Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். வந்த மோடிக்கு மக்களின் வரவேற்பு போதாது; தவராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06a592175484da4f955347d1acc69d6b.jpg

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின்  எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். 

வடக்கு மாகாண சபையின்  26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது  . இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் ஒருவர் முதன்  முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்தவேளையில் மக்களது வரவேற்பு அமோகமாக இருக்க வேண்டும். 

ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. மிகவும் குறைந்த வரவேற்பே வழங்கப்பட்டு இருந்தது. மேலும் கீரிமலையில் நடைபெற இருந்த வீடுகளைக் கையளிக்கும்  நிகழ்வில்  மோடி  கலந்து கொள்வதற்கான சென்ற காங்கேசன்துறை வீதியில்  தோரணங்கள்  கட்டப்பட்டிருந்தன. 

இருப்பினும் தோரணத்திற்கு கீழ் வீதியில்  குப்பைகள்  காணப்பட்டன. அதனை அகற்ற வேண்டும்  என்ற எண்ணம்  கூட யாழ். மாநகர சபைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ வரவில்லை. நிர்வாகத்தில் பிழைகள்  இருக்கின்றது.  

இவ்வாறான சந்தர்ப்பங்களை மேற்கொள்வதற்கு நாம்  இழந்துவிட்டோம் எனவே எதிர்காலத்தில்  இவ்வாறான சம்பங்கள்  எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார். 


 

http://onlineuthayan.com/News_More.php?id=155593924017426675

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5498624-large.jpg

 

 

David-Cameron.jpg

 

Commonwealth-Heads-of-Gov-010.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5498624-large.jpgvicki-and-sampanth.jpg

 

 

 

David-Cameron.jpg

vicki-and-sampanth-1.jpg

 

Commonwealth-Heads-of-Gov-010.jpg

masa_zpsngdwpyjp.jpg

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம ஆளும்  30 வருடம் கழிச்சு மூதூர் பக்கம் 2 கிழமை முன்பு போனவராம் ....
இன்னமும் தமிழர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க.
அங்கின ஒன்று இரண்டு இருந்தா வாக்கு கேட்க போனவராம். 
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் ஒருவர் முதன்  முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்தவேளையில் மக்களது வரவேற்பு அமோகமாக இருக்க வேண்டும். 

 

ஈழத்தமிழன் அடிபட்டு நொந்து நோயாளியாகக் கிடக்கிறான். வருத்தம் பார்க்க வருபவர்களுக்கு...... வருத்தத்தில் கிடக்கும் நோயாளிகள் எல்லோரும் எழுந்து, நின்று, ஆனந்தமாக மாலை மரியாதை செய்து வரவேற்க வேண்டுமா. இது எந்த ஊர் வழக்கம்,   :huh:

UK பிரதமமந்திரி VS இந்தியா பிரதமமந்திரி ?????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் லண்டன் மக்காள் படம் பார்த்து வோட் போடுங்க.

மறந்துட வேண்டாம் இன்னும் ஒரு மாதத்தில் வரவிருக்கும் யூகே தேர்தலில் கமரன் கட்சிக்கு வோட்டுப் போடுங்க.

அதுக்குதான் இந்த படத்தை இப்ப எடுத்து ரோலிங்ல விட்டிருக்கு.

என்னமா அரசியல் பண்ணுறாங்கப்பா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் லண்டன் மக்காள் படம் பார்த்து வோட் போடுங்க.

மறந்துட வேண்டாம் இன்னும் ஒரு மாதத்தில் வரவிருக்கும் யூகே தேர்தலில் கமரன் கட்சிக்கு வோட்டுப் போடுங்க.

அதுக்குதான் இந்த படத்தை இப்ப எடுத்து ரோலிங்ல விட்டிருக்கு.

என்னமா அரசியல் பண்ணுறாங்கப்பா :)

 

 

படம் இணைக்கப்பட்டத்தில் எதுவித உள் நோக்கமும் இல்லை. மாறாக, இப்படி இருக்கக்கூடாதா என ஒரு முன்னுதாரணமாய் திகழ்வதற்கு எடுத்துக்காட்டாய் இணைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியப்பிரதமர் கமரன் வழியில் சென்று இருந்தால் யாழ்ப்பாணம் சென்றதற்கு உண்மையான பிரயோசனம் ஏற்பட்டு இருக்கும். அவரோ தனது விலாசத்தை காட்டும்வகையில் விஜயத்தை மேற்கொண்டார். சனங்கள் பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

 

இந்தவகையில் கமருனுக்கு வோட்டுப்போட்டால் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமால்ல.. பிரதான வீதிகளின் இருமருங்கிலும் சிங்களப் படைகளால்.. இந்தியப் படைகளால்.. இடிக்கப்பட்ட.. அழிக்கப்பட்ட வீடுகள்.. கோவில்களை முழுசா இடிச்சு அழிச்சிச்சு.... அதுக்கு நாலு மரம் நட்டு வளர்த்து.. செங்கம்பளம் விரிச்சு.. வரவேற்ற ஆக்கள் தானே நீங்கள். அங்க உள்ள மக்கள் அகதிமுகாமிலும்.. கிராமங்கள் அழிவுச் சிதைவுகளையும் சுமந்தி நிற்கிறது.. ஈபிடிபி தவராசாவுக்கு ஏன் தெரியப் போகுது. இடிச்சவனுக்கு வால் பிடிச்சது தானே உங்க ஆயுத அரசியல்.  :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.