Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ இருப்பதால் வாழ்கிறேன்

உயிரே எனை விட்டு போகாதே

இன்பம் துன்பம் மாறலாம்

உறுதியோடு வாழ்ந்து விடு

கரைந்து போவதற்கு காதல்

என்ன கானல் நீரா மறைய

உயிர் கொண்டு ,கண்ணீர்

ஊற்றி செந்நீர் வார்த்து

உறக்கம் தொலைத்த

உயிரில் கலந்த உறவு .........உறவு என்று தொடங்க வும

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

உறவின் உயிரைக் காத்திட

முடியவில்லை

ஆனாலும் உணர்வில் ஓர் வலி

சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்

ஆனாலும் எதையோ இழந்ததாய்

ஒர் தவிப்பு எனக்குள்

தொலைத்து விட்டேன் கோழையாய்

என்னை

இழந்து விட்டேன் தமிழ் உணர்வை

ஆனாலும் துடிக்கின்றது இதயம்

எதனால் நானும் தமிழ் என்பதாலா

புரியவில்லை ராமா

ஆனாலும் நீயாவது

காத்திட தோன்றிடுவாயா?

கட்டத்தரையில் கண்ணீரோடு

என் உறவு..... வலிக்கு எனக்கு.........

Edited by கஜந்தி

வலிக்குதெனக்கு என்ற வரி பார்த்த பின்னால்

கலக்கிக் கலங்க வைக்க கவி நான் எதற்கு?

கறுப்பியைக் காணாது கண் பூத்து போயிருக்கேன்

கவி விகடம் தத்துவக்காதலில் கரையுண்டு போயாச்சு

வெண்ணியை கவி செய்தால் வெட்டிப்புடுவா என் வாலை

மணிக்ஸ் கவியந்தாதியை மறந்து போட்டாராம்.

அடங்குவாரா?....

தொடங்குவாரா?...

முடங்குவாரா?... டங்குவார்

அடுத்தது ஆரப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த பூனைக்கு மணி கட்டுவது ,

குஞ்சு என்றும் குழந்தை என்றும் பாராது

வஞ்சகம் கொண்ட அந்த நஞ்சுப் பூனை ,

கொன்று குவிகிறது ,இந்த பூனைக்கு மணி கட்ட

யாருமே இல்லையா ? முற்பகல் செய்தால்

பிற்பகல் விளையுமாம் எமக்கு

பிற்பகல் எப்போது ,?........

எப்போது அடி விழும்

எப்போது கை சுடும்

என்று இப்போது

நாம் அறியோம்...

இப்போது நடப்பது

குருசேஷ்த்திரம் அல்ல..

பொல்லாத குளவிகள்

யாரோ எறிந்த கல்லில்

நில்லாது பறக்கின்றன!

விழுகின்றனவே

சில இலைகள்

என்று

மரம் அழுதால்

புதிதாக இலைகள்

துளிர்க்காது...!

சரித்திரம்

மறுபடி திரும்பும்

அதுவரை

பொறுத்திருந்தால்

உண்மை விளங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

உன்மை விளங்கும் போது

உலகமே வியக்கும்

உம்மை தேடி வரும்

உலகம் அன்று

அன்று சொல்வாய்

நான் இல்லை இந்த

மாவீரர்களே இந்த

மண்ணை மீட்டு

மானம் காத்து

உயிரை இழந்து

உறவை இழந்து

ஊரை இழந்து

உறங்கும் மாவீரர்கள்...........மாவீரர்கள்

தாய் மண்ணுக்காக தன் உயிரை

கொடையாக்கி தாய்மண்ணை

தழுவி உறங்கும் எங்கள் உறவுகளுக்கு

எப்பொழுதும் இரு கரம்

உங்களுக்காக...உங்களுக்காக...........

......

உங்களுக்காக

எதுவும் செய்யவில்லை

நாம்...!

களமாடி வீழ்பவர்கள்

நீங்கள்...

பலமாடி கட்டி

இங்கு வந்து வாழ்பவர்கள்

நாங்கள்...!

போரின் புகைக்குள்

உடல் வருத்துபவர்கள்

நீங்கள்...

காரின் புகையை

மட்டுமே கண்டு பழகியவர்கள்

நாங்கள்...!

ஏதும் செய்யாது

எப்படி விமர்சிப்பதாம்?

போதும் நிற்பாட்டு

குறை சொல்லாது

வாழ்தலே பெரும் சிறப்பு!

Edited by kavi_ruban

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்தலே பெரும் சிறப்பு

அந்த வாழ்கையே பெரும்

சலிப்பு...........

கூடி வாழ்ந்து விட்டு

கூத்தாடிகள் போல

அன்று அங்கு

இன்று இங்கு

என்ன வாழ்க்கை இது

ஏமாந்த வாழ்க்கை

ஏன் இந்த நாட்டில்

சொல்ல வார்த்தைகள் இல்லை

சோகத்தை சொல்ல

அலைகிறோம்........அன்றும்

இன்றும்............

அதிசயப் பிறவியா அல்லது

அடி பட்ட பிறவியா

புரியவில்லை எனக்கு

எனக்கு உனக்கு என

ஏனோ வழக்கு...

உனக்குள் இருக்கும்

ஆசைப்பேயை விலக்கு

வானம் வசப்படாவிட்டாலும்

வாழ்க்கை உருப்படும்...

அன்பும் இல்லை

பண்பும் இல்லை

தீயது பேசுவதும்..

தீமைகள் செய்வதும்

தாயை மறப்பதும்..

தாய் மண்ணை இகழ்வதும்

வீரர் தீயாகத்தை வீணெண்பதும்..

எம் ஈழ கனவினை ஏனென்பதும்..

உன்னை நீ யாரென மறந்ததன்

உன் மதியை நீ இழந்ததன் வெளிப்பாடு..

இருந்து யோசி..தமிழனாய் வா..

நண்பனாய் வா...நல்லவனாய் வா..

நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்கிறோம்..

எங்கள் தலைவனும் உன்னை ஏற்பார்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்பார்! ஏற்பார்தான்!!

ஏற்பதற்கு எனக்கென்ன தகுதி!

மரமும் தன்னில் ஏற அனுமதிப்பது

தன்னடியைப் பற்றுகின்றவனையே!

தன்னலம் காணுதல் நன்றே! எம்

மண்னலம் பேணுதல் சாலவும் நன்றே!!

பாழுமுடலின் கல்லறை புலமாயினும்

வாழும் நினைவுகளின் கருவறை ஈழம், ஈழமே!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்ற திருநாட்டில்

ஏற்றி வைத்த தீபம்

எரிகின்ற வேளையில்

எத்தனை இடர்கள்

அத்தனை இடர்களையும்

வெற்றி கொள்ள

முப்படை கொண்ட புலி படை இங்கே

வாரும் என்ற அழைத்த மக்கள்

வரிசையாக சோற்றுக்கு நிற்க!

ஏறி வந்து எம்மை மிதிக்க

எதிரி அவன் துடிக்க

அரவரணைத்த கைகள் இன்று

ஆயுதம் ஏந்த

அன்னை மண்ணை மீட்க

அனைவரும் இங்கே

சொல் ஒன்று சொல் தலைவா

புயல் போல வீசும் எம் புலிப்படை

எதிரி அவன் மீது எம் கால் மிதிபட

ஏறி வந்த பகை விரட்டி எம் தேசம்

ஒளி விட ஆணையிடு தலைவா.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவா உன் வழியில் நடக்கும் தமிழ் தேசம்

தனியே நீ இல்லை தாங்கும் சக்தியாய் அகிலமெல்லாம் தமிழர்

தனித்தமிழ் எங்கும் எந்தாய் போல் வாழும் நாள் வரும்

தன்னாலே கெட்டுப்போய் எதிரி எல்லாம் காற்றாய் அலையும் நாள் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாய் அலையும் நாள் காதோடு ஒரு சேதி கேட்கும் ,

தோற்றாய் எம் வீர புதல்வர்களிடம் என்று

ஆறாது அவர் செய்த வீர வேள்விகள்

தேற்றி கொள் புலம் பெயர் உறவே ,எம்

தலைவன் ,மெளனம் தீப்பிழம்பாய் வெடிக்கும்

அப்போது விளங்கும் எம் தலைவனின் வீரம்.

சர்வதேசமே இன்னும் புரியவில்லையா ?

அல்லது புரிந்தும் நடிக்கிறாயா ? மதி

கெட்ட மகிந்தன் பட்டு தெளியட்டும் என்று

ஆயுத பேரத்தில் ஆயிரம் ஆயிரமாய் அபகரிக்க

சீர் கெட்ட ஒரு கூட்டம் புழுகி தள்ள்ளுகிறது

அதை பிடித்தோம் ,இதை பிடித்தோம்

தேர்தலுக்கு காdடும் வான வேடிக்கையா

கொஞ்சம் பொறுங்கள் , எதுவும் கை மிஞ்சி

போய்விடவில்லை ,ஆட்டமெல்லாம் அடங்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டமெல்லாம் அடங்கும்

பகைவனின் கோட்டையெல்லாம் சிதறும்

தலைவன் வழி வெல்லும்

தவித்த காலங்கள் ஓயும்!

மாவீரர் கனவு நனவாகும்

மலர்தூவி வணங்குவோம்

அன்னைத் தமிழ் பொங்கும்

அடைத்த துயரம் நீங்கும்!

தமி;ழீழம் மலரும்

தாய்நாடு செல்வோம்

தலைநிமிர்ந்து நிற்போம்

தலைவனோடு வாழ்வோம்!

வாழ்வோம் நாம் என்று

வாழ்த்த ஒரு நாதி இல்லை

வீழ்வோம் விரைந்தே என்று

வாழ்த்த தேடி வருவார் பலர்!

காலன் கால்களுக்கு

சொடுக்கு எடுக்கும்

வித்தை அறிந்த ஒருவன்

விந்தை பல நடத்துவான்!

மொந்தை நிறைய

கள்ளருந்து

தள்ளாடி வரும் பதர்களே...

முன்னாடி வந்து

முக்குடைப்பர் வீர மைந்தர்...!

கண்ணாடி பார்த்து

தலை வாரிக் கொள்ளும்

கடைசியாக உன் முகம்

பார்த்த சந்தோசம்

உனக்கு ஆகட்டும்!

சுடலையில்

சிவனாடி முடிப்பான்

மனித வாழ்க்கை!

களத்தில்

இவனாடி முடிப்பான்

பகைவர் செருக்கை!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செருக்கை கடந்தவன் தாழ் தணிதல் பக்தனுக்கு அழகு

செருக்கை கடந்தவன் தன்னை தான் அறிவான்

செருக்கை அணிந்தவன் மனதில் ஆங்காரம் குடிகொள்ளும்

செருக்கை மானிட வாழ்வின் அந்திமகாலத்தின் அடையாளம்

அடையாளம் காட்டினர்

படையினர் என்னையும்

வரிப்புலி என்று...

இலங்கை பிரஜை என

அடையாள அட்டை

வைத்திருந்த பின்னரும்...

அப்போதுதான் எனக்குள்

நிறைய குழப்பங்கள்

நான் எப்போ புலியானேன்?

கண்ணாடியில் என் முகம் பார்க்க

விரும்பிய போதும்

என் முன்னே சிறைக்கம்பிகளேயன்றி

ஏது கண்ணாடி.....?

ஏது கண்ணாடி

என்று

ஏங்கி நின்ற காளை...

உன்னிரு

கன்னக் கண்ணாடி

கண்டபின்

களிப்பில் துள்ளினான்! :wub:

துள்ளினான் காளை இவன் - தன்

உள்ளம் அள்ளிச் சென்ற

கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. :wub:

அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்

கிள்ளி பல காதல் கதை சொல்லிட... :) ஆனால்,

புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு

முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான். :D

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான் .....

முள்ளு எனத் தெரிந்தும் ஏன் அவன் விழுந்தான்

முட்களின் நடுவே மலர் என் நினைத்தானா ?

மலர்களின் பாதுகாப்பு முட்கள் அல்லவா ?

போகட்டும் வேறு மலர்கள் தென்படாமலா போகும்

தென்றல் வரும் நேரம் ,சேதி வரும் ,திருமண நாளும் வரும்

காதலும் , கனவாகும் ,கனவும் காதலாகும்

உறவுகள் என்றும் அழியாது தொடர் கதையாகும் ......

தொடர்கதையாகும் காதல் தோல்விகள்..

தொடரில் புது இணைப்பு எந்தன் காதலன்றோ....?

படுத்தும்... பாழாய்ப்போன இந்தக் காதல் உன்னை

பாடாய்ப் படுத்தும் என அனுபவித்தோர் சொல்லிடவும்,

இடர்கள் தான் எத்தனை வந்தாலும்

தொடரும் எங்கள் தூய காதலென்று

மடையன் நான் செருக்குற்றேனே...

படிப்பையும் கோட்டை விட்டேனே... :wub:

அடுத்து வரும் என் தோழர்களே கேளிர்...

கொடுத்து வைத்தவர் நீர் காதல் வலையில் விழாவிட்டால்

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

விழாமலே இருக்க முடியுமா விழுந்து விட்டேன் காதல் வலையிலே

போராடி வெற்றியும் பெற்று விட்டேன் , அது நெருப்பாறு நீந்திவிடு

வாழும் வரை போராட்டம் வழியுண்டு , போராடு ,வெற்றியுண்டு

அது மின்சாரம் ,கவனமாக கையாளு ,அடித்து விடும்

வீரர்களுக்கு உரிய விளையாட்டு ,வாழ்வில் ஒரு முறை விளையாடு

வேட்டை யாடு விளையாடு ,விருப்பம் போல உறவாடு

வீரமான நடையை போடு வெற்றி எனும் கடலை நாடு ...........

கடலை நாடும் எம் பிழைப்பு

நாட்டுக்கு உணவு தரும் எம் உழைப்பு

வீட்டிலே மனைவி மக்கள் நமக்காய் அங்கே

நடு கடலிலே படகின் மீது மீனவராய் நாமிங்கே

கொடிய கடற்படையது எங்களை சுடுவது போதாதோ?

ஆழிப்பேரலையே உனக்கும் ஏன் கடுப்பு எங்கள் மீது?

எளிய காடையர்கள் அவர்கள்... கருணை அவர்க்கில்லை

வாழிய இயற்கை அன்னையே... உனக்குமா அது இல்லை??!!

உனக்குமா அது இல்லை

என்று என்னைக் கேட்டால்

எப்படி அப்பனே...

காதலெனும் அருமந்த

அனுபவத்தை

கடக்காது காதலெனக்கு

கசக்காது...!

தோல்வி எதில் இல்லை?

தோற்றபின் போதனை

செய்கின்ற உம் செயல்

ஏற்பில்லை காண்!

காதல் ஒரு தவம்

சில நேரம்

வரம் கிடைக்கிறது

சில நேரம்

சாபம் கிடைக்கிறது

அவ்வளவு தான்!

தேவதைகளை மட்டுமே

அர்ச்சிக்கப் பழகியவர்கள்

நாங்கள்...

தே(ள்)வதைகளையும்

தாங்கப் பழகவேண்டும்!

புரிந்துணர்வு வேண்டும்

பழகவேண்டும் பெண்ணே உன்னோடு நான் நன்கு - என்

இளகிய உள்ளதின் உணர்வுகளை பகிரவேண்டும் - உன்

அழகிய மனதிலுள்ள எண்ணங்களை நான் அறியவேண்டும் - நம்

வாழ்வினில் தேவை எமக்கிடையே புரிந்துணர்வு

உரைக்க வேண்டும் ஏதேனும் நான் தப்பாக செய்துவிட்டால் - நீ

சரிய வேண்டும் என் மடியில் உன் மனதில் பாரமென்றால்

சிரிக்க வேண்டும் நான் செய்யும் குறும்பை நீ கண்டு - நான்

ரசிக்க வேண்டும் உன் சிரிப்பை என் உள்ளம் மகிழ்வுறவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.