Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்சியும் கவிதையும்

Featured Replies

k34u14.jpgகாட்சியும் கவிதையும்

உயரக் கூடு கட்டி
உல்லாசமாக வாழ்ந்தாலும்
நிலம் நோக்கிய வாழ்வில்லாமல்
நின்மதி கிட்டாது.

 

  • Replies 109
  • Views 9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி ராஜன் விஷ்வா

அன்னிய மண்ணில் மாடி வீடுகட்டி, மகிழூந்தில் சவ்வாரி செய்து, ஆடம்பரமாக வாழ்ந்தாலும் தாய் மண்ணைச்  சிந்தித்து,  அதற்கு உதவி செய்து,  அங்கு வாழும் வாழ்க்கையே நின்மதியானது.

 

 

 

நன்றி ராஜன் விஷ்வா

அன்னிய மண்ணில் மாடி வீடுகட்டி, மகிழூந்தில் சவ்வாரி செய்து, ஆடம்பரமாக வாழ்ந்தாலும் தாய் மண்ணைச்  சிந்தித்து,  அதற்கு உதவி செய்து,  அங்கு வாழும் வாழ்க்கையே நின்மதியானது.

 

 

 

 

நூறு விதம் உண்மை தான் அண்ணா, இன்னும் கூட வரிகளை சேர்த்திருக்கலாம், கவிதைக்கு பட்ட மரத்தின் உச்சியில் உள்ள பறவையின் கூடு மிக பொருத்தமாக உள்ளது, நீங்கள் எடுத்ததா ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் இருக்கு கவிதையும் படமும்...!

  • தொடங்கியவர்

ராஜன் விஷ்வா, Suvy அன்புடன் இருவருக்கும் நன்றிகள். காட்சிகள் சிலவற்றைப் பார்க்கும்போதும் தமிழ் மக்கள் சிலரின் செயற்பாடுகளைக் கவனிக்கும்போதும் என்னுள் தோன்றிய எண்ணங்களே இக் கருவும் காட்சியும். காட்சி என்னால் பதிவு செய்யப்பட்டது.  காட்சியைப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே வரிகளைச் சுருக்கியுள்ளேன்.

நன்றி  

 

 

 
  • தொடங்கியவர்

33m7aza.jpgகாட்சிகள் மாறுவது போல்
காலங்கள் மாறினாலும்
ஒட்டிய இடம்தான் உருமாறிப்போனாலும்
உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை

  • 1 month later...
  • தொடங்கியவர்

குருவிச்சை ஒரு ஒட்டுண்ணித் தாவரம். அது எங்கிருந்தாலும் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் கவனத்தைச் செலுத்துவதுதான் அதன் கொள்கை. அதுபோல்தான் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்  விடுதலைப் போராட்டம் என்று கூறி அதற்குள் புகுந்து, தம்மை வளர்த்துக்கொண்டும்  தம் உறவினர்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள் பலர். இப்படியானவர்களின் செயலால்தான் எமதுபோராட்டம் வீழ்த்தப்பட்டது.  இப்படியானவர்களுக்கு இப் படம் பொருத்தமாக இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

குருவிச்சை ஒரு ஒட்டுண்ணித் தாவரம். அது எங்கிருந்தாலும் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் கவனத்தைச் செலுத்துவதுதான் அதன் கொள்கை. அதுபோல்தான் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்  விடுதலைப் போராட்டம் என்று கூறி அதற்குள் புகுந்து, தம்மை வளர்த்துக்கொண்டும்  தம் உறவினர்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள் பலர். இப்படியானவர்களின் செயலால்தான் எமதுபோராட்டம் வீழ்த்தப்பட்டது.  இப்படியானவர்களுக்கு இப் படம் பொருத்தமாக இருக்கிறதா?

 

நீங்கள் கூறியதை விட சிங்களத்துடன் ஒட்டி நின்று தமிழர்களின் அழிவில் வாழ்வு நடத்தும் ஒட்டுக்குழுக்களுக்கு இந்தக்காட்சி பொருந்தலாம்.

  • தொடங்கியவர்

                           நன்றி வாத்தியார். இங்கே காணப்படும் மரங்கள் வெப்பவலையத்துக்குரியவை அல்ல. குளிர்வலய நாடுகளுக்குட்பட்டவை. குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள மரங்கள்.  இந்த மரங்களில் காணப்படும் குருவிச்சையைப் பாருங்கள். மரத்தில் ஒட்டி, அதிகமான இடங்களில் பரவி செழிப்பாக வாழுகிறது.  மரம் இலை உதிர்த்து வெறுமனே நிற்கிறது..

 

எமது விடுதலைப் போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர்,  விடுதலை விரும்பி கடன்பட்டுக் காசு கொடுத்தவர்கள் கவலையுடன் கடனாளியாக முகம் கவிழ்ந்து வாழுகிறார்கள். விடுதலைப் போருக்கெனப் பணம் சேர்த்த சிலரோ மாடமாளிகையில் இருந்து கொண்டு அதி நவீன மகிழுந்தில் மகிழ்வாகப் பயணம்  செய்கிறார்கள்

  • தொடங்கியவர்

vdmz4z.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பனைகள் பல கொண்ட மாளிகை
கட்டியவர்கள் வெளியினிலே – அதுபற்றி
கனவிலும் எண்ணாதோர் அங்கு
களிப்புடனே குடிபுகுந்தார்..

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

சில வரிகளுக்குள்... எவ்வளவு பெரிய 'வாழ்வியல்' உண்மையை 'அடக்கி' விட்டீர்கள் செண்பகன்!

 

 

தொடருட்டும் உங்கள் பதிவுகள்!

  • தொடங்கியவர்

நன்றி புங்கையூரான். விமர்சனமும் ஊக்குவிப்பும் தான்  இப்பணிகளை முன்னெடுக்க உதவும்.

தங்களைப் போன்றவர்களின் ஆதரவுக்கு   எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் எழுத்துருமாற்றத்தில் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அறிந்து  அதை மாற்றியுள்ளேன்.

இதுபற்றி நேரடியாக அறியத்தந்த நண்பருக்கு எனது நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vdmz4z.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பனைகள் பல கொண்ட மாளிகை

கட்டியவர்கள் வெளியினிலே – அதுபற்றி

கனவிலும் எண்ணாதோர் அங்கு

களிப்புடனே குடிபுகுந்தார்..

 

எளிய வரிகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

 

குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுகிறீர்கள்.

 

"கரையான்கள் புற்றெடுக்க

கருநாகம் புகுந்ததுபோல்

ஆனதெங்கள் ஜனநாயகம்"

 - இது எங்கள் ஜனநாயகத்தைப் பற்றி நான் முன்பு எழுதியது.

33m7aza.jpgகாட்சிகள் மாறுவது போல்

காலங்கள் மாறினாலும்

ஒட்டிய இடம்தான் உருமாறிப்போனாலும்

உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை

உறிஞ்சி வாழ்வதே உறுதியான கொள்கை....

இப்படி பல மரங்கள் ஐரோப்பில் வாழ்கிறது மனிதமா அருமை கவி ..

  • தொடங்கியவர்

v4us05.jpg

 

 

 

 

 

கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து
தன் இனமழிக்கும் சிறுகோல் போல்
மாற்றானோடு இணைந்து  தமிழினம்
கொன்றொழிக்கும்  ஒட்டுக்குழு

  • தொடங்கியவர்

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்.. Seyon yazhvaendhan , அஞ்சரன்   

Seyon yazhvaendhan

கரையான் என்பது  கடற்கரையில் வாழும் ஒரு இனத்தைக் குறிப்பது. ( வலைஞன்)  

நன்றி

கறையான்

Edited by Sembagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து

தன் இனமழிக்கும் சிறுகோல் போல்"

 

மிகச் சிறந்த உவமை.   

  • தொடங்கியவர்

oiymhs.jpgஎங்கெங்கோ பறந்து பறந்து
எதிர்கால எண்ணத்தோடு சேர்த்த  சொத்து
முயற்சியின்றிக் கிடந்தவன் கண்ணில் பட்டு
முழுவதுமாய் அழிந்தது..

  • தொடங்கியவர்

vh7xci.jpgஅருகில் வந்து அணைத்து நடந்து  
சிரித்து மகிழ்ந்து சேர்ந்து திரிந்தோர்
ஏறவிரும்பித் தூக்கிப்பிடித்தார்
ஏறியபின்னே எட்டி உதைத்தார்.

  • தொடங்கியவர்

"கோடரிக் கழுந்தில் குடிபுகுந்து

தன் இனமழிக்கும் சிறுகோல் போல்"

 

மிகச் சிறந்த உவமை.  

 

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்.. Seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறவுகள்

10292528_649160095239249_616591947750321

 

கொலைக்கருவிக்கு கூட

உயிர் மீது இரக்கமிருக்கு..

கொலைக்கருவி தாங்கிய

சிங்களத்துக்கோ.. மனிதமே இல்லை.

இத்தனைக்கும்..

புத்தன் வழியில் பயணிக்கும் கூட்டமாம் அது.!!!

  • தொடங்கியவர்

10292528_649160095239249_616591947750321

எமது தேசத்தைச் சுட்டெரித்து
எமது மக்களையும் கொன்றுகுவித்த
கொலைக் கருவிக்கு பூவைத்ததுபோல்  - அதன்
கொலையாளிக்கும் பூ வைக்கச் செய்வோம்.

நன்றி
நெடுக்காலபோவான்

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

vh7xci.jpgஅருகில் வந்து அணைத்து நடந்து  

சிரித்து மகிழ்ந்து சேர்ந்து திரிந்தோர்

ஏறவிரும்பித் தூக்கிப்பிடித்தார்

ஏறியபின்னே எட்டி உதைத்தார்.

மிகவும் வருத்தத்திற்குரிய உண்மை. இதுவே எமது குமுகாயத்தின் தன்மை.
நறுக்கென்று இருக்கிறது!
  • தொடங்கியவர்

காட்சியும் கவிதையும்  உண்மைகளை மையமாகக் கொண்டவை.

காட்சிகளுக்கான உண்மைத் தன்மைகளை அதிகமானவர்கள்

மேலோட்டமாகத்தான் புரிந்துகொள்வதாக உணர முடிகிறது. 

ஆகவே காட்சிகள் பற்றிய தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.   

 

தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் நொச்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.