Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்றிரவு போர்க்களமானது யாழ். ஐந்து சந்தி! – மோதலில் மோட்டார் சைக்கிள், சைக்கிள் எரிப்பு. T

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நேற்றிரவு போர்க்களமானது யாழ். ஐந்து சந்தி! – மோதலில் மோட்டார் சைக்கிள், சைக்கிள் எரிப்பு. Top News 
[Monday 2014-12-15 09:00]
jaffna-clash-350-news.jpg
யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது. 

இதனைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் சுமார் 40 வரையிலான ஆட்களுடன் வந்து, ஐந்து சந்தியில் உள்ள முஸ்லிம் இளைஞரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய அந்த குழுவினர், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும், மிதிவண்டி ஒன்றிற்கும் தீ வைத்து எரியூட்டியுள்ளனர். அத்துடன் போத்தல்களை உடைத்து, அட்டகாசம் செய்த நிலையில், அங்கிருந்த இளைஞர்களும் பதிலுக்கு இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அவ்விடம் பெரும் போர்க்களமாக காட்சியளித்தது.
 
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும், இராணுவத்தினர் அங்கு வந்து கலவரத்தை அடக்கியதுடன், நிலைமையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=122702&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

குளிர் விட்டுப் போயிட்டுது போல. இவனுகளுக்கு புத்த பிக்குகள் தான் சரி.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இன ரீதியான மோதல்களை தோற்றுவிக்க இராணுவ புலனாய்வு பிரிவு முற்பட்டுள்ளதாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்.நகரின் ஐந்து சந்திப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் மூன்று சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தீக்கிரையாக்கப்பட்ட கடையில் ஏற்பட்ட இருபிரிவினருக்குமிடையேயான தகராறு குழு மோதலாக மாறியதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முஸ்லீம்களது வாக்குகளை இலக்கு வைத்தே இத்தகைய மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

http://www.pathivu.com/news/36092/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி தமிழர்களை அரச பயங்கரவாதிகளின் உதவியோட கொன்று குவித்ததுபோல யாழ்பாணத்தில் செய்ய இயலாது .... செய்தால் அது அவர்களின் இருப்பிக்கே ஆப்பு வைக்கின்றது போல் ஆகிவிடும் என்பது முஸ்லிம்களுக்கு தெரியும் 
 
உலகம் முழுவது முஸ்லிம்களால்தான் பிரச்சனை.  :blink:
  • கருத்துக்கள உறவுகள்

உந்த சண்டித்தனம்.. கலவரப்  பிரச்சனையால தான் 1990 இல் புலிகள் மிகவும் கெளரவமாக.. பாதுகாப்பாக இவர்களை குடிபெயர வைத்தார்கள்.  இறுதியில் அதை அஸ்ரப் போன்றவர்கள் சொந்த அரசியல் நலனுக்காக பாசிசமாக்கி.. பயங்கரவாதமாக்கி.. முஸ்லீம் காங்கிரஸ் என்ற அடிப்படைவாத முஸ்லீம் கட்சியை உருவாக்கி குளிர் காய்ந்தார்கள்..!!! 

இந்தப் பிரச்சனையை அன்றே புலிகளோடு பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் தரப்புக்கள் பிரேமதாசாவிடம் போய் பதுங்கிக் கிடந்து அவரின் கைப்பாவையாக செயற்பட்டார்கள்..!!

மீண்டும் அதே பழைய நிலையை இன்று உருவாக்க முனைகிறார்கள். முன்னரும் தமிழ் மக்கள் ஐந்து சந்தி.. கன்னாதிட்டிச் சந்தி.. சிவன் கோவிலடி.. சிவன் பண்ணை வீதி... ஒஸ்மேனியா கல்லூரிப் பகுதியில் பயணிக்க பயந்தார்கள். மீண்டும்.. அதே நிலையை தோற்றுவிக்க முயல்கிறார்கள்..!!! இது வருந்தத்தக்க விடயம். இது தொடர்பில் தமிழ் - முஸ்லீம் மக்கள் பிரநிதிகள் பேச்சுக்களை நடத்தி சுமூக நிலைக்கு வர வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்ரப் கட்சி தொடங்கியது 1971. முஸ்லீம்கள் துரத்தப்பட்டது 90இல்.

யார்பக்கம் தப்பிருக்கு என்று பார்க்காமலே முஸ்லீம்கள்தான் காரணம் எண்டு எழுதுறது நியாயமாப் படேல்ல.

இது இரு குழுக்களுக்கிடையான மோதல். இதை இனமோதலாக்க வேண்டாமே?

  • கருத்துக்கள உறவுகள்

நானா, நாங்க தமிழ் பேசும் மக்கள். ஒண்ணா நின்னு, ஒண்ணுக்கு இருந்து, சிங்களவனுக்கு காட்டோணும். இப்படி சண்டை போடக்கூடாது.  :o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முஸ்லிமுடன் தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டு தமிழர்களும் மீண்டும் நாற்பது பேருடன் வந்து முஸ்லீமுடைய சொத்துக்களைச் சூறையாடியிருக்கின்றார்கள்.

இது தான் தமிழருடைய வீரம்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் எனக் கூறி பல்கலைக்கழக மாணவனை தாக்கிய நபர் கைது!

arrested.jpgகுற்றப்புலனாய்வு பிரிவினர் எனக் கூறி பல்கலைக்கழக மாணவனை தாக்கிய வங்கி ஊழியர் ஒருவர் யாழ். பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில், திருநெல்வேலி தபால்கட்டை பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

வவுனியா பகுதியைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ நான்காம் வருட மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக நான்காம் வருட மாணவன் கிளிநொச்சியில் இருந்து வருகை தரவுள்ள தனது சக நண்பரை அழைத்துச் செல்வதற்காக யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளார்.

அதன்போது, அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில், குற்றப் புலனாய்வு (சி.ஐ.டி) பிரிவில் இருந்து கதைக்கின்றோம். நீ எங்கு நிற்கின்றாய் என கேட்டுள்ளார்.

மாணவன் தான் நின்ற இடத்தினை கூற மோட்டார் சைக்கிளில் வந்து மாணவனை அழைத்துச் சென்று, யாழ். பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவனை பற்றி விசாரித்து தாக்கியுள்ளனர்.

அதன்போது, அப்பகுதியால் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் விசாரித்த போது, சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியவுடன், இராணுவத்தினர் யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸார் தாக்கப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்தமைக்கு அமைவாக, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவரும், யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் என்பதும் தாக்கப்பட்ட மாணவனினால் அடையாளம் காணப்பட்டு யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடெங்க்கொக்கமக்க  :o

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்ரப் கட்சி தொடங்கியது 1971. முஸ்லீம்கள் துரத்தப்பட்டது 90இல்.

யார்பக்கம் தப்பிருக்கு என்று பார்க்காமலே முஸ்லீம்கள்தான் காரணம் எண்டு எழுதுறது நியாயமாப் படேல்ல.

இது இரு குழுக்களுக்கிடையான மோதல். இதை இனமோதலாக்க வேண்டாமே?

அண்ணன் விக்கிபீடியாவை சரியாக வாசிக்கல்லப் போல.

முஸ்லீம் காங்கிரஸ் என்ற அமைப்பு 1981 ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அது முழு முஸ்லீம் அடிப்படைவாத அரசியல் கட்சி வடிவம் பெற்றது 1990 களின் பின். அஸ்ரப் அதற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்ந்து இருந்தார். முஸ்லீம் காங்கிரஸ் அடிப்படைவாத அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டது அஷ்ரப் ஆவார். :):icon_idea:

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Muslim_Congress

அதிலும் பிளவுபட்டு.. இது தோன்றியது. அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ். :lol:

http://en.wikipedia.org/wiki/All_Ceylon_Muslim_Congress

Sri Lanka Muslim Congress

In 1977 Ashraff and others formed the Muslim United Liberation Front (MULF) political party to represent Sri Lanka's Moors (Muslims). The MULF formed an alliance with the Tamil United Liberation Front (TULF) to contest the 1977 parliamentary election under the TULF ticket. The MULF fielded three candidates but all performed badly. The MULF subsequently merged with the Sri Lanka Freedom Party against Ashraff's wishes.

In September 1981 Ashraff and other leading Muslim politicians established the Sri Lanka Muslim Congress (SLMC) at Kattankudy. Ashraff was the SLMC's president. The SLMC was formally inaugurated as a political party in November 1986 at a meeting in Colombo, Ashraff being its leader.

Political career

Ashraff was elected to Parliament at the 1989 parliamentary election to represent Ampara District. He was re-elected at the 1994 parliamentary election. The SLMC joined the new People's Alliance (PA) government in 1994 and Ashraff was appointed Minister of Ports Development, Rehabilitation & Reconstruction. By 2000 relations between the SLMC and PA had become strained and just before Ashraff died he had decided to sever all ties with the PA.[2]

http://en.wikipedia.org/wiki/M._H._M._Ashraff

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

81 ஐ பிழையா 71 எண்டு டைப் அடிச்சுட்டேன். கீபோர்ட்டில் 7 க்கு அடுத்ததா 8 வாரதால வந்த புரப்ளம். ஆனாலும் உங்க குலதெய்வம் கூகிள் ஆண்டவர் உங்களை கைவிடேல்ல :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இருப்புக்கேள்விக்குறியாகியுள்ள சூழலில் மதரீதியான பிரிவுகளை உணர்வுரீதியாகக் கையாளாது உரியதரப்புகள் பேசித்தீர்ப்பதே பொருத்தமாகும். எதிர்காலச் சந்ததியின் நலன்கருதி சிந்திக்க வேண்டிய காலத்தில் நிற்கின்றோம் என்பதை மறத்தல் ஆரேர்கியமானதல்ல.

ஆரோக்கியமான இளம் தலைமுறையை  கட்டி வளர்க்கவேண்டியது  தாயக தலைவர்களின் கடமையாகும்..

அதைவிடுத்து

எதிரிக்கு எதிரி

புண்ணுக்கு புண்..

என்றநிலையை  வளர்த்துவிட்டால்....

தமிழன் என்ற இனமே இல்லாது   போய்விடும் :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.