Jump to content

சிம்பிளான பாகற்காய் குழம்பு


Recommended Posts

பதியப்பட்டது

சிம்பிளான பாகற்காய் குழம்பு

 

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள். பாகற்காய் கசப்பாக இருப்பதாலேயே பலர் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதனை சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதிலும் அந்த பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும்.

2nbr9qr.jpg

 

இங்கு பாகற்காய் குழம்பை எப்படி கசப்பின்றி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்... 

 

 

தேவையான பொருட்கள்:

 

வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது)

 

பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது)

 

துவரம் பருப்பு - 1/2 கப்

 

எண்ணெய் - 1 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்

 

வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்

 

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

 

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 

தாளிப்பதற்கு...

 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 

கடுகு - 1 டீஸ்பூன்

 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 

கறிவேப்பிலை - சிறிது

 

தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பாகற்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

 

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு மற்றும் பாகற்காயை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு அதனை ஒரு வாணலியில் ஊற்றி, அதில் உப்பு,. புளிச்சாறு, வெல்லம், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 

இறுதியில் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குழம்பில் சேர்த்து கிளறினால், பாகற்காய் குழம்பு ரெடி!!!

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/simple-bitter-gourd-curry-recipe-007422.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுகர் நோயாளிக்கு பயன் அளிக்கும் 

Posted
.
 
எனக்கு பிடித்த பாவற்காய் ரெசிபி
 
 
பாவற்காயை சிறுதுண்டுகளாக வெட்டிக் கழுவி ஒரு தட்டில் போட்டு சிறிது உப்புத் தூவி காலையில் ஒரு மணித்தியாளம் வெயிலில் காய விட வேண்டும்.
 
பின் மிகச் சிறிதளவு நல்லெண்ணையில் ஒரு நடுத்தர அளவில் கருகாமல் ச‌ற்று வதங்கியபடி வதக்கி எடுக்க வேண்டும்.
 
பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தக்காளி போன்றவற்றுடன் சிறிதளவு ஒலிவ் எண்ணை சேர்த்து வதங்கிய பாகற்காய்த் துண்டுகளையும் நன்றாகக் கலக்க வேண்டும்.
 
பார்க்க சலட் மாதிரி இருக்கும். 
 
மைசூர் பருப்பு வெண்டிக்காய் அல்லது கத்தரிக்காய்ப் பால்க்கறி போன்றவற்றுடன் மத்தியானச் சோற்றுக்கு இந்த பாகற்காய் சலட்டையும் சேர்க்க சூப்பராக இருக்கும்.
 
 
மேற்சொன்ன சலட்டுக்கு பச்சை மிளகாய்க்கு பதிலாக பொறித்த செத்தல் மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டாலும் சுவைதான்.
 
(பாகற்காய் குழம்பு பிடிக்கவே பிடிக்காது !!)
 
  
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

//வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்//

வெல்லம்... என்பது, என்ன?
அது, சக்கரையா? சீனியா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனிதான், ஆனல் உவ்வளவு போடக்கூடாது. ஒரு தேக் கரண்டி போதும்,  இளநீரில் சமைத்தால் சீனி தேவையில்லை....!

 

 

Posted

பாகற்காய் கறியை வைக்கின்ற மாதிரி வைச்சால் அதன் சுவையை அடிக்க வேறு எந்த மரக்கறியாலும் முடியாது.

 

இணைப்புக்கு நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பாவற்காயின் விதைகளை நீக்கி விட்டு அதற்கு அளவாக தண்ணீர் விட்டு அவிய விடுவேன்.அவிந்ததும் சிறு,சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு,சின்ன வெங்காயம்,ப.மிளகாய் வெட்டிப் போடு தேசிக்காய் புளி விட்டுச் சாப்பிட அந்த மாதிரி இருக்கும். விரும்பினால் தயிர் சேர்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.