Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 ஈழத் தமிழர்களுக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ள போதும், விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 10 ஈழத் தமிழர்களுக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று சிறை தண்டனை விதித்துள்ளது.

எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12ம் திகதி ஜேர்மனி – பேர்ளினில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தண்டிக்க முடியாது என்று வாதாடினர்.

எனினும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு 6 முதல் எட்டு மாதங்கள் வரையில் சிறைதண்டனை விதித்துள்ளது.  http://www.pathivu.com/news/36134/57/10/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு சேர்த்த காசை....
முள்ளிவாய்க்கால் போரின் பின், சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியவர்கள் இவர்கள் என்றால், 

இந்த ஆறு மாத தண்டனை போதாது. ஆயுள் தண்டனையாக கொடுக்கப் பட வேண்டும்.

சொந்த வேலைகளுக்குத்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த வேலைகளுக்குத்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

 

 

தயவு செய்து கொஞ்சம் விசாரித்து எழுதுங்கள்

 

எல்லோரையும் ஒரே கூடைக்குள் போட்டு

எல்லாவற்றையும்  இழந்து

எல்லோரையும் இழந்து

எமக்காக  உழைக்க

குரல் கொடுக்க எவருமற்று

எவரும் திரும்பிப்பார்க்க பயப்படும் இனமாக அழிந்து போகப்போகின்றோமா......???

 

நான் கேள்விப்பட்டது.....

ஆவணிமாதம் என நினைக்கின்றேன்

ஜேர்மனியில் சில செயற்பாட்டாளர்களது வீடுகளுக்குள் திடீரென புகுந்த காவல்த்துறையினர்

அவர்களிடமிருந்து

கணணி மற்றும் முக்கிய ஆவணங்களை  எடுத்தச்சென்றிருந்தனர்...

காரணம் கேட்டபோது

2007 இல்?  புலிகள் தடைசெய்யப்பட்டபின்னர்

2009 இல் புலிகள் இல்லாது போகும்வரை

இவ்வளவு மில்லியன்?  பணம் சேர்க்கப்பட்டுள்ளது

அவை பிழையான வழிகளில் அனுப்பப்பட்டுள்ளது

ஆனால் கணக்குகள் அரசுக்கு காட்டப்படவில்லை

அவை பற்றி  விசாரிக்கணும் என்பதே.......

ஜேர்மனியில்  புலிகள் தடைசெய்யப்பட்டபின்னர்

ஜேர்மனியில் இவர்கள் புலிகளுக்கு பணம் சேர்த்தமை சட்டப்படி குற்றம் என்பதே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் நச்சுக்குண்டுகள் போட்டு போராளிகளையும், பொதுமக்களையும் அழித்தநேரம், நாங்களும் தொடரூந்துகளையும் மறித்துப் போராடியநேரம். இறுதியாகச் சேர்த்த பணத்தை நாட்டுக்கு அனுப்ப எங்களுக்கு என்ன மண்டைபழுதா என்றுகேட்ட பொறுப்பாளர்களில் ஒருவர் இன்றும் சில பொறுப்புகளைச் சுமந்து திரிவதோடு பணமும் சேர்க்கிறார். அவருக்கு கொடுத்துதவ சில மக்களும் பின்நிற்கவில்லை. வந்தாரையும் வாழவைப்பான். வாழ்ந்தாரையும் வாழவைப்பான். வீழ்ந்தாரையும் வாழவைப்பான் தமிழன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நீதிமன்றத்தின் புலிகள் தடை சம்பந்தமான தீர்ப்பு இன்னும் சட்ட ரீதியாக அமுலாக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனிக் காசே சேக்க முடியாதா? :D

இன்று காலையில் இருந்து இந்த செய்திக்கு பதில் எழுத விரும்பவில்லை.

 

இந்த செய்தி சரியா?

 

ஜேர்மன் பத்திரிகை செய்திகளின்படி இவர்களுக்கு 6 முதல்  22 மாதம் வரையிலான ஒத்திவைக்கப்பட்ட (நன்நடத்தை ) சிறை தண்டனை தான் வழங்கபட்டு இருக்கு.

அதாவது மீண்டும் இவர்கள் ஒரு குற்றம் செய்யும் பட்சத்தில் தான்  இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். 

 

இங்கு குற்றம் சாட்டபட்டவர்கள்  இதுக்கு முதல் ஒரு போதும் எந்த விதமான சட்டமீறல்களில் சம்மந்த படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்து இருந்தது.

 

http://www.berliner-zeitung.de/berlin/unterstuetzung-einer-terror-organisation-spendensammlung-fuer-sri-lanka-endet-mit-bewaehrungsstrafen,10809148,29310200.html#disqus_jump_target

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நவீனன்
இவர்கள் யாரும் எந்த அமைப்பையும் சேராதவர்கள். ஆனால் விடுதலைப்புலிகளினூடாக 100.000 யூரோக்களை ஏழைகளுக்கு உதவும் நோக்கில் அனுப்பியுள்ளார்கள் என்பதை  நீதிமன்றம் உறுதி செய்து, அந்தப்பணத்தை விடுதலைப்புலிகள் தங்கள் செலவிற்காகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருந்ததால், அதை குற்றம் சாட்டியவர்களும் ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு இந்தத் தண்டனையை 6 இலிருந்து 22 மாதங்களுக்கு அளித்துள்ளனர்.

இந்தக்காலகட்டத்தில் இவர்கள் சிறை செல்ல வேண்டியதில்லை.
மீண்டுமொருமுறை இப்படியான அல்லது இது போன்ற அல்லது வேறு குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது.

உண்மை நவீனன்

இவர்கள் யாரும் எந்த அமைப்பையும் சேராதவர்கள். ஆனால் விடுதலைப்புலிகளினூடாக 100.000 யூரோக்களை ஏழைகளுக்கு உதவும் நோக்கில் அனுப்பியுள்ளார்கள் என்பதை  நீதிமன்றம் உறுதி செய்து, அந்தப்பணத்தை விடுதலைப்புலிகள் தங்கள் செலவிற்காகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருந்ததால், அதை குற்றம் சாட்டியவர்களும் ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு இந்தத் தண்டனையை 6 இலிருந்து 22 மாதங்களுக்கு அளித்துள்ளனர்.

இந்தக்காலகட்டத்தில் இவர்கள் சிறை செல்ல வேண்டியதில்லை.

மீண்டுமொருமுறை இப்படியான அல்லது இது போன்ற அல்லது வேறு குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது.

 

மக்களுக்கு தெரியும் இவர்கள் யார் என்று. இவர்கள் யாருக்கு காசு சேர்த்தார்கள், அதை என்ன செய்தார்கள் என்பது எல்லாம்

இந்த தண்டனையில் இருந்து இவர்கள் தப்பி இருக்கலாம். ஆனால் இவர்கள் ஒன்றும் நேர்மையானவர்கள் இல்லை.

இவர்களுக்கு மிக பெரிய தண்டனை கிடைத்திருக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ள வைங்க பா

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ள வைங்க பா

சரி தூக்கி உள்ள வச்சாச்சு, நீங்க வாங்கோ:)
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு தெரியும் இவர்கள் யார் என்று. இவர்கள் யாருக்கு காசு சேர்த்தார்கள், அதை என்ன செய்தார்கள் என்பது எல்லாம்

இந்த தண்டனையில் இருந்து இவர்கள் தப்பி இருக்கலாம். ஆனால் இவர்கள் ஒன்றும் நேர்மையானவர்கள் இல்லை.

இவர்களுக்கு மிக பெரிய தண்டனை கிடைத்திருக்க வேண்டும்.

 

நவீனன் இணைத்த ஜேர்மனியப் பத்திரிகையில் இருந்த செய்தியைச்  சுருக்கமாக நான் எழுதியிருந்தேன்.

உங்களுக்கு அவர்களைத் தெரிந்திருந்தால் விலாவாரியாக எழுதுங்கள்.

இப்படிப் புடம் போட்டு எழுதுவதால் எல்லாம் உண்மையாகிவிடுமா?

எடுத்து விடுங்கள் உங்களுக்குத்  தெரிந்ததை. :D

 

இப்படி அந்தப்பத்திரிகையில் உள்ளது....

 

Die 32 bis 60 Jahre alten Angeklagten, die ohne Vorstrafen sind, hatten zu Beginn des Prozesses vor vier Monaten weitgehend gestanden. Sie hätten keinen Weg für humanitäre Hilfe an der damals mächtigen LTTE vorbei gesehen, erklärten einige von ihnen. Sie seien keine Mitglieder der Vereinigung gewesen. Die Rebellenorganisation gilt seit Frühjahr 2009 als militärisch zerschlagen.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.