Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹக்கீமிடம் கெஞ்சினார் மகிந்த;கொதித்தார் கோத்தபாய! – அலரி மாளிகையில் நடந்த கடைசி சந்திப்பு இரகசியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mahintha-gootapaya-200-seithy-news.jpg

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசி வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

   

இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கு ஹக்கீம், ஜனாதிபதியின் வாக்குறுதியை எழுத்து வடிவில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அது தொடர்பில் தான் யாரிடமும் வாய்திறக்கப் போவதில்லை என்றும் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம்கள் தொடர்பில் கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்து திட்டியுள்ளார். மேலும் தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை கரையோர மாவட்டத்தை வழங்க விடமாட்டேன் என்றும் கர்ஜித்துள்ளார். இதன்போது ஹக்கீமுக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச மீது சீறிவிழுந்த ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு, தனது சகோதரனின் வார்த்தைகளுக்காக மனவருத்தம் தெரிவித்திருந்ததுடன் தொடர்ந்தும் தனது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு ஹக்கீமிடம் கெஞ்சியுள்ளார். எனினும் கோத்தபாயவின் செயலால் சீற்றம் கொண்டிருந்த ஹக்கீம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது வெளியேறிச் சென்றிருந்ததுடன், அதற்கடுத்த நாள் அரசாங்கத்திலிருந்தும் வெளியேறும் தனது முடிவை அறிவித்திருந்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=123664&category=TamilNews&language=tamil

சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில் கோத்தாவை பாராட்டனும். தமிழரின் பாரம்பரிய நிலங்களை தூண்டாடி.. அடாத்தாகப் பிடித்து.. இன்று அவற்றை எல்லாம் இணைத்து ஒரு முஸ்லீம் மாவட்டத்தை உருவாக்கினால்.. (நிலத்தொடர்பற்ற இவர்களின் கடந்த கால நிலையை இல்லாமல் செய்து நிலத்தொடர்புள்ள ஒரு பிரசேதத்துக்குள் தங்களை கொண்டு வந்துவிட்டால்) நாளை அதனை வைச்சு ஒரு தனி அலகு வடக்குக் கிழக்குக்குள் கேட்கும் நிலை உருவாகும். ஏன்.. யாழ்ப்பாணத்திலும் கொட்டடி.. முஸ்லிம் பள்ளி.. 5 சந்தியை உள்ளடக்கி தனி நகராட்சி உருவாக்கவும் கேட்பார்கள். ஆனால் கல்முனையில் உள்ள பிள்ளையார் கோவிலை இரவோடு இரவாக இடித்து அகற்றிவிடுவார்கள்.

 

தமிழரின் நிலத்தை சிங்களவன் புடுங்கிறது உலகம் அறிந்த சங்கதி. முஸ்லீம்கள் ரகசியமாக ஆக்கிரமிப்புச் செய்வது இன்னும் உலகிற்கு சரிவர வெளிச்சத்துக்கு வராத சங்கதி. பொத்துவில் எப்ப தொடங்கி.. முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசம் ஆனது..??! கடல் வளத்தை மையமாக வைச்சே அதனை அபகரிக்க நினைக்கிறார்கள். அங்குள்ள தமிழ் மக்களின் நிலை..????????????????????! பொத்துவில்.. தமிழர்களின் பூர்வீக மண். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நிலத்தை சிங்களவன் புடுங்கிறது உலகம் அறிந்த சங்கதி. முஸ்லீம்கள் ரகசியமாக ஆக்கிரமிப்புச் செய்வது இன்னும் உலகிற்கு சரிவர வெளிச்சத்துக்கு வராத சங்கதி. பொத்துவில் எப்ப தொடங்கி.. முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசம் ஆனது..??! கடல் வளத்தை மையமாக வைச்சே அதனை அபகரிக்க நினைக்கிறார்கள். அங்குள்ள தமிழ் மக்களின் நிலை..????????????????????! பொத்துவில்.. தமிழர்களின் பூர்வீக மண். :icon_idea::)

வச, வச என்று பிள்ளை குட்டிகளை அல்லா குடுக்கிறார்.

குடும்பக் கட்டுப்பாடு இல்லாத சமூகம், இருக்க வாழ இடம் வேண்டுமே.

சாதாரண வியாபாரிகளாக வந்து போன அராபியர்கள், மாலைதீவை, மலேசியாவை, இந்தோனேசியாவை இஸ்லாமிய நாடுகளாக்கிவிட்டனர்.

பிரிட்டிஸ்காரர் மொகாலயர்களிடம் பறித்திடாவிடில், இந்தியா எப்பவோ முழு இஸ்லாமிய நாடு ஆகி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அளவுக்கு மகிந்த இறங்குவார் என்றால் தோல்வி அவரை நெருங்குவதை உணர்ந்துள்ளார் என்பதே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் வினை தன்னை சுடும்.

ஈழத் தமிழர் அதற்கு உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.