Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தை எடுத்துக்காட்டியவர்கள் தமிழ்ப் பெண்களே’ விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா போராட்டத்திற்கு ஆற்றிய துரோகம் என்பதை இன்று பிரதேசவாத கண்ணோட்டத்தில் சிலர் முன்வைக்க விரும்புகிறார்கள். ஆனால்.. மாத்தையாவின் விடயத்தில் இந்தளவு ஈடுபாட்டோடு அவர்கள் கருத்துச் சொல்வதில்லை. காரணம்.. அங்கு என்ன வாதத்தை முன் வைப்பது. மச்சான்.. மச்சான் சண்டை என்று தான் சொல்ல முடியும்..!

மாத்தையா விடயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்த காரணத்தினால்தான் கருணா விடயத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் பிரபாகரன் திண்டாடினார் என்பதே உண்மை.

மாத்தையா விடயம் எதுவுமே உண்மையானது அல்ல. சில சம்பவங்களை கோர்த்து பொட்டு அம்மானால் சோடிக்கப்பட்டு துரோகி ஆக்கப்பட்டவர் மாத்தையா.

பிரபாகரனின் சரிவு மாத்தையாவை தட்டியதோடு தொடங்கி விட்டது. இதற்கு அடுத்து, தமிழ்ச்செல்வனின் தீவிர விசுவாசம் காரணமாக அவர் எதனை தெரிவித்தாலும் அதனை நம்பி பலரை அமைப்பில் இருந்து தூக்கியும் உள்ளார். இதன் காரணத்தினாலேயே ஆயிரக்கணக்கான போராளிகள் விலகியும் இருந்தனர். (இதனை எவராலும் மறுக்க முடியுமா?)

இவற்றை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை என்பது எனக்கு மிகவும் தெளிவாகவே தெரியும். ஆனால், உண்மைகள் ஒரு சிலருக்காவது தெரிய வரவேண்டும் என்று விரும்புகின்றேன். (முன்னரும் யாழ். களத்தில் பதிவு செய்தும் உள்ளேன்)

மாத்தையா விடயத்தில் "நான் மிகவும் அவசரப்பட்டு விட்டேன்" என்று பின்நாளில் பிரபாகரன் வருத்தப்பட்டு உள்ளார். இதனை பிரபாகரனோடு நெருங்கி இருந்தவர்களில் சிலர் தற்போதும் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்தார்கள் எனும் காரணத்தினை காட்டி 2000 ஆம் ஆண்டு சமாதான காலத்தோடு அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தவர்களே இவர்கள்.

இங்கே தம்மை தீவிர தேசியவாதிகளாக காட்டிக்கொள்பவர்கள் என்னதான் விழுந்து விழுந்து பூசி மெழுகினாலும் உண்மைகள் மறைக்கப்பட முடியாதது. ஜெயசிக்குறு சமர் உள்ளிட்ட பல சமர்களில் களமாடிய போராளிகள் பலர் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவர்கள் எல்லாம் யாழ். மாவட்டத்தில் இருந்து இணைந்த போராளிகள்.

அவர்களோ, கருணா அம்மான் (அம்மான் என்று நான் தெரிவிக்கவில்லை அவர்கள்தான் தெரிவிக்கின்றனர்) அமைப்பில் இருந்து விலக்கப்பட்ட பின்னர்தான் விடுதலைப் புலிகள் பலவீனமானார்கள் என்று தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கும்போது ஏன்யா நீங்கள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து கத்துகின்றீர்கள்.

பிரபாகரன் தன்னைத்தவிர மிகுதி அனைவரையுமே துரோகி ஆக்கிய பெருமையினை தட்டிச் செல்கின்றார். யாரை பிரபாகரன் துரோகி ஆக்கவில்லை என்று தெரிவியுங்கள் பார்ப்போம்.

இந்திய இராணுவ காலத்தில் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்கின்றேன் என்று மன்றாடி கேட்டுக் கொண்டு கை எடுத்து கும்பிட்டுக் கொண்டு இருந்த வேலுவை சொர்ணத்தினை கொண்டு தட்டினார். இது எத்தனை பேருக்கு தெரியும்?

பானுவை தமிழ்ச்செல்வன் கூறிய காரணத்தினால் கிட்டத்தட்ட துரோகியாக்கி வீட்டுச் சிறையில் அடைத்தார்.

அன்டன் பாலசிங்கத்தினை துரோகி ஆக்கவில்லை. ஆனால், மத்திய குழுவினை கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இது மறைமுகமாக துரோகி ஆக்கிய மாதிரித்தான். (இதற்கான காரணம் ராஜீவ் படுகொலை தொடர்பில் பாலசிங்கம் கொடுத்த பேட்டி. இதனை அதிகம் பிரச்சினை ஆக்கியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்)

பால்ராஜூக்கு அவரது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையினை வைத்து அவரை பிரபாகரன் பழி வாங்கினார். இதில் மனம் வெதும்பியே அவரே அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன், தமிழேந்தி, சூசை உள்ளிட்டோர் கொடுத்த ஆக்கினையால் என்றுதான் தெரிவிக்க வேண்டும். நீண்ட காலம் ஆயுதங்களை தங்கு தடை இன்றி வழங்கிக் கொண்டு இருந்த குமரன் பத்மநாதனை நீக்கினார்.

"உவங்கள் தாங்கள் சாமான் எடுப்பம்" என்று சொல்கிறாங்கள். நீ கொஞ்ச நாளைக்கு ஓய்வு எடு என்று தெரிவித்து பிரபாகரன் ஓய்வு எடுக்க சொல்ல, காஸ்ட்ரோ உள்ளிட்ட கும்பல் தாமாகவே கே.பியை துரோகி ஆக்கினார்கள். (இவர் விலகிய பின்னர் கடற்புலிகளின் படகுக்கான இயந்திரங்கள் எதுவுமே வரவில்லை என்று பின்னர் சூசை புலம்பியது தனிக்கதை. இதனால்தான் இறுதி சண்டைகள் எதிலுமே கடற்புலிகளால் சாதிக்க முடியாமல் போய் இருந்தமை குறிப்பிடத்தக்கது)

இப்படி பல சம்பவங்களை உங்களுக்கு அடுக்கிக்கொண்டே போகலாம். என்ன அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே போகும் என்பதும் எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

என்னைப் பொறுத்த வரை தன்னை நம்பி வந்த போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், மக்கள் அனைவரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு உங்களின் பார்வையில் தெரிவிப்பதனால் எங்கோ மறைந்து இருந்து வேடிக்கை பார்க்கும் பிரபாகரனே துரோகி ஆவார். (என்னைப் பொறுத்த வரை அவர் மறைந்துவிட்டார்)

தமிழ்த் தேசியத்தினை குத்தகை எடுத்துக் கொண்டு இங்கே வட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களே! நான் எழுதியதற்கு நீங்கள் என்னதான் எழுதினாலும் நான் மீண்டும் எழுத மாட்டேன். ஏனெனில் ஜவ்வாக இதனை இழுத்துக் கொண்டு திரிவதற்கு நான் தயாராக இல்லை.

உண்மைக்கு நீண்ட நாள் எடுக்கும் என்பார்கள். முன்னர் உரையாடிய போது இருந்ததனை விட பலருக்கு தற்போது தெளிவு ஏற்பட்டு இருப்பதனை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தற்போது எல்லாம் மக்கள் மிக மிக தெளிவாகவே உள்ளனர். இங்கே நின்று வாதிடுபவர்கள் தொடர்பில் நாம் ஏதும் மேற்கொண்டு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கணிப்பீடு.

Edited by nirmalan

  • Replies 125
  • Views 8.5k
  • Created
  • Last Reply

அண்ணை நீங்கள் புலிகள் பற்றி மட்டும் எழுதியுள்ளிர்கள் உந்த துரோகம் அதற்கு முதலே தொடங்கிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்.. புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வர யார் காரணம் என்று கேட்டால்.. உடனே பிரபாகரன் என்று எழுதக் கூடிய ஆள் தான் நீங்க. நீங்க இப்படி எழுதல்லைன்னா தான் ஆச்சரியப்படனும். அதுவும்.. பிரபாகரன்.. ரகசியமா பக்கத்து வீட்டுக்குச் சொன்னவர்.. போய் கேளுங்க என்றும் ஏதோ ஆதாரத்தோடு கதை சொல்வது போல.. சொல்லி முடிக்கிறதில நீங்கள் மட்டுமல்ல.. தமிழர்களே சுழியன்கள் தான்.

மாத்தையா தொடர்பில் தேசிய தலைவர் பகிரங்கமாக ஒளிவீச்சூடு சொன்ன கருத்து..

என் வாய்க்குள் இருந்த பல் வலியை நான் சாதாரணமா எடுத்திட்டன்... கவலையீனமாக இருந்திட்டன் என்று.

இதைவிட அவர் ரகசியத்தை  உங்களுக்கு தெரிஞ்ச நாலு பேரை கூப்பிட்டு வைச்சு சொன்னதுக்கு அந்த அல்லா தான் சாட்சி..!

நிர்மலன் அண்ணேய்.. போய் உந்த புலுங்கலை ஊரில அவிச்சு கொட்டி.. கடையில போட்டு வித்தாலும்.. நாலு காசு பார்க்கலாம். யாழ் களம்.. நல்லா பக்குவப்பட்டிட்டு அண்ணே.

துரோகிகள் பட்டம்.. 50:50 கேட்ட சோல்பரி காலத்தில இருந்து தமிழர்களிடையே கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்குது. சாரி மன்னிக்கனும்.. பண்டாரவன்னியன் காலத்தில இருந்தே கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்குது. அது பட்டமல்ல.. தமிழனின் தலைவிதி.. அவனுக்குள்ளேயே அவனை அழிக்கிறதும்.. பிறந்து வளர்ந்து வாறது..!! அதை துரோகின்னாம.. செல்லமா.. துரோக்ஸ் எண்டனுமோ..??!!! சொல்லிட்டால் போச்சு..! :D:lol::icon_idea:

Edited by nedukkalapoovan

இதை நீங்கள் இணைத்தால் நான் புலி ஆதரவாளர்களை சீண்டியதற்க்கு மன்னிப்பு (மனப்பூர்வமா) கேட்கிறேன்...

தமிழ் பெண்கள் பலரை விபச்சார விடுதிகளில் கொண்டு சென்று சேர்த்த, இலங்கை இராணுவத்திடம் கையளித்த கருணா பெண்களின் கௌரவத்தை என்றும் நாம் பேண வேண்டும் என்று கூறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

இறுதிக்கட்ட போரில் தனது காட்டிக்கொடுப்பு மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு உதவி செய்து பெண் போராளிகள் மற்றும் சாதாரண பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமைக்கு உறுதுணையாக இருந்தவருக்கு இன்று திடீரென பெண் போராளிகள் மீளவும் நினைவுக்கு வந்து விட்டதாம்.

பெண்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் அவர்களது வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கம் எந்த அளவுக்கு ஒருவரை எதுவுமே நடக்காதது போல் காட்டி பேச வைக்கிறது.

கடந்த யுத்த காலத்தில் எம்மக்களை விட்டிட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாம் என்று நாட்டிலேயே இருந்து மக்களை காட்டிக்கொடுத்து அவர்களின் அழிவிற்கு துணைபோன கருணா சொல்கிறார்.

அதே நேரம் இந்த திரியில் சிலர் கருணாவுக்கு எதிராக கருத்து எழுத வேண்டும் என்பதற்காக கண்டபடி எழுதுகிறார்கள். கருணா தமிழ் மக்களுக்கு செய்தது துரோகமாக இருப்பினும் அதற்கு முன்னைய காலங்களில் அவர் ஏதோ போராட்ட திறமையே அற்றவர் என்ற ரீதியில் கருத்து வைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

போராளிகள் பலர் இருப்பினும் தலைமை தாங்க கூடிய திறமை கொண்டிருப்பவர்கள் சிலர் தான். அந்த சிலரில் கருணாவும் ஒருவராக இருந்தார். அவரது தலைமைத்துவத்தில் போராட்ட வெற்றிகளும் கிடைத்திருந்தன.

கருணா பிரியும் போது பல போராளிகளும் சேர்ந்து பிரிந்து சென்றனர். இது விடுதலைப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஓர் பேரிழப்பாக அமைந்தது. ஆனால் கருணா தொடர்ந்தும் புலிகள் அமைப்புக்குள்ளேயே நிலை கொண்டிருந்திருந்தால் கூட "கூட இருந்து குழி பறிக்கும்" வேலைகளை செய்திருக்க கூடிய ஒருவர் தான் அவர் என்பதை அவர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தமையும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டமையும் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்பட்டிருந்தாலும் மக்களுக்காக போராட வந்த நோக்கை மறக்காமல் செயற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இலங்கை அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து இருந்த மரியாதையையும் கெடுத்துக்கொண்டார். அன்று இவருடன் சேர்ந்து புலிகள் அமைப்பை விட்டு வெளியேறியவர்கள் இவர் அரசாங்கத்துடன் இணைந்த பின்னரும் இவரை ஆதரித்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. தமது தவறை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். சிலர் மட்டும் தமது விசுவாசத்துக்காக தொடர்ந்தும் ஆதரிக்கலாம். அவர்களும் மக்களுக்காக போராட வந்ததை மறந்தவர்கள் ஆவார்கள்.

பொறுமையாக இதனை முழுமையாக பாருங்கள்...!!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

வலியவர்கள் வாழ்வார்கள் என்பதை அன்றே உரைத்த தலைவர்...!!

  • கருத்துக்கள உறவுகள்
கருணா பிரியும் போது பல போராளிகளும் சேர்ந்து பிரிந்து சென்றனர். இது விடுதலைப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஓர் பேரிழப்பாக அமைந்தது. ஆனால் கருணா தொடர்ந்தும் புலிகள் அமைப்புக்குள்ளேயே நிலை கொண்டிருந்திருந்தால் கூட "கூட இருந்து குழி பறிக்கும்" வேலைகளை செய்திருக்க கூடிய ஒருவர் தான் அவர் என்பதை அவர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தமையும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டமையும் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

இந்தக் கூற்றுத் தவறு. கருணா பிரியும் போது தன் பலத்தை தான் சாரப் போகிறவர்களுக்கு காட்டுவதற்காக.. போராளிகளை ஆயுத முனையில் வைத்திருந்தவர். அன்றைய காலத்தில்.. கருணாவால் சிறைப்படுத்தப்பட்டிருந்த போராளிகள் பின்னர் ரமேஷின் தலைமையிலான அதிரடி நடவடிக்கை மூலம் மீட்க்கப்பட்ட போது அந்தப் போராளிகளே ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தும் இருந்தனர்.

கருணாவோடு அவருக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்ட 50 - 100 பேர் வரையே சென்றார்கள். மற்றவர்கள் ஆயுத முனையில் பிடித்த வைக்கப்பட்டு.. பின் மீட்கப்பட்டார்கள்..!! சில போராளிகள் கருணாவின் சிறைப்படுத்தலின் போது அவரை எதிர்த்து வீரச்சாவையும் அணைத்துக் கொண்டனர் மற்றும் சில புலனாய்வுப் போராளிகள் கருணாவால் படுகொலையும் செய்யப்பட்டனர்..!! குறிப்பாக பெண் போராளிகளையே கருணா அதிகம் சிறைப்படுத்தி வைத்திருந்தார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்.. புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வர யார் காரணம் என்று கேட்டால்.. உடனே பிரபாகரன் என்று எழுதக் கூடிய ஆள் தான் நீங்க. நீங்க இப்படி எழுதல்லைன்னா தான் ஆச்சரியப்படனும். அதுவும்.. பிரபாகரன்.. ரகசியமா பக்கத்து வீட்டுக்குச் சொன்னவர்.. போய் கேளுங்க என்றும் ஏதோ ஆதாரத்தோடு கதை சொல்வது போல.. சொல்லி முடிக்கிறதில நீங்கள் மட்டுமல்ல.. தமிழர்களே சுழியன்கள் தான்.

மாத்தையா தொடர்பில் தேசிய தலைவர் பகிரங்கமாக ஒளிவீச்சூடு சொன்ன கருத்து..

என் வாய்க்குள் இருந்த பல் வலியை நான் சாதாரணமா எடுத்திட்டன்... கவலையீனமாக இருந்திட்டன் என்று.

இதைவிட அவர் ரகசியத்தை  உங்களுக்கு தெரிஞ்ச நாலு பேரை கூப்பிட்டு வைச்சு சொன்னதுக்கு அந்த அல்லா தான் சாட்சி..!

நிர்மலன் அண்ணேய்.. போய் உந்த புலுங்கலை ஊரில அவிச்சு கொட்டி.. கடையில போட்டு வித்தாலும்.. நாலு காசு பார்க்கலாம். யாழ் களம்.. நல்லா பக்குவப்பட்டிட்டு அண்ணே.

துரோகிகள் பட்டம்.. 50:50 கேட்ட சோல்பரி காலத்தில இருந்து தமிழர்களிடையே கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்குது. சாரி மன்னிக்கனும்.. பண்டாரவன்னியன் காலத்தில இருந்தே கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்குது. அது பட்டமல்ல.. தமிழனின் தலைவிதி.. அவனுக்குள்ளேயே அவனை அழிக்கிறதும்.. பிறந்து வளர்ந்து வாறது..!! அதை துரோகின்னாம.. செல்லமா.. துரோக்ஸ் எண்டனுமோ..??!!! சொல்லிட்டால் போச்சு..! :D:lol::icon_idea:

பதில் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும், எழுத வேண்டியது ஆகின்றது.

பிரபாகரன் தனது தவறினை ஒப்புக் கொண்டு ஒளிவீச்சில்தான் வந்து கூறுவார் என்று எதிர்பார்ப்பது உங்களுக்கே இது ஓவராக இல்லையா? இதனை எல்லாம் விடுதலைப் புலிகளை நன்கு அறிந்தவர்களுக்கே தெரிந்த விடயம்.

சாதாரணமான தவறுகளை செய்கின்ற போது எல்லாம் அது நாங்கள் இல்லை என்று கூறுபவரிடம், மாத்தையா விடயம் தொடர்பில் எல்லாம் பகிரங்கமாக தனது தவறினை ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்ப்பது உங்களுக்கே அதிகமாக தென்படவில்லையா?

பிரபாகரனின் அவசர குடுக்கை காரணமாகத்தான் விடுதலைப் போராட்டம் இந்தளவு நிலைக்கு வந்து இருக்கின்றது.

எத்தனையோ விடயங்களில் எல்லாம் பிரபாகரன் மிகவும் துரித கதியில் முடிவு எடுத்து இருக்கின்றார்.

உதாரணத்துக்கு சந்திரிகாவுடனான போர். இதன் சாட்சியமாக இன்று உயிருடன் இருப்பவர் அடேல் பாலசிங்கம்.

சந்திரிகாவுடனான போரை தடுக்க அன்டன் பாலசிங்கம் எவ்வளவு முயற்சித்தார் என்பதனையாவது என்னை விமர்சிப்பதனை விடுத்து அடேலை தொடர்பு கொண்டு அறிய முயற்சியுங்கள்.

உங்களின் இந்தக் குற்றச்சாட்டின் போலித்தனத்தை தேசிய தலைவரே தன் பகிரங்க உரையால் முறியடிக்கிறார்.. கேளுங்கள்.

என் கருணா பிரிவுக்கு மட்டும் மேசைபோட்டு அறிக்கை விடும் அளவுக்கு கருணாவின் வளச்சி இருந்தா இல்லையா இந்த பாணியை நீங்க ஏன் மத்தையாக்கு செய்யவில்லை ......தலைவரின் தனிபதுகாவலன் புஷ்ப்பன் ஓடும்போது என் செய்யவில்லை .....தளபதி பானு அண்ணையிடம் நின்ற பன்னிரண்டு முக்கிய போராளிகள் சந்திரன் நிர்வாகம் ...பிரதான வாகசாரதி கருணாகரன் ....மணலாறு மாவட்ட மேட்டர் ஒருங்கிணைப்பு தளபதி இசையாளன் ....குட்டிசிறி மேட்டர் பகுதி தளபதி வேதா மாஸ்டர் இவர்தான் முல்லைத்தீவு சண்டையில் ஜீன்ஸ் காலில் மேலாக மடித்தபடி ஏகே ஒருகையில் தூக்கிக்கொண்டு கண்ணால் இரத்தம் வர நடந்துவருவர் படங்களில் விடியோவில் இப்ப ஒரு கண் இல்லை .....வரைபடம் கலையன் இவன் ஆனையிறவில் கொடி ஏற்றிவிட்டு நடந்துவரும் பானு அண்ணைக்கு பக்கத்தில் ஒரு வரைபடம் கொண்டுவருவான் மெல்லிய ஆள்  ....இளநிலை தளபதி ரஞ்சன் ...என்று எல்லோரும் பதின்நான்கு வருடம் மேல் பானு அண்ணையுடனே நின்றவர்கள் ஒரே நாளில் காணாமல் போனார்கள் அல்லது ஓடினார்கள் அப்பொழுதே பனுஅண்ணை மேல சந்தேகம் வந்தது எல்லோருக்கும் எப்படி இவருக்கு தெரியாமல் என்று அது வேறு கதை ......

இது எல்லாம் ஏன் பெரிதா பார்க்கப்படவில்லை என்று இந்த மத்தியகுழு என்று ஒன்று உருவாக்கி தலைவரை கட்டுபடுத்த தொடக்கிச்சினமோ அன்றே தொடங்கிடு உள் பூசல் ஜெயசுக்குறு சண்டை ஒருவருட நிறைவில் எட்டு பேருக்கு கேணல் பதவி வெளிப்படையா அறிவிச்சு அவர்களுக்கு ஒரே மாதிரி வஜிரோ கொடுக்கபட்டது அது முதல் தவறு மிகுதி தளபதிகள் அப்ப நாங்க கேணல் இல்லையா என்னும் எண்ண ஓட்டம் ஈகோ போட்டி நீ என் சொல்லி நான் என்ன கேட்டு என்னும் நிலை வந்தது ....

சுப க்கு வால் பிடிச்சவன் எல்லாம் சண்டையே தெரியாது நல்ல தான் இருந்தார்கள் அவரை சுற்றி இருந்த எல்லோரும் பெட்டை பிரச்சினை சுடபடவேண்டிய ஆக்கள் ஆனால் சுப தன்னுடைய தனிபட்ட செல்வாக்கில் அவர்களை காப்பற்றி வைத்திருந்தார் இதை எல்லாம் வன்னியில் நின்று பார்த்த அம்மான் நன்கு அறிவார் அதனால் அவர் தலைமையிடம் நேரடியா சில கோரிக்கை வைத்தார் அரசியல் துறை சண்டைக்கு போகணும் அவர்களுக்கு படையணி வேணும் என்று அதுக்கு சுப உருவாக்கிய சினிமா படையணிதான் பூநகரி படையணி ..

நாங்க பார்க்கிறம் அண்ணா நீங்க பேசாமல் இருங்க என்று சொல்லி சொல்லி இந்த மதிய குழு கடைசியில் முள்ளிவைய்க்காலில் கொண்டுவந்து விட்டதுதான் மிச்சம் இதை விட தலைவர் நேரடியா பல பிரச்சினையில் முன்னம்போல தலையிட்டு கூப்பிட்டு பேசி இருந்தால் இன்றும் நாம் வாழ்த்திருக்கலாம்  :(

பொறுமையாக இதனை முழுமையாக பாருங்கள்...!!! :icon_idea::)

அண்ணை இது ஏன்? இது அவர்களின் propaganda material... நீங்க சொன்னதுக்கு ஆதாரத்தை கொடுங்கோ என்றா திருப்பியும் brain வாஷிங் ஆ?? இது வந்த நேரம் நானும் உங்களை மாதிரி தான் இருந்தனான்... :)

(இப்போவும்..தலைவர் கொஞ்சம் வேறே மாதிரி முடிச்சிருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு தான்..)

வீரன் என்பதற்கு உண்மையான வரைவிலக்கணம் என்ன என்பதே என் கேள்வி .?
 
என்னைப் பொறுத்தவரை  உண்மை நீதி நியாயம் நேர்மை கொண்ட பண்புகளோடு கொடுமையை எதிர்த்து நிற்பவர்கள் வீரர்கள் .
இந்த உண்மை ,நீதி நியாயம் நேர்மை என்னும் பண்புகளே வீரன் என்னும் பதத்திற்கு அழகூட்டுகின்றன .
 
இந்தப்பண்புகளோடு  சாதித்து  இறுதிவரை வாழ்ந்து மடிந்தவன் வீரன் ...............
 
மேற்கூறிய பண்புகள் எதுவும் இல்லாமல் எந்த சாகச செயலை  செய்தாலும் அவன் வீரன் என்னும் முத்திரையை இழக்கிறான் .......இது எனது கருத்து வீரன் என்னும் பதத்திற்கு உங்க விளக்கங்களையும்  கேட்க தயாராய் இருக்கிறேன் .. :) ......விளாசித் தள்ளுங்கள் . :D ......நிச்சயம் நேரம் கிடைக்கும்போது வாசித்து தெரிந்து கொள்வேன் 
 
[விடை பெறுகிறேன் .இந்த திரியில் இதுதான் எனது இறுதிப்பதிவு ......மீண்டும் இன்னொரு திரியில் சிந்திப்போம் ]
 
  • கருத்துக்கள உறவுகள்

சு.ப. விடயம் இங்கே விவாதிக்கப்படுகின்ற போதுதான் இன்னொன்று நினைவுக்கு வருகின்றது.

விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஒரு ஏட்டின் ஆசிரியர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பொல்லால் அடிக்க கிளம்பியதும் நான் இட்டுக்கட்டி கதை கூறுகின்றேன் என்று இங்கே யாராவது மறுக்க முன் வருவீர்கள் எனில் அவருடன் இருந்துவிட்டு தற்போது ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருக்கும் சு.ப.வின் அடிப்பொடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்போ அதன் தலைவரோ சரியான முறையில் போராட்டத்தினை நடத்தி இருந்தால் இன்று எவ்வளவு விடயங்களை நாம் சாதித்து இருப்போம். இவ்வாறு எல்லாம் நாம் தூற்றி எழுதிக் கொண்டும் இருக்க வேண்டியது இல்லை.

இதனை அவரைப் பின்பற்றுபவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது ஒன்றும் எமக்கு ஆச்சரியமான விடயமாக இல்லை.

தவறே விடவில்லை என்று நீங்கள் அனைவரும் கூறுவதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறுகளில் இருந்து பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்களை குறை கூறி என்ன? நீங்கள் எல்லாம் தனி மனித வழிபாட்டின் மூலம் உள்வாங்கப்பட்டும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களும் ஆவீர்கள்.

ஆகவே, உங்களை எல்லாம் அதில் இருந்து வெளியே எடுப்பதற்கு அந்த பிரபாகரனோ அல்லது கடவுளோ வந்தாலும் முடியாத விடயம் ஆகும்.

Edited by nirmalan

வீரன் என்பதற்கு உண்மையான வரைவிலக்கணம் என்ன என்பதே என் கேள்வி .?
 
என்னைப் பொறுத்தவரை  உண்மை நீதி நியாயம் நேர்மை கொண்ட பண்புகளோடு கொடுமையை எதிர்த்து நிற்பவர்கள் வீரர்கள் .
இந்த உண்மை ,நீதி நியாயம் நேர்மை என்னும் பண்புகளே வீரன் என்னும் பதத்திற்கு அழகூட்டுகின்றன .
 
இந்தப்பண்புகளோடு  சாதித்து  இறுதிவரை வாழ்ந்து மடிந்தவன் வீரன் ...............
 
மேற்கூறிய பண்புகள் எதுவும் இல்லாமல் எந்த சாகச செயலை  செய்தாலும் அவன் வீரன் என்னும் முத்திரையை இழக்கிறான் .......இது எனது கருத்து வீரன் என்னும் பதத்திற்கு உங்க விளக்கங்களையும்  கேட்க தயாராய் இருக்கிறேன் .. :) ......விளாசித் தள்ளுங்கள் . :D ......நிச்சயம் நேரம் கிடைக்கும்போது வாசித்து தெரிந்து கொள்வேன் 
 
[விடை பெறுகிறேன் .இந்த திரியில் இதுதான் எனது இறுதிப்பதிவு ......மீண்டும் இன்னொரு திரியில் சிந்திப்போம் ]

வீரன் என்பவன் ஒருநாளும் அதர்மத்துக்கு தலைவணங்க கூடாது தர்மம் பிழையா போனால் அது பிழை என்று சொல்லும் தையிரியம் இருக்க வேணும் அதுதான் வீரனுக்கு அழகு ஆனால் இங்கு நீங்கள் செய்வது அதர்மம் என்று சொன்னதுக்கு நீ வீரனா கோழ துரோகி என்று சொன்னால் வீரன் என்ன செய்வான் .

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடலில் ஒரு பச்சை கூட உங்களுக்கு பிழையா தெரியுது இதில் உங்களுக்கு பதில் எழுதி நம்ம நேரம் வீண்  :rolleyes:

ஒவ்வெரு நாளும் எத்தினை பேர் செத்தான் என்று எண்ணிக்கொண்டு இருந்தோமே தவிர என்றைகாவது எதுக்காக செத்தார்கள் என்று நாம் எண்ணி இருப்பமா விடுங்கோ  :(

இந்த திரியில் நீங்கள் எழுதியவற்றை வாசியுங்கள்

நான் எழுதியவற்றையும் வாசியுங்கள்

ஏன் யாழில் இதுவரை நான் எழுதிய  எந்த கருத்தையும் வாசியுங்கள்

அவர்களின் உயிரின் மதிப்பை

அவர்களின் தியாகத்தை

அவர்களின் கனவை மதிப்பது யார்?

அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு செத்தார்கள் என மிதிப்பது யார் என்று புரியும்

ஒருபோதும் அவர்களை கேவலப்படுத்தும் ஒரு வரிகளைத்தானும் எழுதியதில்லை

எழுதமாட்டேன்................

யாழ் கருத்தாளர்கள் சாட்சி.....

Edited by விசுகு

எங்களுக்கு தேசிய என்னும் ஒன்றுக்குள் மறைந்து வார்த்தை ஜாலம் செய்ய தெரியாது அது எனக்கு தேவையும் இல்லை என்னை அதி உச்ச விடுதலை விசுவாசியா காட்டிக்கொள்ள தலைவர் கூறுவது போல மாவீரர் மட்டுமே உன்னத வீரர்கள் மற்றவர்கள் நாளை விலகி போகலாம் மாறலாம் ஆகவே நிஜங்களை பேச விசுவாசம் தேசியம் என்னும் ஒளிவு சொல் எனக்கு தேவைப்படுவது இல்லை ...

நான் ஒரு சாதாரண மனிதா கருத்து எழுதவே விரும்புகிறேன் என் ஈழ விசுவாசம் நெஞ்சு பிளந்து காட்ட நான் ஒன்றும் அனுமான் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இது ஏன்? இது அவர்களின் propaganda material... நீங்க சொன்னதுக்கு ஆதாரத்தை கொடுங்கோ என்றா திருப்பியும் brain வாஷிங் ஆ?? இது வந்த நேரம் நானும் உங்களை மாதிரி தான் இருந்தனான்... :)

(இப்போவும்..தலைவர் கொஞ்சம் வேறே மாதிரி முடிச்சிருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு தான்..)

தேசிய தலைவர் தனது வரலாற்றை பதிவு செய்த செவ்வி. பிரச்சாரக் காணொளி அல்ல..! முதலில் இதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வாருங்கள்.

இதே காணொளியில் அல்லது இதன் பாகம் 2 இல்.. மாத்தையா தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய தலைவர் சுருங்க பதில் அளித்திருந்தார். அதனை ஒரு மாவீரர் தின உரையிலும் குறிப்பிட்டதாக ஞாபகம்..! நீங்கள் தான் சிலதை தேடிப் பெற வேண்டி இருக்கும். எல்லாவற்றையும் நாமே சமர்ப்பிக்க முடியாது. காரணம் அதற்கு நிறைய நேரம் செலவிட வேண்டி இருக்கும்.  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தேசிய என்னும் ஒன்றுக்குள் மறைந்து வார்த்தை ஜாலம் செய்ய தெரியாது அது எனக்கு தேவையும் இல்லை என்னை அதி உச்ச விடுதலை விசுவாசியா காட்டிக்கொள்ள தலைவர் கூறுவது போல மாவீரர் மட்டுமே உன்னத வீரர்கள் மற்றவர்கள் நாளை விலகி போகலாம் மாறலாம் ஆகவே நிஜங்களை பேச விசுவாசம் தேசியம் என்னும் ஒளிவு சொல் எனக்கு தேவைப்படுவது இல்லை ...

நான் ஒரு சாதாரண மனிதா கருத்து எழுதவே விரும்புகிறேன் என் ஈழ விசுவாசம் நெஞ்சு பிளந்து காட்ட நான் ஒன்றும் அனுமான் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

இதற்குள் தேசியம் எவ்வாறு வந்தது??

மாவீரரை கேவலப்படுத்துவதில்லை என்பது எவ்வாறு ஏன் இவ்வாறு இழிவாகப்பார்க்கப்படுகிறது

பார்வையில் பிழை இருக்கும் போது பேசிப்பலனில்லை

நேரம் பொன்னானது

நன்றி  வணக்கம் 

இதுதான் உங்கள் வேலையே அண்ணே என்ன எழுதினாலும் அதில் வந்து தேசியம் ...இழிவு ..மாவீரர் என்று பிழை பிடிப்பது உங்களுக்கே தெரியும் நிங்கள் எந்த திரியில் கருத்தை மாவீரர் ....தேசியம் நோக்கி திருப்பாமல் விட்டியல் எங்க போனாலும் நியாய திராசை தூக்கி கொண்டுவாறது இது பிழை இது தேசியத்தை பாதிக்கும் இது மாவீரருக்கு செய்யும் துரோகம் அப்படி இப்படி என்ன்று அதாவது ஒன்று எழுதி திரியை திருப்புறது உங்க முழுநேர தேசிய பற்று கொண்ட வேலை நீங்கள் தன் உச்ச விசுவாசிகள் என்று இங்கு அனைவருக்கும் தெரியும் பின்னர் அதுக்கு அதை நெடிக்கு ஒருமுறை நிருபித்துக்கொண்டு இருப்பான் ....

நான் கருணாவின் சரிபிழை கதைச்சம் அதில் வந்து நீங்கள்தான் மாவீரர் தேசியம் பற்றி பேசியது மீண்டும் திரியை சரி பார்க்கவும் ...

நான் கொஞ்சமாவது வன்னி தெரிந்தவர்களுடன் கருத்தாட விரும்புகிறேன் அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

என் கருணா பிரிவுக்கு மட்டும் மேசைபோட்டு அறிக்கை விடும் அளவுக்கு கருணாவின் வளச்சி இருந்தா இல்லையா இந்த பாணியை நீங்க ஏன் மத்தையாக்கு செய்யவில்லை ......தலைவரின் தனிபதுகாவலன் புஷ்ப்பன் ஓடும்போது என் செய்யவில்லை .....தளபதி பானு அண்ணையிடம் நின்ற பன்னிரண்டு முக்கிய போராளிகள் சந்திரன் நிர்வாகம் ...பிரதான வாகசாரதி கருணாகரன் ....மணலாறு மாவட்ட மேட்டர் ஒருங்கிணைப்பு தளபதி இசையாளன் ....குட்டிசிறி மேட்டர் பகுதி தளபதி வேதா மாஸ்டர் இவர்தான் முல்லைத்தீவு சண்டையில் ஜீன்ஸ் காலில் மேலாக மடித்தபடி ஏகே ஒருகையில் தூக்கிக்கொண்டு கண்ணால் இரத்தம் வர நடந்துவருவர் படங்களில் விடியோவில் இப்ப ஒரு கண் இல்லை .....வரைபடம் கலையன் இவன் ஆனையிறவில் கொடி ஏற்றிவிட்டு நடந்துவரும் பானு அண்ணைக்கு பக்கத்தில் ஒரு வரைபடம் கொண்டுவருவான் மெல்லிய ஆள்  ....இளநிலை தளபதி ரஞ்சன் ...என்று எல்லோரும் பதின்நான்கு வருடம் மேல் பானு அண்ணையுடனே நின்றவர்கள் ஒரே நாளில் காணாமல் போனார்கள் அல்லது ஓடினார்கள் அப்பொழுதே பனுஅண்ணை மேல சந்தேகம் வந்தது எல்லோருக்கும் எப்படி இவருக்கு தெரியாமல் என்று அது வேறு கதை ......

இது எல்லாம் ஏன் பெரிதா பார்க்கப்படவில்லை என்று இந்த மத்தியகுழு என்று ஒன்று உருவாக்கி தலைவரை கட்டுபடுத்த தொடக்கிச்சினமோ அன்றே தொடங்கிடு உள் பூசல் ஜெயசுக்குறு சண்டை ஒருவருட நிறைவில் எட்டு பேருக்கு கேணல் பதவி வெளிப்படையா அறிவிச்சு அவர்களுக்கு ஒரே மாதிரி வஜிரோ கொடுக்கபட்டது அது முதல் தவறு மிகுதி தளபதிகள் அப்ப நாங்க கேணல் இல்லையா என்னும் எண்ண ஓட்டம் ஈகோ போட்டி நீ என் சொல்லி நான் என்ன கேட்டு என்னும் நிலை வந்தது ....

சுப க்கு வால் பிடிச்சவன் எல்லாம் சண்டையே தெரியாது நல்ல தான் இருந்தார்கள் அவரை சுற்றி இருந்த எல்லோரும் பெட்டை பிரச்சினை சுடபடவேண்டிய ஆக்கள் ஆனால் சுப தன்னுடைய தனிபட்ட செல்வாக்கில் அவர்களை காப்பற்றி வைத்திருந்தார் இதை எல்லாம் வன்னியில் நின்று பார்த்த அம்மான் நன்கு அறிவார் அதனால் அவர் தலைமையிடம் நேரடியா சில கோரிக்கை வைத்தார் அரசியல் துறை சண்டைக்கு போகணும் அவர்களுக்கு படையணி வேணும் என்று அதுக்கு சுப உருவாக்கிய சினிமா படையணிதான் பூநகரி படையணி ..

நாங்க பார்க்கிறம் அண்ணா நீங்க பேசாமல் இருங்க என்று சொல்லி சொல்லி இந்த மதிய குழு கடைசியில் முள்ளிவைய்க்காலில் கொண்டுவந்து விட்டதுதான் மிச்சம் இதை விட தலைவர் நேரடியா பல பிரச்சினையில் முன்னம்போல தலையிட்டு கூப்பிட்டு பேசி இருந்தால் இன்றும் நாம் வாழ்த்திருக்கலாம்  :(

எல்லா அமைப்புகளுக்குள்ளும் அரசியல் கட்சிகளுக்குள்ளும்.. சின்னச் சின்ன முரண்பாடுகள்.. தாவல்கள் இருக்கவே செய்கின்றன. அப்படி இல்லாத ஒரு அமைப்பு உலகில் இல்லை.

மேலும் கருணா பிரச்சனை பிரதேச மயப்படுத்தப்பட்டதால் தான் அதற்கு இயக்கம் கூடிய முக்கியத்துவம் அளித்ததே அன்றி.. கருணாவை முக்கியப்படுத்தி அல்ல..!!

மேலும்.. தேசிய தலைவர் மத்திய குழுவால் உறைய வைக்கப்பட்டது போன்று உள்ளது உங்கள் கருத்து. அது மிகவும் தவறானது. சமாதான காலத்தில்.. சாமாதான நடவடிக்கைகள் உள்ளிடங்க பலவற்றை தேசிய தலைவரே முக்கியமாக வழிநடத்தியவர். பேச்சுக்குழுவை தீர்மானிப்பதில் இருந்து.

தேசிய தலைவர் இயக்கத்தின் வளர்ச்சி கருதி பொறுப்புக்களை பகிர்ந்தளித்திருந்தாரே தவிர.. தாரை வார்க்கவில்லை.

தேசிய தலைவரின் அணுகுமுறைகள் தெரியாத பாப்பாக்களிடம் உங்கட உந்த உதார் எடுபடலாம். அல்லது புலி வாந்தி எடுப்போருக்கு இது தேனா இனிக்கலாம். ஆனால் நடைமுறை யதார்த்தம் என்பது அங்கு வேறாக இருந்தது.

தேசிய தலைவரிடம் பொறுப்பாளர்கள்.. தொடர்பில் முறையிடக் கூடிய பொறிமுறை கூட இருந்தது.

உதாரணம்.. ஒரு தடவை பொறுப்பாளர் ஒருவர் இயக்கத்தில் இணைய வந்த ஒரு அண்ணாவை விடுவிக்க மறுத்துவிட்டார். அவர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு தெரிவாகி இருந்தவர். குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு. பின்னர் பெற்றோர் தேசிய தலைவருக்கு இயக்கத்தின் பிறிதொரு பிரிவுனூடு தகவல் கொடுத்து.. தேசிய தலைவரின் வழிகாட்டலில் அந்த அண்ணா பல்கலைக்கழகம் போக விடுவிக்கப்பட்டார்.

இயக்கத்தில் முரண்பாடுகள்.. கருத்து பேதங்கள் இருந்தால்.. அதனை தேசிய தலைவரிடம் சமர்ப்பிக்க பல வழிகள் இருந்தன. நீங்கள்.. அதைச் செய்யாமல்.. இன்று வந்து.. இதால் தான் எல்லாம் என்று படம் காட்டுவது.. முழுச் சந்தர்ப்பவாதம் மட்டுமன்றி.. புறங்கூறிகளுக்குரிய நடவடிக்கையாகும். இவற்றில் உண்மை இருந்திருந்தால்.. அப்பவே இயக்கத்திடம் முறையிட்டிருக்கலாமே..??!

இதில் இருந்து சிலர் பாடம் வேற படிக்கிறார்களாம். பாடம் படிக்க எத்தனையோ தோல்வியுற்ற அமைப்புக்கள் ஈழத்தில் உள்ளன. அங்கு படிக்கலாமே..??!

புலிகள் அமைப்பு.. பரந்த ஒன்றாகிய போது.. பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்தன. தேசிய தலைவர் அவற்றை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமலும் இருக்கவில்லை. குறிப்பாக மாத்தையாவின் நடவடிக்கைக்குப் பின்.. இயக்கம் மறுசீரமைக்கப்பட்ட போது.. தலைவர் நிறைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தினார்.

கருணாவின் குளறுபடிகளைக் கூட தேசிய தலைவர் அறிந்த பின் தான் நடவடிக்கைக்கே உத்தரவிடப்பட்டது. கருணா குழு கிழக்கில் இருந்து விரட்டப்பட்டு அவர் சிறைப்படுத்தி இருந்த போராளிகள் விடுவிக்கப்பட்டு.. சுயமாக விரும்பி.. மீளிணைந்தவர்கள் போக.. மற்றவர்கள் வீடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்..!

ஆக.. தேசிய தலைவர் இல்லாமல்.. இயக்கம்.. சீர்குலைந்திருந்த நிலையில் தான் முள்ளிவாய்க்கால்.. தோல்வி ஏற்பட்டது என்ற படம் காட்டல் இங்கு அவசியமில்லை. முள்ளிவாய்க்கால் தோல்வி அல்லது பின்னடைவுக்கு காரணம்.. இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்தே வந்துள்ளது. மேலே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் கூட தலைவர் அதற்கான காரணத்தை சொல்லியும் உள்ளார். ஐக்கிய இலங்கையை விட்டு பிராந்திய நாடுகள்.. நகராத வரை.. எமது போராட்டம் மீதான பல்வேறு அழுத்தங்கள் இருந்திருக்கவே செய்யும். இருக்கவே செய்யும்..! :icon_idea::)

மேலும்.. தேசிய தலைவர்.. தோல்வியை.. சாவை எதிர்கொள்ளத் தயங்கி போராட்டம் நடத்தவும் இல்லை. அந்த வகையில் செயற்பட்டதால் தான் அவரால்.. 35 வருடங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்த முடிந்தது. உங்களுக்கு அசைலம் கிடைக்க வழியும் கிடைத்தது..!!! :icon_idea: :icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் பலரை விபச்சார விடுதிகளில் கொண்டு சென்று சேர்த்த, இலங்கை இராணுவத்திடம் கையளித்த கருணா பெண்களின் கௌரவத்தை என்றும் நாம் பேண வேண்டும் என்று கூறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

இறுதிக்கட்ட போரில் தனது காட்டிக்கொடுப்பு மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு உதவி செய்து பெண் போராளிகள் மற்றும் சாதாரண பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமைக்கு உறுதுணையாக இருந்தவருக்கு இன்று திடீரென பெண் போராளிகள் மீளவும் நினைவுக்கு வந்து விட்டதாம்.

பெண்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் அவர்களது வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கம் எந்த அளவுக்கு ஒருவரை எதுவுமே நடக்காதது போல் காட்டி பேச வைக்கிறது.

கடந்த யுத்த காலத்தில் எம்மக்களை விட்டிட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களாம் என்று நாட்டிலேயே இருந்து மக்களை காட்டிக்கொடுத்து அவர்களின் அழிவிற்கு துணைபோன கருணா சொல்கிறார்.

அதே நேரம் இந்த திரியில் சிலர் கருணாவுக்கு எதிராக கருத்து எழுத வேண்டும் என்பதற்காக கண்டபடி எழுதுகிறார்கள். கருணா தமிழ் மக்களுக்கு செய்தது துரோகமாக இருப்பினும் அதற்கு முன்னைய காலங்களில் அவர் ஏதோ போராட்ட திறமையே அற்றவர் என்ற ரீதியில் கருத்து வைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

போராளிகள் பலர் இருப்பினும் தலைமை தாங்க கூடிய திறமை கொண்டிருப்பவர்கள் சிலர் தான். அந்த சிலரில் கருணாவும் ஒருவராக இருந்தார். அவரது தலைமைத்துவத்தில் போராட்ட வெற்றிகளும் கிடைத்திருந்தன.

கருணா பிரியும் போது பல போராளிகளும் சேர்ந்து பிரிந்து சென்றனர். இது விடுதலைப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஓர் பேரிழப்பாக அமைந்தது. ஆனால் கருணா தொடர்ந்தும் புலிகள் அமைப்புக்குள்ளேயே நிலை கொண்டிருந்திருந்தால் கூட "கூட இருந்து குழி பறிக்கும்" வேலைகளை செய்திருக்க கூடிய ஒருவர் தான் அவர் என்பதை அவர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தமையும் காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டமையும் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்பட்டிருந்தாலும் மக்களுக்காக போராட வந்த நோக்கை மறக்காமல் செயற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இலங்கை அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து இருந்த மரியாதையையும் கெடுத்துக்கொண்டார். அன்று இவருடன் சேர்ந்து புலிகள் அமைப்பை விட்டு வெளியேறியவர்கள் இவர் அரசாங்கத்துடன் இணைந்த பின்னரும் இவரை ஆதரித்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. தமது தவறை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். சிலர் மட்டும் தமது விசுவாசத்துக்காக தொடர்ந்தும் ஆதரிக்கலாம். அவர்களும் மக்களுக்காக போராட வந்ததை மறந்தவர்கள் ஆவார்கள்.

துளசி உங்கள் கடைசி பந்திக்கான பதில்; தனியாக பிரிந்த கருணா அரசுக்கு எதிராகப் போராட புலிகள் முதலில் விட்டு இருப்பார்களா?...யாதார்த்தை உணருங்கள்.கருணா பிரியப் போகிறேன் முதலில் அறிக்கை விட்டவுடன் அவருக்கு எதிராகவும்,மட்டக்களப்பில் இருந்த போராளிகளுக்கு எதிராகவும் முதலில் யுத்தத்தை தொடங்கியது யார்?...ஏன் புலிகளால் கொஞ்சக் காலம் பொறுத்திருக்க முடியாமல் போனது?...அவர்களோடு சகோதர வேண்டாம் என்பதால் தான் கருணா அரசோடு சேர்ந்தார்.வா வந்து மண்டையில் போடு என்று தலையைக் கொடுக்க கருணா ஒன்றும் தியாகியும் இல்லை.தலையைக் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் கருணா,புலிகளோடு சண்டை பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?...சிங்கள அரசு யாருக்கு சப்போட் பண்ணி இருக்கும்?...தவிர இரண்டாக பிரிந்து வடக்கு,கிழக்கு என்று யுத்தமே நடந்திருக்கும்...இது எல்லாம் நடக்காமல் அவர் தன்னுடைய உயிரை காப்பாற்ற தப்பிப் போனார் அதில் என்ன தப்பு?...உண்மையிலேயே அவர் மிகுந்த ஆளுமைமிக்கவர்.ஆளுமைமிக்க பலரை புலிகள் கோட்டை விட்டு இருக்கிறார்கள்.அதில் கருணாவும் ஒருவர்....ஒரு வேளை கருணா புலிகள் சொல்வதை கேட்டுக் கொண்டு பேசாமல் வன்னியிலே இருந்திருந்தாலும் மு.வாய்க்கால் யுத்தம் நடந்திருக்கும்.ஆனால் யுத்தம் இன்னும் கொடூரமாக நடந்திருக்கும்.சிங்கள் அரசிற்கும் யுத்தம் கடுமையாக இருந்திருக்கும்.இன்னும் 3,4 அதிகமானோர் உயிர் இழந்திருப்பார்கள்.கருணாவின் பெறுமதி இங்கிருப்பவனுக்கு தெரியாது ஆனால் சிங்களவனுக்கும்,இந்தியனுக்கும் தெரியும்.கருணாவைப் பிரித்ததே அவர்களுக்கு கிடைத்த பெரும் முதல் வெற்றி

எல்லா அமைப்புகளுக்குள்ளும் அரசியல் கட்சிகளுக்குள்ளும்.. சின்னச் சின்ன முரண்பாடுகள்.. தாவல்கள் இருக்கவே செய்கின்றன. அப்படி இல்லாத ஒரு அமைப்பு உலகில் இல்லை.

மேலும் கருணா பிரச்சனை பிரதேச மயப்படுத்தப்பட்டதால் தான் அதற்கு இயக்கம் கூடிய முக்கியத்துவம் அளித்ததே அன்றி.. கருணாவை முக்கியப்படுத்தி அல்ல..!!

மேலும்.. தேசிய தலைவர் மத்திய குழுவால் உறைய வைக்கப்பட்டது போன்று உள்ளது உங்கள் கருத்து. அது மிகவும் தவறானது. சமாதான காலத்தில்.. சாமாதான நடவடிக்கைகள் உள்ளிடங்க பலவற்றை தேசிய தலைவரே முக்கியமாக வழிநடத்தியவர். பேச்சுக்குழுவை தீர்மானிப்பதில் இருந்து.

தேசிய தலைவர் இயக்கத்தின் வளர்ச்சி கருதி பொறுப்புக்களை பகிர்ந்தளித்திருந்தாரே தவிர.. தாரை வார்க்கவில்லை.

தேசிய தலைவரின் அணுகுமுறைகள் தெரியாத பாப்பாக்களிடம் உங்கட உந்த உதார் எடுபடலாம். அல்லது புலி வாந்தி எடுப்போருக்கு இது தேனா இனிக்கலாம். ஆனால் நடைமுறை யதார்த்தம் என்பது அங்கு வேறாக இருந்தது.

தேசிய தலைவரிடம் பொறுப்பாளர்கள்.. தொடர்பில் முறையிடக் கூடிய பொறிமுறை கூட இருந்தது.

உதாரணம்.. ஒரு தடவை பொறுப்பாளர் ஒருவர் இயக்கத்தில் இணைய வந்த ஒரு அண்ணாவை விடுவிக்க மறுத்துவிட்டார். அவர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு தெரிவாகி இருந்தவர். குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு. பின்னர் பெற்றோர் தேசிய தலைவருக்கு இயக்கத்தின் பிறிதொரு பிரிவுனூடு தகவல் கொடுத்து.. தேசிய தலைவரின் வழிகாட்டலில் அந்த அண்ணா பல்கலைக்கழகம் போக விடுவிக்கப்பட்டார்.

இயக்கத்தில் முரண்பாடுகள்.. கருத்து பேதங்கள் இருந்தால்.. அதனை தேசிய தலைவரிடம் சமர்ப்பிக்க பல வழிகள் இருந்தன. நீங்கள்.. அதைச் செய்யாமல்.. இன்று வந்து.. இதால் தான் எல்லாம் என்று படம் காட்டுவது.. முழுச் சந்தர்ப்பவாதம் மட்டுமன்றி.. புறங்கூறிகளுக்குரிய நடவடிக்கையாகும். இவற்றில் உண்மை இருந்திருந்தால்.. அப்பவே இயக்கத்திடம் முறையிட்டிருக்கலாமே..??!

இதில் இருந்து சிலர் பாடம் வேற படிக்கிறார்களாம். பாடம் படிக்க எத்தனையோ தோல்வியுற்ற அமைப்புக்கள் ஈழத்தில் உள்ளன. அங்கு படிக்கலாமே..??!

புலிகள் அமைப்பு.. பரந்த ஒன்றாகிய போது.. பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்தன. தேசிய தலைவர் அவற்றை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமலும் இருக்கவில்லை. குறிப்பாக மாத்தையாவின் நடவடிக்கைக்குப் பின்.. இயக்கம் மறுசீரமைக்கப்பட்ட போது.. தலைவர் நிறைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தினார்.

கருணாவின் குளறுபடிகளைக் கூட தேசிய தலைவர் அறிந்த பின் தான் நடவடிக்கைக்கே உத்தரவிடப்பட்டது. கருணா குழு கிழக்கில் இருந்து விரட்டப்பட்டு அவர் சிறைப்படுத்தி இருந்த போராளிகள் விடுவிக்கப்பட்டு.. சுயமாக விரும்பி.. மீளிணைந்தவர்கள் போக.. மற்றவர்கள் வீடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்..!

ஆக.. தேசிய தலைவர் இல்லாமல்.. இயக்கம்.. சீர்குலைந்திருந்த நிலையில் தான் முள்ளிவாய்க்கால்.. தோல்வி ஏற்பட்டது என்ற படம் காட்டல் இங்கு அவசியமில்லை. முள்ளிவாய்க்கால் தோல்வி அல்லது பின்னடைவுக்கு காரணம்.. இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்தே வந்துள்ளது. மேலே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் கூட தலைவர் அதற்கான காரணத்தை சொல்லியும் உள்ளார். ஐக்கிய இலங்கையை விட்டு பிராந்திய நாடுகள்.. நகராத வரை.. எமது போராட்டம் மீதான பல்வேறு அழுத்தங்கள் இருந்திருக்கவே செய்யும். இருக்கவே செய்யும்..! :icon_idea::)

ஆனால் புதுவை இரத்தினதுரை மட்டும் தன் மகள் இயக்கத்துக்கு போனதுக்கு நேர மேட்டார் சைக்கிளில் சென்று பயிற்ச்சி முகாமில் இருந்து ஏற்றிக்கொண்டு வரலாம் அது தலமைக்கு தெரியாது அப்படியா ..

ஆனால் கருணா தன் தம்பியை போராட்டத்தில் வைத்திருந்தார் அதுபோக  தனது சகோதரி பிள்ளையை கட்டாயம் ஆள் சேர்ப்பில் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்னும் நிலையில் இயக்கத்தில் இணைத்தார் ..

கிட்டதட்ட பதினன்ந்து வருடம் நிங்கள் மட்டக்கிளப்பு பக்கமே போகாமல் சமாதான காலத்தில் அங்கின போய் சீனை போட்டு சினிமா காட்டி எப்படி பணம் சேர்த்தார் என்ன செய்தார் எப்படி இயக்கத்துக்கு ஆள் எடுத்தார் என்று தகவல் சேகரிக்க முடிந்தது இதை என் நீங்கள் முன்னர் செய்யவில்லை ஓ அப்ப போய் நிக்க இடம் இல்லையா அல்லது மீனகம் தேனகம் கட்டபட்வில்லையா ..

ஒரு இறுக்கமான நிர்வாகம் செய்ய கூடிய பலர் ஒதுக்கி வைத்ததும் விலக்கி வைத்ததும் யாரு தளபதி பால்ராஜ் ...செர்ணம் ....குமரன் ...குட்டி ...கபிலம்மான் ....பாலவாசன் ...கேடி ..ரமேஸ் ..சசிக்குமார் ...மூர்த்தி ...இளம்பருதி ..என்று மிக பெரிய பட்டியல் இருக்கு இவர்கள் எல்லாம் புலி பாசையில் காற்று கழட்டப்பட்டவர்கள் .

தனி உங்களை போல ஜால்ரா பார்ட்டிகள் மட்டும் வன்னியை வலம் வந்தது என்பது கசப்பான உண்மை  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உங்கள் வேலையே அண்ணே என்ன எழுதினாலும் அதில் வந்து தேசியம் ...இழிவு ..மாவீரர் என்று பிழை பிடிப்பது உங்களுக்கே தெரியும் நிங்கள் எந்த திரியில் கருத்தை மாவீரர் ....தேசியம் நோக்கி திருப்பாமல் விட்டியல் எங்க போனாலும் நியாய திராசை தூக்கி கொண்டுவாறது இது பிழை இது தேசியத்தை பாதிக்கும் இது மாவீரருக்கு செய்யும் துரோகம் அப்படி இப்படி என்ன்று அதாவது ஒன்று எழுதி திரியை0 திருப்புறது உங்க முழுநேர தேசிய பற்று கொண்ட வேலை நீங்கள் தன் உச்ச விசுவாசிகள் என்று இங்கு அனைவருக்கும் தெரியும் பின்னர் அதுக்கு அதை நெடிக்கு ஒருமுறை நிருபித்துக்கொண்டு இருப்பான் ....

நான் கருணாவின் சரிபிழை கதைச்சம் அதில் வந்து நீங்கள்தான் மாவீரர் தேசியம் பற்றி பேசியது மீண்டும் திரியை சரி பார்க்கவும் ...

நான் கொஞ்சமாவது வன்னி தெரிந்தவர்களுடன் கருத்தாட விரும்புகிறேன் அண்ணே .

நீங்கள்

உங்களை  வைத்து மற்றவர்களை  மதிப்பிடுகிறீர்கள்

முகநூலில் போராளி  என்று கதை விட்டு

வெறுத்து இங்கு  வந்ததாக எழுதியிருந்தீர்கள்

நாங்கள் அப்படியல்ல

சாகும்வரை அவ்வாறு செய்யோம்......

மேலும்  இதை நாம் தொடர்ந்து செய்வோம்

எங்க போனாலும் நியாய திராசை தூக்கி கொண்டுவாறது இது பிழை இது தேசியத்தை பாதிக்கும் இது மாவீரருக்கு செய்யும் துரோகம் 

அவர்களை  எவரும்   தூற்றவோ

அவமதிக்கவோ அனுமதியோம்

நான் அப்படி இல்லை மற்றவரை குறை பிடிப்பது இல்லை ஏனெனில் என் வாழ்க்கை இன்னும் முடியவில்லை ..இந்த வரி  நான் எங்கையோ படித்து அதன் பின்னர் என் இயல்பும் இப்படித்தான் ஐரோப்பா வந்தபோது கருனாம்மனும் இவ்வாறே உங்களை போல பேசினார் அதுக்கு பலத்த கைதட்டு கிடைத்தது பின்னர் நடந்தது வேறு ..

நாங்கள் அப்படி இல்லை என்று சொல்வது எனக்கு அதையே நினைவு படுத்துது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.