Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை உடனடியாக தடை செய்யவேண்டும்!

Featured Replies

நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை உடனடியாக தடை செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை  தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

'நெடுந்தீவிலுள்ள குதிரைகளில் நான்கு குதிரைகளை, கடற்படையினர் கடந்த வாரம் வெளியிடங்களுக்கு எடுத்து செல்வதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்தத்தில் மேற்படி குதிரைகள் இராணுவத்தினரால் நடத்தப்படும் சுற்றுலா விடுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக அறிந்தோம்.

இது சட்டத்தை மீறும் செயல். நெடுந்தீவிலிருந்து எந்த குதிரைகளையும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இது தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன், எதிர்வரும் வாரமளவில் அங்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்வோம்.

இதேவேளை, மேற்படி குதிரைகளுக்கு சரணாலயம் அமைக்க 500 ஏக்கர் நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியிருந்தனர். சம்மதம் பெறுவதற்கான கோரிக்கை கடிதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சம்மதக்கடிதம் கிடைக்கப்பெற்றதும், சரணாலயம் அமைக்கும் நடவடிக்கையை வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொள்ளும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கூறுகையில்,

'600 வருடகால பாரம்பரியம் கொண்ட நெடுந்தீவு குதிரைகளை வெளியில் எடுத்துச் செல்லும் நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவிலுள்ள குதிரைகள் வரலாற்று பழமை வாய்ந்தவை. இவை வரலாற்று அடையாளமாக பேணப்பட்டு வருகின்றன.

வன ஜீவராசிகள் திணைக்களமும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில், 534 குதிரைகள் நெடுந்தீவில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இவற்றை வெளியில் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் என்னிடம் முறையிட்டனர். இதனை வடமாகாண விவசாய அமைச்சரது கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

ஒல்லாந்தர் காலத்துக்குரிய இந்த குதிரைகள், அக்காலத்தில் போர்களின் போதும் பயன்படுத்தப்பட்டுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.http://www.pathivu.com/news/33706/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம்.. சொந்த மண்ணுக்கு ஆற்றிய ஒரே ஒரு உருப்படியான விடயம்.. நெடுந்தீவுக் குதிரைகளின் குடித்தொகையை கணக்கிட்டதுதான்.

 

ஆனால்.. என்ன பிரச்சனை என்றால்.. இந்தக் குதிரைகளின் குடித்தொகையில் வீழ்ச்சி இருப்பதாகவே தென்படுகிறது.

 

மேலும்.. நெடுந்தீவுக் குதிரைகள்.. அதே இன வேற்றுக் குதிரைகளோடு இனக்கலப்புச் செய்யாமல் வாழ்ந்து.. சில நோய்கள் அவைக்கு பரம்பரையாக வந்தும் குடித்தொகை வீழ்ச்சி ஏற்படலாம்.

 

அந்த வகையில்.. இந்தக் குதிரைகளில்.. குறிப்பிடத்தக்க வெளியிடக் குதிரைகளோடு இனக்கலப்புக்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும்.. அதே குடித்தொகையில் சேர்க்கப்படுவது கூட நல்லது. நெடுந்தீவில்.. பரிசோதனைக் கூடங்களில் இவற்றை செய்து பரிசோதித்த பின்.. குடித்தொகையில் அவற்றை சேர்ப்பது இன்னும் நல்லது.

 

எந்த வகையிலும்.. நெடுந்தீவுக் குதிரைகள் வர்த்தக் நோக்கில் களவாடப்படுதலை அனுமதிக்கக் கூடாது. நெடுந்தீவுக் குதிரைகள்.. புதிய இனவாக்கம் (speciation)  என்ற உயிரியலின் முக்கிய கூறை பரிசோதிக்கக் கூடிய குடித்தொகையை கொண்டும் உள்ளன. அவை உயிரியல் ரீதியிலும் முக்கியமானவை. நெடுந்தீவு மண்ணும் கூட..! :icon_idea:

ஏன் இவற்றை வெளியே கொண்டு போகக் கூடாது ?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவற்றை வெளியே கொண்டு போகக் கூடாது ?

ஐநூற்றி சொச்ச குதிரைகளை ஆளுக்கொரு ஊருக்கு கொண்டு போனால், அப்புறம் எப்பிடி குட்டி போடுறது.
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனக்குதிரைகள். அவை நீண்ட காலமாக வேற்றிட குதிரைகளோடு இனக்கலப்பின்றி தனித்துவமான சூழலில் வாழ இயற்கையால் தெரிவு செய்யப்பட்ட குதிரைகள்.  இவற்றை வேறிடங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வது பாதுகாக்கப்பட வேண்டிய இனம் ஒன்றை இழக்கவும் அவற்றின் தனித்தன்மையை தொலைக்கவும் வகை செய்யலாம்.

 

இக்குதிரைகளின் உயிரியல் தனித்தன்மை காரணமாக இவற்றிற்கு வெளியில் மவுசு அதிகம் இருக்கலாம். அது கூட இழக்கப்படும் காலபோக்கில்.

 

இக்குதிரைகளின் முந்தைய குடித்தொகை கணக்கெடுப்போடு ஒப்பிட்டு தற்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையிலும்.. சில ஆய்வுகளை.. முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.

 

சுருக்கமாகச் சொல்லப் போனால்.. உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குதிரைகள் திருடப்படுவதை... இடம்பெயர்த்தப்படுவதை.. அனுமதிக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நெடுந்தீவிலை முழுக்க முழுக்க கோவேறு கழுதையள் தான் எண்டுறாங்கள்......நீங்கள் என்னடா எண்டால் அரேபிய குதிரை எண்ட ரேஞ்சிலை கதைக்கிறியள்....எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 நெடுந்தீவிலை முழுக்க முழுக்க கோவேறு கழுதையள் தான் எண்டுறாங்கள்......நீங்கள் என்னடா எண்டால் அரேபிய குதிரை எண்ட ரேஞ்சிலை கதைக்கிறியள்....எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை.. :lol:

நெடுந்தீவுக்குக் குதிரைகள் 'டச்சுக்காறர்களால்' அறிமுகப்படுத்தப்பட்டன!

 

இவை 'பொனி' என அழைக்கப்படும் சிறிய ரக, குதிரை வகையைச் சேர்ந்தவை... காலப்போக்கில், காலநிலைக்கும், உணவுக்கும் ஏற்ற மாதிரித் தங்கள் அளவையும் மாற்றிக்கொண்டு விட்டன!

 

அதனால் தான் நெடுக்கர் இதைத் தனித்துவமானவை என்று குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன்! உலகில் வேறெங்கும் இந்த இனக்குதிரைகள் இருக்காது என்பது எனது கணிப்பு!

 

மற்றும்படி இவைக்கும் கழுதைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

 

அத்துடன் ஒரு காலத்தில்... இவை ஒருவரின் சமூக அந்தஸ்தையும் உயர்த்தி வைத்தன! உதாரணமாக ' குதிரைக்காரக் குமாரசாமி' எண்டது மாதிரி..! :D  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.