Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுடப்பட்டு படுகொலை

Featured Replies

ரவிராஜ் எம்பி சுடப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக உறுதிப்படுதமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன

இத்தகவலை கஜேந்திரன் எம்பி உறுதிப்படுத்தி உள்ளார் நாரகன்பிட்டியில் வைத்து சுடப்பட்டதாக அவர் தெரிவித்தார்

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுடப்பட்டு படுகாயம்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மை.காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தற்போது மரணமடைந்துள்ளார்

அவரின் மெய்ப்பாதுகாப்பாளர் இறந்ததாகவும் ரவிராஜ் இன் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாம்

உயிர் நீத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

TNA MP Raviraj shot in Colombo

[TamilNet, Friday, 10 November 2006, 03:43 GMT]

Nadarajah Raviraj, Jaffna district Tamil National Alliance (TNA) parliamentarian was shot in Colombo around 8:00 a.m. Friday. The MP has been admitted to Colombo National Hospital serious condition.

The shooting has taken place near the MPs residence at Manningtown, Narahenpitiya in Colombo.

MP's bodyguard was also wounded.

According to Director National Hospital, Dr. Hector Weerasinghe, both are in critical condition and under observation at the Intensive Care Unit.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுடப்பட்டு உயிர் நீத்தார்
  • கருத்துக்கள உறவுகள்

ரவி ராஜ் எம்.பி இறந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

சமீபகாலமாக கொழும்பில் இருந்தபடி, தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்துவந்தவர்களில் ரவிராஜ் எம்பி மிக முக்கியமானவர். சிங்கள ஊடகங்களில் கூட, தனது சிங்களப் புலமை காரணமாக இனவாதிகளோடு சரி நிகராக இருந்து வாதாடி வந்திருக்கின்றார். விமல்வீரவன்சா இவரோடு பல தடவை விவாதங்களில் பதில் சொல்லமுடியாமல் தத்தளித்து, வெதுங்கிப் போன சம்பவங்கள் பல உண்டு.

இளம் வயதில் யாழ்மாநாகரசபை முதல்வராக இருந்து, பின் பாராளுமன்ற உறுப்பினராக இணைந்து தமிழ்மக்களுக்காக வாதாடிய சகோதனைக் கொலைக் காரக் கும்பல்கள் விடவில்லை.

கொழும்பில் தமிழ்மக்கள் கடத்தல், கொலைகளுக்காக மனோ கணேசனோடு சேர்;ந்து மாற்றாக அமைத்த மக்கள் பாதுகாப்பு சங்கத்தால் சிங்கள அரசு தன் கடத்தல் வேலைகளைக் குறைத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு எம்பியையோ கொல்கின்ற இலங்கையரசு, சாதாரண தமிழ்மக்களின் பாதுகாப்பில் எவ்வாறு அக்கறை காட்டும். வலிகள் என்னும் சிங்களக் காட்டுமிராண்டிகளுக்கு புரியவில்லை. அது தான் கொட்டமாடுகின்றனர்.

உண்மைக்குக் குரல் கொடுத்த ஒரு மனிதன். எதிர்பார்ததது ஒன்று. தனியே பாதுகாப்பில்லாமல் எங்கும் செல்லும் ஒரு தீரமுள்ள வழக்கரிஞர். பல சிங்கள மின் ஊடகங்களில் பேரினத்தின் அநியாயங்களை வெளிச்சமாக்கியவர். சிங்கள பேரினவாதத்துடன் வாக்கு வாதப் பட்டவர். இன்னும் எத்தனை உயிர்களை காவ கொடுக்கப் போகின்றோமோ?

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  • கருத்துக்கள உறவுகள்

Tamil member of Parliament killed in Sri Lankan capital

By KRISHAN FRANCIS

AP

COLOMBO, Sri Lanka (AP) - A prominent Tamil politician died in hospital after he was shot near his home in the Sri Lankan capital early Friday, a party member and a hospital official said. One of his guards was also killed.

Nadaraja Raviraj, of the Tamil National Alliance was shot as he left his house in Colombo, said K. Sivajilingam, a fellow member of Parliament.

Sivajilingam said that Raviraj also worked as a lawyer and was going to the court "...when some people came and fired at him."

Dr. Anil Jasinghe, a director at the National Hospital said Raviraj died after he was admitted to the hospital, while one of his guard's had died on arrival.

Raviraj was one of the 22 deputies from the alliance - a political party widely believed to be a proxy of the Tamil Tiger rebels - who had joined a demonstration outside the UNHCR office in Colombo on Thursday, urging the agency to help protect thousands of refugees after Sri Lankan military shelling had killed at least 23 Tamil civilians in the east on Wednesday.

The TNA said 41,000 Tamil civilians have been displaced in Batticaloa region.

http://news.aol.com/topnews/articles/_a/ta...109232909990013

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan MP killed in Colombo

A pro-Tamil Tiger politician, Nadarajah Raviraj, has died in hospital after being shot by unidentified gunmen in the Sri Lankan capital, Colombo.

He was shot as he left his house in Colombo for work, a fellow member of the parliament, K Sivajilingam, told the Associated Press news agency.

One of his guards was also killed in Friday morning's attack.

Mr Raviraj represented the Tamil National Alliance (TNA) party in parliament.

The TNA is linked to the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE).

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6134848.stm

என் கருத்து துயர்பகிர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் இத்தனை பாதுகாப்புக்கு மத்தியில் அதுவும் பொரளையில் இந்த அட்டூழியம் நடந்திருக்கின்றது. இதற்கு பேரினவாத அரசு என்ன சொல்லப் போகின்றது?

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆம் இணைப்பு) த.தே.கூ. நாடளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை

[வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 09:53 ஈழம்] [ந.ரகுராம்]

யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (வயது 44) நடராஜா ரவிராஜ் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டில் இருந்த போது ரவிராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார் என்று மருத்துவமனை அதிகாரி ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவ இடத்தில் துப்பாக்கி காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ். தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார்.

யாழ். பிரதி மேயராக 1997 ஆம் ஆண்டும் மேயராக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையும் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இருமுறையும் வெற்றி பெற்றார்.

ஐ.நா. அலுவலகம் முன்பாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் ரவிராஜ்.

"தமிழ் மக்களின் ஜனநாயகக் குரல் இன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடக்கப்பட்டுள்ளது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=29678

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை அணிசேரா நாடுகளின் மாநாடு கீயுபாவில் நடந்தபோது, அதே காலப்பகுதியில் இலங்கையில் தமிழர் கடத்தப்படுவது தொடர்பான ஆர்ப்பாட்டப் போரணி நடைபெற ஏற்பாடாகி இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் தனது, விஜயத்தின் போது அழுத்தங்களைச்டி சந்திக்க வேண்டும் உஎன உணர்ந்த மகிந்த ராஜபக்சா, தனது சகோதரர் மூலம் " எனிமேல் அவ்வாறு நடக்க மாட்டாது என்ற உறுதி மொழி ஒன்றைக் கொடுத்து, ஏற்பாட்டாளர்கள் அதை நிறுத்தினார். ஆனால அத் திட்டத்துக்கு ஆதரவு அளித்த, ரவிராஜ் இவ்வாறு நிறுத்துவது மடமை வேலை என்றும், அந்த ஆர்ப்பாட்ட்தi;த தொடர வேண்டும் என்று ஆக்ரோசமாக வானொலிப் பேட்டிகளில் சொல்லி வந்தார். " ஏன் என்றால் சிங்கள அரசு கொடுக்கும் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும் என்பது அவர் அறிந்திந்தார்.

உண்மையில் ரவிராஜ் நினைத்தது பொல, மகிந்த திரும்பி வந்த பின், படுகொலைகளும் ஆட்கடத்தலும் திரும்பவும் ஆரம்பித்து விட்டன. சிங்கள் மொழிப் புலமையால், சிங்கள மக்களுக்கும் உண்மைகளை வெளிக்காட்டி வந்ததால் பொறுக்க முடியாத மகிந்த அரசு அவரைக் கொன்று விட்டது.

சொல்லப் போனால், தமிழ் எம்பிக்களில் சிங்கள மொழியில் ஆக்ரோசமாகக் கதைக்கக் கூடியவர்களில் ஒருவர் ரவிராஜ், சிவாஜிலிங்கம். ஆனால் இக் காலப்பகுதியில் சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராக அதிகளவு குரல் கொடுத்தவர் ரவிராஜ்

தகவல்: கேதீஸ், கொழும்பு

  • தொடங்கியவர்

நான் இவரை ஒரு முறை பார்த்திருகிறேன் அதுவும் ஒரு காராஞில் சின்னக் குழந்தை போல் காராஜ் முதலாலியின் மினி காரினை தன் காரினை அவரிடம் கொடுத்திட்டு அசையுடனும் மகிழ்ச்சியுடனும் அதை அவர் ஓட்டி செல்கையில் இப்படியும் ஒரு அரசியல் வாதிக்கு ஆசை இருக்குமா என வியந்தேன்.இவர் சராசரி அரசியல் வாதியல்ல மாமனிதர் எம் நெஞ்சத்தில் குடியிருக்க வேண்டிய உதமர்.தமிழீழ சிற்பிகளில் ஒருவர்.வெறும் கண்ணீர் அஞ்சலிய மட்டும் செலுத்தி அவரின் சேவைகளை கொச்சைப்படுத்த நான்விரும்பவில்லை.என்ன தமிழீழம் மலருவதை பார்க்க அவருக்கு கொடுத்துவைக்கவில்லை

தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை

அரசும் அதனுடன் இணைந்து வால் பிடிக்கும் ஒட்டு குழுவினரும்

நிச்சயம் கொலை செய்வார்கள் எனவும்..அவை இனி

வரும் நாட்களில் அரங்கேறும் என்று யாழில் .....ருந்தேன்...

இவர்களை மட்டு மல்ல சில தலை சிறந்த பத்திரிகை ஊடக

சார் திறனாளிகளையும் கொல்வதற்கு சதி

என முன்னரே கூறியிருந்தேன்.

அதை வெளிப்படையாக யாழில் சொல்லியிருந்தேன்

ஏனெனில் தற்போது சிங்கள இனவாதம் இவ்வாறான அறிவாளிகளை

அழித்தொழிக்கும்...நிலையிலேயே உள்ளது....

நன்றி

வன்னி மைந்தன்

டக்கிளசின் இன்னுமொரு படு கொலை, களத்திலும் அவரின் சீடன் சமாதனத்திற்கு இது நல்ல செய்தியாக இருக்கும்,கூட்டமைப்பு எம்பிக்கள் ராஜினாமச் செய்வதற்காக இங்கே வாதாடினார் இப்போது கொலை செய்து ஜன நாயகத்தின் குரல்களை இல்லாது ஒழிக்கிறார்கள்.இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் இப்போது வெட்ட வெளிச்சம், சமாதானம் என்னும் கூலியினதும் அதன் கூட்டத்திற்கும் விரைவில் முடிவு வரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் இன்னுமொரு குரல்வளை

நெரிக்கப்பட்டுவிட்டது

ரவிராஜ் அவர்கள் வீட்டிலிருந்து தமது தொழிலுக்குச் செல்லும் போது பொரளைக்கருகில் வீதியில் வைத்து அவரது வண்டியினுள்ளே சுடப்பட்டுள்ளார். கொலையாளி சம்பவ இடத்தில் வீதியில் விட்டுச் சென்ற தோட்டாக்களுடனான ஒரு பயணப் பையையும் ஊந்துருளி தலைகவசம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமுள்ள நெஞ்சுறுதியுள்ள ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம்.

ஈழத்திலிருந்து

ஜானா

நன்றி

வன்னி மைந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.