Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிங்கா - விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?

1416995106-2907.jpg
சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார்.
 
அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயிலை திறக்க வேண்டுமென்றால் அதனை கட்டிய லிங்கேஷ்வரனின் குடும்ப வாரிசு முன்னிலையில்தான் திறக்க வேண்டும். அதுதான் உடன்பாடு.
 
யார் இந்த லிங்கேஷ்வரன்...?
 
பிளாஷ்பேக்கில் வருகிறார் வெளிநாட்டில் படித்து உள்ளூரில் கலெக்டராக பொறுப்பேற்கும் தாத்தா ரஜினி. அப்படியே பென்னி குயிக்கின் கதை. ரஜினிக்கேற்ப கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். சோலையூரில் அணையில்லாததால் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் மாறி மாறி பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். அங்கு அணைகட்ட முடிவு செய்கிறார் ரஜினி. பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு அனுமதி மறுக்க, கலெக்டர் வேலையை தூக்கியெறிந்து சொந்தப் பணத்தில் மக்களின் துணையுடன் அணை கட்டுகிறார் ரஜினி. அரசாங்கத்தை எதிர்த்தால் என்னென்ன இடையூறு வருமோ அத்தனையும் வருகிறது ரஜினிக்கு. திறப்புவிழாவிலும் தொடர்கிறது பிரச்சனை. வீரத்தால் வீழ்த்த முடியாதவரை வஞ்சகத்தால் வீழ்த்தி ஊரைவிட்டே துரத்தப்படுகிறார். ஜனங்களுக்கு உண்மை தெரியவர, அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
 
அந்த லிங்கேஷ்வரனின் பேரன்தான் நிகழ்காலத்து ரஜினி. இவர் பெயரும் லிங்கேஷ்வரன்தான். சந்தானம், கருணாகரனுடன் ஜாலி திருடனாக இருக்கும் அவரை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருகிறார்கள். பூனையின் கண் கருவாட்டின் மீதுதானே. வந்த இடத்திலும் கோயிலுக்குள் இருக்கும் மரகத லிங்கத்தை ஆட்டையப் போட முயல்கிறது ரஜினி அண்ட் கோ. தாத்தா லிங்கேஷ்வரனின் கதையை கேட்டு மனம் மாறும் ரஜினி எப்படி அரசியல்வாதியியை முறியடித்து அணையை மீட்கிறார் என்பது மீதிகதை.
 
படத்தின் சென்டர் சைடு அண்டர் என எல்லா அட்ராக்ஷனும் ரஜினி மட்டுமே. அவரும் அறிமுகப் பாடலில் அசத்தோ அசத்தென்று ஒரு ஆட்டம் போடுகிறார். அப்புறம்..? ரஜினியை குறை சொல்ல ஒன்றுமில்லை. என்னதான் ஆடத்தெரிந்தாலும் மேடை ஸ்ட்ராங்காக இருக்கணுமே. ரவிக்குமாரின் திரைக்கதையில் எண்ணித்தீராத ஓட்டைகள். தாத்தா லிங்கேஷ்வரனின் நீளமான பிளாஷ்பேக்கும் அணை பற்றியதுதான். பேரனின் நீண்ட கதையும் அதே அணைதான். ஒரே கதையை இரண்டு தடவைப் பார்ப்பது போல் கொஞ்சம் இழுவை.
 
ரஜினியின் முந்தையப் படங்கள் நினைவில் பிளாஷ் அடிப்பது இன்னொரு குறை. முத்துவில் சொத்தை இழக்கிறார் ரஜினி. சிவாஜியிலும் இழக்கிறார். படையப்பாவில் மணிவண்ணனிடம் சொத்தை இழக்கிறார். அருணாச்சலத்திலும் அப்படியே. அதையேதான் இதிலும். ஜாலி திருடனாக இருக்கும் ரஜினி தாத்தாவின் தியாகம் அறிந்து திருந்துவதும் கத்தி கதிரேசன் திருந்தும் சிச்சுவேஷனும் ஒன்று போலவே இருக்கிறது.
 
லிங்கா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு கதைக்கு ஆப்டாக இருப்பதைவிட அழகாக இருக்க வேண்டும். ராண்டி அதனை அனாயாசமாக ஹேண்டில் செய்திருக்கிறார். படத்தை காப்பாற்றும் முக்கிய தூண் அவர்தான். இன்னொருவர் கலை இயக்குனர். ரஜினி படம்தானே நாம கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது ரஹ்மான். பின்னணி இசையில் நிறைய போதாமைகள்.
 
சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆறு மாதத்தில் அவசர அவசரமாக எடுத்ததால் கொஞ்சம் கார்ட்டூன் எபெக்ட். அழகுக்கும், டூயட்டுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள் அனுஷ்காவும், சோனாக்ஷியும்.
 
படத்தின் நீளம் அதிகம். ஒரே கதை இரண்டுமுறை ரிப்பீட் அடிப்பது போலிருப்பதால் ஆர்வத்தோடு உள்ளே நுழைகிற ரசிகன் அயர்ச்சியோடுதான் வெளியேறுகிறான். ரஜினிக்காக ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

படம் ஒரே.... இழுவை என்றால்,
இந்தப் படத்தைப் பார்த்து, எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை வாசிக்கும்போதுதான் எனக்குப் பின்னால இருந்துகொண்டு எனது பெடியன் தொலைக்காட்சியை நோண்டிக்கொண்டிருந்தான்.

நானும் தற்செயலாக என்னடா எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு எண்டால். கடல் படத்தில வரும் ஒரு பாட்டின் மெட்டு.

நீங்களும் கேட்டுப்பாருங்கள்

youtube, Sam Smith- I`m Not the Only One.

இதில் யாருடையதை யார் சுட்டது!

https://www.youtube.com/watch?v=AlSjSg7aAQo

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைனில் வரும் போது ஓசில ஆற அமர இருந்து பார்க்கலாம் என்றீங்க. நல்ல விசயம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி குறித்து வெளியே தெரியாத ஒரு செய்தி.

முள்ளிவாய்க்கால் முற்றம் முடிக்கும் தருவாயில் ஏற்ப்பட்ட பணப்பற்றாக்குறைக்கு, நன்கொடை தந்து உதவினார்.

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கா சமையல் குறிப்பு - FIR 

லிங்கா சமையல் குறிப்பு:

தேவையான பொருட்கள்:

1. உருத்திராட்ச கொட்டை - 1 ( அருணாசலத்தில் வருவது போல )

2. பாம்பு - 1 ( தம்பிக்கு எந்த ஊரு முதல் படையப்பா வரை )

3. கவுத்து வைத்த அண்டா - ( சிவ லிங்கத்திற்கு ) - ( அருணாசலத்தில் வருவது போல )

4. அசட்டு காமெடியன்கள் - 2 ( ரஜினி நடக்கும் போது வலது இடது பக்கம் நடக்க  பாட்சாவில் ஜனகராஜ் மாதிரி )

5. துண்டு - 1 ( ஏழையான பிறகு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பாட்டு பாட )

6. கண்ணாடி - அதிகமான அளவு ( விதவிதமாக ஸ்டைல் செய்ய)

7. ரஜினி - திகட்டும் அளவு

8. ஹீரோயுன் - தேவையான அளவு.

9. கே.எஸ்.ரவிகுமார் - கடைசியாக தாளித்துக்கொட்ட.

மேலே கூறிய பொருட்களில் முதலில் ரஜினியியை நண்றாக ஆட வைத்து கைத்தட்டல் சத்தம் எல்லாம் ஓய்ந்த பின் அசட்டுக் காமெடியன்களை கொண்டு காமெடி செய்ய வேண்டும். ஹீரோயின் வந்த பிறகு அவருடன் காமெடியை தொடர வேண்டும். அப்போது விதவிதமாக கலர் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு ஒரு பாட்டு பாட வைக்க வேண்டும்.  கதை ஜவ்வு போல நல்ல வெந்த பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில்( கொஞ்சம் ஓல்டு பாத்திரமாக இருந்தால் நல்லது) அதே ரஜினியை போட்டு வேறு ஒரு பாட்டு, வேற ஒரு ஹீரோயினை அதில் சேர்த்து, காமெடி செய்து அதையும் நன்றாக கிளர வேண்டும். பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க கொஞ்சம் பாட்டை கலக்கவும். பதார்த்தம் ரிச்சாக காட்சி கொடுக்கும் போது மசாலாவை போட்டு அதை நிறம் மாற வைக்க வேண்டும். நல்ல நெடி வரும் போது கீழே இறக்கவும். இப்போது முன்பு செய்த ஆறவைத்த ஜவ்வு பதார்த்ததை இதனுடன் கலக்கவும். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமாரை கொண்டு தாளித்துக்கொட்டவும். சுவையான லிங்கா டிஷ் ரெடி!.

பிகு: சாப்பிட்ட பின் கொஞ்சம் அசதியாக இருக்கும். தூங்கினால் சரியாகிவிடும். 

பிடித்த சீன்: முதலில் பலுனில் ஆரம்பித்த லிங்கா கடைசியாக பைக்கில் அந்த ராட்ச பலூனை விரட்டி மலை மீதிருந்து குதித்து பலூனிற்குள் சண்டை போட்டு அதிலிரிந்து விழும் Bombயை ஒரு கையில் அனுஷ்காவை பிடித்துக்கொண்டே பல்டி அடித்து புட்பால் மாதிரி உதைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் ரஜினி.  சபாஷ் ரஜினி !

இட்லிவடை மார்க்: 6/10

http://idlyvadai.blogspot.in/2014/12/fir_12.html

  • கருத்துக்கள உறவுகள்

பென்னிகுயிக்கும் ரஜினியும்...

ரஜினியின் அரசியலை மக்கள் மறந்தே போய்விட்டனர். ஆனால் படம் வெளிவரும்போது மட்டும் அத்தகைய சூழ்நிலையை இவரே உருவாக்கி பணம் சம்பாதிப்பத்ற்க்காக பரபரப்பை உண்டுபண்ணி படத்தை ஒடவைப்பது. லிங்கா படத்தில் அணை கட்டுகிறாராம் இவர். முல்லைபெரியாறு பிரச்சனை வந்தபோது ஒரு இலட்சம் மக்கள் போராடினர். கேரளா எஸ்டேடுகளில் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். உயிருக்கு பாதுகாப்பில்லாமல் ஆயிரம் ஆயிரம் பேர் சொத்து சொந்தங்களை விட்டுவிட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது ஒரு வார்த்தையாவது வாய் திறந்ததுண்டா?. ஏனென்றால் கேரளாவில் மார்கேட் போய்விடுமே.

90க்கு பிறகு காவிரி பிரச்சனை மிகத்தீவிரமாக இருந்தபோது கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்களே, பெண்கள் சந்தித்த இன்னல்கள் எத்தனை எத்தனை, அப்போதாவது ஒரு வார்த்தையாவது திறந்ததுண்டா?. ஏனென்றால் கர்நாடகாவில் மார்கேட் போய்விடுமே...அங்கேவுள்ள தனது சொத்துக்கள் சூரையாடப்படுமே...

இப்போதுகூட ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆந்திர காவல்துறையினரிடம் அடிவாங்கினானே தமிழன் ஏன் வாய் திறந்து கண்டிக்கவேண்டியதுதானே முடியாது ஏனென்றால் ஆந்திராவில் கோடி கோடியாக வருமானம் போய்விடுமே..

ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப் பட்டது.அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.

வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை, அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார். தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில், தனக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களாக இருந்தாலும், மக்கள் வறட்சியில் வாடக் கூடாது, அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது, காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இப்படி மெனக்கெட்டார் பென்னிகுயிக். முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்ட பென்னி குயிக் எங்கே. தமிழனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மட்டும் வாயை திறக்காமல் இருக்கும் நீர் எங்கே? நல்ல காரியக்காரரையா நீர்...

நீங்களே தமிழன் நிலத்தை தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொன்னால் உங்களையே அடித்துவிடுவார்கள் எங்கள் தமிழர்கள் உங்கள் ரசிகர்கள். ஏனென்றால் அடுத்த முதல்வராக உங்களை லிஸ்டில் வைத்திருக்கிறோம். நீங்கள் இப்படி பேசுகிறிர்கள் என கேட்பார்கள் தமிழர்கள்... இப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை தமிழ் நாட்டில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்

...இன்னும் ஒன்னே ஒண்ணுதான் பாக்கி அரசியலுக்கு வந்து முதல்வராயிடுங்கள்...மொத்தமாக தமிழர்களை மொட்டை அடித்துவிடலாம்.

முகபுத்தகத்தில் இருந்து.......

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி குறித்து வெளியே தெரியாத ஒரு செய்தி.

முள்ளிவாய்க்கால் முற்றம் முடிக்கும் தருவாயில் ஏற்ப்பட்ட பணப்பற்றாக்குறைக்கு, நன்கொடை தந்து உதவினார்.

இதனை... ஏன், அவர் ஒழித்து, மறைத்து செய்ய வேண்டும்.

அதனை.... அவர் வெளிப்படையாக சொல்லட்டும் பார்க்கலாம்.

நடராஜனே... தனக்கு பாதிப்பு வரலாம், என்று துணிந்து  எல்லாவற்றையும்,  செய்யும் போது....

இவர் உண்மையாகவே.... கொடுத்து இருந்தால், அதை சொல்ல என்ன தயக்கம்.

இந்தியாவின்.... நதி நீர், இணைப்பிற்கு.... 100 கோடி ரூபாய் தருவேன், என்று.... பத்து வருடத்துக்கு முன் சொன்னவர்.

இன்னும்... ஒரு பைசா, கொடுக்காத மனுசன் தான்..... ரஜனி.

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கா சமையல் குறிப்பு - FIR 

லிங்கா சமையல் குறிப்பு:

தேவையான பொருட்கள்:

1. உருத்திராட்ச கொட்டை - 1 ( அருணாசலத்தில் வருவது போல )

2. பாம்பு - 1 ( தம்பிக்கு எந்த ஊரு முதல் படையப்பா வரை )

3. கவுத்து வைத்த அண்டா - ( சிவ லிங்கத்திற்கு ) - ( அருணாசலத்தில் வருவது போல )

4. அசட்டு காமெடியன்கள் - 2 ( ரஜினி நடக்கும் போது வலது இடது பக்கம் நடக்க  பாட்சாவில் ஜனகராஜ் மாதிரி )

5. துண்டு - 1 ( ஏழையான பிறகு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பாட்டு பாட )

6. கண்ணாடி - அதிகமான அளவு ( விதவிதமாக ஸ்டைல் செய்ய)

7. ரஜினி - திகட்டும் அளவு

8. ஹீரோயுன் - தேவையான அளவு.

9. கே.எஸ்.ரவிகுமார் - கடைசியாக தாளித்துக்கொட்ட.

மேலே கூறிய பொருட்களில் முதலில் ரஜினியியை நண்றாக ஆட வைத்து கைத்தட்டல் சத்தம் எல்லாம் ஓய்ந்த பின் அசட்டுக் காமெடியன்களை கொண்டு காமெடி செய்ய வேண்டும். ஹீரோயின் வந்த பிறகு அவருடன் காமெடியை தொடர வேண்டும். அப்போது விதவிதமாக கலர் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு ஒரு பாட்டு பாட வைக்க வேண்டும்.  கதை ஜவ்வு போல நல்ல வெந்த பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில்( கொஞ்சம் ஓல்டு பாத்திரமாக இருந்தால் நல்லது) அதே ரஜினியை போட்டு வேறு ஒரு பாட்டு, வேற ஒரு ஹீரோயினை அதில் சேர்த்து, காமெடி செய்து அதையும் நன்றாக கிளர வேண்டும். பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க கொஞ்சம் பாட்டை கலக்கவும். பதார்த்தம் ரிச்சாக காட்சி கொடுக்கும் போது மசாலாவை போட்டு அதை நிறம் மாற வைக்க வேண்டும். நல்ல நெடி வரும் போது கீழே இறக்கவும். இப்போது முன்பு செய்த ஆறவைத்த ஜவ்வு பதார்த்ததை இதனுடன் கலக்கவும். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமாரை கொண்டு தாளித்துக்கொட்டவும். சுவையான லிங்கா டிஷ் ரெடி!.

பிகு: சாப்பிட்ட பின் கொஞ்சம் அசதியாக இருக்கும். தூங்கினால் சரியாகிவிடும். 

பிடித்த சீன்: முதலில் பலுனில் ஆரம்பித்த லிங்கா கடைசியாக பைக்கில் அந்த ராட்ச பலூனை விரட்டி மலை மீதிருந்து குதித்து பலூனிற்குள் சண்டை போட்டு அதிலிரிந்து விழும் Bombயை ஒரு கையில் அனுஷ்காவை பிடித்துக்கொண்டே பல்டி அடித்து புட்பால் மாதிரி உதைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் ரஜினி.  சபாஷ் ரஜினி !

இட்லிவடை மார்க்: 6/10

http://idlyvadai.blogspot.in/2014/12/fir_12.html

10806465_1569721113242078_12111678895947

  • கருத்துக்கள உறவுகள்
ரஜனியின் லிங்காவை.
எல்லோரும் பார்க்க முடியுமா? அல்லது வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியுமா? 
  • கருத்துக்கள உறவுகள்
லிங்கா இயக்குனர் ஆட்டையை போட்ட ஆங்கில பட காட்சி
 
10289882_335681989966876_467009529284996
 
ரஜினி குறித்து வெளியே தெரியாத ஒரு செய்தி.

முள்ளிவாய்க்கால் முற்றம் முடிக்கும் தருவாயில் ஏற்ப்பட்ட பணப்பற்றாக்குறைக்கு, நன்கொடை தந்து உதவினார்.

எந்த ஆதாரத்தை வைத்து சொல்லுகின்றீர்கள் ?எதற்கும் நெடுமாறன் ஐயாவிடம் கேட்டுவிடுவமே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.