Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணுவிலா அளவெட்டியா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10961804_10205974047413251_105333400_n.j

இணுவில் மிக நீண்ட காலமாகவே கலைஞர்களால் நிரம்பிய ஊர். அதிலும் தவில் நாதஸ்வர மேதைகளும் நடனக் கலைஞர்களும் சங்கீத வித்துவான்களுமாகப் பெருமை சேர்க்க நாம் பெருமை கொண்ட ஊர். 
அப்படிப் பெருமை சேர்த்தவர்களுள்  முக்கியமானவர் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள். 
 
அவர் 26.08.1933 ல் இணுவிலில் விஸ்வலிங்கத்துக்கும் ரத்தினத்துக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் காலப்போக்கில் இறைநம்பிக்கை காரணமாக அவரைத் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க, இவரின் இயற்பெயர் மறைந்து தெட்சணாமூர்த்தியே இவர் பெயரானது.
 
இணுவிலில் கந்தசாமி கோவில் வீதியில் காலையும் மாலையும் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் சத்தம்  கேட்டபடியே இருக்கும். நடனக் கலைஞர்களின் காற்சதங்கை ஓசையும், அதைக் கேட்டபடி அவ்வீதியாற் செல்வதே ஆனந்தம். அப்படியிருக்க, தன் தந்தையின் தவில் வாசிப்பைக் கேட்டு அதிலேயே வளர்ந்த ஞானபண்டிதன் சாதாரணராக  இருப்பாரா???
 
தந்தையே அவரது முதற்குருவாக ஐந்து வயதிலேயே தந்தையிடமும் அதன்பின் சகோதரியின் கணவனான கிரிஷ்ணமூர்த்தி என்பவரிடமும் தவில் பயின்றார் இவர். அவரின் ஏழாவது வயதில் வண்ணார் பண்ணை காமாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்று தேர்ச்சியும் பெற்றார். அவரது சகோதரர்கள் ருத்ராபதி, கோதண்டபாணி ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க காமாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் தெற்கு வீதியில் இவரது அரங்கேற்றம் நடைபெற்றது.
 
அதன் பின்னர் நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை என்னும் வித்துவானுடன் சேர்ந்து கொழும்பில் அவருக்கிணையாகத் தவில் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டியதுடன் நின்றுவிடாது தன் பன்னிரண்டாவது வயதில் தென்னிந்தியாவுக்குச் சென்று ராகவப்பிள்ளையிடம் பயிற்சி பெற்று தன்னிகரற்ற மேதையானார்.

இந்தியாவின் நாதசுர மேதைகள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், காரைக்குறிச்சி அருணாசலம்,சேக் சின்ன மௌலானா, டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களுக்கு வாசித்துப் பாராட்டும் பெற்றார். ஈழத்திலும் எம். பஞ்சாபிகேசன்,பி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, என். கே பத்மநாதன் , திருநாவுக்கரசு போன்றோருக்கும் வாசித்த பெருமை உண்டு.

தெட்சணாமூர்த்திக்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது.

தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.

ஈழத்து கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு லய ஞான குபேர பூபதி  என்னும் பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பித்தனர். இணுவில் மஞ்சத்தடியில் அவர் தவில் வாசிப்பது போல சிலை ஒன்று அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 
சுப்புடு என்பவர் இந்தியாவின் கலைஞர்களை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிப்பதில் வல்லவர். அவரிடம் குறை கேட்காத ஒரேயொரு கலைஞர் தெட்சணாமூர்த்திதான் என்று கூறுவர்.
 
பிற்காலத்தில் அவர்மேல் பொறாமை கொண்ட சிலர் அவருக்கு நச்சு மருந்து கொடுத்து அதனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றும் எம்மூரில் கதை உண்டு. அவர் இறந்தது 13.05.1975 விக்கிபீடியாவில் 13.05.1978 என்று தவறாகப் போட்டுள்ளனர்.
 
தன் பதினேழாவது வயதில் அளவெட்டியைச் சேர்ந்த மனோன்மணியைத் திருமணம் செய்து அவ்வூரிலேயே தன்  வாழ்வைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் அவர் மிகப் பிரபலமாக இருந்ததனால் அளவெட்டியூரார் தம்மூருக்குப் பெருமை சேர்க்க அவரின் பெயரின் முன்னால் அளவெட்டியைச் சேர்த்து மகிழ்ந்தனர். 
 
ஈழத்தில் அளவெட்டியில் அடிக்கும் நோட்டீஸ் இணுவிலில் உள்ளவர் பார்க்கப்போவதில்லை. அதனால் அளவெட்டி என்று அவரின் பெயரைப் போடுவது தவறான விடயம் என்று யாரும் பார்க்கவுமில்லை. அதுபற்றித் தெரிந்திருக்கவுமில்லை. இன்றைய முகநூல் பதிவுகளும் சிலரது அறிவற்ற வியாக்கியானங்களுமே என்னை இதுபற்றி எழுதத் தூண்டியது
 
அளவெட்டியில் வசிப்பவர்கள் கூட அவரை அளவெட்டி என்று எண்ணுமளவு அவரின் பின்னால் அளவெட்டியை ஒட்டிய பெருமை அவ்வூர் மக்களின் திறமையா பேராசையா என்று தெரியவில்லை.
 
எனக்கு ஒரு சந்தேகம். ஒருவர் பிறந்து வளர்ந்து ஓடிவிளையாடிக் கலை பயின்ற இடம் தான் அவரது சொந்த இடமா ??? அல்லது திருமணம் செய்து பின்னர் வாழ்ந்த இடம் தான் அவரது ஊர் என்று சொல்வதா???  என்று.
 
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த

பிறந்த ஊர் தான் சிறப்புப்பெறணும்

அதிலும் அளவெட்டி

இந்தக்கலையின் ஊற்று :icon_idea:

அதனை ஏற்றுக்கொள்ளணும்

ஊற்று இல்லாதுவிட்டால்.........

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் புகுந்தவீடுதான் ஆதிக்கம் செலுத்தும்...! அண்ணாரின் புகழ் மேலோங்கியது அளவெட்டியில் வாழ்ந்த காலத்தில்தான்...!

அளவெட்டி  தெட்சனாமூர்த்தி.

இணுவில்  சின்ராசு.

கைதடி  பழனி.

என்று இவர்கள் தாம் பிறந்த வாழ்ந்த இடங்களுக்கு மகுடம் சூட்டியவர்கள்...!

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்தின் வடக்கு வீதியில் இவர்கள் சுற்றி நின்டு விடிய விடிய தவிலில் நர்த்தனமாடுவதைக் காண கண்கோடி வேண்டும்...! :rolleyes::D

சுமே! நீங்கள் இணுவில்தானே... உங்களுக்கு ஒருசின்ராசு போதும்...! சும்மா நை  நை என்று எல்லாரையும் கேட்கக் கூடாது...!! :)  :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமே! நீங்கள் இணுவில்தானே... உங்களுக்கு ஒருசின்ராசு போதும்...! சும்மா நை  நை என்று எல்லாரையும் கேட்கக் கூடாது...!! :)  :D

அது...... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் எங்க பக்கம், தோற்றால் நீங்க வேறு பக்கம்

  • தொடங்கியவர்

உங்களுக்கு ஒரு பிள்ளை போதும் என்று மற்றவர்களை விட்டுக்கொடுப்பீர்களா அண்ணா :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த

பிறந்த ஊர் தான் சிறப்புப்பெறணும்

அதிலும் அளவெட்டி

இந்தக்கலையின் ஊற்று :icon_idea:

அதனை ஏற்றுக்கொள்ளணும்

ஊற்று இல்லாதுவிட்டால்.........

மனிசர் ஞாயத்தைக் கதைக்க வேணும் எங்கே என்றாலும். ஒன்றுக்கு ஒன்று முரணாக ...........அளவெட்டி தான் ஊற்றா...... அப்ப உங்களுக்கு கலைகளைப் பற்றித் தெரியவில்லை என்று தெரிகிறது.

வென்றால் எங்க பக்கம், தோற்றால் நீங்க வேறு பக்கம்

நல்ல பச்சோந்தியள்  தான் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனிசர் ஞாயத்தைக் கதைக்க வேணும் எங்கே என்றாலும். ஒன்றுக்கு ஒன்று முரணாக ...........அளவெட்டி தான் ஊற்றா...... அப்ப உங்களுக்கு கலைகளைப் பற்றித் தெரியவில்லை என்று தெரிகிறது.

மன்னிக்கணும் சுமே...

அவர் இணுவிலில் தான் பிறந்தார் என்பதை வாசித்தபோது கவனிக்கவில்லை...

பிறந்த ஊருக்கே அவரது புகழ் சேரும்

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபம் கண்ணை மறைக்கும் :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் கண்ணை மறைக்கும் :D

அளவெட்டி

அந்தக்கலைக்கு பெயர்   போனதாலும்

இவரை அளவெட்டியைச்சார்ந்தவர் என இவ்வளவு நாளும் நினைத்திருந்ததாலும் இருக்கலாம் சுமே...

புங்குடுதீவு கந்தசாமி கோவில் பூங்காவனத்திருவிழாவில் இவர்களது கச்சேரிகளை விடியவிடிய கேட்டும் பார்த்தும் இருக்கின்றேன்.

இலங்கையிலுள்ள அத்தனை  மேதைகளும் தாமாக வந்து பங்குபற்றுவார்கள் (இலவசமாக)

அதை ஒரு கடமையாக செய்து வந்தார்கள்.

அதனால் இவர்கள் மீது மதிப்பு அதிகம்........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

"பிறந்த ஊரா.. புகுந்த ஊரா..?" சீக்கிரம் முடிவெடுங்கப்பா..! நாங்களும் போக வேண்டாமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

"பிறந்த ஊரா.. புகுந்த ஊரா..?" சீக்கிரம் முடிவெடுங்கப்பா..! நாங்களும் போக வேண்டாமா? :)

இந்த மேளக்கச்சேரி சத்தத்திலே நீங்கள் அரசனை கைவிட்டு விடாதீர்கள் .......
அரசனின் கடைக்கண் பார்வை இருந்தால் விதம் விதமாக புருஷர்களை பெற்றுகொள்ளலாம். 

பிறந்தது எங்க கலியாணம் முடிச்சது எங்கே என்று எல்லாம் ஆராய சனத்திற்கு இனி நேரம் இல்லை .

ஆனால் அளவெட்டி தட்சணாமூர்த்தி என்றுதான் அவரை எல்லோருக்கும் தெரியும் .ஊரில் உள்ள கோயில் திருவிழா எல்லாவற்றிலும்  நோட்டிஸ் அடிக்கும் போது  "அளவெட்டி தட்சணாமூர்த்தி" என்றுதான் அடிப்பார்கள் .அவர் உயிருடன் இருக்கும் போது அதை ஒருபோதும் மறுத்ததில்லை .  

ஏன் நீங்களும் அளவெட்டியே அர்யுன் ???நோட்டீசை அங்கு ஒரு இணுவிலாரும் பாத்திருக்க மாட்டினம். போக்கறுந்து போகட்டும் உந்தச் சனங்களுடன் கதைக்க முடியாது என்று அவரும் மறுப்புச் சொல்லாது விட்டிருக்கலாம்

உப்பிடித்தான் சிங்களவனிடமும் எங்கள் உரிமைகளை விட்டது :lol:

எந்த ஊரவங்க எண்டு சண்டை போடமல் சும்மா போங்க மெசொ ஆன்ரி அவங்க தமிழீழத்து மகன்  :D

நோட்டீசை அங்கு ஒரு இணுவிலாரும் பாத்திருக்க மாட்டினம்

அது உண்மைதான் பிரச்சினைக்குரிய இனுவிலார் எல்லாம் வெளிநாடு போய்ட்டினம்... :icon_idea:

அளவெட்டி என்ற கலைவெட்டிஜில் அவர் வாழ்ந்தார் என்று தான் கூறுகிறார்கள் தவிர..... யாரும் அவர் அளவெட்டியில் பிறந்ததாக சொல்லவில்லை.....

அளவெட்டியின் மகா கலைத்திறமயால் எல்லோரும் அவரை அளவெட்டியின் உத்தம புதல்வர்களில் ஒருவராக பார்பதுண்டு......

தயவு செய்து இனவாதம், மதவாதம், இடவாதம் கதைப்பதை நிறுத்துங்கள்.....

முடிந்தால் ஈழத்தில் கலைவளர்க்க உதவுங்கள்.......

கிறிஸ்துமஸ் தினமன்று யாழில் ஒரு மதவாதம் கிளப்பிவிட்டு வெள்ளைக்காரனுக்கு ஹப்பி கிறிஸ்துமஸ் சொல்லி வியாபாரம் செய்தது....(ஆம்/இல்லை)?

போத்தல் லொட்டோ எல்லாம் சும்மா பறந்திருக்குமே......

ஒன்றும் அறியா உங்கள் அப்பாவி பிள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கவில்லையா......(ஆம்/இல்லை)?

நான் உங்களின் எழுத்துக்க்கு இரசிகனாய் இருக்கின்ற போதிலும் நீங்கள் சும்மா இருப்பவர்களை நோண்டி பார்க்கிறீர்கள் போல் தோன்றியதால் எழுதுகிறேன்.....

யாழில் பத்து வருடம் முடித்தவர்களை வாழ்த்தும் போது சாந்தி அக்காவை நோண்டி அடிவாங்கிய பின்னராவது.......ம்ம்ம்ம்..... :icon_idea:

தவறேனில் மன்னித்தருள்க அக்கா......தாங்களும் தவறேனில் திருந்திக்கொள்க.......Please.......

.......

கடசியா அக்கா அந்த யாழில் ஒரு காதல் கதையய் முடிக்கலாமே......!!!!!! (ஆம்/இல்லை)

Edited by Surveyor

ஈழத்தில் மது வித்தால் கசிப்பு விப்பவள்..... லண்டனில் பீர் விப்பவள் யார்? என்று தேவையில்ல்லாமல் எழுத வைக்காதிங்கோ.....

கடசியா அக்கா அந்த யாழில் ஒரு காதல் கதையய் முடிக்கலாமே......!!!!!! (ஆம்/இல்லை)

அந்தந்தத் திரிகளில் வந்து கருத்துச் சொல்லத் துணிவற்று இங்கு வந்து நீங்கள் எழுதுவது உங்கள் துணிவைக் காட்டுகிறது. எதுவேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் எழுதலாம் அது உங்கள் விருப்பம்.

எங்களுக்கு துணிவு கொஞ்சம் குறைய என்பது நீங்களகவே எடுத்த முடிவு, அதைப்பற்றி கதைத்து பயனில்லை... :rolleyes:

இனிவரும் காலங்களில் எல்லா திரிகளிலும் எரிவோம் என உறுதி அளிக்குறோம்.........

சரி இப்ப அளவெட்டியாரை பத்தி எள்ளிநகையாடியத மறந்து எங்கள் துணிவு பத்தி கதைகுரியலலே அங்க தான் உங்கட துணிவு(நோண்டல்) நல்லா விளங்குது

நீங்க schollலில் படிக்கும் போது படத்துக்கு போனதுதான் துணிவு :lol:.....(இது பகிடிக்கு)

என்னடா சுண்டலைக் காணவில்லையே என்று நினைத்தேன். வந்துவிட்டீர்கள் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.