Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா - 2 பேச்சுக்கள் 28ஆம் திகதி நடக்குமா?

Featured Replies

ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி.

Geneva talks run into agenda crisis

http://www.lankaenews.com/English/news.php?id=3250

தமிழாக்கம்

ஜெனிவா பேச்சுகளில் நிகழ்ச்சிநிரல் சிக்கல்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சக்களில் இருதரப்பினருக்கம் இடையே நிகழ்ச்சித் திட்டம் ஒன்று தயாரிப்பது தொடர்பில் பலமான சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

அரசாங்க தூதுக்குழு ஜெனிவா புறப்பட்ட போது உறுதியான நிகழ்ச்சித் திட்டம் எதுவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் நோக்கம் முன்னரைப் போலன்றி தமிழ்சமுகத்தை பாதிக்கும் உண்மையாக பிரச்சனைகள் பற்றிய நிகழ்ச்சி நேர அட்டவணை ஒன்றைத் தயாரிப்பதாகும். முன்னர் போர்நிறுத்த உடன்பாடு மற்றும் கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவே பேச்சுக்கள் அமைந்திருந்தது. அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கேகெலிய ரம்புக்வெல்ல இதை மீண்டும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகளும் மனிதாபிமான பிரச்சனைகளான A9 பாதை திறப்பு, யுத்தநிறுத்த உடன்படிக்கை மற்றும் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் கடுமையான உணவுத்தட்டுப்பாடு தொடர்பானவற்றை தவிர வேறு விடயங்களை பேச மறுத்து விட்டனர்.

இந்த பின்புலத்தில் இதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்க மேலதிகமாக 3 நாட்களை அரசாங்கத் தூதுக்குழு கேட்டுள்ளது. ஆனால் புலிகளோ இதை நிராகரித்து விட்டனர். இது நோர்வே இடைத்தரகர்களை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

இநத நிகழ்ச்சித்திட்ட குழப்பம் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28 இல் ஆரம்பமாகுமா எனச் சந்தேகம் நிலவுகின்றது.

உலக வரைபடத்தில் சுவிசுலாந்து என்றா நாட்டில் உள்ள ஜெனிவா என்ற இடத்தில் நடக்கும் 2ஆவது சந்திப்பு என்றதற்கு அப்பால் கடந்த மாசி மாதம் நடந்த பேச்சுக்களிற்கும் இதற்கும் எந்த தெடார்ச்சியோ நீழ்ச்சியோ இல்லை.

கடந்த மாசிமாதத்தில் இருந்த கள நிலமை வேறு தற்பொழுது உள்ள கள நிலமை வேறு. எனவே கடந்த மாசியில் சந்திபற்கு ஏற்புடையதாக இருந்த நிகழ்ச்சி நிரல் தற்போதை சந்திபிற்கு உகந்தது அல்ல இதை ஜெனிவா-2 என்று வருணிக்க.

ஆயரின் கடிதமும் இந்த அறிக்கையும் களத்தின் அவல நிலைக்கு நல்ல உதராணங்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20036

இவை தான் இந்த முறை முக்கியத்துவம் பெற வேண்டியவை.

  • தொடங்கியவர்

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்.

கடந்த ஏழு சுற்று பேச்சுக்களில் ஓரளவேனும் முன் கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இரு தரப்பும் பேச்சுகளில் கலந்து கொண்டன. ஆனால் இந்த தடவை முற்றிலும் வித்தியாசமாக நிபந்தனை அற்ற பேச்சுக்கு இரு தரப்பும் வந்திருப்பது அவர்கள் மீதான உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் அழுத்தம் எத்தளவு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம்.

ஆக, இந்த எட்டாவது சுற்று பேச்சுகளின் நிகழ்ச்சி நிரல் அரசினதோ புலிகளதோ கைகளில் இல்லை.

மக்களின் அடிப்படை சிக்கல்களை அதிகரித்து தற்கொலை செய்யும் நிலையில் அதிகாரப்பகிர்வுக்காய் துடிப்பவர்களை என்ன சொல்லுறது...

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்.

கடந்த ஏழு சுற்று பேச்சுக்களில் ஓரளவேனும் முன் கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இரு தரப்பும் பேச்சுகளில் கலந்து கொண்டன. ஆனால் இந்த தடவை முற்றிலும் வித்தியாசமாக நிபந்தனை அற்ற பேச்சுக்கு இரு தரப்பும் வந்திருப்பது அவர்கள் மீதான உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் அழுத்தம் எத்தளவு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம்.

ஆக, இந்த எட்டாவது சுற்று பேச்சுகளின் நிகழ்ச்சி நிரல் அரசினதோ புலிகளதோ கைகளில் இல்லை.

தமிழனுக்கு உணவே அனுப்பாத சிங்களம் உரிமையை கொடுக்குமா?. தமிழர்க்கு உணவினை கொடுக்க இவ்வளவு யோசிக்கும் சிங்களம் உரிமையை கொடுக்க எவ்வளவு யோசிக்கும், அதுவரை தமிழர் உயிருடன் இருக்க வேண்டாமா? உயிர்போனபின் உரிமை கொடுத்து என்ன பிரயோசனம்,

யாழ்ப்பானத்தை விட்டு விலகி இருக்கும் பசீர் காக்காவும், இலங்கையுடன் ஒட்டி இருக்கும்,ஜெயதேவன், டக்கிளசும் கூறலாம், உறவுகளை வைத்திருக்கு நாம் கூறலாமா? :idea: :idea: :idea:

இயல்புநிலை திரும்பாமல் அரசியல் தீர்வு பற்றி பேசுவது ஆடறுக்கமுதல் ஏதோ அறுக்கிறதுக்கு சமன்

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம்..விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை வெறும் யாழ் குடாநாட்டு மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் வடக்குக்கிழக்கில் இராணுவ நெருகுவாரங்களுக்கு உள்ளாகி வாழும் மக்களின் இயல்பு நிலை பற்றித்தான் பேசப் போகிறார்கள். ஏற்கனவே ஜெனீவாவில் சொல்லிவிட்டார்கள். இராணுவ நெருக்காவரங்கள் மக்கள் மீதிருந்து விலக்கப்படாவிடில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் நட்வடிக்கை தொரரும் என்று.

அரசைப் பொறுத்தவரை அது ஜெனிவாவில் உறுதியான இராணுவ வெற்றிகளோடும் அரசியல் வெற்றிகளோடும் களமிறங்க எண்ணியது.

ஆரம்பத்தில் ஏற்பட்ட சில இராணுவ இலாபங்களை புலிகளின் சமீபத்திய எதிரடிகள் விழுங்கிவிட்ட நிலையில் ரணில் - ராஜபக்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு பெறப்பட்ட அரசியல் கூட்டை ஒரு அரசியல் பலமாக சர்வதேசத்துக்கு காட்டும் நடவடிக்கையிலேயே அரசு தற்போது அதிகம் அக்கறை காட்டும்.

புலிகள் தங்களின் பெருந்தலைகளை விட்டுவிட்டுப் பேச்சுக்குச் சென்ற்ரிஉப்பது புலிகளுக்கு பேச்சுமேடையில் தீர்மானமெடுக்கும் அல்லது புலிகள் மீது அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அரச எண்ணங்களை சிதைக்கும் நிலையில் அரசும் புலிகளின் கோரிக்கை குறித்தே அதிகம் பேச வேண்டி இருக்கும்.

இந்த வகையில் தற்போதைய வடக்குக் கிழக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை இராணுவ நெருக்குவாரங்களுக்கு அப்பால் பெற்றுக் கொடுப்பதே இங்கு முதன்மை பெறும். அதற்கா ஏற்பாடுகளையே புலிகள் செய்து வைத்துள்ளனர். தங்களின் பேச்சுக்கான இணங்குதல் மூலம். அது மட்டுமன்றி அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு கடுமையான எச்சரிப்புப் போய்ச் சேரும் என்பதற்கு இன்று வாகரை நோக்கிய படையெடுப்பை புலிகள் முறியடித்துள்ளது பற்றி இளந்திரையன் ஜெனிவாவில் செய்தியாளர் மகாநாட்டில் கூறியுள்ளது ஏற்படுத்தலாம்.

மற்றும்படி நிரந்தரத் தீர்வு குறித்து பேசமாட்டார்கள். ஆனால் வடக்குகிழக்குப் புரிப்புப் பற்றிய புலிகளின் நிலைப்பாடு அரசுக்குச் சொல்லப்படலாம்.

  • தொடங்கியவர்

http://www.lankaenews.com/English/news.php?id=3250

தமிழாக்கம்

ஜெனிவா பேச்சுகளில் நிகழ்ச்சிநிரல் சிக்கல்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சக்களில் இருதரப்பினருக்கம் இடையே நிகழ்ச்சித் திட்டம் ஒன்று தயாரிப்பது தொடர்பில் பலமான சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

அரசாங்க தூதுக்குழு ஜெனிவா புறப்பட்ட போது உறுதியான நிகழ்ச்சித் திட்டம் எதுவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் நோக்கம் முன்னரைப் போலன்றி தமிழ்சமுகத்தை பாதிக்கும் உண்மையாக பிரச்சனைகள் பற்றிய நிகழ்ச்சி நேர அட்டவணை ஒன்றைத் தயாரிப்பதாகும். முன்னர் போர்நிறுத்த உடன்பாடு மற்றும் கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவே பேச்சுக்கள் அமைந்திருந்தது. அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கேகெலிய ரம்புக்வெல்ல இதை மீண்டும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகளும் மனிதாபிமான பிரச்சனைகளான A9 பாதை திறப்பு, யுத்தநிறுத்த உடன்படிக்கை மற்றும் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் கடுமையான உணவுத்தட்டுப்பாடு தொடர்பானவற்றை தவிர வேறு விடயங்களை பேச மறுத்து விட்டனர்.

இந்த பின்புலத்தில் இதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்க மேலதிகமாக 3 நாட்களை அரசாங்கத் தூதுக்குழு கேட்டுள்ளது. ஆனால் புலிகளோ இதை நிராகரித்து விட்டனர். இது நோர்வே இடைத்தரகர்களை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

இநத நிகழ்ச்சித்திட்ட குழப்பம் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28 இல் ஆரம்பமாகுமா எனச் சந்தேகம் நிலவுகின்றது.

மேலே உள்ளது சாணக்கியனின் மொழிபெயர்ப்பு. கீழே உள்ளது ஒரு இணையத்தள செய்தி....

'செய்தியை உருவி எடுப்பது' எப்படி என்பது இதுதான் போல.........

http://www.nitharsanam.com/?art=21152

ஜெனிவாவில் இருதரப்பும் தனித்தனியே பேசும்.?

(வெள்ளிக்கிழமை 27 ஒக்ரேபர் 2006 லக்ஸ்மன்)

ஜெனிவாவில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கும் தமிழீழ புலிகளுக்குமிடையிலான பேச்சக்களில் இருதரப்பினருக்கம் இடையே நிகழ்ச்சித் திட்டம் ஒன்று தயாரிப்பது தொடர்பில் பலமான சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அரசாங்க தூதுக்குழு ஜெனிவா புறப்பட்ட போது உறுதியான நிகழ்ச்சித் திட்டம் எதுவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் கபட நோக்கம் முன்னரைப் போலன்றி தமிழ்சமுகத்தை ஏமாற்றும் நிகழ்ச்சி நேர அட்டவணை ஒன்றைத் தயாரிப்பதாகும். முன்னர் போர்நிறுத்த உடன்பாடு மற்றும் கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவே பேச்சுக்கள் அமைந்திருந்தது. அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கேகெலிய ரம்புக்வெல்ல இதை மீண்டும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமான பிரச்சனைகளான பாதை திறப்பு, யுத்தநிறுத்த உடன்படிக்கை மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் கடுமையான உணவுத்தட்டுப்பாடு தொடர்பானவற்றை தவிர வேறு விடயங்களை பேச மறுத்து விட்டனர் என்று அறியமுடிகிறது. இந்த பின்புலத்தில் இதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்க மேலதிகமாக 3 நாட்களை அரசாங்கத் தூதுக்குழு கேட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளோ இதை நிராகரித்து விட்டனர் என்று அறியமுடிகிறது. இது நோர்வே இடைத்தரகர்களை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்ட குழப்பம் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28 இல் ஆரம்பமாகுமா எனச் சந்தேகம் நிலவுகின்றது.

இங்கிருந்து புறப்படுமுன்னே எத்தனையொ தகிடுதத்தங்கள். அரசில் உள்ள ஒருவருக்கொருவர் மறுபட்ட கருத்துக்களும் மாறுபட்ட அறிக்கைகளும். சிங்களம் யாருடையதோ அழுத்ததிற்கும் யாரையோ திருப்திப்படுத்தவும் செய்யும் ஒரு கீழ்த்தரமான ஒரு மோசச் செயலென்பது பாதிக்கப்ட்டவர்களுக்குப் புரியும். இனியும் பேச்சுவார்த்தை உடன்படிக்கை என்று எம் மக்களை அழித்துக் கொண்டிருப்பது வீணான செயல். மனிதபிமானமற்றவர்களிடம் மனிதபிமானத்தைப் பற்றி பேசி நேரம் கடத்தவது வீண் வேலை.

ஈழத்திலிருந்து

ஜானா

அதற்காக எமது பிரச்சினைகளை உலகுக்கு சொல்ல கிடைத்த ஒரு சந்தர்பத்தை விட்டு விடலாமா?

புலித் தேவனின் அண்மைய நிலவரம் நிகச்சியைப் பாருங்கள் புரியும்.பதிவு இணயத்தில் இருக்கிறது.

'செய்தியை உருவி எடுப்பது' எப்படி என்பது இதுதான் போல.........'

நல்லவேளை, அப்படி உருவுபவர் பெயர் "அரிச்சந்திரன்" இல்லையாம், "லக்ஸ்மன்" தானாம்..!!!

:lol:

இப்போது அரசியல் தீர்வு பற்றி நிமால் சிறிபால டி சில்வாவிடம் கேட்டால் இந்திய முறையிலான பஞ்சாயத்தீர்வே சிறந்தது என்பார்....அதற்கு நீங்கள் தயாரா?

:lol:

உலகத்திற்கு சொல்லிச் சொல்லியே சோபையிழந்து கிடக்கின்றது எமது மண். எத்தனை பிஞ்சுகள் பட்டினி சாவிற்கு காவு கொடுக்கப்போகின்றோமோ? இத்தனைக்கும் பின் உலகு என்ன செய்தது. செய்கின்றது. உண்மையான நிலை தெரிந்தும் அரசுக்கு வால் பிடித்துத் திரியும் உலகத்தைப்பற்றி எதற்குக் கவலை. பேசச் சொல்லி அதன் பின் ஒரு அறிக்கையை இருதரப்பினரிடமிருந்து வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டு விட்டு கண்ணை மூடிக் கொள்ளப் போகின்றது உலகம். அதன்????? இனியும் பேச்சு வார்த்ததை?????

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

நல்லவேளை, அப்படி உருவுபவர் பெயர் "அரிச்சந்திரன்" இல்லையாம், "லக்ஸ்மன்" தானாம்..!!!

:lol:

இப்போது அரசியல் தீர்வு பற்றி நிமால் சிறிபால டி சில்வாவிடம் கேட்டால் இந்திய முறையிலான பஞ்சாயத்தீர்வே சிறந்தது என்பார்....அதற்கு நீங்கள் தயாரா?

:lol:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட வட கிழக்கு இணைந்த மாகாண ஆட்சியை நிராகரித்த தமிழ் மக்கள் அதனைவிட சிறப்பான ஒரு அரசியல் தீர்வையே பரிசீலனைக்கு எடுப்பார்கள் என்பது சிங்கள தலைமைகளுக்கு தெரியவந்து பலநாட்கள் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திற்கு சொல்லிச் சொல்லியே சோபையிழந்து கிடக்கின்றது எமது மண். எத்தனை பிஞ்சுகள் பட்டினி சாவிற்கு காவு கொடுக்கப்போகின்றோமோ? இத்தனைக்கும் பின் உலகு என்ன செய்தது. செய்கின்றது. உண்மையான நிலை தெரிந்தும் அரசுக்கு வால் பிடித்துத் திரியும் உலகத்தைப்பற்றி எதற்குக் கவலை. பேசச் சொல்லி அதன் பின் ஒரு அறிக்கையை இருதரப்பினரிடமிருந்து வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டு விட்டு கண்ணை மூடிக் கொள்ளப் போகின்றது உலகம். அதன்????? இனியும் பேச்சு வார்த்ததை?????

ஈழத்திலிருந்து

ஜானா

ஜானா. எங்களுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு.

1. யாருடைய உதவியும் இல்லாமல் எம்மை நாங்களே காத்துக்கொள்ளும் அளவுக்கு எம்மை வலிமைப்படுத்திக்கொள்வது. இதில் பொருளாதாரத்தடை பட்டினிச்சாவு எல்லாம் உள்ளடங்கும். இன்னும் விளப்பமாக சொல்வதானால் பட்டினிச்சாவை எதிநோக்கும் போது குய்யோ முறையோ என்று அழுதுவடிக்காமல் எங்களை நாங்களே அதிலிருந்து காத்துக்கொள்ளும் அளவுக்கும், எந்த பொருளாதாரத்தடையும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலைக்கும் நாங்கள் முன்னேறவேண்டும்.

2. உலக நாடுகளுடன் ஒத்துப்போவதன்மூலம் அழிவுகள் வராமல் காத்துக்கொள்வது.

முதல்வழி இப்போதைக்கு சாத்தியப்படும் அறிகுறி இல்லை என்பதால் இரண்டாவது வழியை பின்பற்றுகிறோம். நீங்கள் சொல்லவதுபோல இரண்டாவது வழியை தூக்கியெறிவதென்றால் முதல்வழி திறந்தாயிற்று என்பதை நாங்கள் உறுதி செய்துகொள்வது அவசியம்.

நீங்கள் உண்மையிலேயே ஈழத்திலிருந்துகொண்டு அதுவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் மக்களிடையே இருந்துகொண்டு இந்தக்கருத்தை சொல்கிறீர்களானால் இந்த முதல்வழியை அடையும் திட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது பற்றிச் சிந்திப்பது எல்லாருக்கும் மிக்க பயன் தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு உணவே அனுப்பாத சிங்களம் உரிமையை கொடுக்குமா?. தமிழர்க்கு உணவினை கொடுக்க இவ்வளவு யோசிக்கும் சிங்களம் உரிமையை கொடுக்க எவ்வளவு யோசிக்கும், அதுவரை தமிழர் உயிருடன் இருக்க வேண்டாமா? உயிர்போனபின் உரிமை கொடுத்து என்ன பிரயோசனம்

எமக்கென்று நீதிச்சபை உண்டு, காவல்துறை உண்டு, அரசாங்கம் உண்டு, இராணுவம் உண்டு, கடற்படை உண்டு, வான்படை... இன்னும் என்னென்னவோ உண்டு ஆனால் உணவுமட்டும் ஏன் சிங்களவன் தான் அனுப்பவேணும்? இப்படியான dependency இருந்தால் எப்படி independece காண்பது?

எல்லாம் உண்டு ஆனால் யாழ்பாணம் எமது கட்டுப்பாட்டில் இல்லை. :idea: :idea: :idea:

யாழில் உணவுக்கு தட்டுபாடு வன்னியில் உற்பத்திப்பொருளை பிற இடத்துக்கு எடுத்து சென்று விற்கமுடியாத நிலை. :cry:

சமாதானம் என்பவர் முன்னைநாள் ரெலோவும் தற்போதய ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினருமான கீரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் உண்டு ஆனால் யாழ்பாணம் எமது கட்டுப்பாட்டில் இல்லை. :idea: :idea: :idea:

யாழில் உணவுக்கு தட்டுபாடு வன்னியில் உற்பத்திப்பொருளை பிற இடத்துக்கு எடுத்து சென்று விற்கமுடியாத நிலை. :cry:

ஓ அப்பிடியே சங்கதி. அப்ப வன்னியில எல்லா வசதியும் (பால்மா உட்பட) இருக்கெண்டு சொல்லுங்கோ. அப்ப ஏ-9 திறக்கத்தேவையில்லை முகமாலையை மட்டும் திறந்தால் போதும். உந்த கூட்டமைப்புக்காரருக்கு மூளையே இல்லையப்பா. ஏ-9 திறக்கச்சொல்லி அரசாங்கத்திட்டை ஏன் வீணா கெஞ்சினம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட வட கிழக்கு இணைந்த மாகாண ஆட்சியை நிராகரித்த தமிழ் மக்கள் அதனைவிட சிறப்பான ஒரு அரசியல் தீர்வையே பரிசீலனைக்கு எடுப்பார்கள் என்பது சிங்கள தலைமைகளுக்கு தெரியவந்து பலநாட்கள் ஆகிவிட்டது.

உண்மைதான், அதுமட்டுமில்லை ராணுவத்தீர்வு சரிவராது எனத்தெரியவந்தும் பல வருடங்களாகிவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?

இம்முறை முகமாலையை திறக்க அரசு சம்மதிக்காவிட்டால், அதை மனிதாபிமான பிரச்சனையாக கொண்டு மாவிலாறு போல புலிகள் என் படைநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளக்கூடாது?

உலகத்திற்கு மண்டியிடவா நாம் இத்தனை உயிர்களைப் பலி கொடுத்தோம். நாம் கேட்பது உன்னால் ஈன சிங்களவரை வழிக்குக் கொண்டு வர முடியாவிடின் ஒதுங்கியிரு என்பதே. யாழில் பட்டினிச் சாவு அரசால் ஏற்படுத்தியது. எம் மக்களுக்கு அன்றாட கடைமைகளை செய்வதற்கு சுதந்திரமாக விடட்டும் நாம் எவருடைய காலடிகளிலும் விழமாட்டோம். அத்துடன் உலக நாடுகளுடன் ஒத்துப் போவதால் அழிவுகள் வராதென்பது என்ன நிச்சயம். இந்த பேரினம் எப்படியும் அழித்தே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்து நிற்கின்றது. எமக்கு வேண்டியது எம்மை எம் வழியில் செல்ல விடுங்கள் பயங்கர வாத அரசுக்கு அடிவருடாமல் எம் மேல் பழிகளைப் போட்டு எம்மை வாட்டாமல் ஒதுங்கியிருங்கள் என்பதே. எம்மால் முடியும் எம்மால் எம்மைக் காப்பற்ற முடியும்.

ஈழத்திலிருந்து

ஜானா

என்னை பொறுத்தவரையில் அல்லது என் னறிவுக்குட்பட்டவகையில் சொல்லப்போனால் தடை உலகெல்லாம் எமக்கிருக்கு அதாவது தடைபட்டியலில் புலிகள் பெயர் இருக்கிரது ஆனால் மற்றைய இயக்கங்களுக்கு எதிராக செய்யப்படும் நடவடிக்கைகளில் சிரு தூசு தான் செய்கிறார்கள்.உலகத்துக்கு தெரியும் எம் நியாயம் அனால் தன் சியநலத்துக்ககவும் இலங்கைக்கு ஆயுதம் விற்கவே முரண்டு பிடிக்கின்றன புலி பாயும் போது அலறி அடிச்சுக்கொண்டு மகிந்த ஓடும் போது யாரும் காப்பாற்ரப்போவதுமில்லை இலங்கை பிரச்சினையை உலகம் கைவிடும் காலம் நெருங்குகிறது அதாவ்து உலகம் சிங்களவனை திருத்தமுடியாது என நன்றாக புரிந்திருக்கும் அவரின் வாய்வீச்சும் அனைவருக்கும் தெரியும்.அதுக்கு எம் சமூகம் இன்னும் பிரச்சாரங்களை முடக்க வேண்டும் என்னுடன் படிக்கும் அமெரிக்க ந்ண்பன் ஒருவனுக்கு நான் எம்பிரச்சினையை சொன்னேன் வீடியோக்களும் புத்தகங்களையும் கொடுத்தேன்.bbc வந்த விவரணத்தையும் கொடுத்தேன் அதுக்கு அவன் சொன்னான் இவ்வளவு நியாயங்களையும் வைத்துக்கொண்டு ஏன் சரியான பரப்புரையையோ அல்லது முழுசன ஒரு படத்தையோ எடுத்து வெளியிடவில்லை என அதற்கு அவன் சொன்ன உதாரணம் உண்மையாகத்தான் ப்தெரிகிறது அமெரிக்கா படங்களில் சேவியத் நேரங்களில் சேவியத்காரரை கெட்டவர்களாக காட்டி படமெடுத்தார்கள் அது மக்களிடம் செல்கையில் சேவியத்தை கெட்டவர்களாக பார்க்கும் மனோநிலையை மக்கள் அடைந்துவிட்டனர் ஆக சேவியத் உடைபட இதுவும் ஒரு மறைமுக காரணி இப்போது ரஸ்ஸியர்களை அமெரிக்கா படங்கள் மறந்து வீட்டு இப்போது அரபியர்களை காட்டுகிறது என்று சொன்னான்.அது உண்மை எனவே எனக்கும் தோன்றுகின்றது தான் இலங்கை பற்றி ஒரு விவரணத்தை தயாரிக்கப்போவதாக கூறினான்.

ஏன் எம் பிரச்சார உத்தியை வேறுவடிவில் மாற்ற முய்ற்சிக்ககூடாது???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.