Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னதாக ஒரு கொள்ளை

Featured Replies

Neasden நகரின் பிரதான வீதியில் Black Bird Hill வளைவில் இருக்கும் Texaco  பெற்றோல் நிரப்பு நிலையம்.
 
நேரம் காலை பத்தரை என்பதால் வேலைக்கு ,பாடசாலைக்கு செல்வோரின் போக்குவரத்து சற்று அடங்கி வீதிகளில்  வாகன நெருக்கடி குறைந்திருக்கு .கறுப்பு நிற மோட்டார் பைக் ஒன்று பெற்றோல் நிலைய ஆறாவது  Pump இன்  முன் நிற்கின்றது .வெவ்வேறு PUMP களில் இரண்டு கார்கள் பெற்றோல் நிரப்பபட்டுகொண்டிருக்கின்றன .மோட்டார் பைக்கில் வந்தவன் Helmet ஐ  கழட்டாமல் மோட்டார் பைக்கின் பெற்றோல் நிரப்பும் தாங்கியின் மூடியை திறக்கின்றான்  .
 
 
பெற்றோல் நிலைய  Cashier மோட்டார் பைக் முழுக்க தெரியாமல் பெற்றோல் pump இன் பின் சற்று மறைத்து தரித்திருந்ததால் அதன் இலக்கத்தை பார்க்க முடியாமல் முதலில் உள்ளே வந்து காசை செலுத்த சொல்லி இன்டர்காமில் அறிவிக்கின்றார் .
 
பெற்றோல் நிரப்பிய இரண்டு கார்காரர்களும் பணத்தை செலுத்திவிட்டு காரை எடுத்துக்கொண்டு வீதிக்கு இறக்குகின்றார்கள் .கெல்மெட்டை  கழற்றாமல் பெற்றோல் நிலையத்திற்குள் வந்த நபர் பெற்றோல் நிலைய கதவை உட்பக்கமாக பூட்டுகின்றார் .
 
காசியர் என்னது என்று வாயை திறக்கமுதலே உள்ளே வந்த கெல்மெட்  நபர்   இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டியபடியே காசியரை சைகையால் வாயை மூடு என்கின்றார் .பெற்றோல் நிலைய கண்ணாடிக்குள்ளால் வெளியே பார்த்த கெல்மெட் நபர்  வேறு ஏதும் கார்கள்  உள்ளே வராததை உறுதிபடுத்தி விட்டு காசியரை நோக்கிவந்து காசியர் நெற்றிக்கு நேரே துப்பாக்கியை நீட்டியபடியே  அருகில் இருந்த அலுவலக கதவை திறக்க சொல்லுகின்றார் .
 
கதவு பூட்டியிருக்கு தன்னிடம் திறப்பு இல்லை என்கிறார் காசியர் .
 
நான் உள்ளே வந்து உனக்கு வெடியை வைத்து காசை எடுத்துக்கொண்டு போகமுதல்  கதவை திற என்று சத்தம் இடுகின்றார் கெல்மெட்  நபர் .
 
காசியர் அருகில் இருந்த கதவை தட்ட  உள்ளேயிருந்து ஒருவர் கதவை திறக்கின்றார் .அவர்தான் அந்த பெற்றோல் நிலையத்தின் மனேஜர் . மனேஜர் கதவை திறக்க கெல்மெட் நபர் காசியரின் முகத்தில் கிளவ்ஸ் போட்ட முஷ்டியால் ஒரு குத்து விடுகின்றார் .காசியர் நிலை தடுமாற நிலத்தில் விழ அவரை விழுத்தி காலால் முதுகில் அமத்திக்கொண்டு மானேஜரை நோக்கி  துப்பாக்கியை நீட்டியபடி  படி லாக்கரில் இருக்கும் பணத்தை எடு என்கின்றார் .
 
நிலத்தில் குப்பிற கிடக்கும் காசியர் குஜராத்தி பாசையில்  ஏதோ முனகுகின்றார்.வாயை மூடு என்று அடுத்த  உதை ஒன்று அவர் பிண்டத்தில் விழுகின்றது . மனேஜர்  லாக்கரை திறக்க அதில் கொஞ்ச பவுன்ஸ் நோட்டுகளும் கனக்க சில்லறைளும் அடுக்கி வைத்திருக்கு .அந்த தாள் காசுகளை லாக்கரில் இருந்த ஒரு பையில் போட  சொல்லுகின்றார் கெல்மெட் நபர் .
 
துப்பாக்கி வைத்திருந்ததை விட  மற்ற கையால் பையை வாங்கியபடியே அலுவல மேசையில் இருந்த பொன்ட் சூட்கேசையும்  தூக்கியபடியே அலுவலகத்திற்கு வெளியே வந்து துப்பாக்கியைம் பையில் போட்டு கதவை திறந்து மோட்டார் பைக்கில் ஏறி பறந்துவிட்டார் .
 
பெற்றோல் அடிக்க வந்து  pump on  பண்ணாததால்  கதவடியில்  வந்து நின்ற சிலர்  உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஒடிப்போனால் காசியர் வாயில் இருந்து  இரத்தம் வடிய நிற்பதையும் மனேஜர் யாருடனுமோ  தொலைபேசியில் நிற்பதை பார்க்கின்றார்கள்.
 
நான்கு  பொலிஸ்கார்கள்  சைரனுடன் வந்து பெற்றோல் நிலையத்தை சூழ்ந்து பெற்றோல் நிலையத்தை சுற்றி மஞ்சள் ரேப் போட்டு தற்காலிகமாக மூடியிருப்பதாக அறிவிப்பை போடுகின்றார்கள் .ஏரியா மனேஜர் ,அதைவிட வேற சில பெரிய அதிகாரிகளும் வந்து அங்கு சேர்ந்துவிட்டார்கள் .
 
நடந்தது என்ன ? 
 
காசியர் ,மனேஜர் ,சாட்சிகள் (அங்கு நின்ற மூன்று ஆண்கள் ஒரு பெண் ).  விசாரணை தொடங்குகின்றது .
 
தொடரும் .
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜுன். மிகுதியை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜீன் அண்ணா...அங்கு வேலை செய்தவர்களுக்கு இந்த களவில் சம்மந்தம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

கதை சுப்பர் அர்ஜுன். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அர்ஜுன் இல்லையா?   :D  :D  :D 

கதை சுப்பர் அர்ஜுன். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அர்ஜுன் இல்லையா?   :D  :D  :D 

 

அது நீங்களே இல்லையா சீமானு அண்ணே :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கதை விறுவிறுப்பாகப் போகின்றது. தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொ எல்லா கடைகளிலும் பெற்றேல் நிரப்பு நிலையங்களிலும் கமறாக்கள் பூட்டியிருந்தும் கொள்ளையடிக்க வந்து பின்னர் மாட்டிக் கொள்கின்றனர்.

 

பார்ப்போம் அர்ஜனுன் கடையில் என்ன நடந்ததென்று.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொ எல்லா கடைகளிலும் பெற்றேல் நிரப்பு நிலையங்களிலும் கமறாக்கள் பூட்டியிருந்தும் கொள்ளையடிக்க வந்து பின்னர் மாட்டிக் கொள்கின்றனர்.

 

பார்ப்போம் அர்ஜனுன் கடையில் என்ன நடந்ததென்று.

 

இது கமரா மாட்ட முன்பு நடந்த கொள்ளை :D......அல்லது கமராவின் பிளைன்ட் ஸ்பொட் அறிந்த நபர் செய்த கொள்ளை தொடருங்கள் அர்ஜூன்

Edited by putthan

  • தொடங்கியவர்

Neasden  பெற்றோல்  நிலையத்தில் கொள்ளை நடந்த அதே நாள் இரவு ஏழு மணி .  London  Catford   நகரில்  உள்ள ஐரிஷ் பார். அரை வெளிச்சமாக விளக்குகள் மின்னுகின்றன .பாரின் சுவரெங்கும் Dundee united உதைபந்தாட்ட அணியினரின் கருப்புவெள்ளை,கலர் படங்கள். U2 இன்   “Sunday Bloody Sunday  பின்னணியில் ஒலிக்க அங்கே மது அருந்திக்கொண்டிருப்பர்கள் மனதில் ஒருவகை கிளர்சியை அந்த சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. 

 

 

ஒட்டி இறுக்கிய மண்ணிறகொட்ரோயில் பான்ட்ஸ்,கறுப்பு சேர்ட் அதற்கு மேல் கறுப்பு லெதர்  ஜாக்கெட். கூர்முனையுடன் உயர்ந்த ஹய்கீல் சப்பாத்து. தனது நீண்டு சுருண்ட முடியை கோதிக்கொண்டு பாரின்  உள்ளே வருகின்றான் அலெக்ஸ் .  முழு பட்டன்களும் திறந்து ஆனால் முழுவதையும் வெளிக்காட்டாமல் வெள்ளை பிளவ்ஸ் ,கறுப்பு கலரில்  ரைற்ஸ்கேர்ட்ஸ் உடன் காலுக்கு மேல் காலை போட்டுகொண்டு சிகரட்டை ஊதிக்கொண்டிருக்கும் தனது ஐரிஷ் காதலி திரேசாவை  பார்த்து சிரித்தபடி நேரே அவளிடம் போய் திரேசாவின் உதட்டில் தனது உதட்டை பதித்து ஒரு செல்ல முத்தம் வைக்கின்றான் . 

 

குட்டை பாவாடை தேவதைகளாய் வலம் வரும் வெயிட்டேர்சில் ஒருவரை   அழைத்து  தனக்கு  ஜக்டானியல் ஒன் ரோக்ஸ் என்றவன் திரேசாவை பார்க்க, திரேசா  தனக்கு நாளை அதிகாலை வேலை எனவே ரெட் வைன் என்கின்றாள் .இருவரும் மதுவை ருசித்தபடியே போட்டிபோடுபவர்கள்  கணக்கு புகையை ஊதித்தள்ளுகின்றார்கள். 

 

அலெக்ஸ் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கின்றான் மணி எட்டை தாண்டுகின்றது . எட்டு மணி சந்திப்பம்  என்றுதான் ஆதி சொன்னது நினவு வருகின்றது . அட ஆதியே வந்துவிட்டான் . ஒரு விளையாட்டு வீரன் போல எப்போதும் Track suit & pants, Tennis shoes  தான் அவனது உடுப்பு . அலேக்ஸ் தனது இருக்கையால் எழும்பி போய் ஆதியை கட்டிப்பிடிக்கின்றான் .வழக்கம் போல போர்மாலிற்றிக்காக  இல்லாமல் இன்றைய அலெக்சின் கட்டிப்பிடி இறுக்கமாகவும் நெருக்கமாகவும் இருப்பதை ஆதி உணர்ந்தான். . இருவர் முகத்திலும் ஒரு வித சிரிப்பு .

 

 இன்று காலை  நடந்தது  பற்றி கதைக்கும் போது  தமிழில் உரையாட மறந்துவிடாதே என்று ஆதி காதில் சொல்லுகின்றான் அலெக்ஸ். 

 

ஆதி திரேசாவிற்கும் கன்னத்தில் ஒரு முத்தததை வைத்துவிட்டு தனக்கு  ஒரு பியரை ஓடர் பண்னுகின்றான் . 

 

பாரில் இப்போ சனம் நிரம்பிவிட்டது . ஒரே ஐரிஷ் குடிமக்கள்  பெரிய சத்தத்துடன் பூல் ,டார்ட்ஸ் என்று விளையாட தொடங்கிவிட்டார்கள் .

 

ஆறு வருட நட்பு அலேக்சிற்கும் ஆதிக்கும் . பாடசாலை படிப்பு வேலை என்று அலைந்து திரிந்த கால நட்பு அது . அலெக்ஸ் ஐரிஸ் பெண்ணை மணமுடித்து பிரிட்டிஷ் பிரஜை ஆகிவிட்டான் .படிக்கும் காலத்தில் வேலை செய்த அனுபவத்தால் இப்போ ஒரு பெற்றோல் நிலைய மனேஜர் ஆகிவிட்டான் .சொந்தமாக ஒரு பெற்றோல் நிலையம் வாங்கிவிட்டால் தனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து அதை ஒழுங்காக நிர்வகித்து வாழ்க்கையில் செற்றிலாகிவிடலாம் என்பதுதான் அவன் கனவு . 

 

ஒவ்வொரு நாள் காலையும் பெற்றோல் நிலையத்திற்கு வந்து காசியர்கள் நிலத்திற்கடியில் போட்டு வைத்திருக்கும்  பணத்தை எடுத்து எண்ணும் போது அதுவும் பவுன்ஸ் நோட்டுகளை கையால் தொட்டு  உணரும் தருணங்களில் இதில் கொஞ்சத்தை நான் அள்ளினால் எப்படி இருக்கும் என்று நினைப்பான்.  

எப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் கையில் ஐந்து சதம் செமிக்கமுடியாமல் இருப்பதை நினைக்க விசராக இருக்கும் .ரூம் வாடகை ,கார் இன்சுரன்ஸ் ,சாப்பாடு ,இதர செலவுகள் ,வார விடுமுறை குடி கிளப்புகள் என்று போக மிச்சம் எதுவும் இருக்காது. 

 

என்னடா வாழ்க்கை என்று இருக்கும் நேரங்களில் தான் மனம்சற்று  தடுமாறி பெற்றோல் நிலைய பணத்தை பார்த்து புத்தி கொஞ்சம் சபலப்படும்.  நல்ல திட்டம் போட்டு  ஒரு நாளைக்கு அதை செய்துமுடித்து விட வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து அதை செயல்படுத்தவும் துணிந்துவிட்டது . 

 

சேர்ந்த பணத்தை வங்கிக்கு கொண்டு போகும் வழியில் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று பொய் சொல்லி பணத்தை எடுத்தால்  என்ன என்று நினைத்ததில் சில நாட்கள் ஓடியது , ஆனால் அது எப்படியும் பொலிசாருக்கு தன்னில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் .அவ்வளவு பணத்தை ஒழித்து வைத்திருப்பது வேறு பெரிய பிரச்சனை  அதை விட பின்னர் பெற்றோல் நிலையம் வாங்கும்போதும் பிரச்சனைகள் ஏற்படலாம் . 

 

இதற்கு இன்னொருவர் உதவி வேண்டும் என்ற நினைப்பு வந்தபோது முதலில் வந்தது ஆதியின் முகம் தான் .  

ஆதியை அலெக்ஸ் முதலில் சந்தித்தது ஒரு கிரிக்கெட் மாட்சில் தான் .அலெக்ஸ் விளையாடும் அதே டீமில் விளையாட ஆதியை அன்று அழைத்து வந்திருந்தார்கள் .மிக நன்றாக  வேக பந்து வீசினான். அன்றைய மாட்ச் தோல்வி அலேக்சிற்கு  சற்று மனவருத்தத்தை கொடுத்தது . ஆனால் ஆதி  Dressing Room  இற்குள் நண்பர்களுடன் பகிடி விட்டு சிரித்துக்கொண்டு  உடுப்புகளை களைந்து  நிர்வாணமாகி குளிக்க போய்விட்டு வந்தான். 

 

அதன் பின்னர் ஆதியுடன் ஒன்றாக விளையாடிய சில மாட்சுகள் ஆதி எதையும் பெரிதாக மண்டையில் போட்டு குழப்பாத, எந்த நேரமும் தானும் சந்தோசமாகவும் மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்கும்  அவனது குணம் அலெக்சை நன்கு கவர்ந்துவிட்டது . சில வருடங்களில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள் . 

இன்னமும் மாணவ விசாவில் இருக்கும் ஆதி பாடசாலை கட்டணம்  கட்டுவதற்கு  பணத்திற்கு கஷ்டப்படுவதும் அலெக்ஸ் அறிந்ததுதான் .   அதைவிட நாட்டில் இருக்கும் குடும்பத்திற்கும் பணம் தான் அனுப்பவதாக சொல்லியிருக்கின்றான் .அலெக்சிற்கு அந்த பிரச்சனை இல்லை ஊரில் மிக வசதியான குடும்பம் .

 

ஒருநாள் மாட்ச் முடிய இருவரும்  பாரில் இருந்து குடித்துக்கொண்டு இருக்கும் போதுதான் அலெக்ஸ் தனது திட்டத்தை இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு வித பகிடி போல விபரித்தான் .ஆதி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அலெக்ஸ் இந்த விடயத்தை பேச தொடங்க ஆதி இந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லிவிட்டான் . அதன் பின்னர் இருவரும் சில தடவைகள் சந்தித்தாலும் அலெக்ஸ் அந்த விடயம் பற்றி வாயே திறக்கவில்லை .

 

சில மாதங்கள் செல்ல  ஆதியே அலெக்ஸை தொலைபேசியில் அழைத்து உன்னை சந்திக்கவேண்டும் என்று சொன்னான்.அன்றைய சந்திப்பில் தான் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு நாட்டிற்கு செல்லபோவதாகவும் அதற்கு முதல் உனது   திட்டத்தை செய்தால் போச்சு என்று சிரித்தபடியே அலேக்சிடம் கூறினான்.

 

திட்டம் தொடரும் . :o 

 

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.