Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விட முடியாது TNA….

Featured Replies

Chief-Ministers-300x130-300x130.jpg

 

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன. இதன் போது 11 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே அங்கு முதலமைச்சர் பதவியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.com/2015/01/14/90110

  • தொடங்கியவர்
20 இல் கிழக்கில் ஆட்சி மாற்றம்: கூட்டமைப்புக்கு முதல்வர் பதவி? 
 
கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும். மேலும், அமையவுள்ள கூட்டணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் முதலமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்துக்கொள்ள தலைமை விரும்புகிறது. எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் இன்று வியாழக்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி உடைவுற்றது. இதனால் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி நடத்திய கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
 
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இக்கட்சியில் அதவுல்லா கட்சியின் உறுப்பினர் அண்மையில் இணைந்து கொண்டமையால் தற்போது 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களுடன் இப்போது ஐ.ம.சு.கட்சியில் இருந்து இணைந்த உறுப்பினரையும் சேர்த்து 5 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் 3 உறுப்பினர்களுமாக 27 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

கூட்டமைப்பு முதலமைச்சர் உட்பட இரண்டு அமைச்சு பதவியும் ,அவைத்தலைவரும் தங்களுக்கு கேட்டிருக்கின்றார்கள் .இதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் இல்லை .ஹக்கீம் இன்று வரை அவகாசம் கேட்டிருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு முதலமைச்சர் உட்பட இரண்டு அமைச்சு பதவியும் ,அவைத்தலைவரும் தங்களுக்கு கேட்டிருக்கின்றார்கள் .இதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் இல்லை .ஹக்கீம் இன்று வரை அவகாசம் கேட்டிருக்கின்றார் .

 

இந்த விடயத்தில்.... கூட்டமைப்பு, உறுதியாக நிற்பதை பாராட்டுகின்றேன்.

இனியும்... கூட்டமைப்பு,  முஸ்லிம்கள் விடயத்தில் மென்மையான போக்கை கடைப் பிடிக்குமானால்....

முழுத் தமிழனுக்கும், அவமானம்.

தகவலுக்கு, நன்றி ஹரி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முக மு அ பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. பேசாம கலைச்சிட்டு திரும்ப தேர்தலை வைக்கவேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

முக மு அ பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. பேசாம கலைச்சிட்டு திரும்ப தேர்தலை வைக்கவேண்டியதுதான்

 

இருக்கிறதையும்.... கெடுக்க, முஸ்லிம்கள்... முழு முட்டாள்கள் அல்ல. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

7 பேரை வைச்கிக்கிட்டு முக ஆடம்பிடிக்கிறதே

United People's Freedom Alliance 200,044

31.58 %

14*

Ilankai Tamil Arasu Kadchi 193,827

30.59 %

11

Sri Lanka Muslim Congress 132,917

20.98 %

7

United National Party 74,901

11.82 %

4

National Freedom Front 9,522

1.5 %

1

இன்னொரு தேர்தலுக்கு உடனடியாக செல்வதற்கு கக்கீம் தயங்குகின்றார் ,இதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் .இந்த நிமிடம் வரை முஸ்லீம் காங்கிரசிலிருந்து பதில் வரவில்லை .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போம் சம்பந்தர் என்ன செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. விரும்பினால் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மீண்டும் இணைந்து முஸ்லிம் காங்கிரஸை ஆட்சி அமைக்கச் சொல்லலாம். இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

முக திரும்பி போகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துடன் சமரசம் செய்யும் சம்மந்தர் எங்கள் சகோதர இனமாம் முஸ்லிம்களுடன் சமரசம் செய்து முதலமைச்சர் பதவியை அவர்களுக்கு வழங்க வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

முக திரும்பி போகுமா?

பதவி எண்டால் ஹக்கீம் எவரையும் காக்கா பிடிப்பர். இந்தத் தேர்தலில் கூட ஹக்கீம் முடியாமல் தான் மைத்திரி பக்கம் தாவினார். தவளை :D
  • கருத்துக்கள உறவுகள்

பதவி எண்டால் ஹக்கீம் எவரையும் காக்கா பிடிப்பர். இந்தத் தேர்தலில் கூட ஹக்கீம் முடியாமல் தான் மைத்திரி பக்கம் தாவினார். தவளை :D

 

 

அதெல்லாம் சரி  தான்

ஆனால் பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு வரும்வரைதானே...

அதன் பின் ..?? :(

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்.....?

பதுங்கியும்.... பாயாத புலி.

வடலிக்குள்... இருக்கத் தான், லாயக்கு.

இந்த விடயத்தில் உறுதியாக இப்பவரைக்கும் நிக்கிறார். மீண்டும் தேர்தல் வந்தால் TNA க்கு அதிக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்

Edited by MEERA

இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பது போல் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்களால் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் (11 உறுப்பினர்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (4 உறுப்பினர்கள்) இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஜனநாயக மரபு

கிழக்கு மாகாணசபையின் தற்போதைய முதல்வர் நஜீப் மஜீத்

கூடுதலான உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பதே ஜனநாயக மரபு என தமிழர் தரப்பு கருதுகின்றது.

இது ஜனநாய மரபாக இருந்தாலும், இந்த விடயத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது என்று ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.

தற்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் உள்ளிட்ட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவை தங்களால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நம்பிக்கை

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ததேகூவிடம் 11 உறுப்பினர்கள் உள்ளனர்

இந்த பேச்சுவார்தைகளின் முடிவில் நல்ல முடிவொன்று கிடைக்கும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வமான கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

2012-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணசபையின் 37 உறுப்பினர்களில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தெரிவாகியிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கியிருந்த அந்தக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்று 22 உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தற்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (இருவர்) உட்பட 11 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையில் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது.

http://www.bbc.co.uk/

.இதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் இல்லை .ஹக்கீம் மேலும் இரண்டு நாள் வரை அவகாசம் கேட்டிருக்கின்றார் .வேறு நபர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதற்க்காக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டால் ஒரு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் முதலமைச்சர் தமிழர்தான் என்பதில் மாறவே கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

முக சரியா கஸ்டப்படுது. உங்களிட்டை அதிக ஆசனங்கள் இருந்தாலும் ஜனநாயக மரபும் மண்ணாங்கட்டியும் என்டு TNA உடன் மல்லுக்கட்டுது

வேணுமெண்டால் ஒரு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் முதலமைச்சர் தமிழர்தான் என்பதில் மாறவே கூடாது.

 

அரசியலில் இரு தரப்புமே எதையாவது விட்டுக் கொடுத்து எதையாவது பெறுவது வழமை. இங்கு விட்டுக் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடுவார்கள் என்ற பயமா? இது எனது சந்தேகத்தினால் உருவான கேள்வியே தவிர எனது கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டால் ஒரு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் முதலமைச்சர் தமிழர்தான் என்பதில் மாறவே கூடாது.

ஒரு அமைச்சரையும் விட்டால் 4 அமைச்சும் முக வசமாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நாம் லூசுப்பயலுகள் இல்லை என்பதை முகா வுக்கும், முஸ்லீம் சமூகத்துக்கும் சொல்ல வேண்டும். கிழக்கு தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவோம் எனவும், முதலமைச்சரை சுழற்சியில் எடுப்போம் என்ற போதும் எம்மை புறம்தள்ளி போனார்கள். அதன் பலனாக இரு போனஸ் ஆசங்களை மகிந்த கட்சி பெற்றது.

இப்போ தேவைப்படும் போது வந்து ஒட்டிக்கொண்டு, மஜீத் 3 வருசம் அனுபவித்த பின்பும் தமக்கு முதலமைச்சர் வேணும் என்பது அடாவடித்தனம்.

தமிழர்கள் இளிச்சவாயர்களில்லை என்பதை உணர்தணும்.

கூட எமது சகோதர முஸ்லிம் அமைப்பான நல்லாட்ட்சி இயக்கத்தின் வளர்சிக்கு இது எவ்வகையிலும் உதவாது.

இல்லை. 2 அமைச்சர் முகா, ஒன்று ஐதேக ஒன்று பிளஸ் முதலமைச்சர் கூட்டமைப்பு என்று இருக்கலாமே?

150115161241_eastern_provincial_council_  

'கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும்': முஸ்லிம் காங்கிரஸ் (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150115_east_muslim_congress)

 

பலமுறை ராவுக் கக்கீமே கூறியுள்ள வார்த்தை "முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே முஸ்லீம்களுக்கான தனியலகை வற்புறுத்துதல்" அரபிய மொழியில் கக்கீம் என்றால் மருத்துவர் என்று பொருள் படும் ஆனால் இந்தக் கக்கீமோ நோய்களைக்கூட்டுபவராகவே இருக்கின்றார்.எரிக் சொல்கைம்முடன் பேச்சுக்கள் சுமூகமாகப்போய் கொண்டிருந்த போது முஸ்லீம்களுக்கு தனி அலகைக் கோரி முட்டுக்கட்டையை ஏற்படுத்தியவரும் இவரே.அதன் பின்னர் தமிழர் தவிர்ந்த ஏனைய அனைத்து தரப்பினரும் இவ்விடயத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்தத்தொடங்கினர்

ஒரு அமைச்சரையும் விட்டால் 4 அமைச்சும் முக வசமாகிவிடும்

TNA  முதலமைச்சர் + இன்னொரு அமைச்சு +அவைத்தலைவர்

SLMC இரண்டு அமைச்சு

UNP ஒரு அமைச்சு இது தான் டீல் .

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாண்மை டீல மாத்து முஸ்லிம் மக்களுக்கு தான் முதலமைச்சர் பதவி கொடுக்கணும் அது தான் இணக்க அரசியலுக்கு அழகு......

முஸ்லிம் காங்கிரஸ் இதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய கூடாது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.