன் பொருந்திப் போகின்றதென நாம் வைத்துக் கொள்வோம். 

ஆனால் இலங்கையிலும் சமீப காலமாக காதலர் தினமென்ற அம்சம் காட்டுத்தீ போன்று பட்டிதொட்டியெல்லாம் வேகமாகத் தொற்றிக் கொண்டு பரவி வருவது கண்கூடாகத் தெரிகிறது. காதலர் தினத்துக்கு முன்னுரிமை அளித்து இளவயதினரை ஈர்த்தெடுப்பதில் வெகுஜன ஊடகங்கள் முனைப்புக் காட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது. இலத்திரயனில் ஊடகங்களுக்கே இவ்விடயத்தில் கூடுதலான பங்கு உண்டு. இளவயதினரின் கவனத்தைத் திருப்புவதற்காக ஊடகங்கள் கையாளுகின்ற உத்தியாக இதனைக் கருதலாம். 

இளவயதினரின் ‘ஹோர்மோன்’ என்ற இரசாயனத்தைத் தூண்டி விடுவதில் ஊடகங்களுடன் வர்த்தக நிறுவனங்களும் கைகோர்த்துக் கொள்வதில் அர்த்தம் உண்டு.இளவயதினரின் இதுபோன்ற பலவீனங்களை நன்றாகவே பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தந்திரத்தை வர்த்தக நிறுவனங்கள் கையாள்கின்றனவென்று கூறுவதே மிகவும் பொருத்தமானதாகும்.காதலர் தினம் நெருங்குகின்ற வேளையில் இளவயதினரைக் குறிவைக்கும் விளம்பர வேட்டையை வியாபார நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன. ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதற்கான வியாபாரத் தந்திரமொன்று காதலர் தினத்தின் ஊடாகக் கையாளப்படுகிறது. 

நாளைய தினத்தன்று காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதென்பது எமது நாட்டில் கட்டாயமானதொரு கலாசாரமெனப் போதிக்கும் வகையில் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் விளம்பரங்கள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.இத்தகைய விளம்பரங்களுக்கெல்லாம் ஈர்க்கப்பட்டு இளவயதினர் பணத்தை வீணாக வாரியிறைக்கும் அபத்தமானது நகரங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும் பரவி வருகிறது. இளவயதினரைத் தூண்டுவதன் மூலம் ஊடகக் கவர்ச்சியையும் வியாபாரப் பெருக்கத்தையும் ஏற்படுத்துவதே மறைமுகமான நோக்கங்களாகக் காணப்படுகின்றன. 

மேற்கு நாகரிக மாயை என்பது எமது நாட்டை மாத்திரமன்றி இந்தியா உட்பட மேலும் பல நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. நடையுடை பாவனைகளிலும், கலாசாரங்களிலும் மேற்குலக மக்களைக் கடைப்பிடித்து ஒழுகுவதே மேலானதுதென்றதொரு மாயை இளவயதினரை மாத்திரமன்றி பெரியோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தனது பிள்ளைக்குத் தாய்மொழி தேர்ச்சி கிடையாதென்றும் ஆங்கிலப் புலமையே முழுமையாக உள்ளதெனவும் கூறிப் பெருமைப்படுகின்ற பெற்றோர் நம்மத்தியில் ஏராளமாகவே உள்ளனர். 

தமது பிள்ளை ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டுமென்ற விருப்பு ஒருபுறமிருக்க, மேற்குநாட்டு கலாசாரத்தையே கடைப்பிடிக்க வேண்டுமென ஆசைப்படும் பெற்றோரும் உள்ளனர். பெற்றோரின் தூண்டுதலும் விருப்புமே அவர்களது பிள்ளைகளை தாயகக் கலாசாரப் பிறழ்வுக்கு உள்ளாக்குவதாகக் கூறினாலும் மிகையாகாது. இவ்விதமான மேற்குக் கலாசார மோகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே நாளைய காதலர் தினமும் அமைகிறது. நாளைய தினத்துக்காக இளவயதினர் பட்டாளமொன்றே பல நாட்களாகக் காத்துக் கிடக்கின்றது. ஆடம்பர ஹோட்டல்களில் இளவயதினரைக் குறி வைத்து காதலர் தினத்தன்று களியாட்ட வைபவங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் நாளை காதலர்கள் அலை மோதத்தான் போகிறார்கள். 

இவ்விடத்தில் முடிவாக ஒன்றைக் கூற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கெனவும் அம்மக்களின் வாழ்க்கைக் கோலத்துக்கும் வசதி வாய்ப்புக்களுக்கும் ஏற்ப தனித்தனியான கலாசார பாரம்பரியங்கள் உள்ளன. அந்தந்த நாட்டுக்குரிய காலாசார முறைகளில் ஒன்றை விட மற்றொன்று சிறப்பானதெனக் கருதுவதற்கு இடமில்லை. மேற்கு நாட்டுக் கலாசாரமே மேன்மையானதென நம்புவது புத்திசாலித் தனமுமல்ல. 

குறித்த நாடொன்றின் நாகரிகமானது அம்மக்களின் ஒழுக்கவிழுமியங்களுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கிறது. மற்றொரு சமூகத்தின் நாகரிகமானது எல்லைமீறி ஊடுருவுகின்ற போது எமது நாட்டின் சுய கலாசாரத்தை மாத்திரமன்றி ஒழுக்கவிழுமியங்களையும் நாம் தொலைத்துக் கொள்ள நேரிடலாம். மேற்கு நாடுகளின் வாழ்வியல் கலாசாரமானது அம்மக்களின் சமூகக் கட்டமைப்பில் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதென்பதை நாமறிவோம். குடும்ப உறவுகள் என்பதெல்லாம் அந்நாடுகளில் கேள்விக்குரியதாகியுள்ளது. 

அத்தகைய நாகரிக கலாசாரம் எமது நாட்டு வாழ்வியல் முறைக்குள் ஊடுருவுவது அவசியம்தானா என்பது நாளைய காதலர் தின களேபரங்களைப் பார்க்கையில் ஆழமான சிந்தனைக்குரியதாகிறது. 

எஸ். பாண்டியன்

 

 

எழுது.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, sitting and indoor
ThesiyamLike Page
22 mins · 

ரொறன்ரோவுக்கு கிடைத்தார் முதலாவது தமிழ் நகரசபை உறுப்பினர் 

Scarborough-Rouge River/Ward 42 தொகுதியில் இன்று நடைபெற்று முடிந்த மாநகரசபை இடைத் தேர்தலில் நீதன் ஷான் வெற்றி பெற்றுள்ளார். இன்றைய தேர்தலில் அதிகளவு வாக்குக்களைப் பெற்றதன் மூலம் ரொறன்ரோ நகரசபைக்கு முதலாவது தமிழ் நகரசபை உறுப்பினர் தெரிவாகியுள்ளார்.

 
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இந்தப் பத்திரிகை யாரால் நடாத்தப்படுகிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

யாயினி இந்தப் பத்திரிகை யாரால் நடாத்தப்படுகிறது?

இலங்கதாஸ் பத்மனாதன் அவர்களால் நடாத்தபடுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதன் ஷான்: ரொறன்ரோ மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்ற முதலாவது தமிழ் கனடியர்

 · 
 
Image may contain: 2 people, people smiling, indoor
ThesiyamLike Page
1 hr · 

நீதன் ஷான்: ரொறன்ரோ மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்ற முதலாவது தமிழ் கனடியர்

ரொறன்ரோ மாநகரசபையின் முதலாவது தமிழ் கனடிய உறுப்பினராக இன்று (புதன்கிழமை) பதவியேற்ற நீதன் ஷான் இன்று நடைபெற்ற நகரசபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்திலும் பங்கேற்றுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை (February மாதம் 13ஆம் திகதி) நடைபெற்ற Ward 42க்கான (Scarborough Rouge River) மாநகரசபை உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதன் ஷான் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். கனடாவின் மிகப்பெரிய மாநகரசபையாக ரொறன்ரோ நகரசபை உள்ளபோதிலும் அதில் 6 சிறுபான்மையினர் மாத்திரம் மக்கள் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் நன்றி Thadsha Navaneethan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Feb 14,2017

 Pic· E.kuruvi
Image may contain: one or more people, sky, shoes and outdoor
Image may contain: one or more people, shoes, night, sky and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு  போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு  போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..

இப்படியான தொழில் செய்வோருக்கு பொறுமையும்,சகிப்பித்தன்மையும் அவசியம்.என்னிடம் அது சுத்தமாக இல்லை. சேவை மனப்பான்மையுடன் வேலையை ரசித்து செய்யுங்கள் யாயினி.(அட்வைஸ் செய்றது ஈசி என்று மனதுக்குள் நீங்கள் திட்டுவது கேட்க்குது.)<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.2.2017 at 11:28 PM, யாயினி said:

ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு  போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..

உங்கள் நிலையிலிருந்து  உணர்வுகளை புரிந்து கொள்கின்றேன். எல்லாம் தலைவிதி என நினைத்து மனதை திடப்படுத்திக்கொள்வதுதான் சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்
On 16.2.2017 at 11:28 PM, யாயினி said:

ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு  போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..

யாயினி... இந்த உலகத்தில்,  பிரச்சினை  இல்லாத மனிதர், ஒருவரும் இல்லை.
எல்லோரும்... ஒவ்வொரு பிரச்சனைகளுடன் தான்... வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதற்காக....  மேற்குலக நாட்டில், வாழும்  நீங்கள்  கவலைப் படுவது, அர்த்தமற்றது.
எமக்கு கீழும்.... உள்ள பலர், மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். 
மனதில்... திடம், வேண்டும். அது.. மிக முக்கியம். யாயினி.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2017 at 11:55 AM, ரதி said:

இப்படியான தொழில் செய்வோருக்கு பொறுமையும்,சகிப்பித்தன்மையும் அவசியம்.என்னிடம் அது சுத்தமாக இல்லை. சேவை மனப்பான்மையுடன் வேலையை ரசித்து செய்யுங்கள் யாயினி.(அட்வைஸ் செய்றது ஈசி என்று மனதுக்குள் நீங்கள் திட்டுவது கேட்க்குது.)<_<

care giver burn out/care giver relive - தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ள முடியாது..அந்தக் கட்டத்திற்குள் போய் விட்டனோ என்ற   சின்ன ஐயப்பாடு உண்டு..

மற்றப்படி உங்களைதிட்டவில்லை..ஆனால் உங்களைப் போன்றவர்களைக் கொண்டு வந்து இப்படியானவர்களைப் பராமரிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறன்..என்னத்தை சொல்வது ஒரு பிள்ளையினுடைய கட்டாய கடமை.என்றே நினைக்கிறேன்...எனது பின் பலத்தோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் அதிக சுமை..எப்படி இருந்தாலும் கடசிவரைக்கும் நானே செய்து முடிக்க வேண்டும் என்ற கோட்பாடு மட்டுமே மனத்தினுள் இருக்கிறது...சந்தர்ப்பம் அமைந்தால் பிறிதொரு தலைப்பில் பேசுவோம்..

 

On 2/17/2017 at 3:01 PM, குமாரசாமி said:

உங்கள் நிலையிலிருந்து  உணர்வுகளை புரிந்து கொள்கின்றேன். எல்லாம் தலைவிதி என நினைத்து மனதை திடப்படுத்திக்கொள்வதுதான் சிறந்த வழி.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி தாத்தா.

 

On 2/17/2017 at 3:23 PM, தமிழ் சிறி said:

யாயினி... இந்த உலகத்தில்,  பிரச்சினை  இல்லாத மனிதர், ஒருவரும் இல்லை.
எல்லோரும்... ஒவ்வொரு பிரச்சனைகளுடன் தான்... வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதற்காக....  மேற்குலக நாட்டில், வாழும்  நீங்கள்  கவலைப் படுவது, அர்த்தமற்றது.
எமக்கு கீழும்.... உள்ள பலர், மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். 
மனதில்... திடம், வேண்டும். அது.. மிக முக்கியம். யாயினி.     

 

அவரவர் சூள் நிலையோடு ஒத்துப் பார்க்கும ;போது எனக்கு கொஞ்சம் அதிக தலையிடி என்றே  படுகிறது..உங்கள் கருத்துக்களுக்கு நன்றியண்ணா.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Happy Family day to all canadians..?:-)

 · 
Image may contain: text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் அன்றைக்கே சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்..

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாம் அறிவின் ஆறாம் அறிவு...நேற்று ஒருவர் இறப்பு வீடு ஒன்றுக்கு போய் விட்டு சொல்லிக் கவலைப் பட்டார்.அந்த வீட்டில் சின்ன நாய்க்குட்டி ஒளறு நிற்கிறதாம் அந்த துக்க வீட்டுக்கு போகும் அனைவரையும் வாசல் வரை வந்து பார்த்து விட்டு ஒரு ஓரமாய் படுத்துக் கொள்கிறதாம்...காரணம் அதன் எதிர் பார்ப்பு எல்லாம் தன் எஜமானர் வருகையை எதிர் பார்த்து தானாம்.....அங்கு போய் விட்டு வந்தவருக்கும் நாய்குட்டி என்றால் ரொம்ப பிரியம் தூக்கி கொஞ்ச நேரம் மடியில் வைததிருக்கும் அதன் உடல் எங்கும் சுட்டுக் கொண்டிருந்ததாம்...ஏன் இதன் உடல் சுடுகிறது என்று கேட்ட போது அந்த சீவனுக்கும் எசமானர் போய் விட்டார் என்று விளங்கீட்டு அதனால் தான் இயக்கமற்று போகிறது என்று சொல்லி அழுதார்களாம்; ஐந்துக்குள்ளும் ஓர் ஆறாம் அறிவு இருக்கிறது..

Image may contain: dog
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, யாயினி said:

ஐந்தாம் அறிவின் ஆறாம் அறிவு...நேற்று ஒருவர் இறப்பு வீடு ஒன்றுக்கு போய் விட்டு சொல்லிக் கவலைப் பட்டார்.அந்த வீட்டில் சின்ன நாய்க்குட்டி ஒளறு நிற்கிறதாம் அந்த துக்க வீட்டுக்கு போகும் அனைவரையும் வாசல் வரை வந்து பார்த்து விட்டு ஒரு ஓரமாய் படுத்துக் கொள்கிறதாம்...காரணம் அதன் எதிர் பார்ப்பு எல்லாம் தன் எஜமானர் வருகையை எதிர் பார்த்து தானாம்.....அங்கு போய் விட்டு வந்தவருக்கும் நாய்குட்டி என்றால் ரொம்ப பிரியம் தூக்கி கொஞ்ச நேரம் மடியில் வைததிருக்கும் அதன் உடல் எங்கும் சுட்டுக் கொண்டிருந்ததாம்...ஏன் இதன் உடல் சுடுகிறது என்று கேட்ட போது அந்த சீவனுக்கும் எசமானர் போய் விட்டார் என்று விளங்கீட்டு அதனால் தான் இயக்கமற்று போகிறது என்று சொல்லி அழுதார்களாம்; ஐந்துக்குள்ளும் ஓர் ஆறாம் அறிவு இருக்கிறது..

Image may contain: dog

யாயினி,   நீங்கள் பதியும் சில விடயங்கள்... விடை காணவியலாத பல கேள்விகளை ...எம்முள் எழுப்பிச் செல்கின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.