Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சுன்னாகத்தில் மின்நிறுவனத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

150117165806_jaffna_chunnagam_protest_51

குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தில் ஊறி கிணற்று நீருடன் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

குடிநீர்த் தட்டுப்பாடு

இதனால் வலிகாமம் வடக்கு பகுதியின் பல பகுதிகளில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் கிணறுகளிலும் எண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உண்மை நிலையைக் கண்டறிந்துள்ள போதிலும், நொதெர்ன் பவர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன், வலிகாமம் பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஊர் மக்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மின்நிறுவனம் மறுப்பு

இதனிடையே, குறித்த பிரதேசத்தில் குடிநீருடன் எண்ணெய் கலப்பதற்கு தங்களின் மின்நிலையம் காரணமல்ல என்று நொதெர்ன் பவர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

நீதவான் தலைமையில் நடந்த சோதனை நடவடிக்கையின்போது, தங்களின் நிறுவனத்திலிருந்து எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150117_jaffna_water_protest

இதை கட்டாயம் அகற்ற வேண்டும் . இதன் கழிவுகளை சரியான வடிகாலமைப்பு இல்லாதது தான் பிரச்சனையே.மகிந்த அன்கோ பணம் சம்பாதிப்பதற்காகத்தான் இந்த மின் பிறப்பாக்கிகளை தொடர்ந்து இயங்க வைத்து கொண்டிருக்கின்றார்கள். இது லண்டனில் உள்ள தமிழர் ஒருவருக்கு சொந்த மானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
வசந்தம் வீசும்போதே சொன்னோம் .....
நாடு முன்னேறுவது இவர்களுக்கு எரிச்சல் என்று எழுதினார்கள்.
 
அமெரிக்காவில் 100 மாடியில் கட்டிடம் இருப்பதால் ...
யாழ்ப்பாணத்திலும் இருக்க தேவை இல்லை.
 
ஏன் எதற்கு என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

படத்தில் சித்தரை மாத்திரம் அடையாளம் தெரியுது . :)

  • கருத்துக்கள உறவுகள்

 

வசந்தம் வீசும்போதே சொன்னோம் .....
நாடு முன்னேறுவது இவர்களுக்கு எரிச்சல் என்று எழுதினார்கள்.
 
அமெரிக்காவில் 100 மாடியில் கட்டிடம் இருப்பதால் ...
யாழ்ப்பாணத்திலும் இருக்க தேவை இல்லை.
 
ஏன் எதற்கு என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

 

 

உண்மைதான்.அதுக்காக மூக்கில் சழி வருகுது என்டதற்காக மூக்கை வெட்டக் கூடாது.

இதை அகற்ற வேண்டிய தேவை இல்லை. யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்திற்கு மின்சாரம் அத்தியாவசியம்.
 
கழிவு ஒயிலை டீசலாகமாற்றும் உபக‌ரணம் அலிபாபா.கொம் இல் 3000 டொலருக்கு உள்ளது.   :icon_mrgreen:
 
 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.அதுக்காக மூக்கில் சழி வருகுது என்டதற்காக மூக்கை வெட்டக் கூடாது.

மூக்கினால் வரும் சளி மூக்கை பாதிக்காது இருக்க வேண்டும் ...பாதிக்கும் மூக்கு உயிரை பாதிக்காது இருக்க வேண்டும்.
உயிரா மூக்கா எனும் நிலைமை வந்தால் வெட்டிதான் ஆக வேண்டும்.
 
எதற்கும் ஏன் எதற்கு என்ற கேள்வியும் விடையும் தேவை.
 
1990களில் நான் அடிக்கடி மானிப்பாய் ஆஸ்பத்திரி செல்வதுண்டு அங்கே போர்டர் வித்தவுட் டாக்டர்கள் பணி ஆற்றிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போ பல போராளிகள் மக்களுக்கும் கால்கள் கைகளை உடனேய வெட்டி கொண்டுதான் இருந்தார்கள். சிறிய பாதிப்பு உயிரை பாதிக்கும் என்பதை தடுக்க அப்படி செய்துவந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.