Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரகசியமான நாட்டுக்கு ஏற்றப்பட்ட புதல்வர்களின் பெறுமதியான கார்கள்!– தப்பிச் செல்ல விமானங்கள் தயார் நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன.

விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

carsl_1.jpg

carsl_2.jpg

carsl_3.jpg

carsl_4.jpg

http://kalapam.ca/இரகசியமான-நாட்டுக்கு-ஏற்/

ஒரு வேளை மகிந்த தோற்றாலும் அவரோ அல்லது அவர் குடும்பமோ வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வேண்டிய தேவை வர மாட்டாது. காரணங்கள்

1. சிங்களம் ஒரு போதும் இன்னொரு சிங்களவரை காட்டிக் கொடுக்காது. அதுவும் போரில் வென்று சிங்கள மக்களின் அபிமானத்தினைப் பெற்ற மகிந்தவை தண்டிக்கும் அளவுக்கு சிங்களவர்கள் தமிழர்களைப் போன்றவர்கள் அல்ல.

2. எந்த ஒரு கட்சியும், முக்கியமாக முதலாளித்துவத்துக்குள் ஊறிப்போன ஐ.தே.க யும், சுதந்திரக் கட்சியும் ஊழலுக்காக இன்னொரு கட்சியின் தலைவர்களை தண்டிக்காது.

3. மகிந்த தோற்றாலும் சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருப்பார்.

போர் குற்றங்களில் மகிந்தாவை சிக்க வைக்கவேண்டும் என்று அந்த அளவிற்கு எல்லாம் நாம் ஏன் சிந்திப்பான் (நடந்தால் நல்லது அது வேறு விடயம் ).

பொன்சேகாவிற்கு செய்தது மாதிரி அரை காற்சட்டையுடன் மகிந்தா கோஷ்டியை ஜெயில் தள்ளினாலோ அல்லது சிறிமாவிற்கு செய்தது மாதிரி குடியுரிமையை பறித்தாலே பெரியவிடயம் .எமது கண்ணுக்கு முன்னால அந்த காட்சியை காணுவதை விட்டு மீண்டும் அவரை கொண்டுவந்தால் தமிழனுக்கு தீர்வு வரும் என்று சிந்திப்பதும்

அல்லது சிங்களவன் தன்னை தானே காட்டி கொடுக்கமாட்டான் என்றும் ஏன் நினைக்கின்றோம் என்று புரியவில்லை .

இந்த விடயத்தில் சிங்களவன் ,தமிழன்,முஸ்லிம்,இந்தியன் ,சீனன்,வெள்ளை என்று எதுவும் இல்லை, தான் பாதிக்கப்பட்ட விதமும் அவர்களது எதிர்கால அரசியலுமே அதை தீர்மானிக்கும் காரணிகள் .  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை மகிந்த தோற்றாலும் அவரோ அல்லது அவர் குடும்பமோ வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வேண்டிய தேவை வர மாட்டாது. காரணங்கள்

1. சிங்களம் ஒரு போதும் இன்னொரு சிங்களவரை காட்டிக் கொடுக்காது. அதுவும் போரில் வென்று சிங்கள மக்களின் அபிமானத்தினைப் பெற்ற மகிந்தவை தண்டிக்கும் அளவுக்கு சிங்களவர்கள் தமிழர்களைப் போன்றவர்கள் அல்ல.

2. எந்த ஒரு கட்சியும், முக்கியமாக முதலாளித்துவத்துக்குள் ஊறிப்போன ஐ.தே.க யும், சுதந்திரக் கட்சியும் ஊழலுக்காக இன்னொரு கட்சியின் தலைவர்களை தண்டிக்காது.

3. மகிந்த தோற்றாலும் சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருப்பார்.

தமிழர் விடையத்தில் மட்டும் தான் அவர்கள் ஒருமை.மற்றும்படி பழி வாங்கும் குணம் எல்லா இனத்துக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்த வருடம் மகிந் த அரைக்காற் சட்டை போடாலும் அடுத்த 5 வருடத்திற்கு பிறகு சம்பந்தர் அவரைத்தானே ஆதரிக்கப் போகிறார். இதுதானே மாறி மாறி நடக்கும் அரசியல் விளையாட்டு.

இந்த செய்தியை ஏற்கனவே இணைத்து விட்டு பின்னர் எடுத்துவிட்டேன் இந்தப்படங்கள் வாகனங்களை இலங்கைக்குள் கொண்டுவரும் போது எடுக்கப்பட்டவை

10420261_10152568781013085_4757493234366

https://www.facebook.com/SujeewaSenasingheOfficial

10559865_375288935982538_273784067954274
 
 Asanka PereraKelum EkanayakaUnp WillorawatteDinesh Madushanka SinghaarachchiVideha DhothakaUnp DambadeniyaDon Iyan Madhuranga மற்றும் Kethąką Dinąj உடன்
 
பிடித்திருக்கிறது ·  · பகிர் · நேற்று

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை மகிந்த தோற்றாலும் அவரோ அல்லது அவர் குடும்பமோ வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வேண்டிய தேவை வர மாட்டாது. காரணங்கள்

1. சிங்களம் ஒரு போதும் இன்னொரு சிங்களவரை காட்டிக் கொடுக்காது. அதுவும் போரில் வென்று சிங்கள மக்களின் அபிமானத்தினைப் பெற்ற மகிந்தவை தண்டிக்கும் அளவுக்கு சிங்களவர்கள் தமிழர்களைப் போன்றவர்கள் அல்ல.

2. எந்த ஒரு கட்சியும், முக்கியமாக முதலாளித்துவத்துக்குள் ஊறிப்போன ஐ.தே.க யும், சுதந்திரக் கட்சியும் ஊழலுக்காக இன்னொரு கட்சியின் தலைவர்களை தண்டிக்காது.

3. மகிந்த தோற்றாலும் சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருப்பார்.

 உண்மை!    இதுதான் சிறீலங்காவின் நடைமுறை. மகிந்த மீது நடடிக்கை  மைத்திரியால் எடுக்க முடியாது. ஏன் அவரே பகிரங்கமாக அறிவித்துள்ளார்தானே. நாட்டின் தலைவர்களையோ படையினரையோ காட்டிக்கொடுக்க மாட்டேன்; பாதுகாப்பேன். சமஸ்டித் தீர்குறித்து சிந்திக்க மாட்டேன். அத்துடன் அவரும் இறுதி இனஅழிப்புக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையால் இனப்படுகொலையில் நேரடிப் பங்காளி. எப்படியவர் நடவடிக்கை எடுப்பார். சிங்களத்துக்கு மட்டுமல்ல சிறிலங்காவுக்கு வெள்ளையடிக்க முனையும் இனஅழிப்பிற்குத் துணைநின்ற கொடுமரசுகளுக்கும் தேவை இப்போது ஒரு கவர்ச்சிகரமான முகமூடி. அந்த முகமூடியாக அமைந்தவரே மைத்திரி. இந்த முகமூடியை வைத்து அடுத்த ஐந்து வருடகாலத்தை தமது தேவைக்கேற்றதுபோல் உலகும் சிங்கள ஆளும் வர்க்கம் மற்றும் பௌத்த சிங்கள பீடங்கள் கொள்கைவகுப்பாளர்கள் ஆகியோர் தமிழருக்கான எந்தத் தீர்வையும் வைக்காது நகர்த்திவடுவர். மீண்டுமொரு சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் வரும்போது நாமும் கருத்துகளால் விவாதித்து ஒன்றுபடாது சண்டையிடக் களம் திறக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை ஏற்கனவே இணைத்து விட்டு பின்னர் எடுத்துவிட்டேன் இந்தப்படங்கள் வாகனங்களை இலங்கைக்குள் கொண்டுவரும் போது எடுக்கப்பட்டவை.

------

அட பாவிங்களா......

இறக்குமதி செய்த போது.... எடுத்த படங்களை,

ஏற்றுமதி செய்யும் படங்களாக... கதை கட்டின இணையத்தின் கிளுகிளுப்புக்கு ஒரு "சபாஷ்".. :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.