Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவளும் அந்த மூவரும் (சிறுகதை)

Featured Replies

தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா.

 

.அவனை அவசர படுத்தினார்.

 

இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் ,

 

கொஞ்சம் பொறண்ணை

 

இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.

 

அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை  இங்கு கன காலமாக செய்யிறார்  அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும்  அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன அதிர்ஸ்டமோ தெரியாது இந்த நேர அட்டவணையில் ஒன்று சேர்ந்து   வேலை செய்ய அமையமெற்று விட்டது .. இன்றைக்கும் தொடர்ந்து இரண்டு பேரும் தான் பாடி பாடி வேலை செய்ய போயினம்

 

.இதனால் கொள்கை பிடிப்பிலும் குணநலங்களிலும் ஓரு மாதிரி அமைந்து விட்டார்கள் போலும். இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட வட்டுக்குள்ளை போற வயது தான்.அப்படி ஒருக்கா நீங்கள் சொல்லி பார்த்தீங்கள் என்றால் அவர்களுக்கு கெட்ட கோபம் வரும்.அது மட்டுமல்ல தமிழ் தமிழ் கலாச்சாரம் பற்றி குறை சொன்னாலும் மிக மிக ரொம்ப கோபிப்பார்கள்,,,கோபம் வந்து துடிக்க அவர்களின் வார்த்தைகளையும் முகபாவங்களையும் பார்த்தீர்கள் என்றால் சிவாஜீயின் நடிப்பை ஓவர் என்று சொல்ல மாட்டீங்கள்

 

அது ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ..பெற்றோல் ஸ்டேசன்  என்று லண்டனில் இருப்பதினானல் மட்டும் அப்படி கூப்பிடுவதில்லை  ஊரிலையும் அப்படித்தான நாகரிகமாக சொல்லுவார்கள். இந்த பெற்றோல் நிலையம் லண்டனின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது.  ஒலிபரப்பு சேவை நிலையம் ஒளிப்பரப்பு சேவை நிலையம் பாரளுமன்றம் தூதரங்கங்களில் வேலை செய்யும் பிரபலங்கள் மற்றும் அதுக்கு வாற போற பிரபலங்கள்  எல்லாரும் இங்கு வந்து தரிசிக்காமால் ஒரு நாளும் போக மாட்டார்கள்

அதனால் என்னவோ பாடல் பெற்ற திருத்தல அந்தஸ்த்து பெற்றது போன்றதாயிற்றுது இது

 

லண்டனை பொறுத்தவரை   பெற்றோல் நிலைய வேலை இலங்கை தமிழரை பொறுத்த வரையில் படிச்ச ஆக்கள் என்றால் என்ன படியாத ஆட்களுக்கு என்றால் என்ன இது ஒரு பரம்பரை தொழில் மாதிரி ஆகி நீண்ட நாட்களாகி விட்டது.

 

பேப்பருக்குள்  தலையை கொடுத்து அதுக்குள்ளை நின்று கொண்டு பரந்தன் சந்தியில் சண்டையிட்டு கொண்டிருந்த சண்முகம்  ஏதோ அசுமாத்தமாக திரும்பி  மெல்லியகுரலில்

 

உங்கார்...அந்த சிவத்த பென்ஸ் காரில் போற கிழடு ...அன்றைக்கு ஒரு நாள் எங்கை போனாலும் உந்த பெற்றோல் நிலையம் வழிய எல்லாம் சிறிலங்கன் நிற்கினம் ஏன்  அப்படி என்று கேட்குது

 

 

அதுக்கு நீ என்ன சொன்னாய் என்று நமுட்டு சிரிப்புடன் மணியத்தார் வேலை தொடங்கும் படபடப்பை மறந்து

 

 ... பெற்றோல் நிலைய தொழில் படிக்கிறதுக்கு உலகில்  அதி சிறந்த பல்கலைகழகம் இருக்குது  சிறிலங்காவிலை தான் என்று விட்டேனே ..

 

.மூச்சு பேச்சிலை கதையில்லை  போட்டார்

 பெரிய நகைச்சுவையை உதிர்த்த பெருமிதத்தில் மணியத்தாரை பார்க்க

 

ஆனால் மணியத்தார் தன்ரை பங்குக்கு உதிலை நிக்கிறவகளிலை அந்த ஒரு மாதிரியாய் முன்னுக்கு தலையை வெட்டி ஒரு மாதிரி சிரிச்சு கதைச்சு கொண்டு நிக்குது எல்லோ

என்று சுட்டி கொண்டிருந்தவர் .

 

..நிறுத்தி  ஒரு செருமலின் பின்  முகம் முழுக்க கோபத்தை அப்பி கொண்டு,,,,உந்த உது ஒரு கொஞ்ச வருசங்களுக்கு முந்தி தாயின்ரை உடுப்பை ஒருகையை  முன்னும் பிடித்து கொண்டு மற்ற கையாலை லொலி பப்பை சூப்பி கொண்டு இங்கை வாறது ..

இப்ப பெரிசாயிட்டுது....போலை

 

அண்டைக்கு ஒரு நாள்  நான் பார்த்து கொண்டு இருக்கிறன்  என்று இல்லாமால்  ஒரு பொடியோடை நின்று கொண்டு எனக்கு சூப்பி காட்டுது ,,  வாயை வாயை ஓட்டி பல் பிடிங்கி கொண்டிருக்கினம்...கொஞ்சம் நேரம் பார்த்தன் தாங்க முடியாமால்  ஓடுங்கோ நாயளே அங்காலை நின்று செய்யுங்கோ என்று துரத்தி விட்டன்

 

இப்ப எங்கை என்னை  கண்டாலும் கப் சிப் என்று மணியத்தார் தொடர்ந்து கொண்டிருக்க அவன்  குறுக்கிட்டான் ...

 

அண்ணை கொஞ்சம் முந்தி  அவசர பட்டியள்  ,,,

 

இப்ப என்னை  இந்த பட்டறைக்காலை விடாமால்  உதிலை நின்று கதைத்து கொண்டிருக்கிறியள் ..என்னை இதுக்காளை விட்டு  பாரமெடுத்து கொண்டு உங்கடை கதையை தொடருங்கோவன்   ..இப்ப  பிசியும் குறைந்து விட்டது தானே  என்று சொல்ல

 

என்னத்தை குறையிறது  இனிமேல் தானே  உந்த பில்டிங்கில் இருந்து இறங்கி வருவினம்  சங்கதிகள்.. இந்த கடைக்குள்ளளை தூக்கிறதுக்கு  அவையோடை தடுத்து மல்லுக்கட்ட தான் நேரம் சரியாக  இருக்கும் என்றார்....மணியத்தாருக்கு என்ன ஆத்திரமென்றால்

 

உவங்கட பிரச்சனை இல்லாட்டி உண்மையாய் இனிமேல் பிசி குறைவு தான்  ,மணியத்தார் பட்டறையில் நின்று வழங்கல் செய்து கொண்டு அரசியல் விமர்சர்கராக இருப்பார், முகத்தார் கடையில் பண்டங்களை அடுக்கி கொண்டு இராணுவ விமர்சகராக இருப்பார் , ஒரு நாள் ஒருவர் ஒரு துறையில் இருப்பார்  மறு நாள் மற்றவர் மற்ற  துறையில் இருப்பார்.  இப்படி இப்படி மாறி மாறி இருப்பினம்

 

அவன் இவ்வளவு நேரமும் வழமையாக வரும் அவளை காணவில்லை என்ற வருத்தம் .வெளிக்கிடும் கடைசி நேரம் வரை நோட்டம் சுற்றி வர இருக்கும் தூரத்தில் தெரியும்  அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கு இடையால் தான் வருவது வழ்க்கம் ..அவனுக்கு மட்டும் அவளை காணவில்லை என்ற கவலை யில்லை மணியத்தாரோடை வேலை செய்யிறது காணமால் டபுள் அடித்து  தனிய இரவு வேலை செய்யப்போகும் முகத்தாருக்கும் இருக்கும் .அரசியல் சினிமா மற்றும் அடுத்தவனின் வீட்டு கதை  போன்ற விசயங்கள்   எல்லாம் சுக்கு நூறாய் அலசி ஆராய்வினம்  சில விசயங்களில் ஒரு தருக்கு ஒருதர்  அறவே காட்டி கொள்ள கூடாது தங்களோடை மட்டும் இருக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கினம் இதில் என்றும் இவர்கள் மறந்தும் தவறியதில்லை  அதில் அவளின் விசயமும் ஒன்று

 

இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகம் வங்காளிகள் கிழக்கு ஜரோப்பா நாட்டவர் ...இன்னும் கொஞ்சம் இருண்டால் பார்க்க வேணும் கஞ்சாவும் போதை பொருள் பாவனையும் துணைக்கு விபச்சாரமும் கொடி கட்டி பறக்கும் ..கற்பா மானமாம் கடை தெருவில் வாங்கலாம் என்ற பாட்டு இந்த கடைத்தெருவுக்கு சரியாக பொருந்தும் ..இந்த கடையில் மலிவு விற்பனை அடிக்கடி இடம் பெறுகிறதோ இல்லையோ தெரியாது ...இந்த தெருவில்இந்த நாட்டுக்கு படிக்க வரும் சில மாணவிகளினது மலிவு விலையில்  நிச்சயம் கிடைக்கும்

 

இவர்களை சுற்றி நடக்கும் இந்த கதைகளெல்லாம் அவனுக்கு மணியத்தாருக்கு முகத்தாருக்கு எல்லாம் தெரியுமோ என்று கேட்க மாட்டீங்கள் தானே

 

ஆனால் அவர் அவருக்கு இங்கை  தனி தனித்தனி கதை இருக்கு ,தங்கள் தனி கதையோடு அல்லாடுபடுறதுக்கே நேரம் போதாது ஊர் உழவாரக் கதை கேட்க நேரம் எங்கை இருக்கு

 

அவன் இந்த இடத்தில் வேலை செய்ய தொடங்கி கொஞ்ச காலம் தான் அவர்களிலும் பார்க்க ,அவனுக்கு இந்த கம்பனி சொல்லி கொடுத்த நுகர்வோரை கவரும் நெறிமுறைகளான கண் குடுப்பு , புன்னகை செய்தல் நன்றி சொல்லல் தவறாமால் செய்து வந்தான் .அவனது கண் குடுப்பு சில வேளை மூன்று நாலு செக்கனுக்கு மேல் நீடித்ததால் அங்கு வழமையாக வாற அன்ரிமார்  வேற மாதிரி அர்த்தம் கொண்டு இவன் மேல் விழ..

 

சாறி காதல் வலையில் விழ  இவன் ஏதும் பிரதிபலிக்காத ஜடம் மாதிரி நிற்க..

 

ச்சாய் பரதேசி என்று அவகள் மனதில் திட்டி போகும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. ஏன் உதுகளோடை வம்பு என்று வழமையான கஸ்டமர் சேவிசு நடவடிக்கைகளை கைவிட்டே விட்டான்

அவனுக்கு உந்த விழுந்து எழும்புற விளையாட்டில் ஈடுபறது மண்டைக்குள்ளை இடமில்லை .அப்பு ஆத்தையின்ரை கடன் வந்த கடன் இங்கை கொடுத்து வரா கடன் ,எவ்வளவு உழைச்சாலும் அழியா கடன் என்று ஆயிரம் விசயங்கள் அந்த இடத்தை பிடித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கு என்று ..உதிலை வாறவளுக்கு தெரியுமா ..போறவளுக்கு தெரியுமா?

 

இப்படி என்று இருந்தவனை

 

கொஞ்ச காலமாகத்தான் அவள் இந்த இடத்துக்கு வந்து போறாள் ...நடந்து தான் வந்து போறாள் .அடுக்குமாடி குடியுருப்பு பக்கமாய் இருந்து தான் வாறாள். ஒரு பக்கம் பார்த்தால் தமிழ் பெட்டையள்  மாதிரி தான் இருக்கு . ஆனால் உந்த பங்களாதேசியள் மாதிரி வறுமை பட்ட ஆளு மாதிரி தெரியலை .அவள் நடந்து வரும் பொழுது  முன்பக்கம் உடையை மீறி எட்டி பார்த்து கடல் அலை மாதிரி எம்பி எகிறி பின் அடங்கி உள் செல்லும். அதே மாதிரி பின் பக்கமும் ஒரு சுழற்சி முறையில் மணிக்கூட்டு கம்பி வழி பக்கமுமாயும்  எதிர் புறமாயும் அசைந்து வருவதால் பார்ப்பவர்கள் எல்லாரையும் அளவெடுக்க வைக்கும். இப்படியெல்லாம் தமிழ் பெட்டையள் இருக்கமாட்டாகள் என்ற தேற்றத்தை சமன்பாடு போட்டு நிறுவினாலும் ....இவள் எப்ப எப்பவெல்லாம் வரும் பொழுதும் பார்க்கும் பொழுதும் எல்லாம் இவனது நாடி நாள்த்தில் ஒரு வித மின்சார சக்தி  ஓடி மூளையில் இவ்வளவு காலமும்  இடத்தை பிடித்த உந்த கோதாரியள் எல்லாத்தையும் இடம் தெரியாமால் பண்ணி விடும்......

 

அவள் எப்ப வந்தாலும் இவன் தாவு கொள்ளும் பொழுது காவு கொள்ளுற மாதிரி தான் அவளின் சிரிப்பும் உடல் மொழியும் இருக்கும்

 

இப்ப அவனுக்கு அவளை ஒரு நாள் காணவிட்டால் என்னோ மாதிரி இருக்கும் உடம்பும் மனமும்

 

மணியத்தாரின் உடுப்பையும் தோற்றத்தை பார்த்தால் பஞ்ச பரதேசி மாதிரி தான் இருக்கும் .மனேஜர் குஜாராத்தி என்பதால் அவனுக்கு இவற்றை நயம் நட்டத்தில் அக்கறை படமால் இருக்க விடுறது இருக்கட்டும் ,நாளும் பொழுது புழங்கி இவரோடை  ஊர் நியாயம் பார்க்கும் சண்முகத்தாருக்கு கூட இவரின் நதி மூலம் ரிசி மூலம் தெரியாது என்றால் பாருங்களேன்....தெரியவும் அவர் விடுவதில்லை....ஏன் பெற்றோல் நிலையத்தில் செய்யும் தில்லு முல்லுகள் கூட

 

மணியத்தாருக்கு பெற்றோர் நிலையத்தில் வேலை செய்யும் நேரத்தை தவிர்த்து பார்த்தால் அதுவும் அவரின் குடும்ப மற்றும் நண்பர்களின் வைபவத்தில் அவரா இவர் என்று அதிசய வைக்கும் ,,உங்களுக்கு தெரிந்தாலென்ன குறைந்தா போயிட போறார் ,,,இரண்டு மூன்று வீடும் லண்டனில்  மச்சான் நடத்தும் கடையும் லிவப்பூலில் தம்பிக்காரன் நடத்திற பெற்றோல் நிலையமும் இவற்றை தானாம் ,,,,என்ற ரகசியம் இவற்றை ஊரவைக்கு கூட தெரியாது

 

இவருக்கு இந்த பொன் முட்டை இடுற வாத்து இந்த பெற்றோல் நிலையம் தான் அதுக்கு உதவுகிற சுற்றியிருக்கிற கட்டிடத்தில் வசிக்கும் அன்றாடம் காய்ச்சிகள் தான் .இவர்களை மற்றவர்கள் முன் வெறுப்பது சும்மா காட்டி கொள்ளுவார் ....இவர்களில்லை என்றால் இவரின் முதலுக்கே மோசம்  ...மட்டைகளை களவெடுத்து இவருக்கு சப்ளை செய்பவர்கள் இவர்களே

 

சுருக்கமாக சொல்லுவதனால் இங்கு இவருடைய உப தொழில் மட்டை போடுவது

 

மதுரையில் மண் சுமக்க வந்த சிவபிரானுக்கு பட்ட அடி

 

உலகில் உள்ள சீவராசிகள் அனைவருக்கும் பட்ட அடியாக மாறினது போல

 

 

செப்டம்பர் ஒன்பது பதின்னொறில் நீயூயோர்க்கில் விழுந்த அடி

 

லண்டனில் அங்கை இங்கை என எங்கெல்லாம் அடி விழந்த மாதிரி தெரிய

 

 

உலக ஒழுங்கு   மாற

 

இந்த பெற்றோல் நிலைய நடை முறை மாற

 

கம்பியூட்டரெல்லாம் மேம்படுத்தபட

 

அந்த இந்த இயந்திரங்கள் எல்லாம் புதிய வடிவத்தில் மாற

 

முன்னாலுள்ள தெருவில்லாம் மூன்று எழுத்துகள் உலாவ

 

மணியத்தாரின் வாத்து பொன் முட்டை இட கஸ்டப்பட

 

இந்த தொழிலை கைவிடாமால் மேம்படுத்த ஏதாவுது முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்துக்க வேண்டி வந்தது

 

முன்பு மாதிரி இல்லாவிட்டாலும்

 

 மசிரை  விட்டான் சிங்கன் .

 

.அப்பப்ப உதை எல்லாம் உச்சி போடடு ஏதோ வகையில் உப தொழில் தொடர்ந்தது  இந்த அடுக்கு மாடி குடியுருப்பில் இருந்து வரும் இவரது கைப்புள்ளைகளில் ஒருவரால்  புதிதாக அறிமுக படுத்த பட்டு இருப்பவள்  தான் அவள்

 

இந்த விசயத்தில் இவளின் தொழில் நுட்ப ஆலோசனை இவரை மெய்சிலிர்க்க வைக்கும்

எந்த கைப்புள்ளையை கூட ஒரு நாள் காணாமால் இருந்தால் கவலை பட மாட்டார்

 

இந்த புள்ளையை காணவிட்டால் .

 

ஒரு கை ஒடிந்த மாதிரி இருக்கும்

 

இவருக்கு இன்று முழுவதும் காணவில்லை என்ற கவலை

 

 

சண்முகத்தாருக்கு காசு பண்டம் சொத்து சேர்ப்பு அது இது என்று பெரிதாக ஆசையில்லா மனிசன். .இருக்கும் வரையும் எல்லாத்தையும் ரசித்து அணு அணுவாக ரசித்து வாழ வேணும் என்ற நம்பிக்கையுடையவர்.  உணவு விசயத்தில்லை சரி , குடி விசயத்திலை சரி  பொம்பளை விசயத்திலை  சரி  ..ஏன் சொல்லப்போனால்  ஊரிலை நடக்கிற சண்டை யை கூட அப்படித்தான் ரசிப்பார்

 

அவரே நம்புகிறார்  மற்ற ஆட்களிலும்  பார்க்க ஓப்பிட்டளவில் தனக்கு  கொஞ்சம் ஓமோன் சுரப்பு கூட என்று .....ஒரு பருவ வயதில் சந்ந்தி ,நல்லூர் திருவிழா கூட்டத்தில் சந்தர்ப்பம் தேடியதில் தொடங்கி பக்கத்து வீட்டில்  ஓட்டை கழட்டி இறங்கி சில்மிசம் செய்தது ,பாவட்ட பட்டைகள் சூழ இருக்க நடத்திய இரகசியங்கள்   மட்டுமன்றி இந்த வயதில் இப்பவும்இந்த வயதிலும் நடத்தி கொண்டிருக்கிற  திருவிளையாடல்கள் கூட தனது உடம்பு  கொஞ்சம் அதிகம்  கேட்குது   என்று .சிலவேளை வந்து குழப்பும் மனசாட்சிக்கு கூறி கொள்ளவார்

 

உதே  மாதிரி தான் மணியத்தாரும் மனசாட்சி வந்து குழப்பு பொழுது  கூறி கொள்ளுவார்.மட்டை போடுறதாலை உந்த மல்டி நசனல் கொம்பனி காரன் குறைய போறானே  போதாக்குறைக்கு அலஸ்காவில் பெற்றோல் கிண்டுறான் , தென்னாபிரிக்கா விலை சுரண்டுறான் ,,,,நாங்கள் அடிக்கிறது எல்லாம் இவங்களுக்கு பீ நட் (peanut) என்று சொல்லி குற்றவுணர்ச்சி ஏற்படும் போது எல்லாம் சொல்லி கொள்ளுவார்

 

முகத்தார் கஞ்சா பெட்டையள் ,அதுக்கு அலையும் அன்ரி மார் அந்த நாட்டுக்காரி இந்த நாட்டுக்காரி எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும்  அகப்பட்டால் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டார் .அதுக்கு தேவையான பஞ்சணையை இந்த கடையின் ஸ்டோர் றூமை ஆட்கி கொள்வது வழக்கம் ..அண்மையில் புதிதாக கடையில் வந்து போகும் அவனுக்கும்  மணியத்தாருக்கும் பழக்கமான அவளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பது ஒருதர் ஒருதருக்கு தெரியாது ...

 

அண்டைக்கு ஒரு நாள் முகத்தார் பகிடியாய் ஒரு ரெசப்பி சொல்லக்கை  அவனும் இருந்தவன் மணித்தியாரும் இருந்தவர் .அவன்தான் அக்கறையாய் கேட்டான்.மணித்தார் அதை கணக்கு கூட எடுக்கவில்லை.

 

வாட்டர்மெலனை அந்த சிவத்த பகுதியை உள்ளுக்காலை எல்லாத்தையும் வழிச்சு  ஒரு கிறைன்டரில் போடவேணும் என்று சொல்லக்கை வலப்பக்க வாயை ஒருபக்கமாக வைச்சு கொண்டு சொன்னார் . கை அளவு றெட் பெரி பழத்தையும் கொஞ்சம் சேர்க்கோணும் என்று சொல்லக்கை கையை ஒரு மாதிரி காட்டினார் .பிறகு பச்சை எலும்பிச்சபழத்தையும் சிவத்த எலிமிச்சபழத்தையும் புளிஞ்சு அதோடை சேர்க்கவேணுமென்று அப்பவும் கையை ஒரு விதமாக அசைத்து ஒரு நமிட்டு சிரிப்புடன் கூறினார்  .உதெல்லாம் சேர்த்து அடிச்சப்போட்டு  ஒரு கப்பிலை விட்ட குடித்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு உங்களுடைய உடம்பு உங்களுக்கு என்ன் சொல்லும் என்று  அப்படி செய்து குடித்து பார்த்துட்டு  அதை கேளுங்கோ ....என்றார்

 

அதோடை திரும்பி அவனை பார்த்து சொன்னார் உன்னிலும் பார்க்க  மணியத்தாருக்கு தான் உது அதிகம் உதவும்  உந்த நாள் கவனிக்குது இல்லையே என்று கூறும் பொழுது உந்த ரெசிபியில் அவனுக்கு  ஹெல்த் சம்பந்த விசயமில்லை டவுட் இருந்து கொண்டே இருந்த்து

 

இது மற்றவர்களுக்கு இது ஒரு வகையான ரெசபி

 

ஆனால் முகத்தாரை  பொறுத்த மட்டில் இயற்கை வயகரா

 

இதை எல்லாம் இந்த கடையிலை செய்யிறதுக்கு இதிலை இருக்கிற சிசிடிவி கமராவை உச்சி தானே செய்யவேணும் ...செய்யிறார் தானே

 

இதை மாதிரி மணியத்தாரும் இந்த சிசிடிவி கமராவை எல்லாத்தையும் உச்சி போட்டு தானே மட்டை போட வேண்டும் ...ஏதோ எப்படியோ செய்யிறார் தானே....

 

சிசிடிவி எத்தனை புறத்தாலே சுழட்டினாலும்  பலன்  கிடைக்கலை .மேலே இருந்து ஒரே பிறசர் ...கண்டு பிடி கண்டுபிடி ...மனோஜர் என்ன செய்வான் ...கார் ஒன்றும் நில்லாத போது பரிமாற்றம் நடக்குது ..பரிமாற்றம் நடக்கும் பொழுது  அங்கு கார் இல்லாமால் இருக்கு ....கம்பனிக்காரன் அனுப்பின தொழில் நுட்பக்காரனும் உதுக்குள்ளை எல்லாம் கிண்டி கிளறி பார்த்தாலும் ஏதோ செய்யினம் அதை நிறுவ முடியாமால் மண்டையை பிசைந்து கொண்டு கண்டு பிடிக்கிறன் கண்டு பிடிக்கிறன் என்று காலத்தை இழுத்தடித்து கொண்டு இருந்தார்...கொம்பனிக்காரனுக்கு இந்த விசய்த்தை வெளியில் விட மனமில்லை ......தன்ரை உலகலாவிய பெயர் கெட்டு போகும் என்று

 

அன்று ஒரு நாள்  அவளின் வருகையின் நோக்கத்தை அறியாமால் முகத்தார் ஏதோ புளகாங்கிகத்தில் இருக்க உளற ...அதே டெக்கனிக்கை தான் மணியத்தாரும் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது..

கொம்பனிக்காரன்  அதிசயம்  எப்படியெல்லாம் நுணுக்கமாய் இவையளால் செய்ய முடிந்த்து என்று .

 

அதே போல்

இருவருக்கும் அதிசயம் ஒரே டெக்கனிக்கை  ஒருதர் ஒருதருக்கு தெரியாமல் வெவ்வேறு நோக்கத்து செய்திருக்கிறமன்று  ...

 

அவள்  ஒரு மூன்றெழுத்து .அவளின் முன்னோர்கள் பிஜி நாட்டவர்கள் ...ஆனால் அவள் தமிழச்சி என்றே சொல்லுகிறாள் ..ஆனால் வடிவாய் கதைக்க மாட்டாள் ..நன்றாய் விளங்க கூடியாதாய் இருக்கிறாள்

 

ஒரு தனியார் உளவு ஸ்தாபானாத்தால்  அனுப்ப பட்டவள் ..எல்லாம் விசாரணையில் போல் தெரிய வந்தது

 

 

மணியத்தாருக்கு முகத்தார் செய்த முட்டாள் தனத்துக்கு கட்டி வைத்து  கீழை காவோலையால் கொழுத்த வேணும் போல் இருந்த்து ...அவர் பாண்டிச்சேரியில் கிட்ட்டியில் வாங்க இருந்த விருந்தினர் விடுதி ,,ஊரிலை கட்ட இருந்த கட்டிட தொகுதியெல்லாம் கண் முன்னே வெடித்து சிதறியது  ..என்றாலும் மணியத்தார்.உந்த சஸ்பண்ட் ஒன்று செய்யாது  முகத்தாரும் கூட தனக்கும ஒன்றும் செய்யாது நினைக்கிறார் உந்த ரெசப்பி கைவசம்  இருக்கும் வரை ....

அவனுக்கு  கொம்பனி நடை முறையில் உள்ள கஸ்டமர் சேவிசை ஒழுங்காக செய்ய சொல்லி  ஒரு எச்சரிகை வழங்கி வேலை தொடர விட்டிருந்தது

 

அன்று ஒரு பிசியான நாள் ...யந்திரம் மாதிரி வேலை செய்து கொண்டிருந்தவன் கண்ணில் கியூவில் மூன்றாவதாக ஒருவள் .எங்கையோ பார்த்த முகம் என்று நினைக்கும் முன்பே அவள் என உதிக்க ...மீண்டும் வேண்டமாட என்று தன்னை சுதாகரித்து கொண்டு கடமையை கண் வர செய்ய

அதே பார்வை அதே குழைவு அதே நளினம் .இருந்தாலும்.இது நடிப்பில்லை என்று தோற்றமளிக்க ..அவனிடம் உங்கள் மொபைல் நம்பரை தாருங்கள். கே ட்டு வேண்டி சென்றாள்

 

இது உண்மையாய் இருந்தால் கூட எந்த வித மின்சார அதிர்ச்சியும் இவனுக்கு ஏற்படவில்லை ..அந்த தெளிவு நிதானம் அவனுக்கு தெம்பாக இருந்த்து ..எந்த சோலியும் சுரட்டும் வேண்டாம் என ...நினைத்தவனை

 

அவனது இன்னொரு நினைப்பு வந்து கூறியது ...அவள் மொபைல் நம்பர் வேண்டியண்டு போறாள் சில வேளை அடித்தால்

 

ச்சாய்  முகத்தார் சொன்ன ரெசப்பியை அன்றைக்கு வடிவாய் கேட்டிருக்கலாம் என்று பட்டது

 

http://mithuvin.blogspot.co.uk/2014/09/blog-post.html

 

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நாகேஷ்!

 

அத்திமரம் பூத்தாலும் பூக்கும்... ஆனால் நாகேஷைக் களத்தில காணுறது, அதுவும் இப்படியான ஒரு கதையுடன்...அருமை!

 

ஒரே வார்த்தையில் கூறுவதானால்.... யாழ்ப்பாணத்தானை... அவனது மனதின் வக்கிரங்களை ஒரு 'அலசல்' அலசியிருக்கிறீங்கள்!

 

நானும் யாழ்ப்பாணத்தான் என்ற படியால், உறவுகள் என்னைப் பிழையாக நினைக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கை நிறைய உண்டு!

 

பின்வரும் வசனம் .. உங்களது எழுத்து நடைக்கு ஒரு 'முத்திரை' என்பேன்!  :D

 

அவள் எப்ப வந்தாலும் இவன் தாவு கொள்ளும் பொழுது காவு கொள்ளுற மாதிரி தான் அவளின் சிரிப்பும் உடல் மொழியும் இருக்கும்!

 

அடிக்கடி தலையைக் காட்டுங்கள், நாகேஷ்!

  • தொடங்கியவர்

வணக்கம் புங்கையூரன்

 

கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றி

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ப்ப்பா ஆ ஆ.... சுப்பர் ,சுப்பர் , சுப்பர்...!  என்னத்த கதை என்று வந்தன் , என்னமாய் ஒரு கதை... தொடருங்கள் , வாழ்த்துக்கள்...!! :D

  • கருத்துக்கள உறவுகள்

கதை மிகவும் நன்றாக உள்ளது. நாகேஷ் (பழைய பெயர் மறந்துவிட்டது!) முத்திரை அப்படியே இருக்கின்றது!!!

தலை நிமிர முடியாத அளவிற்குக் கடன் சுமை இருந்தும், கூட இருப்பவர் மட்டை போட்டுப் பணக்காரராக இருப்பது தெரிந்தும், மட்டைபோடும் ரெக்னிக்குகளை இலகுவாக கற்றுக்கொள்ளும் திறமை இருந்தும் "அவனை" குறுக்குவழியில் பணம் சம்பாதிக்காமல் தடுக்கும் அமானுஷ சக்தி என்ன? இந்த "அவனை"ப் போன்ற நேர்மை, நியாயம் என்று கொள்கைப்பிடிப்போடு பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் மல்லுக்கட்டும் பலரைப் பார்த்திருக்கின்றேன். அவர்களின் பெற்றோரையும், கற்பித்த ஆசிரியர்களையும் எண்ணிப் பெருமைப்படுவது நல்லதா அல்லது பிழைக்கவழி சொல்லித் தராததை வைத்துக் குறை சொல்லுவது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நாகேஷ்.....

  • தொடங்கியவர்

ப்ப்பா ஆ ஆ....

வணக்கம் suvy விஜயசேதுபதி நாயகி பார்த்து வெறுப்புடன் சொல்வது

 

 

ஆனால் இங்கு  எனக்கு சூப்பர் என்றூ தொடந்து இருக்கிறியள் .. வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றி

  • தொடங்கியவர்

கதை மிகவும் நன்றாக உள்ளது. நாகேஷ் (பழைய பெயர் மறந்துவிட்டது!) முத்திரை அப்படியே இருக்கின்றது!!!

 

 வணக்கம் கிருபன் எனது பழைய பெயரை மறக்கலாமா ..இங்கை சொல்ல கூடாது  ஆனால் மறக்க கூடாது அல்லோ ....இது க்கு தான் சொல்லுறது முகநூல் காலத்திலை முகப்புத்தகத்திலை இணையணும் என்றது ..நீங்கள் எப்பொழுது சொன்னது ஞாபகம் இருக்கிறது நிஜத்தில் தெரியாதவர்களோடு முகப்புத்தகத்தில் கணக்கு வைப்பதில்லை என்று...அந்த கொள்கையில் மாற்றம் இருக்கோ தெரியாது ..பெண் நண்பிகளுக்கு  இந்த கொள்கையில் சேர்த்தியில்லை நினைக்கிறன் :lol:

 

நான் நீண்ட காலமாக உங்களுடன் யாழில் பயணித்திருக்கிறன் முகப்புத்தகம் பக்கம் வந்து என்னையும் சேருங்க....

தொடருங்கள் நாகேஷ்.....

நன்றி புத்தன்

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கிருபன் எனது பழைய பெயரை மறக்கலாமா ..இங்கை சொல்ல கூடாது  ஆனால் மறக்க கூடாது அல்லோ ....இது க்கு தான் சொல்லுறது முகநூல் காலத்திலை முகப்புத்தகத்திலை இணையணும் என்றது ..நீங்கள் எப்பொழுது சொன்னது ஞாபகம் இருக்கிறது நிஜத்தில் தெரியாதவர்களோடு முகப்புத்தகத்தில் கணக்கு வைப்பதில்லை என்று...அந்த கொள்கையில் மாற்றம் இருக்கோ தெரியாது ..பெண் நண்பிகளுக்கு  இந்த கொள்கையில் சேர்த்தியில்லை நினைக்கிறன் :lol:

 

நான் நீண்ட காலமாக உங்களுடன் யாழில் பயணித்திருக்கிறன் முகப்புத்தகம் பக்கம் வந்து என்னையும் சேருங்க....

பழைய பெயர் டக்கென்று ஞாபகத்திற்கு வந்துவிட்டது!

முகப்புத்தகத்தில் தெரிந்தவர்களைக் கூட அவதானமாகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். அடுத்ததாக முகநூலில் அரசியலும் இலக்கியமும் பேசுவதில்லை! இணைந்திருக்கும் ஒரு சிலரின் அரசியல் இலக்கிய விவாதங்களில் பங்கெடுத்துக்கொள்வதும் இல்லை. முகநூலூடாக இலக்கியம் முன்னெடுக்கப்படும் என்று ஜெயமோகன் நம்பவில்லை. அவர் சொன்னதை நான் நம்புகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கார்...அந்த சிவத்த பென்ஸ் காரில் போற கிழடு ...அன்றைக்கு ஒரு நாள் எங்கை போனாலும் உந்த பெற்றோல் நிலையம் வழிய எல்லாம் சிறிலங்கன் நிற்கினம் ஏன்  அப்படி என்று கேட்குது

 

 

அதுக்கு நீ என்ன சொன்னாய் என்று நமுட்டு சிரிப்புடன் மணியத்தார் வேலை தொடங்கும் படபடப்பை மறந்து

 

 ... பெற்றோல் நிலைய தொழில் படிக்கிறதுக்கு உலகில்  அதி சிறந்த பல்கலைகழகம் இருக்குது  சிறிலங்காவிலை தான் என்று விட்டேனே ..

காலம்மாறிட்டுது தற்போது பத்தில் ஜந்து கராச்சில் தான் தமிழர்கள் அனேகமானோர் மினிகப் சாரதிகளாக மாறியுள்ளனர் முன்னையதை விட வருமாணம் கூட கராச் முன்னால் ஒருவரை கண்டன் டைகட்டி அடையாளஅட்டையுடன் 2014 ஈகிளாஸ்350 பென்சில் அட்டகாசமாய் நின்றார் பழைய வேலையை விட நிம்மதி கிழமைக்கு எல்லாம் போக ஆயிரம் தேறும் இப்ப ஆப்கானிக்கும் பாக்கிக்கும் crb (Criminal Record) இலகுவாக கிடைப்பதில்லை எங்களுக்கு ஓகே.

 

"அப்ப பழைய இடத்தில் யார்?" பொஸ் போனடிச்சு திரும்பி வரச்சொல்லி ஆக்கினை out of லண்டன் கராச்சிலை வேலைக்கு வந்த கிழக்கு ஜரோப்பியன் முழு கராச்சையும் ஒரு லீற்றர் பெற்றோல் விடாமல் கொள்ளைடித்து விட்டாணம் அவருக்கு வேனும்மச்சான் போட்கேட் கிளினிங்குக்கு வந்த பாக்கி கள்ளமட்டை மிஷினை பூட்டி விட கடைசியில் என்னையும் பொலிசிடம் மாட்டிவிட்டு பேசாமல் இருந்தவன் கடைசியில் பொலிஸ் உண்மையை கண்டு பிடிக்கும்வரை நான் பட்ட அவமாணம்.பெரு மூச்சுடன் நகர்கிறான்.

 

கதை ஆசிரியர் மிதுவின் எழுத்து நடை நன்றாயிருக்கிறது. "பேப்பருக்குள்  தலையை கொடுத்து அதுக்குள்ளை நின்று கொண்டு பரந்தன் சந்தியில் சண்டையிட்டு கொண்டிருந்த சண்முகம்  ஏதோ அசுமாத்தமாக திரும்பி  மெல்லியகுரலில்"ரசித்த இடம்  :) 

நன்றி இணைப்பிற்க்கு நாகேஷ் :)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வை

அதிலும் லண்டன் வாழ்வை

சந்து பொந்தெல்லாம் புகுந்து எழுதியிருக்கின்றீர்கள்

 

 தொடர்ந்து  எழுதுங்கள்

இருங்கள்

நன்றி

  • தொடங்கியவர்

வணக்கம் பெருமாள் ,விசுகு அண்ணை ..கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.