Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர

Featured Replies

சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர FEB 27, 2015by கார்வண்ணன்in செய்திகள்

Mangala-Samaraweera-Wang-Yi--300x200.jpgசீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே, மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.

“சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், மீளாய்வு செய்யப்படும் சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக  கலந்துரையாடவில்லை.

சீனாவின் திட்டங்கள் குறித்து மட்டும் சிறிலங்கா அரசாங்கம் மீளாய்வு செய்யவில்லை.

சீனாவின் முதலீடுகள் தொடர்பாக, நாம் எந்த இறுதி முடிவை எடுப்பதற்கும் முன்னதாக, சீனா அரசாங்கத்துடன் அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம், கலந்துரையாடுவோம்.

Mangala-Samaraweera-Wang-Yi-.jpg

சீனாவின் முதலீடுகளை சிறிலங்கா எப்போதும் வரவேற்கும். இப்போதும் கூட, இந்த முதலீடுகள் பாதுகாப்பான இடத்தில் தான் உள்ளன.

சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மீள நிலைநிறுத்தப்பட்ட, சூழலில், எல்லா முதலீட்டாளர்களுக்கும் உகந்த சூழலை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

எதிர்காலத்தில் எல்லாத் திட்டங்களும், முழுமையாக திறமையின் அடிப்படையிலேயே கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/27/news/4001

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆசியா கண்டத்தில் சீனாவை மிஞ்சி எதுவும் நடக்காது.
இந்தியா சும்மா படங்களிலை மட்டும் ஹீரோயிசம் காட்டத்தான் சரி..

 ஆசியாவிலா,, காமெடி பண்ணாதீர்கள், விஎட்நாம் ஜப்பான் போன்ற நாடுகளைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா

 அந்தமான் தீவு போன்ற அதி சிறந்த இடங்கள் இந்தியாவின் கை வசம் இருக்கும் வரை, சீனாவால்  இங்கு ஆதிக்கம் காட்ட முடியாது

மடகாஸ்காரிலும் இந்தியாவிற்கு கப்பல் படை தளம் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்

தம்பியருக்கு! இப்ப sony panasonic samsung எல்லாம் made in china எண்டு அடிச்சு வாறதெல்லாம் தெரியாது போலை கிடக்கு... :icon_mrgreen:
 
அவ்வளவுத்துக்கு அவங்கள் முன்னேறீட்டங்கள்....
பெருஞ்சீரகம்,நற்சீரகத்தோடைதான் இந்தியா நிக்கிது...... :D
உங்கடை வீரத்தை ஈழத்தமிழரோடை காட்டினது போதும்...வெளியிலை வாங்கோ 
 
மடகஸ்காரிலை இந்தியாவுக்கு படை இருந்து என்ன பலன்?? சீனாக்காரன் ஆபிரிக்காவரைக்கும் போய் மீன்பிடிக்கிறான்....இந்தியன் தன்ரை கடலுக்கை நிண்டே சிங்களவனுட்டை சூடுவாங்கி சாகிறான்.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் நவீன அடிமை இலங்கை  பேரின வாத சிங்கள அரசுகள் தப்ப முடியாது கால அவகாசம் வேணும் என காலில் விழுந்து அழ போயிருக்கிறார் ...
 
இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே, மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், மீளாய்வு செய்யப்படும் சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது."போனவுடனே விழுந்த அடி பலமாக்கும் . :icon_idea: 
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள்தான் மாறியிருக்கினம்.. நரி விளையாட்டு மாறவில்லை.. சொன்னால் கேட்டால்தானே.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவின் நவீன அடிமை இலங்கை  பேரின வாத சிங்கள அரசுகள் தப்ப முடியாது கால அவகாசம் வேணும் என காலில் விழுந்து அழ போயிருக்கிறார் ...
 
இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே, மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், மீளாய்வு செய்யப்படும் சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது."போனவுடனே விழுந்த அடி பலமாக்கும் . :icon_idea: 

“சீனாவின் நவீன அடிமை இலங்கை  பேரின வாத சிங்கள அரசுகள் தப்ப முடியாது கால அவகாசம் வேணும் என காலில் விழுந்து அழ போயிருக்கிறார் ...”

கால அவகாசம் கிடைத்தபின், கிடைக்க வேண்டுமென  அழ போயிருக்கிறார்.

Edited by sabesan36

தம்பியருக்கு! இப்ப sony panasonic samsung எல்லாம் made in china எண்டு அடிச்சு வாறதெல்லாம் தெரியாது போலை கிடக்கு... :icon_mrgreen:

அவ்வளவுத்துக்கு அவங்கள் முன்னேறீட்டங்கள்....

பெருஞ்சீரகம்,நற்சீரகத்தோடைதான் இந்தியா நிக்கிது...... :D

இது கூடவா தெரியாமலிருக்கும்.. தங்களுக்கு அமெரிக்க இந்திய உறவு பற்றி எந்த அளவு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை, வெறும் சாம்சுங் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் சீனா பெரிய அப்பாடாக்கரா இல்லை அதிக அளவு Foreign reserve  வைத்திருந்தால் பெரிய ஆளா  

உங்கடை வீரத்தை ஈழத்தமிழரோடை காட்டினது போதும்...வெளியிலை வாங்கோ

 இல்லை என்று சொல்லவில்லை, கடந்த காலங்களில் நடந்தது , இப்போதைய அரசாவது இதை தீர்க்க முயற்சி எடுக்குமா என்று பாப்போம்

மடகஸ்காரிலை இந்தியாவுக்கு படை இருந்து என்ன பலன்?? சீனாக்காரன் ஆபிரிக்காவரைக்கும் போய் மீன்பிடிக்கிறான்....

 அங்கிருந்து மொத்த கப்பல் போக்குவரத்தையும் கண்காணிப்பது தான், ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கை அவ்வளவு தான்,

சீனாக்காரனால் விஎட்நாம் கடலில் கூட நுழைய முடியாது, ஆப்ப்ரிக்காவிலா..? ஆப்ரிக்க நாடுகளில் இந்தியா பிரெஞ்சு சீனா ஆகியவையின் பலம் சரி சமமே

இந்தியன் தன்ரை கடலுக்கை நிண்டே சிங்களவனுட்டை சூடுவாங்கி சாகிறான்.. :lol:

 உங்களுக்கு தெரிந்திருக்கும் அதிலுள்ள சிக்கல்கள்

“சீனாவின் நவீன அடிமை இலங்கை  பேரின வாத சிங்கள அரசுகள் தப்ப முடியாது கால அவகாசம் வேணும் என காலில் விழுந்து அழ போயிருக்கிறார் ...”

கால அவகாசம் கிடைத்தபின், கிடைக்க வேண்டுமென  அழ போயிருக்கிறார்.

 கொஞ்சம் கலாட்டா பண்ணலாமே

கடந்த இலங்கை அரசோடு சீன அரசு செய்த ஒப்பந்தத்தின் படி இலங்கை 108 ஹெக்டேர் நிலத்தை சீனாவிற்கு வழங்கும் இது சுமார் $ 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம். இதில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்தவோ அல்லது படைகளை குவிக்கவோ முடியும். பதிலாக சீனா இலங்கைக்கு புது நகரங்களை உருவாக்கித் தரும்.

ஆனால் இதை சீனா இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் சாதியக் கூறுகளே அதிகம். எனவே இந்தியாவின் உறவு மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதை மறு பரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு கூறியுள்ளது .

Startfor என்னும் சர்வதேசே பாதுகாப்பு ஆராயிச்சி குழுமம் reuters செய்தி நிறுவனத்தின் செய்தியை மையமாகக் கொண்டு இதை வெளியிட்டுள்ளது...

இது கூடவா தெரியாமலிருக்கும்.. தங்களுக்கு அமெரிக்க இந்திய உறவு பற்றி எந்த அளவு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை, வெறும் சாம்சுங் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் சீனா பெரிய அப்பாடாக்கரா இல்லை அதிக அளவு Foreign reserve  வைத்திருந்தால் பெரிய ஆளா  

 இல்லை என்று சொல்லவில்லை, கடந்த காலங்களில் நடந்தது , இப்போதைய அரசாவது இதை தீர்க்க முயற்சி எடுக்குமா என்று பாப்போம்

 அங்கிருந்து மொத்த கப்பல் போக்குவரத்தையும் கண்காணிப்பது தான், ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கை அவ்வளவு தான்,

சீனாக்காரனால் விஎட்நாம் கடலில் கூட நுழைய முடியாது, ஆப்ப்ரிக்காவிலா..? ஆப்ரிக்க நாடுகளில் இந்தியா பிரெஞ்சு சீனா ஆகியவையின் பலம் சரி சமமே

 உங்களுக்கு தெரிந்திருக்கும் அதிலுள்ள சிக்கல்கள்

தொடர்ந்து எழுதுங்கள் .

எமது இணைய தளங்களின் தலையங்கம் தான் பெரும் கொடுமை .தலையங்கத்தை மட்டும் பார்த்து கருத்து எழுத இங்கு பலர் .இப்படியே இருப்போம் . :lol:

"சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்."

சீனாவின் திட்டங்கள் மக்காள் . :icon_mrgreen: சீனாவின் திட்டங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

“சீனாவின் நவீன அடிமை இலங்கை  பேரின வாத சிங்கள அரசுகள் தப்ப முடியாது கால அவகாசம் வேணும் என காலில் விழுந்து அழ போயிருக்கிறார் ...”

கால அவகாசம் கிடைத்தபின், கிடைக்க வேண்டுமென  அழ போயிருக்கிறார்.

நான் சொல்ல வருவது கடனுக்கும்,பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் சைனவால் லவட்டபட்ட   இலங்கையின் பெறுமதி மிக்க இடங்களின் முடிவுகளுக்கும்  பெரு நிலையான முடிவுக்குமாஆன கால அவகாசம் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கூடவா தெரியாமலிருக்கும்.. தங்களுக்கு அமெரிக்க இந்திய உறவு பற்றி எந்த அளவு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை, வெறும் சாம்சுங் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் சீனா பெரிய அப்பாடாக்கரா இல்லை அதிக அளவு Foreign reserve  வைத்திருந்தால் பெரிய ஆளா  

நீண்டகாலமாக அணுகுண்டு பரிசோதனையை செய்ய முடியாமலிருந்த இந்திய ஆய்வாளருக்கு பச்சைக்கொடி காட்டி பரிசோதிக்க செய்தவர் வாஜ்பாய்...அதுவும் பதவிக்கு வந்தவுடன்....அப்போது அமெரிக்க ஜெனாதிபதி கதிரையில் இருந்தவர் மிஸ்டர் கிளின்ரன்..
 
அவர் அப்போது சொன்னவசனம் வாஜ்பாயின் தலையில் கல்லை தூக்கி போடுங்கள் என்று... :D...
அவ்வளவுத்துக்கு ஒரு பரஸ்பர ஒற்றுமை... :icon_mrgreen:
 
மோடி....இப்போதைய பிரதமர்....இவர் முந்தி அமெரிக்கா போறதுக்கு விசா குடுக்காமல் அலைக்கழிச்சவங்கள்....இப்ப அவருக்கு செங்கம்பள வரவேற்பு.... :lol:
 
இதுதான் உங்களுக்கு சொல்லக்கூடிய அமெரிக்கன் இண்டியன் பினாத்தல்கள்....
அமெரிக்கா நல்ல மட்டத்திலைதான் இந்தியாவை எப்பவும் வைச்சிருக்கும்... :icon_idea:
 
மோடியின்ரை வெள்ளைமாளிகை கனவிலை எடுத்த படம்...
 
Narendra-Modi-second-from-left-at-the-ga
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்ல வருவது கடனுக்கும்,பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் சைனவால் லவட்டபட்ட   இலங்கையின் பெறுமதி மிக்க இடங்களின் முடிவுகளுக்கும்  பெரு நிலையான முடிவுக்குமாஆன கால அவகாசம் . 

பெருமாள்,

அமெரிக்கா சொற்படி இலங்கை அரசு ஆடும் என்ற நம்பிக்கை வாஷிங்டனுக்கு வந்தால், இதெல்லாம் சுண்டங்காய் கடன். IMF எதற்கு இருக்கு?

“இலங்கையின் பெறுமதி மிக்க இடங்கள்... ”

திருகோணமலை எண்ணை டாங்குகளை பிரிட்டன் தமக்கு சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்க, இடையே அமெரிக்கா புகுந்து, HARCO என்ற டம்மி நிறுவனத்தை வைத்து ஒப்பந்தம் செய்த கதை தெரியாதா? ஜே.ஆர். காலத்தில் நடந்தது அது. அத்துலத் முதலிதான் இடையே நின்ற டீலர். ஜே.ஆரின் கடிதத்துடன் பெல்ஜியத்திலும், லக்சம்பேர்க்கிலும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேசிய ஆள். 

அமெரிக்காவுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு.

 கொஞ்சம் கலாட்டா பண்ணலாமே

அதைத்தான் செய்கிறார்கள் என்பதே எனது ஊகம்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

sabesan36.

உங்களிடம் ஒரு கேள்வி உலக வங்கியிடம் கடன் வாங்கி முன்னுக்கு வந்த 3வது உலக நாடுகள் அல்ல நாடு எத்தனை ?  அல்லது உலக வங்கியால் உதவி செய்த எந்த ஒரு திட்டம் நீண்ட கால தோற்றத்தில் வெற்றி பெற்றுள்ளது  என  கூற முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மாறிவிட்டது இன்னமும் திருகோணமலை எண்ணை குதத்தை தாண்டவில்லையாக்கும் நீக்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குதம் முக்கியமல்லவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் மாறிவிட்டது இன்னமும் திருகோணமலை எண்ணை குதத்தை தாண்டவில்லையாக்கும் நீக்கள்  :icon_idea:

அது இனி தேவையில்லை. பழைய கதையை சொன்னேன்.

Oroleum (Pvt) Ltd

Oil tanking

Tradinfant இந்த நிறுவனங்களின் பெயர்களை 80-களில் கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sabesan36.

உங்களிடம் ஒரு கேள்வி உலக வங்கியிடம் கடன் வாங்கி முன்னுக்கு வந்த 3வது உலக நாடுகள் அல்ல நாடு எத்தனை ?  அல்லது உலக வங்கியால் உதவி செய்த எந்த ஒரு திட்டம் நீண்ட கால தோற்றத்தில் வெற்றி பெற்றுள்ளது  என  கூற முடியுமா ?

பெருமாள்,

முன்னுக்கு வந்த நாடு எனக்கு தெரிந்து ஒன்றுமில்லை. பட்ஜெட் பற்றாக்குறையை போக்க கடன் உதவும். அவ்வளவுதான். கடனுக்கு நிபந்தனைகள் உண்டு. அது, நாட்டின் செல்வாக்கை பொறுத்தோ, ரெக்கமென்ட் செய்யும் நாட்டின் பலத்தை பொறுத்தோ இருக்கும். இலங்கைக்கு கொடுக்கப்படும் கடனில் பெரும்பகுதி, சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க பயன்பட வேண்டும் என்ற நிபந்தனை இருக்க சான்ஸ் உண்டு.

குதம் முக்கியமல்லவா

இப்போது அமெரிக்காவுக்கு தேவையில்லை. வேறு சாய்ஸ்கள் இருக்கு. VOA டவர் இலங்கையில் அமைக்கவும் தேவையில்லை. தொழில்நுட்பம் மாறிவிட்டது. சாட்டலைட்.

முதலில் நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் ?

போட்டாச்சே..

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

முன்னுக்கு வந்த நாடு எனக்கு தெரிந்து ஒன்றுமில்லை. பட்ஜெட் பற்றாக்குறையை போக்க கடன் உதவும். அவ்வளவுதான். கடனுக்கு நிபந்தனைகள் உண்டு. அது, நாட்டின் செல்வாக்கை பொறுத்தோ, ரெக்கமென்ட் செய்யும் நாட்டின் பலத்தை பொறுத்தோ இருக்கும். இலங்கைக்கு கொடுக்கப்படும் கடனில் பெரும்பகுதி, சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க பயன்பட வேண்டும் என்ற நிபந்தனை இருக்க சான்ஸ் உண்டு.

ஐயோ கடவுளே சபேசன் 36 அவைகள் வெகு முக்கியமானவை அதை விளங்கியபின் தொடர்வது நல்லது விருப்பமென்டால் முகவரியை தனி மடலில் போடவும் ஆதாரமான புத்தகங்கள்களை அனுப்புகின்றேன் அதற்குபின் கருத்தாடல் செய்வது இருவருக்கும் நலம் அதுவரை அமைதியாய் இருப்பது  நல்லது உங்களையும் நான்.....................வணக்கம் . 

Edited by பெருமாள்

நன்றி. அனுப்பியுள்ளேன்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

முன்னுக்கு வந்த நாடு எனக்கு தெரிந்து ஒன்றுமில்லை. பட்ஜெட் பற்றாக்குறையை போக்க கடன் உதவும். அவ்வளவுதான். கடனுக்கு நிபந்தனைகள் உண்டு. அது, நாட்டின் செல்வாக்கை பொறுத்தோ, ரெக்கமென்ட் செய்யும் நாட்டின் பலத்தை பொறுத்தோ இருக்கும். இலங்கைக்கு கொடுக்கப்படும் கடனில் பெரும்பகுதி, சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க பயன்பட வேண்டும் என்ற நிபந்தனை இருக்க சான்ஸ் உண்டு.

இப்போது அமெரிக்காவுக்கு தேவையில்லை. வேறு சாய்ஸ்கள் இருக்கு. VOA டவர் இலங்கையில் அமைக்கவும் தேவையில்லை. தொழில்நுட்பம் மாறிவிட்டது. சாட்டலைட்.

போட்டாச்சே..

எது பாலர் வகுப்பு கூட்டல் கழித்தல்களில்லா ?

நீண்டகாலமாக அணுகுண்டு பரிசோதனையை செய்ய முடியாமலிருந்த இந்திய ஆய்வாளருக்கு பச்சைக்கொடி காட்டி பரிசோதிக்க செய்தவர் வாஜ்பாய்...அதுவும் பதவிக்கு வந்தவுடன்....அப்போது அமெரிக்க ஜெனாதிபதி கதிரையில் இருந்தவர் மிஸ்டர் கிளின்ரன்..
 
அவர் அப்போது சொன்னவசனம் வாஜ்பாயின் தலையில் கல்லை தூக்கி போடுங்கள் என்று... :D...
அவ்வளவுத்துக்கு ஒரு பரஸ்பர ஒற்றுமை... :icon_mrgreen:
 
மோடி....இப்போதைய பிரதமர்....இவர் முந்தி அமெரிக்கா போறதுக்கு விசா குடுக்காமல் அலைக்கழிச்சவங்கள்....இப்ப அவருக்கு செங்கம்பள வரவேற்பு.... :lol:
 
இதுதான் உங்களுக்கு சொல்லக்கூடிய அமெரிக்கன் இண்டியன் பினாத்தல்கள்....
அமெரிக்கா நல்ல மட்டத்திலைதான் இந்தியாவை எப்பவும் வைச்சிருக்கும்... :icon_idea:
 
மோடியின்ரை வெள்ளைமாளிகை கனவிலை எடுத்த படம்...
 
Narendra-Modi-second-from-left-at-the-ga

 உண்மைதான், அன்று அமெரிக்காவின் கண்ணில் மண்ணில் தூவித் தான் அதை செய்தோம்

 ஆனால் இன்று நிலைமை வேறு, ராணுவ ஒப்பந்தங்கள் முதல் பரஸ்பர பாதுகாப்பு வரை, அமெரிக்க வீரர்களை இந்தியாவில் நிலை கொள்ளும் திட்டங்கள் கூட பரிசீலனையில் உள்ளது. சமீபத்திய DTTI  ஒப்பந்தம் மற்றும் civil அணு ஒப்பந்தம் போன்றவைகள் இதற்கு சாட்சியம் தானே

 அமெரிக்கா இந்தியாவைப் புரிந்து கொள்ள மிக நீண்ட காலம் பிடித்துக் கொண்டது, அதற்கு தெரிந்து விட்டது. இந்தியாவுடன் ஒரு மிக சிறந்தவுறவே சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மிக சிறந்த வழி என்று

  • கருத்துக்கள உறவுகள்

சீனா கழட்டிவிடப் படவேண்டும்.. அப்போதுதான் ஈழம் பிறக்கும்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.