Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் தமக்கில்லை ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் மைத்திரிபால தெரிவிப்பு!

Featured Replies

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை   நிகழ்த்தினார்

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.

எனினும் தமது தேர்தல் பிரசார பணிகளுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார்.

தாம் வெற்றியீட்டினால் நாடு பிளவுபடும் என சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளர்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தனிப்பட்ட ரீதியிலும் பொது எதிரணி என்ற வகையிலும் பொறுப்புடன் செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் தமக்கில்லை என தெரிவித்த அவர் பிரிவினைவாத கோரிக்கை அல்லது எல்.ரி.ரி.ஈயினரின் மீள் எழுச்சிக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் தமது வெற்றி உறுதியானது எனவும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

பௌத்த சமயத்தின் மேம்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்த அவர் ஏனைய சமயங்களுக்கும் உரிய மதிப்பளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/news/36636/57//d,article_full.aspx

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டேன் – மைத்திரி உறுதிமொழி JAN 05, 2015 | 7:47by கார்வண்ணன்in செய்திகள்

Maithripala-Sirisena-300x200.jpgஅதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து இராணுவத்தை  விலக்கிக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது முழுப் பொறுப்பாகும்.

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டைப் பிரிக்கவோ, விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கவோ இடமளிக்கப்படமாட்டது.

நாட்டைப் பிரிப்பது தொடர்பாகவோ, அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ நாம் எந்த உடன்பாடு செய்து கொள்ளவில்லை.

100 நாள் செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் அறிக்கையின் கீழ் தான் அரசியல் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்தன.

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையை நான் பலப்படுத்துவேன். எல்லா நாடுகளுடனும் நல்ல உறவுகைளைப் பேணி, அவற்றின் இதயத்தில் இடம்பிடிப்பேன்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதையும், அங்கீகாரம் அளிக்கப்படுவதையும், எதிரணி உறுதி செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/05/news/2400

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. எங்கே விலக்கிவிடுவார்களோ என்று சிங்களவர்கள் பயப்படும்படி இருந்தது.. நல்லபடியாக இவர் தெளிவுபடுத்திவிட்டார். இனிமேல் சிங்கள வாக்குகள் விழும்.. மகிந்தவுக்கு ஆப்புத்தான்.. :lol:

கூடவே இராணுவத்தை வைச்சிருங்கன்னு சொல்லுற தங்களுக்கு,... தமிழர்களும் வாக்குப் போடப் போறாங்க...! மாவை சம்பந்தன் சுமந்திரன்.. எனி எந்த மாவை பிசையப் போறினமோ.... காணி பறிபோகுது.. இராணுவத்தை வெளியேற்றனுன்னு..???!

முதல்ல எம்மக்களை சுற்றி உள்ள உந்த ஊத்தைகளை அகற்றனும். இராணுவம் தன்பாட்டில அகலும்..!! :lol::D

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டைப் பிரிக்கவோ, விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கவோ இடமளிக்கப்படமாட்டது.-மைத்திரி .

விடுதலைப்புலிகள் தலை தூக்குவதை விட இராணுவம் இருந்தால் பரவாயில்லை என்று மக்கள் மைத்திரிக்கு தான் வாக்கு போடுவார்கள் .

முதல்ல எம்மக்களை சுற்றி உள்ள உந்த ஊத்தைகளை அகற்றனும். இராணுவம் தன்பாட்டில அகலும்..!! :lol::D

எங்க குளிச்சாலும் உந்த ஊத்தை அகலாதுங்கோய். :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குள்ள பிரச்சனையை மக்களுக்குள்ள பிரச்சனையாக சித்தரிக்கப்படாது.

நீங்கள் எல்லாம் கனடாவில் பிள்ளைகளை பெத்து வளர்த்து செளகரியமா வைச்சுக்கிட்டு.. இங்க வந்து வம்பளப்பீர்கள்.

அங்க மக்கள் பிள்ளைகளை சிறைகளிலும்.. இராணுவப் புலனாய்வுக்கும்.. இராணுவக் கண்காணிப்புக்குள்ளும் வைச்சுக் கொண்டு படுற அவதியில் கொஞ்சத்தை தன்னும்.. உணர முற்படுங்கள்.

உங்களை எல்லாம்.. ஏன் புலிகள் தேடித் தேடி சுட வேண்டி வந்ததுன்னு.. இப்ப புரியுது..!! ஈவிரக்கமற்ற நீங்கள் எல்லாம் இருந்து என்ன பயன்..!!! :icon_idea::(

எங்க குளிச்சாலும் உந்த ஊத்தை அகலாதுங்கோய். :D  :D  :D

இவர்களோடு பேச வேண்டிய பாசையே வேறு. அதில பேசினால்.. பேசாமல்... வேகமாக அகலுவார்கள். :D:icon_idea:
 
உங்களுக்குள்ள பிரச்சனையை மக்களுக்குள்ள பிரச்சனையாக சித்தரிக்கப்படாது.

நீங்கள் எல்லாம் கனடாவில் பிள்ளைகளை பெத்து வளர்த்து செளகரியமா வைச்சுக்கிட்டு.. இங்க வந்து வம்பளப்பீர்கள்.

அங்க மக்கள் பிள்ளைகளை சிறைகளிலும்.. இராணுவப் புலனாய்வுக்கும்.. இராணுவக் கண்காணிப்புக்குள்ளும் வைச்சுக் கொண்டு படுற அவதியில் கொஞ்சத்தை தன்னும்.. உணர முற்படுங்கள்.

உங்களை எல்லாம்.. ஏன் புலிகள் தேடித் தேடி சுட வேண்டி வந்ததுன்னு.. இப்ப புரியுது..!! ஈவிரக்கமற்ற நீங்கள் எல்லாம் இருந்து என்ன பயன்..!!! :icon_idea::(

உங்களுக்கு சொன்னால் என்ன? நான் கனடாவிலையும் இல்லை கள்ளதொனியும் இல்லை. எவனோ சாக அவங்கள் பேர்ல அசைலமும் அடிக்கவில்லை.

எனக்கு இன்னும் இலங்கை க்டவுச்சஈட்டுத்தான். 

என்ற குடும்பம் இலங்கையில்தான், அந்த மனனைவிட்டு நிரந்தரமாக நான் விலகமாட்டன்.

நீங்கள் அங்கு வரவதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கோ, நீங்கள் எதிர்ர்காத ஆட்கள் இல்லை அதிலேயே தெரியுது நீங்கள் அங்கே உங்கட ஊருக்குப்போய் பல காலம் என்று. 

எனது வதிவிடம் அவுஸ்திரேலியா.. தனிப்பட்ட தகவல்கள இதுக்கு மேல தரவேண்டும் என்ற நினைக்கவில்லை. 

நாங்கள் ஈவிரக்கம் இல்லாதாவர்களா? இத்தனைக்காலம் மகளை மடையராக்கினது யார்? இனிமேலும் இருக்கிற கொச்சத்தையாச்சும் நிம்மதியா விடுங்கோ.

Edited by Sooravali

யாருக்கோ.. தூண்டில் போட.. யாரோ சிக்கினம்.

மக்கள் மேலான தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. மக்களை 1983 இல் கைவிட்டிட்டு.. சென்னைக்கு ஓடிய கூட்டத்தை தான்.. தாங்கள் தற்போது ஆதரிக்கிறீர்கள்.

மற்றவர்கள் மக்களோடு அவர்களை பாதுகாக்க இறுதிவரை நின்று அந்த மக்களோடே மடிந்தார்கள். காக்கக் கூடியவற்றை காப்பாற்றி.

மக்களுக்கு தெரியும்.. யாரை மடையர் என்றனும்.. யார் பின்னால் போகனுன்னு..!

அவுஸிக்கு கப்பலேற எனி என்ன வழி..?????! என்று சொன்னால் நல்லா இருக்கும்..!!  நாங்களும் இதே சாட்டோட வந்திடலாம். விசாக்களும் முடியப் போகுது. அதுதான். :):lol:

ஊரில இராணுவம் இருந்தால் என்ன கிடந்தால் என்ன. நமக்கு அவுஸியோ.. கனடாவோ.. லண்டனோ.. பிரான்ஸோ.. ஜேர்மனியோ.... வெளிநாடு இருக்கேக்க அவன் இருந்திட்டு போகட்டன். :lol::D

யாருக்கோ.. தூண்டில் போட.. யாரோ சிக்கினம்.

மக்கள் மேலான தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. மக்களை 1983 இல் கைவிட்டிட்டு.. சென்னைக்கு ஓடிய கூட்டத்தை தான்.. தாங்கள் தற்போது ஆதரிக்கிறீர்கள்.

மற்றவர்கள் மக்களோடு அவர்களை பாதுகாக்க இறுதிவரை நின்று அந்த மக்களோடே மடிந்தார்கள். காக்கக் கூடியவற்றை காப்பாற்றி.

மக்களுக்கு தெரியும்.. யாரை மடையர் என்றனும்.. யார் பின்னால் போகனுன்னு..!

அவுஸிக்கு கப்பலேற எனி என்ன வழி..?????! என்று சொன்னால் நல்லா இருக்கும்..!!  நாங்களும் இதே சாட்டோட வந்திடலாம். விசாக்களும் முடியப் போகுது. அதுதான். :):lol:

எங்க எவன் ஓடினால் என்ன, இறுதி யுத்தத்தில் நாட்டில நிண்டவன் இப்ப என்ன சொல்லுறானோ அவனுக்கு நான் ஆதரவு.

உங்களுக்கு தெரியாத வழியா, நீங்கள் முன்னம் போனமாதிரி இப்பவும் எந்த நாட்டுக்கும் போங்கோ, முடிஞ்சா அவுசுக்கு வாங்கோ. அதுக்கு ஏன் எங்கள் உதவி உங்களுக்கு? உங்களுக்கு பிடிக்காதவர்கள் கேட்டவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அதுக்கு நாங்கள் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில்.. புலி சரியாக் கஞ்சி ஊத்தல்ல என்று ஊளையிடுற சிலரை தான் தாங்கள் நம்புகிறீர்கள். அந்தக் கஸ்டத்திலும்.. கஞ்சியாவது ஊத்த நின்றுதுகளே என்று சொல்லும் பெரும்பான்மை மக்களை தான் நாங்கள் நம்புகிறோம். ஏனெனில்.. கஞ்சிக்கு எவ்வளவு தட்டுப்பாடுன்னு எங்களால் உணர முடியும். அந்தக் கஞ்சியில் உண்மையில் உயிர் வாழ்ந்த மக்களுக்கு தான் அதன் அருமை தெரியும். :icon_idea:

நமக்கு கனடா இல்லாட்டி.. அவுஸி. அவுஸி இல்லாட்டி.. லண்டன். லண்டன் இல்லாட்டி.. சுவீடன்.. இப்படி இன்ரர்நஷனல் லெவலில ஓட வழி இருக்கு. அங்கின உள்ள ஏழை மக்களுக்கு இராணுவம் ஓடினால் தான் நிம்மதி. இதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப் போகுது. மாறி மாறி இன்ரநஷனல் லெவலில் ஓடிக்கிட்டு.. இங்க வந்து அவனை.. இவனை ஆதரிக்கிறம் என்று சொல்லிக்கொள்ள வேண்டியான். அதில ஒன்னும் கஸ்டமில்ல. நஸ்டமும் இல்ல. :icon_idea::)

  • இபவில்லை எப்போதுமே இதைதான் நானும் சொல்லிக்கிறன். இராணும் இருக்க இருக்க தாயக கோட்பாடும் கலாச்சாரமும் வாலவாதாரமும் அழியும். அதுக்கு ஓடிப்போநவன்க்களால் இனி ஒன்றும் செயமுடியது. நிங்க இண்டைக்கு ஒன்று சொல்ல்லுவிங்க நாளை க்கு என்னொன்று சொல்லுவிங்க. என்றைக்கு என்ன சொல்லுவிங்க என்று உங்களுக்கே தெரியாது.
  • நாங்கக் நாளைக்கு ஒரு தேசம் எண்டு ஊடித்திரியிரம் என்று உங்களுக்கு யார் சொன்னது? வெறும் கற்பனை மற்றும் உடான்சு. நான் நாடு நாடாக ஓடித்திரிவதாக உங்களுக்குப்ப்டால் அது உங்கள் வியாதி எனக்கு இல்லை.
  • இராணுவத்தை ஒட்ட உங்களிட்ட என்ன திட்டம் இருக்கு? 
  • அல்லது நீங்கள் ஆதரிக்கும் தொகையினர் என்ன திட்டம் அல்லது மாற்றுவழி வைச்சிருக்கினம்?
  • ஏன் உங்களால் பேசி ஒரு பொதுவான திட்டத்துக்கு வர முடியாது? 
  • அது சரி யாரோடும் பேசினால் அவர்கள் சொல்வதையும் கேட்கவேண்டும் நீங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்றால் உப்பிடிட்த்தான் யாரை நோட்டை சொல்லிக்கொண்டுதான் இருக்கவேண்டும். 
  •  
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பாதுகாப்பு என்று சிங்களவரின் பாதுகாப்பை வரையறுத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தை வடக்கில் வைத்திருப்பவனுக்கு வாக்குப் போடச் சொல்லி அதனை அகற்ற முடியாது.

சர்வதேச பொறிமுறைகள் ஊடுதான் அதனை அகற்ற முடியும். உ+ம்: வட அயர்லாந்து.

நமக்கு தெரிஞ்சதெல்லாம்.. சம்பந்தன் சாணக்கியர்.. சுமந்திரன் அறிவாளி  என்று பிரகடனம் செய்வது. அதுங்க 60 வருசமா ஒன்னையே தான் செய்துக்கிட்டு செக்கு மாடு மாதிரி நிற்குதுங்க. இருந்தும்...... நாம ஆதரிப்பம். நமக்கென்ன.. நாம தான் வெளி நாட்டுக்கு பத்திரமா வந்திட்டமில்ல...!!! சுழியர்கள். :lol::icon_idea:

சர்வதேச பொறிமுறை வரமுன்னம் சனம் செத்துப்போடும்.

உங்களுக்கு அறுபது வருட அரசியல் அனுபவம் என்று எனக்கு இப்பத்தான் தெரியும்.

இருந்தாலும் எனக்கு தெரிந்து 2009 இறுதி சண்டைக்கு பிறகு படுமோசமான நிலையில் இருந்து இப்போது ஒரு குறைந்தது ஒரு மாகான சபை கட்டமைப்பென்றாலும் இருக்கு. இப்பிடியே சர்வதேசத்தை நம்பி இருந்தால் மிச்ச சனமும் முகாமில தன் இருந்திருக்குங்கள். 

சம்பந்தர் சாணக்கியர் சுமந்திரன் ஆறிவாளி என்று நான் எப்போது சொன்னேன்? அல்லது அவர்களை விமர்சனம் செய்ய மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? நீங்கள் நிதானமா தான் எழுதுறிங்களா? 

உங்கள் கடந்தகால கருத்த்குக்களில் இருந்து

நீங்கள் மன்னார் ஆயரை விமர்சித்தீர்கள்

சி வியை விமர்சித்திர்கள்

யாழ் பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தை விமர்சித்தீர்கள்

சம்பந்தரை விமர்சித்திர்ர்கள்

மாவையை விமர்சித்திர்கள்

சுமந்திரனை விமர்சித்தீர்கள்

தற்போது தமிழர்களின் தாயக ஒற்றை அரசியல் பலமான கூட்டமைப்பை அதன் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியை ஆதரித்தீர்கள்.

உங்கள் நோக்கம்தான் என்ன? இதனால யாருக்கு என்ன இலாபம்?

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் ஆண்டாலென்ன ராமணன் ஆண்டாலென்ன கொள்கையில் மாற்றம் இல்லை ............. ராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து நீக்கப்படமாட்டாது 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் தலை தூக்குவதை விட இராணுவம் இருந்தால் பரவாயில்லை என்று மக்கள் மைத்திரிக்கு தான் வாக்கு போடுவார்கள் .

சூறாவளி

இந்த கருத்துடன் உடன் படுகீன்றீர்களா??

சூறாவளி

இந்த கருத்துடன் உடன் படுகீன்றீர்களா??

அண்ணை அது அவரின்ர தனிப்பட்ட வருத்தம். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நெடுக்கர் அர்ஜுனுக்கு எலுதினதுனெனக்கு தெரிந்திருக்கவில்லை.

இருந்தாலும் நெடுக்கரின் சரியான நிலைப்பட்டை அறிந்து கொள்ள சந்தர்ப்பமும்தான்.

அவர் ஆதரிப்பதை விட எதிப்பதுதான் அதிகம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடந்தகால கருத்த்குக்களில் இருந்து

நீங்கள் மன்னார் ஆயரை விமர்சித்தீர்கள்

சி வியை விமர்சித்திர்கள்

யாழ் பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தை விமர்சித்தீர்கள்

சம்பந்தரை விமர்சித்திர்ர்கள்

மாவையை விமர்சித்திர்கள்

சுமந்திரனை விமர்சித்தீர்கள்

தற்போது தமிழர்களின் தாயக ஒற்றை அரசியல் பலமான கூட்டமைப்பை அதன் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியை ஆதரித்தீர்கள்.

உங்கள் நோக்கம்தான் என்ன? இதனால யாருக்கு என்ன இலாபம்?

2009 மே க்கு முன் ஒரு தொனி.. பின் ஒரு தொனி இப்படி உள்ளார்கள் யாழ் மற்றும் மன்னார் ஆயர்கள்.

சி வி: தமிழ் மக்களுக்கு முன் வைத்து முதலமைச்சர் ஆனது ஒன்று.. ஆன பின் செய்து கொண்டிருப்பது இன்னொன்று.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உள்ளூர் அரசியலையே கவனிக்க முடியல்ல.. மைத்திரியை என்ன நோக்கத்தில் ஆதரிக்கச் சொல்கிறார்கள். மகிந்தவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டிப்பதை விட்டு.. பத்திரமாக வீட்டுக்கும்.. அமெரிக்காவுக்கும் அனுப்பி வைப்பதால் என்ன நன்மை..???!

சம்பந்தன்.. சுமந்திரன்.. சிங்களவர்கள்.. உருவாக்கிய தமிழர்களின் சுடுகாட்டில் மேல் நின்று கொண்டு.. இது புனித பூமி... நான் தூக்கிப் பிடிப்பது சிங்கக் கொடி அம்மனின் கொடி.. இப்போ புலிகள் ஈவிரக்கமற்றவர்கள்..  பிரபாகரன் சர்வாதிகாரி.. ஆனா நானும் சுமந்திரனும்.. நாம வாக்குப் போடச் சொல்பவர்களும் சுத்தம் என்று செய்யும் சுத்துமாத்தை விமர்சிக்காமல் ஆதரிப்பார்களாக்கும். உங்களால் அது முடியலாம். நம்மால் மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து விலகி ஓட முடியாது.

கூட்டமைப்பு 2009 மே க்கு பின்... குப்பைகளின் கூத்தமைப்பாகிவிட்டது.

யாரை எல்லாம் ஒற்றுமையாக வைச்சிருக்கனுன்னு தேசிய தலைவர் எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினார். சங்கரியை கூட கூப்பிட்டுப் பேசினார். அன்று தேசிய தலைவரின் அழைப்பை நிராகரித்து வவுனியாவில் கொலை தர்ப்பார் நடத்திய சித்தார்த்தன் இன்று கூட்டமைப்பில். கூட்டமைப்பினை கட்டி எழுப்ப பாடுபட்ட இளைஞர்கள் இன்று அதற்கு வெளியில். இதுதானா சம்பந்தனும்.. சுமந்திரனும்.. மாவையும் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்தி வைச்சிருக்கும் கைங்கரியம்.

தமிழ் மக்கள்.. தேசியம்.. சுயநிர்ணயம்.. சமஸ்டி.. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்..இந்த 3 அடிப்படைகளில் இருந்து தான் தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்பது சம்பந்தனுக்கு நன்கே தெரியும். தெரிந்து கொண்டும் அவற்றை தானே கைவிட்டு விட்டு.. ஒற்றையாட்சி.. சிங்கள இறையாண்மை.. 13வது திருத்தம்.. வடக்கு கிழக்கு பிரிந்த மாகாண சபைகள் என்று கொக்கரிச்சுக்கிட்டு திரிகிறார். தமிழ் மக்கள் ஒன்றும் தமிழீழத்தை கைவிடச் சொல்லேல்ல. ஆனால் சம்பந்தன் சொல்கிறார். தமிழ் மக்கள் தமிழீழத்துக்கு மாற்று என்ன என்று சொல்கிறார்கள். அதைச் சொல்லக் கூட சம்பந்தனுக்கு வக்கில்ல.. இதில புலிகள் மீது மட்டும் விமர்சனம்.

சம்பந்தன்.. இதுகாள் வரை.. சரணடைந்து சிறைகளில் உள்ள மக்களை போராளிகளை போய் பார்த்தது கிடையாது. அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பினது கிடையாது. போர்க்குற்றம் பற்றி.. இனப்படுகொலை பற்றி சொல்லக் கூடத் தயக்கம். இப்படியாப்பட்ட சம்பந்தன் என்ன முகாந்திரத்தோடு மைத்திரிக்கு வாக்கு கேட்டு தமிழ் மக்களை நோக்கி அறிக்கை விட முடியுது.

என் கொல்லைப் புறத்தில் கொலை செய்திட்டு ஓடினவன்.. திரும்பி வெள்ளை வேட்டில வந்து.. எனக்கே தலைவன் ஆகனுன்னு நிற்கும் போது.. அவனை ஆதரின்னு சொல்லுறவன்.. எனக்கு யார்..?????! சிந்தியுங்கள்..!!!  முதலில் இந்த கொலைஞர்களை தண்டிக்கிற வழியை நாம் சரியாப் பார்த்தால்.. எல்லாம் சரியா நடக்கும். அவனை மன்னிக்க மறக்க சம்பந்தன் தன் பிள்ளைகளையா போரிலும்.. போராட்டத்திலும்.. சிறையில் பறிகொடுத்துள்ளார். அல்லது சுமந்திரன்.. அல்லது மாவை..???!

அந்த மக்களின் தேடலுக்கு விடை என்ன..?????! தமிழ் மக்களின் இத்தனை தியாக மிகு போராட்டத்திற்கும் விடை என்ன..??! ஐக்கிய இலங்கை. ஒற்றையாட்சி. மாகாண சபையா..??! அப்படி என்றால் என்ன கறுமத்துக்கு அதனை அன்று நிராகரித்தார்கள்.. அமிர்தலிங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு. இப்ப என்ன கறுமத்துக்கு அதனை மக்கள் மீது திணிக்கிறார்கள். இந்தியா அதுக்கு மேல தரமுடியாது என்று சொன்னதாலா.???! அப்படிச் சொல்ல இந்தியா நமக்கு யார்..???! நாமென்ன இந்திய அடிமைகளா..???!

இவற்றைப் பேச வேண்டிய சம்பந்தன்.. சுமந்திரன்.. எல்லாவற்றிற்கும் வெள்ளையடிக்க முனைகிறார்கள். நீங்கள் அவர்களை ஆதரிக்கிறீர்கள். உங்களின் நோக்கம் தான் என்ன. சுயலாப சுகபோகம். அவ்வளவே. மக்களின் மண்ணின் அபிலாசைகளை நிவர்ப்பிப்பதல்ல. அங்கு தான் எங்களுக்கும் இவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தலைதூக்குகின்றன. எனி விளங்கிக் கொள்ளுங்கள். இன்றேல்.. குறுக்கிடாதீர்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

யாருக்கோ எழுதிய கருத்தை ரதவறாக புரிந்து கொண்டதுக்கு வருத்தமும் மன்னிப்பையும் தெரிவிக்க விரும்புகிரேன்.

இருந்தாலும் சுயலாபமோ சுகபோகமோ எறிருந்தால் நாங்கள் இங்கு வரவேண்டியதில்லை. பொறுப்பும் அக்கறையும் தமிழராக பிறந்த எல்லோருக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

animated-hello-smiley-emoticon.gifயாருக்கோ... வைத்த தொப்பியை, 
சூறாவளி, அவசரப்பட்டு ஏன்... எடுத்துப் போட்டவர்.waving-hat-smiley-emoticon.gif:D  :lol:

சம்பந்திரின் மாவை என்பவர்களின் அரசியல் வாழ்கையே தலைவர் போட்ட பிச்சை என்பது போலிருக்கு சிலரது கருத்து .அவர்களுக்கு தெரிந்த அரசியல் அவ்வளவுதான் .

இடையில் ஆயுதத்தை வைத்து தலைவர் ஈழத்தமிழர்களின் அரசியலை கையில் எடுத்தது உண்மை அந்த நேரம் இருந்த அரசியல் சூழ்நிலையில் சம்பந்தருக்கோ மாவைக்கோ சுரேசுக்கோ அடைகலனாதனுக்கோ வேறு தெரிவு இல்லை .தலைவரும் சர்வதேசத்தை மடையர்கள் என்று நினைத்து இவர்களையும் அரவணைத்து படம் காட்டினாரே ஒழிய ஒரு பேச்சு வார்த்தையில் கூட பங்குபற்ற அனுமதிக்கவில்லை .

அனந்தி மாகாணசபை தேர்தலில் விக்கிக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்றார் உண்மை ஆனால் 

உட்கொலைகள் செய்த ,பின்னர் உமாவையே போட்ட ,அதை பின் வவுனியாவில் கொலை கொள்ளை அடித்த கூட்டமைப்பில் புலிகளால் விலக்கிவைக்க பட்ட சித்தார்த்தான் எப்படி மூன்றாவது அதிக வாக்குகள் பெற்றார் .

இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை ,தமிழர்களுக்கு என்று செல்வநாயகத்த்தால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியை தவிர வேறு ஒரு கட்சியும் தமிழர் பகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியாது .காலத்திற்கேற்ற அந்த கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து பெயரை மாற்றினாலும் அவற்றின் மூலமும் ஆழுமையும் தமிழரசு கட்சியின் கையில் தான் இன்றுவரை இருக்கு (தமிழர்விடுதலை கூட்டணி ,தமிழர் தேசிய கூட்டமைப்பு இப்படி மாற்றம் பெற்றது )

இன்று கூட தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யபாடாததற்கு ஒரே காரணம் இந்த பிரச்சனைதான் .

தாங்கள் தான் மூலவேர் என்று அவர்களுக்கு நன்கு தெரியும் அதுதான் சம்பந்தரும் சுமந்திரனும் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கின்றார்கள் .மற்ற கட்சிகளுக்கு (ஈபி ,புளொட் ,டெலோ ,காங்கிரஸ் ) தாங்கள்  பிரிந்து போனால் கட்டுகாசும் கிடைக்காது என்று நன்கு தெரியும் அதுதான் சுரேஷ் இடைக்கிடை முடியாமல்  பம்முகின்றவர் .அப்படியானால் ஏன் தமிழரசுகட்சி  மற்றவர்களை கழட்டிவிடாமல் வைத்திருக்கின்றது ? அவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலில் நின்று சிறிதளவு வாக்குகளை பிரித்தாலும் அது ஒரு பாதிப்புத்தான் அதைவிட தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று காட்டவும் தான் உந்த விளையாட்டு .

மனமொத்து இவர்கள் எவரும் இன்று வரை கூட்டில் இல்லை .இவர்களில் பலருக்கு இலங்கை இந்தியாவில் இருக்கும் வியாபரங்கள் தான் முக்கியம் அதுவும் சிலருக்கு  மகிந்தாவுடன் . :(

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை ,தமிழர்களுக்கு என்று செல்வநாயகத்த்தால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியை தவிர வேறு ஒரு கட்சியும் தமிழர் பகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியாது .காலத்திற்கேற்ற அந்த கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து பெயரை மாற்றினாலும் அவற்றின் மூலமும் ஆழுமையும் தமிழரசு கட்சியின் கையில் தான் இன்றுவரை இருக்கு (தமிழர்விடுதலை கூட்டணி ,தமிழர் தேசிய கூட்டமைப்பு இப்படி மாற்றம் பெற்றது )

இன்று கூட தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யபாடாததற்கு ஒரே காரணம் இந்த பிரச்சனைதான் .

2015 க்கான பெரிய பகிடி இது தான் அண்ணை........

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் சத்தியமா நான் பகிடிக்கு சொல்லவில்லை,அடுத்த தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை மட்டும் பிய்த்து எடுத்துக்கொண்டுபோய் தனித்து போட்டியிடட்டும் எத்தனை சீட் கிடைக்குதெண்டு பார்ப்போம்.அவர்கள் வென்றால் தலையில இருக்கிற நாலு முடியையும் நான் எடுக்கிறன்.

2015 க்கான பெரிய பகிடி இது தான் அண்ணை........

அப்படி ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் வென்றுவிட்டு சிரியுங்கோ அண்ணை . :icon_mrgreen:

முடிந்தால் ஒரு முறை எவரையாவது கொண்டு செய்து காட்டுங்கோ .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.