Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பேச்சில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஊடகங்களின் நடத்தை

Featured Replies

தமிழ் ஒளி இணையமும் கனடா சிஎம்ஆர் ரிவிஅய் போன்றன இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. தமிழரின் ஊடகங்களிற்கிடையில் இது போன்ற ஒத்துளைப்புகள் மேலும் வழர்க்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்க்க வேண்டும்.

ஆனால் சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் எமது ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது என்பதை கவனிக்க வேண்டும்.

-1- தமிழ் தேசியத்திற்கு ஆதரவு நிலைப்பாடு இல்லதவர்களை சாதுரியமான கேள்விகளை கேட்க முடியாது தவிக்கிறார்கள்.

-2- தரமான கேள்விகளை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நம்பிக்கையோடு கேட்க முடியாது தடக்குப்படுகிறார்கள்.

-3- ஆங்கிலத்தில் முன்னெடுப்பது என்பது முற்று முழுக்க முடியாது இருக்கிறது.

ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முயற்சித்தால்தான் அனுபவத்தின் மூலம் தன்னம்பிக்கை வரும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் திடமாக கேள்விகள் கேக்க.

கலையகத்தில் இருந்து தேசியத்திற்கு ஆதரவு அற்ற நிலைப்பாடு கொண்டோரை பேட்டி கணுவதை (தமது செய்தி மற்று கண்ணோட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில்) செய்தால் தான் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை கைய்யாள முடியும்.

பிரித்தானி பாராளமன்றத்திற்கு முன்னுக்கு நடந்த போராட்டத்தில் ஒரு பெண் ஒருவர் ஆங்கிலத்தில் நல்ல முறையில் உறுதியான கேள்விகளை கேட்டார் வேல்ஸ் பாராளமன்ற உறுப்பினரிடம். அது போன்ற ஒரு முயற்ச்சி ஜெனிவாவில் நடக்காதது ஏன்?

இந்தக் கேள்விக்கு விடை இலகு,அவ்வாறான புலமை உடையவர்கள் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை.விக் நேஸ்வரன் நிமல் சிறிபாலாவிடம் கேள்வி கேட்கத் தடுமாறுகிறார்.அன்த தடுமாற்றத்தை தனக்குச் சாதகமாப்பயன் படுதியபடி மழுப்பலாகப் பதில் அழித்த படி நிமல் சென்று விடுகிறார்.ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் அடுத்த முறை கட்டாயம் இந்த ஊடகங்கள் அனுப்ப வேண்டும்.குறுக்ஸ் சொன்னமாத்ரி அதற்கான தயாரிப்புக்களை புலம் பெயர் ஊடகங்கள் செய்ய வேண்டும்.ஆங்கிலப்புலமை உள்ள்வர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்த வேண்டும்.இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேணும்.உலகின் முன் நாமும் கஸ்ட்டமான கேள்விகளை சிறிலங்காவை நோக்கிக் கேட்க வேண்டும்,அதன் மூலம் சிறிலாங்கா அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேணும்..அப்போது தான் எமது குரலும் உலக வான் அலைகளில் கேட்கும்.

ரிரிஎன் தொலைக்காட்சி ஜெனீவாவில் மட்டும் கோட்டைவிடவில்லை. கலையத்திலிருந்து அவர்கள் அதை ஒளிபரப்பிய விதத்தில் திட்டமிடல் இல்லாமல் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

ஐபிசி வானொலியில் செய்தியாளர் மகாநாட்டை ஒளிபரப்பிக்கொண்டிருந்த போது இவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல் செய்கிறார்கள். இரண்டு நாட்களாக தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தை நேரஞ்சல் செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு செய்தியாளர் மகாநாட்டை பார்ப்பதற்கு தொலைக்காட்சியின் முன்பாக கூடியிருந்தபோது மகாநாட்டு மண்டபத்திலிருந்து நேரஞ்சல் செய்ய அனுமதியில்லை.அதனால் வேறு ஒரு இடத்துக்கு ஒளிப்பதிவு நாடாவை எடுத்துச் சென்று ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இது முதலிலேயே தெரியாதா? ஏற்கனவே நடந்த ஒன்றை பதிவு செய்து நேரம் தாழ்த்தி ஒளிபரப்புச் செய்வதற்குப் பெயர் தான் லைவா(நேரஞ்சலா) உண்மையிலே ரிரிஎன் நிர்வாகிகள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

சிறீலங்கா அரச தரப்பை கேள்விகேட்டு அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுடைய ஊடகங்களுக்கு இருக்கிறது. ரிரிஎன்னோ ஐபிசியோ ரிவிஐயோ எந்த ஊடகம் அதை சரியாகச் செய்தது?இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளை கையாள்வதற்கு அனுபவமும் பொறுப்பும் மிக்கவர்களையே உலகெங்கிலுமுள்ள ஊடகங்கள் அனுப்பி வைப்பது வழக்கம். இலங்கையிலிருந்து எல்லா ஊடகங்களினதும் செய்தியாசிரியார்கள் வந்திருக்கிறார்கள்.அனைத்து மேற்குலக ஊடகங்களிலும் இருந்த அந்த துறையில் நீண்ட அனுபவம் உள்ள செய்தியாளர்கள் வந்திருக்கிறார்கள்? எங்களுடைய ஊடகங்கள் இது நேரடி வர்னனை செய்வதற்கான ஒரு களியாட்ட நிகழ்ச்சியல்ல என்பதையும் அனைத்துலக ஊடகங்கள் குழுமி நிற்;கின்ற இடத்திலே சிறீலங்கா அரச தரப்பை ஊடகவியலாளர்கள் என்ற உரிமையோடு அம்பலப்படுத்தவதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்பதையும் ஏன் புரிந்துகொள்ளவில்லை?

உதாரணமாக அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுத்தலைவர் நிமால் சிறீபால டீ சில்வா ஏ9 நெடுஞ்சாலையை திறக்க முடியாடிதென்றும் யாழ்ப்பாண மக்ளுக்கு கப்பல் மூலம் உணவு வழங்குவோம் என்று திமிராகக் கூறுகிறார்.

இந்த இடத்திலே எங்களுடைய ஊடகங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? உதாரணமாக “ஐயா உங்களுயைட நாடு ஒரு ஜனநாயக நாடா என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். அவர் அதற்கு நிச்சயமாக தங்களுடைய நாடு சிறந்த ஜனநாயக நாடு என்றுதான் பதில்சொல்லியிருப்பார்.

இந்த இடத்திலே உங்களுடைய அரசிலமைப்பு சட்டத்திலே அடிப்படை உரிமைகள் என்ற சரத்தின் கீழ் “சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் குடி மக்கள் அனைவரும் அந்தக் குடியரசின் எல்லைக்குட்பட்ட எந்தப்பகுதிக்கும் சென்றுவரவும் சுதந்திரமாக நடமாடவும் தாங்கள் விரும்பிய இடத்தில் குடியிருக்கவும் உரிமையுடையவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே! ஏ 9 பாதையை மூடி யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள 6 இலட்சம் மக்களுக்கு அந்த உரிமையை மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் இல்லையா? ஏன்று கேட்டு அவரை அம்பலப்படுத்தியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணக் குடா நாடு சிறீலங்காவின் அரசியல் அமைப்புக்குட்படாத தனியான பிரதேசம் என்பதை இந்தத் தடை மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கலாம்.

இவை ஏன் செய்யப்படவில்லை?

எங்கோ தவறு இருக்கிறது: உமையிலேயே இந்த ஊடகங்கள் தமிழ் தேசியத்தை விட்டு தடம்புரழுகின்றனவோ தவறான சத்திகளால் கையாளப்படுகின்றனவோ என்ற சந்தேகங்கள்; தாயகத்தையும் தேசியத் தலைவரையும் நேசிக்கும் என்னைப் போன்ற நிறையப் பேருக்கு இருக்கிறது.

  • தொடங்கியவர்

நவம், பத்திரிகையாளர் மாநாடு போன்ற ஒரு பொது இடத்தில் பலர் மத்தியில் தடுமாறாது நிலமையை சுதாகரித்து சில வினாடிகள் நிமிடத்தினுள் சரியான கேள்விகளை கேட்பது என்பது மிகவும் கடினமானது. அந்த திறமை ஜெனிவா பேச்சுக்கள் போன்ற ஒரு சந்தர்ப்பம் வரும் பொழுது திடீர் என்று எமது ஊடகங்கள் பெற்றுக் கொள்ள கடையில் வேண்டக்கூடிய பொருள்ள அல்ல.

இவற்றை அனுபவத்தின் மூலமே பெற்றுக் கொள்ளலாம். அதற்கான பயிற்சிகள் சந்தர்ப்பங்கள் நாளாந்த செய்திகளை தயாரிப்பதில் காட்டும் அர்ப்பணிப்பில் பெற்றுக்கொள்ளலாம். வாராந்த ஆய்வுகள் கண்ணோட்டங்களை தெரிந்து 1...2 பேரை வைத்து திருப்பி திருப்பி நடத்தாது புதியவர்கள் தேசியத்திற்கு ஆதரவு அற்ற நிலைப்பாடு கொண்டவர்களை அளவாக பங்குபற்ற வைத்து தமது சொந்த கலையகத்தின் சொகுசில் இருந்து கேள்விகளை கேட்டு ஏற்படுத்தி கொள்ளும் அனுபவ தன்நம்பிக்கை மூலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பலாம்.

இவற்றை தமிழில் செய்ய கூடிய நிலையில் எமது ஊடகங்கள் இருக்கிறார்களா என்றால் அதுவே சந்தேகமானது. எமது ஊடகங்கள் எப்பொழுதும் தேசியத்திற்கு ஆதரவானவர்களோடு உறவாடித்தான் பழக்கப்பட்டவர்கள்.

அந்த வகையில் எந்தவித பாரிய அனுபவங்களும் இன்றி விக்நேஸ்வரன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. இந்த ஆர்வத்தை தொடர்ந்த தக்க வைத்து ஒரு நிரந்த நிகழ்ச்சியை வாரத்தில் 20...30 நிமிடமாவது தனது கலையகத்தில் செய்ய வேண்டும்.

தேசிய ஆதரவு நிலைப்பாட்டு தளத்தில் இருந்து கொண்டு தேசிய ஆதரவு அற்ற மற்றும் நடுநிலை எடுப்பதாக இருக்கிறவர்களை நோக்கி ஆழமான எமக்கு (தமிழ்த் தேசியத்திற்கு பயனுள்ள) செய்திகளை எடுக்க கூடிய திறமையை சாணக்கியத்தை வழர்த்தெடுக்க அவர்களோடு அனுபவரீதியில் மோதித்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். கடுமையான அர்பணிப்போடான பயிற்ச்சி தேவை இல்லாவிட்டால் சரியா தேவைகளும் சந்தர்ப்பங்களும் வரும் பொழுது அலங்கோலமாகத்தான் நடந்தேறும்.

எனவே மொழி சாவால் மாத்திரம் அல்ல பல சவால்கள் இருக்கிறது. இதற்கு உடனடித்தீர்வு இல்லை. தூர நோக்கோடு சில நடவடிக்கைகளை இனியாவது ஆரம்பித்தால் தான் ஏதாவது வெளிக்கும் சில வருடங்களில்.

பார்த்து பழகிக் கொள்ள முன்னுதாரணமாக பல தரமான மேற்கத்தேய ஊடகங்களை உண்டு. என்ன இருந்தாலும் தனிமனித ஆர்வம் முயற்சிகள் அர்பணிப்புகள் இல்லாமல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'அரையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆடலாம்' என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

தமிழ் ஊடகங்களுக்கு அந்த அநுபவங்கள் இல்லையே... இருப்பதெல்லாம்... சினிமா கதைகள் கிசுகிசுக்கள், ஊர் வம்புகள், சினிமா பாட்டு விமர்சனங்களும் இதை சார்ந்த விமர்சன போக்கில் அமைந்த நிகழ்ச்சிகளே. நாளாந்த நிகழ்ச்சிகள் கூட மேலே சிலர் கூரியவாறு தமிழில் கூட இல்லாத வேளையில் ஆங்கிலத்தில் எப்படி நடத்துவது.

அந்நிலையை அடைய எமது ஊடகத்துறைகள் எவ்வளவோ தூரம் போக வேண்டியுள்ளது. அத்திசையில் கூட இன்னும் நகரவில்லை என்றே கூறவேண்டும்.

இப்பொழுது தமிழரின் போராட்டம் உலகலாவிய மட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறதை உரியவர்கள் அறிந்துணர்ந்து நடக்க வேண்டும்.

நாம் உலகத்தின் பார்வையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமேயானால் உலகம் போகின்ற வேகத்திலே போக வேண்டும்.

இங்கு புலிகள், பேச்சு வார்த்தைக்கு வரு முன் கூறினார்கள்; "நாம் பேச்சு வார்த்தைக்கு போவதன் நோக்கம்... உலகத்திக்கு உண்மை நிலையை எடுத்து கூறுவதற்கே என்று."

எவ்வளவுத்தான் எடுத்துக் கூறினார்கள் என்பது தான் கேள்வி.

ஒரு சில தமிழர்கள் மாத்திரமே அச்செய்தியை கேட்க கூடியதாக இருந்தது...

என்னைப் பொறுத்தவரையில்... இந்த அருமையான சந்தர்ப்பத்தை முழுமையாக உபயோகிக்க தவறிவிட்டார்கள் என்றே கவலையோடு கூறுவேன்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேச்சுவார்த்தையின் போது வெள்ளைக்காரரிடம் உண்மையை எடுத்துக் கூற தருனம் பார்த்துக் கொண்டிருந்தேன்... ஆனால் உருப்படியான எந்த நிகழ்வுகளோ அவற்ரைச் சார்ந்த நிகழ்ச்சிகளோ உருவாக்கப்படவில்லை.

காலம் தாழ்த்தாது வெகு விரைவாக ஆங்கில ஊடகத்துறையிலே தமிழர்களாகிய நாம் முழு மூச்சஉடன் ஈடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ....

ம்ம்ம்ம்... அப்பு குறுக்காலை, உந்தத் தலைப்பை, அடியேன் பத்திரிகையாளர் மாநாடு நடந்து கொண்டிருக்கையில், நம்ம ஆங்கிலத்தில் பெயர் மட்டுமுடைய ஊடகங்கள் ஒழிந்து கொண்டிருக்கையில், யாழில் இறக்கினேன்! என் செய்ய, தம்பீஸ் மோகம் கத்தியை வைச்சிட்டுது!!!!!! .. அது ஒருபுறம் ....

தம்பி மோகன், இப்படி பிழைகளை சுட்டிக் காட்டத் தவறியதால்தான், எம்மவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்!!! விட்டால் இன்னும் கேவலமாகலாம்!!

உந்த ஆங்கிலத்தில் மட்டும் பெயருடைய ttn, ibc போன்றவற்றில் ஒரு ஆங்கில புலமையுடைய ஊடகவியலாளராவது கிடைக்கவில்லையா???

இப்பேச்சுவார்த்தைக்கு, எம்மவர்கள் வந்ததன் நோக்கமே, சர்வதேசத்துக்கு எம் அவலங்களையும், நியாயங்களையும் கூறுவதற்கென்று தமிழ்செல்வன் சொல்லியிருக்கிறார். இதன் அர்த்தம் எம் ஊடகங்களுக்கு விளங்கவில்லையா?

எமது சார்பான விசனங்களை, சர்வதேச ஊடகங்களுக்கு முன், எம் ஊடகவியலாளர்கள் கேட்க இருந்த ஒரு மிகப் பெரிய சந்ததர்ப்பத்தை, நாம் தவற விட்டு விட்டோம்!!!

ஆங்கில ஊடகவியலாளர்கள் தட்டுப்பாடு என்றால், லண்டனிலிருந்து விமல் சொர்க்கநாதன் போன்றோரை கொண்டு சென்றிருக்கலாமே????

இன்று தமிழ்த் தேசிய ஊடகங்கள், புதிய சகாப்தம் படைக்கிறார்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கையில், எம்மில் சிலவற்றின் நடவடிக்கைகள் பின்னோக்கியும் சென்று கொண்டிருக்கிறார்கள்!! ....

நமக்கேன் இந்த ...

ரோகரா......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகரா....

பிழையானற்றை உந்த இரு ஊடகக்காரர்களிடம் எதிர்பார்க்கிறோம் போலுள்ளது!!!!!

சிமிரன், துருஷா, கும்தாஷ், .... பற்றி கேள்வி கேட்கச் சொல்லுங்கோ??? பிச்சு வாங்குவினம்!!! உதிலை டிக்கிறி என்ன பி.எச்.டியும் முடிச்சிட்டினம்!!

உதுகளை இவையளிடம் எதிர்பார்க்கிறதை விட்டுட்டு, சும்மா அரசியலாம்..... போராட்டமாம் ...... என்றால், அதுகள் பாவங்கள் என்ன செய்வது????

அரோகரா.... :wink: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் பரவல் எல்லை என்பதும் அவற்றின் மீதான நம்பிக்கைகளும் இன்னும் சர்வதேசம் மதிப்பளிக்கும் வகைக்குள் வரவில்லை.

அல்ஜசீரா அளவுக்கு தமிழ் ஊடகம் (ஒலி ஒளி பரப்பூடகம்) எதன் மீதாவது சர்வதேசத்தின் கவனம் இருக்கிறதா? அது ஆங்கில மொழி மூலம் இல்லாதவிடத்தும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்படுகிறது. அந்த வகையில் ஏன் புலம்பெயர் தமிழூடகங்கள் செயற்பட முடியாது?

நவம் நீங்கள் சுட்டிக்காட்டிய கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்பது ஒன்றும் கடினமாக இருந்திருக்காது. கேட்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.

கேள்வி கேட்கப் போய் சிங்களவன் பிரச்சாரம் செய்ய உதவிடுவமோ என்ற பயமா இருந்திருக்கலாம்.

ஏன் பாதையைத் திறக்க மறுக்கிறீர்கள் என்றால் மாவிலாறில் நாங்கள் அணையை எப்படித் திறந்தமோ அப்படித் திறவுங்கள் என்று அவர்கள் சொல்லி இருந்தால் அதை சாதிக்க முடியுமா? என்ற அச்சம் இவர்களா தங்களுக்குள் எழுப்பி இருப்பார்கள்??

புலம்பெயர் தமிழூடகங்களுக்கு புளுகத் தெரிந்த அளவுக்கு யதார்த்ததை வெளிக்கொணரத் தெரியாது என்பதே உண்மை.

இந்தப் பாதைத் திறப்பை வைத்தே 90 - 95 காலப் பகுதியில் ஆனையிறவு.. கேரதீவு சங்குப்பிட்டி.. ஊரியான்.. கிளாலிப் பாதைகள் திறக்கப்பட்டதுவும் அவை ஆக்கிரமிப்புக்களால் மூடப்பட்டதையும் வெளிக் கொணர்ந்து சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான மனிதாபிமான நெருக்கடிக்கான செயலே இது. இது இவர்களின் வழமை என்று காட்டி இருக்கலாம்.

எல்லாத்துக்கும் அரசிடம் ஒரு பதில் இருக்கிறது பாதுகாப்பு நடைமுறைகளுக்காகவும் புலிகள் வரி அறவிடுறார்கள் என்பதும். அதைக் கூட புலிகள் சார்பாக மாற்றி இருக்கலாம்.

விடுதலைப் புலிகள் பல நிர்வாகக் கட்டமைப்புகளை வைத்துள்ளதால் அதற்கான செலவீனங்களுக்காக அப்படி அறவிடுகிறார்கள் போல் தெரிகிறது. அதுவும் மிகக் குறைந்த சத வீத வரி அறவீடுகள் என்று சுட்டிக்காட்டி அதற்கான நியாயப்பாட்டை வெளிக்கொணர்ந்திருக்கலாம். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பின் பல விடயங்கள் வெளி வந்திருக்கும்?

அதுமட்டுமன்றி தமிழ் ஆயுதக் குழுக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வரி அறவிடுவது பற்றி ஏன் அரசுக்கு அக்கறையில்லை. அவர்கள் வரி அறவிடுகிறார்கள் என்பதற்காக கொழும்பில் அல்லது வவுனியாவில் அரசு போக்குவரத்துத் தடை விதிக்குமா? என்று ஒரு பதில் கேள்வி போட்டிருந்தால்....

இதற்கெல்லாம் பெரிய பி எச் டி ஆங்கில அறிவு அவசியமில்லை. சாதாரண ஒரு ஊடகவியலாளருக்குரிய அறிவு போதும்.

ஆனால் என்னதான் அறிவு இருந்தாலும் புலம்பெயர் ஊடகங்கள் நடத்தும் பலருக்கு கள யதார்த்தம் தெரியாதிருக்கிறது என்பதுதான் மெய்யாகி இருக்கிறது. அதுதான் இந்தத் தயங்கு நிலைகளுக்கு காரணமாய் இருக்கலாம். யாழ்ப்பாணச் சிறுவன் ஒருவனுக்குள்ள உள்ளூர் அரசியல் இராணுவ விடயங்களை அறியும் வாய்ப்பைப் போன்ற நிலை புலம்பெயரிடங்களில் இல்லை.

இங்கெல்லாம் சீரியலும் சினிமாவும் பாட்டுக்குப்பாட்டும் சப்தஸ்வரங்களும் சரிகமபதநிச...தக்கிதிக்கி தொம்மும் தான் மக்களின் சிந்தனையிலும் ஊடகவியலாளர்களின் சிந்தனையிலும் நிறைந்து கிடக்கிறது. இன்றேல் சாப்பாட்டுக் கடைத் திறப்பு விழாவுக்குச் சென்று எப்படி இருக்கிறது சாப்பாடு என்று சாப்பிட்டது செமிக்கும் வரை ஒரு நிகழ்ச்சி செய்வார்கள். விளம்பரம் வருவாய் தான் அதில் கூடப் பாருங்கள் கேட்பார்கள் கேள்வி சாப்பாடு ஏன் வீட்டுச்சாப்பாட்டை விட்டிட்டு இங்கு வருகிறீர்கள் என்று. சனம் என்ன நினைக்குதுகளோ தெரியாது ஏதோ பதில் சொல்லிச் சமாளித்துவிடுகிறார்கள். வேறு யாராவது என்றால் ஏன் இங்கு வரக்கூடாது வீட்டில் சமைக்கிறதுதானே எங்கிறீர்களா என்று பதில் போடுபோடுவார்கள்?

இந்த நிலைகளைக் கடக்கும் போதும் செய்தியாளர்கள் கள யதார்த்ததைப் புரிந்து கொள்ள அடிக்கடி தாயகம் சென்று வர வேண்டும். கடந்த கால அனுபவங்களை ஆதாரங்களோடு திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் அடிப்படைகளுக்கும் இன்று நடப்பவற்றிற்கும் தொடர்பிருக்கிறது. சிறீலங்கா அரசின் அடக்குமுறை என்பது அது தொடங்கியது முதல் இன்று வரை கிட்டத்தட்ட ஒரே பாணியில் தான் தொடர்கிறது. அதன் பாணியைக் கூட மாற்ற முடியவில்லை எங்கள் ஊடகங்களால் என்பது சிங்கள அரசுக்குக் கிடைத்த வெற்றிதான். உணர வேண்டியவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.

அவர்களுக்கு நெருக்கடிகள் நிதி வசதிகள் பிரச்சனைகள் இருக்கிறதுதான். ஆனாலும் தாயக அளவுக்கு இல்லை. எனவே இவர்களால் வலுவாகச் செயற்பட முடியும் என்பது அவர்களின் முன் வைக்கப்பட வேண்டிய உடனடிச் சவால் என்பதே தேவையாகியுள்ளது. வெறும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டிருக்காமல் ஆர்வமுள்ளவர்கள் தாங்களாகவே இந்த ஊடகங்களை நேரடியாக அணுகி தங்கள் பங்களிப்புக்களை நல்கவும் முன்வரலாம். குறிப்பாக யாழ் களத்தில் உள்ள குறுக்காலபோவான் நாரதர் ஜெயதேவன் போன்ற ஆங்கில மற்றும் அரசியல் அறிந்தவர்கள் ஏன் இந்த ஊடகங்களில் பகுதி நேரத்துக்கு இணைந்து செயற்படக் கோர முடியாது. இவர்கள் நிச்சயமாக இணைய வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு அவர்களின் நிலையும் அவர்களுக்கு இவர்களின் நிலையும் புரியும். தவறுகள் இருப்பின் அவை உண்மையில் திருத்தப்படவும் உதவும்.

எழுதிக் கொண்டுடே இருந்தால் அவை காலத்துக்கான மாற்றங்களைத் துரிதப்படுத்தாது. செயற்பாடுகளே மாற்றங்களைப் பிறப்பிக்கும் உடனடியாக.

  • கருத்துக்கள உறவுகள்

உலக வல்லரசு தொடங்கி சிறீலங்கா வரை ஊடகங்கள் மூலம் மக்களைக் குழப்ப அல்லது மக்களுக்கு உண்மைகள் சென்றடைவதில் தங்களுக்குள்ள அதீத ஈடுபாட்டை இச்செய்தி காட்டுகிறது.

தமிழ் ஊடகங்கள்..சிந்திக்க வேண்டியதும் செயலாற்ற வேண்டியதும்..ஊடக யுத்தமொன்றை வெற்றிப் பாதையில் நடாத்த வேண்டி உள்ளதையும் கவனிக்க வேண்டிய காலம் உருவாகி விட்டது. ஆனால் செயற்பாடுகள் மட்டும் மந்தமாக உள்ளது.

Pentagon boosts 'media war' unit

US officials believe bad news from Iraq gets undue coverage

The US defence department has set up a new unit to better promote its message across 24-hour rolling news outlets, and particularly on the internet.

http://news.bbc.co.uk/1/hi/world/americas/6100906.stm

Å¡úó¾¡Öõ ²Íõ

¾¡úó¾¡Öõ ²Íõ

¨Å¸õ þо¡É¼¡..!

  • தொடங்கியவர்

ராஜன், புலிகள் தரப்பு திறம்பட 3 மொழிகளிலும் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நல்ல முறையில் நிதானமாக பதிலிளித்திருந்தார்கள். அந்த வகையில் புலிகளின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் சொல்லப்பட்டிருக்கு அது ஆவணப்படுத்தப்பட்டிருக்கு.

ஆனால் அங்கு இல்லாது போனது தமிழ் தேசிய ஆதரவு தளத்தில் இருந்து எமது ஊடகங்கள் அனுசரனையாளர்கள் நோக்கியும் சிறீலங்கா நோக்கியும் கேட்கப்பட்டிருக்க வேண்டிய காத்திரமான கேள்விகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜன், புலிகள் தரப்பு திறம்பட 3 மொழிகளிலும் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நல்ல முறையில் நிதானமாக பதிலிளித்திருந்தார்கள். அந்த வகையில் புலிகளின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் சொல்லப்பட்டிருக்கு அது ஆவணப்படுத்தப்பட்டிருக்கு.

ஆனால் அங்கு இல்லாது போனது தமிழ் தேசிய ஆதரவு தளத்தில் இருந்து எமது ஊடகங்கள் அனுசரனையாளர்கள் நோக்கியும் சிறீலங்கா நோக்கியும் கேட்கப்பட்டிருக்க வேண்டிய காத்திரமான கேள்விகள்.

போனதடவை தமிழ்ச்செல்வன் அண்ணா பேச்சுவார்த்தை முடிந்து பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் எமது மக்களிடம் இருந்து சரியான ஊடகவியலாளர்கள் அவ்விடத்துக்கு வராததால் பத்திரிகையாளர் மாநாட்டிலே பத்திரிகையாளர்களைக் கேள்விகேக்க நேரம் வழங்குவதற்குப் பதிலாக பதில்களை நீட்டி விளக்கம் அளிக்கவேண்டிய தேவை இருந்ததாக மிகவும் வேதனையுடன் கூறி, புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஊடகத்துறையில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிளிநொச்சியில் ஒரு கூட்டத்திலே கூறியிருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் அதே நிலை. பெயருக்கு மட்டும் போட்டி பொறாமைகளுடன் நாம் இருப்போம் ஆயினும் சமூகம் சார்ந்து சிந்திக்க மாட்டோம் எனும் இந்நிலை எப்போ மாறும். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் இதே தவறு நிகழுமா. அவ்வாறு நிகழ்ந்தால் இவ்வூடகங்களை மக்கள் புறக்கணித்து தமக்கென தாமே ஓர் ஊடகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை அரங்கம் பார்த்த மாதிரி இருந்தது

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம் முறை தலைவரின் மாவீரர் உரையை தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இலவசமாக ஒளிபரப்புவார்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இம் முறை தலைவரின் மாவீரர் உரையை தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இலவசமாக ஒளிபரப்புவார்களா? :lol:

எதற்கு இலவசம் காட் வாங்கி பாக்குறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை கோயில் அன்னதானமடங்கள்,தண்ணீர்ப்பந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்தை எழுத முன்னர், தமிழ் ஊடகங்களுக்கும் எனக்கும் இருக்கும் உறவை சொல்வது அவசியம். எனக்கு புல தமிழ் ஊடங்கங்கள் எப்படி என்ன நிகழ்ச்சிகளை ஒளி/ஒலி பரப்புகின்றார்கள் என தெரியாது. காரணம் பார்த்தது கேட்டது இல்லை.(இதுவரை)

புல தமிழ் ஊடகவியலாலர்கள் தடுமாறாமல் கேள்விகளை நல்ல உரை நடையில் ஆங்கிலத்தில் ஆரோக்கியமான உள்ளோட்டமான கேள்விகளை கேட்டால், சிங்கள அரசியலை உலகுக்கு அம்பலப்படுத்தலாம் என்று கூறுகின்றீர்கள்.

உலகில் எத்தனை சர்வதேச செய்தி நிறுவனங்கள் புல தமிழ் ஊடங்களை அடிப்படையாக வைத்து செய்திகளை வெளியிடுகின்றன? (கேள்விகள் கேட்கும் போது சர்வதேச ஊடகவியலாளர்கள் இருந்தால் வேறு விடயம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்தை எழுத முன்னர், தமிழ் ஊடகங்களுக்கும் எனக்கும் இருக்கும் உறவை சொல்வது அவசியம். எனக்கு புல தமிழ் ஊடங்கங்கள் எப்படி என்ன நிகழ்ச்சிகளை ஒளி/ஒலி பரப்புகின்றார்கள் என தெரியாது. காரணம் பார்த்தது கேட்டது இல்லை.(இதுவரை)

புல தமிழ் ஊடகவியலாலர்கள் தடுமாறாமல் கேள்விகளை நல்ல உரை நடையில் ஆங்கிலத்தில் ஆரோக்கியமான உள்ளோட்டமான கேள்விகளை கேட்டால், சிங்கள அரசியலை உலகுக்கு அம்பலப்படுத்தலாம் என்று கூறுகின்றீர்கள்.

உலகில் எத்தனை சர்வதேச செய்தி நிறுவனங்கள் புல தமிழ் ஊடங்களை அடிப்படையாக வைத்து செய்திகளை வெளியிடுகின்றன? (கேள்விகள் கேட்கும் போது சர்வதேச ஊடகவியலாளர்கள் இருந்தால் வேறு விடயம்)

விடிய விடிய இராமயணம் விடிஞ்சாப்பிறகு சீதை இராமனுக்கு என்ன முறை :rolleyes::) :P :P

தீபம் கார்ட்டை வாங்கி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சும்மா விமர்சிக்கிறது.ஏன் தீபம் தொலக்காட்சியையும் கேளுங்களேன்.ஏன் நேரடியாக ஒளிபரப்பு செய்வதில்லை.தமிழ் தேசியத்திற்கு ஆதரவா செயற்படுவதில்லை என்று.

அனைவரும் ஆதரவு தந்து தமிழ் ஒளி யை வளர்த்து விடுங்கள். அதை விட்டு சும்மா எழுந்த வாரியா விமர்சிக்க வேண்டியதுதான்.

ஏன் சுவிஸ் போய் நின்று நேரடி ஒளிபரப்பு செய்த றோபேட் க்கும் பென்ஸ் கார் ஓட, இரண்டு வீடு வாங்கி விட ஆசை இல்லையே.

தங்களின் பெருமனத்துடன் இவ்வளவு அர்பணிப்பாக வேலை செய்வதற்கே முதல் நன்றி சொல்ல வேண்டும். அங்க தமிழ் ஒளி ஒன்றும் கொட்டி சம்பளம் கொடுத்திட வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நல்ல விடயம் தான் கதைக்கிறீங்கள் உங்களின்ரை ஆதங்கம் விழங்கிது அதாலை உங்களிலை யாாவது இனிவரும் காலங்களிலை இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலை உங்களாலை அதே விடயத்தை தவறில்லாமல் பிரயோசனமா செய்ய முடியுமெண்டு சொல்லுங்கோ அவையளையே அனுப்பி வைக்க ஏற்பாடுகள் முயற்சிகள் செய்யலாம் யார் செய்ய போறீங்கள் ஒருக்கா எழுதுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.