Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்': சம்பந்தன்

Featured Replies

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
 
கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
 
150115182434_h_m_g_s_palihakkara_304x171
வடக்கின் புதிய ஆளுநர் பலிஹக்கார
 
 
வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் ததேகூ தலைவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.
 
மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் நடவடிக்கைகள் மாகாணசபையின் நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு தொடர்ந்து நிலவுவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அவ்வாறே, முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்தும் பணியாற்றுவது சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வடக்கின் புதிய தீவிர சிங்கள பேரின தேசிய சார்பு.. ஆளுநனர் நியமனம் தொடர்பில் சம்பந்தனுக்கு பூரண திருப்தி. இப்படி மக்களை ஏமாற்றுவதிலும்.. சம்பந்தன் நாக்கைப் புடுங்கிக்கி்ட்டு சாகலாம்.


முன்னையவர் வெளிப்படையாக செய்ததை.. இவர் நாசூக்காக மறைமுகமாகச் செய்யப் போறார்  அவ்வளவே. ஆபத்து தமிழர்களுக்கே. சம்பந்தனுக்கு அல்ல. :icon_idea:

வெளிநாடுகளிலிருந்து ஊளையிடுபவர்கள் ஊளையிட்டுக்கொண்டே இருப்பர். 2009ன் பின்னரான கூட்டமைப்பின் செயற்பாடுகள் பாராட்டக்கூடிய வகையிலேயே உள்ளது. தாயக மக்கள் சம்பந்தன் தலைமயிலான கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகளிலேயே அது தெரிகிறது. 

தேர்தலை புறக்கணிச்சு மகிந்த தான் வேணும் எண்டு சொனவர்களுக்கு இராணுவ அதிகாரியை மாற்றியது திருப்தியில்லைத்தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய அகற்றிட்டு நரியை நடுவீட்டில கொணாந்து வைச்சிட்டு.. அது திண்டிட்டு போடுறதை திண்ணக் காத்திருந்து கொண்டு.. இருந்த ஓநாய் போய் வெள்ளாடு வந்திட்டு என்று புலம்பும் சம்பந்தன் போன்ற சர்வாதிகாரிகளால்.. போக்கிரி அரசியல்வாதிகளால் தான்   தமிழன் கடந்த 65 வருடமா உரிமை இழந்து.. நிலமிழந்து.. நாடிழந்து வாழ நேரிட்டதை சிலர் வெளிநாட்டுச் சுகபோக வாழ்வில் மறந்துவிட்டு.. மயக்கத்தி்ல்  தமக்குத் தெரிந்ததை உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதன் பின்னால் தமிழ் மக்களும் தாயகமும் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்களை இவர்கள் மறைக்கச் செய்வதன் நோக்கம்.. எதிரிக்கு சோரம் போதலை ஊக்குவிக்கவே. அதுக்குள்ள ஏதோ..  பெரிய தியாகிகள் போல கதை அளப்பு. :lol::icon_idea:


‘LLRC’ Palihakkara expected to replace Military Governor of North

 

[TamilNet, Saturday, 10 January 2015, 20:17 GMT]

 

Sri Lankan Military Governor of North, Major General (retd.) G.A. Chandrasiri, on Saturday told his staff that he would resign his job before anyone on the top coming with the instruction of transfer to him, informed civil sources in Jaffna said adding that Colombo's regime-changers have proposed HMGS Palihakkara, who was one of the eight panellists earlier appointed by former SL President Mahinda Rajapaksa to the so-called Lessons Learnt and Reconciliation Commission (LLRC), which was aimed at buying space and time for Sri Lanka to escape international investigations. Colombo-centric agenda-setters are replacing a military governor with a more sophisticated diplomat concerned with safeguarding the unitary state of Sri Lanka.

The United States of America (USA) is primarily responsible for the hijack of the LLRC drama giving it credibility in its draft resolutions placed at the UN Human Rights Council sessions in Geneva.

The Tamil position has always been that the LLRC is a farce and it is a blueprint for the structural genocide envisaged by the Colombo regime for completion at 2020.

According to LLRC, there should be no ‘ethnic’ districts in the island of Sri Lanka.

Former SL President Mahinda Rajapaksa and his sibling, Gotabaya Rajapaksa, who was the Defence Secretary, were advancing the LLRC-envisaged structural genocide through Sinhala militarisation, Army and Archaeology and colonisation for demographically wedging Northern and Eastern provinces.

HMGS Palihakkara was a former Secretary at the Sri Lankan Foreign Ministry and a former Permanent Representative to the United Nations.

The civil sources in Jaffna in expressed fear that the militarisation will be accelerated in new ways if Sarath Fonseka, the mastermind of the so-called High Security Zones in the North and East, takes charge of the Defence Ministry in Colombo.

In the meantime, EPDP Paramilitary Leader Douglas Devananda, a former cabinet minister in the Rajapaksa regime, has been approaching the personalities of the new regime to maintain his status quo in Jaffna. Mr Devananda, who got in touch with Mr Ranil Wickramasinghe was asked to approach SL President Maithiripala Sirisena. When he attempted to approach Mr Sirisena, he was asked to seek Mr Rajitha Senaratna. Mr Devananda has pleaded with Colombo not to remove the ‘security’ arrangements provided to his group, informed sources told TamilNet.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ்நெட்டை எல்லாம் இப்ப பின்பக்கம் துடைக்கவும் யாரும் பயன்படுத்துவதில்லை.

புலிகளின் பணத்தை பதுக்கிய கூட்டத்தின் ஊதுகுழல்தான் தமிழ் நெட்.

இந்த நரிகள் கூவித்தான் எமக்கு புலரப்போகிறதாம். தாயகத்தில் ஒரு வாசிகசாலை, சனசமூக நிலயத்தில் கூட ஆட்சி அதிகாரம் இல்லாத கூட்டம் கூட்டமைப்பை பழிக்குது.

முதலில் ஒரு கிராமசபையில் உங்கள் சார்பு கொள்கைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டுங்கள், பின்பு கூட்டமைப்பை குறை சொல்லலாம்.

இன்று நடக்கும் எமது அரசியல்  நான் பின்பற்றாத பகவத்கீதை மாதிரித்தான் போகுது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மேடைகளில்.. தமிழ் தேசியம்.. சுயநிர்ணயம்.. தன்னாட்சி அதிகாரம்.. இவற்றைப் பேசித்தான்.. தமிழரசுக் கட்சி சம்பந்தன் புல்லுருவிக் கூட்டமும்.. தேர்தல்களில் வென்று வருகுது. தேர்தலுக்கு அப்புறம்  கொழும்பில்  சம்பந்தன்    ஓர்  அறிக்கை. யாழ்ப்பாணத்தில்   மாவை ஓர்  அறிக்கைவிட்டதுகள் சிலருக்கு மறந்து போச்சுப் போல. மிஸ்டர்   சிவி கூட பிரபாகரன்  தமிழ் மன்னன்  என்று சிங்கள மன்னனை ஒப்பிட்டு பேசி தான் வாக்கு வாங்கினவர்.

 

முடிந்தால்.. தமிழரசுக் கட்சி கூட்டமைப்பை விட்டு விலகிப் போய் சிங்களப் பெருந்தேசிய  இனச் சார்ப்பு கொள்கைகளை மக்கள் முன் நிறுத்தி.. தேர்தலில் வென்று காட்டட்டும். சம்பந்தன்  மாவைக்கு இது பகிரங்க சவால். கொழும்பிலும்.. இந்திய ஊடகங்களில் விடும்  அறிக்கையை தேர்தல் மேடைகளில் விட்டு தமிழரசுக் கட்சி மக்களிடம் ஆணை பெறட்டும் பார்க்கலாம். மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்  என்று தெரிந்து கொண்டு சிங்கக் கொடியை தூக்கிட்டு.. அப்புறம்   அம்மனின் வாகனக் கொடி என்று மழுப்பறிக்கை விட்ட கதைகளும்  உண்டு. அபபோது.. இன்றை சம்பந்தன் வால்பிடிகள்.. டக்கிளசுக்கு வாக்காளத்து வாங்கி எழுதிக் கொண்டிருந்தார்கள். :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறக்கணிச்சு மகிந்த தான் வேணும் எண்டு சொனவர்களுக்கு இராணுவ அதிகாரியை மாற்றியது திருப்தியில்லைத்தான்.

மகிந்த வெல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதற்கான காரணங்களை அந்ததந்த திரிகளில் எழுதி  வந்தேன்.
இப்போதும் மகிந்த வென்றிருந்தால் தமிழருக்கு பாரிய லாபம் வந்திருக்கும் என்பதே எனது நிலைப்பாடு.
 
ஆனால் மைத்திரி வென்றது நாட்டில் நடந்தது.
இனி தமிழர்கள் அடுத்த தேர்தல் மட்டும்  என்ன பவுஸ் பண்ணி நிற்கிறதா ?
 
இனி அதனோடுதான் பயணிக்க வேண்டும்.
 
ஆனால் உங்கள் நிலைப்பாடு சரியாக புரியவில்லை.
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் .... மகிந்தவிற்கு வாக்கு போட்டவர்கள் நாட்டில் வாழ கூடாதா?
 
2005 மகிந்த ஆட்சிக்கு வந்தபோது ... தற்கொலை செய்து மரணித்தவர்கள் இப்போ மறுபிறவி எடுத்துவந்தா மைத்திரிக்கு வாக்கு போட்டார்கள் ?
 
தேர்தல் என்பது முடிந்து புதிய சேனாதிபதி சத்தியபிரமாணம் செய்து இப்போ அவரது ஆட்சி நாட்டில் நடக்கிறது.
இப்போ நாட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி கருத்தை வைத்தால் ........ ஏன் முடிந்த தேர்தலை காவுகிரீர்கள்? கருத்து பஞ்சமா ?
இல்லை இப்போ நடக்கும் விடயங்கள் மக்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா ?
 
இராணுவத்தினர் தமிழரை அழிக்க நேரிடையாக சிங்கள பேரினவாதிகளால் பயன் படுத்த பட்டவர்கள்.
கொஞ்சம் கருணை கூட இல்லாது அரசியல்வாதிகளின் திட்டங்களை நிறைவேற்ற நேரிடையாக தமிழரை அழித்தவர்கள் இராணுவத்தினர்
அவர்கள் எமது ஆளுநர்கள் இல்லாது அகன்று போனால் நல்ல விடயம்தான்.
 
அதற்காக பதிலாக வருபவர் ...
யார் ?
ஏன் ?
எங்கிருந்து ?
எதற்காக ??
வருகிறார் என்று பார்க்க கூடாதா ?

இன்று நடக்கும் எமது அரசியல்  நான் பின்பற்றாத பகவத்கீதை மாதிரித்தான் போகுது . :icon_mrgreen:

கிருஷ்னரின் இன்னொரு பிறவி போலவே பிரபாகரன் வாழ்ந்தார்.
அதன் பாதிப்பு ..
இன்னொரு பிரபாகரனோ கிருஷ்னரோ வரும்வரை தொடரும்.
 
பகவத்கீதை பல நூறு ஆண்டுகளாக தொடர்கிறது.
இப்போ என்றாலும் உங்கள் கண்ணுக்கு தெரிகிறது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.