Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: திட்டும் மக்கள்.

Featured Replies

சொன்னல் நம்ப மாட்டீர்கள் என்னுடய கடவுச்சீட்டு என்னிடம் தான் உள்ளது, ஆனால் நான் நினைத்த நேரம் எனக்கு இந்த நாட்டை விட்டு செல்ல முடியாது. 

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தண்டிப்பார்கள்...

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

என்ன வகையான தண்டனை என்று தெரியாது. ஆனால் ஷரியா என்ற படு பிற்போக்கான, மத சார்பான சட்டத்தின் படிதான் தண்டிப்பார்கள்.

எனக்குத் தெரிந்து சுற்றி இருக்கும் நாடுகளில் இவ்வாறு இல்லை. ஈரான், யேமன் போன்ற நாடுகளில் என்னவென்று தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

எப்படி அந்த வெயிலை தாங்கினீர்கள் ?
நான் 4 நாள் லீவில் சென்றேன்  2ஆவது நாளே அள்ளி கட்டிக்கொண்டு திரும்பி வந்துவிட்டேன்.
2 நாள் புறப்படும் போதுதான் அந்த நாட்டு வழமைகளை புரிய ஆரம்பித்தேன்.
நான் நினைக்கிறன் சொப்பிங் ரெஸ்டுரன்ட் போவது எல்லாம் இரவு 8 மணிக்கு பின்புதான் அங்கு செய்கிறார்கள் போல்.
 
மதியம் கடலுக்குள் கூட இறங்க முடியவில்லை .... கடல் தண்ணி கூட சூடாக இருந்தது. 

அங்கு நடக்கும் பிழைகளை மக்கள் தட்டிக்கேட்காமல் இருப்பதற்காகத்தான் மட்டுப்படுத்தப்பட்ட படிப்பு. அங்கு பல்கலைக்கழகங்கள் கிடையாது.வெளி நாடு சென்று படித்தால் மீண்டும் நாட்டுக்குள் வந்து அரசியல் சாக்கடைக்குள் விழமாட்டார்கள்.இப்படித்தான் மன்னர் ஆட்சியும் செரியா சட்டமும் நடை முறைப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் அமெரிக்கா விடயத்தில் அவர்கள் மிகவும் காட்டமாக நிற்பதற்கு காரணம்.அமெரிக்க கம்பனிகள் எண்ணைக்கிணறுகளுக்கான காலாவதியான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காமல் விட்டுவிட்டு அமெரிக்காவில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு எண்ணையை உற்பத்தி செய்து எண்ணை விலையை குறைத்தது உலக பொருளாதார நெருக்கடியாக்கியது.தற்போது மீதமிருக்கும் கம்பனிகளும் சவுதியை விட்டு விலகினால் சவுதியில் எண்ணையை யாரெடுப்பார்கள்?இவ்வளவு தீவிரவாத இயக்கங்களுக்கும் நிதி அளிப்பது சவுதிதான்.

சவுதி இளவரசருடன் ஒரு இரவை கழிக்க அமெரிக்க நடிகை கிம் கர்தஷியான் 10 லட்சம் டொலர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ரியாலட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளரும், பிரபல நடிகையுமான கிம் கர்தஷியான் அவ்வப்போது சில பரபரப்பு தகவல்களை பரப்பி தன் ரசிகர்களை மிரள வைப்பதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் சவூதி அரேபிய இளவரசர் இன்ஸ்டாகிராம் மூலமாக கிம்மைத் தொடர்பு கொண்டு, ஒரு இரவுக்கு 10 லட்சம் டொலர்கள் தருவதாக கூறியுள்ளார்.

இந்த அழைப்பை அவர் ஏற்று கொண்டதாகவும், விரைவில் அவர் சவுதிக்கு சென்று, ராஜ குடும்ப விருந்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல கடந்த 2013ம் ஆண்டு துர்க்மேனிஸ்தான் ஜனாதிபதி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 10 லட்சம் டொலர்கள் பணத்தை கட்டணமாக கிம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது சவுதியில் எந்தச்சட்டத்துக்கு கீழ் வருகிறது?இவர் மூக்காடில்லை எந்த காடுமே........

  • கருத்துக்கள உறவுகள்
ஏற்கனவே இளவரசர் வீட்டில் எந்த முக்காடும் இல்லாது நீச்சல் உடையில் 200 வரையான இளம்பெண்கள் 
நீச்சல் அடிகிறார்கள். 
கிம்மும் போய்  ஒரு ஓரமா நீச்சல் அடிச்சுட்டு வருவா ?
 
ஒரு காட்டு மிராண்டி கூட்டம்.
காசு இருந்தால் ......?
யார் யார் வாயெல்லாம் மூட முடிகிறது உலகில். 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

உண்மை நிழலி. ஆனால் அப்படி செல்லலாம் துபாயில்/ஓமானில்/குவைட்டில்/பஹ்ரைனில் மட்டும்தான்.
 
கட்டாரில்/சவுதியில் அப்படியல்ல, நாட்டை விட்டு வெளியேரா வேண்டும் என்றால், உங்ளுடைய ஸ்பொன்சர் ஒரு இமிக்ரசன் பேப்பரில் (exit permit) கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் அந்த பேப்பரை பாஸ்போர்டுடன் இமிக்ரசன் கவுண்டரில் கொடுத்தால்தான் நீங்கள் விமானத்தில் போய் அமரலாம்.
 
அந்த பேப்பர் ஏற்கனவே இமிக்சனில் கணனியில் தரவேற்ரப்பட்டிருக்கும், ஸ்பொன்ச‌ரின் கையெழுத்து கணனியின் data base இருக்கும், இது match செய்யாப்பட்ட பின் தான் நீங்கள் நாட்டை விட்டு வெளியேரலாம்.
 
உங்களுக்கு ஏதும் ஸ்போன்சருடன் முரண்பாடு / தர்க்கம் ஏற்பட்டு இருந்தால் அவன் இந்த பேப்பரில் கையெழுத்திட மாட்டான்.
 
மேலும் அவன் எங்கும் லீவில் நாட்டை விட்டு போய் விட்டான் என்றால், ஊரில் ஏதும் மரணம் என்ரால் கூட போக முடியாது, அவன் வந்து அந்தப் பேப்பரில் கையெழுத்திடும் வரை.
 
அரசில் செயல்பாடுகள் செய்ய முடியாது, ஆனால் ஒவ்வோரு வருடமும் மாவிரர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும், அரசாங்கம் அதற்கூறிய அனுமதியை வழங்குகின்றது. 
 
மேலும் இங்கும் குடியுரிமை தருகின்றார்கள் 25 வருடம் இருந்தால். அதற்கு முஸ்லீமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படியல்ல, முத்தவா (religious police) எனப்படுபவர்கள் பிரம்பினால் பின்பக்கத்தில் அடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.
 
மேலும் கட்டார் அமீரின் தாயார் ஷேக்கா மூஸா ஒருமுறை இப்படி அரைகுறை ஆடைடுடன் சென்று பிரச்சனை எற்பட்டது, பின்பு அவளை அந்த மாதிரி அடையுடன் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
56 வயாதாகும் இப்பெண்மனி மிகவும் மதிக்கத்தக ஒருவர்
 
Prince+Wales+Meets+Highness+Sheikha+Moza
                       
tumblr_m95ns7h2nh1rnmfh4o1_500.jpg

tumblr_niwovqu6qp1rwuuo0o2_1280.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இளவரசர் வீட்டில் எந்த முக்காடும் இல்லாது நீச்சல் உடையில் 200 வரையான இளம்பெண்கள் 
நீச்சல் அடிகிறார்கள். 
கிம்மும் போய்  ஒரு ஓரமா நீச்சல் அடிச்சுட்டு வருவா ?
 
ஒரு காட்டு மிராண்டி கூட்டம்.
காசு இருந்தால் ......?
யார் யார் வாயெல்லாம் மூட முடிகிறது உலகில். 

உண்மை மருது, கீழ் உள்ள இணைப்பை வாசித்து பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 
 
விசாம் அல் மனா எனப்படும் இந்த மனிதன் கட்டாரின் 3வது பணக்காரன். இவன் திருமணம் செய்யப்போவது Janet Jackson திருமண செலவு எவ்வளவி தெரியுமா? 20 மில்லியன் டொலர்.
 
http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2284318/Janet-Jackson-MARRIED-Wissam-Al-Mana-Couple-wed-quiet-private-beautiful-ceremony.html

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இங்கும் குடியுரிமை தருகின்றார்கள் 25 வருடம் இருந்தால். அதற்கு முஸ்லீமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

25 வருடங்களாக முசுலீம் நாட்டில் ஒருவர் இருந்தால் அவர் தானே முசுலீமாக மாறிவிடுவார். அவரை மாற்றவேண்டிய அவசியமில்லை. இந்து அல்லது வேதமதங்களில் உள்ளவர்கள் முசுலீம்களாக மாறித் தங்கள் நாட்டையும் முசுலீம் நாடாகவும், நாடுபோலவும் மாற்றிக் கொண்டுள்ளது கண்கூடு. எங்காவது ஒரு முசுலீம் நாடு இந்து அல்லது வேத நாடாக மாறியுள்ளதா...???  
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் முக்காடு போடவேண்டும்.,ஆண்கள் முன்னுக்கு வெட்ட வேண்டுமா:)

பெண்கள் முக்காடு போடவேண்டும்.,ஆண்கள் முன்னுக்கு வெட்ட வேண்டுமா :)

ஓம் இப்போ வெட்டுவார்கள் கடைசியாகப் போகும் போது எல்லாவற்றையும் (குடலையும்) உருவி பஞ்சை வைத்து தைத்துபின்னால் பெரிய தக்கையை இறுக்கி காரிக்கன் துணியில் சுற்றி கொண்டு போய் தாட்டு விடுவார்கள்.
 
ஒரு கதை உண்டு
                 லெபனான் நாட்டில் முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களும் கலந்து தான் வாழ்கின்றனர்.அங்கு ஒரு கிறீஸ்தவர் தான் இறந்த பின் முஸ்லீம் மைய வாடியில் அடக்கம் செய்யும் படி வேண்டியுள்ளார்.அவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.ஒரு சில நாட்களில் இரவு வேளைகளில் கடைக்கு வருவது சிகரட் பெப்சி போன்றவற்றை வேண்டிச் செல்வதுமாக விருந்திருக்கின்றார்.ஒரு நாள் இவரது ஊரவர் ஒருவர் கண்டு விட்டார்.இவரிடம் நீ இறந்துவிட்டாயே எப்படி கடைக்கு... என வினாவியுள்ளார். அதற்கு அவர் நான் என்னை முஸ்லீம் சவக்காலையில் அடக்கம் செய்யும்படி கேட்டது தப்பாகிவிட்டது.அங்கு உள்ளவர் ஒருவரிடமும் உடுப்பு இல்லை காரிக்கன் துணியால் சுற்றிகொண்டிருக்கின்றார்கள். நான் கோட் சூட்டுடன் இருக்கின்ற படியால் என்னை நிம்மதியாகத்தூங்கவிடாது அடிக்கடி கடைத்தெருவுக்கு அனுப்புகிறார்கள் என்று நொந்து கொண்டாராம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.