Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

சுருண்டது நியூசிலாந்து..உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 184 ரன்கள் இலக்கு! 

 

மெல்போர்ன்: முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலக கோப்பை பைனலில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணி உலக கோப்பை பைனலை, பதற்றத்தோடு ஆட ஆரம்பித்ததன் விளைவு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரரும், அந்த அணி கேப்டனுமான மெக்கல்லத்தை இழந்தது. எனவே, மார்டின் கப்திலும், வில்லியம்சனும் நிதான கதியில், ஜாக்கிரதையாக ஆட ஆரம்பித்தனர். எனவே, முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆதிக்கமே இருந்தது.

 

சுருண்டது நியூசிலாந்து..உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 184 ரன்கள் இலக்கு! 10 ஓவர்களில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகும், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 33ஆக இருந்தபோது மார்டின் கப்திலும் (15 ரன்), 12.2 ஓவர்களில் ஸ்கோர் 39ஆக இருந்தபோது, வில்லியம்சனும் (12 ரன்) அவுட் ஆகினர். கப்திலை மேக்ஸ்வெல் பௌல்ட் செய்தார். வில்லியம்சன், ஜான்சன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். இதனால் நியூசிலாந்து தடுமாற்றமடைந்தது. டைலரும், எலியட்டும் நிதான ஆட்டத்தால் அதை சரிகட்ட முயன்றனர். இருவரும் 69 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்டத்தின் பாதியான 25 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்திருந்தது.

 

இதன்பிறகு சற்று வேகம் பிடித்த பேட்டிங் 35 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. அப்போது, டைலர்-எலியட் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கடந்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே, டைலர் 40 ரன்களில் நடையை கட்டினார். அதற்கடுத்தாற்போல கோரி ஆண்டர்சனும் அதே ஓவரில் டக் அவுட் ஆனார். இதற்கடுத்த ஓவரில் ரோன்ச் டக் அவுட் ஆனார். 150 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் பவர் பிளேயை ஆரம்பித்த நியூசிலாந்து 151 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. இதனிடையே சிறிது நேரம் நின்ற டேனியல் வெட்டோரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பௌல்ட் ஆனார்.

 

பொறுத்து பார்த்த எலியட்டும் 83 ரன்களில் அவுட் ஆனார். 171 ரன்களுக்கு 8 விக்கெ்ட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாநதை அதன்பிறகு எழவிடவில்லை ஆஸ்திரேலியா. மேட் ஹென்ட்ரி டக் அவுட் ஆன நிலையில், 11 ரன்கள் எடுத்திருந்த டிம் சவுத்தியை அருமையாக ரன் அவுட்செய்தார் மேக்ஸ்வெல். இதனால் 45 ஓவர்களிலேயே நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த ரன்களை நியூசிலாந்து பவுலர்கள் கொடுக்காமல் காப்பாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். டாஸ் வெற்றி: பேட்டிங்கிற்கு சாதகமான மெல்போர்ன் பிட்சில் டாசில் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

 

அதற்கேற்பட, டாசில் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், தனது அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். ஆஸ்திரேலியா, அனைத்து துறைகளிலும், நியூசிலாந்தை விட ஒருபடி மேலே இருப்பதால், டாசில் வென்று நியூசிலாந்து முதலில் பேட் செய்ய உள்ளது நியூசிலாந்துக்கு சாதகமாகும் என்கின்றனர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட மாஜி வீரர்கள். இரு அணிகளிலுமே அரையிறுதி அணியில் ஆடிய வீரர்களில் மாற்றமில்லை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/nz-wins-the-toss-bat-first-223586.html

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாடு திரும்பினார் டோணி... மற்றவர்களும் தாயகம் வந்து சேர்ந்தனர்

 

மும்பை: கேப்டன் டோணி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் இந்தியா திரும்பினர். கேப்டன் டோணி, துணை கேப்டன் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட அனைவருமே தாயகம் திரும்பி விட்டனர். அனைவரும் பகுதி பகுதியாக வெவ்வேறு ஊர்களில் வந்து இறங்கி அவரவர் இருப்பிடம் சென்றனர். நாடு திரும்பினார் டோணி... மற்றவர்களும் தாயகம் வந்து சேர்ந்தனர் டோணி டெல்லியில் வந்து இறங்கினார்.

 

கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா மற்றும் ஐந்து வீரர்களுடன் மும்பை வந்து சேர்ந்தார். ரவி சாஸ்திரியும் மும்பையில் வந்து இறங்கினார். கிட்டத்தட்ட மொத்த அணியும் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியினருக்கு எதிராக எந்த விமான நிலையத்திலும் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வீரர்கள் வந்து இறங்கி புறப்பட்டுச் சென்றனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/team-india-members-arrive-home-virat-kohli-anushka-sharma-land-in-mumbai-223598.html

அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் நியுசிலாந்தை வெற்றி கொண்டு உலக கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது .

சுபம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கங்காரு. பெட்ட லக் நெக்ஸ்ட் ரைம் கிவி. :lol: :)

  • தொடங்கியவர்

Player of the match - JP Faulkner (Australia)
Player of the series - MA Starc (Australia)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு...!  விபரங்களை விபரமாகத் தொகுத்தளித்த நவீனனுக்கு...!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸிக்கு வாழ்த்துக்கள்..! நவீனனுக்கு நன்றிகள்..! :D

  • தொடங்கியவர்

ஆஸி.க்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க் 

 

சென்னை: 5வது உலகக் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த நாட்டு அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க்.

 

ஆஸி.க்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க் உலகக் கோப்பையை அதிக அளவில் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியாதான். இன்றைய வெற்றியையும் சேர்த்து அது 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

 

இதில் முதல் கோப்பை 1987ம் ஆண்டு கிடைத்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆலன் பார்டர்.

 

அடுத்த கோப்பை 1999ம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்தது.

 

3வது கோப்பையை வென்றவர் ரிக்கி பான்டிங். 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் அந்தக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கை கூடியது.

 

2007ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

 

இந்த முறையும் ரிக்கி பான்டிங்கே கேப்டன். தற்போது 2015ல் 5வது கோப்பையை வென்றுள்ளார் மைக்கேல் கிளார்க்.

 

இதுவரை 4 கேப்டன்கள் மூலமாக 5 கோப்பைகளை வென்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/4th-aus-captain-win-the-wc-223621.html

  • தொடங்கியவர்

உலக கோப்பை: அதிக ரன் குவிப்பு, விக்கெட் பறிப்பு.. இரண்டிலுமே நியூசிலாந்து வீரர்கள் முதலிடம்

2lm176f.jpg

 

மெல்போர்ன்: அதிக ரன்கள் குவிப்பில் கப்திலும், விக்கெட் வீழ்த்தியதில் டிரெண்ட் பவுல்ட் மற்றும் மிட்சேல் ஸ்டார்க்கும் முதலிடங்களை பிடித்தனர். உலக கோப்பை: அதிக ரன் குவிப்பு, விக்கெட் பறிப்பு.. இரண்டிலுமே நியூசிலாந்து வீரர்கள் முதலிடம் நடப்பு உலக கோப்பையில், அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் 547 ரன்களுடன் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் முதலிடத்திலுள்ளார். இதில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்த இரட்டை சதமும் அடங்கும்.

 

அதேநேரம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் மற்றும், நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் தலா 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் உமேஷ் யாதவ் 18 விக்கெட்டுகளுடனும், முகமது ஷமி 17 விக்கெட்டுகளுடனும் அதற்கடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் தட்டிச் சென்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/martin-guptill-was-the-leading-run-getter-223622.html

  • கருத்துக்கள உறவுகள்

1999 முதல் தொடர்ச்சியாக வெற்றி.. இடையில் 2011 மட்டும் தவறிவிட்டது.. இந்திய ஆடுகளங்களில் குனிந்து கூட்டுவதற்கு ஆஸியால் முடியவில்லை.. :icon_idea::D

  • தொடங்கியவர்

சுவாரஸ்யமே இல்லாத உலகக் கோப்பை பைனல்... மக்கள் சலிப்பு!

 

சென்னை: இதுவரை பார்த்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலேயே சுவாரஸ்யமே இல்லாத போட்டி இதுதான்... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டிக்கு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு இது.

 

16a17wk.jpg

 

அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது இந்த இறுதிப் போட்டி என்பது உண்மைதான். மெக்கல்லம், கப்தில், செளதி, போல்ட் ஆகியோர் கலக்கப் போகிறார்கள், ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்கும்.. எனவே படு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சப்பென்று போய் விட்டது இந்த இறுதிப் போட்டி. சுவாரஸ்யமே இல்லாத உலகக் கோப்பை பைனல்... மக்கள் சலிப்பு!

 

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி நாறிப் போய் விட்டது. சொந்த ஊரில், தம்மாத்தூண்டு கிரவுண்டுகளில் வைத்து வந்த அணிகளையெல்லாம் வளைத்து வளைத்து சாத்தி அனுப்பிய நியூசிலாந்து, மெல்போர்ன் மைதானத்தைப் பார்த்து மல்லாந்து விழுந்து விட்டது. ஆஸ்திரேலியாவை சமாளித்து அடித்து நொறுக்க, கொஞ்சம் கூட திராணியே இல்லை இந்த அணியிடம்.

 

இந்த சொதப்பல் ஆட்டம் காரணமாக பெரிய ஸ்கோரை அது எட்ட முடியாமல் போனது. இதனால் சேஸிங்கிலும் ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு இல்லாமல் போய் விட்டது. இந்தியா இறுதிப் போட்டிக்கு வராத காரணத்தால் இந்திய ரசிகர்களும் கூட போட்டியின் மீது ஒரு ஆர்வம் இல்லாமல் காணப்பட்டனர். பாதி வீடுகளில் டிவியைப் போடவே இல்லை. சுவாரஸ்யமே இல்லாத உலகக் கோப்பை பைனல்... மக்கள் சலிப்பு! சமூக வலைதளங்களிலும் விதம் விதமான கருத்துக்களைக் காண முடிந்தது..

 

 

இறுதிப் போட்டி சுவராஸ்யமே இல்லை என்ற கருத்து காணப்பட்டது. கோப்பையை சீனிவாசன் வழங்கியதை வைத்து நாங்க திருப்பிக் கொடுத்துட்டோம் என்ற கமெண்ட்டையும் காண முடிந்தது. சுவாரஸ்யமே இல்லாத உலகக் கோப்பை பைனல்... மக்கள் சலிப்பு! பேசாமல் தென் ஆப்பிரி்க்கா வந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு கடும் போட்டியைக் கொடுத்திருக்கும் என்ற ஆதங்கத்தையும் காண முடிந்தது.

 

 

நியூசிலாந்து எப்படியும் கடும் போட்டியைக் கொடுத்து ஆஸ்திரேலியாவைக் கலங்கடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் போட்டி நிச்சயம் பெரும் ஏமாற்றம்தான். எப்படி ஆஸ்திரேலியாவிடம் இந்தியா சரண்டர் ஆனதோ, கிட்டத்தட்ட அதேபோல நியூசிலாந்தும் பதுங்கிப் போய் விட்டது... !

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/fans-disappointed-over-the-aus-vs-nz-finals-223624.html

  • கருத்துக்கள உறவுகள்

அவுசுக்கு வாழ்த்துக்கள்
நியூசிலாந்துத் தம்பிகள் சோர்வடையாமல் அடுத்த வெற்றிக்குத் தயாராக வேண்டும். :D

  • தொடங்கியவர்

கோப்பையை ஹியூஸுக்கு அர்ப்பணித்து நெகிழவைத்த கிளார்க்
 

 

உலகக் கோப்பையை 'குட்டி சகோதரன்' பிலிப் ஹியூஸுக்கு அர்ப்பணிப்பதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவித்தார்.

அந்தத் தருணத்தில் தொடங்கி, மறைந்த பிலிப் ஹியூஸ் ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் வலம் வரத் தொடங்கினார். ஆஸ்திரேலிய கேப்டனை ஆராதித்து பதிவுகள் கொட்டத் துவங்கின.

 

மைக்கேல் கிளார்க்கின் வெற்றிக் குறிப்புரை நெகிழவைப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த இளம் வீரர் பிலிப் ஹியூஸ், கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தாக்கியதில் மரணமடைந்தார். கிரிக்கெட் உலகை உலுக்கிய அந்த மரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் துயரமானது நினைகூரத்தக்கது.

 

கிளார்க் நெகிழ்ச்சி

மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி 5-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

பரிசளிப்பு விழாவில் பேசிய கிளார்க், ‘குட்டி சகோதரர்’ பிலிப் ஹியூஸுக்கு வெற்றிக் கோப்பையை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். என்ன மாதிரியான உலகக் கோப்பை தொடர் இது! பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் நியூசிலாந்து அணிக்கு பாராட்டுகள். நியூசிலாந்து அணி எப்போதும் தோற்கடிக்க கடினமான அணி. எப்போது விளையாடினாலும் நியூசி.யை வீழ்த்துவது எளிதல்ல. மெக்கல்லம் தனிப்பட்ட முறையில் அபாரமாக தன் அணியை வழிநடத்தினார்.

 

எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. அணிக்குள் நான் மீண்டும் வந்த பிறகு பயிற்சியாளர்களும் அணி வீர்ர்களும் எனக்கு அளித்த ஆதரவு அசாதாரணமானது. இங்கு என்னுடன் அவர்களும் நிற்க வேண்டும்.

ஒவ்வொரு முறை ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போதும் பிலிப் ஹியூஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பட்டையை நான் அணிவேன். சில மாதங்கள் கடினமாக இருந்தது. நாங்கள் 16 வீரர்களுடன் விளையாடியதாக பலரும் கூறினர்.

 

இந்த வெற்றியை ‘குட்டி சகோதரன்’ பிலிப் ஹியூஸுக்கு அர்ப்பணிக்கிறேன். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது ஓர் அசாதாரணமான சாதனையாகும். அதாவது எங்கள் மண்ணில் எங்கள் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையை வெல்வது பெரிய மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் கிளார்க்.

 

இன்றோடு ஓய்வு பெற்றார் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியின் மிகுந்த உத்வேகமுடைய கேப்டனான மைக்கேல் கிளார்க் இன்று நடந்து முடிந்த இறுதி ஆட்டத்தோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

இன்னும் சில தினங்களில் 34-வது வயதை எட்டவுள்ள கிளார்க், இறுதிப் போட்டி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

அப்போது, "நாளைய ஆட்டமே (இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி) எனது கடைசி ஒருநாள் போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது சகவீரர்கள், பயிற்சியாளர் லீமான் உள்ளிட்ட அனைவரிடமும் இது தொடர்பாக சற்று முன்னர்தான் தெரிவித்தேன்.

நியூஸிலாந்துடனான இறுதி ஆட்டம் எனது 245-வது ஒருநாள் ஆட்டமாகும். எங்கள் நாட்டு அணிக்காக இவ்வளவு ஆட்டங்களில் விளையாடியதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவும், பெரும் பேறாகவும் கருதுகிறேன். என்னுடன் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும், தற்போதைய அணிக்கும் நான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

 

நான் ஓய்வுபெறுவது எனக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் சரியான நேரம் என நினைக்கிறேன். அடுத்த கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்படலாம் என கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்" என்றார்.

 

இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிளார்க் 8 சதங்களுடன் 7,981 ரன்கள் குவித்துள்ளார். கிளார்க் தலைமையில் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 50-ல் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி அலசலை வாசிக்க - தகர்ந்த நியூஸி.யின் கனவும் 5 முறை சாம்பியனான ஆஸி.யும்!
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article7045576.ece

  • தொடங்கியவர்

தகர்ந்த நியூஸி.யின் கனவும் 5 முறை சாம்பியனான ஆஸி.யும்!
 

அருமையான கேப்டன்சி, பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் மூலம் 2015 உலகக் கோப்பையை மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி உலகக் கோப்பையை 5-வது முறையாக வென்றது.

தனது கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் அருமையான கேப்டன்சி செய்ததோடு, பேட்டிங்கில் 74 ரன்கள் எடுத்து தலைமைத்துவத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

 

1999-ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் கடைசியில் சொதப்பிய பிறகே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை நசுக்கியது ஆஸ்திரேலியா, அது ஓர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி போலவே இல்லமல் ஆனது.

2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த இந்தியா நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பதிலடி கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்து 359 ரன்களைக் குவிக்க, இந்தியா 39 ஓவர்களில் 234 ரன்களுக்குச் சுருண்டது. இதுவும் ஒரு நசுக்கும் வெற்றிதான்.

 

 

2007 உலகக் கோப்பை இறுதியிலும் இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா. தற்போது 2015-ம் ஆண்டு, என்னதான் உலக ரசிகர்கள் பலரும் தங்கள் இருதயபூர்வ ஆதரவை நியூஸிலாந்துக்கு அளித்தாலும், நிச்சயம் சிந்திக்கும் மனம் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று நினைத்திருக்க வாய்ப்புள்ளது.

ஓர் அணியாக திரண்டு தொழில் நேர்த்தியாக இந்தத் தொடர் முழுதும் ஆடியதும், மைக்கேல் கிளார்க்கின் கற்பனை வளம் மிகுந்த கேப்டன்சியும் வீரர்களின் அசாதாரண ஒத்துழைப்பும் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை இன்றும் ஒருமுறை நிறுவியது.

 

கடைசியில் பார்த்தால் ஆஸ்திரேலியாவுக்கு ஓர் அச்சுறுத்தலைக் கொடுத்தது பாகிஸ்தானே என்று கூற வேண்டியுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் லேசாக அன்று அரையிறுதியில் அச்சுறுத்தினர். ஆனால் மீண்டும் மைக்கேல் கிளார்க் ஓர் அருமையான பீல்ட் செட்-அப் செய்ய தவன் ஆட்டமிழக்க, அதன் பிறகு கோலியை ஒன்றுமில்லாமல் செய்து இந்தியாவை எளிதாகவே வீழ்த்தியது என்று கூற வேண்டும்.

 

மெக்கல்லம் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்...

மெல்போர்னில் இன்று மெக்கல்லம் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த போது நிச்சயம் குறைந்தது 280 ரன்களையாவது நியூசிலாந்து எடுக்கும் என்றே நினைத்தனர். 280 ரன்கள் என்றால் ஆஸ்திரேலியா திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிட்ச் கடினமாக இருந்தது. ஸ்பின் எடுப்பது கடினம். நல்ல பேட்டிங் விக்கெட், ஆனாலும் கொஞ்சம் கூடுதல் முயற்சி மேற்கொண்டால் பவுலர்களுக்கும் ஆதரவு இருக்கும் பிட்ச். ஓர் ஆஸ்திரேலியத் தன்மை பிட்ச். மெல்போர்னில் மதியம் கொஞ்சம் எப்பவும் ஸ்விங் ஆகும்.

ஆனால்... மிட்செல் ஸ்டார்க் மாற்றி யோசித்தார். மெக்கல்லம் தனது வழக்கமான பாணியைக் கைவிட்டு கொஞ்சம் நிதானித்திருக்கலாம். ஆனால், அவர் பிடிவாதமாக அதிரடி முறையைக் கடைபிடித்தார்.

 

ஆஸ்திரேலியா எப்படியிருந்தாலும் தனக்கு எதிராக அதிரடி செயல் திட்டத்துடன் இறங்குவார்கள் என்பதை மெக்கல்லம் எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் அடிக்க வேண்டிய அவசியமேயில்லை. ஏற்கெனவே ஸ்டார்க் பந்தில் பீட்டன் ஆன அவர் அடுத்த பந்தை மேலேறி வந்து அடிக்கப் போனார். பந்து மட்டைக்கும், காலுக்கும் இடையே வேகமாகச் சென்றது.

 

அடுத்த பந்து பவுன்சராக இருக்கலாம் என்பது போல் 'டீசர்' உருவாக்கினார் கிளார்க். சில 'சும்மா' பீல்டிங் மாற்றம் செய்தார். கிரீஸில் நின்ற மெக்கல்லமுக்கு வந்ததோ 148-149 கிமீ வேக யார்க்கர் லெந்த் பந்து மட்டையை விரைவில் இறக்க முடியவில்லை. முன் காலும் சரியாக குறுக்காக வரவில்லை, ஆஃப் ஸ்டம்ப் பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது. மைதானத்தில் கலப்பான உணர்வுகள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுச்சியுற்றனர், மெக்கல்லம் அவுட். இதுதான் வெற்றிக்கான அருமையான தொடக்கமாக அமைந்தது.

 

மார்டின் கப்டில், ஹேசில்வுட் வீசிய பவுன்சரை டாப் எட்ஜ் செய்து சிக்ஸ் அடித்தார். ஆனால் ஆட்டத்தின் 12-வது ஓவரில் சற்றும் எதிர்பாராமல் கிளென் மேக்ஸ்வெல்லை கொண்டு வந்தார் கிளார்க். இறுக்கமான களவியூகம். சிங்கிளைத் தடுக்கும் களவியூகமும் இருந்தது. ஆனால் அருகில் பீல்டர்கள் இல்லை.

மேக்ஸ்வெல் வீசிய ஆஃப் ஸ்டம்ப் நேர் பந்தை முன்னால் வந்து ஆடாத கப்தில் பின்னால் சென்று ஸ்டம்பை விட்டு ஒதுங்கி கட் செய்ய முயன்றார் பவுல்டு ஆனார்.

வில்லியம்சன் ஒரு முக்கியமான வீரர், ஆனால் அவருக்கு சில அருமையான பந்துகளை மிட்செல் ஜான்சன் வீசினார், அவரை கிளார்க் தனது களவியூகத்தினால் கட்டுப்படுத்தி 33 பந்துகளில் அவரால் 12 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. கடைசியில் மிட்செல் ஜான்சன் ஒரு இன்ஸ்விங்கரை லெக் அண்ட் மிடிலில் வீச பந்து கொஞ்சம் நின்று வந்தது. பவுன்சும் இருந்தது. நேராக ஜான்சனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 39/3.

 

கிராண்ட் எல்லியட்-ராஸ் டெய்லர் அளித்த நம்பிக்கை

39/3 என்ற நிலையில் அரையிறுதி நாயகன் கிராண்ட் எல்லியட், ராஸ் டெய்லர் இணைந்தனர். 23 ஓவர்களில் 111 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனாலும் ரன்கள் சுலபமாக வரவில்லை. ஹேசில்வுட், பாக்னர், மேக்ஸ்வெல் என்று அனைவரும் சிக்கனம் காட்டினர். ஆனாலும் இருவரும் இணைந்து 35-வது ஓவர் வரை நிதானமாகக் கொண்டு சென்றனர். 35-வது ஓவர் முடிவில் 150/3 என்று ஒரு அருமையான நிலையில் இருந்த்து. அங்கிருந்து கடைசி 15 ஓவர்களில் குறைந்தது 100 ரன்களை அடித்திருந்தால் கூட ஸ்கோர் 250 என்று ஒரு சவாலை ஏற்படுத்தியிருக்கும்.

 

அருமையான கேப்டன்சி, பாக்னர் ஏற்படுத்திய திருப்பு முனை:

36-வது ஓவர் பாக்னரைக் கொண்டு வந்தார் கிளார்க், நல்ல களவியூகம். ஆனால் டெய்லரை அவர் வீழ்த்திய பந்து பெரிய பந்துவீச்சல்ல. வைடாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் லெந்த்தில் விழுந்த பந்தை நின்ற இடத்திலிருந்து மட்டையை நீட்டி தொட்டார், ஹேடின் அதனை அருமையாக தாழ்வாகப் பிடித்தார்.

அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் களமிறங்கி ஒரு பந்தை எதிர்கொண்டு அதே பாக்னர் ஓவரில் அருமையான ஒரு பந்தில் 0-வில் பவுல்டு ஆனார்.

கடைசியாக கிராண்ட் எல்லியட்டுக்கு ஆதரவளிக்க இருந்த விக்கெட் கீப்பர் லூக் ரோன்க்கியை ஸ்டார்க் வீழ்த்தினார். இங்குதான் கிளார்க்கின் கேப்டன்சி நிற்கிறது.

ஸ்டார்க்கைக் கொண்டு வந்து, ஸ்லிப்பில் தானே வந்து நின்றார். ரோன்க்கி அது தெரியாமல் மோசமான ஷார்ட்டை தேர்வு செய்து கிளார்க்கிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெட்டோரிக்கு ஜான்சன் வீசிய பந்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை பவுல்டு ஆனார்.

 

எல்லியட் கடைசியில் ஆளில்லாமல் 83 ரன்களில் அடிக்கப் போய் பாக்னர் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி 33 ரன்களில் 7 விக்கெட்டை 10 ஓவர்களில் இழந்த நியூசிலாந்து 45 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.

1983 உலகக் கோப்பை... 183 ரன்கள் சென்டிமென்ட்டை உடைத்த ஆஸ்திரேலியா

1983 உலகக் கோப்பையில் இந்தியா 183 ரன்கள் எடுத்து மே.இ.தீவுகளை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நியூசிலாந்தும் இன்று அதனை ஆஸ்திரேலியாவுக்குச் செய்யும் என்ற சென்டிமென்ட் நிலவியது.

 

ஆனால், மிகக் குறைந்த இலக்கைத் தோற்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா சமீப காலங்களில் பலவீனமான அணியைக் கொண்டிருக்கவில்லை.

மெக்கல்லம் தன்னால் இயன்ற தாக்குதல் முறை களவியூகம் மற்றும் பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து பார்த்தார்.

ஆனால் ஏரோன் பிஞ்ச் ஆட்டமிழந்த பிறகு வார்னருக்கு சரியாக வீசவில்லை, ஷார்ட் பிட்ச் வீசினர் அவர் அதிரடியாக 45 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

கிளார்க் களமிறங்கி தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஓர் அற்புதமான இன்னிங்ஸை ஆடி 74 ரன்களை எடுத்து கடைசியில் வெற்றிக்கு 9 ரன்கள் இருக்கும் போது ஹென்றி பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். கிளார்க் அடித்த 10 பவுண்டரிகளில் 2 மட்டும் ரிஸ்க் ஷாட். மற்றபடி அத்தனையும் அழகான பவுண்டரிகள். வெட்டோரியை ஓர் அருமையான லாங் ஆஃப் சிக்ஸ் என்று கேப்டன்சியை முழுமையுடன் நிறைவு செய்தார் கிளார்க்.

 

இறுதிப் போட்டியில் முதன் முதலாக நுழையும் நியூஸிலாந்து அதற்கான தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆடியது. இதுவும் இன்னொரு ஆட்டமே என்பது போல் இருந்தது அதன் அணுகுமுறை. அதனால்தான் மெக்கல்லம் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் ஆடினார். பெரிய அணிகளை, குறிப்பாக ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டிகளில் எதிர்கொள்வது எப்படி என்பதை தற்போதைய அணிகள் சிந்தித்து திட்டமிட வேண்டிய தேவையுள்ளது.

முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி, கடைசியில் தன் கனவைத் தானே தகர்த்துக் கொண்டாலும்கூட, நியூஸிலாந்துக்கு இது முடிவல்ல... ஆரம்பம்!

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7045566.ece
 

 

  • தொடங்கியவர்

15rnj8y.jpg


17fo00.jpg


2ivmqds.jpg


29aqn44.jpg


258o35x.jpg


qpfkfo.jpg


5oghaa.jpg


2dsllwp.jpg


2najqyp.jpg


i6m8f7.jpg


e01njr.jpg

  • தொடங்கியவர்

கோப்பையோடு விடைபெற்ற கிளார்க்; எண்கள் சொல்லும் சிறப்பு
 

2ng7fqo.jpg

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கையோடு பிரியா விடை பெற்றிருக்கிறார் அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5-வது முறையாக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தாங்கள் ஜாம்பவான்கள் என்பதை மீண்டுமொருமுறை ஆஸ்திரேலிய வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

 

கடந்த 1987-ல் முதன் முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா, 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று முறை சாம்பியனாகி வெல்லவே முடியாத அணி என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. 2011-ம் ஆண்டு இந்தியாவிடம் தோற்று கோப்பையைக் கைநழுவ விட்டபின், இம்முறை மீண்டும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கையோடு பிரியா விடை பெற்றிருக்கிறார் அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

 

2003-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கிளார்க், பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்தார். 2007 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கியப் பங்கு வகித்த கிளார்க், ரிக்கி பாண்டிங்கிற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

 

ஆஸ்திரேலிய அணியின் மிகுந்த உத்வேகமுடைய கேப்டன் என்றழைக்கப்படும் மைக்கேல் கிளார்க், உடற்தகுதி பிரச்சினை, சகவீரர்களுடன் பிரச்சினை என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை சந்தித்தபோதும், அதை ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.

எப்போதுமே புன்னகை பூத்த முகத்துக்கு சொந்தக்காரரான கிளார்க், தனது கடைசி ஆட்டத்தில் அபாரமாக ஆடி 72 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து அசத்தலான ஓர் இன்னிங்ஸை கொடுத்திருக்கிறார்.

 

அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது மைதானத்தில் இருந்த சுமார் 93 ஆயிரம் ரசிகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரியா விடை கொடுத்தனர்.

எத்தனையோ ஜாம்பவான்கள் கிரிக்கெட்டில் வந்து போயிருக் கலாம். ஆனால் கிளார்க்கிற்கு கிடைத்தது போன்றதொரு பிரியா விடை, மற்றவர்களுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 8 சதங்களுடன் 7,981 ரன்களைக் குவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற கையோடு ஓய்வு பெற்றுள்ள 2-வது கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆவார். இதற்கு முன்னர் 1992-ல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றபோது அப்போதைய கேப்டன் இம்ரான் கான் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ஹியூஸுக்கு அர்ப்பணம்

உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த எனது இளைய சகோதரர் பிலிப் ஹியூஸுக்கு இந்த உலகக் கோப்பை வெற்றியை அர்ப்பணிக்கிறேன். பிலிப் ஹியூஸ் வெற்றியை மிக பிரம்மாண்டமாக கொண்டாடும் வழக்கம் கொண்டவர். அதனால் உலகக் கோப்பை வெற்றியை இன்று இரவு (நேற்று இரவு) மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப் போகிறோம் என்பதற்கு நான் உத்தரவாதம் என்றார்.

தனது நெருங்கிய நண்பரான பிலிப் ஹியூஸ் நினைவாக கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் கிளார்க், "நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வரை இந்த பட்டையை அணிந்து விளையாடுவேன். ஹியூஸ் இறந்தது முதல் அடுத்த சில மாதங்கள் வரையிலான நாட்கள் கடினமான தருணம்" என்றார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27-ம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர் நாயகன் மிட்செல் ஸ்டார்க்

இந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றுள்ளார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் ஜான்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் உலகக் கோப்பை தொடங்கிய பின்னர் அதை மாற்றினார் ஸ்டார்க். 8 ஆட்டங்களில் விளையாடிய அவர் தனது துல்லியமான யார்க்கரால் எதிரணிகளை திக்குமுக்காட வைத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலி டத்தைப் பிடித்தார். மிட்செல் ஸ்டார்க் வீழ்த்திய விக்கெட்டுகளில் 55 சதவீதம் போல்டு மூலம் கிடைத்தவையாகும்.

 

எந்த வருத்தமும் இல்லை: மெக்கல்லம்

கனவுகளோடு களமிறங்கிய நாங்கள் தொடர்ந்து சிறப்பாகவும், த்ரில்லாகவும் விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறிய பிறகு தோற்றிருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் களமிறங்கியபோதே ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான ஆட்டத்தில் இறங்கிவிட்டது. உலக சாம்பியன் என்ற பெருமையோடு விடை பெறுவதற்கு மைக்கேல் கிளார்க் தகுதியானவர். நான் ஆட்டமிழந்த பந்து மிக வேகமாக சுழன்று வந்த பந்து. நாங்கள் திட்டமிட்டபடி எங்களால் செயல்பட முடியவில்லை. எனினும் நாங்கள் 2-வது சிறந்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம் என்றார்.

 

மெல்போர்னில் குவிந்த 93 ஆயிரம் ரசிகர்கள்

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தைக் காண 93 ஆயிரத்து 13 ரசிகர்கள் மெல்போர்ன் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதன்மூலம் அதிக ரசிகர்கள் நேரில் பார்த்த போட்டி என்ற பெருமை இந்த ஆட்டத்துக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக 2013-ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (ஆஷஸ் தொடர்) இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 91 ஆயிரத்து 112 பேர் மைதானத்திற்கு வந்ததே சாதனையாக இருந்தது.

1e51me.jpg

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7047995.ece

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டிக்குரிய மரியாதையை மெக்கல்லம் அளிக்கவில்லை: மேத்யூ ஹெய்டன்
 

 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதை நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் மதிக்கவில்லை என்று ஆஸி. முன்னாள் வீரர் ஹெய்டன் விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். அவர் இறுதிப் போட்டியை மதிக்கவில்லை என்று மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார்.

 

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் மேத்யூ ஹெய்டன் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: "மெக்கல்லம் இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம். 5 அல்லது 6 பந்துகளாக கூட அது இருக்கலாம்.

 

முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பு மெக்கல்லம் என்ற தாக்கம் குறித்து நிறைய பேசப்பட்டது.

அவர் டாஸ் போட வேண்டும், செய்தியாளர்களிடம் பேசியாக வேண்டும், உடனே கால்காப்பைக் கட்டிக் கொண்டு இறங்க வேண்டும், அணியினரிடத்தில் பேச வேண்டும்...இவையெல்லாம் சிரமானதுதான் என்பதை நான் மறுக்கவில்லை.

 

அவர் அப்படித்தான் ஆடுவார், அவரது அச்சமற்ற தைரியமான அதிரடி நியூசிலாந்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தியது என்பதெல்லாம் சரி.

ஆனால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒரு மிகப்பெரிய நிகழ்வு, மிகப்பெரிய மைதானம், மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள், சூழ்நிலையின் தாக்கத்தை மெக்கல்லம் கொஞ்சம் பரிசீலித்திருக்கலாம்.

 

இறுதிப் போட்டி என்பதற்கு அவர் இன்னும் கொஞ்சம் மரியாதை அளித்திருக்க வேண்டும், அவர் இன்னும் கொஞ்சம் மதிப்பளித்திருக்க வேண்டும்.

பெரிய பவுண்டரிகள்.. இது நம் மனதில் எப்போதும் தாக்கம் செலுத்தும், மெக்கல்லம் இதனை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் இதுவரை அவர் அடித்த சிக்சர்கள் பவுண்டரிகளை விட இங்கு கூடுதல் முயற்சி தேவை.

 

சிறிய இலக்காக இருந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்க்ள் அதனை கவனத்துடன் ஆடி எடுத்தனர். ஒரு துல்லியமான விரட்டல். இப்படித்தான் இங்கு ஆட வேண்டும்" என்று அந்தப் பத்தியில் கூறியுள்ளார் மேத்யூ ஹெய்டன்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article7049261.ece

  • தொடங்கியவர்

அசைக்க முடியாத அவுஸ்திரேலியா: 5ஆவது தடவை உலக சம்பியனாக
 

 

5 கண்டங்களிலும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றி, 5ஆவது தடவையாக உலகக்கிண்ணம் வென்று உலகக் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அசத்தல் சம்பியனாக அவுஸ்திரேலியா தன்னை அற்புதமாக வெளிக்காட்டியுள்ளது.

உலகக்கிண்ணம் இம்முறை மிகப் பொருத்தமான அணிக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

மிகச் சிறந்த அணி, சிறப்பாக விளையாடிய அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்தது.

 

எல்லாவிதமான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்திய அணிக்கு கிண்ணம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் ஆடுகளத்திலேயே பலியான தங்கள் சக வீரனை சகோதரனாக, அவனுக்காக அர்ப்பணிக்க, தங்கள் நாட்டுக்கான ஐந்தாவது உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது அவுஸ்திரேலியா.

 

தடுமாறாமல், கொண்ட குறி மாறாமல், வெல்வதற்குத் தேவையான அணி, வியூகம், ஆற்றலைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் வெற்றி மிகப் பொருத்தமானதும், எதிர்பார்த்ததுமே.

 

எந்த அணியையும் வீழ்த்தும் பலமும், பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையுமே அசத்தலாகவும், ஆதிக்கம் செலுத்திப் பெற்றது அவுஸ்திரேலியா.

ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் ஹேஸில்வூட் என்று எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்கள் தடங்களை அழுத்தமாக இந்த வெற்றித்தொடரில் பதித்துள்ளனர்.

தங்களை சிறப்பாக வழிநடத்திய தலைவன், தன்னை உணர்ந்து விடைபெறும் நேரம், அவனுக்காக வழங்க ஒரு கிண்ணம் இந்த உலகக்கிண்ணம்.

33வயதில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிளார்க், உலகை வென்ற, இன்னும் உலகை வெல்லும் ஓர் அணியையும் விட்டுச் செல்கிறார்.

அடுத்த உலகக்கிண்ணத்தை வெல்லும் அவுஸ்திரேலிய அணியை இப்போதிருந்தே புதிய தலைவரின் கீழ் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் வழங்கி செல்லும் கிளார்க்குக்கு வாழ்த்துக்கள்.

 

 

இந்த வெற்றி கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கியுள்ள பல்வேறு தகவல்களில் மிக முக்கியமானது, இந்த பெரும்பான்மையாக இளம் வீரர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி இன்னும் 10 வருடங்களுக்காவது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

கடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலாவது பந்து முதல் காட்டிய ஆதிக்கமும் நியூசிலாந்தை தலையெடுக்க விடாமல் மடக்கிப் போட்டதும், உண்மையான அவுஸ்திரேலியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தியது.

 

இறுதிப் போட்டிக்கு முன்னதான அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டில் விளையாடிவிட்டு, மாபெரும் இறுதிப் போட்டியை மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அசுர பலமும் ஆற்றலும், சொந்த நாட்டின் ரசிகர்களின் பலமும் சேர்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது இலகுவான காரியம் அல்ல.

பிரம்மாண்டமான மைதானம், திரண்டு வந்திருந்த 93,000க்கும் அதிகமான ரசிகர்கள் (உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் உலக சாதனை ரசிகர் எண்ணிக்கை இதுவாகும்), முதற்சுற்றில் தோற்றதற்கு பழி வாங்கக் காத்திருந்த அவுஸ்திரேலியாவின் வேகம் என்று அத்தனை விஷயமும் சேர்ந்துகொள்ள நியூசிலாந்து சந்தித்தது மிகப்பெரிய அழுத்தம்.

 

நாணய சுழற்சி அதிர்ஷ்டம் சேர்ந்தாலும், அவுஸ்திரேலிய அணி ஒரு திட்டத்தோடேயே களமிறங்கி இருந்தது.

அத்தனை பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி பதம் பார்த்திருந்த நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் இரு பந்துகளில் தடுமாறி மூன்றாவது பந்தில் விக்கெட் தகர்க்கப்பட்டதோடு அவுஸ்திரேலிய அணி போட்டியைத் தங்கள் வசப்படுத்திவிட்டது.

மக்கலமிடம் காணப்பட்ட ஒருவகைப் பதற்றம், நியூசிலாந்து அணியின் ஏனைய வீரர்களுக்கும் தொற்றியதுபோல ஒரு போராட்டம் இல்லாமலேயே சரணடைந்தது போல ஆனது நியூசிலாந்தின் துடுப்பாட்டம். க்ராண்ட் எலியட் தவிர்த்து.

ஆபத்தில்லாத ஒரு மக்ஸ்வெல்லின் பந்துக்கு தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக, குமார் சங்கக்காராவை முந்திய மார்ட்டின் கப்டில் ஆட்டமிழந்தது இதற்கு நல்ல உதாரணம்.

 

ரொஸ் டெய்லர் - எலியட் ஆகியோரின் சத இணைப்பாட்டம், நியூசிலாந்தைக் காப்பாற்றியிருந்தாலும் கூட, போராட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கு சவால் விடும் அளவுக்கோ இல்லை.

அரையிறுதியில் நியூசிலாந்து அணி தடைதாண்டி, இறுதிப் போட்டிக்கு வர உதவிய ஹீரோவான எலியட், அந்தப் போட்டியில் இருந்த அதே மன நிலை & அதேவிதமான அடித்தாடும் ஆற்றலைத் தொடர்ந்தார்.

மிகத் துல்லியமாக பந்துவீசிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவ்வாறு எதிர்கொண்டு நிதானமாகவும் வேகமாகவும் ஆடுவது என்பது இலகுவான காரியமல்ல.

 

இந்த இணைப்பாட்டத்தை உடைத்தவர் முக்கியமான விக்கெட்டுக்களை தொடர் முழுவதும் எடுத்த ஜேம்ஸ் போல்க்னர்.

ரொஸ் டெய்லர் ஹடினின் அபார பிடிஎடுப்பு ஒன்றுக்கு ஆட்டமிழக்க, அடுத்த இரு பந்துகளில் போல்க்னர் வீசிய அருமையான பந்து ஒன்று, பயங்கரமான அதிரடி வீரர் அன்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தது.

 

மக்கலம் போலவே அன்டர்சனும் பூஜ்ஜியம்.

இந்த ஆட்டமிழப்புக்கள், அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளரால் கைப்பற்றப்பட்ட சடுதியான இரு விக்கெட்டுக்கள் 1992இல் இதே மெல்பேர்னில் வசீம் அக்ரம் அடுத்தடுத்து வீழ்த்திய இங்கிலாந்து விக்கெட்டுக்களை ஞாபகப்படுத்தியது.

மிக எதிர்பார்க்கப்பட்ட 'முன்னாள்' அவுஸ்திரேலியரான ரொங்கியும் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு நியூசிலாந்து அணியை வாரிச் சுருட்டியது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சும், அதற்குத் துணை நின்ற களத்தடுப்பும், சமயோசிதமாகவும், அதேவேளையில் எதிரணியை கூடுமான விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும் அணியை வழிநடத்திய தலைவர் கிளார்க்கும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், பொதுவாகவே கண்ணியமான, பழகுதற்கினிய நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறும்போது தகாத வார்த்தைகள் மற்றும் கோபப்படுத்தும் வசைகளுடன் வழியனுப்பியது வேண்டாத செயலாகவே தெரிந்தது.

 

அதிலும் சிறப்பாக ஆடிவிட்டு களம் விட்டு நீங்கிய எலியட், இறுதிப் போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அமைதியான மனிதர் வெட்டோரி ஆகியோரையும் திட்டி அனுப்பியது அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு குரூர முகத்தைக் காட்டிய செயல்கள்; அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கே இந்த செயல் மகிழ்ச்சியளித்திராது.

 

நியூசிலாந்து பெற்ற 183 ஓட்டங்கள், 1983 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கையை ஞாபகப்படுத்தியது. அந்தப் போட்டியில் இந்தியா தன்னுடைய மிதவேகப் பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சினால் பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியையே சுருட்டி 40 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றதும் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

 

ஆனால், இந்த அவுஸ்திரேலிய அணி தமக்குக் கிடைத்த வாய்ப்பை விடுகின்ற அளவுக்கு தடுமாறக்கூடிய அணி அல்ல.

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய ஆரம்ப இணைப்பு சறுக்கியது.

நியூசிலாந்தின் ஐவர் பெற்ற பூஜ்ஜியங்களுக்கு அடுத்தபடியாக ஏரொன் ஃபிஞ்ச் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து மகிழ்ச்சியடையக் கூடியதாக இருந்த ஒரே சந்தர்ப்பம் இது தான்.

 

முதலில் வோர்னரின் அதிரடி, பின்னர் தனக்கேயான நாளாக அன்றைய நாளை - தன்னுடைய ஒருநாள் சர்வதேசப் போட்டியின் இறுதி நாளை மாற்றிய தலைவர் கிளார்க்கின் அற்புத ஆட்டம், இவை இரண்டையும் சரியாக செலுத்தும் நிதானமான மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவின் எதிர்கால நாயகன் ஸ்டீவ் ஸ்மித் இவற்றோடு அவுஸ்திரேலிய வெற்றி இலகுவானது.

ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது தொடர்ச்சியான 50க்கு மேற்பட்ட ஓட்டப்பெறுதியை அன்றைய தினம் பதிவு செய்து உலகக்கிண்ண சாதனையை ஏற்படுத்தினார்.

ஸ்மித் 3ஆம் இலக்கத்தில் வந்த பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் உறுதியுடன், வலிமைப்பட்டுள்ளது.

வழமையாக வந்தவுடன் வேகமாக அடித்தாடி தான் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மித், அன்றைய தினம் சத இணைப்பாட்டத்தில் தனது தலைவர் கிளார்க்கை அடித்தாட விட்டு அழகு பார்த்தார்.

 

ஸ்மித்தின் அழகான, நிதானமான ஆட்டம் கண்டு ஒரு தடவை ஹென்றி வீசிய பந்து விக்கெட்டில் படும், பேல்ஸ் கீழே விழாமல் மரியாதை செய்திருந்தது.

72 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த கிளார்க், ஒரு லட்சத்தை அண்மித்த ரசிகரின் கரகோஷத்துடனும் மரியாதையுடனும் நியூசிலாந்து வீரர்களின் வாழ்த்துக்களோடும் விடைபெற்றார்.

அதன்பின் வொட்சன் உள்ளே வர, ஸ்மித்தின் துடுப்பினால் பெறப்பட்ட 4 ஓட்டம் ஒன்றுடன் மீண்டும் ஓர் உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது.

உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்பதுவும், பின்னர் பதினொருவரில் இடம்பிடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவிருந்த வொட்சன் - ஆடுகளத்திலே நிற்க, எதிர்கால அவுஸ்திரேலியா நம்பியிருக்கும் அடுத்த தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஸ்மித்தின் துடுப்பின் மூலம் வெற்றி ஓட்டம் பெறப்பட்டது சிறப்பு.

1992இல் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட வர முடியாமல் போன ஏமாற்றம், இம்முறை தங்கள் மக்களுக்கு முன்னால் பெறப்பட்டது வரலாறில் இடம்பிடிக்கும் ஒரு மாபெரும் பெற்றி.

 

இப்போது அவுஸ்திரேலிய அணி மட்டுமே அத்தனை கண்டங்களிலும் உலகக்கிண்ணம் வென்றுள்ள ஒரே அணி.

101 பந்துகள் மீதம் இருக்க இலகுவான வெற்றியைப் பெற்ற அணி, இந்த வெற்றியை தங்கள் தலைவர் மைக்கேல் கிளார்க் சொன்னதன் படி, தங்கள் மரித்துப்போன வீரன் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணித்தது.

 

கோலாகலமான கொண்டாட்டங்களின் மத்தியில், தனது ஓய்வை உலகக்கிண்ண வெற்றியுடன் பெருமையுடன் அறிவித்த கிளார்க் (அவருடன் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினும் சேர்ந்துகொண்டார்), தங்களது பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தங்களது வீரர்கள் அத்தனை பேரையும் பூரண உடற்தகுதியோடு வைத்திருக்கும் அணியின் உதவியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களையும் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

ஒரு தலைவனாக முன்னின்று சரியான பாதையில் செலுத்தி, அணியாக அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தி, இறுதிப் போட்டியில் தானே ஓட்டங்களைக் குவித்து, தன்னைப் பற்றியிருந்த அவநம்பிக்கைகளையும் போக்கி பெருமிதமாக கிளார்க் விடைபெற்றிருக்கிறார்.

மறுபக்கம் 8 போட்டிகளைத் தொடர்ந்து வென்று வந்து, இறுதிப்போட்டியில் தோற்றுப்போன நியூசிலாந்து ரசிகர்களின் அன்பை வென்றுகொண்டது.

இந்த அவுஸ்திரேலிய அசுரப் புயல் முன் எந்த அணியும் நின்றிருக்க முடியாது என்பதே உண்மை.

ஆனால், இப்படியொரு வாய்ப்பு இனியொரு தடவை நியூசிலாந்துக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.

பெரிய இறுதிப்போட்டிகள் வந்திராத அனுபவக் குறைவும், அழுத்தமும் மக்கலமின் திறமையான அணியை சறுக்கிவிட்டது நேற்று.

2011இல் நம்மவர் முத்தையா முரளிதரன் போல, அன்றைய தோல்வியுடன் நியூசிலாந்தின் டானியல் வெட்டோரி ஓய்வு பெறுகிறார்.

முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை உடைத்த போல்க்னர், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

38 சதங்கள் குவிக்கப்பட்ட (இவற்றில் இரண்டு இரட்டைச் சதங்கள்), போட்டியொன்றுக்கு கிட்டத்தட்ட 10 சிக்சர்கள் வீதம் பெறப்பட்ட, துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்த உலகக்கிண்ணத் தொடரின், தொடர் நாயகன் விருது 22 விக்கெட்டுக்களை 10க்கு அண்மித்த சராசரியில் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் இடது கை இளமைப் புயல் மிட்செல் ஸ்டார்க்குக்குக் கிடைத்தது, மிகப்பொருத்தமும், அவரது முயற்சிக்கும் ஆற்றலுக்குமான பரிசேயாகும்.

 

இந்தியாவின் கிரிக்கெட் 'கடவுள்' சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு இந்த விருதுகளை வழங்க வைத்தது கிரிக்கெட்டுக்கும் பெருமையாகும்.

அவுஸ்திரேலியா கைப்பற்றிய உலகக்கிண்ணம் மற்ற அணிகளை விட 1987 முதல், இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் எங்களிடம் இருக்கிறது என்பதை மீண்டும் அறுதியிட்டு சொல்லியிருப்பதோடு, மைக்கேல் கிளார்க்கையும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தலைவராக உறுதியாக காட்டிவிட்டு செல்கிறது.

ஆனால், மற்ற அணிகளின் தலைவர்கள் விடைபெறும்போது விட்டுச் செல்லும் பாரிய வெற்றிடம் போல இல்லாமல், கிளார்க் அடுத்த தசாப்த காலத்துக்காவது உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ஒரு கிரிக்கெட் அணியையும், அந்த அணியை வழி நடத்தப்போகும் தற்காலிகத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, மற்றும் நீண்டகாலத்துக்கான இளமைத் தெரிவு ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் அடையாளம் காட்டிவிட்டு விடைபெற்றுள்ளார்.

 

இலங்கையின் கிரிக்கெட் சிகரங்கள், உலக கிரிக்கெட்டில் உன்னத இடம்பிடித்த மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார மற்றும், பாகிஸ்தானின் ஷஹிட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், சிம்பாப்வேயின் நம்பிக்கை நாயகன் பிரெண்டன் டெய்லர் ஆகியோரின் ஓய்வுகளை நெகிழ்ச்சியோடு பார்த்த எமக்கு, இன்னும் முக்கிய மூன்று முத்துக்களின் ஓய்வையும் தந்து அவுஸ்திரேலியா என்ற பொருத்தமான இடத்தை தெரிவு செய்து உலகக்கிண்ணம் விடைபெற்றுள்ளது.

தனது 'இளைய சகோதரன்' பிலிப் ஹியூசுக்கான அர்ப்பணமாக உலகக்கிண்ணத்தை தானே வென்று, அணிக்கும் நாட்டுக்கும் ரசிகருக்கும் பெருமை தேடி, தான் உப ஆகா இருந்தபோது இந்தியாவிடம் இழந்த கிரீடத்தை, சொந்த மண்ணில் வென்று கொடுத்துப் பெருமையுடன் விடைகொள்கிறார் கப்டன் கிளார்க்.

- See more at: http://www.tamilmirror.lk/143037#sthash.UIDBHsxs.dpuf

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: உச்சகட்டம் சொல்லும் பாடங்கள் என்ன?
 

 

இந்தியா வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த போது சமூக வலைதளங்களில் சில செய்திகளும் காட்சித் துணுக்குகளும் வெறிபிடித் தாற்போலப் பரவிக்கொண்டி ருந்தன. பாகிஸ்தானை அடுத்துத் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு ஒரு செய்தி பரவியது. “யார் பச்சை சட்ட போட்டாலும் அடிப் போம்”. பாகிஸ்தானைப் போலவே தென்னாப்பிரிக்க அணியினரும் பச்சை நிறச் சீருடை அணிபவர்கள்.

 

காலிறுதியில் வங்கதேசம் என்றதும் “மறுபடியும் பச்ச சட்டயா?” என சுரேஷ் ரெய்னா எக்காளத்துடன் சிரிக்கும் காட்சித் துணுக்கு பரவியது. பச்சையைக் கண்டால் சீறி அடிக்கும் வீரர்கள் மஞ்சளைக் கண்டதும் பயந்து பம்முவது ஏன் என ரசிகர்கள் இப்போது கேட்கிறார்கள்.

 

கிரிக்கெட்டைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள்கூட ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதல்ல என்று சொல்லிவிடுவார்கள். கள நிலவரம் அறிந்தவர்களுக்கு இந்தியா அரையிறுதியில் ஆஸ்தி ரேலியாவை வெல்லும் என்ற நம்பிக்கை வந்திருக்காது. இந்தியா இந்தத் தொடரில் நன்றாகவே ஆடியது. குறிப்பாக அதன் பந்து வீச்சு வழக்கமான தவறுகளைத் திருத்திக்கொண்டு கூர்மை பெற்றிருந்தது. முதல் ஆறு மட்டையாளர்களில் ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு போட்டியில் முக்கியப் பங்காற்றினர்.

ஆனால் கறாராகப் பார்த்தால் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு சவால் விடக்கூடிய அணி அல்ல என்பது புரியும். இந்த இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும் இந்தியா காலிறுதிக்கு வந்திருக்கும்.

 

எல்லாப் போட்டிகளிலும் வென்றதால் முதலிடம் பெற்று, ஒப்பீட்டளவில் பலவீனமான அணியுடன் காலிறு தியில் மோதும் வாய்ப்புக் கிடைத் தது. எனவே இந்தியா புதிய தொரு அணியாக, பெரிய அணி களைப் பெரிய போட்டிகளில் வெல் லக்கூடிய அணியாக உருவாகி விட்டது என்பதைச் சொல்ல இந்த வெற்றிகள் போதாது.

 

வெற்றிகளின் பலன் என்ன?

ஆனால் தன்னம்பிக்கையைக் கூட்ட இந்த வெற்றிகள் போதும். தன்னம்பிக்கையும் முனைப்பும் உள்ள அணிகள் தங்களது திற மையை முழுமையாக வெளிப் படுத்தி ஆடும். சில சமயம் எல்லை களையும் விரிவுபடுத்தும். ஆனால் அதுதான் அரையிறுதியில் நடக்க வில்லை. தொடர்ந்து ஏழு போட்டி களில் வென்ற அடையாளமே தெரியவில்லை. டாஸில் தோற்றுப் பந்து வீசத் தொடங்கியதுமே இந்தியாவின் தன்னம்பிக்கை காணாமல்போனது.

ஏழு போட்டிகளில் எழுபது விக்கெட்டுகளை எடுத்த பெருமையுடன் சிட்னிக்கு வந்த இந்திய வீச்சாளர்களிடம் அத்தனை விக்கெட்களை எடுத்த தெம்பைக் காண முடியவில்லை. தறிகெட்ட வீச்சாக இல்லை என்றாலும் எந்தத் தொந்தரவையும் தராத வீச்சாகவே அமைந்தது.

ஆஸ்திரேலியாவும் அதிரடி ஆட்டத்தில் இறங்காமல் நிதானமாகவே அணுகியது. பதற்றமில்லாமல் ரன் குவித்தது. கையில் விக்கெட் இருந்ததால் பையில் ஸ்கோர் தானாக வரும் என்பதை உணர்ந்து ஆடியது.

ஆஸ்திரேலியப் பந்து வீச்சின் வலிமையை வைத்துப் பார்க்கும்போது 328 என்பது எந்த அணிக்கும் எந்தக் களத்திலும் சவாலான இலக்குதான். 300, 307 ஆகிய இலக்குகளை வைத்து முறையே பாகிஸ்தான், தென்னாப் பிரிக்காவை இந்தியாவால் மிரட்ட முடியும் என்றால் 328 என்னும் இலக்கை வைத்து ஆஸ்திரேலி யாவால் இந்தியாவை முடக்க முடியாதா?

அண்மைக் காலமாகச் சற்றே தொய்வடைந்திருந்த மிட்செல் ஜான்சன் இந்தப் போட்டியில் மீண்டும் தன் ஆட்டத் திறனைப் பெற்றுவிட்டார். மிட்செல் ஸ்டார்க்கின் வீச்சில் நிஜமாகவே பொறி பறந்தது. இவர்களுக்குத் துணையாக ஹேஸில்வுட்டும் ஜேம்ஸ் ஃபாக்னரும் கூர்மையாகப் பந்துவீச, இந்தியா மிரண்டது.

 

 

கோலி செய்த தவறு

இந்தியா தோற்றதில் தவறில்லை. ஆனால் தோற்ற விதம்தான் தவறு. இந்தியப் பந்து வீச்சு 300 ரன்களுக்கு மேல் கசியவிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய மட்டையாளர்கள் போராடாமல் வீழ்ந்ததுதான் அவமானம். அதிருஷ்ட வாய்ப்புகளால் தப்பிப் பிழைத்த ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவனும் இன்னும் சிறிது பொறுப்புணர்வுடன் ஆடியிருக்கலாம். விக்கெட்டைக் காப்பாற்றிக்கொண்டால் பிறகு அடித்து ஆடலாம் என்பதால் விராட் கோலி அவசரப்பட்டு புல் ஷாட் அடிக்காமல் இருந்திருக்கலாம்.

அயல் நாடுகளில் சிறப்பாக ஆடிவரும் அஜிங்க்ய ரஹானே மேலும் தன்னம்பிக்கையுடன் ஆடியிருக்கலாம். இந்த நால்வரும் இந்தத் தொடரில் அவ்வப்போது பிரகாசித்தார்களே தவிர யாருமே சீராக ஆடவில்லை. அயல் மண்ணில் வலுவான அணிகளுக்கு எதிராகப் பெரிய போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் அதிகம் எடுபட்டதில்லை. இந்தப் போட்டியும் அவரது போதாமையைக் காட்டிவிட்டது. மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்தான். ஆனால் தொடக்கமே இல்லாத போது எங்கிருந்து முடிப்பது?

 

ஜடேஜா தேவையா?

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மட்டையாலோ பந்தினாலோ சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பங்களிப்பும் செலுத்தவில்லை. அவரைத் தேர்வுசெய்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பிவிட்டார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததால் இந்தக் குறை தெரியவில்லை. முக்கியமான போட்டியன்று எல்லாக் குறைகளும் அம்பலமாயின. இந்தியா பெரிய அணிக்கெதிரான பெரிய போட்டிக்குத் தயாராக இல்லை என்னும் கசப்பான உண்மை வெளிப்பட்டது.

ஆஸி அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் ஆட்டமிழந்தது தவறான ஷாட்டினால்தான். ஆனால் அவரது அணியினர் அந்தத் தவறை மறக்கச் செய்தார்கள். அதிரடி மேக்ஸ்வெல் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆனால் ஜான்சன் வந்து 9 பந்துகளில் 27 ரன் எடுத்தார். ஒவ்வொருவரும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் போராடினர்.

இந்திய மட்டையாளர்கள் ஆடிய விதத்தை இதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். திறமையைக் காட்டிலும் பெரிய பிரச்சினை தீவிர முனைப்பின்மை என்பது புரியவரும். 328 ரன்களை எடுக்க முடியாமல்போயிருக்கலாம். ஆனால் தீரமாகப் போராடி 250 ரன்களையாவது கடந்திருக்கலாம். கடைசிவரை போராடும் முனைப்பு இல்லாமல்போனதுதான் அவலம்.

 

நியூஸிலாந்தின் அதிர்ச்சி

இந்தியாவாவது ரன் மழை பொழியும் ஆடுகளத்தில் முதலில் மட்டையாடும் வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் அதைக் கோட்டை விட்டது. மட்டை வீச்சைத் தேர்ந் தெடுத்த பிரென்டன் மெக்கல்லம் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் ஸ்டார்க்கின் பந்துக்குப் பலியா னார். வெற்றிகரமான இன்னொரு மட்டையாளரான மார்ட்டின் கப்டில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இன்னொரு நல்ல மட்டையாளரான கேன் வில்லியம்ஸனும் விரைவில் ஆட்டமிழந்தார்.

39-3. இந்த அதிர்ச்சியிலிருந்து நியூஸிலாந்து மீளவே இல்லை. ராஸ் டெய்லரும் கிராண்ட் எலியட்டும் நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்தாலும் அதில் வேகமோ ஆதிக்கமோ இல்லை. ஸ்கோர் 150ஆக இருந்தபோது டெய்லர் வீழ்ந்தார். அதன் பிறகு 183 ரன்னுக்குள் 10 விக்கெட்களும் வீழ்ந்தன. இறுதிப் போட்டியில் போட்டியே அற்ற நிலை உருவானது.

 

அதீத தன்னம்பிக்கை எதுவும் இல்லாமல் ஆஸ்திரேலியா கவனமாகவே ஆடி வென்றது. முதல் சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்றதற்குப் பழிதீர்க்கப்பட்டது. ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற கிளார்க் தன் கடைசிப் போட்டியை மறக்க முடியாததாக ஆக்கிக்கொண்டார்.

 

ஆஸியின் அற்புத ஆட்டம்

ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றது. உயிருள்ள உடலில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் கத்தியைச் செலுத்துவதுபோன்ற தேர்ச்சியும் லாகவமும் கொண்ட ஆட்டம் அது. இதற்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் எதிரணி தன் மொத்தத் திறமையையும் காட்ட வேண்டும். ஒருவரேனும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

 

இவை இரண்டுமே அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நடக்கவில்லை. விளைவு, நியூஸிலாந்து முதல் முறையாக இறுதிப் போட்டிவரை வந்த திருப்தியுடன் வீடு திரும்பியிருக்கிறது. இந்தியாவோ கோப்பையைப் பணிவுடன் திருப்பிக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறது.

இந்தியா அரை இறுதிக்கு வரும் என்று பிப்ரவரி 14-ம் தேதிக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள். அந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு வந்ததே பெரிய விஷயம். தொடர் வெற்றிகள் தந்த நம்பிக்கை இந்தியாவின் குறைகளை மறக்கச் செய்துவிட்டது. மறந்துபோன விஷயங்களெல்லாம் மறைந்து போன விஷயங்களாகிவிடாது. குறைகளை மறையச் செய்ய வேண்டுமென்றால் தீவிரமாக உழைக்க வேண்டும்

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2015-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7052316.ece

  • தொடங்கியவர்

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்- பந்து வீச்சாளர்களின் சாபக்கேடா?
 

 

இந்த உலகக் கோப்பையைப் பற்றிப் பேசும் வல்லுனர்கள் பலரும் பந்து வீச்சாளர்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது மட்டையாளர்களுக்கான போட்டி என்கிறார்கள். இது எந்த அளவுக்கு யதார்த்தத்தோடு பொருந்திப் போகிறது?

 

350-க்கும் மேல் ரன்கள் அதிகம் அடிக்கப்பட்ட உலகக் கோப்பை இதுதான். இரண்டு முறை இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட தொடரும் இதுதான். ஆனால் பல அணிகள் 150-க்குள் சுருண்டதும் இந்தத் தொடரில்தான் அரங்கேறியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ரன் அடித்த தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக 177 ரன்னுக்குள் சுருண்டது.

பாகிஸ்தான் அணியை 224 ரன்னுக்குள் முடக்கியது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 182 ரன்னுக்குள் ஆட்டமிழக்கச் செய்த இந்தியா, அந்த ரன்னைக் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தது. பாகிஸ்தானை 222 ரன்னில் ஆட்டமிழக்கச்செய்த தென்னாப்பிரிக்கா 202 ரன்னுக்குள் தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

ஆஸ்திரேலியா ஆப்கானிஸ் தானுக்கு எதிராக 417, இலங்கைக்கு எதிராக 376 என்று ரன் குவித்தது. ஆனால் இங்கிலாந்தை 231 ரன்னுக்குள் முடக்கியது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 151 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அந்த ரன்னை அடிக்க 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது நியூஸிலாந்து. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவரும் அணிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இதுபோலவே மட்டையிலும் பந்து வீச்சிலும் தன் வலிமையையும் பலவீனத்தையும் மாறிமாறி வெளிப்படுத்தி வந்தது.

 

 

எப்படிப்பட்ட களமாக இருந் தாலும் நன்றாகப் பந்து வீசுபவர் களுக்கும் கவனமாக ஆடித் தன் திறமையை வெளிப்படுத்தும் மட்டையாளர்களுக்கும் வெற்றி கிடைக்கத்தான் செய்கிறது. ஒரு சில விதிவிலக்கான போட்டிகள் நீங்கலாக இதுதான் கிரிக்கெட்டின் யதார்த்தம். அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட இந்தத் தொடரில் நன்றாகப் பந்து வீசுபவர்களுக்குப் பெரும்பாலும் நல்ல பலன் கிடைக்கத்தான் செய்தது.

 

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆகியோர் எதிரணி களை மிரட்டி வந்தார்கள். இந்தியா ஏழு ஆட்டங்களில் எதிரணியை முற்றிலுமாக ஆட்டமிழக்கச் செய்துள்ளது. பந்துக்கும் இந்தத் தொடரில் இடம் உண்டு என்பதையே இவை காட்டுகின்றன.

எந்த அணியாவது 350, 400 ரன் எடுத்தால் அதில் எதிரணிப் பந்து வீச்சாளர்களுக்கும் ‘பங்கு’ இருக்கும் என்பதே யதார்த்தம். காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை மார்ட்டின் கப்டில் சிதற அடித்தார். நியூஸிலாந்தின் பந்து வீச்சை மேற்கிந்தியத் தீவுகளின் மட்டை யாளர்கள் பதம் பார்த்தனர்.

 

ஆனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர் களால் விக்கெட்டை வீழ்த்த முடிந்ததால் வெல்ல முடிந்தது. அரை இறுதியில் இந்தியாவின் மட்டை வீச்சை ஆஸி பந்து வீச்சு முடக்கியது. இறுதிப் போட்டியிலும் பந்தின் ஆதிக்கமே மேலோங்கி யிருந்தது. எனவே இந்தத் தொடரைப் பந்து வீச்சாளர்களின் சாபம், மட்டையாளர்களின் சொர்க்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
 

http://tamil.thehindu.com/sports/2015-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/article7056545.ece

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலியா போய் தோற்றுத் திரும்பிய நியூசிலாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

 

ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்குப் போய், அங்கு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி திரும்பிய நியூசிலாந்து அணிக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணி நியூசிலாந்து. இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் பெரும் தோல்வியைச் சந்தித்து விட்டது. அரை இறுதிப் போட்டி வரை தனது நாட்டிலேயே விளையாடி வந்தது நியூசிலாந்து. இதனால் பெரும் வெற்றிகளும் அந்த அணிக்கு கை கூடின. இறுதிப் போட்டிக்கு மட்டுமே அது ஆஸ்திரேலியா செல்ல வேண்டி வந்தது. அங்கு அதற்கு தோல்வியே கிடைத்தது.

 

முதன்முறையாக... தோல்வி அடைந்தாலும் கூட, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றதால் அந்த நாட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

உற்சாக வரவேற்பு... இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணியினர் நாடு திரும்பினர். ஆக்லாந்து வந்து சேர்ந்த அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

போட்டோவுக்கு போஸ்... கேப்டன் மெக்கல்லம் உள்ளிட்ட அனைவருக்கும் ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு மெக்கல்லம் நன்றி தெரிவித்துக் கொண்டார். போட்டோக்களுக்குப் போஸ் கொடுக்கவும் செய்தார்.

ரசிகர்கள் கூட்டம்... வீரர்களை வரவற்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆக்லாந்து விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

 

செல்பி... கேப்டன் மெக்கல்லம் தனது இரு மகள்களையும் தோளிலும், இடுப்பிலும் தூக்கியபடி உற்சாகமாக காணப்பட்டார். அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

டேணியல்... கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டேணியல் வெட்டோரி உள்ளிட்டோர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/black-caps-fans-welcome-home-returning-world-cup-heroes-auckland-video-223828.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உலக கோப்பை தோல்வி: ரசிகர்களுக்கு மோடி அறிவுரை
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை ரசிகர்கள் விமர்சித்த விதம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியதாக பிரதமர் மோடி கூறினார்.

அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில் இது குறித்து அவர் பேசியது:

 

"ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியையும், வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள். நம்மவர்களின் சாகசத்தையும் சாதனையையும் நினைக்கும் போது பெருமிதம் பொங்குகிறது.

 

ஆனால் சில வேளைகளில் நாமுமே கூட கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சில பேர்கள் இந்த தோல்விக்காக நமது ஆட்டக்காரர்களைப் பழிக்கப் பயன்படுத்திய சொற்களும், நடந்து கொண்ட விதமும், கண்ணியமானவையாக இல்லை நாட்டு மக்களே. தோல்வியே இல்லாத ஒரு ஆட்டம் என்பது உண்டா? வெற்றியும் தோல்வியும் வாழ்கையின் அங்கங்கள் தாமே? நமது விளையாட்டு வீரர்கள் தோல்வி காண நேர்ந்தால், இந்த சங்கடம் நிறைந்த வேளையில் நாம் அவர்களுக்கு மனோபலம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு புதிய உற்சாகம் ஊட்ட வேண்டும். இனி வரும் காலங்களில் நாம் தோல்வியிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

நாட்டின் கௌரவம் தொடர்பான விஷயங்களில் நாம் ஒரு கணப் போது கூட நிதானம் இழந்து வினையாற்றுவதிலோ, எதிர்வினை புரிவதிலோ சிக்கிக் கொள்ள வேண்டாம். யதேர்ச்சையாக நடந்த ஒரு விபத்து தொடர்பான விஷயம் என்றாலும் கூட, உடனடியாக ஒரு கும்பல் கூடி விடுகிறது, வாகனத்தை தீக்கிரையாக்கி விடுகிற நிலைமை எனக்கு கவலை அளிக்கிறது. விபத்துக்கள் நடைபெறக் கூடாது தான். அரசும் கூட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நாட்டு மக்களே, இது போன்று கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், நாம் லாரியை எரித்தாலோ, பிற வாகனங்களை தீக்கிரையாக்கினாலோ, மாண்டவர் மீண்டு வருவார்களா? நமது மனதின் உணர்வுகளை நிதானமாக வைத்துக் கொண்டு, சட்டம் தன் கடமையை ஆற்றக் கூட வகையில் நம்மால் செயல்பட முடியாதா? இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்!

 

இன்று எனது மனம் இவை போன்ற நிகழ்வுகளால் மிகவும் கனத்துப் போயிருக்கிறது. குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள் காரணமாக. ஆனால் இவற்றின் மத்தியிலும் கூட, தைரியத்தோடும், திடநம்பிக்கையோடும் நாட்டை முன்னேற்றுவோம்; நாட்டின் குடிமக்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ, சுரண்டப்பட்டவர்களோ, ஏழ்மையில் வாடுபவர்களோ, பழங்குடியினரோ, கிராமத்தவர்களோ, விவசாயிகளோ, சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களோ, அவர்கள் யாராக இருந்தாலும், அனைவருக்கும் நலன் பயக்கும் பாதையில் நாம் உறுதி பூண்டு முன்னேறுவோம்.

 

மாணவர்களின் தேர்வுகள் நிறைவடைந்திருக்கின்றன. குறிப்பாக, பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களின் உல்லாசத்துக்கு திட்டமிட்டிருப்பார்கள். உங்கள் விடுமுறைக்காலம் இனிமையாக இருக்க, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். வாழ்கையில் ஏதேனும் புதியவைகளைக் கற்கவோ, தெரிந்து கொள்ளவோ வாய்ப்பு கிடைக்கட்டும்!! ஆண்டு முழுவதும் நீங்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டீர்கள், உங்கள் குடும்பத்தோடு நீங்கள் சில இனிமையும் மகிழ்வும் நிறைந்த கணங்களைக் கழிக்க வேண்டும், இது தான் என் விருப்பமும் கூட" என்றார் பிரதமர் மோடி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article7143554.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.