Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2022 at 14:53, யாயினி said:

 

இவர் இலகுவாக பெட்ரோல் அடிக்கிறார், யாழ்ப்பாணத்தில் பெரிய line ஐ காணவில்லை?

  • Replies 3.9k
  • Views 331.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு குழந்தை எழுதிய கட்டுரை
ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.
தலைப்பு “கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்” என்பது.
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,
“என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.
என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,
“கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.
அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.
அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்.”
இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,
“அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?”
ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இணையத்தளங்கள் மற்றும் சமுக வலைத்தளங்கள் முடக்கம்! Arv.losan youtube.பக்கத்திலிருந்து..

  • கருத்துக்கள உறவுகள்

அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம்

 

அசுணம் என்றால் என்ன ?

அகநானூறு பாடலில் வரும் அசுணம் எனும் விலங்கை அல்லது பறவையை சங்ககாலப் பாடல்களின் பல இடங்கிங்களில் "அசுணமா" என்றே அறியப்படுகின்து. இசையை அறியக்கூடிய அல்லது கேட்ககூடிய ஒரு உயிரிணமாம் இந்த அசுணமா. இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம்.

v5Z8ptdl1ivZSRas_FotoJet-%2818%29.jpg?w=  

இதை உணர்ந்த வேடுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை, இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாது, காதுகளில் வலிவந்து மிரண்டுவிடும் சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர் என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் “யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால்,அரை,கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.
அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், “முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்✍👋

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......!  💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சித்திரா பெளர்ணமி.✍️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

இன்று சித்திரா பெளர்ணமி.✍️

எங்கட ஊரில் உள்ள வைரவர் கோவில் சித்திரைக் கஞ்சியும் வடையும் செய்தவர்கள். இன்றைய மதிய உணவு இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அட......இவ்வளவுகாலமாய் நான் இந்த சித்திரைக் கஞ்சியை மறந்தே போயிருந்திருக்கிறன்.......ச்சா .....என்ன ஒரு சுவை...... நினைத்தவுடன் நாவில் வந்து குந்தியிருக்குது......ஞாபகப் படுத்தியதற்கு நன்றி ஏராளன் ........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Happy Easter.

 
 
No photo description available.
Summer Love GIF
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலை உலகின் கால் தடங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arv loshan news...

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான பதிவு சகோதரி.......இது போன்றவற்றை பகிருங்கள்......பகிர்வுக்கு நன்றி........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைப் பார்க்க அவளது பள்ளி நண்பன் வருகிறான்.
உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.
உடனே அவன் அவளிடம், "இல்ல
நான் ஹும்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.
உடனே அவள், ஓ அது என்னிடம் இல்லை, அதனால் நீ... கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை வாங்கிக்கொள் " என்கிறாள்.
உடனே அவன், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.
உடனே அவள், நண்பனிடம்...பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தை யும் கொண்டு வருகிறேன் என்கிறாள்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தை உடனே தன் மகளிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.
உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.
உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..
நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய
*"வயதானவர்கள் முட்டாள்கள்_இல்லை"*
என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தேசிய கீதம், புதிய அமைச்சரவை - Sri Lanka news Today

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இன்று (19) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
 
ஒக்டேன் 92 - ரூ.338 ஒக்டேன் 95 - ரூ.373 லங்கா ஓட்டோ டீசல் - ரூ.289 லங்கா சுப்பர் டீசல் - ரூ.329

 

 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஏப்பிரல் மாதமாகியும் பனி கொட்டுது...🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  வெளிநாடுகளில் இருக்கும் ஓய்வு நிலை வயோதிபர்களுக்கான தகவல் இது.ஊரில் ஓய்வூதியம்( பென்சன்) பெற்றுக் கொண்டு இருக்கும் ஆண்கள் மற்றும் ஆண்/பெண் விடோவாக இருப்பவர்களுக்கு 5000 ஆயிரம் ருபா மேலதிக ஓய்வூதியமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் ஓய்வூதியர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வரையறைக்குள் இருப்பவர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவு கொடுக்கப்படுவதாக அறிய முடிகிறது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arv loshan news..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இராத்திரி சாமத்தில இருந்து காலை வரை யாழ் வேலை செய்ய இல்லை..🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

எனக்கு இராத்திரி சாமத்தில இருந்து காலை வரை யாழ் வேலை செய்ய இல்லை..🤔

உங்களுக்குமா யாயினி.
இலங்கையில்… ஏராளனுக்கும், பிரான்ஸ்சில்…. சுவியருக்கும், ஜேர்மனியில்… தமிழ் சிறியருக்கும் தடங்கல் ஏற்பட்டிருப்பதால்,
நிர்வாகத்தினர்… இதனை உடனே கவனிப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

  வெளிநாடுகளில் இருக்கும் ஓய்வு நிலை வயோதிபர்களுக்கான தகவல் இது.ஊரில் ஓய்வூதியம்( பென்சன்) பெற்றுக் கொண்டு இருக்கும் ஆண்கள் மற்றும் ஆண்/பெண் விடோவாக இருப்பவர்களுக்கு 5000 ஆயிரம் ருபா மேலதிக ஓய்வூதியமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் ஓய்வூதியர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வரையறைக்குள் இருப்பவர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவு கொடுக்கப்படுவதாக அறிய முடிகிறது.

இந்த வருடம் முடியும் வரை தற்காலிகமாக வழங்குகிறார்கள்.

2 hours ago, யாயினி said:

எனக்கு இராத்திரி சாமத்தில இருந்து காலை வரை யாழ் வேலை செய்ய இல்லை..🤔

4 minutes ago, தமிழ் சிறி said:

உங்களுக்குமா யாயினி.
இலங்கையில்… ஏராளனுக்கும், பிரான்ஸ்சில்…. சுவியருக்கும், ஜேர்மனியில்… தமிழ் சிறியருக்கும் தடங்கல் ஏற்பட்டிருப்பதால்,
நிர்வாகத்தினர்… இதனை உடனே கவனிப்பது நல்லது.

அநேகமாக சரி செய்துவிட்டார்கள் நிர்வாகம் என நினைக்கிறேன்.
என்றாலும் அறிவித்தல் பகுதியில் நிர்வாகம் அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.