Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிப்பு! - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Swaminathan-200-news2.jpg

திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

   

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 9 வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.அதற்கு நல்லதொரு தீர்வு இப்பொழுது கிடைத்துள்ளது. சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக நல்லதொரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்பொழுது வழங்கியுள்ளனர்.

 

அமைச்சரவையும் சம்பூர் மக்கள் உடனடியாக மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்றே அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.அதற்கமைவாக இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று முதலீட்டு வலயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 818 ஏக்கர் காணியையும் -உடனடியாக உரிய சம்பூர் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்தல். இரண்டாவதாக கடந்த 9 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன் படுத்தப்பட்டு வந்த சுமார் 234 ஏக்கர் நிலத்தையும் விடுவித்தல். அத்துடன் மீளக்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவிகளை பெற பேச்சு நடத்தி வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இதன்போது கிழக்கு முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபீஸ் நசீர், கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான கே.நாகேஸ்வரன், மீள் குடியேற்ற அதிகார சபை தலைவர் ஹரின் பீரிஸ், மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் என்.ரஞ்சனி மற்றும் பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128693&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான, சலாம் போடாத, டக்கியை போல் சுயநலத்தை மட்டுமே பேணாத, இணக்க அரசியலுக்கு கிடைத்த வெற்றி.

புலவாலுகளின் ஈன அரசியலுக்கு கிடைத்த தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்

//திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.//

 

முயல் பிடிக்கிற நாயை.... மூஞ்சயில பார்த்து, கண்டு பிடித்து விடுவோம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தமிழ் ஈழம் பிடிக்கிற புலியை கண்டுபிடிஞ்சீங்களோ அப்படித்தானே :)

சாமி நாதன் சொன்ன படி செய்தா - என்ன செய்வீங்க சிறி அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தமிழ் ஈழம் பிடிக்கிற புலியை கண்டுபிடிஞ்சீங்களோ அப்படித்தானே :)

சாமி நாதன் சொன்ன படி செய்தா - என்ன செய்வீங்க சிறி அண்ணா?

 

எமது அரசியல் வாதிகளுக்கு, வாக்குறுதி கொடுப்பதே..... தொழில்.

அதனை நம்பி ஏமாற, வெண்டும் என்று.. நினைகிறீர்களா? கோசான்.

 

சந்தடி சாக்கில், இதற்குள் ஏன்... சும்மா இருக்கிற புலியை சீண்டி விடுகின்றீர்கள். :rolleyes:

 

உங்களுக்கு... புலியின் திறமைகளை பற்றி, நான் தான்... விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால்.... "தூங்குபவனை, எழுப்பலாம். தூங்கிக் கொண்டு, நடிப்பவனை எழுப்பவே.... முடியாது" :)  

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான, சலாம் போடாத, டக்கியை போல் சுயநலத்தை மட்டுமே பேணாத, இணக்க அரசியலுக்கு கிடைத்த வெற்றி.

புலவாலுகளின் ஈன அரசியலுக்கு கிடைத்த தோல்வி.

புலி வாலுகள் சம்பூரை இராணுவம் விடுவிக்க கூடாது என்று சொன்னவையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஆமியாவது விடுவதாவது. கூட்டமைப்புப் போகும் பாதை சரிவராது எண்டு குத்தி முறிஞ்சவை

அது புலவாலு. புலிவாலு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் விட்டதற்கு கூட்டமைப்பு தான் காரணம் என நினைக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஆமியாவது விடுவதாவது. கூட்டமைப்புப் போகும் பாதை சரிவராது எண்டு குத்தி முறிஞ்சவை

அது புலவாலு. புலிவாலு இல்லை.

 

ஹலோ... கோசான்,

கிழக்கு மாகாண சபையை... சம்பந்தன்,  முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுப்பாராக இருந்தால்....

நான், சும்மா இருக்க மாட்டன், என்று விட்ட அறிக்கையயை... நாம், மறக்கவில்லை. :D

 

அது.... முஸ்லீம் கைக்கு போனவுடன்... ஓடி, ஒழித்து இருந்து விட்டு.... இப்ப... என்ன, ஞாயம் பிழக்க வந்திருக்கிறீங்கள். :icon_idea:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குந்திக்கொண்டிருந்தா நிலம் விடுபட்டிருக்குமா?

கூட்டமைப்பு தமிழ் மக்களை மைதிரிக்கு வாக்குப்போடச்சொல்லியிராவிடின், மக்கள் ஏனோதானோ என்று இருந்த்ஹிருப்பர்.

வடகிழக்கில் வாக்குபதிவு மந்த்ஹமாய் போக. மகிந்தவின் வெற்றி இலகுவாயிருக்கும்.

தேர்தலுக்குப் முன்னும் பின்னும் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கைகள் 2. ஒன்று நிலங்களை விடிவித்தல் மற்றயது கைதிகள் விடுதலை.

இரண்டும் நடக்கத்தொடங்கி விட்டன.

கூட்டமைப்பின் நகர்வுகளே இதை சாத்தியப்படுத்தின.

நிச்சயமாக நான் அப்படிச் சொன்னேன். இப்போதும் கிழக்கு மாகாண சபையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது முழுப் பிழை என்றே சொல்கிறேன்.

ஆனால் அதுக்காக அவர்கள். செய்யும் நல்ல விடயங்களில் குறை காண முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு சொல்லியிராது விட்டாலும் சனம் my3 க்கு தான் போட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்... கேட்ட, கேள்விக்கு.... இன்னும், பதில் வரவில்லை. கோசான்.
அதற்கு, முதலில்... பதில் சொல்லி விட்டு,  நீங்கள்.... உங்கடை பாட்டில்... நீட்டி முழக்குங்கோ..... :lol:  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புல வாலுகளின் நடவடிக்கைகள் தான் கூட்டமைப்பை ஏதாவது செய்ய தூண்டுகிறது. குறிப்பாக சம்பந்தரின் மூதூர் விஜயம், மக்கள் சந்திப்புகள்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜோக்கடிக்காதயுங்கோ மீரா. சம்பந்தர் ஊருக்கு வாரதப் பற்றி திருமலையில் யாரும் இருந்தா கேட்ட்டுப்பாருங்கோ.

விட்டா புலத்து இணையங்கள் சம்பந்தர் நேற்ற்வரைக்கும் சொந்த வீட்டிற்கே போகவில்லை என்றும் கதையடிப்பினம்.

திர்மலையில் சம்பந்த்ஹரை அசைக்க முடியாது. அவ்வளவு மக்கள் பலம்.

புல வாலுகள் கூட்டமைப்பை வழிநடத்தி இருந்தா இன்றைக்கும் மகிந்த ஆட்சிதான். தமிழருக்கு இந்த சிறு ஆசுவாசமும் ஏற்பட்டிராது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக மூதூர் விஜயம் எப்ப நடந்தது என கேளுங்கள். எனக்கு ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க முஸ்லீம் ஊர். அவர் அங்க போகேல எண்டு ஏந்தான் துள்ளிக்குதிகிறியளோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ர ஊருக்கு போகாட்டி துள்ளி குதிப்பம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

வசாவிளானினை தோலகட்டிப்பகுதிகளில் நேத்துக் காணிபாக்கப்போனவையளுக்கு என்ன நடந்தது? இணக்க அரசியல்மூலம் தமிழனிடம் இருக்கிற கோமணத்தையும் உருவி சுமந்திரன் கோஸ்டி தங்கள் தோளில தொங்கப்போட்டு அழகுபாக்கப்போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில்.. மக்களின் தேவைக்குரிய நிலம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் மக்கள் ஏலவே ஆர்ப்பாட்டம் நடத்தி.. அந்த முக்கிய நிலங்களை கட்டிடங்களை விடுவிக்க கோரி இருந்தனர்.  :icon_idea:

 

சம்பூரை புலிகள் காத்த விதம் வேறு. சம்பூரின் பெரும் பகுதி.. போர் நிறுத்த ஒப்பந்த கால எல்லைக்குள் இருந்தது. அதனை சர்வதேச கண்காணிப்புக்குழு உறுதி செய்தும் இருந்தது. இந்தியாவின் தூண்டலில் சம்பூரில் இருந்து ஆரம்பமானதே இறுதிப் போர். அதை ஆரம்பிச்சவர் அம்மையார் சந்திரிக்கா. சம்பந்தனின் கூட்டாளி.  :D  :o

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Thamilchelvan arrives in Sampoor on three-day visit

[TamilNet, Wednesday, 16 February 2005, 16:02 GMT]

Mr.S.P.Thamilchelvan, Political Head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Wednesday evening around 4 p.m. arrived from Batticaloa to Sampoor Maha Vidiyalayam grounds in the LTTE controlled Muttur east, south of Trincomalee district by a Sri Lanka Air Force (SLAF) special helicopter, sources in Trincomalee said. Colonel Sornam, Trincomalee district military commander and Mr.S.Elilan, Trincomalee district political head received him on his arrival, sources said. 

thamilchelvan_sampoor_01_37574_435.jpg

thamilchelvan_sampoor_02_37578_200.jpgMr.Para, Head of Thamileelam Judiciary, Mr.Thamilenthi, Head of Finance Division, Mr.Pon.Thiaygam, Head of Martyrs Division and Mr.V.Balakumaran, senior member of the LTTE accompanied him, sources said. 

Mr.Thamilchelvan told journalists on his arrival that his visit to Trincomalee was to observe how tsunami relief work was being carried out. He said the government is implementing relief and rehabilitation projects in the south in full swing. But it is sad to state that government has completely ignored the northeast in this regard, he added.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14267

  • கருத்துக்கள உறவுகள்

.

திர்மலையில் சம்பந்த்ஹரை அசைக்க முடியாது. அவ்வளவு மக்கள் பலம்.

.

 

ஒரு முறை தேர்தலில் தோல்வியை தழுவியவரல்லோ? அதுபோக திருமலை மக்கள் தமிழ்பற்று அதிகமுடையவர்கள் ,புலியில் பல உறுப்பினர்கள் திருமலை மாவட்டத்தை சேர்ந்தோர்....தமிழன் என்ற காரணத்தால் அவருக்கு மக்கள் ஆதரவு உண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை தேர்தலில் தோல்வியை தழுவியவரல்லோ? அதுபோக திருமலை மக்கள் தமிழ்பற்று அதிகமுடையவர்கள் ,புலியில் பல உறுப்பினர்கள் திருமலை மாவட்டத்தை சேர்ந்தோர்....தமிழன் என்ற காரணத்தால் அவருக்கு மக்கள் ஆதரவு உண்டு....

அது போன மாசம் இது இந்த மாசம்.

மகிந்த குந்திக்கொண்டிருந்தா நிலம் விடுபட்டிருக்குமா?

கூட்டமைப்பு தமிழ் மக்களை மைதிரிக்கு வாக்குப்போடச்சொல்லியிராவிடின், மக்கள் ஏனோதானோ என்று இருந்த்ஹிருப்பர்.

வடகிழக்கில் வாக்குபதிவு மந்த்ஹமாய் போக. மகிந்தவின் வெற்றி இலகுவாயிருக்கும்.

தேர்தலுக்குப் முன்னும் பின்னும் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கைகள் 2. ஒன்று நிலங்களை விடிவித்தல் மற்றயது கைதிகள் விடுதலை.

இரண்டும் நடக்கத்தொடங்கி விட்டன.

கூட்டமைப்பின் நகர்வுகளே இதை சாத்தியப்படுத்தின.

நிச்சயமாக நான் அப்படிச் சொன்னேன். இப்போதும் கிழக்கு மாகாண சபையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது முழுப் பிழை என்றே சொல்கிறேன்.

ஆனால் அதுக்காக அவர்கள். செய்யும் நல்ல விடயங்களில் குறை காண முடியாது.

தமிழ் மக்கள் யாருக்கு  வாக்கு போடவேண்டும் என்று கூட்டமைப்பு சொன்னால் என்ன  சொல்லாட்டி  என்ன ,
அவர்கள் தாமாகவே போடுவார்கள் . சும்மா சம்பந்தன் சொல்லித்தான் மக்கள் செய்தவர்கள் என்றால் அதனை விட காமெடி ஒன்றும் இல்லை .   
  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பது வாக்குவங்கி ஆட்டம்கண்டு கனகாலமாயிற்றுது. நேற்றையதினம் இன்னுமொரு தமிழ் இணையத்தளத்தில் ஒரு விகிதாசார அட்டவணையைப்பார்த்தேன் புலிகள் காலத்தில் நடந்த தேர்தலிலும் இப்போது நடந்த தேர்தலிலும் எவ்வளவு வாக்குகள் பிரதேச ரீதியாகக் கூத்தமைப்புப் பெற்றுக்கொண்டதென. சம்பந்தன் சுமந்திரன் இவர்களது வழிநடத்தலில் பாரிய தவறுகள் இருக்கின்றன, அதற்காக அவர்களை அரசியலிலிருந்து விட்டுட்டு ஓடுங்கோ எனக்கூறவில்லை.

 

இந்தியப்பிரதமர் மோடி என்ன சொல்லுறார் எண்டால் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கோ பிரச்சனை கொடுக்காதையுங்கோ என,

 

காரணம் இப்போதுதான் தாங்கள் நினைத்ததுபோல் சீனசார்பில்லாத அரசாங்கத்தை ஏற்படுத்தியாயிற்று, மேலும்பல இந்திய வல்லாதிக்கத்துக்கான, வல்லாதிக்கத்தை இறுக்கமான கட்டமைப்புகளுக்குள் வைத்திருப்பதற்கான பிராந்திய அரசியலைச் செய்வதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவை அதில் பங்கமேற்பட வைத்திராதையுங்கோ எண்டுறார்.

 

அதுக்காக நீங்கள் சும்மா இருக்கவேண்டாம் புலம்பெயர் தேசத்தில் போர்க்குற்ற விசாரணை அதனூடான இனவழிப்புக்கான ஆதாரம் மற்றும் இனவ்ழிப்பு நடந்த ஒரு இனம் தானாகவே பிரிந்துசெல்லும் உரிமையைப் பெற்றுக்கொள்ளும் என்பனபோன்ற அடிப்படையில் ஒரு கூட்டம் அரசியல் செய்யுது அவர்களைக் காயடிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள் எனக்கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

 

இது எல்லாம் ஒருவிதத்தில் ஒப்பேறி சீனச்சார்பு மகிந்த இனிமேல் அரசியலில் நிலையெடுக்காமல்போய் கோட்டு கேசு வழக்கு வம்பு என அலையும்வேளை வரும்வரை தமிழர் தரப்பைத் தாக்காட்டிவிட்டால் அதன்பின்பு டண்டணக்கா ஆட்டம்தான்.

 

ப்தின்மூன்று பிளஸ் திரும்பவும் மைனஸாகப் போயிடும் தமிழர்களது அரசியல் அபிலாசைகளைக்கொண்டே மீண்டும் பிராந்திய வல்லரசுக் கனவு இவகளைக் காணலாம், கூட்டணிக்கு சிங்களம் ஜப்பான் ஜீப் கொடுத்ததுபோல் கூத்தமைப்புக்கு இந்தியம் மகின்திரா வாகனங்களைக் கொடுத்துக் குளிர்விச்சுடும்

 

தமிழன் பட்டுவேட்டிக்கனவுடன் இருக்கும்போது கட்டியிருந்த கோவணமும் களவுபோய்விடும் (நன்றி வைரமுத்துவுக்கு)

 

புலம்பெயர் தேசத்திலுள்ள சில அமைப்புகளே இவற்றுக்கெல்லாம் தடையாக இருக்கின்றன அதற்காகக் களமிறக்கப்பட்டவர்களே இங்கு ஒன்றுசேர்ந்து கல்லெறிகிறார்கள். அவர்களுடன் பழைய சோத்துப்போனைகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன.

 

ஆனால் இவைகள் எல்லாம் நடந்தேகும் என நீங்கள் மனப்பால் குடிக்காதையுங்கோ, தெருவில் ஒருவன் பத்துப்பைசா தானம் தருகிறானென்றாலே எதுக்காகத் தருகிறான் எனச் சந்தேகம்கொள்ளும் பிறவியாக ஈழத்தமிழன் மாறிக்கனகாலமாயிற்றுது அப்படி மாத்தியவர்களே உங்களது எஜமானர்கள்தான்.

 

இவைகளையெல்லாம் முறியடிக்கும் விதம் எமக்கும் தெரியும் அதனது ஒரு சில நடவடிக்கைகளது விளைவே சுமந்திரனது "புலம்பெயர் புலிவால்கள்" எனும் பேச்சின் தாற்பரியம். காலம் எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை மக்காள்,

 

அனால் ஒண்டு மாத்திரம் நிச்சையம் புலம்பெயர் தேசத்தில் புலிகள் பெயர் சொல்லி நிறையக்காசு அடிச்சு அதைச் சொத்துக்களாக்கி மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துப்போட்டு நல்லபிள்ளைகள்போல் கனபேர் திரியினம் அவர்களுக்கும் கூடியவிரைவில் ஆப்பு வரும் அவதானமாக இருங்கோ. நீங்கள் சொத்து எழுதி வைத்தவர்கள் காணாமற்போகலாம் ஆத்தோட போகலாம் தெருவில வாகனத்தில அடிபடலாம் அதுக்கு யாரும் பொறுப்பில்லை. வெளியாலையும் சொல்லமுடியாது பொலீசுக்கும் சொல்லமுடியாது ஊர்ப்பணத்தை அடிச்சன் இப்படிப்பண்ணிட்டாங்கள் எண்டு. வட்டியும் முதலுமாக எண்ணி பத்திரமாக வைச்சிருங்கோ கேக்கிற நேரம் கேக்கிறவையள் வருவினம் அதுவரை அடிச்ச காசைச் சும்மா வைச்சிராதையுங்கோ ஏதாவது முதலீடு போட்டு ஒண்டுக்குப் பத்தா பெருக்கிவையுங்கோ உங்களுக்கு இதையெல்லாம் சொலலவேணுமே நீங்கள் சுளியன்கள் எல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்

புலயாவாரி மக்காள் கேட்டுங்கோங்க,

எழுஞாயிறு சொல்லீட்டாப்பல - அண்ணன் வாரார் சீக்கிரம் - புள்ள குட்டிகள் பத்திரம் - காராலயே அடிச்சுக் கொல்லுவம் - போலீசுக்கும் போக முடியாது ஆமா.

ஊரில் ஒரு பழ மொழி இருக்கு - வாழையில் ஆடியவள், வயது போன பின்பும் காலைக் காலைத்தூக்குவாளாம் :)

கேவலம் கோயில் கள்ளன் ஜெயதேவனையே முப்படைகளையும் வைத்திருந்த காலத்திலேயே ஒண்டும் செய்ய முடியவில்லை.

இனித்தான் கிழிக்கப் போயினமாம் - அதுவும் புலத்தில் பொலிசுக்கு பெபே காட்டி விட்டு - பார்ப்பம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.