Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

Featured Replies

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள்.

இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஒரு பெண்ணின் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:-

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு

வத்திருப்பாள்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத

உறவு வைத்து இருப்பாள்.

3. புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக் காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குருவின் திரிம்சாம்சத்திலே பிறந்து இருப்பாளேயானால் மிகவும் நல்லொழுக்கமுடைய

பெண்ணாவாள்.

5. சனியின் திரிம்சாம்சத்தில் பிறந்து இருந்தால் ஏழ்மைமிக்க பெண்ணாக இருப்பாள்.

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக

இருப்பாள்.

2. சுக்கிரன் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து

இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிக நல்லொழுக்கத்துடன் நல்ல குணங்களுடன்

இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணிற்கு சிற்றின்பங்களில்

நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.

2. சுக்கிரன் திரிம்சாம்சமானால் நல்ல பெண்ணாகவும், படித்த பெண்ணாகவும் இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்;

கலைகளில் நாட்டம் இருக்கும்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் நல்ல குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2-ம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக

இருக்க மாட்டாள்.

2. சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல படித்த கெட்டிக்காரப் பெண்ணாக

இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல பண்புள்ள பெண்ணாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள்.

கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்குக் கொடூரம் இருக்கும்.

சிம்ம லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் பேச்சு மிகுந்து இருக்கும், குணங்களில்

ஆண்மைத்தனம் நிறைந்து இருக்கும்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல உயர் பதவியில் இருப்பவரைக் கைப்பிடிப்பர்.

5. சனியின் திரிம்சாம்சத்திலிருந்தால் தன் சொந்த மதத்தின்மீது பற்றுதல் குறைவாக

இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் ஆதிக்கத்திலிருந்தால் மிகவும் சிறிய வேலைகளைச் செய்பவளாக

இருப்பாள்.

2. சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. குரு ஆதிக்கத்திலிருந்தால் நல்ல குணமுடைய பெண்ணாக இருப்பாள்.

4. சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.

5. புதன் ஆதிக்கத்திலிருந்தால் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

தனுசு,மீனம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாயின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணங்களை உடையவளாக இருப்பாள்.

2. சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் கலைத்துறையில் சிறந்து விளங்குவாள்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனியின் ஆதிக்கத்திலிருந்தால் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் காட்ட மாட்டாள்.

இதனை படிக்கின்ற பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொருத்தம் பார்க்கும் சோதிடர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  • Replies 152
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஆண்களுக்கு என்று இப்படி ஒன்றும் இல்லையா

  • தொடங்கியவர்

சில விடயங்களை வைத்து எல்லாவற்றையும் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் இதில் பல ஆச்சரியமான விடயங்களுமுண்டு.

உதாரணமாக செவ்வாய்க்குற்றமுள்ள சாதகக்காரர்கள் பலர் "O" Negative

சில விடயங்களை வைத்து எல்லாவற்றையும் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் இதில் பல ஆச்சரியமான விடயங்களுமுண்டு.

உதாரணமாக செவ்வாய்க்குற்றமுள்ள சாதகக்காரர்கள் பலர் "O" Negative

:lol::(:(:(:)

எங்கே எந்த விஞ்ஞானியாயால் இது நிருபீக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் என்ன?

º§Àºý, ÃîÍ ¦À¡Õò¾õ §Â¡É¢ô ¦À¡Õò¾õ ±ýÚ ±øÄ¡õ À¡ì¸¢È¨Å. «Ð¸¨ÇôÀüÈ¢Ôõ ±ò¾¨É §ÀÕìÌ Å¢Çì¸õ þÕ째¡ ¦¾Ã¢Â¡.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை வைத்து எல்லாவற்றையும் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் இதில் பல ஆச்சரியமான விடயங்களுமுண்டு.

உதாரணமாக செவ்வாய்க்குற்றமுள்ள சாதகக்காரர்கள் பலர் "O" Negative

நீங்கள் குறிப்பிட்டது coincident ஆக அமைந்திருக்கலாம். ஆனால் குறிப்புப் பார்பதற்கும் விஞ்ஞானத்துக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

செவ்வாய் குற்றம் உள்ளவர்களுக்கு ஆர் எச் காரணி பிரச்சனை இருப்பதாக சிலர் அதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் கொடுப்பது போல காட்டிக் கொள்கிறார்களே தவிர எதுவும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டதாக இல்லை. :idea:

  • தொடங்கியவர்

மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல்புூச்சு புூசப்படுவது சில காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விபுூதியில் நோய் எதிர்புச் சக்தி இருப்பதாக சிலர் கிளப்பி விட்ட வதந்தி இன்று வரை பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பதாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

காயங்கள் வந்த விபூதி போட்ட மாறிவிடும். ஏதாவது வயிற்கு கோளாறு என்றால் கொஞ்ச விபூதியை தீர்த்தத்தோடு கலந்து உண்டால் நோய் இருந்த இடம் தெரியாது ஓடிவிடும்.

மேற்கத்தேய வைத்தியத்தில காசு புடுங்க நிக்கிறவை தான் உதுகள் வேலை செய்யாது வைத்தியரிட்டை போங்கோ அவர் சொல்லுறபடி செய்யுங்கோ என்று அறிவியல் கதைக்கிறவை. அந்த காலத்திலையும் சனம் சீவிச்சது தானே உந்த அறிவியல் இல்லாமல்.

  • தொடங்கியவர்

ஆண்களுக்கு இப்படி ஒன்றும் இல்லையா என்று கறுப்பி கேட்டிருந்தார். நான் விசாரித்து அறிந்த வகையில் அப்படி ஒன்று ஆண்களுக்கு இல்லை.

"திரிம்சாம்சம்" போடுவதன் நோக்கமே வரப் போகின்ற பெண்ணைப் பற்ற அறிந்து கொள்வதற்காகத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் சம்பாதிப்பதைமட்டும் நோக்காக கொண்டு மனித இனத்தையே வளர்ச்சியடைய விடாமல் தடுக்கும் கேலமான செயல் இதுதான்!

சபேசன் வாழ்த்துக்கள் நல்ல சிந்தனை நீங்களும் ஒரு சாத்திர நிலயம் அமைக்கலாமே நல்லவருமானம்பெறலாம் :wink: :lol::lol:

இதற்கு அந்தந்த துறை சார்ந்தவர்களாால்தான் விளக்கமளிக்க முடியும்!

உதாரணமாக, யுகே தயாரிப்புகளான குழந்தைகளுக்கு கொடுக்கும் 'கிரேப் வாட்டர்' மற்றும் 'டெட்ரோல்' போன்ற பொருட்களை ஜேர்மனியில் பாவிக்க முடியாது. அவற்றை மறைத்தே நமது கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள்.

ஆக, மேற்குலகில் அவர்களுடைய தயாரிப்புகளிலேயே உடன்பாடில்லாதபோது, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களை பிழை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது.

அப்படி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமாயின், முதலில் தீர்மானிப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல்புூச்சு புூசப்படுவது சில காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விபுூதியில் நோய் எதிர்புச் சக்தி இருப்பதாக சிலர் கிளப்பி விட்ட வதந்தி இன்று வரை பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பதாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

நம்பிக்கை என்ற ஒன்றில் அவை நம்பப்பட்டு வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் திருமண பத்திரங்களை ஒப்படைக்கும் அதே சந்தர்ப்பத்தில் ரத்த பரிசோதனையும் நடைபெறுவதாக நண்பி ஒருத்தி கூறியிருந்தா.

  • தொடங்கியவர்

ஜோதிடம், பொருத்தம் பார்த்தல் என்பன எல்லாம் ஒரு மோசடி என்று அறிவதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமா?

நல்ல நகைச்சுவை!

பொருத்தம் பார்த்த செய்த எத்தனையோ பேர் மண வாழ்க்கையில் படுகிற பாடு போதாதா "பொருத்தம் பார்த்தல்" ஒரு ஏமாற்று வேலை என்று கூற?

அத்தடன் நான் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களைப் பார்த்தீர்களா?

கணக்குப் போட்டுப் பாருங்கள். இதன்படி ஏறக்குறைய 30 வீதத்தில் இருந்து 40 வீதமான பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருக்க வேண்டும்.

இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்ல வேறு என்ன வேண்டும்?

மிகுதியை நாளை வந்து சொல்கிறேன்.

இந்த விடயத்தை நகைச்சுவையாக பார்க்கும் அறிவை தமிழ் இனத்தில் தோன்றிய பலரும் பெற்றிராத நிலையில், நீங்கள் பெற்றுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!

தமிழ் இனத்தைத் திருந்த விடாமல் அறிவியற் பூர்வமாக சிந்திக்க விடாமல் இருந்த நிலமைகள் மாற்றம் பெற்று வருகின்றன.இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் இன்றும் சிலர் புலத்தில் இருப்பது தான் எனக்கு நகச்சுவையானதாகத் தெரிகிறது.

மேலும் சோழியன் கிரேப் வோடெர் டெட்டொல் ஏன் ஜேர்மனியில் விற்கமுடியாது? அதுக்கும் உந்த பொருத்தம் பாக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு அந்தந்த துறை சார்ந்தவர்களாால்தான் விளக்கமளிக்க முடியும்!

என்று கூறி உதாரணத்துக்கு மேலே சொன்னதையும் எடுத்து சொன்னார்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ என்ன பிரச்சனை யாருக்கு என்ன பொருத்தம் பாக்கவேணும் ஓடியாங்கோ தொழில் சூடுபிடிக்க போகுது ஒய் கறுப்பி முதலிலை நீர் குறிப்பை காட்டும் பாத்து சொல்லுறன் :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியாந்து குறிப்பைக்காட்ட நான் என்ன பக்கத்திலா இருக்கிறன் சாத்திரி சார். எட்டாத தூரத்தில் நான் இருக்கேன்

இதற்கு அந்தந்த துறை சார்ந்தவர்களாால்தான் விளக்கமளிக்க முடியும்!

என்று கூறி உதாரணத்துக்கு மேலே சொன்னதையும் எடுத்து சொன்னார்

அப்படி யாராவது துறை சார்ந்தவர் சபேசனின் கேள்விக்கு பதில் அழிதுள்ளரா? அப்படியாயின் அதை மேற் கோள் காட்ட முடியுமா?

மேலும் நடைமுறைத் தரவுகள் பொருத்தம் பார்ப்பதில் உள்ள முரண்பாடுகளை சபேசன் கூறி உள்ளார்.இதற்கான பதில் என்ன?

பதிலே இல்லாமல் வெறுமையக யாராவது ஒருத்தர் இதுக்குப்பதில் சொல்லுவர் என்பது எப்படி ஒரு அறிவுபூர்வமான கருத்தாடலாக இருக்க முடியும்?

மேலும் டெட்டோலுக்கும் க்ரேப் வோடெருக்கும் அதை ஜேர்மனியில் விற்க முடியாததற்கும் , பொருத்தம் பார்பதற்கும் என்ன சம்பந்தம்?

வாங்கோ வாங்கோ என்ன பிரச்சனை யாருக்கு என்ன பொருத்தம் பாக்கவேணும் ஓடியாங்கோ தொழில் சூடுபிடிக்க போகுது ஒய் கறுப்பி முதலிலை நீர் குறிப்பை காட்டும் பாத்து சொல்லுறன் :P :P

சாத்திரி நீர் தானே இந்தத் துறையில விண்ணர் யார் யார் எப்படிப் பொருத்துறனீர் எண்டு சொல்லும் பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் நல்லாத்தான் சுற்றி பொருத்தியிருப்பார்

சோழியன் என்ன சொல்லவாறார? antiseptic & disinfectent ஒன்றும் யேர்மனியில் விற்பதே இல்லை என்றாரோ? இல்லை மருந்தக அத்தாட்சி உடையவர்களால் தான் விக்கலாம் என்றாரோ இல்லை prescription ஓடு தான் மருந்தகத்தில் வேண்டலாம் என்றாரோ?

முக்கியமாக சிறுவர் மருந்துகள், pain killers, போன்றவற்றிற்கு நாட்டிற்கு நாடு கட்டுப்பாடுகள் மாறுவது உண்டு. அவற்றிற்கு வரலாற்று காரணங்கள் உண்டு. தொடர்ச்சியாக யாராவது பாதிக்கப்பட்டு அது சட்டத்தின் முன் துறைசார் பகுப்பாய்வுகளோடு நிரூபிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள்.

இதை எப்படி பொருத்தம் பாக்கிற வடிகட்டின மூட நம்பிக்கையோடு முடிச்சுப் போடலாம்? ஒப்பீட்டு உதாரணமாக காட்டலாம்? அவ்வாறு முடிச்சுப் போடுற அளவிற்கு சோழியன்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.