Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பா 2005ல் ரணிலின் தோல்விக்கு காரணம்?- ஆய்வு

Featured Replies

சிறீலங்காவில் 2005 ஆண்டு நடைபெற்ற சனாதிபதித்தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஐபக்ச வெல்லக் காரணம் என்றும் அதை வைத்ததே தாம் விரும்பிய ரணில் ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்திய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம்.

முதலில் 2005 இல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2005 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                                ரணில்             மகிந்த               மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                           1,21,514             28,836                  1,54,615

திருகோனமலை                    92,167               55,680                  1,52,428

அம்பாறை                                 1,59,198            1,22,329                2,88,208

யாழ்ப்பாணம்                            5,523                1,967                        8,524

வன்னி                                          65,798               17,197                     85,874

மொத்த வாக்குகள்                 4,44,200          2,26,009               6,89,649

2005 தேர்தலில் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ரணிலே வெற்றி பெற்றார் என்பதும், இதைக் கடந்து சிங்கள தேசத்தின் 16 மாவட்டங்களில் கொழும்பு, மகாநுவர (கண்டி), மாத்தளை, நுவரேலியா, புத்தளம். பதுளை ஆகிய 6 மாவட்டங்களையும் ரணில் வென்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி இப்போது; 2010 இல் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2010 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                           பொன்சேகா           மகிந்த            மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                          1,46,957                   55,663                    2,16,287

திருகோனமலை                   87,661                      69,752                  1,64,504

அம்பாறை                              1,53,105                     1,46,912                  3,09,474

யாழ்ப்பாணம்                       1,13,877                     44,154                      1, 85,132

வன்னி                                      70,367 2                        8,740                     1,07,680

மொத்த வாக்குகள்            5,71,967                      3,45,221                 9,83,077

ரணில் போன்றே சரத் பொன்சேகாவும் தமிழர் தாயகத்தில் அனைத்து ஆறு மாவட்டங்களிலும் மகிந்தாவை கடந்து அமோக வெற்றி பெற்றார். ஆனால் சிஙகள தேசத்தின் 16 மாவட்டங்களில் நுவரேலியா தவிர எந்தவொரு மாவட்டத்திலும் பொன்சேகா வெற்றி பெறவில்லை.

அதாவது கடந்த இரண்டு சனாதிபதித் தேர்தலிகளிலும் தமிழ் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை ராசபக்சவால் வென்றெடுக்க முடியவில்லை என்பதையே இம்முடிவுகள் வெளிகாட்டி நிற்கின்றன.

2005 ஆண்டு தேர்தலில்; 2 லட்சத்து 18 ஆயிரத்து 191 வாக்குகளாலும் 2010 ஆண்டுத் தேர்தலில் இல் 2 லட்சத்து 26 ஆயிரத்து 446 வாக்குகளாலும் ராசபக்ச தமிழர் தாயகத்தில் பின்தங்கியே இருந்துள்ளார்.

இதில் 2005 மற்றும் 2010 தேர்தல்களில் பிரதான முஸ்லீம் கட்சியான முஸ்லீம்; காங்கிரஸ் ராசபக்சவிற்கு எதிராக முறையே ரணில் மற்றும் பொன்சேகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது என்பதும், 2010இல் தமிழர் தேசிய கூட்டiமைப்பு பொன்சேகாவிற்கு வெளிப்படையான ஆதரவு நிலையை கொண்டிருந்தது என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி வியடத்திற்கு வருவோம். 2010 இல் பொன்சேகா 2005 இல் ரணில் பெற்றதைவிட 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 அதிகம் வாக்குகளை தமிழர் பகுதிகளில் அதிகமாக பெற்றிருந்தார். சரி தமிழர் தரப்பில் எந்தவொரு வாக்குப் புறக்கணிப்பும் இன்றி 2010 போல் 2005இலும் வாக்களிப்பு நடைபெற்றிருந்தால் ரணில் பொன்சேகா அதிகமாகப் பெற்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 வாக்குகளைப் பெற்றார் என வைத்துக் கொள்வோம், ஆனால் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளால் ரணில் 2005இல் மகிந்தாவிடம் தோல்வியுற்ற நிலையில் எவ்வாறு அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியுமா?

இதைத்தவிர விடுதலைப்புலிகள் வாக்கு புறக்கணிப்பு என்று தெரிவித்ததின் அர்த்தம் என்ன? விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் எதற்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு சென்று இன்னொரு தேசத்தின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதுவும் அதைக்கடந்து யாழ் மாவட்டம் தவிர ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்குப்புறக்கணிப்பை அவர்கள் பெரியளவில் முன்னெடுக்கவில்லை என்பதையும் முறையே 2005 மற்றும் 2010 தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை கவனத்தில் கொள்ளும் எவரும் அவதானிக்கலாம்.

வாக்குப்புறக்கணிப்பால் தமிழர் பகுதிகளில் யாருமே வாக்களிக்கவில்லை என்ற தோற்றப்பாடே இன்றுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தமிழர் பகுதிகளில் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 200 வாக்குகளை ரணில் எவ்வாறு பெற்றார் என்பதை யாரும் தெரிவிக்க முடியுமா?

2005 தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டபோது அவ்வாறான ஒரு தோற்றப்பாடு இருந்தது என்பது உண்மையே எனிலும் 2010 தேர்தல் முடிவுகள் அக்கணிப்பு தவறு என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியது என்பதை இன்றுவரை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிபரங்கள் துலாம்பரமாக காட்டி நிற்கின்றன.

ஆகமொத்தத்தில் இனியாவது விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே 2005 இல் மகிந்த வெற்றிபெற வழிகோலியது என்ற தவறான வாதத்தை அனைவரும் முழுமையாக கைவிடுவார்களா? மாறாக எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழர் மனங்களை என்றும் வெல்லவில்லை, வெல்லவும் முடியாது அவ்வாறு நடந்து கொள்ளவும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?

நேரு குணரத்தினம்

Nehrug2015@gmail.com

ranil-an.png

 

- See more at: http://www.canadamirror.com/canada/36148.html#sthash.NWKj2eIU.f8a32UaU.dpu

 

சிங்கள மாவட்டங்களில் கள்ள ஓட்டுப் போட்ட விபரம் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்ததும் ஆய்வு மீண்டும் ஆய்வு செய்யப்படும்.

ஆய்வு நேரு ஐyoooooooooooooooooooo

  • கருத்துக்கள உறவுகள்

செல்லும் செல்லாததை எல்லாம் புலியள் தலையில கட்டிவிட வேண்டியதுதான். ஏதாே ரணில் நல்ல பிள்ளை எண்டு எல்லாரும் நினைப்பு. அவரும் இதையேதான் செய்திருப்பாா். அப்ப பல்லவியை மாத்திப் பாடியிருப்பாேம். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

2005 தேர்தலை யாழ் மாவட்டம் புறக்கணித்துள்ளது. வெறும் 8500 வாக்குகள்தான் பதியப்பட்டுள்ளன. அப்போது யாழ மாவட்டத்துக்குள் அரசியல் செய்ய புலிகள் சென்றிருந்தார்கள் என நினைக்கிறேன்.. அவர்கள் விரலைக்கிரலை ஏதும் வெட்டினார்களா??! :D

  • கருத்துக்கள உறவுகள்

2005 தேர்தலை யாழ் மாவட்டம் புறக்கணித்துள்ளது. வெறும் 8500 வாக்குகள்தான் பதியப்பட்டுள்ளன. அப்போது யாழ மாவட்டத்துக்குள் அரசியல் செய்ய புலிகள் சென்றிருந்தார்கள் என நினைக்கிறேன்.. அவர்கள் விரலைக்கிரலை ஏதும் வெட்டினார்களா??! :D

வாக்கு சாவடியை ஓரகண்ணால் பார்த்த 10பேருக்கு கண்ணை தோண்டினார்கள்.
வாக்கு சாவடி என்று வாய் தடுமாறி வார்த்தை விட்ட 12 பேரின் நாக்கை வெட்டினார்கள். 

2005 தேர்தலை யாழ் மாவட்டம் புறக்கணித்துள்ளது. வெறும் 8500 வாக்குகள்தான் பதியப்பட்டுள்ளன. அப்போது யாழ மாவட்டத்துக்குள் அரசியல் செய்ய புலிகள் சென்றிருந்தார்கள் என நினைக்கிறேன்.. அவர்கள் விரலைக்கிரலை ஏதும் வெட்டினார்களா??! :D

வாக்கு சாவடியை ஓரகண்ணால் பார்த்த 10பேருக்கு கண்ணை தோண்டினார்கள்.
வாக்கு சாவடி என்று வாய் தடுமாறி வார்த்தை விட்ட 12 பேரின் நாக்கை வெட்டினார்கள். 

ஆய்வு நேரு ஐyoooooooooooooooooooo

இது உள்ளூர் அரசியல் ....
சர்வதேச அரசியல் விஞ்ஞானி நீங்கள் இவளவு பெரிய ஆள் இதுக்குள் ஏன் வந்தீர்கள்?
 
மேலே இருக்கிறது தேர்தல் ஆணையகத்தின் தேர்தல் முடிவுகள்.
அது கூட தெரியாது.
அரசியல் பேச ....................  

இப்ப என்ன  அவசரம் இன்னும் பத்து வருசத்துக்கு பிறகு ஆராய்ந்து பார்த்தால் பிரயோசனமா இருக்கும்.  :lol:

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

http://www.electionguide.org/elections/id/1986/


NOV. 17, 2005HELD
9,826,778
VOTED
sri_lanka.gif 
Democratic Socialist Republic of Sri Lanka ELECTION FOR PRESIDENT (PRESIDENT)
RESULTS
73%
VOTER 
TURNOUT*
Type Count Valid Votes 9717039 Not Participated 3610121
 
Cast Votes:9,826,778
Valid Votes:9,717,039
Invalid Votes:109,739
Registered Voters:13,327,160
CANDIDATES:

Mahinda RAJAPAKSHA4,887,152

50.29

Ranil WICKRAMASINGHE4,706,366

48.43

Siritunga JAYASURIYA35,425

0

Achala Ashoka SURAWEERA31,238

0

Victor HETTIGODA14,458

0

Chamil JAYANETHTHI9,296

0

Aruna DE ZOYSA7,685

0

Wimal GEEGANAGE6,639

0

Anura DE SILVA6,357

0

Ajith Kumara Jayaweera ARACHCHIGE5,082

0

Wije DIAS3,500

0

P. Nelson PERERA2,525

0

Hewaheenipellage Shantha DHARMADWAJA1,316

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.