Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

அறிவாயா...? என்

மனசை

புரிவாயா என்

ஆசைகளை

உணர்வாயா என்

உயிரை......

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

உயிரை அரிகின்ற

பார்வை உனக்கு

யார் கொடுத்தது?

உளறித் திரிகின்றேன்

உருகாதோ உன்

நெஞ்சம்...?

அஞ்சுவது போல்

சில சமயம்

கொஞ்சுவது போல்

சில சமயம்

எனை மிஞ்சுவது போல்

சில சமயம்

எப்படி முடிகிறது

எல்லாம் உன்னால்...?

  • 4 weeks later...

உன்னால் என்னால்

முடியுமென எல்லாம்

அழியமுதல் என்

முன்னால் வா இறைவா

உன்னால் முடியுமென்று!

உண்ணாது உறங்காது

எரிக்கின்ற உடல்தனை

காத்திட இருளுக்கு

ஒளியாய் எரிகின்ற

தீயிலிருந்து எழுந்து

வா இறைவா! நீ

உயிர் கொடுத்து

படைத்திட்ட உயிரை

உயிரோடு காத்து

மீண்டும் உயிரோடு வாழவைக்க

உன்னால் தான் முடியுமென

எழுந்து வா இறைவா ஒளியாய்

எழுந்து வா இறைவா........

Edited by கஜந்தி

  • 2 weeks later...

இறைவா

மறைவா(ய்) இருக்கும்

தலைவா

ஒளியோ இருளோ

உன் நிறம் எதுவோ

தெரியேன்

பழியோ பாவமோ

நீ போட்ட பாதையில்

எவை எவை

வருமோ அறியேன்

நடக்கின்றேன் தனியே

தந்தை விரல் பற்றி

நடக்கும் சிறுவன் போல்

உன் விரல் தேடி

அலைகின்றேன்

பற்றுவேன் ஒருநாள்

பற்றிய பற்றுக்கள்

பட படவென

அறவே

அறவே அறியேன்

மலர்மடி நாடும்

மன்னவன் சிரத்தோ

பிறந்தவிக்குரல் ஏனோ

இளமை மறையமுன்

எம்பிரானை அழைக்குதேனென்று

அறவேஅறியேன்

  • கருத்துக்கள உறவுகள்

அறியேன் அறிவானை

அறிந்தே அழைக்கின்றேன்

காளைகளின் கால்கள்

முதலைகளின் வாயில்

நாராயனா நீ எங்கே!

கல்விக் கூடங்களே

கலவிக் கூடங்களாய்

கவைவாணி நீ எங்கே!

பாஞ்சாலிகளின் ஆடைகள்

படுபாவிகளின் கைகளில்

கன்னா நீ எங்கே!

கலாச்சாரக் கட்டுகள் உடைத்து

கண்ணீர் வெள்ளம் வீதியெங்கும்

சிவனே நீ எங்கே!

அன்னையின்முன் கன்னியை

கடித்துக் குதறிய காடையர் கூட்டம்

இரத்தப் புஷ்பங்களுடன் விகாரை வாசலில்

நான் அறிவேன்

புத்தனே நீ இல்லை அங்கே!!!

சுவி இரத்தம் பேசுது நன்றி

நன்றி சொல்லி இறைவனைத்

தேட நன்மை சொய்யவில்லை

நமக்கு! உண்மை சொல்லி நாம்

பாட உதவிக்கும் வரவில்லை

என்ன சொல்லி நான் தேட

கல்லாய் இருபவனைப் பார்த்து

எரிந்திடும் ஈழந்தை காத்திட

எம்மை விட சக்தி உண்டா

இவ் உலகில்

இவ் உலகில்

எல்லாம் உண்டு

சாந்தியும்

சாந்தியைத் தேடும்

காந்தியும்

தவிர

எல்லாம் உண்டு!

எல்லாம் உண்டு என!

எழுந்து நடந்தால்

சாந்தியுமில்லை காந்தியுமில்லை

காந்தி தந்த பாதையுமில்லை

உன்னை என்னை தவிர

உலகில் விட்டுச் சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

தீக்குளித்த உயிர்கள் சில ,

சந்தித்தன கல்லறையில்

தமிழுக்காக விட்டுச்செல்ல

எம்மிடமிருந்த உயிரை தவிர

எதுவுமில்லை என்றதும்

மூலையில் கேட்டது .....

விசும்பும் பெண் குரல் ஒன்று ,

கயவர்கள் சூறையாடினர் ,

என் உயிரிலும்மேலான

கற்பையும் தான்,

கற்பையும்தான் என்று

கதறிய கன்னியை கை வந்த அணைத்தது...

அம்மா என்று

திரும்பிய பெண்ணின் மனதே வெடித்தது..

பச்சிளங்குழந்தை

ஒரே ஒரு கையுடன்

தன் தாயில்லை அதுவென

கதறிய குழந்தையின்

கண்களைத்துடைக்க

எண்ணிய இளையவள் எதிரே..

ஏராளம்.. ஏராளம்...

தமிழே..தற்கொலை செய்யும்...

தமிழே ஈகம் செய்யும்..

தமிழே கொலையாகும்..

கல்லறைகள் மூச்சுமுட்டும்..

தமிழ் அழுகுரலால்..

தமிழனுக்கு மட்டும் அழுகை

இறந்தாலுமா

கூட வரும்?

கூட வரும் கூட்டம்

கூடை நிறைப்

பூக்கள் கொண்டு வரும்!

கூடு விட்டுப்

போன பின்னால்

'பிணம்' எனும்

பெயரும் வரும்!

ஏடு எடுத்துப் படித்தும் என்ன

ஓடி ஓடி உழைத்தும் என்ன

மாடி வீட்டு மைனரானாலும் என்ன

கூடு கழட்டி உயிரார் பறந்த பின்

சூடு வாங்கி எரிந்து போகும் தேகம் - ஒரு

பிடிச் சாம்பலாகிப் போகும் பாவம்!

நிலையாமை தெரிந்தும்

ஏனிந்த அறியாமை

நான் இன்று போனால்

நீ நாளை வருவாய்!

நீயும் நானும்

பூமியின் விருந்தினர்

அனுமதி நீட்டிப்பு

என்ற கதையே

இங்கில்லை..!

அனுமதி இருக்கும் வரை

அனுபவி

'சக மனிதன்' என்கின்ற

அறிவு கடந்து

'சக பயணி' என்கின்ற

நாகரீகம் உனக்குள்ளே

பிரசவி

சண்டை ஏன்

நமக்குள்ளே

கெண்டை மீன்

பாய்கின்ற அழகில்

மனசெல்லாம்

சந்தோசம் கொள்ளாமல்

சண்டை ஏன் நமக்குள்ளே?

போடா போ

போகாத ஊருக்கு

நான் ஏன் சொல்வான்

வழி...?

வழி வழியாய்

வழி தேடி!

கெதி கெதியாய்

அறிவுலகம் கெதியாய்

வளர்ந்தால்! வழியின்றி

வழி தேடி அழுகின்றது

நெஞ்சங்கள் அழிவால்..............

  • கருத்துக்கள உறவுகள்

அழிவால் சிதையுண்ட

அன்னை மண்ணை அணைத்திட

ஆசைதான்

அங்கிருக்கும் மிருகங்கள் கண்டு

அஞ்சுகிறேன் நான்

வஞ்சிகளின் முகங்களிலே

இரு வழி பாதைகள் ..அதுதான்

கண்ணீர் வழிந்த ரத்த கோடுகள்

படங்களில் கண்டு பதபதைத்து போகிறேன்

நான்............

என்று எம் மக்களுக்கு விடிவு

கஜந்தி மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி

விடிவு தேடி நாம்

விழிந்தக் கொண்டதால்

எம்மை அழிந்துக் கொண்டே

திறவாக் கதவையும்

கொஞ்சம் திறந்து பார்க்குது

உலகு!! இன்னும் திறக்கும்

எம்மை பார்த்து! எழுந்த

உறுதி புரியும் போது!!

அந்த நிமிடவரை கசப்புதான்

எமக்கு கிடைக்கும் மருந்து.......

  • கருத்துக்கள உறவுகள்

மருந்துக்கும் வழியில்லை

மருத்துவரிடமும் மருந்தில்லை!

மாடுகளுடன் மானிடமும்

மந்தைகளாய் தெருவெங்கும்!

மாண்ட அன்னையின் நெஞ்சிலே

மழழை முலைதேடி முட்டுது!

கந்தகத்தால் காய்ந்த பூமியில்

கள்ளியும் பால் வற்றிக் காயுது!

ஆடாதொடைக் கருகில் ஆடுகள்- உடைந்து

ஆடும்தொடைகளுடன் ஏதிலிகள்!

என்று தீருமிக் கொடிய சோகம்

என்று மலருமெம் ஈழதேசம்!!!

  • 1 month later...

ஈழ தேசம்

இனியும் அழுவதா

தூர தேசம்

எல்லாம் துடித்து எழாதா?

ஆழ வேண்டிய மைந்தர்

நாம் இருக்க

அடிமை செய்ய வந்தவர்

தலை எடுக்க

சில நூறு கடவுள்களில்

ஒரு கடவுள் கண் திறிந்து

பார்க்காரோ?

சாபம் என்ன

வேண்டி வந்தோம்

சாவின் கை

எமைத் தொட்டணைக்க?

பாவம் ஐயா

தமிழர் வாழ்வு

காகம் கூட

சுதந்திரமாய்ப் பறக்குது

நாகம் கூட

தன் புற்றில் தானே உறங்குது

தமிழா உனக்கு மட்டும்

என்ன நடந்தது?

  • 2 months later...

என்ன நடந்தது

என்றெனக்குத் தெரியாது

முன்னம் போல்

முறுவல் இல்லை

முகத்தில்!

கன்னம் சிவந்து

காத தூரம் ஓடி மறையும்

காதல் இல்லை

நெஞ்சில்!

இன்னும் இளகிய

உன் சிந்தை

காணவில்லை

முன்னும் பின்னும்

அற்புதங்கள் காட்டும்

அழகுகவை போனதெங்கே

பிள்ளை?

விளங்காத கவி சொல்லும்

விரிகின்ற கண்களின்

ஒளி மறைந்ததும் என்ன?

பல நூறு துச்சாதனர்கள்

கூடி மான பங்கம்

செய்தது போல

அழகிழந்ததும் என்ன?

"ஈழம்" எனும் பேர்

தாங்கி நின்ற பெண்ணே

எப்போது துடைப்போம்

உன் துயர்?

Edited by kavi_ruban

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துயர்கள் நீங்க

துணிவுகள் பிறந்திட

துடைத்திடுவோம் இருகரம் நீட்டி

தாங்கொணா வலிகள்

தந்துவிட்ட மனஅலைச்சல்கள்

நிழலாய் தொடர்ந்திடும்

பிரதி பிம்பங்கள்

தீர்ந்திடுமா எம் வலிகள்

  • 4 months later...

வலிகள்

மனதில் கவலை

எழுதும் வரிகள்!

மொழிகள் பலவிருந்தும்

என்ன பயன்?

உன்கண்ணடி பட்டு

கண்ணாடி போல்

உடைந்த உள்ளத்தின்

வலி சொல்ல

எந்த வார்த்தையும்

அகப்படவில்லை!

என்னடி எனக்குள்

செய்தாய்?

ஓரடிக் கவிதையில்

ஔிந்திருக்கும்

அத்தனை அதிசயமும்

உன் ஓரங்குலப் புன்னகையில்!

ஈரடி இடைவெளி

இன்னும் எமக்குள் ஏன்?

தேனடி உன்னுதடு என்று

நான் உண்ணும்

காலமதும் எப்போது?

மானடி உன் விழியென்று

மயங்குவதும் எக்காலம்?

இரு கை திறந்து

காத்திருக்கிறேன்

பறந்து வருவது

உன் பொறுப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

கவி ரூபன் மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

கவி ரூபன் மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

முனிவா் மகிழ்ச்சிப்பட சிலா் இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சி...! நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

முனிவா் மகிழ்ச்சிப்பட சிலா் இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சி...! நன்றிகள்...

:unsure::unsure:

உன் பொறுப்பு உன் பொறுப்பு

என்று சொல்லி நாங்கள்......உன்னை விட்டு

ஓடி வந்தோம் நாம்

நீ அடிப்பாய் நீ பிடிப்பாய் என்று

நினைத்தோம் நாம்

வந்த வழி மறந்து இன்பமுற்றோம் ....நாம்

அடிக்கு மேல் அடிவாங்கி அன்னை மண்ணில் ..நீ

எங்கள் பிள்ளைகள் யூனியில் உன்பிள்ளைகளோ போரினில்

எங்களுக்கு சண்டை வாரில்[bar]

உனக்கு சண்டை போரில்

இன்று பசியென்ற வார்த்தை அறியவில்லை நாம்

பசித்தாலும் பசியில்லை என்றாயே

எனக்காக என்றில்லாமல் எங்களுக்காக வாழ்ந்தாய்

எங்களுக்காக உன் செல்வங்களை இழந்து

உன்னையும் இழந்து விட்டோமே

என் தலைவா என் தலைவா

Edited by முனிவர் ஜீ

தலைவா

உன் நுழைவாயில் வரை

காட்டிக் கொடுப்புகள்!

குள்ள நரிகளும்

ஆங்காங்கே ஊளையிட்டுத்

திரிந்தன...

தள்ளி நின்று

உற்று வேடிக்கை பார்த்து

பகைவன் தலையைக்

கிள்ளியெடுக்கையில்

துள்ளிக் குதித்து

"அள்ளியெடுத்து உனக்கொரு

முத்தம் கொடுப்பேனடா

என் தலைவா" என்று

இங்கிருந்து வீரம் பேசி

விடுதலை வேண்டி பேச்சிலும்

எழுத்திலும் வீரம் காட்டி

ஐயோ பாவம் அருமந்த உயிர்கள்

என்று உருகி...

"சீச்சீ..." எத்தனை சின்னத்தனம்

செய்தோம்!

உள்ளுக்குள் எங்கேயோ

ஒரு குற்றஉணா்வு

இன்னும் எனக்குள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.