Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம்

http://tamil.sify.com/fullstory.php?id=14303546

11 பக்கமும் வாசித்தேன் என்ன சொல்ல? :(:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்??????

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

:x :x :x :x :x :x

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன்ர தலை விதியை நினைச்சு யாரத்தான் நோகிறதோ?

:lol::lol::lol::lol::lol:

இவங்களையெல்லாம் நம்பி தெவைல்லாமல் கருத்துக்களை வெளியிட்டதுக்கு நான் வருந்துகின்றேன் லக்கி சொன்னமாதிரித்தான் இது நடந்துள்ளது நான் அவசரப்பட்டுவிட்டேன் போல இருக்குது.வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வை இவங்கள் கிழித்துவிட்டாங்கள் என்ன செய்வது இதை நான் எனக்கு அறிமுகமான கூட்டமைப்பு எம்.பி ஒருவருடன் கேட்டேன் அதுக்கு அவர் தன்க்கு எதுவும் தெரியாது எண்டு சொன்னார் அவர் உந்ந்த கூத்தில் கலந்துகொள்ளவில்லை.எனது அவசரப்பட்ட கருத்துக்களுக்கு லக்கியிடமும் மற்ரவர்களிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் சாபக்கேடு?????

ம்ம் அதுதான் உண்மை இவங்கள் சரியாக இருந்திருப்பார்கள் எண்டு இவங்களை நம்பி சீ து

அதுவும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட கூத்து ?? வாயில் கெட்ட வார்த்தைகள்தான் வருகுது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பற்றிய இந்த ஆக்கத்தை விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்திற்க்கும் அனுப்பி வைக்கலாமே...பாவம் அவர்கள் இவர்களை நம்பி..ஜயோ..ஜயோ..

இவர்களை பற்றிய இந்த ஆக்கத்தை விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்திற்க்கும் அனுப்பி வைக்கலாமே...பாவம் அவர்கள் இவர்களை நம்பி..ஜயோ..ஜயோ..

அவர்களுக்கு தெரியாதா இவர்களை பற்றி எல்லாம் தெரியும் சில காரணங்களை வெளியில் சொல்லமுடியாதுதானே :?:

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் வேணுமென எழுதினாரோ தெரியது. ஈழத்தமிழருக்கு கூட்டமைப்பினரிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்து றோ வின் சதியோ தெரியாது. அவசரப்பட்டு முகக்குறியளை போடாதைங்கோ.

வெளிக்கிட்டு வாங்கோ.... :evil: :evil: :twisted:

"சிங்களவரின் இராஐதந்திச முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத் தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத் தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஞதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழர்களால் முடியவில்லையே...."

என்பது எத்தனை நிதர்சனமான வார்த்தைகள்...

அவசர முயற்சிகள் சில சமயங்களில் சறுக்குவது இயல்பே....

ஆயினும் இவர்கள் பின்வருபனவற்றை நினைவில் கொள்ளுவது அவசியம்...

நீங்கள் தனிமனிதர்கள் அல்ல.

ஆயிரம் ஆயிரம் உயிர்களின் ஆகுதியில் விழைந்த போரட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாக செல்லுபவர்கள்.

பல வேற்றுமைகள் மத்தியில் ஒற்றுமை கண்டவர்கள்.

இன்னமும் உயிராபத்துக்கு மத்தியில் ஒடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளாக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள்.

உங்களின் சேவையை எதிர்பார்த்து மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது.

மேலும் வேகமும் விவேகமும் அவசியம்!!!

இதை எழுதியவர் வேணுமென எழுதினாரோ தெரியது. ஈழத்தமிழருக்கு கூட்டமைப்பினரிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்து றோ வின் சதியோ தெரியாது. அவசரப்பட்டு முகக்குறியளை போடாதைங்கோ.

வெளிக்கிட்டு வாங்கோ.... :evil: :evil: :twisted:

நைனா சதி செய்ய "ரா"வோ அல்லது "சி.ஐ.ஏ"வோ தேவையில்லைன்னு தோணுது.... உங்களை மாதிரி ஆளுங்களே போதும்.... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நைனா சதி செய்ய "ரா"வோ

இப்ப என்டாலும் உண்மைய ஒத்துக்கொண்டீங்களே! :lol::lol:

இது நடந்தது உண்மையாக இருந்தால் இவர்களை கூப்பிட்டு இவ்வளவு நாளும் பாடு பட்டது போதும் ....பாவம் உங்களுக்கு வயதும் போட்டுது என்று வேற வேலையைக்கொடுத்து ஆட்களை அமர்த்த வேண்டியது தான். அதுதான் போல அவங்களை கோணல் ஆட்கள் என்னும் போட்டுத்தள்ளாமல் இருக்கிறாங்கள். பாவம் மாமனிதர் Nஐhசப்ப hரராஐசிங்கம் ஐயாவைப்போட்ட நேரம் .......... என்ர வாயால சொல்ல விருப்பம் இல்லாமல் இருக்கிறது... என்ர தாங்க ஏலாத கவலைஎல்லாம் மண்ணுக்காய் விதையான மாவீரச் செல்வங்களை நினைத்தால் இதுகளெல்லாம் செய்ய யாருக்கு மனம் வரும். ஆனால் ஒன்று மட்டும் யாராலையும் மறுக்க முடியாத உண்மை........ அண்ணை ஒன்று சொல்லுறவர்.. நாங்கள் (தமிழர்கள்) யாருக்கும் தீங்கு செய்யமாட்டம் ... ஆனால் யாராவது எங்களை தீண்டி அழிக்க நினைத்து அழிவுகள் செய்தால்; அவர் வேறு கிரகத்தில இருந்தாலும் அவருக்கு சாவு தமிழனின் கையாலதான் அதில எந்த மாற்றமும் இல்லை. இது துரோகி டக்கிளஸில இருந்து துரோகி கோணல் காருணா மட்டும் என்றுதான் நினைத்தன் ஆனால் இப்ப அது என்னும் நீளும் போல இருக்குது என்று நினைக்க வேதனையாகவும் கவலையாகவும் இருக்கு.............

ஒரு பக்கச் செய்திகளை மட்டும் வைத்து இவ்வாறு அவசரமாகக் கருதுக்களை எழுத வேண்டாம்.பொறுத்திருங்கள்.

ஒரு பக்கச் செய்திகளை மட்டும் வைத்து இவ்வாறு அவசரமாகக் கருதுக்களை எழுத வேண்டாம்.பொறுத்திருங்கள்.

நீங்கள் சொல்வது நியாயமே.

நம்ம ஆட்கள்

"வெச்சா குடுமி,

செரைச்சா மொட்டை"

- என்பது மாதிரி அவசரப்படுகிறார்கள்....

எனக்குத் தெரிந்து இந்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் வேண்டுமென்றே குழப்பம் செய்திருக்கிறார்கள்.... கலைஞரே என்ன நடந்தது என்று தெரியாமல் மண்டை காய்ந்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்..... :lol::lol::lol:

தமிழன்ர தலை விதி???????

உண்மைகளை அறிய இணைப்பினைத் தந்த parisianக்கு நன்றிகள்.

சந்திப்புக்களோடு சம்பந்தப் பட்ட மறவன் புலத்தாரே உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார். ஆனால் இங்கு எத்தனை பேர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு என்னமாய் கதையளந்தார்கள் திட்டித் தீர்த்தார்கள். எனிமேலாவது அவசரப்பட்டு புலம்புவதைவிட்டு நிதானமாக யோசித்தால் நல்லது.

அப்படி என்ன இந்தக் கட்டுரையில் இருக்கிறது?

கலைஞர் அனுதாபியான திரு சச்சிதானந்தன் மிக அழகாக பிரச்சனையை திசை திருப்பி இருக்கிறார்.

மன்மோகன்சிங்கை உடனடியாக சந்திக்க இருந்த சந்தர்ப்பத்தை எப்படி ததேகூவினர் வீணடித்தார்கள் என்பதை விளக்கி இருக்கிறார்.

ஆனால் தினமும் மாவைசேனாதிராஜா கலைஞரை சந்திக்க முயற்சி எடுப்பதை குறிப்பிடுகின்ற திரு சச்சிதானந்தன், கலைஞர் ஏன் சந்திக்கவில்லை என்பதை கூறாமல் தவிர்க்கிறார் அல்லது அதன் வீச்சை குறைக்க முனைகிறார்.

ததேகூவினர் டெல்லி சென்று எறக்குறைய 10 நாட்கள் தங்கி இருந்த பொழுது நடந்த சம்பவங்களையோ அல்லது மீண்டும் சென்னை திரும்பி ஒரு வாரம் தங்கி இருந்த போது நடந்தவைகளையோ தனது கட்டுரையில் ஏன் திரு.சச்திதானந்தன் குறிப்பிடாமல் விட்டுள்ளார்?

ததேகூட்டமைப்பினர் இந்தியப் பயணத்தை திட்டமிட்ட முறையும் அங்கு நடந்து கொண்ட முறையும் சரியானவை அல்ல என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளேன்.

அதற்காக கலைஞர் செய்தது நியாயம் என்று ஆகி விடாது.

எல்லோருமே தமிழர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார்கள்.

எனக்கு விதி மீது நம்பிக்கை இல்லை. அதனால் திரு சச்சிதானந்தன் போல் "விதியே! தமிழ் சாதியை என் செய்ய நினைத்தாய்?" என்று சொல்ல முடியவில்லை.

சபேசன்

கலைஞரைச் சந்திப்பதற்கு முயற்சி எடுத்தாகவும் அது பற்றிய கடிதங்களை உதவியாளர்களிடம் கொடுத்தாகவே குறிப்பிட்டுள்ளார். கலைஞரை சென்ற மாசி மாதம் தான் சந்தித்ததையுமே குறிப்பிட்டுள்ளார். சிலர் குறிப்பிட்டது போல் பிரதமைரைச் சந்தித்த பின் சந்திப்பதாகவோ வேறு உறுதி மொழிகள் கொடுக்கப் பட்டதாகவோ அவர் குறிப்பிடவில்லை. தங்களில் நிறைய ஓட்டைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களில் பழி போட விழைந்ததை போட்டுடைத்துள்ளார். ஏதோ கலைஞர் தான் பிரதமர் சந்திப்பையே தடை செய்ததாக உம் போன்றோர் எழுதியதையும் நான் மறக்கவில்லை.

விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்களின் நலம் விரும்பிகள் பெரும்பாலோர் நம்பிக்கை வைக்கும் திரு.சச்சிதானந்தனை உங்கள் மனம் போன போக்கில் கலைஞர் அனுதாபியாக மட்டும் காட்டி அவரின் கருத்தையே திசை திருப்பப் பார்க்கின்றீர்கள். மக்கள் முட்டாள்களில்லை அதனையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அச்செய்தியினை வாசிப்பதற்கு இலகுவாக இருக்க இதில் பதிந்துள்ளேன்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

1. ஈழத் தமிழரின் அடிமை வாழ்வு நீங்கவேண்டும்.

2. ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடையவேண்டும்.

இந்த இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிலிருந்து மேற்கொண்டு வருகிறேன்.

1. ஈழத் தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத் தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை,

2. 1987-91 கால, ஈழத் தமிழர் - இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,

3. இந்தியாவில் அகதிகளின் நலம்,

4. சிங்களப் படைகளுக்கு இந்தியா உதவக் கூடாதமை,

5. இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத் தமிழர் செயற்படார் என்ற உறுதி,

6. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,

7. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்புவது,

8. இந்த நோக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒலி, ஒளிபரப்புக்கள்

9. இந்த நோக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத் தமிழர் பால் நல்லெண்ணத்தை உருவாக்குவது

போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.

இந்தப் பின்னணியில் 28.8.2006 முதலாக 23.9.2006 ஈறாக வரையுள்ள மூன்று வார காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்யவேண்டியது என் கடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் பழம்பெரும் விடுதலைத் தியாகியும் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே தங்குவார். ஈழத் தமிழர் இந்திய உறவுகள் மேம்பாடடையும் முயற்சிகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை இருவருமாகத் தில்ýக்கும் போய் வந்தோம்.

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பெப்புருவரியில் ஒரு சுற்றாகவும்இ தேர்தலுக்குப் பின் சூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்தோம். பெப்புருவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள் வெளிவராதவாறு காத்துக்கொண்டோம். தேர்தலுக்குப் பிந்தைய சூலை மாதச் சந்திப்புக்கு இரா. சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே தமிழகத் தலைவர்களிடம் அதைக் கடிதமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வர் கலைஞர்இ எதிர்க கட்சித் தலைவர் செயலýதாஇ மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி இவை தவிர ஏனைய கட்சித் தலைவர்கள்இ ஈழத்தவர் இருவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

ஒப்பியவாறு இரா. சம்பந்தன் வரவில்லை. எனவே மாவை சேனாதிராசாவும் நானும் இச்சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன. இரா. சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார். அக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம். இந்தச் சந்திப்புகளின் தேவைஇ அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் ளதான்றியது.

அடுத்த சுற்றுச் சந்திப்புக்களுக்காகஇ இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத் தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டார். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பின் தமிழகத் தலைவர்களைத் தொடர்புகொள்வதே ஏற்றது எனக் கருதிய நான்இ காத்திருந்தேன். முந்தைய அநுபவம் பாடமாக இருந்தது. 23.9.2006

அன்று மாவை சேனாதிராசா சென்னைக்கு வந்தார். விரைவில் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வந்துவிடும் என எனக்குக் கூறினார்.

28.8.2006

மாலை 5 மணியளவில் வைகோவின் செயலர் அருணகிரி என்னிடம் வந்திருந்தார். அவர் வெளியிடவுள்ள புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் பார்த்துத் தவறுகள் இருப்பின் திருத்தித் தருமாறு கேட்க வந்திருந்தார். ஈழத் தமிழர் தொடர்பாகப் பல நூல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றை நான் பார்த்துக் கொடுப்பது வழமை. தினமணியில் வெளிவந்த 'மன்னிப்போம்.. மறப்போம் அரவணைப்போம்' என்ற என் கட்டுரையைத் தம் கட்சி ஏடான சங்கொýயில் மீள்பிரசுரம் செய்யுமாறு வைகோ தன்னிடம் சொன்னதாகவும்இ வைகோ என்னிடம் பேச விரும்பியதாகவும்இ அருணகிரி தெரிவித்தார்.

சென்னை வரும்போது வைகோவைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தேன். உடனே வைகோவுடன் தொடர்புகொண்டுஇ 29.8 மாலை சென்னையில் சந்திப்பதற்கு அருணகிரி ஏற்பாடு செய்தார். மாவை சேனாதிராசாவும் அப்போது உடனிருந்தார். நீங்களும் வாருங்கள் என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். நீங்களே சந்தித்து விட்டு வாருங்கள் என்றார்.

29.8.2006

29.8 மாலை 6 மணிக்கு வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மறுநாள் 30.8 பிரதமரைச் சந்திக்கத் தில்ý செல்வதாகக் கூறிய வைகோஇ பலவற்றை என்னுடன் பேசினார்.

சிங்களத் தலைவர்கள் அடிக்கடி தில்ýக்கு வந்து பிரதமரையும் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் போகிறார்கள்இ தமிழர் தரப்பு நியாயங்களைக் கூற ஈழத் தமிழ்த் தவைர்களும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். ஏற்கெனவே குறித்து வைத்திருக்கிறேன்இ கட்டாயம் பேசுவேன் என்றார்.

ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என வைகோஇ நெடுமாறன் ஆகிய இருவரும் மிகத் தீவிரமாகவும்இ மருத்துவர் இராமதாசுஇ கி. வீரமணி போன்ற பலர் அடிக்கடியும் போராட்டங்கள் நடத்துவதும்இ அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வந்த நிகழ்வுகள். ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பது பற்றி முன்பொரு முறை பிரதமரிடம் வைகோ பேசியபொழுதும்இ கவனிக்கிறேன் எனப் பிரதமர் வைகோவிடம் கூறியிருந்தார்.

31.8.2006

30.8 பிரதமர் þ வைகோ சந்திப்பின் போதுஇ ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் பிறவுமான வைகோவின் பேட்டி 31.8 காலை இதழ்களில் வந்திருந்தது. அன்று காலை 11 மணிக்கு வைகோ என்னைத் தொலைபேசியில் அழைத்தார்இ மாவை சேனாதிராசாவையும் அழைத்துக்கொண்டு பிற்பகல் 2 மணிக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு கேட்டார். நானும் மாவை சேனாதிராசாவும் அவரிடம் சென்றோம்.

எம்மிடம் பல விவரங்களைச் சொன்ன அவர்இ பிரதமர் உங்களைக் கட்டாயம் சந்திப்பார். அதற்கான உறுதியை என்னிடம் தந்துள்ளார். ஆணையையும் என் முன்னே இட்டார். நீங்கள் கடிதம் எழுதித் தொலைநகலாக உடனேயே அனுப்புங்கள் என்றார்.

வீடு திரும்பியதும் இரா. சம்பந்தனைத் தொலைப்பேசியில் மாவை சேனாதிராசா தொடர்புகொண்டார். இந்தியாவில் இரா. சம்பந்தன் இருப்பதாகவும் 4.9 சென்னை வருவார் என்றும் அவர் வந்ததும் கடிதத்தைதத் தயாரித்து அனுப்பலாம் என அவரே சொன்னதாகவும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். அவர் வரும் வரை காத்திருக்க வேண்டாம்இ நீங்கள் உடன் கடிதத்தை அனுப்புங்கள்இ எனக் கேட்டேன். மாவை சேனாதிராசா உடன்படவில்லை.

நான் மனம் நொந்தேன். தமிழ்ச் சாதியின் தலைவிதி இதுவா? என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் பலர் இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்இ கருத்துருவாக்கத்தில் பலர் தம் நேரத்தைஇ பொருளைச் செலவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அழுத்தத்தை உணர்ந்த பிரதமரும் ஒப்புகிறார். நீங்கள் கடிதம் அனுப்புவது முறை. அதை ஏன் பின்போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். இரா. சம்பந்தன் வரட்டும் என்று முடிவாகச் சொல்ýவிட்டார்.

01.09.2006

மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும் சந்திப்புக் கேட்டுஇ இருவரும் ஏற்கெனவே கையொப்பமிட்டுக் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெள்ளிக் கிழமை காலைஇ கலைஞர் வீட்டுக்குக் கொடுத்தனுப்பினோம்.

மதியம் கவிஞர் காசி ஆனந்தனும் மனைவியாரும் என்னைத் தற்சேயலாகச் சந்திக்க வந்திருந்தனர். என் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் சொன்னேன். ஈழத் தமிழர் நியாயங்களை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பு நழுவி விடும் போலத் தெரிகிறதே என்றேன். வாங்கோ சச்சிஇ நெடுமாறனிடம் போவோம் எனக் கவிஞர் கூறினார். நேரே நெடுமாறனிடம் போனோம். விவரத்தைச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கவலைப்படாதீங்கஇ எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கூறி எங்கள் மூவரையும் வழியனுப்பினார்.

அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்குத் தொலைபேசியில் செய்தி வந்தது. 4.9இல் கஜேந்ததிரகுமார் பொன்னம்பலம் வந்துவிடுவார்இ உடன் பிரதமரைச் சந்தியுங்கள் என்பதே செய்தியின் சாரம் என மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.

இரா. சம்பந்தன் 5.9 இரவுதான் வருகிறார்இ அவர் வந்த பின்பு முடிவு செய்வோம் என்பைதயும் மாவை சேனாதிராசா சொன்னார்.

02.09.2006

2.9 காலை நெடுமாறன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். கவலைப்படாதீங்கஇ எல்லாம் நல்லபடி நடக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாளையோ மறுநாளோ வருவார்இ வந்ததும் தில்ýக்குப் போகலாம் என்றார். மாவை சேனாதிராசாவுக்கும் அத்தகைய செய்தி இரவே வந்துள்ளதை அவரிடம் கூறினேன்.

இதற்கிடையில் வைகோ என்னை அழைத்தார். 9.9க்குமுன் சந்திப்பு நிகழவேண்டும். 10.9 பிரதமர் வெளிநாடு போக உள்ளார். போனால் 20.9க்குப் பின்னர் தான் நாடு திரும்புவார் என்றார் வைகோ.

கலைஞரோ தமிழ்நாட்டின் முதலமைச்சர். மூத்த அரசியல்வாதி. ஏற்கெனவே ஈழத் தமிழரின் சில செய்கைகள் அவரைப் புண்படுத்தியுள்ளன. அவரைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பது முறையல்ல. அவருடைய வாழ்த்துகளுடன் செல்வதே ஈழத் தமிழருக்கு நல்லதுஇ எனவே அந்தச் சந்திப்புக்கு முயல்வோம் என்றார் மாவை சேனாதிராசா.

03.09.2006

காலை வேளைகளில் தொலைபேசியில் அழைத்தால் கலைஞருடன் நேரில் பேசும் வாய்ப்புகள் உண்டு. என்னோடு உள்ள பரிச்சியத்தால் அவர் பேசுவதுண்டு. எனவே 3.9 காலை 6 மணியளவில் கலைஞர் இல்லத்துக்கு அழைத்தேன். அவர் உடற்பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். குழப்பாதீர்கள் பின்னர் அழைக்கிறேன் எனக் கூறிய நானே நேரில் போய்ப் பேசுவதே முறை எனக் கருதினேன். அன்று முற்பகýல் உதவியாளர்களிடம் பேசினேன். உங்கள் கடிதத்தை இன்னமும் பார்க்கவில்லை என்றார்கள்.

எனக்கு மனம் கேட்கவில்லை. இரா. சம்பந்தன் வரும் வரை பார்த்திருப்பதா? மாவை சேனாதிராசா கடிதம் எழுதினால் என்ன? 3.9 காலை 9 மணிக்கு மருத்துவர் இராமதாசின் உதவியாளரைத் தொலைபேசியில் அழைத்தேன். மருத்துவர் இராமதாசே நேரில் பேசினார். பத்து மணிக்குச் சந்திப்போம் என்றார். மாவை சேனாதிராசாவும் நானும் சென்றோம். 22 உறுப்பினருள் 10 உறுப்பினராவது சேர்ந்து செல்லவேண்டும் பிரதமரிடம் விவரங்களைச் சொல்லுங்கள்; அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எதையும் செய்ய முடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்.

04.09.2006

8.9 அல்லது 9.9இல்இ பிரதமரைச் சந்திக்கப் போகிறோம். உங்களைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பதும் முறையல்ல. 7.9 காலை எமக்கு நியமனம் தாருங்கள் எனக் கேடடு 4.9 நாளிட்ட கடிதம் ஒன்றை மாவை சேனாதிராசா எழுதஇ அதையும்இ 1.9 கடிதப் படியையும் இறணத்துக்கொண்டுஇ 4.9 காலை 9 மணிக்கு நேரில் கலைஞரின் இல்லம் சென்றேன். அங்குள்ள உதவியாளர் யாவரும் அன்புடன் என்னை வரவேற்றுஇ கடிதங்களைப் பெற்றுக்கொண்டுஇ உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். மாலையில் தொடர்புகொள்ளுங்கள் என்றனர்.

மாவை சேனாதிராசாவும் நானும் மாறி மாறிக் கலைஞரின் உதவியாளருடன் தொடர்பு கொண்டவாறிருந்தோம். சாதகமான பதில் வரவேயில்லை.

06.09.2006

5.9 மாலை சம்பந்தன் சென்னை வந்தார். 6.9 காலைஇ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவரும் சென்னை வந்தனர். சிவாஜிýங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார். மாவை சேனாதிராசாஇ சிவாஜிýங்கம்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ பத்மினி சிதம்பரநாதன் நால்வரும் 6.9 மதியம் எனதில்லத்தில கூடிப் பிரதமரின் சந்திப்புப் பற்றிப் பேசினோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் கோருவது என்ற கருத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருந்தது.

இரா. சம்பந்தன் சென்னையில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9 அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.

நெருப்பை மடியில் கட்டிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு. பிரதமர் சந்திக்க ஒப்புதல் தந்துள்ளார். சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கேட்டு நாம் அவருக்குக் கடிதம் அனுப்பவில்லை. 30.8இல் ஒப்புதல் தந்தவர்இ 10.9இல் வெளிநாட்டுக்குப் புறப்பட இருப்பவர்இ ஏதோ நாம் கேட்ட உடனே நேரம் ஒதுக்குவார் என்ற துணிவு 6.9 வரை எமக்கு இருப்பது அசாத்தியத் துணிவுதான் எனக் கருதினேன். ஆனாலும் உந்துதலை விடாமல் கடிதம் அனுப்புவோமா எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்தாய்? என்ற என் மனக் குமுறலை அதே சொற்களால் இந்த நால்வரிடமும் கூறினேன்.

7.9 காலை எனது இல்லத்தில் இந்த ஐவரும் சந்திப்பது என இரா. சம்பந்தனிடமிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது.

07.09.2006

காலை 10.30 மணியளவில் எனது இல்லத்தில் இந்த ஐவரும் கூடினர். நானும் அங்கிருந்தேன். பிரதமர் எங்களைச் சந்திக்க ஒப்பமாட்டார்இ எனவே நியமனம் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதுவதில் பயனில்லை என்றார் இரா. சம்பந்தன். மற்ற நால்வருக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அதை அவர்கள் ஒவ்வொருவராக விளக்கிக் கூறினர்.

பிரதமர் அலுவலகத்தில் என்ன செய்வார்கள் என முன்கூட்டியே முடிவு செய்வதற்கு எமக்கு உரித்தில்லை. பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய முடிவை நாம் இங்கிருந்து செய்யவேண்டாம். மூன்று படி நிலைகளாக முயல்வோம். பிரதமருக்குக் கடிதம் எழுதுவோம்இ கலைஞருக்குக் கடிதம் எழுதுவோம்இ பிரதமரிடம் என்ன கேட்கப் போகிறோம் என்பதையும் எழுதி வைத்திருப்போம் என அழுத்தம் திருத்தமாகச் சம்பந்தனிடம் கூறினேன்.

தமிழகத்தின் முதல்வர் கலைஞர். அவரை மீறிஇ அவரின் ஒப்புதல் பெறாமல் பிரதமரிடம் போவது முறையல்ல. கலைஞரின் ஒப்புதலைப் பெறுவோம் அதன் பின்னர் பிரதமரிடம் செல்வோம் என்றார் இரா. சம்பந்தன்.

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர்இ பெப்புருவரி 2006இல்இ மாவை சேனாதிராசாவும் நானும் கலைஞரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தோம். கலைஞருடைய வழிகாட்டýல் தில்ýயுடன் தொடர்புகொள்ள விரும்புகிறோம் என்று அப்பொழுது அவரிடம் கூறினோம். நீங்கள் நேரே தில்ýயுடன் தொடர்புகொள்ளுங்கள்இ என அவர் அப்பொழுது சொன்னார். அதற்குரிய வலுவான காரணங்களையும் கலைஞர் எமக்கு விளக்கினார்.

ஈழத் தமிழருக்கு நன்மை எனில் கலைஞர் ஒரு பொழுதும் குறுக்கே நிற்கமாட்டார். ஈழத் தமிழர் தமக்குரியதை விரைந்து பெறவேண்டும் என்பதே கலைஞரது உளமார்ந்த விருப்பம். அவர் தில்ýக்கு எங்களைப் போகச் சொல்ýவிட்டார். எனவே கலைஞரைக் காரணம் காட்டிச் சந்திப்பபைத் தவிர்க்கவேண்டாம் எனக் கூறினேன். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்ததை இரா. சம்பந்தனுக்கும் மற்ற நால்வருக்கும் மாவை சேனாதிராசா விரித்துக் கூறினார்.

மதியம் 1.30 மணியளவில் கலைஞருக்கான தமிழ்க் கடிதத்தை முதýல் நான் எழுதினேன். பிரதமருக்கான ஆங்கிலக் கடிதத்தை இரா. சம்பந்தன் எழுதினார். இரண்டையும் நானே தட்டச்சுச் செய்து கொடுத்தேன். சம்பந்தன் கையெழுத்திட்டுத் தந்தார். பிரதமரின் இல்ல மற்றும் அலுவலகத் தொலைநகல் எண்களைத் தேடிக் கொடுத்தேன். தொலைநகலை அனுப்பிவிட்டதாக மாவை சேனாதிராசா எம்மிடம் வந்து கூறிய பொழுது 7.9.2006 மணி பிற்பகல் 2.30. கலைஞருக்கும் தொலைநகலாகக் கடிதம் போய்ச் சேர்ந்தது.

சரி பிறகு சந்திப்போம் எனச் சம்பந்தன் எழுந்தார். பிரதமருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்பதைத் தெளிவாக்கிஇ எழுத்தில் தயாரித்து முடிப்போம் என நான் வýயுறுத்தஇ சம்பந்தன் மீண்டும் அமர்ந்தார். எழுதினார். தட்டச்சு நிலையில் சரி பார்த்த பிறகு போகலாம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கடிதத்தைத் தட்டச்சுச் செய்ய முன்வந்தார். தட்டச்சுப் படிகளுள் ஒன்று இரா. சம்பந்தனிடம் மற்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் என்ற நிலையில் அன்றைய கூட்டம் கலைந்தது.

தொலைநகýல் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம் என்பதை வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் கூறினேன். வைகோ தென் மாவட்டமொன்றில் இருந்தார். பின்னர் அன்றிரவு அவராகவே என்னுடன் பேசினார். நாளை சந்திப்பு நிகழலாம் போலத் தெரிகிறது என்றார்.

7.9.2006 காலை 10.30 மணிக்குக் கூடியபொழுதுஇ எங்களுள் பலருக்கு இருந்த கருத்தொற்றுமையில்இ பிரதமரைச் சந்திக்கும் வரை இது தொடர்பான செய்திகள் வெளிவரக் கூடாதென்பதாகும். ஆனால் கூட்டமாக நாம் கலந்துரையாடிக்கொண்டிருந்த பொழுதேஇ சிவாஜிýங்கத்தின் தொலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. அது மட்டுமல்லஇ அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிýங்கம் விரும்பினார்.

பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளைஇ பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிýருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாதென முடிவு செய்தோம்.

08.09.2006

8.9.2006 காலை 10.30 மணி. பிரதமர் அலுவலகத்திýருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்? விமான நிலையத்திýருந்து எத்தனை கிமீ. தூரத்தில் உள்ளீர்கள்? அடுத்த விமானம் எப்பொழுது? விவரங்களைத் தயாரித்து என்னை அழைக்கமுடியுமா? எனக் கேட்டுத் தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும் அந்த உதவியாளர் என்னிடம் தந்தார்.

பயண ஒழுங்குகளையும் பிரதமர் அலுவலகத் தொடர்பையும் நான் கவனிக்கஇ உறுப்பினரைத் திரட்டும் முயற்சியில் மாவை சேனாதிராசா ஈடுபட்டார். விமானச் செலவுகள் பற்றி உடனடியாகக் கவலை வேண்டாம்இ நான் இப்பொழுது பொறுப்பு நிற்கிறேன்இ பிறகு பார்ப்போம் என்றேன்.

பிற்பகல் 1.45க்கு விமானம் உள்ளதையும் பயணச் சீட்டுகள் பெறமுடியும் என்பதையும் மதுரா டிராவல்ஸ் வி. கே. டி. பாலன் உறுதி செய்தார். இந்த விவரங்களை நான் மாவை சேனாதிராசாவிடம் சொல்ýஇ ஏனைய உறுப்பினரைத் திரட்டி மதியம் 12 மணி அளவில் விமான நிலையம் போக ஆயத்தமாகச் சொன்னேன். பிரதமர் அலுவலகத்திற்கும் இந்தத் தகவலைச் சொன்னேன். தாம் சொல்லும் வரை விமான நிலையம் போக வேண்டாம் எனவும்இ ஆயத்தமாக இருக்கும் படியும் பிரதமர் அலுவலக உதவியாளர் என்னிடம் கூறினார்.

இதற்கிடையில் அடுத்த விமானம் எத்தனை மணிக்கு என விசாரித்தேன். மாலை 6 மணிக்கு என்றார்கள். அதையும் பிரதமர் அலுவலகத்தில் கூறிய பொழுதுஇ சந்திப்பதாயின் 1.45 விமானத்திலேயே வந்து விட வேண்டும்இ பிரதமர் அலுவலகத்துள் செயலாளர் போயுள்ளார்இ வந்ததும் சொல்கிறேன்இ காத்திருங்கள் என்றார் பிரதமர் அலுவலகத்தின் அந்த உதவியாளர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பத்மினி சிதம்பரநாததனும் பயணப் பொதிகளுடன் எனதில்லம் வந்து சேர்ந்தனர். சம்பந்தனும் சிவாஜிýங்கமும் நேரே விமான நிலையம் வந்துவிடுவதாகக் கூறினார். தொடர்பாக இருங்கள் நாம் சொன்னதும் புறப்படலாம் என ஆயத்த நிலையில் அவர்களை வைத்திருந்தோம்.

1 மணியளவில் பிரதமர் அலுவலகத்திýருந்து அழைப்பு எனக்கு வந்தது. நியமனத்தை உறுதிசெய்ய முடியவில்லை. வைகோவுடன் தொடர்பாக இருங்கள் அவருக்கு விவரம் சொல்கிறோம்இ வெளிவிவகார அமைச்சிடமும் பேசி வருகிறோம் என்றார்கள்.

இதற்கிறடயில் மாவை சேனாதிராசாவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் தொடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்.

உடனுக்குடன் வைகோவிற்கு விவரம் சொன்னோம். அவரும் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்கொண்டு வந்தார். 8.9 இரவு ஒரு கூட்டத்திýருந்த வைகோவைப் பிரதமர் அலுவலகம் அழைத்துஇ வெளிநாட்டுப் பயணத்தின் பின்னரே சந்திப்பு என்பதை எம்மிடம் தெரிவிக்கக் கூறினார்கள். இதை எம்மிடம் தெரிவித்த வைகோஇ மறுநாள் 9.9 காலை இரா. சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இதை மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்தேன். குழுவாகப் போவதென முடிவாயிற்று.

தில்ýப் பயணத்துக்காகப் பயணப் பொதிகளோடு எனதில்லம் வந்த பத்மினி சிதம்பரநாதன் வெளியே விடுதியில் தங்கியிருக்க விருப்பமில்லை என்றதால் எனது இல்லத்திலேயே தங்குவது என முடிவாயிற்று. மாவை சேனாதிராசா ஏற்கெனவே எனது இல்லத்தில் தங்கி இருந்தார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்த நாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்டோடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம். ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றில் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?

7.9 பிற்பகல் 2.30க்குக் கடிதம் அனுப்புகிறோம்இ 8.9 காலை 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகம் எம்மோடு தொடர்பு கொள்கிறார்கள். அத்தகைய வேகம் பிரதமர் அலுவலகத்துக்கு இருந்தது. 30.8இல் ஒப்பியதற்கு 7.9இல் கடிதம் எழுதும் வேகம் (?) ஈழத் தமிழர் தரப்பில் இருந்தது.

09.09.2006

முற்பகýல் வைகோவைச் சந்திக்க இரா. சம்பந்தன்இ மாவை சேனாதிராசாஇ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அழைத்துச் சென்றேன். சிவாஜிýங்கம் வரவில்லை. செய்தியாளரிடம் அவர் கொண்ட தொடர்புகள் பற்றியும் தேவையற்ற கசிவுகள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்ததன் விளைவாகவே அவர் அழைக்கப்படவில்லைப் போலும் என நான் ஊகித்தேன்.

வைகோ எம்மை அன்புடன் வரவேற்றார். பொன்னாடைகள் அணிவித்தார். நிழற்படங்களை அவரது அலுவலக உதவியாளரே பிடித்துக்கொண்டார். செய்தியாளர்கள் எவரும் வரவில்லை. அறைக்குள் நாம் தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில் சிவாஜிýங்கம் வந்து சேர்ந்துகொண்டார். 2 மணி நேரம் கருத்துப் பரிமாறினோம்.

செய்தியாளர் வெளியே காத்திருப்பதாக வைகோவின் செயலர் என்னிடம் கூறினார். வியப்பாக இருந்தது. தனிப்பட்ட பணிக்காக வந்திருப்பதையும் முடிந்தால் இந்தியாவில் தலைவர்களைச் சந்திப்பதாகவும் பொதுப்படச் செய்தியாளரிடம் கூறுவதாக ஒப்பிக்கொண்டுஇ வெளியே வந்தோம். 3 þ 4 இதழ்களிýருந்து செய்தியாளரும் புகைப்படப் பிடிப்பாளரும் காத்திருந்தனர். செய்தியாளரிடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டவாறு செய்தியைக் கூறிஇ அனைவரும் எமதில்ல வாயில் வந்தோம்.

இரா. சம்பந்தனும்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புறப்பட்டனர். சிவாஜிýங்கத்தை அழைத்து வந்தேன். அவர் சினத்துடன் இருந்தார். செய்தியாளரை அழைத்ததன் பின் விளைவுகளைப் பத்மினி சிதம்பரநாதனும் நானும் அவரிடம் கூறினோம். பிரதமரைச் சந்திக்க முன்இ செய்திக் கசிவுகளில் எனக்கு உடன்பாடில்லை என்பதை நான் அழுத்தமாக அன்று தெரிவித்தேன். மாவை சேனாதிராசாவும் உடனிருந்தார். தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்ற சிவாஜிýங்கம்இ தனக்கு இச்சந்திப்பை அறிவிக்காதது பற்றிக் கடிந்தார். பதற்றமான நிலையில் இருந்த அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். நல்லது செய்தால் யார் செய்தாலென்ன எனக் கூறினேன். சினந்து வெளியேறினார்.

11.09.2006

பிரதமருக்கு எழுதவுள்ள கடிதத்தின் வரைவு பற்றி ஆலோசிக்கஇ மாலை 3 மணிக்குக் கூடினோம். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும்இ தில்ý வெளிவிவகார அமைச்சும் தன்னுடன் தொடர்பாக இருப்பதாவும்இ மூன்று பேர் அடங்கிய தூதுக் குழுவை மட்டும் அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார். தான் முயன்றுஇ தன்னையும் தன்னுடன் மூவரையும் சேர்த்து நால்வராகப் போகலாம் எனக் கூறினார். பத்மினி சிதம்பரநாதனைக் குழுவுள் அடக்கமுடியாதென அவர் நேரடியாகக் கூறவில்லை. சுற்றி வளைத்துச் சொன்னார். தன்னைச் சேர்ததுக்கொள்ளும்படி சிவாஜிýங்கம் கூறினார். தமது கட்சியின் அரசியல் குழுத் தலைவர் தாமென்பைதயும் விளக்கினார். செல்வம்தான் தலைவர் அவரைத்தான் அழைப்பது முறை எனச் சம்பந்தன் விளக்கினார்.

தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பிஇ முதலமைச்சரின் உதவியாளருடன் அன்றும் மாவை சேனாதிராசா பேசினார். அன்று மாலை பெண் விடுதலை என்ற தலைப்பில் பாரதியார் நினைவு நாள் (11.09) விழா. தமிழக அரசின் விழா. என்னை அழைத்திருந்தனர். காலம் பிந்தினோமெனினும் பத்மினி சிதம்பரநாதனை அந்நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன்.

12.09.2006

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்துஇ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பார்க்கச் சென்றோம். மா. வரதராசன்இ ஏ. கே. பத்மநாதன்இ இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 தலைவர்கள் இருந்தனர். தீக்கதிர் இதழ் ஆசிரியர் அங்கிருந்தார். சுருக்கமான சந்திப்பு. அன்றும் வெளியே செய்தியாளர் கூடியிருந்தனர். பிபிசி நிருபருக்கு இரா. சம்பந்தன் பேட்டி கொடுத்தார்.

அன்று மாலைஇ பத்மினி சிதம்பரநாதன் என்னிடம் பேசினார். தான் வந்ததே தில்ý போவதற்காக என்றும் வந்த பின்பு தன்னையும் சேர்த்து அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டுச் செல்ல முயல்வதாகவும் மிக மனம் நொந்து கூறினார்.

தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பிஇ முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.

13.09.2006

அதிகாலை மாவை சேனாதிராசாவுடன் பேசினேன். பத்மினி சிதம்பரநாதனைத் தில்ýக்கு அழைக்காமல் விட்டுச் செல்வது உசிதமல்ல. திட்டமிடாமல் நடந்துகொண்டதால் வந்த விளைவு. இப்பொழுதாவது இரா. சம்பந்தனுடன் பேசுங்கள்இ அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

இந்திய அரசு கடந்த 1983þ91 காலப் பகுதியில் நடந்துகொண்ட முறைகள்இ அவற்றுக்கு நாம் ஈடு கொடுக்க முடியாததால் ஏற்பட்ட பின் விளைவுகள்இ இந்திய அரசுக்குள்ளே எமக்கு எதிரானவர்கள் எம்மிடையே பிளவுக்கு முயல்வார்கள் என யாவற்றையும் விரிவாக என் அறிவுக்கு எட்டியதை மாவை சேனாதிராசாவுக்கு விளக்கினேன்.

இந்திய அரசு பெயரிட்டு ஐந்து பேரை அழைத்திருப்பதாகவும்இ இரா. சம்பந்தன்இ மாவை சேனாதிராசாஇ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்குத் தனித்தனி அழைப்புகளையும் விமானப் பயணச் சீட்டுகளையும் கொழும்பில் இந்தியத் தூதரகம் வழங்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் சொன்னதாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார்.

இந்திய வெளிநாட்டு அமைச்சகத்தில் இணைச் செயலாளர் மோகன் என்பவருடனும்இ கொழும்பு இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதர் மாணிக்கம் என்பவருடனும் இரா. சம்பந்தன் பேசி வருகிறார் என்பதையும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறியிருந்தார். 18.9 தொடக்கம் 21.9 வரை அல்லது 19.9 தொடக்கம் 22.9 வரை தில்ýயில் தங்கவேண்டியிருக்கும் எனவும்இ இந்திய அரசின் விருந்தினர்களாகத் தங்குவோம் எனவும் மாவை சேனாதிராசா கூறினார்.

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்துஇ கி. வீரமணியுடன் பகல் 12 மணிக்குச் சந்திப்பு. நான் போகவில்லை. ஏனைய ஐவரும் போய் வந்தனர். கலைஞருடனான சந்திப்பை ஏற்படுத்த வேண்டுமென கி. வீரமணியிடம் மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார். கலைஞருக்கு அனுப்பிய கடிதப் படியையும் கொடுத்தார்.

மாலை 4 மணிக்கு வீட்டுக்குள் நுழைகிறேன்இ பத்மினி சிதம்பரநாதனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சூடாகவே பேசிக்கொண்டிருந்தனர். தான் சென்னைக்கு வந்த காரணத்தையும் பின்னணியையும் சூழ்நிலையையும் பத்மினி சிதம்பரநாதன் கூறிக்கொண்டிருந்தார்.

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்துஇ மாலை 5 மணிக்குஇ பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு. இல. கேணசன்இ சுகுமாரன் நம்பியார்இ குமாரவேலு ஆகியோர் இருந்தனர். யாவரும் போயிருந்தோம். விரிவான விளக்கமான கலந்துரையாடல். இரா. சம்பந்தன் வரலாற்று விவரங்களைச் சொன்னார். திருகோணமலை பறிபோவதைச் சொன்னார். சிவாஜிýங்கம் தெளிவாக விவரங்களைச் சொன்னார். பேச்சு வார்த்தையில் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்து நடந்த விடுதலைப் புýகளின் அமைதி ஆர்வத்தைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்துக் கூறினார். தமிழரின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கக் கூடிய அமைதித் தீர்வை நோக்கி இந்தியா உதவக் கோரினேன்.

செய்தியாளர் வெளியே கூடியிருந்தனர். இரா. சம்பந்தன் பேசினார்.

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்துஇ பழ. நெடுமாறனைச் சந்திக்கப் போனோம். இரா. சம்பந்தன்இ பத்மினி சிதம்பரநாதன்இ மாவை சேனாதிராசா மூவருடன் நானும் ஒரே வண்டியில் போனோம்.

தூதுக் குழுவின் எண்ணிக்கையையும்இ யார் எவர் என்பதையும் தலைவராகிய நீங்கள் தீர்மானியுங்கள். தில்ýயிடம் பேசுங்கள். பத்மினி சிதம்பரநாதனைத் தனிமைப்படுத்துவது நல்லதல்லஇ அவரையும் சேர்த்துக்கொண்டு போங்கள். எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் தில்ýக்குப் பேசட்டுமா என்று இரா. சம்பந்தனிடம் கூறினேன். மற்ற இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

என்னுடைய தீர்மானங்கள் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும். நீங்கள் இது தொடர்பாக வேறு யாருடனும் பேசினால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லை எனச் சொல்ýவிடுவேன் என்றார் இரா. சம்பந்தன்.

பழ. நெடுமாறன் வீட்டில் மாலை 7 மணியளவில் சந்திப்பு. அனைவரும் போயிருந்தோம். பிரதமரிடம் என்னென்ன பேசவேண்டும் எனக் கேட்டேன். உங்களுக்குத் தெரியாததா? என்றார். உங்கள் கருத்து என்ன என்பதைக் கூறுங்கள் என்றேன். வரிசைப்படுத்தித் தமது கருத்துகளை நெடுமாறன் எம்மிடம் தெரிவித்தார். 15.09.2006 வெள்ளி மாலை இரவுணவுக்கு வாருங்கள் என அவரை மாவை சேனாதிராசா அனைவர் சார்பிலும் அழைத்தார்.

செய்தியாளர் எவரும் அங்கு வரவில்லை.

14.09.2006

பிரதமருக்கு ஈழத் தமிழர் சார்பில் கொடுக்கும் கடித வரைவு தயாரிப்பதில் ஈடுபட்டோம். சிவாஜிýங்கம் வரவில்லை. சுருக்கமாக எழுதவேண்டும் என்பதில் சிலர்இ நீண்டே எழுதலாம் எனச் சிலர் கூறஇ வரைவுக்குரிய பனுவலை இரா. சம்பந்தன் தன் கைப்பட எழுதஇ பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தட்டச்சுச் செய்தார். அங்கிருந்தோர் சொன்னனவும் இருந்தனஇ சொன்னன பல விடுபட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு எழுதிக்கொண்டிருக்றகயில்இ இரா. சம்பந்தன்இ என்னைப் பார்த்துஇ சச்சிஇ தமிழர் தாயகத்தின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை பற்றிப் பாஜகவிடம் நீங்கள் கூறியது மடத்தனமான கருத்து என்றார். நீண்ட எல்லைகளையும் பரந்த நிலப்பகுதியையும் காக்கும் படைகளை நாம் வைத்திருக்க முடியுமா? எனக் கேட்டார்.

அடித்தளத்திலேயே கை வைக்கிறாரே? சொல்லாட்சி கூடப் பொருத்தமானதாக இல்லையே!

உங்கள் சொல்லாட்சியைப் பொருட்படுத்தவில்லைஇ 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் எந்தத் தனமானேதாஇ அந்தத் தனமானதுதான் நான் தொடர்ந்து பாஜகவிடம் மட்டுமல்லஇ இங்குள்ள அரசியல் தலைவர்களிடமும் வýயுறுத்தி வருகிற கருத்து என்றேன்.

மாவை சேனாதிராசாவும் நானும் அந்தக் கருத்தை வýயுறுத்தியே தமிழகத் தலைவர்களிடம் பேசி வந்தோம். சிவாஜிýங்கமும் அதையே தமிழகத் தலைவர்களிடம் பேசி வருகிறார். மாவை சேனாதிராசாவுக்கு இது நன்றாகத் தெரிந்தும் அவர் வாய் திறக்கமால் இருந்தமைஇ தமிழகத் தலைவர்களிடம் தான் பேசியதைத் தன் தலைவரிடமே பேச முயலாமல் மெüனியாக இருந்தமை வியப்பாக எனக்கு இருக்கவில்லை. நாடாளுமன்றப் பதவி அரசியலே அதுதான்.

தில்ýயில் எதிர்க்கடசித் தலைவர் எல். கே. அத்வானியைப் பார்க்க நேரம் கேட்டுத் தொலைநகல் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தேன். மாவை சேனாதிராசா அதை உடனேயே அனுப்பி வைத்தார். அன்று மாலை பொது நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்த இல. கேணசன்இ என்னிடம் வந்துஇ ஈழத் தமிழர் பிரதிநிகள் வருகிறார்கள்இ சந்தியுங்கள் எனத் தானும் தில்ýக்குச் செய்தி அனுப்பினதாகக் கூறினார்.

15.09.2006

பகல் முழுவதும் அவரவர்இ அவரவர் பணியைப் பார்க்கப் போயினர். தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பிஇ முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.

பத்மினி சிதம்பரநாதன் 16.9 கொழும்பு திரும்புவதற்கான பயணச் சீட்டை உறுதிசெய்யப் போனார். பின்னர்இ மாலை கடைத்தெருவுக்குப் போனார்.

இரவுணவுக்காக மயிலாப்பூருக்கு நெடுமாறனை அழைத்துக்கொண்டு சென்றோம். இரா. சம்பந்தனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு வரவில்லை. கவிஞர் காசி ஆனந்தனை அழைத்திருந்தேன். வந்திருந்தார். மாவை சேனாதிராசா விருந்து வழங்கினார்.

16.09.2006

காலையில் பத்மினி சிதம்பரநாதனை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொழும்புக்கு அனுப்பினார் மாவை சேனாதிராசா.

17.09.2006

இரா. சம்பந்தன்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன் யாவரும் காலையில் எனது இல்லத்துக்கு வந்தனர். மாவை சேனாதிராசாவும் நானும் சேர்ந்துகொண்ளடாம். பிரதமருக்குக் கொடுக்கவுள்ள கடித வரைவைத் தயாரித்தோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஆக்கபூர்வமான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டிருந்தனர். ஆட் கடத்தல்களின் வேகம் விரைவு எண்ணிக்கை பற்றிச் சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமாகக் கூறினார். அவற்றையும் உள்ளடக்கியே கடித வரைவை இரா. சம்பந்தன் எழுதிக்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கக் கூடாது எனக் கடிதத்தில் எழுதுங்கள் எனக் கேட்டேன். நேரில் சொல்லுவோம்இ கடிதத்தில் எழுத வேண்டாம் எனச் சம்பந்தன் மறுத்துவிட்டார். நேரில் சொல்வேத சரியாக இருக்கும் என மாவை சேனாதிராசாவும் கூறினார்.

போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்ý வýயுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப்புýகள்தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

தமிழர் எதிர்பார்ப்புகளை நோக்கிய அரசியல் தீர்வுக்கு உடன்படுமாறு கொழும்புக்குப் போதுமான தூதரகஇ பொருளாதாரஇ அரசியல் அழுத்தம் கொடுக்காமாறு தில்ýயைக் கேட்டுக் கடிதத்தில் எழுதுங்கள் என்றேன். இது முதல் சந்திப்பு; இதில் அரசியல் தீர்வு விடயங்கள் வேண்டாம் என இரா. சம்பந்தன் கூறினார்.

அல்லலுற்று ஆற்றாது துயருரறும் ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா உடனடியாக உதவவேண்டும் எனவும்இ அவ்வாறு வழங்கும் உதவிகளைஇ இலங்கை அரசின் மூலமாக வழங்காதுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசிஇ தமிழர் அமைப்புகள் மூலம் வழங்குமாறு பிரதமருக்கு எழுதுங்கள் எனக் கோரினேன். பயனாளிகளுக்கு நேரடியாக இந்திய உதவி உடனடியாகக் கிடைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசில் தமிழருக்கு நம்பிக்கை இல்லை என்றும் எழுதுவதாகக் கூறினார் இரா. சம்பந்தன்.

மொத்தம் ஆறு பக்கங்கள் கொண்ட கடிதத்தின் இறுதி வடிவைத் தமிழில் பந்தி பந்தியாக வாயால் மொழிபெயர்த்துக் கூறினார்இ இரா. சம்பந்தன். அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

ஒரே ஒரு பக்கத்தில் பெரிய எழுத்துகளில் கடிதச் சுருக்கத்தைப் புள்ளியிட்டுப் பிரதமருக்குக் கொடுப்பதன் அவசியத்தை நானும் மாவை சேனாதிராசாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வýயுறுத்த இரா. சம்பந்தன் ஒப்புக்கொண்டார்.

18.09.2006

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரும் எனதில்லம் வந்தனர். கடைசி நேரத் திருத்தங்களுடன் கடிதத்தின் அச்சுப் படியைத் தயாரித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தில்ýப் பயணம் வெற்றியாக அமைவதாக என அவர்களிருவரையும் வாழ்த்தி அனுப்பினேன்.

19.09.2006

காலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தில்ýக்கு ஐவரும் புறப்பட்டனர். இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தில்ýயில் தங்கியிருந்தனர்.

இரவுஇ இரா. சம்பந்தனின் அறையில்இ அவரைப் பார்த்ததாகவும் பின்னர் மாவை சேனாதிராசாவைப் பார்த்ததாகவும்இ தன்னையும் அந்தக் குழுவில் இணைத்துக்கொள்ள அவர் செய்த கடைசி முயற்சியும் வெற்றி பெறாமல் சோர்வுடன் தில்ýயிலுள்ள தனது அறைக்குத் திரும்பியதாகவும் 27.8 அன்று சென்னையில் என்னிடம் சிவாஜிýங்கம் கூறினார். 18.9 புதன் மாலையே தில்ý போய்விட்டதாகவும் 22.9 மதிய விமானத்தில் சென்னை திரும்பியதாகவும் சிவாஜிýங்கம் தெரிவித்தார்.

21.9.2006

ஈவிரக்கமற்ற ஆயுதபாணிகளே விடுதலைப் புýகள்இ என்ற துணைத் தலைப்புடன் இரா. சம்பந்தன் தில்ýயில் பேசிய பேச்சின் சாரம் சென்னை இந்துவில் வெளிவந்திருந்தது.

தப்புத் தப்பாய் வெளியிடும் வழமை இந்துவுக்கு உண்டு என்பதால் மற்றொரு ஆங்கில இதழான டெக்கான் குரொனிக்கிள் பார்த்தேன். தலைப்பில் அந்த வரி இல்லை. உள்ளே செய்தியில் அதே வரிகள். நான் வியப்படையவில்லை.

23.9.2006

22.9 பின்னிரவு மாவை சேனாதிராசா எனதில்லம் வந்தவேளை நான் உறக்கத்தில் இருந்தேன். 23.9 காலை உணவுக்குப் பின் அவர் என்னிடம் பேசினார்.

பிரதமரைப் பார்க்கத் தில்ý சென்றவர்கள் பிரதமரைப் பார்க்கமலே திரும்பினார்கள். பிரதமர் அலுவலகஇ வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளையும் இணை அமைச்சர் ஒருவரையும் பொதுவுடைமைக் கட்சியினரையும் பார்த்ததாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். வேதனையுடன் இருந்தேன். நினைவுக்கு நிகழ்ச்சி ஒன்று வந்தது.

26.8 அன்று தமிழ்க் கணினி வளர்ச்சி தொடர்பான தமிழக அரசின் உள்ளகக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்திருந்தனர்இ போயிருந்தேன். புலமையாளரையும் பேராசிரியர்களையும் கணினித் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடையோரையும் அரசு அழைத்திருந்தது. மாவை சேனாதிராசாவையும் அழைத்துச் சென்றேன்.

தேனீர் இடைவேளையின் பொழுது பேராசிரியர் முனைவர் வா. செ. குழந்தைசாமி என்னிடம் பேசினார். சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத் தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத் தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஜதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழரால் முடியவில்லையே சச்சிதானந்தம் என என்னிடம் உரிமையோடு மனம் நொந்து கூறினார். பின்னர் அவரிடம் மாவை சேனாதிராசாவை அழைத்துச் சென்றேன். முன்பு என்னிடம் கூறியதை மாவை சேனாதிராசாவிடமும் கூறுங்கள் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதையே அவர் திரும்பவும் சொன்னார்.

அப்படி என்ன இந்தக் கட்டுரையில் இருக்கிறது?

எல்லோருக்கும் தேங்காயாகத் தெரிவது நண்பர் சபேசனுக்கு மட்டும் மாங்காயாகத் தெரிகிறது போலும்..... :lol:

சச்சிதானந்தம் கலைஞர் அனுதாபி என்றால் நீங்கள் ஜெயலலிதா அனுதாபி என்று பொருள் கொள்ளலாமா?

கலைஞரை சச்சிதானந்தம் பிப்ரவரியில் சந்தித்தபோது "நேரடியாக பிரதமரை சந்தியுங்கள். வேறு யாரையும் சந்திக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தியதாக தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கலைஞரின் அறிவுரையை கூட்டமைப்பினர் எந்த அளவுக்கு மதித்தார்கள் என்பதை சச்சிதானந்தம் நன்றாகவே வர்ணித்திருக்கிறார். தேவையில்லாத நேர விரயமும், முறையான தொடர்பின்மையுமே நோக்கத்தை தோல்வியடையச் செய்திருக்கிறது.

அந்தக் கட்டுரையைப் படித்தீர்களா? இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக "கும்மி" அடிக்கிறீர்களா? :lol:

அனைவருக்கும் இது தேங்காயாக தெரிவதில் இருந்து திரு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நோக்கம் நிறைவேறி உள்ளது தெரிகிறது.

"பிரதமரை நேரடியாக சந்தியுங்கள், வேறு யாரையும் சந்திக்க வேண்டாம்" என்று கலைஞரின் அறிவுறுத்தலையும்(லக்கியின் மேற்கோள்) மீறி ததேகூட்டமைப்பினர் வைகோவை சந்தித்தனால்தான் கலைஞர் பிரதமருடனான சந்திப்பை குழப்பினாரா?

ததேகூட்டமைப்பினர் இந்தியப் பயணத்தை திட்டமிட்ட முறையும் தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறையையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து ஏற்கனவே நான் எழுதியும் உள்ளேன்.

என்னுடைய கேள்விகள்:

டெல்லியில் ததேகூட்டமைப்பினர் அங்கு தங்கி இருந்த பொழுது என்ன நடந்தது?

டெல்லியில் பல முறை முயன்றும் பிரதமரை சந்திக்க விடாது தடுத்தவர் யார்?

மீண்டும் சென்னை திரும்பிய ததேகூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது ஏன்?

இவைகளை குறித்து ஏன் திரு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் விளக்கமாக எழுதவில்லை?

ததேகூட்டமைப்பினர் பல முறை கலைஞரை சந்திக்க முயன்றுள்ளார்கள் என்பது கட்டுரையில் இருந்து தெளிவாகி உள்ளது. அப்படி இருக்க ததேகூட்டமைப்பினர் என்னை சந்திக்க முயலவில்ல என்று ஏன் கலைஞர் பொய் சொன்னார்?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இக் கட்டுரை செய்தது ஒன்றுதான். இதுவரை மாங்காய் தெரிகிறது என்றவர்கள் இப்பொழுது தேங்காய் தெரிகிறது என்று சொல்ல வைத்திருக்கிறது.

ஆனால் உண்மையில் தேங்காயும் உண்டு, மாங்காயும் உண்டு.

இன்னும் ஒன்று. "கலைஞர் அனுதாபி" ஜெயலலிதா அனுதாபி" போன்றவைகள் ஒன்று கெட்டவார்த்தைகள் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.