Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறாத வடுக்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்லா பிரவுண்..!

ஐந்து அடிகள் தான் உயரம். ஆனாலும் அந்தச் சிறிய உருவம் இள வயதிற்கேற்ற வனப்புடனும், வளைவுகளுடனும் வாலிபர்களை கிறங்க வைக்கத் தவறுவதில்லை. அவளை பெண் நண்பியாக அடையப் போவது யார் என்கிற போட்டிதான் அந்த அமெரிக்க ஊரின் இளைஞர்களுக்குள் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது.

அவளைப் போல பல பெண்கள் வனப்புடன் இருந்தாலும் கார்லா நன்கு பிரபலம் ஆகிவிட ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. ஒரு சமயம் அவள் கடற்கரை ஒன்றில் நடந்து சென்றபோது பத்திரிகைக்காரர் ஒருவர் அவளது அனுமதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அந்தப்படம் அவளது பெயருடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ஒன்றில் வெளிவரவரவும் அவளது மீட்டர் இளைஞர் மத்தியில் சும்மா ஜிவ்வென்று எகிறியது. இளைஞர்கள் அவளது வீட்டுக்கே தொடர்பு கொண்டு அவளுடன் பேச எத்தனிக்கவும் அவளது பெற்றோர் இறுதியில் தொலைபேசி எண்ணை மாற்றவேண்டியதாகிப் போனது.

vlcsnap-2012-07-30-21h03m07s251.png

யார் எவர் சுற்றித் திரிந்தாலும் கார்லாவின் கண்களைச் சுண்டி இழுத்தவன் மார்க் மட்டுமே. இருவருக்கும் நன்றாகவே ஒத்துப் போனது. சாதாரண நண்பர்கள்போல முதலில் பழகத் தொடங்கியவர்கள் பின்னர் காதலர்களாகவே மாறிவிட்டார்கள். மார்க்கின் அம்மா ஹெலனுக்கும் கார்லாவைப் பிடித்துக்கொண்டது.

கார்லாவுக்கு இப்போது 22 வயது. பெற்றோருடன் வாழ்ந்து கொண்டு சந்தித்துப் பழக அலுத்துப் போயிருந்தது அவளுக்கு. மார்க்கும் இப்போது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டான். தனியாகக் குடித்தனம் போக வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாள் கார்லா.

மார்க் கொஞ்சம் நின்று நிதானித்து முடிவுகளை எடுக்க விரும்புபவன். ஆனாலும் தன் அழகுக் காதலியின் வேண்டுகோளை அவ்வளவு சுலபமாக அவனால் தட்டிக்கழிக்க முடியவில்லை. இளவயதுக்கேற்ற பக்குவமில்லாத கோப தாபங்கள் இருவருக்கும் இடையில் வந்துபோகத் தவறியதில்லை. ஆனாலும் ஒரு முடிவை எடுத்தான் மார்க்.

1978 ஆம் ஆண்டின் ஒரு கோடை மாதத்தில் வுட் றிவர் நகரில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து தனிக்குடித்தனம் போயாகி விட்டது.

குடி புகுந்த இரண்டாம் நாள். காலையில் வேலைக்குக் கிளம்பினான் மார்க். முதல்நாள் மாலையின் சில்மிசங்களை நினைவூட்டியவன் இனிதான முத்தம் ஒன்றை அவள் உதட்டினில் பதித்துவிட்டு அரை மனதுடனேயே விடைபெற்றான்.

"போய் வருகிறேன் ஹனி."

வழியனுப்பிய அவளுக்கும் கிறக்கம்தான். அந்த மூன்று நாட்கள் எப்போது முடியும் என்றிருந்தது.

அவள் அப்போது வேலை எதற்கும் போக ஆரம்பித்திருக்கவில்லை. மூன்று வருட மேற்படிப்பை முடித்த அளவில்தான் இருந்தாள்.

காலை ஒன்பது மணி. ஹெலனுக்கு தொலைபேசி எடுத்தாள் கார்லா. பேசிக்கொண்டிருந்தபோது வாசல் அழைப்புமணி ஒலிக்கும் சத்தம்.

"அது மார்க் ஆகத்தான் இருக்கும். எதையாவது விட்டுவிட்டுப் போவது அவனின் வழக்கம்தானே.."

“ஆமாம். அவன் எப்பவும் அப்படித்தான். நாங்கள் பிறகு பேசிக்கொள்வோம். நீ அவனை முதலில் கவனி.." குறும்புச் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள் ஹெலன்.

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலை ஐந்து மணி.

வேலை முடித்து தன் நண்பன் டேவிட்டுடன் வீடு திரும்பிய மார்க் வீட்டின் வரவேற்பறை அலங்கோலமாக இருந்ததைக் கண்டு குழம்பிப் போனான்.

"கார்லா..!"

உரக்கக் கூப்பிட்டவாறே அறைகளைத் துளாவினான். அவளைக் காணவில்லை. நிலக்கீழ் தளத்தினுள் சென்று பார்த்தவன் அலறினான்..!

"கார்லாஆஆஆ..!"

அடுத்த ஐந்தாவது நிமிடம் காவல்துறை வாகனங்கள் அந்த வீட்டை முற்றுகை இட்டன. மஞ்சள் நிறப் பட்டியால் வீட்டைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதிர்ச்சியில் பேசக்கூடத் திராணியற்றுப் போயிருந்தான் மார்க். நண்பர்கள் ஆறுதல் கூறியபடி அருகில்.

பொறுப்பு துப்பறியும் நிபுணர் ஐவனிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இரண்டு மணிநேரத்தில் கார்லாவின் வீட்டைச் சென்றடைந்தார் ஐவன். கூடவே அவரது உதவியாளன் எலியட்டும் வந்திருந்தான். புதிதாக துப்பறியும் துறைக்குள் பிரவேசித்திருந்த அவனுக்கு ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.

ஏற்கனவே தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார்கள். கையுறைகளை அணிந்தவாறே கவனத்துடன் வீட்டுக்குள் சென்றார்கள் ஐவனும், எலியட்டும்.

"எங்கே இருக்கிறது?" ஒரு காவல்துறை அதிகாரியைக் கேட்டார் ஐவன்.

"நிலக்கீழ் அறையில்."

அங்கே ஒரு சிறு பெண் உருவம் வாளிக்குள் தலையை அமிழ்த்தியபடி முட்டிக்கால் போட்ட நிலையில் முன்பக்கமாக சாய்ந்திருந்தது. கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தைச் சுற்றி காலணிகளால் இறுக்கப்பட்டிருந்தது. தலையில் இரத்தக் காயங்கள்.

புகைப்படங்கள், இதர தடயங்களைச் சேகரித்த பின்னர் உடற் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டாள் கார்லா.

சுற்றிவர நோட்டமிட்டார் ஐவன். தடயங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த மூத்த அதிகாரி அருகில் வந்தார்.

"ஐவன்.. கொலையாளி வீட்டில் இருந்த காலுறைகள் இரண்டைக் கோர்த்து கழுத்தை இறுக்கியிருக்கிறான் போலத் தெரிகிறது. தலையிலும், முகத்திலும் தாக்கப்பட்டிருக்கிறாள். பாலியல் வன்புணர்வாக இருக்கக்கூடும். இடுப்புக்குக் கீழே ஆடை களையப்பட்டிருக்கிறாள்."

"ஓ.. அதுசரி.. அவளது மேலாடை சற்றுப் பொருத்தம் இல்லாமல் இருந்ததே.. இந்தக் கோடை காலத்தில் ஏன் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்?", கேள்வியுடன் நிபுணரைப் பார்த்தார் ஐவன்.

"எங்களுக்கும் குழப்பம்தான். அவளது காதலன் மார்க்கை கேட்டபோது, அவள் அவ்வாறு அணிந்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்றான்."

"ம்ம்ம்.. வேறு என்னவெல்லாம் அறிந்துகொண்டீர்கள்?"

"மேல் தளத்திலும் இரத்தக் கறைகள் உள்ளன. தாக்குதல் மேல்தளத்தில் நடந்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கொலையாளி நீரை ஊற்றி இரத்தக்கறையை கழுவ முயற்சித்திருக்கிறான். அதற்கு காஃபி மேக்கரின் குடுவை பாவிக்கப்பட்டுள்ளது. அதை கூரையில் செருகி வைத்துவிட்டுப் போயுள்ளான்."

"அதில் கைரேகை ஏதாவது கிடைத்ததா?"

"அதில் கிடைக்கவில்லை. எல்லா இடங்களிலும் முயற்சி செய்கிறோம். பின் வாசல் கதவு திறந்தபடி உள்ளதால் அதற்குள்ளால் கொலைகாரன் உள்நுழைந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. அங்கு கிடைத்த கைரேகைகளையும் சேகரித்துக் கொண்டுள்ளோம்.”

"ம்ம்ம்.. நன்றி."

அன்றைய மிகுதிப் பொழுது அந்த வீட்டிலேயே கழிந்தது.

"என்ன எலியட்.. இந்த நாளை முடிவுக்குக் கொண்டு வருவோமா?"

"அப்படியே ஆகட்டுமே.." களைப்பு மிகுதியில் இருந்த எலியட் சற்று நிம்மதியடைந்தான்.

காவல்துறை அதிகாரியிடம் வந்தார் ஐவன்.

"மேலதிக உத்தரவு வரும்வரையில் இந்த இடத்தை கண்காணிப்புக்குள் வைத்திருங்கள். யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம்."

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

போனால் போகட்டும் போடா என

நாம் தப்பிட்டோம் என்றிருக்க....

இங்க ஒருத்தர்  இன்னொரு கோடு போடுறார்.. :D

நான் வரல இந்த விளையாட்டுக்கு தம்பி...

படைச்சவன் படி அளப்பான் என்பதே சரியான வழி...

எனக்கில்லாதது உனக்கும் கிடையாது என்றவழி தப்பு ராசா.. :lol:  :D

 

நன்றாக போகிறது

தொடர்க.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை கதை விறுவிறுப்பாகப் போகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போனால் போகட்டும் போடா என

நாம் தப்பிட்டோம் என்றிருக்க....

இங்க ஒருத்தர்  இன்னொரு கோடு போடுறார்.. :D

நான் வரல இந்த விளையாட்டுக்கு தம்பி...

படைச்சவன் படி அளப்பான் என்பதே சரியான வழி...

எனக்கில்லாதது உனக்கும் கிடையாது என்றவழி தப்பு ராசா.. :lol:  :D

 

நன்றாக போகிறது

தொடர்க.

விசுகு அண்ணா.. உங்களை அப்பிடி நினைப்பேனா.. :D நீங்கள் இருந்ததையும் விட்டுட்டு வந்தவரல்லோ.. :icon_idea:

தொடருங்கள் இசை கதை விறுவிறுப்பாகப் போகிறது.

நன்றி சுமோ அக்கா.. சிரிப்பு இல்லாமல் சீரியஸ் ஆக எழுதிப் பார்க்கிறன்.. :huh: முகக்குறி போடாமல் எழுதிறது வலு கஷ்டமா இருக்கு.. :lol:

நன்றாக உள்ளது தொடருங்கள் இசை அண்ணா!!  விறுவிறுப்பாக செல்வதால் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுநாள் காலை.

குற்றம் குறித்த கலந்துரையாடல் அலுவலகத்தில் ஏற்பாடாகியிருந்தது. துப்பறியும் நிபுணர்களுடன் அவர்களது மேலதிகாரி ஜெரியும் இருந்தார்.

"குற்றம் குறித்து என்ன அறிந்துகொண்டீர்கள் ஐவன்?"

"குற்றவாளிக்கு நன்றாக கார்லாவை தெரிந்திருக்கிறது. அல்லது அந்த வீட்டில் / தெருவில் நல்ல பரீட்சயம் உள்ளவனாக இருக்கலாம். குற்றத்தை நிகழ்த்திவிட்டு சாவகாசமாக துடைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளான்.."

"ம்ம்ம்.."

"அத்துடன், விசாரணையைத் திசை திருப்பவென்று சில வேலைகளைச் செய்துள்ளான். ஆனால் அவை சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளாகத் தெரிகின்றன."

"எப்படி?"

"உதாரணமாக, கார்லாவின் மேலாடையை மாற்றியிருக்கிறான். அவள் அணிந்திருந்த ஆடையை தனது வெற்றிப் பரிசாக எடுத்துச் சென்றிருக்கலாம்; அல்லது அவை ஆதாரமாகக் கூடும் என அப்புறப்படுத்தியிருக்கலாம்.”

"இருக்கலாம்."

"புதிய மேலாடையாக ஒரு ஸ்வெட்டரை அணிவித்துள்ளான். அதன் பொத்தான்கள் அனைத்தும் போடப்பட்டுள்ளன. பாலியல் வல்லுறவு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் இங்கே."

"சரிதான்." ஆமோதித்தார் ஜெரி.

"மேலும், அவளின் கைகள் வயரினால் பின்னால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்தக் கட்டு இறுக்கமானதாக இருக்கவில்லை. இதுவும் ஒரு திசைதிருப்பும் நாடகமாக இருக்கலாம்."

"சரி. கொலை செய்யப் பயன்பட்ட ஆயுதம் எது?"

"கழுத்தில் காலுறையால் இறுக்கப்பட்டுள்ளது. வேறு எந்தத் தகவலும் இல்லை. பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்."

"குற்றவாளியென ஆர்வத்தைத் தூண்டும் வகையில் யாராவது நடந்து கொண்டார்களா?"

"இப்போதைக்கு காதலனும், அவனது நண்பனும் மட்டுமே.. அக்கம் பக்கத்தில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளோம்."

"நல்லது. சந்தேகம் உள்ளவர்களை பொய்யறியும் கருவி சோதனை செய்துகொள்ளும்படி வலியுறுத்துங்கள். தேவையில்லாத நபர்கள்மீது எமது நேரத்தை செலவிடுவது வீண். நீங்கள் போகலாம். குட்லக்."

"நன்றி, ஜெரி."

அடுத்த நாளே பிரேத பரிசோதனை அறிக்கை கையில் வந்தது. சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. வல்லுறவின் உயிரணுக்கள், பிற இரத்தவகை, உரோமம் என்று எதுவும் கைப்பற்றப்படவில்லை. விசாரணையின் போக்கு கடினமாவதை உணர்ந்தார்கள் துப்பறியும் நிபுணர்கள்.

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

ஏமற்றப்படாது இப்படி?? :lol:

அதென்ன நாலு வரியில் ஒரு தொடர்....??

கண்ணா நீயுமா? எனத்தான் கேட்கத்தோன்றுகிறது.... :D


(பச்சை கைவசம் இல்லையென்பதால் சிலவரிகளை எழுதவேண்டியுள்ளது.

முன்பென்றால் பல்லைக்காட்டிவிட்டு போய்விடலாம்... :D  :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தொடருங்கள் இசை அண்ணா!!  விறுவிறுப்பாக செல்வதால் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.......

நன்றி தமிழினி. :D

ஏமற்றப்படாது இப்படி?? :lol:

அதென்ன நாலு வரியில் ஒரு தொடர்....??

கண்ணா நீயுமா? எனத்தான் கேட்கத்தோன்றுகிறது.... :D

(பச்சை கைவசம் இல்லையென்பதால் சிலவரிகளை எழுதவேண்டியுள்ளது.

முன்பென்றால் பல்லைக்காட்டிவிட்டு போய்விடலாம்... :D  :D )

இதுக்கு அவசரப்படுத்தின தமிழினிதான் காரணம்.. :icon_idea::D

நன்றி தமிழினி. :D

இதுக்கு அவசரப்படுத்தின தமிழினிதான் காரணம்.. :icon_idea::D

 

ஆஆஆஆ :)

விசுகு அண்ணா ஒருக்கா வடிவா எண்ணிப்பாருங்கோ எத்தனை வரி இருக்கு என்று :)

அதற்கு இஞ்சினியரும் ஆமாப்போடுறார் :icon_idea:

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரி எழுதிவிட்டு பந்தியைப் பெரிதாகக் காட்ட இரண்டு வரி இடைவெளி விட்டிருக்கு. நாங்கள் கண்டுபிடிக்க மாட்டோமா ??இசை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரம் கழிந்திருந்தது. படிப்படியாக பொய்யறியும் சோதனைகள் சிலரில் மேற்கொள்ளப்பட்டன. முதலாவதாக அழைக்கப்பட்டான் மார்க்.

polygraph_test.gif

உடலில் வயர்களை இணைத்து பொய்யறியும் கருவியில் பொருத்தி விட்டார்கள். பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் கருவியில் பதிவாகும். இந்தத் தகவலைக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் மீது மேலதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். பலர் உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவார்கள்.

“உங்களுடைய முழுப்பெயர் என்ன?” துறை சார் நிபுணர் ஒருவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

“மார்க் பிராட்லி கோல்பேர்க்”

“எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு கார்லாவைத் தெரியும்?”

“ஆறு ஆண்டுகளாக.”

“கொலை நடந்த இடத்தில் அந்த நேரத்தில் நீங்கள் இருந்தீர்களா?”

“இ.. இல்லை.” மார்க்கின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கருவி பதிந்துகொண்டது. துறைசார் நிபுணரும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. வேறும் சில கேள்விகளுக்குப் பிறகு மார்க் அனுப்பி வைக்கப்பட்டான்.

அவனையடுத்து, கார்லாவின் எதிர்வீட்டுக்காரன் ஜேம்சும், அவனது நண்பன் ஜானும் அழைக்கப்பட்டார்கள். இருவரும் கார்லாவை தொந்தரவும் செய்ததாகவும், வசப்படுத்த முயன்றதாகவும் சிலர் துப்புக் கொடுத்திருந்தார்கள். அவர்களிடமும் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. கருவி எந்த உடல் மாற்றத்தினையும் பதிவு செய்யவில்லை.

இறுதியாக கார்லாவின் நண்பி ஒருத்தியின் கணவன் விசாரிக்கப்பட்டான். சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. அவனும் பாஸ்.

சோதனைகள் முடிந்தன. யாரையும் குற்றம் சாட்டும் அளவுக்கு ஆதாரங்கள் போதவில்லை. எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

நாட்கள் வாரங்கள் ஆகின.. வாரங்கள் மாதங்கள் ஆகின. விசாரணை முன்னேறிய பாடாகத் தெரியவில்லை.

*******************************************************************************

இப்போது கொலை நடந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. வேறு வழியில்லாமல் மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடுவது என்று முடிவு செய்தார்கள் துப்பறிவாளர்கள். எஃப்.பி.ஐயில் நடத்தை மனோவியல் நிபுணர் ஹோமர் தொடர்பு கொள்ளப்பட்டார். அவருக்கு குற்றம் தொடர்பான தடய விவரங்கள், புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சில வாரங்கள் கழித்து, ஐவனை நேரில் சந்தித்து தனது அனுமானங்களை வெளியிட்டார் ஹோமர்.

"வணக்கம் ஐவன். இக்குற்றம் தொடர்பான எனது கருத்துக்கள் இவை. குற்றவாளிகளில் இரண்டு வகையினர். ஒரு வகையினர் கைதேர்ந்தவர்கள். மற்ற வகையினர் சொதப்பல் வேலை செய்பவர்கள். இந்தக் குற்றவாளி இரண்டாவது வகை."

"சரி."

"இந்தக் குற்றவாளிக்கு இதுவே அநேகமாக முதல் கொலையாக இருக்கும். சமூகத்தில் பிரசித்திபெற்ற நபராக இருக்கமாட்டார். நேர்த்தியான உடை அலங்காரங்கள் இவரிடம் காணப்படாது."

"ஓ..!"

"இவரிடம் அநேகமாக ஃபொக்ஸ்வாகன் வாகனம் இருக்கும். சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் வர்ணம் அடித்திருப்பார். பொய்யறியும் சோதனையில் வெற்றிபெறக்கூடியவர்."

இதைக் கேட்ட ஐவனுக்கு நம்பிக்கை வரவில்லை. குற்றம் நடந்த இடத்தின் புகைப்படத்தைப் பார்த்து ஒருவரால் குற்றவாளியை கணக்குப்பண்ண முடியுமா என்று தோன்றியது.

“நன்றி உங்கள் நேரத்திற்கு ஹோமர். இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.”

ஃபொக்ஸ்வாகனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மேலதிக சந்தேக நபர்களையும் இனங்காண முடியவில்லை. மேலும் இரண்டு வருடங்கள் உருண்டோடின. விசாரணைகளில் எந்தவித முன்னேற்றங்களும் கிடைக்கவில்லை.

*******************************************************************************

1982 ஆம் ஆண்டில் இலனோய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நோர்மன் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் ஐவனும் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்பம் வளர்ந்து வந்த அக்காலகட்டத்தில் புகைப்படங்களை மேன்மைப்படுத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தவர் பேராசிரியர் நோர்மன். அவரது ஆராய்ச்சியின் விளைவாக, புகைப்படங்களில் உள்ள விவரங்களை தெளிவாக உருப்பெருக்கம் செய்து பார்க்கும் வசதி கிடைத்திருந்தது.

கருத்தரங்கின் முடிவில் பேராசிரியரைச் சந்தித்த ஐவன் நான்கு வருடங்களாக இழுபடும் கார்லா கொலைவழக்குப் பற்றி விவரித்தார்.

"நான் மகிழ்வுடன் உதவுகிறேன். படங்களை மட்டும் அனுப்பி வையுங்கள்." பேராசிரியர் மிகுந்த நம்பிக்கை தந்தார்.

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

வாறன் ராசா

இருக்கு ஆப்பு... :lol:

 

தொடருங்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பொறுத்த இடங்களில் விட்டுவிட்டுப் போகிறீர்களே. ஒரேயடியாய் எழுதி முடிச்சால் என்ன ????

  • கருத்துக்கள உறவுகள்

மனிசனை கொலைகாறனாக்க கூடாது :rolleyes: . மிச்சம் எப்ப வரும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,இன்டைக்கே கதையை எழுத் முடிச்சிடனும் சொல்லிப் போட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த அன்பர்களுக்கும், ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். உடல்நிலை சரியில்லாததால் இன்று எழுத முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

Spoiler
பின்னணியில் 'வாழ்வே மாயம்' என்கிற பாடல் ஒலிக்கட்டும். :(:D
  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்ல ஒரு பதிவே :lol: வயித்தெரிச்சல்


இரண்டு நாள் செண்டாலும் பரவாயில்லை ஒரேயடியா எழுதி முடிச்சிட்டுப் போட்டுவிடுங்கோ எங்களை டென்சன் ஆக்காமல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதம் கழித்து பேராசிரியர் நோர்மனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரைக் காண நேரில் சென்றார் ஐவன்.

"வணக்கம் ஐவன். நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை வைத்து எனது ஆரய்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது." கணினியை முடுக்கி விட்டார் பேராசிரியர்.

"கொலையுண்டவரின் கழுத்துப்பகுதியை இப்போது கவனியுங்கள். இந்த அடையாளங்கள் என்னவென்று தெரிகிறதா?"

"பற்களினால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள்போல உள்ளனவே." ஐவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இவ்வாறானதொரு முக்கியமான விடயத்தை பிரேதப் பரிசோதனையில் தவறவிட்டார்கள் என்று விசனமாக இருந்தது.

"ஆம். அத்தகைய வடுக்கள்தான். ஆனால் ஆழமான வடுக்களாக இல்லாததால் யாரும் கண்டுபிடிக்கவில்லை. படத்தை உருப்பெருக்கம் மற்றும் முப்பரிமாண மாற்றம் செய்தபின்பு தெளிவாகத் தெரிகின்றது."

"உண்மைதான்."

"இன்னொரு விடயத்தையும் உங்களுக்குக் காட்டப்போகிறேன். தலையில் உள்ள இந்தக் காயத்தின் வடிவத்தையும், ஆழத்தையும் கவனியுங்கள். அருகில் உள்ள இந்தச் சிறிய நாற்காலி மூலம் தாக்கப்பட்டுள்ளாள் என்பது தெரிகிறது."

ஐவனுக்கு விசாரணையில் முன்னேற்றம் தெரிவது போலிருந்தது. கொலைவழக்குகளில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எதுவென்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டருக்கான தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

"நன்றி பேராசிரியர் நோர்மன். இவை முக்கியமான தடயவியல் ஆதாரங்கள்." புதிய உற்சாகத்துடன் விடைபெற்றார் ஐவன்.

அவருடன் கூட வந்த எலியட்டுக்கு சில சிந்தனைகள் ஓடின.

"ஐவன், எங்களது விசாரணைகளில் யாரோ ஒருவன் தான் பல் வடுக்களைக் கண்டதாக உளறித்திரிந்த கதை ஒன்று வந்ததே.. ஞாபகத்தில் உள்ளதா?"

"ஆ.. ஞாபகத்துக்கு வருகிறது.. யாருமே பார்க்க முடியாமல் தடுப்பு போடப்பட்ட கொலை விவரங்கள் அவனுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? யார் அவன் என ஞாபகத்தில் உள்ளதா எலியட்?"

"இல்லை. ஆனால் விசாரணைக் கோப்புகளில் நிச்சயம் விவரங்கள் உண்டு."

"சரி. கார்லாவின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, மறு பிரேதப் பரிசோதனைக்கு ஆவன செய்ய வேண்டும். புகைப்பட உருப்பெருக்கத்தின் விளைவுகளை பௌதீகரிதியில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டிய தேவை ஒன்று உண்டு. அத்துடன் நம் சந்தேக நபர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் பற்களை முப்பரிமாணத்தில் பிரதியெடுத்து பேராசிரியர் நோர்மனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.”

"சரி."

மேலும் சில வாரங்கள் கழிந்தன.

காவல்துறையினர் அந்த வீட்டுக்கு வந்தார்கள். கார் தரிப்பிடத்தில் ஒரு பழைய ஃபொக்ஸ்வாகன் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. கதவைத் தட்டினார்கள். வெளியே வந்தவன் ஜான்.

"கார்லாவை கொலை செய்த குற்றத்திற்காக உங்களைக் கைது செய்கிறோம்." காவல் துறை அதிகாரி கைவிலங்கை மாட்டினார்.

"எனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை.", ஜானின் முகத்தில் அதிரிச்சி தெரிந்தது.

"எதுவானாலும் எங்களது அலுவலகத்தில் நீங்கள் சொல்லலாம். அல்லது உங்கள் வழக்கறிஞரை தொடர்பு கொள்ளலாம்.”

அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்ற விசாரணை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டான் ஜான். ஜானிடம் இருந்து எப்படியாவது ஒப்புதல் அறிக்கை ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்பது ஐவனின் நோக்கமாக இருந்தது. அதிக சான்றுகள் இல்லாத இந்த வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அது வசதியாக இருக்கும்.

"ஜான், குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா?"

"இல்லை. ஒப்புக்கொள்ளவில்லை. நான் குற்றம் செய்தேன் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் உங்களிடம் இல்லை."

"அவ்வளவு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது ஜான். உனது பல் அடையாளத்தை ஆராய்ந்தபோது அது அச்சு அசலாக கார்லாவின் கழுத்தில் இருந்த அடையாளத்தோடு பொருந்திப் போயிருந்தது."

ஜானுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

"ஓ.. அப்படியா.. எங்களுக்குள் கொஞ்சம் நெருக்கம் கூட. அவள் கொலையாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் சுய விருப்பின் அடிப்படையில் நெருக்கமாக இருந்தோம்."

"அப்படியும் இருக்கலாம்தான். ஆனால் அந்த வடுக்கள் ஆறவில்லையே ஜான். இறந்த உடலில்தான் வடுக்கள் ஆறாது. இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வடுவாக இருந்தால் அது குணமாக ஆரம்பித்திருக்கும்."

ஜான் பதில் எதுவும் சொல்லவில்லை. கொலைக்குற்றத்தை ஒத்துக்கொள்ளவும் இல்லை.

ஜான் மறுத்தபோதும், அவன்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 75 வருட சிறைத்தண்டனை கிடைத்தது. சில வருட தண்டனையின் பின் மனமாற்றம் கண்ட ஜான் ஒரு ஊடகவியலாளரிடம் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

கார்லாவை அவனுக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே தெரிந்துள்ளது. தனது நண்பனின் எதிர்வீட்டுக்கு அவள் குடிவந்ததும் அவளை அணுகுவது என்று முடிவெடுத்துவிட்டான். ஆனால் கார்லா சட்டை செய்யாத விடயம் இவனைப் பெரிதும் பாதித்திருந்தது.

ஜான் வேலைக்குச் சென்ற அந்த நாள், உள்ளே நுழைந்து தனது இச்சையைத் தெரிவித்தான். ஆனால் அதற்கு கார்லா மறுக்கவும் வல்லுறவு முயற்சியில் அவளைக் கொன்று போட்டுவிட்டான். பிறகு ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துவிட்டு வெளியேறிவிட்டான்.

(முடிந்தது.)

குறிப்பு: உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. உங்களின் எல்லோரின் பொறுமைக்கு நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்

வாசிக்க

திருந்த

பிடிபடாமல் இருக்க

முயல்கின்றோம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நாட்கள் வாரங்கள் ஆகின.. வாரங்கள் மாதங்கள் ஆகின. விசாரணை(கதை)முன்னேறிய பாடாகத் தெரியவில்லை:D
இப்படி நாங்கள் சொல்லி புலம்பும்படி நடந்திடுமோ என நினைத்திருந்தேன் நல்லகாலம் கதையை ஒரு கிழமைக்குள் முட்த்துவிட்டிர்கள் ....நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே நேரத்தில் முழுக்கதையையும் படித்து விட்டேன்.  முட்டாள் ஜான் ஒருக்காலும் கொலை செய்திருக்கவே கூடாது.பொலிஸில் சரணடைந்திருக்கலாம். ஒரு ஐஞ்சாறு வருடமும் , நன்நடத்தைச் சான்றிதலும் கிடைத்திருக்கும். மிஸ் பண்ணி மிஸ்ஸாயிட்டான் ஜான்...!!! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை இத்தனை விரைவில் எழுதி எமக்கு நின்மதியைத் தந்ததுக்கு :lol: ஆனாலும் பஞ்சியில் நீங்கள் பட் என்று முடித்துவிட்டீர்களோ ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்

வாசிக்க

திருந்த

பிடிபடாமல் இருக்க

முயல்கின்றோம்.. :icon_idea:

அது சரி.. இப்பிடியே எத்தனை நாள்தான் வாயாலயே வங்காளம் போவீங்கள்? :lol: கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் அண்ணா.. :D

இப்படி நாங்கள் சொல்லி புலம்பும்படி நடந்திடுமோ என நினைத்திருந்தேன் நல்லகாலம் கதையை ஒரு கிழமைக்குள் முட்த்துவிட்டிர்கள் ....நன்றிகள்

ஒரு கொலைக்கு ஒரு கிழமைதான்.. :D நன்றி புத்தன் அண்ணை..

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இப்பிடியே எத்தனை நாள்தான் வாயாலயே வங்காளம் போவீங்கள்? :lol: கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் அண்ணா.. :D

 

உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமாட்டோம் என்பதை  உறுதிப்படுத்துகின்றேன்

அவனவன் நொந்து போய்க்கிடக்கிறான்

இவருக்கு அல்வா கேட்குது... :icon_mrgreen:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.