Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேங்கையன் பூங்கொடி" "காவியத்தூது" நூல்கள் தொடர்பான உரைகளும் விமர்சனங்களும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி எதற்காக இந்த ஆதங்கம்...!

பல மாதங்களுக்கு முன்பே உங்களது இரு நூல்களையும் நான் நெற்கொழுதாசனிடம் இருந்து பெற்று , அப்பவே வாசித்து முடித்து இங்குதான் வேறொரு திரியில் எனது விமர்சனத்தையும் வைத்திருந்தேன்...! அது எதுவெனத் தெரியவில்லை....!

இரண்டும் மிகவும் அருமையான ஆக்கங்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி எதற்காக இந்த ஆதங்கம்...!

பல மாதங்களுக்கு முன்பே உங்களது இரு நூல்களையும் நான் நெற்கொழுதாசனிடம் இருந்து பெற்று , அப்பவே வாசித்து முடித்து இங்குதான் வேறொரு திரியில் எனது விமர்சனத்தையும் வைத்திருந்தேன்...! அது எதுவெனத் தெரியவில்லை....!

இரண்டும் மிகவும் அருமையான ஆக்கங்கள்...!

சுவி அண்ணா விமர்சனம் எழுதி இருந்தீர்களா? நூல்களைப்பற்றிய விமர்சனங்கள் அனைத்தையும் இந்தத் திரியில் பதிவிட்டுள்ளேன் அப்படியானால் உங்களுடைய பதிவை நான் அவதானிக்கவில்லையா? குறை நினைக்காமல் உங்கள் விமர்சனத்தை மீண்டும் இங்கு பதிவிட்டால் நூல்கள் பற்றிய  ஆவணமாக இருக்கும். நன்றி அண்ணா

10442985_10152409274381551_4012566573080

  • கருத்துக்கள உறவுகள்

Posted 4 January · Report post

கடந்த 31ம் திகதி மாலை  நன்பர் நெற்கொழுதாசன் அவர்களிடமிருந்து  சகோதரி சகாறாவின்  "வேங்கையன் பூங்கொடி" , "காவியத்தூது"  நூல்களும் , சகோதரி சுமேயின் "நிறம் மாறும் உறவு" ,   "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" நூல்களும்  மேலும் அவரது"  ரகசியத்தின் நாக்குகள்மென்ற புத்தகமும் கிடைத்தது. இப்பதான் பாரிசிலிருந்து வீடு வந்து சேர்ந்தேன். உங்கள் மூவருக்கும் முகமறியா உங்களுடன் உறவாட உரமிட்ட யாழுக்கும் உளமார்ந்த நன்றிகளும் , புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

 

நெற்கொழுதாசனுடனான சந்திப்பு வாழ்வில் மறக்கவொண்ணா  தித்திப்பு...!

 

மிக்க அன்பு சுவி ஐயா, 

 

உண்மையிலேயே மனதுக்கு மிக நெருக்கமான உணர்வுடன் ஐயாவுடன் உரையாட முடிந்தது. 

பல இடங்களில் பல சந்திப்புக்களை தவிர்த்துவந்தாலும், எதோ ஒரு உந்துதலில் ஐயாவை சந்திக்க ஆவலாயிருந்தேன். மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நின்றார் மனதில். 

 

ஒளிவுமறைவற்ற அவரின் பேச்சுக்கள் மீண்டும் என் கிராமத்தின் உறவுகளோடு கலந்துபேசிய உணர்வை தந்தது. விசுகு அண்ணாவையும் அழைக்கலாம் என்று சுவி ஐயா அழைப்பு எடுத்தார். ஆனால் அவர் அந்த நேரம் அழைப்பில் வரவில்லை. ஒரே நாட்டில் இருந்துகொண்டு இன்னும் ஒரு சந்திப்புக்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது சந்தர்ப்பம் அமையவில்லை :(

 

நினைவுகளுடன் கூடிய அன்புப் பரிசாக   "செவ்விந்தியரின் நீண்ட பயணம்" என்ற நூலும், குளிர்கால அங்கியொன்றும் தந்து சென்றார். இந்த அன்புக்கு நான் என்ன செய்தேன் என்று இன்றுவரை யோசிக்கிறேன். இது எனக்கு கிடைத்த இரண்டாவது நினைவுப் பரிசு. முதலாவதும் யாழ் களத்தின் உறவாக ஆரம்பித்து  அம்மாவாகியவரிடமிருந்து   கிடைத்தது. 

 

சகாறா அக்காவின் திரியை நினைவுகளை மீட்ட பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும். சரி மன்னிக்காவிட்டால் ஏசுங்க அக்காதானே :icon_idea:   

நெருக்கமான பல உறவுகளை உருவாக்கி தந்த யாழ் தளத்திற்கு என் நன்றிகள். 

 

Posted 10 January · Report post

சகோதரி உங்களின் "வேங்கையன் பூங்கொடி" படித்தேன். அதிக வார்த்தை ஜாலங்கள் இன்றி கச்சிதமாக எழுதியுள்ளீர்கள். நிஜத்தைச் சொல்கின்றோம் என்று சேற்றுக்குள் குளிக்காமல்  கடைசியில் கலாச்சாரத்தின் கற்பையும் காப்பாற்றியது பிடித்திருக்கு  முள்ளிவாய்க்கால் கால கட்டத்தின் பதிவாக இதுவும் இருக்கும். முழுதுமாய்ப் படித்ததனால் கிழிக்க முடியவில்லை, அது எனக்கு சிறிது வருத்தந்தான்....! :lol:   :D :D

 

இவை உங்களின் "எனது நூலைப் படிக்கவும்... கிழிக்கவும் " என்னும் திரியில்  8ம் பக்கத்தில் உள்ளது...!

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'வேங்கையன் பூங்கொடி " அட்டைப்படத்தை வரைந்த ஓவியர் அவ்வோவியம் கால அவகாசம் கொடுக்காமல் பெறப்பட்டது.  "வேங்கையன் பூங்கொடியின் இரண்டாம் பாகத்தை" மிகவும் நேர்த்தியுடனும்  சிரத்தையுடனும் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான ஓவியங்களுடனும் உருவாக்க முழுமையான ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரை இழந்து விட்டோம் என்னும்போது காவியமும் ஒரு முறை கலங்கத்தான் செய்கிறது.

12235095_10153408086551888_6991299194127

திரு.மோகனதாஸ் (மோகன் ஆட்ஸ் வல்வெட்டித்துறை)

தூரிகையினால் பேசத்தெரிந்த கலைஞன் வல்வையின் வரலாற்றில் மட்டுமல்ல ஈழவரலாற்றிலும் தனக்கேயான தனியிடத்தைப்பெற்றுக் கொண்டவர். இன்று நாம் பார்க்கும் முதலாவது மாவீரன் சத்தியநாதனின் படத்துக்கு ஏற்றப்பட்ட நிற மெருகும், சத்தியநாதனின் சீருடையும் அதனை போலவே பண்டிதரின் வெறும் அடையாளஅட்டை போட்டோவுக்கு போராளி சீருடை வரைந்த அந்த மோகன்அண்ணா நாளை நாம் பார்க்கும் அத்தனை ஓவியபொழுதுகளிலும் நினைவிருப்பார். விபத்தொன்றில் தனது ஒரு கண்ணை இழந்தும் ஓவியத்தை வரைவதில் தனிக்கவனம் செலுத்தி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். இப்போதும் எனது "வேங்கையன் பூங்கொடி பாகம் 1" இன் அட்டைப்படத்தை ஓரிரு நாட்களில் வரைந்து தந்ததோடு மட்டுமல்லாது "வேங்கையன் பூங்கொடி இரண்டாம் பாகத்"திற்கான அட்டைப்படத்தை மிகக் கவனமெடுத்து செய்வதற்கான ஆயத்தங்களோடு இருந்தவர். அவருடைய கச்சிதமான ஓவியத்தை பெற பெரும் எதிர்பார்ப்போடு இருந்த எனக்கு மோகனண்ணாவின் இழப்பு பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து நிற்கிறது. மோகனண்ணாவின் அக்கால ஓவியங்கள் சில......12240068_10153408087506888_746953469012112095145_10153408087941888_439224428377511224426_10153408089956888_114750997448912244611_10153408090741888_749429080394211053193_10153408091686888_177510111124812232658_10153408089741888_244583211718612239429_10153408088991888_5849357810850

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10513257_10152460917556551_7710564537534

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர் திரு . மோகனதாஸ் அவர்களின் இழப்பையொட்டி மிகவும் கவலை அடைகின்றேன்....!

ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர் திரு . மோகனதாஸ் அவர்களின் மறைவுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • 2 months later...

வாழ்த்துகள் சகாறா அக்கா. 

(சகாறா அக்காவின் நூல்கள் இரண்டையும் மேலோட்டமாகவும், உள்ளடக்கத்தின் சில பகுதிகளை விரிவாகவும் படித்தேன். விமர்சனம் ஒன்றை எழுதத்தொடங்கி அது தொங்கலாக நிற்கின்றது. முழுமையான விமர்சனமாக எழுத சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் அதை இங்கு பகிர்ந்துகொள்ள முடியவில்லை). 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.