Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்.குடா நாட்டில் தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி.

யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களின் பசி பட்டினியை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி படம் எடுக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கைச் சினிமாப் படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்

இத்தகைய ஒரு மோசடியான செயல் நேற்றுக்காலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது.

நாளாந்தம் படைத்தரப்பினர் உணவுப் பொருட்கள் வழங்குகின்றார்களா எனப் பார்த்து வாங்குவதற்காக பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு சென்று காத்திருப்பது வழமையாகும் இந்த வகையில் நேற்றுக்காலையில் சென்ற மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும் மோசடிக்கும் படைத் தலைமையும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த திரைப்படப் படப்பிடிப்பாளர்களும் உள்ளாக்கியுள்ளார்கள்

காலையில் பொருட்கள் பெறச்சென்றவர்களின் பார்வைக்கு தெரியக் கூடியதாக குழந்தைகளுக்கான பால் மாக்கள் பிஸ்கட்வகைகள் என பல பொருட்களையும் காட்சிப்படுத்தி வைத்திருந்துள்ளார்கள்

இத்துடன் சென்றவர்களில் குழந்தைகளுடன் சென்றவர்கள் வயோதிபர்கள் என முதன்மைப்படுத்தி அவர்களை அழைத்து உயர் இராணுவ சிருடையில் நின்றவரினாலும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருதை தந்திருந்த தென்னிலங்கை பெண் நடிகைகளினாலும் உணவுப் பொருட்களான அரிசி சீனி மா பருப்பு பால் மா ரின் மின் நுளம்புத்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொதிகளை கையளித்ததுடன் அவர்களை விட்டுக்கு எடுத்துச் செல்லும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களின் இத்தகைய மோசடியை உணராத பொது மக்கள் மகிழ்வுடன் பொருட்களைக் கொண்டு செல்லும் காட்சியையும் படமெடுத்தபின்னர் சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் நின்ற படையினர் அவர்கள் கொண்டு சென்ற பொருட்களை பறித்து வைத்துக் கொண்டு நாளை வரும்படி அனுப்பியுள்ளார்கள்

யாழ் குடாநாட்டு மக்களின் இந்த அவலத்தை தமது தொழிலுக்கு பயன்படுத்தும் தென்னிலங்கையாளர்கள் மனநிலை எத்தகையது எனப் பலரும் விசனம் தெரிவிக்கின்றன.

பதிவு

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மிகவும் மோசமான ஏமாற்று வித்தையிது.. வேதனையான விடயம்.. கண்டிக்கவேண்டியது..

சிங்களவனின் ஏமாத்து வித்தைகளுகில் இதுவும் ஒன்று அதுவும் சிங்கள வே.. களால் எம்மாற்றப்பட்டதை நினைக்கையிலிரத்தம் கொதிக்குது

மிகவும் வேதனைக்குரிய செய்தி

தமிழரின் பசி பட்டினியை காசாக்கப் பாhக்கும் பரதேசிகள். மிலேச்சத்தனம் மிக்க மிருகங்கள். ஆடும் ஆட்டம் விரைவில் முடிவிற்கு வரும்.

ஈழத்திலிருந்து

ஜானா :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறான சேட்டைகள் எமது மக்கள் ஒவ்வொருவரதும் நெஞ்சுகளையும் உலுப்பும் என்று சிங்களவனுக்கு தெரியும்.. அதுதான் இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றார்கள்..

இந்த செய்தியை கேட்கும்போது சிங்களவன் குண்டுபோட்டு அழிப்பது மேல் என்று தோன்றுகின்றது.. எமது மக்கள் குண்டுபோட்டி அழிந்தனர் என்ற செய்தியை விட இது ஏதோ மிக மிக அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அழிக்கிறது..

இந்த செய்தியை கேட்கும்போது சிங்களவன் குண்டுபோட்டு அழிப்பது மேல் என்று தோன்றுகின்றது.. எமது மக்கள் குண்டுபோட்டி அழிந்தனர் என்ற செய்தியை விட இது ஏதோ மிக மிக அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அழிக்கிறது..

அப்ப உங்களுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அளிக்காமல் மக்கள் செத்துக் தொலைவது மேல்.....????......!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சிங்கள கோதாரி விழுவார் அமெரிக்கன் பாணியில் சாப்பாடு தண்ணி குடுத்து போட்டோ வீடியோ எடுத்து உலகத்துக்கு பிலிம் காட்டி ஏமாத்தபோறாங்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப உங்களுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அளிக்காமல் மக்கள் செத்துக் தொலைவது மேல்.....????......!!!!!

உங்கள் பாணியில் தனிமனித தாக்குகுதல்களுக்கு நான் வரவில்லை.. நான் சொன்னவிதம் தவறாக இருக்கலாம்..சொல்லவந்த தகவல் எல்லோருக்கும் விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன்..

சாணக்கியன்.. உந்த செயலை விட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள்..

உங்கள் பாணியில் தனிமனித தாக்குகுதல்களுக்கு நான் வரவில்லை.. நான் சொன்னவிதம் தவறாக இருக்கலாம்..சொல்லவந்த தகவல் எல்லோருக்கும் விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன்..

சாணக்கியன்.. உந்த செயலை விட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள்..

அமெரிக்காவின் "பயங்கரவாதம்" என்ற என்ற கோசம் போல "தனிமனித தாக்குதல்" என்பது தவறுகளிலிருந்து தப்பிக் கொள்ள உபயோகிக்கப்படும் புதிய நடமுறையா?

நீங்கள் சொல்லவந்த விடயத்தை நீங்கள் சொன்ன விதத்திலிருந்துதான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் உங்களை எமக்கு தனிப்பட்ட விதத்தில் தெரியாது.

உங்களைப் போன்ற சிலர் இரவல் தாயகத்தில் உயிர் மற்றும் பொருள் இழப்புக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் போர் வெற்றிகள் வரும் போது மகிழ்ச்சி மேலீட்டில் துள்ளிக் குதிப்பதும், தோல்விகளும் இழப்புகளும் வரும் போது அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைவதுமாக இருக்கின்றனர். மேலும் மக்களின் மற்றும் போராளிகளின் உயிர் இழப்புக்களை போர்கருவிகளின் வரிசையில் ஒன்றாக கருதுவதோடு எதிரியின் உயிர் மற்றும் உடமை இழப்புகளுடன் ஒப்பிட்டு ஆறுதலும் அடைகின்றோம். கண்டனமும், கண்ணீர் அஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்துகிறோம். இவை பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன ஆக்கபூர்வமான தீர்வை பெற்றுத்தருகின்றது?

அத்துடன் மக்கள் உயிர் இழப்புக்கள் ஏற்படும் போது அவர்கள் இன்னமும் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் எனவும், எதிரி மீது ஆத்திரமடைந்து அதற்கு பழிக்குப்பழி வாங்குவதே தீர்வாக அமையும் என்றும் நினைக்கின்றோம். இது பாதிக்கப்பட்ட அல்லது மேலும் பாதிக்கப்பட போகின்ற மக்களுக்கு என்ன தீர்வை பெற்றுக் கொடுக்கும் என்பது குறித்து சிறிதளவேனும் பிரக்ஞை அற்றவர்களாக இருக்கின்றோம்.

உயிர் இழப்புகள் ஏற்படும் போது மட்டுமே அந்த மக்களை பற்றி சிந்திக்கும் நாங்கள் அவர்கள் உயிருடனிருக்கும் போது வாழுவதற்காக படும் அவலங்களை எண்ணிப்பார்க்க தவறுகின்றோம். அல்லது திரைப்படங்களில் நடித்துக் காட்டப்படும் போது மட்டும் பார்த்து கண்ணீர் விடுவதோடு அவர்களை கைவிட்டு விடுகின்றோம். புலத்தில் பல வேலைப் பளுக்கழுக்கு மத்தியிலும் கிடைக்கும் சிறிய நேரத்தில் நீங்கள் தாயகத்தைப்பற்றி நினைப்பது மிகவும் ஆறுதலளிக்கின்றது. அதனையும் நிறுத்திவிட வேண்டாம்.

சிங்கள மக்களுக்காக அரசாங்கமும் முஸ்லீம் மக்களுக்கு அவர்களின் அரசியல் வாதிகளும் தேவையான பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உதவிகளைச் செய்யும் போது, தமிழ் மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள் அதனை செய்வது மிகவும் அத்தியாவசியமானது. அதற்கான ஆதரவும் ஊக்கமும் சிந்தனை மாற்றமும் உங்கள் மத்தியிலிருந்தே வரவேண்டும் என எதிர்பார்கிறேன். அதுவே ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

இது குறித்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை வரவேற்கின்றேன்

அன்புடன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் "பயங்கரவாதம்" என்ற என்ற கோசம் போல "தனிமனித தாக்குதல்" என்பது தவறுகளிலிருந்து தப்பிக் கொள்ள உபயோகிக்கப்படும் புதிய நடமுறையா?

நான் எனது தாயகம் பற்றிதான் கதைத்துக்கொண்டு இருக்கின்றேன்.. இதில்போய் ஏன் அமெரிக்காவை இதற்குள் இழுக்கிறீர்கள்? அல்லது அமைரிக்காபோன்ற பெரிய வல்லரசின் விடயங்களை இந்த சாதாரண என்னுடைய கூற்றுக்களுடன் ஒப்பிட்டுக்கொள்கின்றீர்கள

சிங்களக் கலைஞர்கள் வழங்கிய உணவுப் பொருள் உடனடியாகவே பறிக்கப்பட்ட கொடுமை

[14 - November - 2006] [Font Size - A - A - A]

குடாநாட்டில் மக்கள் பசி, பட்டினியால் உணவுக்காக அலைந்து திரிகையில் அவர்களுக்கு உதவி வழங்குவது போல் படமெடுத்து பின்னர் அவர்களை ஏமாற்றும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையதொரு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் அதி உயர் பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது.

இந்த எல்லையில் சிலவேளைகளில் படையினர், உணவுப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதால், அதனைக் கொள்வனவு செய்வதற்காக தினமும் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் சென்று காத்திருப்பர்.

வெள்ளிக்கிழமை காலையும் இவ்வாறு அங்கு நூற்றுக் கணக்கான மக்கள் சென்று நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் அங்கு சிங்கள திரைப்படப் பிடிப்பாளர்களும் படையினரும் வந்ததுடன், மக்களின் பார்வைக்கு தெரியக் கூடியதாக குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கட் வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் சிலவற்றையும் வைத்திருந்தனர்.

அங்கு சென்றிருந்தவர்களில் வயோதிபர்களையும் குழந்தைகளுடன் சென்றவர்களையும் அழைத்த படையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை, சிரேஷ்ட படை அதிகாரிகள் மற்றும் சிங்களப் பெண் நடிகைகள் மூலம் வழங்கினர்.

அரிசி, சீனி, மா, பருப்பு, பால்மா, ரின் மீன், நுளம்புத் திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொதிகளை அந்த மக்களிடம் கையளித்து வீடுகளுக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

அப்பகுதியில் பெருமளவு மக்கள் காத்திருப்பதையும் அவர்களுக்கு படையினர் இலவசமாக பொருட்களை வழங்குவது போன்றும் அவற்றை பெற்ற மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வது போன்றும் படக் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இந்தப் பொருட்களைப் பெற்றவர்கள் அவசர அவசரமாகப் புறப்பட்டு 50 மீற்றர் சென்றிருந்த போது அங்கு நின்ற படையினர், அவர்கள் கொண்டு சென்ற பொருட்களையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு நாளை வாருங்களெனக் கூறி அனுப்பி விட்டனர்.

பொருட்களை பெற்றவர்கள், கைக் கெட்டியும் வாய்க் கெட்டாத நிலையில் கவலையுடன் திரும்பிச் சென்றனர்.

http://www.thinakkural.com/news/2006/11/14...s_page15189.htm

நான் எனது தாயகம் பற்றிதான் கதைத்துக்கொண்டு இருக்கின்றேன்.. இதில்போய் ஏன் அமெரிக்காவை இதற்குள் இழுக்கிறீர்கள்? அல்லது அமைரிக்காபோன்ற பெரிய வல்லரசின் விடயங்களை இந்த சாதாரண என்னுடைய கூற்றுக்களுடன் ஒப்பிட்டுக்கொள்கின்றீர்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.