Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவை கொல் வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் பேச்சு:-

ragothaman_2197011f_CI.jpg

 

 
(வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை)
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்தார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர் பாக மூத்த பத்திரிகையாளர் ஃபராஸ் அகமது எழுதிய ‘அசாசினேஷன் ஆஃப் ராஜீவ் காந்தி - அன் இன்சைடு ஜாப்?’ என்ற ஆங்கில புத்தகம், கடந்த ஆகஸ்டில் டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
 
இதில் சிறப்பு விருந்தினராக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
 
ராஜீவ் காந்தி கொலையை சிவராசன் நடத்தியிருந்தாலும், அவர் யார் என்று சித்தரித்த விதம் யூகத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ராஜீவை கொல் வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. அந்த 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல. ஆனால், பெரும்புதூரில் நடந்த சம்பவம் புலிகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, கொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று முதல் நபராக கூறினார். அவரைத் தான் நான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின் றனர். ஒரு விசாரணை அதிகாரி யாக, களத்திலிருந்துதான் விசார ணையை ஆரம்பிக்க வேண்டும். தனிப்பட்ட நபரை விசாரிக்க முடியாது.
 
ராஜீவ் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆர்.கே.ராகவன், குண்டு வெடிப்பு நடந்து 12 மணி நேரத்துக்கு பிறகும், ‘இது சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியவில்லை’ என்றார். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த கேமராவில் இருந்த முக்கிய சாட்சியங்களை காவல்துறையைச் சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்துச் சென்றார். அதை நாங்கள் போராடியே பெற்றோம். இதுபோன்ற நிறைய சிக்கல்கள் விசாரணையின்போது ஏற்பட்டன. ராஜீவ் கொலை வழக்கு பற்றி நான் புத்தகம் எழுதியிருந்தேன். இப்போது ஃபராஸ் அகமதும் எழுதியுள்ளார். இதில் நிறைய கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இவ்வாறு ரகோத்தமன் பேசினார்.
 
நூலாசிரியர் ஃபராஸ் அகமது பேசும்போது, ‘‘சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இந்தக் கொலைக் காக அவரை இயக்கியதில் பிரபா கரனுக்கு எந்த தொடர்பும் இருந் திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கொலை, இலங்கை அரசுக்கும் இந்தியாவில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத் தப்பட்டுள்ளது. எனது புத்தகம் கேள்விகள் மற்றும் ஆதாரங் களுடன் விளக்கும்’’ என்றார்.
 
நிகழ்ச்சியில் திருச்சி வேலுச் சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், மூத்த பத்திரிகை யாளர் பகவான் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

//நூலாசிரியர் ஃபராஸ் அகமது பேசும்போது, ‘‘சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இந்தக் கொலைக் காக அவரை இயக்கியதில் பிரபா கரனுக்கு எந்த தொடர்பும் இருந் திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கொலை, இலங்கை அரசுக்கும் இந்தியாவில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத் தப்பட்டுள்ளது. எனது புத்தகம் கேள்விகள் மற்றும் ஆதாரங் களுடன் விளக்கும்’’ என்றார்//

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த கேள்விக்கு புலிகள் இயக்கத்தின் விசுவாசிகளிடம் இருந்து ஒரு உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

உண்மையிலேயே ராஜீவை கொல்லச் சொல்லி பிரபா உத்தரவிடவில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம் எனில் இதை ஏன் அவர்கள் அழுத்தம் திருத்தமாக மறுக்கவில்லை?

பத்திரிகைச் சந்திப்பில் கூட துன்பியல் சம்பவம் என்று சொல்லி அதை தட்டிக்கழித்தாரே தவிர, நாங்கள் செய்யவில்லை என்று ஏன் சொல்லவில்லை?

இயக்கத்து மாறாத வடுவை, பிரச்சினையை ஏற்படுத்திய, சிவராசன், தணு, முருகன், குண்டுச்சாந்தன், ஆதிரை, சபாபதி மாஸ்டர் ஆகியோரை ஏன் துரோகிகளாக அறிவிக்கவில்லை.

சரி இனி நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்கிறேன்.

சந்திரசாமி, சுப்ரமணியசாமி, இன்னும் சில மர்ப நபர்களின் வேண்டுதலின் படி (சோனியா?), ஏதோ ஒரு பெரிய ஆதாயத்தை ( அரசியலாதாயம் அல்லது ஆயுத/பண ஆதாயம்) எதிர்பார்த்து புலிகள் இதை செய்திருக்கணும்.

சாமிகள் புலிகளை வகையாக மாட்டிவிட்டுத் தப்பி இருக்கணும்.

சு சாமி புலிகளை அழிப்பதில் காட்டிய தீவிரம், இன்றும் இலங்கை விடயத்தில் தலை போடுவது, போன்றவற்றை பார்க்கும் போது இந்த சந்தேகம் வலுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தெரிந்தவர்கள் எங்கே என்று தெரியவில்லை.. ஒருவேளை நூலாசிரியர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இயக்கத்தின் அனுமதி பெறாமல் நடைபெற்றிருந்தாலும், தலைவரே பொறுப்புக்கூற வேண்டியவராகிறார். ஆகவே அது ஒரு துன்பியல் சம்பவம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் விசாரணை அதிகாரிகளுள் ஒருவராக இருந்த ரகோத்தமன் எழுதிய புத்கத்தில் பலவிடயங்களை மிகைப்படுத்தல் இல்லாமல் எழுதியிருந்தாலும். டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலிற்கு உதவியவர்கள் பற்றிய விடயங்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை அது மட்டுமல்லாது இந்த திட்டத்தில் வேறு அமைப்புக்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வேறு பெரும்புள்ளிகள் என்பவர்களின் தொடர்புகள் என்பன பற்றி பல பொதுவான சந்தேகங்களை தீர்க்காமல் தனியாக முழுக்க முழுக்க புலிகளின் சதித் திட்மே அதற்கு சிலர் உதவினார்கள் என முடித்திருக்கிறார்.ஆனால் ராஜீவ் காந்தியை கொல்லும் திட்டத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மூன்று மானிலங்களில் மூன்று குழுக்களாக திட்டமிடலை மேற்கொண்டனர். மூன்றில் எது மிக சாதகமாக அமைகிறதோ அதனை இறுதித் தெரிவாக்கலாமென புலிகளின் தலைமை முடிவெடுத்திருந்தது.டெல்லியில் ஒரு குழுவும் ஆந்திராவில் ஒரு குழுவும் தமிழ்நாட்டில் ஒரு குழுவும் இயங்கியது. டெல்லியில் இருந்த குழுவை வழிநடத்தியவர் சிறி என்பவர் இவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்தவர் ஒரு சீக்கிய பெண்ணை மணமுடித்திருந்தார் இவரிற்கு டெல்லியில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் டெல்லியில் புலிகள் அமைப்புடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் வேற்று மொழிக்காரர்களும் இயங்கியதால் பொதுவாக ஆங்கிலம் நன்றாக கதைக்கத்தெரிந்த ஒருவர் புலிகள் அமைப்பிற்கு தேவையாக இருந்தது அதற்காக கனகரத்தினம் அவர்களை புலிகள் அமைப்பு டெல்லிக்கு அனுப்பிவைத்தது கனகரத்தினம் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாவார்

 

2011 ம் ஆண்டு நான் இந்தியா போய்விட்டு வந்து எழுதிய பயணம் தொடரில் எழுதியவைகள் ..

http://sathirir.blogspot.fr/2011/09/blog-post.html

 

சென்னையில் புத்தக வெளியீடு - 'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?' - ASSASSINATION OF RAJIV GANDHI: AN INSIDE JOB?

'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?' என்ற ஆங்கில புத்தகம் சென்னையில் 10.11.2014 மாலை 4 மணிக்கு ஊடகவியலாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?' (ASSASSINATION OF RAJIV GANDHI: AN INSIDE JOB?)என்ற புத்தகம் டெல்லி உள்ள பிரபல வெளியீட்டாளரான "விட்டஸ்டா" நிறுவனம் வெளி கொண்டு வந்துள்ளது. இப்புத்தகத்தினை மூத்த ஊடகவியலாளர் திரு. ஃபெராஸ் அஹ்மத் எழுதியுள்ளார். இப்புத்தகம் கெட்டி அட்டையில் 320 பக்கம் கொண்டுள்ளது.

சென்னையில் 10.11.2014 மாலை 4 மணிக்கு ஊடகவியலாளர் மன்றத்தில் வெளியிடும், குழு விவாதம் நடைபெற்றது.

குழு விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்:

1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. விடுதலை கே. ராஜேந்திரன்

2. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் திரு. திருச்சி வேலுச்சாமி

3. மேனாள் ஐ.பி.கே.எப். பாதுகாப்பு துறையின் கர்னல் ஆர். ஹரிஹரன்

4. சிறப்பு புலனாய் பிரிவின் கே.ரகோத்தமன்

5. மூத்த ஊடகவியலாளர் மற்றும் டெக்கான் குரோனிக்கல் ஆசிரியர் திரு. ஆர். பகவான் சிங்

6. தமிழ் தேசிய ஆர்வலர் திரு. அக்னி

இந்நிகழ்ச்சியில் புத்தக வெளியீட்டார் திருமதி ரேணு, புத்தக ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளரான திரு. ஃபெராஸ் அஹ்மத் மற்றும் ஊடகத்துறையில் உள்ள செல்வி பாப்ரி சிறீ ராமன் அவர்களும் டெல்லி-லிருந்து வந்து கலந்து கொண்டனர்.

544946_548595768606654_24131272281655873
10806427_548595755273322_659688271502757

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

30 வருட ஆயுதப்போரை நடாத்திய பிரபாகரன் சில தவறுகளை விட்டிருக்கலாம்.. ஆனால் அதனை விமர்சிக்கும் அருகதையை இந்த நுற்றாண்டில் வாழும் யாரும் கொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து.பிரபாகரனைவிட மேலானதொரு ஆயுத விடுதலைப்போரை நடத்தி வெற்றி பெற்ற ஒரு மனிதனே பிரபாகரனை விமர்சிக்கும் தகமையுடையன். என்றேன் நான்.

நன்றி சாத்திரியார் மிகுதி உண்மையை எழுதிறன் என்டு தூள் கதை மாதிரி முடிச்சிட்டீங்க உண்மையாண போராளி நடந்த அவலங்களை சொல்லுவீங்க என எதிர்பார்த்தது என் மடைமைத்தனம் வேறு காரணத்திற்க்கு இருந்தவர்களையும் போகிற போக்கில் அள்ளி போட்டுவிட்டீர்கள் எனக்கு பழைய சியாமை காண வேண்டும் என ஆசை நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவை வாசித்தேன் சாத்திரி.

நேரடியான பதிலாக அமையாவிடினும், பல கைகளின் தூண்டுதலில், ஏதோ ஒரு காரணத்துக்காக ராஜீவை புலிகள்தான், பிரபா உத்தரவில் போட்டார்கள் என்றுதான் நீங்களும் கருதுகிறீர்கள்?

பெல்காம் பற்றிய செய்தி எனக்குப் புதிசு. உங்கள் பதிவுக்கு கருத்தெழுதியவர்கள் கூறியதுபோல அது 93லேயே முள்ளிவாய்க்காலை அது எமக்குத் தந்திருக்கும்.

இவ்வளவு அசட்டுத்தைரியமாகவா இருந்தார்கள்? நம்பக் கடினமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ராஜீவ்காந்தியை புலிகள் கொன்றார்கள் என்று  சொன்ன ஒருசிலரை விட..... 
 
ராஜீவ்காந்தியை புலிகள் கொல்லவில்லை என்று சொல்பவர்கள்களின் எண்ணிக்கைதான் அண்மைக்காலங்களில்  பெரும்பான்மையாக தெரிகின்றது.

உயிரோடு இருக்கின்றார் என்ற மாதிரித்தான் ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதும் .

எந்த உலகத்தில் வாழுகின்றோம் என்றே புரியவில்லை .

தங்களது தலைவரை பற்றி இவர்களுக்கே தெரியாதது வேடிக்கைதான் .

 

சாயிபாபா ,நித்தியானந்தா எல்லாம் எப்படி சாமியார் ஆனார்கள் என்று விளங்கினால் சரி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.