Jump to content

இந்தப் பழத்தை, எப்படிச் சாப்பிடுவது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

o.15239.jpg

இன்று கடைப்பக்கம் போன போது...
இந்தப் பழத்தைக் கண்டு, ஆசையில் வாங்கி விட்டேன்.
இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?
 
Link to comment
Share on other sites

இந்த பழம் நான் சாப்பிடுவதுண்டு சிறி அண்ணா :) இது கிவிப்பழத்தின் அண்ணன் மாதிரித்தான் :D

( அடி நுனியை வெட்டி எறிந்துவிட்டு) தோலை நீக்கி சாப்பிடலாம்.

இதை Dragon fruit என்று சொல்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இருதடவை உண்டுள்ளேன். எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை.

வாயாலேயே  சாப்பிடலாம் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரிச் சாப்பிடுங்கோ... உடம்புக்கு மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள்! :lol:

கன காசு வந்திருக்குமே... எப்படி கையை நீட்டிக் குடுக்க மனசு வந்தது?  :o

PFO1763.jpg

நாங்கள் இப்ப மாம்பழமும் இப்பிடித் தான் சாப்பிடுகிறது! :D

katrina_eating_mango-1280x800.jpg

Link to comment
Share on other sites

மாம்பழம் என்ன மாம்பழம்; இவ்வளவு அழகான ஒரு கள உறவு இருக்கிற விடயம் எனக்கு இன்றுதான் தெரியும்

இங்கு சைனீஸ் கடையில் பெரிய விலை இல்லை.இதை வாங்கி பாதியாக வெட்டி விட்டு பின்னர் ஒரு தேக் கரண்டி மூலம் கோதி எடுக்க வேண்டும்.குளிர் நாடுகளில் சாப்பிடுவதாயின் அடுப்புக்கு கீழ் உள்ள ஓவனுக்குள் ஒரு நாள் வைத்தால் கொஞ்சம் மெது மெதுப்பாக வரும்.(ஓவனை இயக்கக் கூடாது)அதன் பின் கனியை உண்டது போலிருக்கும்.இதே முறையில் இலங்கையிலிருந்து வரும் கன்டோஸ்,சொக்களேற் ரோல் போன்றவற்றை ஒவெனில் ஒரு நாள் அல்லது 5௬ மணித்தியாலத்திற்கு வைப்பதன் மூலம் இலங்கையின் தட்ப வெப்ப நிலையைப்பெறுவதனால் அதிக ருசி கிடைக்கும் 
 
haitianmangoes.jpg
 
The Haitian mango (also known as theFrancine mango or the Madame Francis mango) number 1

நன்றி, நீலப்பறவை!

எங்களுக்கு இப்ப சீசன்... $10- $12 வரையில ஒரு பெட்டி போகுது!

Kensington Pride  எண்டு தேடி வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்!

உங்கட விலையைப் பாக்க... எங்களுக்குத் தலையைச் சுத்துது! :o

171804_190538370966275_190538117632967_5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழம் என்றால்... உள்ளுக்கு, மஞ்சள் அல்லது சிவப்பாக இருந்தால் தான்... சாப்பிடும் ஆசையை தூண்டும்.

இதன் நிறத்தைப் பார்க்க..... ஒரு மாதிரி இருக்கு. :icon_idea: 

எதற்கும் இன்று மாலை சாப்பிட்டு விட்டு, அதன் சுவையை பற்றி எழுதுகின்றேன்.

இந்த பழம் நான் சாப்பிடுவதுண்டு சிறி அண்ணா :) இது கிவிப்பழத்தின் அண்ணன் மாதிரித்தான் :D

( அடி நுனியை வெட்டி எறிந்துவிட்டு) தோலை நீக்கி சாப்பிடலாம்.

இதை Dragon fruit என்று சொல்வார்கள்

என்னது.... கீவிப் பழத்தின் அண்ணனா?

கீவி பச்சை, இது சிவப்பு ஏணி வைச்சாலும் எட்டாது போலிருக்கு தமிழினி. :lol:

நானும் இருதடவை உண்டுள்ளேன். எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை.

சுமோ... நீங்கள் காய்ப் பழமாக, வாங்கி விட்டீர்கள் போலுள்ளது. :D

வாயாலேயே  சாப்பிடலாம் :D:lol: :lol:

இப்படியான பதில் வரும் என்று,

இந்தப் பதிவை போடும் போதே... நினைத்தேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரிச் சாப்பிடுங்கோ... உடம்புக்கு மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள்! :lol:

கன காசு வந்திருக்குமே... எப்படி கையை நீட்டிக் குடுக்க மனசு வந்தது?  :o

PFO1763.jpg

உடம்புக்கு நல்லது என்றால்....

குறிப்பாக... உடம்பின், எந்தப் பகுதிக்கு நல்லது புங்கை. :lol:  

வழக்கமாக இது, 2 ஐரோ அளவில் விற்பார்கள்.

நேற்று மலிவு விலையில், 80 சென்ருக்கு விற்ற போது,

அதன் நிறம், கண்ணை பறித்து...... டக்கெண்டு வாங்கு என்று மனம் சொன்னது, வாங்கி விட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சைனீஸ் கடையில் பெரிய விலை இல்லை.இதை வாங்கி பாதியாக வெட்டி விட்டு பின்னர் ஒரு தேக் கரண்டி மூலம் கோதி எடுக்க வேண்டும்.குளிர் நாடுகளில் சாப்பிடுவதாயின் அடுப்புக்கு கீழ் உள்ள ஓவனுக்குள் ஒரு நாள் வைத்தால் கொஞ்சம் மெது மெதுப்பாக வரும்.(ஓவனை இயக்கக் கூடாது)அதன் பின் கனியை உண்டது போலிருக்கும்.இதே முறையில் இலங்கையிலிருந்து வரும் கன்டோஸ்,சொக்களேற் ரோல் போன்றவற்றை ஒவெனில் ஒரு நாள் அல்லது 5௬ மணித்தியாலத்திற்கு வைப்பதன் மூலம் இலங்கையின் தட்ப வெப்ப நிலையைப்பெறுவதனால் அதிக ருசி கிடைக்கும் 

இதனை ஜேர்மன் மொழியில், Pitahaya என்று சொல்வார்கள்.

நன் வாங்கி வந்த பழம் இரண்டும், அமத்திப் பார்க்க காய் போல் உள்ளது. நீலப் பறவை சொன்ன மாதிரி.... ஓவனுக்குள் வைத்து விட்டு சாப்பிடலாம் போலை இருக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்தப் பழத்தை, சாப்பிட்ட போது....
அதன் சுவை, குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு இல்லை.
சிலவேளை நான் தெரிந்து எடுத்த பழம், நன்கு கனியாததோ... தெரியவில்லை.
80 சென்ற், நட்டம் என்று, நினைக்க வேண்டியது தான்....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

o.15239.jpg

..

இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?

சிகப்பு டப்பாவில் 'வெண் பொங்கலை' அமுக்கி வைத்தது போல் தோற்றமளிக்கிறது..

பழத்தை தோல் நீக்காமல் சிறு துண்டுகளாக வெட்டி, பாலை ஊற்றி 24 மணி நேரம் ஊற வைத்து, குசினியின் அலமாரிகளில் இருக்கும் அத்தனை வகை பலசரக்கு பொருள்களையும் சிறிது தூவி நன்றாக கலக்கி மிக்சியில் அடித்து வடிகட்டினால் கிட்டும் பானத்தை நீங்கள் குடித்துவிட்டு படுத்தால்,ஜெலி(னியா) அல்லது எமி(லியா) உங்கள் கனவில் வருவார்..! :)

எப்படி சில சில கனவுகளை காணுவது என்று எதிர்பார்த்திருந்த எனக்கு தங்களின் ஆக்கபூர்வமான கருத்து சற்று நிம்மதியளிக்கின்றது. இருந்தாலும் ஆர்வக்கோளாறில் கண்ணாடி போடாமல் படுத்தபடியால் கனவு தெளிவாகத்தெரியவில்லை.மீண்டுமொரு தரமான கண்ணாடியுடன் முயற்சிக்கின்றேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.