Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?)
 
இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை.  :blink: 
 
நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது.
 
http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/
 
நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார்.

 

***************************************************************************** 

இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரிச் (Goderich) என்கிற ஊர். இங்கே ஒரு வேலைத்திட்டம். அலுவலகம் சார்பாக நானும் இன்னும் நான்கு வெள்ளையர்களும் சென்றோம்.
 
இந்த நால்வரில் றிச்சர்ட், ராபர்ட் இருவ‌ரும் ஆங்கில வம்சாவழி. சேர்ஜும் நோர்மும் ஃபிரெஞ்ச் வம்சாவழி. தகதகக்கும் சாக்லேட் கலரில் நான் தமிழ் வம்சாவழி.  :lol:

 

***************************************************************************** 

கோடைகாலத்தின் ஒரு இனிய மாலை வேளையில் அந்த ஊரை அடைந்தேன். மிகவும் அழகான ஊர். அநேகமாக வெள்ளையினத்தவர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள். வீடுகள் எல்லாம் பழைய காலத்து வீடுகள். அழகாக, நேர்த்தியாக இருந்தன.

அன்றிரவு விடுதியில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் நாங்கள் ஐந்துபேருமாக வேலைத்தளத்தைச் சென்றடைந்தோம்.

Aerialjuly16%20041.jpg

காடரிச்சில் பெரும் வேலைத்திட்டம் ஒன்று எமக்கு கிடைத்திருந்தது. முதலாளியுடன் சந்திப்பும், வேலைத்திட்டத்தின் சுற்றுவட்டாரங்களை அறிவதுமே நோக்கம். அன்றைய‌ நாள் முழுவதும் வேலைத்தளத்திலேயே கழிந்தது. நல்ல உடம்பு முறிவு அன்றைக்கு.
 

வேலை முடிந்து நான்கு மணியளவில் எல்லோரும் விடுதிக்குத் திரும்பினோம். ஐந்து மணிக்கு தங்கும் விடுதிக்குக் கீழே இருந்த உணவு விடுதியில் சந்திக்கத்த் திட்டம். களைப்பைப் போக்க வேண்டுமில்லையா?
 
மாலை ஐந்து மணி.. உணவு விடுதியின் வெளியே கதிரைகள் போடப்பட்டிருந்தன. குடைகளும் விரிக்கப்பட்டிருந்தன. ஆனால் குடைகளையும் மீறி சில மேசைகளில் மாலை வெயில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது.
 

 

Goderichdownton.jpg

 

"தோலில் பழுப்பு நிறம் வேண்டுபவர்கள் வெயில் கதிரைகளில் தாராளமாக அமர்ந்து கொள்ளலாம். எனக்குத் தேவையில்லை" - இது நான்.  :wub:
 
"ஹேய்.. அது இனப்பாகுபாடு காட்டும் செயல்." - சற்றுப் பகிடியுடன் சொன்னார் நோர்ம்  :huh:
 
யோசித்துப் பார்த்தேன்.. இவர்கள் வெறும் வெள்ளையாக இருப்பதை இவர்களே விரும்பவில்லையோ என்று தோன்றியது.
 
"அதை ஒரு நல்ல விடயமாக எடுப்பீர்கள் என நினைத்தேன்." சமாதானப்படுத்தி வைத்தேன்.
 
உற்சாகபானமும் வந்து சேர்ந்தது.. அத்துடன் உணவு வகைகளும். பேசிக்கொண்டே களைப்பைப் போக்கிக்கொண்டிருந்தோம்.
 
அப்போது ஒரு வயதான வெள்ளையர் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அலங்கார கம்பி வேலிக்கு அருகில் வந்தார்.
 
"நீங்கள் இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா?"  :o
 
கேள்வி ஒருமுறை திடுக்கிடத்தான் வைத்தது.
 
நாங்கள் ஐவரும் ஆளையாள் பார்த்துக்கொண்டோம். சாக்லட் கலரில் இருந்த நான்தான் இந்தக் கேள்வி எழக் காரணமாக இருந்திருப்பேன் என்பதில் எனக்கு ஒரு ஐயமும் இருக்கவில்லை.
 
அந்த வெள்ளைக்காரருக்கு ஒரு அறுபது வயதிருக்கும். அழுக்கான உடையில் இருந்தார். சற்று மனநலம் குன்றியவர் போல தெரிந்தார்.
 
"நாங்கள் கப்பலில் வரவில்லை." இது றிச்சர்ட்.
 
அதனைத் தொடர்ந்து அந்த வயதானவருடன் சகஜமான பேச்சு ஆரம்பமானது. பலர் கப்பலில் வந்து அந்த ஊரில் உள்ள துறைமுகத்தில் இறங்குவதாகவும், அதுதான் தான் அப்படி கேட்டதாகவும் சொன்னார். அந்த குளத்தில் கப்பலில் வந்து இறங்குவாரில்லை என்பதை நினைக்க சிரிப்புத்தான் வந்தது.
 
சாவகாசமாகப் பேசி ஆளை அனுப்பி வைத்தோம். பியருக்காக இப்படி வந்து கதைத்துவிட்டுப் போகிறார் என்றார் றிச்சர்ட்.
 
இவ்வாறான ஒரு சம்பவம் வினிபெக்கில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்ததை பலரும் அறிந்திருப்பீர்கள்.
 
ஆகவே மக்களே.. ரொராண்டோ பெரும்பாகத்துக்குள் குடித்தனம் நடத்தும்வரையில் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை. :D ஆனால் அதைத்தாண்டி கனடா மிக விசாலமானது. ஆனால் அந்த நீள அகலங்கள் தாய்நாட்டில் இருப்பதுபோன்ற சுதந்திரத்தை உங்களுக்குத் தந்துவிடும் என்பது பொருளல்ல.  :huh:
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாண விளக்கம் சிலநேரங்களில் ஏட்டு படிப்பைவிட அனுபவ படிப்பு மேலானது. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று எனக்கு விளங்கவே இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்ட வினிபெகில் நடந்த நிகழ்வின் செய்தி இது.  :huh:

 

http://uptownmagazine.com/2014/03/racist-sears-employee-asks-customer-just-get-boat/


அருமையாண விளக்கம் சிலநேரங்களில் ஏட்டு படிப்பைவிட அனுபவ படிப்பு மேலானது. 

 

கருத்திற்கு நன்றி பெருமாள்..!


உண்மையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று எனக்கு விளங்கவே இல்லை

 

நான் கவிதை எழுதிவிட்டதாக நினைச்சிட்டீங்களா? :unsure: நான் அப்படிச் செய்யவில்லை..  :D

  • கருத்துக்கள உறவுகள்

இது கனடாவைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல... பொதுவாக எல்லா மேற்கத்தைய நாடுகளுக்கும் பொருந்தும், இசை!

 

சிட்னிக்குள்ளேயே, சில இடங்களில் இப்படியான ' ஒரு கீறப்படாத' ஒரு கோடு உள்ளது..! அனேகமாக, இங்கிலாந்திலிருந்து வந்த ' ஆங்கிலேயர்கள்' தான் இப்படியான கோடுகளைக் கீறி உள்ளார்கள்!

 

அதை மெல்ல, மெல்ல அழித்துக்கொண்டு வருகிறோம் என்பது தான்... நாங்கள் தரும் நல்ல செய்தி..!

 

இந்த நால்வரில் றிச்சர்ட், ராபர்ட் இருவ‌ரும் ஆங்கில வம்சாவழி. சேர்ஜும் நோர்மும் ஃபிரெஞ்ச் வம்சாவழி. தகதகக்கும் சாக்லேட் கலரில் நான் தமிழ் வம்சாவழி.  

 

 

 

நான் இவ்வளவு நாளும் இசை தக தகக்கும் தக்காளிப் பழக்க லராக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்திட்டன்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கனடாவைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல... பொதுவாக எல்லா மேற்கத்தைய நாடுகளுக்கும் பொருந்தும், இசை!

 

சிட்னிக்குள்ளேயே, சில இடங்களில் இப்படியான ' ஒரு கீறப்படாத' ஒரு கோடு உள்ளது..! அனேகமாக, இங்கிலாந்திலிருந்து வந்த ' ஆங்கிலேயர்கள்' தான் இப்படியான கோடுகளைக் கீறி உள்ளார்கள்!

 

அதை மெல்ல, மெல்ல அழித்துக்கொண்டு வருகிறோம் என்பது தான்... நாங்கள் தரும் நல்ல செய்தி..!

ரொரான்டோவில் நாங்கள் மட்டுமல்ல.. இந்தியன், பாகிஸ்தானி எல்லாரும் சேர்ந்து கோட்டை அழித்ததுவிட்டோம். :D துரத்தியும் விட்டோம்.. :icon_idea:

 

நான் இவ்வளவு நாளும் இசை தக தகக்கும் தக்காளிப் பழக்க லராக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்திட்டன்! :icon_idea:

இவ்வளவுநாளும் நல்லா ஏமாந்திருக்கிறீங்கள்.. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று எனக்கு விளங்கவே இல்லை

 

 

ஆகவே மக்களே.. ரொராண்டோ பெரும்பாகத்துக்குள் குடித்தனம் நடத்தும்வரையில் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை. :D ஆனால் அதைத்தாண்டி கனடா மிக விசாலமானது. ஆனால் அந்த நீள அகலங்கள் தாய்நாட்டில் இருப்பதுபோன்ற சுதந்திரத்தை உங்களுக்குத் தந்துவிடும் என்பது பொருளல்ல.

 

 

இது தான் அவர் சொல்ல வந்தது அக்கா. :)

 

இப்போ.. உங்க பாசையில சொன்னா.. ரூட்டிங்கை விட்டு அம்மன் கோவிலுக்கு நீங்க போவதில்லை. அப்படியே காடிவ்வில போய் அம்மன் கோவில்ல கும்பிட நினைச்சா..???!

 

இப்ப விளங்கனும்..! இல்லைன்னா.. கஸ்டம் தான். :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அவர் சொல்ல வந்தது அக்கா. :)

இப்போ.. உங்க பாசையில சொன்னா.. ரூட்டிங்கை விட்டு அம்மன் கோவிலுக்கு நீங்க போவதில்லை. அப்படியே காடிவ்வில போய் அம்மன் கோவில்ல கும்பிட நினைச்சா..???!

இப்ப விளங்கனும்..! இல்லைன்னா.. கஸ்டம் தான். :):lol:

நன்றி நெடுக்ஸ்.. :D இதை மேலோட்டமாகச் சொன்னால் யாரும் இலகுவில் நம்பிவிடமாட்டார்கள் என்பதால்தான் எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொண்டேன்.. அப்படி இருந்தும் சுமோ அக்கா கிலியை ஏற்படுத்திவிட்டா.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் பார்த்தேன்  இசை

 

நல்லதொரு  முயற்சி

நம்மை நாம் புரிந்து கொண்டால்

தாயகம் மட்டுமல்ல

உலகமே சீராகும்...... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் பார்த்தேன் இசை

நல்லதொரு முயற்சி

நம்மை நாம் புரிந்து கொண்டால்

தாயகம் மட்டுமல்ல

உலகமே சீராகும்...... :icon_idea:

நன்றி அண்ணா.. :D

அவர் மனநலம் குன்றியவர் என்பதால் கேட்டுவிட்டார்.. மனநலம் நன்றாக உள்ளவர்கள் சட்டத்திற்கு / நாகரிகத்திற்குப் பணிந்து வார்த்தையை விடமாட்டார்கள்..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கடை  திறந்து சில வருடங்கள்

என்னிடம்  சில பிரெஞ்சு  வாடிக்கையாளர்கள் (வயசானவர்கள்)

வந்து பேசி (அவர்கள் தனிமையில் இருப்பதால் வந்தால் என்னுடன் சில நிமிடங்கள் பேசுவார்கள்)

எனது 7 நாட்கள் வேலை  மற்றும்  ஒரு நாளைக்கு நான் செய்யும்  மணித்தியாலங்கள் பற்றி  பெருமைப்பட்டு சொல்வார்கள்

கடைக்குள் வராவிட்டாலும் கடைக்கு முன்னால் போகும் போதும் வரும்   போதும்

வணக்கம் சொல்லி  கை அசைத்து செல்வார்கள்

 

சில வருடங்களில்  என்னிடமிருந்த கார் கைவிட்டுவிட

புதுக்கார் ஒன்றை  வாங்கி  கடைக்கு வந்த முதல் நாள்

அதில் ஒரு பெரியவர் கண்டுவிட்டு

உன்னுடையதா என்று கேட்டார்

ஆம் என்றேன்

நான் நினைத்தேன் 

நீ கஸ்டப்படுகின்றாய் என..

நீ நன்றாக உழைக்கின்றாய்  என்றார்

 

அன்றுடன் அவர் என்னுடன்  பேசுவதில்லை

கடைக்கு வருவதில்லை

அத்துடன் அவரது வட்டத்துக்குள் உள்ளவர்கள் சிலரும் வருவதில்லை

 

இந்த வட்டம் நாம் அறியாதது

அது அவர்களுக்கு மட்டுமே ஆனது

அதுவே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளையினத்தவர்களுக்கும், மேற்குப் பகுதியில் வாழ்பவர்களுக்கும் கொஞ்சம் வேறுபாடு உள்ளது என நினைக்கின்றேன். கறுப்பினர்தத்வர் மேற்குப் பகுதியில் சென்றால் கூட தங்களை நோக்கி ஒரு வித இனப்பாகுபாடு காட்டுவதான உணர்வைப் பெறுவதாகச் சொல்கின்றனர். உண்மையில் அத்தலைப்பினை நான் தொடங்கும்போது இருந்த எண்ணம் என்பது, எம் மண்ணினை அப்படியே அபிவிருத்தி அடையாததாகவும், தமிழர்களின் இடங்களை இப்படியே அந்நிய ஆக்கிரமிப்புக்கு விடுவதுமா என்ற எண்ணத்தில் தான். இங்கே வெள்ளையர்கள் தங்கத்தட்டிலர் வைத்துப் பார்த்தாலும் கூட இங்கே இருந்து ஒரு தென்னாபிரிக்க, கரீபியன் தமிழர்கள் போல அடையாளம் இழந்து நிற்பதா என்ற கேள்வி தான் முதன்மையாக நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்.. :D இதை மேலோட்டமாகச் சொன்னால் யாரும் இலகுவில் நம்பிவிடமாட்டார்கள் என்பதால்தான் எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொண்டேன்.. அப்படி இருந்தும் சுமோ அக்கா கிலியை ஏற்படுத்திவிட்டா.. :icon_idea::D

அவ அப்படித்தான்  கொஞ்ச நாளா :icon_idea: அவ வைச்ச பூக்கண்டுகள் மரங்கள் பிரச்சினையாக்கும்!..............

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் செய்வது, செய்தது எல்லாம் சரி ஆனால் மற்றவர்கள் செய்யும்போது தான் பிழையாகத் தெரிகிறது.
 
எமது நாட்டில் இருக்கும்போது சாதி, மதம், ஊர் என்று நாங்கள் பிரித்து ஏளனம் செய்ததை விட கூடவா இவர்கள் எமக்கு செய்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் செய்வது, செய்தது எல்லாம் சரி ஆனால் மற்றவர்கள் செய்யும்போது தான் பிழையாகத் தெரிகிறது.
 
எமது நாட்டில் இருக்கும்போது சாதி, மதம், ஊர் என்று நாங்கள் பிரித்து ஏளனம் செய்ததை விட கூடவா இவர்கள் எமக்கு செய்கிறார்கள்.

 

 

 

கேள்வி  அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல...

அவர்கள் தமது மண்ணை  நேசிப்பது தப்பென்றும் சொல்லப்படவில்லை...

 

உனது நிலை என்ன?

எல்லாம் இருக்கு

ஆனால் இது உனது வீடல்ல

இதுவே நிஐம்

கண்ணை  மூடிக்கொண்டு  பால் குடிக்கிறாயா???

இதுவே கேள்வி........

இசை இதில் பிழையாக உணருவதற்கு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் எல்லாரும் புதிதாக வந்தவர்கள் தானே...புதிதாக வருபவர்களை/வருபவைகளை எப்போதும் வித்தியாசமாக தானே எவரும் பார்ப்பார்கள்....

ஊரிலேயே ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு போபவர்களுக்கு என்ன நடக்கிறதோ அதுவே எல்லா இடமும் நடக்கிறது....

 

நாங்கள் எப்போது பயப்படவேண்டும் என்றால் எமது உழைப்புக்கு நியாமாக கிடைக்க வேண்டியது...எமது "நிறத்திற்காக அல்லது பின்புலதிற்க்காக" கிடைக்காமல் விட்டால் தான் கோபம் கொள்ளவோ பயப்படவோ வேண்டும்....கனடாவில் ஒவ்வொருநாளும் புதிதாக வருபவர்கள் முன்னேருகிரார்களே ஒழிய கீழே தள்ளப்படுவதாக நான் உணரவில்லை....

 

எனது வேலைத்தள, கல்லூரி நண்பர்களோடு "நிற" அடிப்படையான பகடிகளும் அடிகடி இடம்பெறும்...அதை நாங்கள் ஒழிப்பது இல்லை...

தொல்வியடைந்தவர்களே "நிற மேன்மையை" தூக்கி பிடிப்பார்கள்....

 

இசை நீங்கள் ஒரு கருப்பு/ஆப்பிரிக்க இனத்தவரோடு கூடிகுலாவுகிறீர்களா சகஜமாக? ;)

 

உங்களது பதிவிலிருந்து நான் விளங்கியது இனவேறுபாட்டை கண்டு பயப்பட சொல்லுவது போலுள்ளது...

அதை நாம் புறக்கணிக்க தேவையில்லை...எங்களை யாரும் அமுக்கினால் தான் பிரச்சனை...நான் மேற்கு கனடா (ஒன்ராரியோ க்கு மேற்காக) திரிந்தது இல்லை...ஆனால் கிழக்கு பக்கம் திரிந்ததில் உணர்ந்தது....நாம் நிறவேற்றுமையை கண்டு பயப்பட தேவையில்லை....

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்தான்..

பதிய குடிவரவாளர்களைக் கண்டால் இவ்வாறான எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும் என்பது உண்மைதான்.. அதையே நானும் சொல்ல விழைந்தேன். அதற்கு மேலாக, இன்னொன்றையும் சொல்ல முயன்றேன்.

அதாவது, இது புதிய குடிவரவாளர்களை மட்டும் பற்றியதன்று. எனது இடத்தில் இங்கேயே பிறந்து படித்து வளர்ந்த ஒருவர் இருந்திருந்தால் இது நடக்காமல் போயிருக்குமா? :wub:

நடந்திருக்கும் என்பதே உண்மை.. இங்கு பிறந்தவர் என்னதான் காதுகுத்தி, ஜெல் வைத்து உட்கார்ந்திருந்தாலும் அது நடந்தேயிருக்கும். ஏனென்றால் வந்தவருக்கு நிறம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. :rolleyes:

மேலும், கறுப்பர்களுடன் பழகியுள்ளீர்களா என்று கேட்டுள்ளீர்கள். நான் கனடாவில் பத்து வருடங்களுக்கு மேலாக "தொடர்ச்சியாக" தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறேன். தமிழ் வணிக நிறுவனத்தில் இல்லை. :D

இறுதியாக, நிறத்தை வைத்து கணிப்பது எந்த நாட்டிலும் உள்ளது. அவரவர் பூர்வீக நாட்டில் மட்டும் இருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.

எழுதிய விதத்திற்குதான் பச்சை. கருத்துக்கு சிவப்பு .மிக மிக பிழையான கருத்து .

 

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்களுக்கு ஞாயிறு விடியவே டிரபிக் பொலிஸ் வந்திட்டார் என்ஜோய். :D

இசை உங்களுக்கு ஞாயிறு விடியவே டிரபிக் பொலிஸ் வந்திட்டார் என்ஜோய். :D

பச்சை குத்தியவர்களிடமும் பின்னோட்டம் இட்டவர்களிடமும் கேளுங்கள் இசை என்ன எழுதியிருக்கிறார் என்று . :icon_mrgreen: அதுதான் யாழ் . :D

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை குத்தியவர்களிடமும் பின்னோட்டம் இட்டவர்களிடமும் கேளுங்கள் இசை என்ன எழுதியிருக்கிறார் என்று . :icon_mrgreen: அதுதான் யாழ் . :D

 

எங்களை... இவர்,  மொக்குக் கூட்டம் என்று சொல்லவருகிறார். :lol:

Olivia Chow says she's still angry one day after a mayoral debate was marred by a prejudicial remark though, she notes, it's not the first time she's been attacked because of her gender or ethnicity. 
 
Wednesday night's debate in Corso Italia put Chow on the offensive when an audience member posed a somewhat rambling question that appeared to suggest her personal history as an immigrant had some bearing on her qualifications to be mayor. 
 
"How dare he bring up that I'm an immigrant into the debate. I find it was just offensive," she told CBC News on Thursday. 
 
She was also told to go "back to China" by a man at an earlier debate. 
 
Racist, homophobic comments mar municipal campaign
Vote Compass comes to Toronto's mayoral election
But those remarks pale in comparison to the racist and sexist invective that accumulates about Chow online — on Twitter, her Facebook page and elsewhere. 
 
"It's pretty nasty stuff," she said. "This city is full of good people but there are some that are racist and hateful."
 
"If I'm too tough I'm seen as bitchy," she added, though that sort of sexism counters the racist stereotype that "Asian women are supposed to be gentle."

இறுதியாக, நிறத்தை வைத்து கணிப்பது எந்த நாட்டிலும் உள்ளது. அவரவர் பூர்வீக நாட்டில் மட்டும் இருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.

 

இது பிழையான கருத்து என்று நினைக்கிறன்....எங்களது குடும்பத்துக்குள்ளேயே...எல்லாரையும் சரிசமமாக பாவிக்குறோமா?? எப்போதும் ஏற்றம்/இறக்கம்...ஆதரவு/எதிர்ப்பு இருக்கும்.....அப்படியிருக்கும் போது சாதாரண(வெள்ளை) கனடியனிடம் இருந்து என்ன எதிர்பார்கிறீர்கள்?

 

உங்களது அனுபவத்திலேயே..உங்களை கேட்டவர் ஒரு மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னீர்கள்..மனநிலை சரியானவர்கள் உங்களை சரியாக தானே நடத்துகிறார்கள்...நாங்கள் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்றால் எல்லாத்திலும் காணலாம்....கனடாவில் மற்றவர் தயவில் வாழவேண்டிய நிலைஇல்லை....ஆகவே நாங்கள் இவற்றை பற்றி பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை என்பது தான் எனது அறிவுரை (நீங்கள் கவலைப்படுபவராக இருந்தால்...)

 

இதுவும் கடந்து போகும்.

கனடா இன்று வகை தொகையாக முஸ்லிம்களை கனடாவிற்குள் எடுக்கின்றது .இன்று கனடாவை ஆட்சி செய்வது நாங்கள் எல்லாம் மிக கடுமையாக நிறவெறியர்கள் என்று விமர்சிக்கும் கொன்சர்வேர்டிவ் கட்சி ,அப்ப லிபரல் என் டி பி வந்தால் நிலை எவ்வளவு இன்னமும் நன்றாக  இருக்கும் .

வீதியில் போகும் நாலு விசரன் சொல்வதை ஒரு காதால் கேட்டு மற்ற காதால் விட்டுவிடவேண்டும் .

இந்த மாதம் கனடாவில் நடக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில் எத்தனை  எம்மவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்பதே அதற்கு சாட்சி .

இது அடுத்த சந்ததி வர கனடா எங்கும் பரவும் அவர்கள் எங்களை போல ஒரு மூலைக்குள் ஒதுங்கபோவதில்லை .

 

கதையோடு கதையாக - நாங்கள் இந்த வருடம் காம்பிங் போனதே இசை சொன்ன நகரம் தான். Goderich இல் உள்ள Point Farms Provincial Park .அங்கும் கொடி நாட்டிவிட்டு வந்துவிட்டம் . :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

(arjun,naanthaan)மொத்தத்தில் கடைசியா நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்?  எனக்கு நீங்கள் சொல்ல வருவதுதான் குழப்பமாக உள்ளது.

 

இந்த அழகான குளிரும் சூரியனின் ஞாயிறு காலை பொழுதை இழக்க மனமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.