Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழை வந்தபோது படுக்கசென்றுவிட்டேன். தென் ஆபிரிக்கா துடுப்பாடும்போது ஆரம்பத்தில் சங்கடப்பட்டார்கள். ஆம்லா, டீ கொக் கால் இறுதிப்போட்டியில் விளையாடிய ஶ்ரீ லங்காவின் ஜோடி டில்சான், கெளசலை நினைவுபடுத்தினார்கள். பந்தினை கட்டுப்படுத்தி அவர்களால் விளையாட முடியவில்லை. ஆரம்பஜோடி சொளதி, போல்ட்டின் பந்துவீச்சுக்கு திணறுவதை பார்த்தபோதே தென் ஆபிரிக்கா தோற்கப்போகின்றதோ என்று எண்ணத்தோன்றிவிட்டது.

 

மழை குழப்பியிறாவிட்டால் தென் ஆபிரிக்கா வென்று இருக்கும் என்றும் சொல்லமுடியாது.

 

நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து தனது மேலாதிக்கத்தை காட்டியது.

 

இறுதிப்போட்டி நடைபெறுவது அவுஸில். இந்தியாவுக்கு பதிலாக அவுஸ் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டால் நியூசிலாந்து தோற்கும் என்றே நினைக்கின்றேன். மாறாக, இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டால் நியூசிலாந்து கோப்பையை வெல்லலாம்.

 

அவுஸ்திரேலியா, இந்தியா ஏற்கனவே உலககோப்பையை வென்றுள்ளன. இம்முறை கோப்பை நியூசிலாந்திற்கு சென்றால் நல்லது. இம்முறை நியூசிலாந்திற்கு உலககோப்பை கிடைக்காவிட்டால் இன்னும் பலப்பல வருடங்கள் செல்லலாம் மீண்டும் ஒரு தடவை இவ்வாறு சிறந்த உலககோப்பை அணியாக திகழ்வதற்கு.

 

அடுத்த உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. நிச்சயம் அடுத்த தடவை தென் ஆபிரிக்கா அணி உலககோப்பையின் இறுதி ஆட்டமவரை செல்லும் என்று எதிர்பார்ப்போம். ஆனால், அப்போது 35 வயதாகும் ஆம்லா, டீ வில்லர்ஸ் அணியில் விளையாடுவார்களா என்பது சந்தேகமே.

 

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அரையிறுதியில் நாளை ஆஸி.யுடன் மோதல்: இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டதா சிட்னி பிட்ச்?

 

சிட்னி: நாளை நடைபெறும் உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, மெல்போர்னில் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடும். அரையிறுதியில் நாளை ஆஸி.யுடன் மோதல்: இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டதா சிட்னி பிட்ச்? போட்டி நடக்கவிருக்கும் சிட்னி ஆடுகளம் சுழலுக்கு சாதக மானது. மற்ற ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.

 

ஆனால், சிட்னி சுழலுக்கு ஒத்துழைக்கும். இந்த மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்படி மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளர் டாம் பார்க்கருக்கு வெளிப்படையாகவே கோரி யிருந்தார். "டெஸ்ட் போட்டிகளின்போது பார்க்கர் எங்களுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கவில்லை. அரையிறுதிப் போட்டியிலாவது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அமைக்க வேண்டும்" என அவர் கூறியிருக்கிறார். மைக்கேல் கிளார்க்கும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் கோரிக்கையை முன் வைத்தாராம்.

 

ஆனால், டாம் பார்க்கர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வது உள்ளூர அவர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. அதற்காகவே மைதானத்தின் தன்மையை மாற்றும்படி கேப்டன் உட்பட பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நிலையில் சுழற்பந்த்து வீச்சில் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம் உள்ளது என கூறபட்டதால் ஐ.சி.சி யால் அனுப்பபட்ட அதிகாரபூர்வ ஆடுகள இன்ஸ்பெக்டர் ஆடுகளத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-s-atkinson-inspects-sydney-pitch-223291.html

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை அரையிறுதிகளில் தோற்காத ஆஸ்திரேலியா: சில புள்ளி விவரங்கள்
 

 

நாளை சிட்னியில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் பற்றி பலவிதமான கணிப்புகள் உள்ள நிலையில் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கமே அதிகம் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிட்னியில் மட்டும் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 12-1 ஆகும்.

 

2008ஆம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடர் முதல் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் ஒருநாள் சதத்தை எடுக்க இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அப்போதும் தோனிதான் கேப்டன். இதுதான் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் இந்தியா பெற்ற ஒரே வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 40 போட்டிகளில் 10-ல் மட்டுமே வென்றுள்ளது. 30 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2012-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.

 

இதுவரை 6 உலகக்கோப்பை அரையிறுதிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அதில் தோல்வி அடைந்ததில்லை. 1999 உலகக்கோப்பை அரையிறுதி ‘டை’ ஆனது.

இந்தியா தனது 5 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் 3-ல் வென்றுள்ளது.

 

சிட்னியில் நடைபெற்ற கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. 2 தோல்விகளுமே இலங்கைக்கு எதிராக பெற்றதாகும்.

2012ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா 253 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகத் தடுத்து வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணிக்கு சாதகமான விஷயம் என்னவெனில் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பேட்டிங் பவர் பிளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பதே.

சுரேஷ் ரெய்னாவை மிட்செல் ஜான்சன் ஒருநாள் போட்டிகளில் 51 பந்துகளில் 5 முறை வீழ்த்தியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 18.80. 6 இன்னிங்ஸ்களில் 94 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக கோலி எடுத்துள்ளார். 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே அந்த அணிக்கு எதிராக விராட் கோலியின் சராசரி 75.14. 9 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் 2 அரைசதங்களை எடுத்துள்ளார் விராட்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7031605.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய பேட்ஸ்மேன்களிடம் எப்படி வம்பு செய்ய போகிறேன் என்பதை பாருங்கள்.. ஜான்சன் மிரட்டல்!

 

சிட்னி: இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவேன், இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது பாருங்கள்.. என்று மிரட்டியுள்ளார், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன். ஆஸ்திரேலியாவுடன் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவை, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி ஆஸி. பேட்ஸ்மேன் வார்னர் தகராறு செய்தார். இதன்பிறகு வார்னர், அந்த சம்பவத்தை விளக்கி கூறி, இனிமேல் அப்படி நடக்காது என்றும் உறுதியளித்தார்.

 

ஒரு திரில் இந்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் வேறு மாதிரி பிளான் வைத்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "விளையாட்டில், இதுபோல ஸ்லெட்ஜிங் செய்வது சகஜமானது. அப்போதுதான், விளையாட்டில் ஒரு பொழுது போக்கும், திரில்லும் இருக்கும்.

இந்தியாவிடம் பாருங்கள் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இதுபோன்ற சுவாரசியத்தை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

 

அது எப்படி இருந்தது பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாஸ் மற்றும் வாட்ன் இடையே நடந்த ஸ்லெட்ஜிங் பிரச்சினை ஆட்டத்தையே சுவாரசியமாக மாற்றியது. அதுபோன்ற ஆட்டத்தைதான் நான் விரும்புகிறேன்.

வம்பு சண்டை வேண்டும் ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வார்டனர் எதுவும் பேசாமல் இருந்தாலும், நான் சீண்டல் செய்யத்தான் போகிறேன். எங்காவது ஸ்லெட்ஜிங் செய்ய ஆள் தேவை என்றால் அங்கு முதல் ஆளாக நான்தான் இருப்பேன். இவ்வாறு ஜான்சன் தெரிவித்தார்.

 

இவங்களுக்கு இதே வேலை பாஸ் இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான டெஸ்ட் தொடரின்போதும், ஜான்சன் இந்திய வீரர்களை சீண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. விளையாடி வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, எதிரணி வீரர்களின் கவனத்தை சீர்குலைக்க ஆஸ்திரேலிய அணியினர் இவ்வாறு குறுக்கு வழியை நாடிவருவது காலம்காலமாக தொடருகிறது. நாளைக்கு என்னென்ன கூத்து இருக்கிறதோ.. பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/i-ll-sledge-india-if-warner-won-t-says-johnson-223325.html

  • தொடங்கியவர்

உண்மை... உலக கோப்பையை ஜெயிக்க தகுதியில்லாத அணிதான் தென் ஆப்பிரிக்கா!

 

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்க மழையும், அதிருஷ்டமின்மையும் மட்டும் காரணமில்லை என்பது தென் ஆப்பிரிக்க அணியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும். தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு அவர்களே முழு காரணமும் ஆகும். தென் ஆப்பிரிக்கா தோற்றதும், இந்தியாவிலேயே பல ரசிகர்கள் அந்த அணிக்காக கண்ணீர் சிந்தினர். உண்மையிலேயே நீங்கள்தான் சாம்பியன் என்று கூறி பலரும் பேஸ்புக்கில் டி வில்லியர்ஸ் அழும் படத்தை வைத்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையிலேயே இவ்வளவு போற்றுதலுக்கும் உள்ள அணிதானா தென் ஆப்பிரிக்கா என்றால், இல்லை என்றுதான் மனதை கல்லாக்கிக் கொண்டு சொல்ல வேண்டியுள்ளது.

 

என்னா பில்டப் முதலில் தென் ஆப்பிரிக்க பவுலிங் குறித்து மாபெரும் பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது, இந்த உலக கோப்பையில் உடைக்கப்பட்டுள்ளது. ஸ்டெய்ன் வீசும் பந்து ஸ்ட்ரெயிட்டாக சந்திரனுக்கே சென்று விடும் என்ற அளவுக்கு ஆஹா..ஓஹோ புகழாரங்கள். ஆனால் நிலைமை என்ன.. ஜிம்பாப்வே அணி லீலக் ஆட்டத்தில், 277 ரன்களை எடுத்தது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.

 

கலவை கிடையாது இதற்கு காரணம், தென் ஆப்பிரிக்காவின் பவுலர்கள், ஸ்டைல் முழுக்க ஒரே மாதிரி உள்ளது. அந்த யூனிட்டில் வரைட்டி இல்லை. எனவேதான், ஸ்பின்னர், இம்ரான் தாஹிர் கிளிக் ஆகிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவால் எளிதாக வெல்ல முடிந்தது. மற்றபடி வேகப்பந்து வீச்சு அடித்து நொறுக்கப்பட்டது. டேல் ஸ்டெய்ன் தனது சிறந்த பந்து வீச்சை காலிறுதியில், இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெளிப்படுத்தினார்

 

இங்கு டி20 மேட்ச் நடக்கலை மிடில் ஆர்டரில் ஜேக் கல்லீஸ் போன்ற ஒரு பொறுமையும், திறமையும் கலந்த பேட்ஸ்மேன் இப்போது இல்லை. யாரை பார்த்தாலும் டி20 வீரர்களை போலவே உள்ளனர். வருவதும், ஷாட் அடிப்பதும் மட்டுமே அவர்கள் பணியாக உள்ளது. பொறுமையாக சேஸ் செய்ய வேண்டிய போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா கோட்டை விட்டதை, இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பார்த்துள்ளோம்.

 

ஒருவர் மீது ஓவர் பாரம் தென் ஆப்பிரிக்க பேட்டிங் முழுக்க டி வில்லியர்சை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தது. பாகிஸ்தானிடம் தோற்றபிறகு அதை டி வில்லியர்சே வெளிப்படையாக கூறினார். என்னால் மட்டும் உலக கோப்பையை வென்று தர முடியாது என்று வேதனை வெளிப்படுத்தியிருந்தார் டி வில்லியர்ஸ். பெயரை கேட்டாலே அதிரும் வகையில் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், நுணுக்கமாக ஆடாமல், வெறித்தனமாக ரன் அடிப்பதிலேயே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கவனம் இருந்தது.

 

கோர்ஸ் வேணும் பதற்றமான நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு, ஆஸ்திரேலியர்களிடமோ அல்லது டோணியிடமோ தென் ஆப்பிரிக்கர்கள், 6 மாதம் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ் படித்தாலும் தேவலை எனலாம். ஆதிமுதலே தென் ஆப்பிரிக்கர்களுக்கு இதுதான் பிரச்சினை.

 

கோட்டை விட்டனர் தலை சிறந்த ஃபீல்டரான டி வில்லியர்ஸ் கூட, பதற்றத்தில் பந்தை விட்டுவிட்டு வெறுங்கையில் ஸ்டம்பை அடித்ததையும், முழு நேர விக்கெட் கீப்பர் டி காக், அதேபோல வெறுங்கையில் முழம் போட்டதையும் பார்த்த ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அப்படி என்னதான் பதற்றமோ அந்த அணிக்கு மட்டும் புரியவில்லை. மறுமுனையில் பார்த்தால் எலியட் முகத்தில் எள்ளளவும் பதற்றமோ, உணர்ச்சிவசமோ இல்லை என்பைத போட்டியை பார்த்தவர்கள் நன்கு உணர்வர். எது எப்படியோ, அட்லீஸ்ட் இந்த பதற்றத்தை கட்டுப்படுத்தினாலாவது 2019ல் தென் ஆப்பிரிக்கா உலக கோப்பைக்கு ட்ரை பண்ணலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-4-reasons-why-south-africa-never-deserved-be-the-final-223334.html

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

இந்திய சுழற் பந்துவீச்சு அச்சம்: வலைப்பயிற்சிக்கு ஷேன் வார்னை அழைத்த கிளார்க்

 

 

சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பை அடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வலைப்பயிற்சிக்கு ஷேன் வார்னை அழைத்து பந்துவீசச் செய்து பயிற்சி மேற்கொண்டார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி பிட்சில் அச்சுறுத்தலாகத் திகழலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியதையடுத்து மைக்கேல் கிளார்க், ஷேன் வார்னை அழைத்தார்.

 

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஷேன் வார்ன், சிறிது நேரம் கழித்து தனது லெக் ஸ்பின், கூக்ளிக்களை வீசத் தொடங்கினார். பல பேட்ஸ்மென்களுக்கு அதனை சரியாக ஆட வரவில்லை.

 

வலைப்பயிற்சி முடிந்த பிறகு ஷேன் வார்ன், கிளார்க் ஆகியோரிடையே நீண்ட உரையாடல் நடைபெற்றது.

கிளார்க் வலையில் பேட் செய்த போது நடுவரின் நிலையிலிருந்து ஷேன் வார்ன் அவரது பேட்டிங்கை பார்வையிட்டார். அதன் பிறகு கிளார்க் பேட் செய்ய வார்ன் வீசினார். ஆஃப் ஸ்பின் போன்ற சில கூக்ளிக்களை அவர் வீசினார்.

 

இதற்கிடையே வலைப்பயிற்சியை பார்வையிட வந்த இந்திய ரசிகர்கள் ஷேன் வார்னுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஆஸ்திரேலிய கேப்டனையும் வார்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article7031832.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பைகளை வெல்வது எப்படி என்பதை தோனி நன்கு அறிவார்: மைக்கேல் வான்

 

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றி வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் 50-50 என்று கூறிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், வெற்றியை தீர்மானிக்கும் ஒரு பெரிய காரணியாக இந்திய கேப்டன் தோனியைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சிட்னியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மைக்கேல் வான், “உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்திக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்காமல் வந்துள்ளது, காரணம் தோனி. அணியில் மாற்றம், மனநிலையில் மாற்றம். தோனி என்ற காரணியே இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைஅதிகரிக்கிறது.

 

உலகக்கோப்பைகளை வெல்வது எப்படி என்பதை தோனி நன்கு அறிவார்.

சிறப்பாக பந்துவீசினாலும், பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் முதல் 15 ஓவர்களில் இவற்றைச் சிறப்பாக செய்த அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வந்துள்ளதைப் பார்க்கிறோம்.

 

இரு அணிகளிடத்திலும் நல்ல வேகப்பந்து வீச்சு உள்ளதால் முதல் 15 ஓவர்களில் பொறிபறக்கும்.

இந்திய வீரர்களில் அஜிங்கிய ரஹானே நல்ல உத்தியை தன்வசம் வைத்திருப்பவர். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் ரஹானே ஒரு சிறந்த வீரராக எழுச்சியுறுவார். அப்போது நாம் அவரைப்பற்றி நிறைய பேசுவோம்.

 

ரஹானே தனது முன்காலை குறுக்காக நீட்டி விளையாடுவதில்லை, அவர் பந்துகளை மட்டைக்கு வரவிட்டு விளையாடுகிறார். இதனால் பின்னங்காலில் சென்று ஆடுவதில் அவருக்கு நல்ல சமநிலை கிடைக்கிறது. அதனால்தான் அவர் கட் மற்றும் புல் ஷாட்களை திறம்பட ஆட முடிகிறது. மேலும் நேராகவும் விளையாடுகிறார்.

இப்படிப்பட்ட உத்திகள் கொண்ட வீரருக்கு பீல்ட் அமைப்பது கடினம். நேராக ஆடுவதற்கு களம் அமைக்க முடியாது.

 

இந்திய அணியில் ஒருநபரை குறிவைத்து கவனம் செலுத்த முடியாது. 1 முதல் 11 வரை திறமை உள்ள அணி இந்திய அணி” இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் வான்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7031651.ece

ஜெயிக்க தகுதி இல்லைதா அணி தென்னாபிரிக்கா .

இந்த கட்டுரையுடன் எனக்கு உடன்பாடில்லை .நேற்று மீண்டும் முழு மாட்சும் திரும்பப்பார்த்தேன் .

 

நியுசிலாந்து பாட்டிங் தொடங்க நிதானம் இல்லாமல் சற்று பதற்றத்துடன் தான் தென்னாபிரிக்கா வீரர்கள் டி வில்லியர்ஸ் உட்பட இருந்தார்கள் .மக்கலத்தின் ஆரம்ப அதிரடி அந்த நிலையை உருவாக்கியிருக்கலாம் ஆனால் மக்கலம் அவுட் ஆகியபின்னரும் அந்த நிலை தொடர்ந்தது .எலியட் மிக நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார் அந்த நிதானம் இவர்கள் எவரிலும் காணமுடியவில்லை .

கணக்கில்லாத ரன் அவுட்டுக்களை அதனால் கோட்டை விட்டார்கள் காட்சுகளும் விட்டார்கள் .

டுவிட்டரில் முன்னாள் இங்கிலாந்து காப்டன் Michael Vaughan டோனி பற்றி எழுதியிருந்தார் .அவரது நிதானம் தான் ஆஸியில் சொதப்பிக்கொண்டிருந்த இந்திய அணி இப்போ அரையிறுதிக்கு வந்தது மட்டும் அல்ல கோப்பையும் கொண்டுபோகும் சந்தர்ப்பமும் இருக்கு என்று .

அது உண்மையோ என்று இன்று இரவு தெரிந்துவிடும் .

  • தொடங்கியவர்

எல்லாப் புகழும் டோணிக்கே... இறங்கி வந்து "சல்யூட்" வைக்கும் மைக்கேல்...!

 

சிட்னி: இந்தியா இந்தத் தொடரில் சவாலான அணியாக இருக்கப் போகிறது என்று நான் முன்பே கூறியிருந்தேன். அது போலவே இந்தியா தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இத்தனைப் புகழுக்கும் கேப்டன் டோணியே முக்கியக் காரணம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை நடைபெறவுள்ள 2வது அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இதில் வெல்லப் போவது யார் என்பது பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்கள் இந்திய வீரர்களை வம்பிக்கிழுத்துப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் மைக்கேல் கிளார்க், நமது கேப்டன் டோணியை புகழ்ந்து பேசியுள்ளார். சிறந்த கேப்டனாக டோணி செயல்படுவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

காதலர் தினம் முதல் கலக்கல் ஆஸ்திரேலியாவில் இந்தியா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆடிய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்புத் தொடரிலும் ஆடியது. ஆனால் வெல்லவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடரில் எடுத்த எடுப்பிலிருந்து அசத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.

 

7 போட்டிகளில் வெற்றி நடப்புச் சாம்பியனான இந்தியா இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக மாறி நிற்கிறது.

கிளார்க் பாராட்டு இந்த நிலையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு டோணியே காரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.

 

நான்தான் சொன்னேனே இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...நான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், இந்தியா இந்தத் தொடரில் மிகக் கடுமையான போட்டியைக் கொடுக்கப் போகிறது என்று. அவர்கள் இந்த சூழலில் நீண்ட நாட்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுவே அவர்களது தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

 

விக்கெட் எடுக்கத் தெரிந்திருக்கிறது அவர்களுக்கு விக்கெட் எடுக்கத் தெரிந்து விட்டது. இதற்காக கடுமையாக முயற்சித்திருக்கிறார்கள். நிறைய ரன்கள் குவிக்கிறார்கள். இதை இந்தத் தொடர் முழுவதும் நிரூபித்துள்ளனர்.

டோணியே காரணம் இந்தியாவின் இந்த புத்தெழுச்சிக்கு கேப்டன் டோணியின் தலைமையே காரணம் என நான் நம்புகிறேன். அவர் தனது அணியை வழி நடத்தும் விதம் சிறப்பாக உள்ளது. டெஸ்ட் தொடரில் வீழ்ந்த போதிலும், முத்தரப்பு தொடரில் சரிவுகளைச் சந்தித்த போதிலும் அதிலிருந்து தனது அணியை அழகாக மீட்டுக் கொண்டு வந்துள்ளார் டோணி.

 

உச்சகட்ட பார்ம் தற்போது இந்திய அணி உச்சகட்ட பார்மில் உள்ளது. நாங்களும் அதற்கேற்பத் தயாராகி வருகிறோம். மிகச் சிறந்த அணி ஒன்றுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை உணர்ந்துள்ளோம். அந்த சவாலை சந்திக்கத் தயாராகி வருகிறோம் என்றார் கிளார்க்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ahead-wc-semi-final-clarke-praises-captain-dhoni-223341.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஷேன் வோர்ன் பயிற்சி இந்தியாவை சமப்படுத்த (in order to neutralize) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியர்கள் அஸ்வினத்தான் குறிவைத்து தாக்குவார்கள் என்பது இந்தியாவிற்கும் தெரியும் அதற்கு என்ன மாற்றீட்டை இந்தியா வைத்துள்ளது என்பதை பார்க்க ஆவலாகவுள்ளது நியூசிலாந்து தென் ஆபிரிக்க விளையாட்டு இந்தப்போட்டியின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்டது ரகு அண்ணா இந்த ஆட்டத்தையும் தொகுத்து வழங்கவேண்டும்.

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா
v
இந்தியா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

விடைபெறுகிறார் வெட்டோரி *கேப்டன் மெக்கலம் சூசகம்

 

மெல்போர்ன்: ‘‘உலக கோப்பை தொடரின் பைனல் தான் நியூசிலாந்து அணிக்காக வெட்டோரி பங்கேற்கும் கடைசி போட்டியாக இருக்கும்,’’ என, கேப்டன் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார்.

 

நியூசிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, 36. மொத்தம் 113 டெஸ்ட் (362 விக்.,), 294 ஒருநாள் போட்டிகளில் (305 விக்.,) பங்கேற்றுள்ளார்.

2011க்குப்பின் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார். உலக கோப்பை தொடர் சொந்தமண்ணில் நடந்ததால் மீண்டும் அணியில் இடம் பெற்ற இவர், 8 போட்டிகளில் 15 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

 

தற்போது உலக கோப்பை பைனலுக்காக நியூசிலாந்து அணி மெல்போர்ன் வந்துள்ளது. இப்போட்டியுடன் வெட்டோரி ஓய்வு பெறலாம் என, கேப்டன் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘ மார்ச் 29 ல் மெல்போர்னில் நடக்கும் உலக கோப்பை தொடர் பைனல் தான், நியூசிலாந்து அணிக்காக வெட்டோரி பங்கேற்கும் கடைசி போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் சிறப்பாக செயல்பட்டு, அவரை நல்ல முறையில் வழியனுப்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/03/1427304876/CricketWorldCupDanielVettorimayretireMcCullumhints.html

  • தொடங்கியவர்

அனல் பறக்கவுள்ள அவுஸ்திரேலியா - இந்தியா அரையிறுதி

 

நடப்பு சம்பியன்கள், அதிக உலகக்கிண்ணங்கள் வென்று உலகின் முதற்தர ஒருநாள் அணியை சந்திக்கும் விறுவிறுப்பான, பெரும் பரபரப்பான இரண்டாவது அரையிறுதி நாளை.

அவுஸ்திரேலியா அணி தற்போது தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் அணி மட்டுமல்ல, தொடர்ச்சியாக தன்னுடைய சிறப்பான வெற்றிகளைப் பதவு செய்து வரும் அணி. அத்துடன் சொந்த மண்ணில் விளையாடும்போது மேலும் பலம் சேர்ந்து எதிரணிகளை ஓடஓட விரட்டக்கூடிய ஆற்றலும் சேர்ந்துவிடும்.

அண்மைய உதாரணம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடர்.

 

ஆனால்,இந்திய அணி அந்த முக்கோண ஒருநாள் தொடரில் கண்ட படுதோல்விகளுக்குப்  பிறகு, இந்த உலகக்கிண்ணத்தில் இதுவரை எடுத்துள்ள உத்வேகமான வெறித்தனமான வெற்றி ஓட்டம், அவர்கள் வைத்துள்ள உலகக்கிண்ணத்தை மீண்டும் அவர்களே வசப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு ஆற்றலுடையதாகத் தெரிகிறது.

இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியாவும், நேற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்தும் மட்டுமே இந்த உலகக்கிண்ணத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத இரு அணிகள்.

 

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இருக்கும் மோதல்களும், மைதானத்துக்கு வெளியேயும் நீடிக்கும் பகைமை கலந்த நீண்ட கால பழி தீர்க்கும் உணர்வுக்கு மேலதிகமாக மிக நீண்ட காலமாகவே இருந்து வரும் போட்டி கலந்த பகைமை உணர்வும் இந்த அரையிறுதிப் போட்டியை மேலும் முக்கியமானதொரு போட்டியாக மாற்றுகிறது.

என்னதான் கிரிக்கெட் உலகத்தை நடத்தும் BIG 3 எனப்படும் மூன்று கிரிக்கெட் சபைகளில் இவ்விரண்டும் முக்கியமானவையாக இருந்தாலும், அதிகார விஷயங்களிலும், பணபலத் தீர்மானங்களிலும் இந்திய கிரிக்கெட் சபையும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் சிரித்துக்கொண்டே அறுத்துக்கொள்ளும் நட்புடன் கூடிய எதிரிகள்.

அவுஸ்திரேலியா ஆட்டத்திலும், கிரிக்கெட் ஆட்சியிலும் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்திய தசாப்தத்தைத் தாண்டிய காலம் இருந்தது.

எனினும் IPL காலத்தின் பின்னர் கூடியுள்ள இந்திய ஆதிக்கமும், அண்மைக்கால இந்திய கிரிக்கெட் அணியின் பரவலான வெற்றிகளும் இந்தியாவையும் சில விடயங்களில் முந்த வைத்திருக்கின்றன.

 

அது மட்டுமல்லாமல், இந்த உலகக்கிண்ணத் தொடரை சரியாக பார்த்து வந்திருந்தால், போட்டிகளை பார்க்க வந்திருந்த சொந்த நாட்டு ரசிகர்களுக்கு இணையாக, அல்லது சிலவேளைகளில் அதிகமாக இந்திய மற்றும் இலங்கை ரசிகர்கள் தமது நாட்டு அணிகள் விளையாடும் போட்டியைப் பார்க்க வந்திருந்தார்கள். நாளை சிட்னியிலும் இதே போல நடக்கலாம்.

 

எனவே, ஆடுகளத்தைத் தவிர மீதி எல்லாக் காரணிகளுமே இரண்டு அணிகளுக்கும் சமமானதாக மாறுவதற்கு இடமுண்டு.

இரண்டு அணிகளுமே சர்ச்சைகளினதும் மோதல்களினதும் மைய அணிகள். அதிலும் இந்திய அணி மீதும், இந்தியாவின் பல்வேறுவிதமான ஆதிக்கம் மீதும் எதிரணிகளின் ரசிகர்கள் மிகக்கடுமையான அதிருப்தியையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவது வழக்கமானது.

 

சமீபத்திய உதாரணம் - பங்களாதேஷூக்கு எதிரான காலிறுதி சர்ச்சைகள்.

 

இப்போது, அதிகமாக பேசப்பட்டு வரும் சிட்னி ஆடுகளம் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.

 

பரவலாக (அதிகமாக இந்திய ஊடகங்கள்) நாளை விளையாடப்படவுள்ள சிட்னி ஆடுகளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை உடையது என்றும், அதனால் இந்தியாவுக்கு கூடுதலான வாய்ப்புடையதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் நாளை விளையாடப்படவுள்ள ஆடுகளமானது தென் ஆபிரிக்க - இலங்கை அணிகள் விளையாடிய காலிறுதி விளையாடப்பட்ட ஆடுகளம் என்பது தான் அதற்கான முக்கிய காரணம்.

 

டுமினியும், தாஹிரும் இலங்கை அணியை சுருட்டிய அந்தப் போட்டியில் ஆடுகளத்தினால் இலங்கை அணி தடுமாறியதை விட, இலங்கையின் வீரர்கள் மோசமான, ஒரு விதமான பயந்த நிலையில் நின்று ஆடியே விக்கெட்டுக்களை தென் ஆபிரிக்காவின் அதிகம் 'ஆபத்தில்லாத' சுழல்பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியிருந்தனர். சிட்னி ஆடுகளம்

அவுஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் எல்லாவற்றிலும் சுழல்பந்து வீச்சுக்கு அதிக சாதகத் தன்மை தர்த்க்கூடிய மைதானம் எனினும், இந்திய ஆதரவளார்கள் நினைப்பது போல, ஆசிய உப கண்ட ஆடுகளங்கள் போல ஒரேயடியாக சுழல்பந்துவீச்சை ஆதரித்துவிடக்கூடிய ஆடுகளமாக சிட்னி இருக்கப்போவதில்லை.

இதற்கு உதாரணமாக இந்த உலகக்கிண்ணத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டிகளில் தான், தென் ஆபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டங்களையும், இதே அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிராக 376 ஓட்டங்களையும் குவித்தது,

மற்ற இரு போட்டிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து, அடுத்தது இலங்கை சுருண்ட காலிறுதி.

சுழல்பந்துக்கு சாதகம் தரும் என்று கணித்தோருக்கு பாதகமான விடயமாக கடந்த இரு நாட்களாக சிட்னியில் பெய்து வரும் மழை அமைந்துள்ளது.

இது ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாற்றிவிடும்.

 

ஆடுகளத்தில் எகிறும் தன்மை இருந்தால் இந்தியர்களை விட ஒப்பீட்டளவில் வேகம் உடைய அவுஸ்திரேலியர்களுக்கு அது வாய்ப்பாக அமையும் அதேவேளை, ஸ்விங் இருந்தால் இந்தியாவின் தற்போதைய கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சு வரிசைக்கு சாதகமாக அமையும்.

ஆனால், ஆடுகளம் துடுப்பாட்ட சாதகமானதாக மாறினால், இரு அணிகளிலும் நிரம்பியிருக்கும் மலைபோல ஓட்டங்களைக் குவிக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதே.

இந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரை இந்தியா சார்பாக 5 சதங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஷீக்கார் தவான் மட்டும் இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்.அவுஸ்திரேலியா இதுவரை 3 சதங்களையே பெற்றுள்ளது.

 

 

ஆனால், பலம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வரிசை ஒப்பீட்டளவில் 300 - 330 ஓட்டங்களைக் குறிவைத்து, பின்னர் இந்தத் தொடர் முழுதும் விளையாடிய போட்டிகளில் எல்லாமே எதிரணிகளின் அத்தனை விக்கெட்டுக்களையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்களைக் கொண்டு கட்டுப்படுத்தி, வெற்றிகளை சுவைத்து வந்திருக்கிறது.

அவுஸ்திரேலியா தனது வழமையான முழுமையான தாக்குதல் பாணியையே கையாண்டு வந்துள்ளது.
400 ஓட்ட எண்ணிக்கையைக் குறிவைத்து ஆரம்பம் முதல் அடித்து நொறுக்குவது, பின்னர் அசுர வேகப்பந்து மூலம் எதிரணிகளை நிர்மூலமாக்குவது.

நியூசிலாந்திடம் கண்ட மயிரிழையிலான தோல்வியைத் தவிர, (பாகிஸ்தானின் வஹாப் ரியாஸின் தனியொரு போராட்டம் இன்னொன்று) அவுஸ்திரேலியாவின் பயணமும் நிதானமானதே.

 

சிட்னியில் அவுஸ்திரேலிய - இந்திய மோதல்கள்.

சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலியா இந்தியாவை எப்போதுமே துவம்சம் செய்து வந்திருக்கிறது.
இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் அவுஸ்திரேலியா இந்தியாவிடம் ஒரே ஒரு தடவை தோற்றிருக்கிறது.
அது 7 ஆண்டுகளுக்கு முன்னர், 2008இல்.

 

அதேபோல, இறுதியாக சிட்னியில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள பத்து போட்டிகளில் 8 வெற்றி.
தோல்வியுற்ற இரண்டு போட்டிகளும் நம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடியவை.
நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இங்கே அதிகம் தான். ஆனால் அவுஸ்திரேலிய வெற்றிகள் இவற்றையெல்லாம் தாண்டியவையாகவே இருக்கின்றன.

இந்திய அவுஸ்திரேலிய அணிகள் இதற்கு முதல் கடந்த உலகக்கிண்ணத்தில் மோதியபோது, அந்தக் காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் அபாரமான வெற்றியுடன் 1999 முதல் இருந்து வந்த அவுஸ்திரேலிய உலகக்கிண்ண சாம்ராஜ்யமும் உடைந்து, ரிக்கி பொன்டிங் என்ற அற்புதத் தலைவரின் மணி மகுடமும் போனது.

அதேபோல, 1992ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக அவுஸ்திரேலியா அரையிறுதியை எட்டிப் பார்க்காமல் வெளியேறியது.

இம்முறை அரையிறுதியில் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.

 

அவுஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண அரையிறுதிகளிலும் தோல்வி கண்டதில்லை.
(1999 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுடன் சமநிலை முடிவைப் பெற்றது)

 

இந்தியா விளையாடியுள்ள 5 உலகக்கிண்ண அரையிறுதிகளில் 3இல் வென்று இறுதிப் போட்டிகளுக்கு சென்றுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 10 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 7இலும், இந்தியா மூன்றிலும் வென்றிருக்கின்றன.

இரண்டு அணிகளும் ஒப்பீட்டளவில் சமபலமுடையதாகத் தெரிந்தாலும், இந்தியாவின் களத்தடுப்பு அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு துடிப்பானதாகத் தெரிந்தாலும், அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு ஒப்பீட்டளவில் ஒரு படி மேலே தான்.

 

ஆனால், அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சு பலவீனம் இந்தியாவுக்கான சிறிய வாய்ப்பாக அமையும்.
அநேகமாக அவுஸ்திரேலியா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், போல்க்னர் ஆகியோரோடு தான் விளையாடும் என்று கருதினால், மக்ஸ்வெல் தான் அவர்களது பிரதான சுழல்பந்து வீச்சாளராக இருப்பார். இந்தியத் துடுப்பாட்டவீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இடமுண்டு.

ஆனால், மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான பந்துவீச்சாளராக எதிரணிகளை அச்சுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளுகிறார். அவரது யோர்க்கரும் பவுன்சரும் எந்த துடுப்பாட்ட வீரரையும் தடுமாற வைக்கும்.

 

இந்திய அணி என்றாலே மிரட்டி எடுக்கும் ஜோன்சனும் கூட சேர்கையில், இன்னும் உறுதி பெறும் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சில், ஹேசில்வூட்டும் நம்பிக்கை தருகிறார்.

போல்க்னர், வொட்சன் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டுக்களை எடுக்க உதவக்கூடும்.
பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுக்களை சரித்தது போல, மக்ஸ்வெல் தனது பங்களிப்பை, ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்து வழங்கினால் அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்புத்தான்.

 

மறுபக்கம், இந்தியாவின் ஷமி, மோஹித் ஷர்மாவின் தடுமாறாத கட்டுப்பாடான பந்துவீச்சும், ஸ்விங்கும் இந்தியாவின் ஒரு பலம் ; எகிறும் பந்துகளை வீசும் இந்திய அணியின் வேகமான பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அச்சுறுத்தக்கூடிய ஒருவர்.
இந்தத் தொடர் முழுதும் சிறப்பாகப் பந்துவீசும் அஷ்வினுடன், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் தக்க நேரத்தில் சேர்ந்தால் இந்தியாவின் பந்துவீச்சு உலகத் தரமானது.

அவுஸ்திரேலியாவுக்கு இருக்கும் நம்பிக்கை, இதே பந்துவீச்சை முன்பு முக்கோணத் தொடரில் வதைத்ததும், இதுவரை உலகக்கிண்ணத் தொடரில் இணையாக சேர்ந்து பெரிதாக சோபிக்காத (ஒரேயொரு அரைச்சத இணைப்பாட்டம்) முக்கியமான நாளைய போட்டியில் கலக்கும் என்பதுமே.

பின்ச், வோர்னர் என்ற அதிரடிகளின் பின், நம்பிக்கை தரும் உறுதியான ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்.

தலைவர் மைக்கேல் கிளார்க்  இலங்கைக்கு எதிராக அரைச்சதம் பெற்றிருந்தாலும், இன்னும் முன்னைய 'ஓட்டக்குவிப்பு' கிளார்க்காக அவர் தெரியவில்லை.

அடுத்து வரும் மக்ஸ்வெல் ஒரு அவுஸ்திரேலிய ஏபி டீ வில்லியர்ஸ்.
அசுரவேகத்தில் ஓட்டங்கள் குவிக்கும் மக்ஸ்வெல் எந்தப் பந்துவீச்சுக்குமே ஒரு சிம்ம சொப்பனம்.
இவர் தான் இந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் அதிகூடிய ஓட்டக் குவிப்பாளர்.

 

தடுமாறிக்கொண்டு இருந்த வொட்சன், பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடியதன் பலனாக ஓட்டங்கள் பெறும் மனோநிலைக்குத் திரும்பியுள்ளார் போல தெரிகிறது.

வேகமாக ஓட்டங்கள் பெற ஹடின் மற்றும் போல்க்னர், ஜோன்சன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

இதற்கு சற்றும் குறையாத இந்தியாவின் வரிசை.

ரோஹித் ஷர்மாவும் இறுதியாக கழசஅக்குத் திரும்பியிருப்பது இந்தியாவுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம்.
என்ன தான் இந்தியாவின் ஆரம்ப இணைப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறினாலும், தவானும் ரோஹித்தும் இருக்கும் சிறப்பான துடுப்பான கழசஅ இந்தியாவுக்கு சாதகமானதே.

 

அதேபோல, ரோஹித் ஷர்மா கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு இன்னிங்க்சில் பெற்றுள்ள ஓட்டங்கள், 138, 209.

கோலி எப்போதும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், தொடர்ந்து ரஹானே.. மோசமாக ஆடக்கூடியவர் அல்ல.
சுரேஷ் ரெய்னா நம்பியிருக்கக்கூடிய ஒரு ஓட்ட இயந்திரம். தேவையானபோது மத்திய வரிசையைத் தாங்கி, வேகமாகவும் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்.

தோனியை இந்திய அணி ரசிகர்கள் ஒரு காவல் தெய்வமாகப் பார்க்கிறார்கள். முடித்துவைக்கும் ஆற்றலுடைய ஒரு கூலான மனிதர்.

தேவையேற்படின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் ஓட்டங்களில் உதவக்கூடியவர்கள்.

 

எனினும் இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வரிசைகளின் பலவீனங்களை இரு அணிகளும் குறிவைக்கும்.
அவுஸ்திரேலியா சூழலுக்கும், ரிவேர்ஸ் ஸ்விங்குக்கும் தடுமாறக்கூடியது. அத்தோடு வஹாப் ரியாஸ் அன்று காட்டிய உதாரணத்தை நாளை உமேஷ் யாதவ் பயன்படுத்தலாம்.

எதிர்ப்பக்கத்தில் இந்தியர்கள் எகிறும் பந்துகளுக்கும், ஸ்விங்கும் பந்துகளுக்கும் இலகுவாக ஆட்டமிழக்கக் கூடியவர்கள்.
எனவே ஸ்டார்க், ஜோன்சனின் தாக்குதல்கள் பயங்கரமாக இருக்கும்.

இன்னொன்று, நேற்றைய நியூ சீலாந்து, தென் ஆபிரிக்க போட்டி கிரிக்கெட்டின் உன்னதத்தோடு இரு அணிகளும் அர்ப்பணிப்பான, பொறுப்புணர்வான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன என்றால், நாளைய போட்டி மைதானத்துக்குள்ளே வார்த்தை மோதல்களும், வலியக்கொழுவல்களும் வம்புச் சண்டைகளும் நடக்கக்கூடிய உணர்ச்சி மிகுந்த ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து இருக்கின்றன.

 

அவுஸ்திரேலியாவுக்கு இந்தியாவிடம் கடந்த உலகக்கிண்ணத்தில் இழந்த பெருமையை, சொந்த மண்ணில் மீண்டும் பெறும் உத்வேகமும், நடப்பு சாம்பியன்கள் இந்தியா தம்மிடம் உள்ள கிண்ணத்தை எந்த வகையிலும் இழந்துவிடக்கூடாது என்ற வெறியும் இருக்கிறது.

இதனால் தோல்வி என்பதை யோசிக்கவே தயங்குகிறார்கள்.

நாளைய தோல்வியின் தாக்கம் மிகப் பெரிதாக இரு அணிகளுக்குமே இருக்கும்.

நாளை இந்தியா தோற்றால், 1987க்குப் பிறகு முதல் தடவையாக ஆசிய அணி ஒன்று இல்லாத உலகக்கிண்ண இறுதிப்போட்டியாக ஞாயிறு போட்டி அமையும்.

அத்துடன் அவுஸ்திரேலியா இத்தொடர் முழுவதும், அண்மையில் காலமான தங்கள் சக வீரர் பிலிப் ஹியூசை நினைவு கூர்ந்து கறுப்புப் பட்டியுடன் ஆடி வருவதால், ஹியூசுக்காக இந்த உலகக்கிண்ணத்தை வென்று அர்ப்பணிக்க ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் காத்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண், அண்மைக்கால ஆதிக்கப் பலாபலன்களின் அடிப்படையில் கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பது போல தெரிந்தாலும், இந்திய அணி தோனியின் தலைமையில் முன்னைய இயலாமைகளை உடைத்து வரும் அணி.

 

ஆனால். நாளைய போட்டி வாழ்வா சாவா தீர்மானமிக்க போட்டி. எனவே உயிரைக் கொடுத்த, பதறாமல், இறுதி வரை போராடக்கூடிய அணி மெல்பேர்னில் நியூ சீலாந்தை சந்திக்கும்.

- See more at: http://www.tamilmirror.lk/142647#sthash.Z9uqvruv.dpuf

இந்தியா!!!! இந்தியா!!!!! இந்தியா!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலும், விளையாட்டும் ஒன்றுக்குள் ஒன்று என்று பார்த்தால்,

 

இன்று நடக்கும் போட்டியில் எந்த நாடு வெற்றிபெறுவது, அல்லது எந்தநாடு தோற்பது வடக்கு, கிழக்கு தமிழருக்கு நல்லது? 

 

விசயம் தெரிந்தவர்கள் சொன்னால் அந்த நாட்டுக்கு ஆதரவு கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிந்தாபாத்

  • தொடங்கியவர்

2nd Semi-Final: Australia v India at Sydney

Mar 26, 2015 (14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலும், விளையாட்டும் ஒன்றுக்குள் ஒன்று என்று பார்த்தால்,

 

இன்று நடக்கும் போட்டியில் எந்த நாடு வெற்றிபெறுவது, அல்லது எந்தநாடு தோற்பது வடக்கு, கிழக்கு தமிழருக்கு நல்லது? 

 

விசயம் தெரிந்தவர்கள் சொன்னால் அந்த நாட்டுக்கு ஆதரவு கொடுக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழராய் கூறினால்  நாங்கள் இருநாடுகளுக்கும் அகதிகளை ஏற்றுமதி செய்பவர்கள் 

எனவே இதனை பற்றி கதைக்க எங்களுக்கு தகுதி இல்லை 

  • தொடங்கியவர்

AUS BAT FIRST

  • தொடங்கியவர்

AUS 299/7 after 48 overs

  • தொடங்கியவர்

AUS 328/7 50 overs

அரசியலும், விளையாட்டும் ஒன்றுக்குள் ஒன்று என்று பார்த்தால்,

 

இன்று நடக்கும் போட்டியில் எந்த நாடு வெற்றிபெறுவது, அல்லது எந்தநாடு தோற்பது வடக்கு, கிழக்கு தமிழருக்கு நல்லது? 

 

விசயம் தெரிந்தவர்கள் சொன்னால் அந்த நாட்டுக்கு ஆதரவு கொடுக்கலாம்.

 

சொந்த மக்களையும் அகதியாய் ஆக்கியநாடு தோற்கட்டும்...

 

அகதியையும் சொந்தநாட்டு மக்கள் போல நடத்தும் நாடு வெற்றி பெறட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒசி ஒசி ஒய் ஒய்.....எங்கன்ட பெடியள் அடிப்பாங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.