Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள்.-- விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும், இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில், நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன். 

நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கிவிடலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 60,000 வாக்குகள் கிடைத்தன. இவை இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாகும்.

கடந்த தேர்தல்களில் எதிர்த் தரப்புக்கு எமது மக்கள் வாக்களித்தது போலல்லாமல், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். 

என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசு 

 

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைதிக்கான நோபல் பரிசினை இலங்கையில் இருக்கும் பலர் பெறுவதற்கு முயற்சிப்பதாக அறியப்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தா, குமரன் பத்மநாதன் ( KP ) , பிள்ளையான் , இரா.சம்பந்தன் என ஓர் பட்டியல் நீள்கிறது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாருக்கு இவர்கள் ஆதரவு தரப்போகிறார்கள், என விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களிற்கே தெளிவு இல்லை என்பதே வேடிக்கை.

எது எவ்வாறு இருப்பினும் ஈழத் தமிழர்களின் எதிர்கால தேவைகளை இத் தேர்தலில் கருத்தில் கொள்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.

2009 இல் நந்திக்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்பும் ஸ்ரீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கிறது . ஈராக்கில் சதாம் உசைன் கொல்லப்பட்ட பின் அமெரிக்க இராணுவம் வெளியேறியது.அதனை அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் தான் தேர்தலில் வென்றால் அமெரிக்க துருப்புக்கள்

ஈராக்கில் இருந்து வெளியேறும் என்று சொன்னதை இங்கு ஞாபகப் படுத்த விரும்புகிறோம்.

எனவே ஸ்ரீலங்கா தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் கோரிக்கையை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களிற்கு ஆதரவு கிடைக்கும் என அமைதிக்கான நோபல் பரிசு பெறலாம் என நினைப்பவர்கள் உடனடியாக சொல்ல வேண்டும்.

வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் வெளியேற்றப் படுவதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை தடுக்கலாம் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

ரசிகனுக்காக தமிழன் வழிகாட்டி செந்தி

- See more at: http://www.tamilsguide.com/details.php…

10850247_1029760680382773_61351281228642
 

 

அன்னாருக்கு மிக விரைவில் சங்கு என்பது புரிந்து விட்டது , அதுதான் இப்படிஎல்லாம் உளற தொடங்கிவிட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்
இளைஞர் யுவதிகள் எல்லோரையும்.
மாண்புமிகு சேனாதிபதி அவர்கள் போட்டு தள்ளியிருப்பாறா ?? 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான.... சாக்கடைகளின், தலைப்புக்களை....
இங்கு பதிவு, செய்வதை தவிர்ப்பது நல்லது.

 

அன்று...காட்டிக் கொடுத்த,
ஒட்டுக் குழுக்களின் சரித்திரம் எமக்கு.... தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சியிருக்கும் இளைஞா், யுவதிகளையும் இல்லாமல் செய்வதற்கு இந்த அரசாங்கமே மீண்டும் வரவேண்டுமெண்ணுறான். குந்தியிருக்கிற கதிரை பாேய்விடுமென்ற பயம். ரணில் தான் கருணாவை பிரிச்சனான் காப்பாற்றினனான் எண்ணுறாா். இவராே ரணில் வேண்டாம் எண்டு கிளைக்குக் கிளை தாவுதறாா். பாென்சேகாவை காெஞ்சம் நினைச்சுப் பாத்தால் தன் நிலை புரியும். அது கூடப்புரியாமல் தான் பாேரை நிறுத்தினனான் எண்டு புலம்பல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.