Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னது 179 வயது மனிதர் வாரணாசியில் வாழ்கிறாராமே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம்.

19-old3434-600-jpg.jpg

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்.

மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை

http://tamil.oneindia.com/news/india/is-this-179-year-old-indian-the-oldest-man-alive-215184.html

  • கருத்துக்கள உறவுகள்

:o  :o பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

1835 இல் பிறப்பு சான்றிதழ் கொடுத்தார்களா?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

1835 இல் பிறப்பு சான்றிதழ் கொடுத்தார்களா?? :unsure:

பனையோலையா இருக்கும்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil_News_1159893274308.jpg

இவர்தான் அவர்..?????

  • கருத்துக்கள உறவுகள்

பாபா பட வெளியீட்டின் போது, ரஜனி, தனது குரு, 3000 வருசமா வாழ்கிறார், இமயமலை குகையில் என்று உளர, டாக்டர் ராமதாஸ் இடம் வாங்கிக் கட்டினார்.

1835 இல் பிறப்பு சான்றிதழ் கொடுத்தார்களா??  :unsure:

ஆமாம் இசை கலைஞரே அதில் என்ன சந்தேகம். :D
அவர் கி.மு 1835 இல் பிறந்திருந்தால் பிறந்த திகதி கி.மு. 1835 :D  என்று எழுதி பிறப்பு சான்றிதழ் கொடுத்திருப்பார்கள்.   :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கின்னஸ் புத்தகத்திலை என்னெண்டு இடம் புடிச்சார்??????  :o  :D

Tamil_News_1159893274308.jpg

இவர்தான் அவர்..?????

இவர் தானா அவர். அப்ப  இது கு.சா தாத்தாவின் படம் இல்லையா.  :D

பக்கத்தில பரிமளம் ஆச்சியின் படத்தையும் போட்டிருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.  :D

Edited by seeman

இது உண்மையான  தகவல் கிடையாது. அனால் விஞ்ஞான ரீதியாக  வயதாவதற்குரிய  மரபணுக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அந்த மரபணுக்களை மாற்றீடு செய்வதன் மூலம் வயசாகும் செயற்பாட்டை தாமதிக்க முடியும். 

பாபா பட வெளியீட்டின் போது, ரஜனி, தனது குரு, 3000 வருசமா வாழ்கிறார், இமயமலை குகையில் என்று உளர, டாக்டர் ராமதாஸ் இடம் வாங்கிக் கட்டினார்.

ராமதாஸ்  கெட்ட கேட்டுக்கு ரஜனி எவ்வளவோ பெட்டர். :D
 
ராமதாஸ் எல்லாம் ஒரு மனிசனா? மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்துவிட்டு வந்து சாதி சண்டையில் அரிவாளால் போட்டு தள்ளும் ராமதாஸ் படிக்காமல் ஒரு பஸ் நடத்துனராக இருந்த ரஜனியிடம் எப்படி ஒரு மனிதனாக வாழ்வது என்பதை கற்று கொள்ள வேண்டும். :D
 
ராமதாஸ் மருத்துவக்கல்லூரியில் படித்த மருத்துவ விஞ்ஞானத்திற்கு அப்பால் பல விடயங்கள் இருக்கிறது. விஞ்ஞானம்  ஐம்புலன்களுக்கு உட்பட்டது. உயரிய யோக சாதனை பயிற்சியில் யோகிகள் அட்டமாசித்தி பெற்று காய சித்தி பெற்று மூப்பு பிணி நீங்கி வாழ்வதாக சொல்கிறார்கள். ஆனால்  அவர்கள்  வெளி உலகிற்கு வருவதில்லை. அப்படி வெளி உலகிற்கு வரும் ரமணர் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்ற மகா ஞானிகள் தமது சித்திகளை பயன்படுத்துவதில்லை.
 
போல் பிரண்டன் ஒரு நாள் வில்லியம் வாட்ஸ் வொர்த் (William Wordsworth) The Excursion  இல் சொன்ன பரவச சமாதி அனுபவம் பற்றி அறிய இந்தியாவருகிறார். காஞ்சி சங்கராச்சாரியாவிடம் அந்த கேள்வியை கேட்கிறார். அதற்கு அவர் நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. அதை அறிந்தவர்கள் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் ஹிமாலயாவில் இருக்கும் பாபாஜி. அவரை நீங்கள் இலகுவாக சந்திக்க முடியாது. மற்றவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷி.அவரை போய் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என்கிறார். கேள்வியுடன் ரமணரிடம் செல்கிறார் போல் பிரண்டன். கேள்வியை கேட்பதற்கு முன் ரமணரின் ஒரு பார்வையில் அவருக்கு விடை கிடைத்து விடுகிறது. ராமதாஸ் இதை பற்றியெல்லாம் பேசுவதை விட ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கலாம். 

அப்ப்பா.... சீமான்...
 
முடியலை....
 
அரசியலுக்கு அப்பால், ராமதாஸ், ஒரு மருத்துவர்...... அந்தவகையில் அவரது கருத்தினை நான் சொன்னேன்.
 
எனினும், ராமதாஸ், பெட்டியை வாங்கி அடங்கிய கதையும் தெரியும்.
 
அடுத்து ரஜனி, தனது படங்கள், ஊத்திக்காமல், ஓட, விடும் சரவெடிகளை நாம் நம்ப வேண்டுமா, என்ன?
 
இப்போது கூட, தனது மகள், கோச்சடையான் எடுத்து பட்ட கடன் அடைக்க, லிங்காவுடன் வருகிறார்.
 
நாமும் போய் காசைக் கொடுப்போம். எல்லாருமே களவாணிக் கூட்டம். 
 
இதில எந்த கூட்டம் நல்ல கூட்டம் என்ற கவலை நமக்கு வேண்டுமா?   :icon_mrgreen:
 
மேலாக மகான்கள் குறித்து பேச எனக்கு அறிவு இல்லை ஐயா!

Edited by Nathamuni

உண்மைதான் நாதமுனி எல்லாமே வியாபாரம்தான். ரஜனி தனது படம் வெளியாகும்  நேரங்களில் அரசியல், இமயமலை என்று சரடுகளை எடுத்து விடுவார். பாபா பட சர்ச்சையில் ஆரம்பத்தில் ரஜனி ரசிகர்கள் சவுண்டு குடுத்து பார்த்தார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் அடி பொறுக்க மாட்டாமல் ராமதாசுக்கு பெட்டியை கொடுத்து வாய மூடி விட்டார்கள்.  
 
சந்தர்ப்பம் கிடைத்தால் யோகானந்தர் எழுதிய "Autobiography of a yogi" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.