Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் பைத்தியம் .

Featured Replies

மூன்றாம் வகுப்பாக இருக்கலாம் தென்னை மட்டையில் பட்  செய்து நெதர்லாந்தில் இருந்து வந்த உருளைக்கிழங்கு விதை பெட்டியில் ஒரு பகுதியை வெட்டி விக்கெட்  ஆக்கி, வீட்டிற்கு முன் இருந்த ஒழுங்கையில் டென்னிஸ் பந்துடன் தொடங்கியது கிரிக்கெட் பைத்தியம் .
 
பாடசாலை முடிய பின்னேரம் ,சனி ஞாயிறு காலை மாலை என விளையாட்டுத்தான் .எனது அண்ணர் ,தம்பி, அடுத்த விட்டுக்கார பகி ,சுதா என்று ஐந்து பேரும் தான் டீம் .மாறி மாறி பந்து எறிவதும் பாட்டிங் செய்வதும் என்று அலுக்காமல் விளையாடுவோம் .தம்பிக்கும் பக்கத்துக்கு விட்டு பகிக்கும் அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் அலுப்பால் அவர்களும் வருவார்கள் .பக்கத்துக்கு வீட்டு சுதா மட்டும் இடக்கை ஆட்டக்காரன். விடுமுறை என்றால் காலை எட்டுமணிக்கே கதவை தட்டுவான் .சுதா தான் முதன் முதன் மரத்தால் செய்த பட் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தான் .
 
ஐந்து பேர்கள் இருந்த டீம் சற்று தள்ளி இருந்தவர்களும் வந்து சேர மெல்ல மெல்ல எண்ணிக்கை கூடி பத்து பன்னிரண்டு ஆகிவிட்டது .கார், சயிக்கில், பெண்கள் ஒழுங்கையில் வரும்போது விளையாட்டு நிப்பாட்டி நிப்பாட்டி விளையாட வேண்டிவந்ததால் மைதானத்தை எமது பின் வளவிற்கு மாற்றினோம் .சுத்து மதில் பெரிய வளவு என்பதால் விளையாட மிக வசதியாக இருந்தது .வளவிற்குள் நின்ற மரங்கள் வேறு பீல்டிங் செய்ய தொடங்கிவிட்டன .
 
லெக் சைட்டில் இருக்கும் அடுத்த வீட்டில் இருந்த முதியவர்கள் பந்து மதிலை தாண்டி போக மதின் மேலால் பாய்ந்து  அவர்கள் வீட்டிற்கு சென்றால் சத்தம் போடுவார்கள் அதனால் லெக் சைட்டில் இருக்கும் விட்டிற்குள் பந்தை அடித்தால் ஆள் அவுட் என்பது எமது கிரிக்கெட்டில் ஒரு விதி .இதானால் பந்தை நேரே அடிக்கவும் ஒப்பில அடிக்கவும் பழகி கொண்டேன்.இது பிற்காலத்தில் கிரிக்கெட் விளையாட மிகவும் கை கொடுத்தது .
 
அடுத்த கட்டமாக வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் வீதியை மைதானமாக மாற்றி ஒரு மூன்றாம் கட்ட  அணியை  பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்  உருவாக்கிவிட்டோம் .
 
உலக கோப்பை தொடங்க முதல் இது முடியும் ஆனால் இப்ப தொடரும் .

 

 
உலக கோப்பை தொடங்க முதல் இது முடியும் ஆனால் இப்ப தொடரும் .

 

 

முதலில் தலையங்கத்தை பார்த்து பயந்து  விட்டேன் :o:lol:  எந்த உலக கோப்பை 2019 இலா? :icon_mrgreen::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

தொடருங்கோ..

  • தொடங்கியவர்
பாடசாலை சென்று வரும் போது  ஊருக்குள்ளேயே மேற்கு ,ஸ்டேசன் அடி ,நெட்டிலிப்பாய்,டிப்போவடி என்று மாட்ச் கொழுவிவிட்டு வருவோம் .அநேகமாக சனிக்கிழமைதான் மாட்ச் .எனக்கு முதன் நாள் இரவே நித்திரை வராது அடுத்த நாள் ஆடப்போகும் மாட்சை பற்றி கனவு கனவாக வரும் .விடிந்தால் நல்ல பிள்ளை கணக்கு முற்றம் கூட்டி கடையில் சாமான் எதுவும் வாங்க வேண்டுமானால் வாங்கி கொடுத்துவிட்டு எனது உடுப்புகள் எல்லாம் தோய்த்து காயப்போட்டு விட்டு மத்தியான சாப்பாடு முடிய பட் ஐயும் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டுவிடுவன் .அண்ணரும் தம்பியும் என்னளவு சீரியஸ் இல்லை ஆறுதலாக மூன்று மணிக்குத்தான் மைதானம் வருவார்கள் .சில ஆட்டக்காரர்கள் பஞ்சியில் வராமல் விட்டுவிடுவார்கள் ,சிலரை வீட்டில் விளையாட விட மாட்டர்கள் எனவே நான் ஒவ்வொரு வீடாக சென்று மொத்த டீமையும் மூன்று மணிக்கு மைதானத்திற்கு கொண்டுவந்துவிடுவேன் .
 
பிறகு என்ன மாட்ச் அந்த மாதிரி போகும் .அண்ணர் தான் துவக்க பந்து வீச்சாளர் .ஆள் அந்த மாதிரி வேக பந்து வீசுவார் .எமது டீம் ஓரளவு நல்ல டீம் எனவே விளையாடிய முக்கால்வாசி மாட்சுகள் வெற்றிதான் .இடைக்கிடை சிறு பிரச்சனைகள் வந்தாலும் அடுத்தநாள் எல்லாம் மறந்து போவோம் .
 
அண்ணர் அடுத்த நிலைக்கு போய் முதல் டீமில் விளையாட தொடங்கிவிட்டார் .அவர்கள் மைதானமும் சற்று தள்ளி வேறு இடத்தில் இருந்தது . அவர்கள் வெவ்வேறு ஊருக்கு எல்லாம் சென்று மாட்ச் விளையாடுவார்கள்  இப்ப நான் தான் எங்களது டீம் கப்டன் .ஆக்களை இழுத்து பிடித்து டீம் நடாத்துவது மிக கஷ்டமான ஒரு வேலை .பல பெற்றோரிடமே பேச்சு வாங்கியிருகின்றேன் .பாடசாலை முடிய தினமும் மாலை நேரம் முதலாவது அணி தங்களுக்குள் பிரித்து பிராக்டிஸ் மாட்ச் நடக்கும் நானும் அவர்களுடன் போய் ஓட்டிவிடுவேன் .தமது டீமிற்கு ஆட்கள் பத்தாத நேரத்தில் என்னையும் விளையாட கூட்டிக்கொண்டு போவார்கள் .வராமல் இருந்தவர் லேட்டாக வந்தால் என்னை நிற்பாட்டிவிடுவார்கள் .அழுகை அழுகையாக வரும் இருந்து மாட்சை பார்த்துவிட்டு வருவேன் .அந்த டீமில் பலர் என்னை விட திறமையானவர்கள் இல்லை போலிருக்கும் ஆனால் வயது கூடியவர்கள்  .அண்ணரிடம் நியாயம் கேட்டால் உனக்காக நான் அவர்களுடன் தான் நியாயம் கேட்க கூடாது என்று அண்ணர் வாய் திறக்க மாட்டார் .(இந்த இரண்டாம் டீமில் தான் ராகவன் என்னுடன் விளையாடினார் .முதலாவது டீமில் புலிகளின் முக்கிய ஆயுத முகவர் ஒருவர் விளையாடினார் ).
 
இப்படி அவர்களுடன் இழுபட்டுக்கொண்டு போன ஒரு நாள் எனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது .எதிராக விளையாடிய டீம் அந்த மாதிரி பந்து வீச்சு .எமது டீம் முப்பதற்குள்  ஒன்பது விக்கெட்டுகள் சரிந்துவிட்டது நான் தான் லாஸ்ட்மன் .முதல் ஓவரே இரண்டு சிக்சர்களும் ஒரு நாலும் இழுத்துவிட்டேன் .(பந்து போட்டவர் பிரபல கணித டியுசன் மாஸ்டர் பத்தரின் தம்பி ரகு .மத்திய கல்லூரியில் படித்தவர் இப்ப லண்டனில் இருக்கின்றார் ).27 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் வந்தேன் .அன்று அடித்த அடி முதல் அணியில் ஒரு இடத்தை பிடிக்க உதவிவிட்டது .
 
ஒவ்வொரு சனியும் எங்கள் மைதானத்தில் அல்லது காங்கேசன்துறை, உரும்பிராய் சுன்னாகம் ,புன்னாலைக்கட்டுவன், இணுவில் ,கொக்குவில் ,அரியாலை ,நீராவியடி ,நாவாந்துறை என்று மாட்ச் இருக்கும் .சயிக்கிளில் சென்று விளையாடிவிட்டு திரும்பிய நாட்கள் அவை .மாட்ச் முடிய சிலவேளைகளில் ஒரு சின்ன ரீ பார்ட்டியும் இருக்கும்.
 
எமது டீம் அந்த நேரம் ஒரு கலக்குத்தான் கலக்கியது .இதுதான் பாட்டிங் ஓர்டர் .
 
நான் ,ஜெயபிரகாஷ் (ஆஸி ) ஜெயகுமார் (ஆஸி )ரகு (லண்டன் ) ரஞ்சிற்(கனடா ஜேலோனைப் ) அண்ணர் (லண்டன் )வேலும்மயிலும்(கனடா)பவா (இலங்கை )பாலராஜன் (நியூசிலாந்து)நித்தி(கனடா )பிரேமாராஜா (இலங்கை )வனிதன் (ஜெர்மனி )சாந்தன் (கனடா ).
 
உரும்பிராய் இந்துவில் இருந்து யாழ் இந்துவிற்கு கிரிக்கெட் லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடும் பைத்தியத்துடன் எட்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கின்றேன் .
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இந்தியாவில் ஒண்டு நாக்கை வெட்டிப்போட்டுது இன்னுமொண்டு லக்ணோவில மாடியிலிருந்து குதிச்சுத் தற்கொலை செய்துபோட்டுது.  பைத்தியம் பைத்தியம்.....

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா தான் போகுது . ஆனா எனக்கு ஒரு டவுட் . அதாவது உங்கள் கதை என்று சொல்லி விட்டு சும்மா விலாசுறீங்களோ? சொந்த கதைகளில்

எப்பவும் ஹீரோ வாகலாம் . எதுக்கும் நீங்க குறிப்பிட்ட உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டா உண்மை வெளி வரும் .

என் பாராட்டுகள் உங்கட மட்ச்யில பெரிய கிரிக்கெட்டர் ஆனதுக்கு . :D

  • தொடங்கியவர்

கதை நல்லா தான் போகுது . ஆனா எனக்கு ஒரு டவுட் . அதாவது உங்கள் கதை என்று சொல்லி விட்டு சும்மா விலாசுறீங்களோ? சொந்த கதைகளில்

எப்பவும் ஹீரோ வாகலாம் . எதுக்கும் நீங்க குறிப்பிட்ட உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டா உண்மை வெளி வரும் .

என் பாராட்டுகள் உங்கட மட்ச்யில பெரிய கிரிக்கெட்டர் ஆனதுக்கு . :D

நன்றி அக்கா .உண்மைகள் சிலவேளை சுயதம்பட்டமாகத்தான் இருக்கும் அதற்காக எழுதாமல் விட முடியாது .

யாரும் விசாரிக்கலாம் என்பதற்காத்தான் பெயர்களை எழுதினேன் .நன்றி .

  • தொடங்கியவர்
புது பாடசாலை ,புது நண்பர்கள் ,புது இடம் ,புதுமைதானம் .இலங்கை பாடசாலைகளில் முதல் தவணை கிரிக்கெட்டும் இரண்டாவது தவணை விளையாட்டு போட்டியும் ,மூன்றாவது தவணை உதைப்பந்தும் நடக்கும் .எப்ப லஞ்ச் மணி அடிக்கும் என்று பார்த்திருந்து மணி அடித்ததும் கட்டிக்கொண்டு வந்த சாப்பாட்டை விழுங்கிவிட்டு மைதானத்திற்கு ஓடிவிடுவோம். வகுப்பு வகுப்பாக மாட்ச் விளையாடுவோம் .இந்து கல்லூரியில் எட்டாம் வகுப்பில் மட்டும் எட்டு பிரிவுகள் இருந்தது (8A-8H) A-E முன்னர் படித்தவர்களும் யாழ் இந்து தமிழ் பாடசாலையில் இருந்து வந்தவர்களும் F-H முற்றிலும் புதிய மாணவர்கள் .நான் 8F. ஒரு வருடத்துடன் பாடசாலை ஓரளவு பரீட்சயம் ஆகிவிட்டது .
 
ஒரே தரத்தில் படிப்பவர்கள் மத்தியில் கிரிக்கெட்டோ உதைபந்தோ நல்லா விளையாடுபவர்கள் ஓரளவு இனம் காணப்பட்டு விட்டார்கள்.ஒரு வகுப்பு மாட்ச் லெதர் பந்தில் நடைபெற்றது அந்த பந்தை தொட்டுப்பார்த்ததே மிக மிக சந்தோசம் .அப்போது பாடசாலைகளில் கிரிக்கெட்டில் மூன்றாம் பிரிவு இல்லை .
 
அடுத்த வருடம் தொடங்குகின்றது . இலங்கை முதன் முதலாக Under 14 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துகின்றது .இலங்கையில் உள்ள அனைத்து பிரபல பாடசாலைகளும் இதில் பங்கு பற்றுகின்றன .துவக்க ஆட்டகாரராகப்  போய் நூறு அடிக்கும் கனவுகள் அடிக்கடி வந்து போகின்றன .அது வெறும் கனவாகவே போகும் என்று நினைக்கவேயில்லை.விதி வேறு திசையில் விளையாடுகின்றது .
 
ஒன்பதாம் வகுப்பு .இரண்டாம் பாடம் சமயம் நடந்துகொண்டிருக்கு .இரு இளைஞர்கள் வகுப்புக்குள் வருகின்றார்கள் .சமயம் படிப்பித்துக்கொண்டிருந்த குண்டு சோமசுந்தரம் மாஸ்டர் அவர்களை பார்த்து சிரித்தபடியே என்ன விடயம் என்கின்றார் . எனது பெயரை சொல்லி சந்திக்க வேண்டும் என்கின்றார்கள் .இவர்கள் இருவரையும் நான் முன்னே பார்த்திருக்கின்றேன் .ஒருவர் நான் பாடசாலை சேரும் போது யாழ் இந்துவின் கிரிக்கெட் டீமின் விக்கெட் கீப்பர். மற்றவரும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். இந்த விக்கெட் கீப்பர் தான் பல வருடங்களுக்கு பிறகு இந்து கல்லூரிக்காக ஸ்கந்தாவிற்கு எதிராக நூறு ரன்கள் அடித்தவர் .ஆளை பார்த்தால் ஹிந்தி நடிகர் சசிகபூர் மாதிரி மிக அழகாக இருந்தார்.சிங்கப்பூர் பற்றிக் சேர்ட் ஒன்று போட்டிருந்தார் மற்றவர் கையில் வைத்திருந்த கீசெயினை    சுழட்டியபடியே கன்டீனுக்கு வர முடியுமா ஒரு  ரீ  குடிக்கலாம் என்கின்றார் .எனக்கு ஒன்றுமே புரியவில்லை .வேண்டாம் என்றேன் .படிப்பு எப்படி போகுது ,என்னத்தில பாடசாலை வருகின்றிர்  என்று எல்லாம் கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார்கள் .திரும்பி வகுப்பிற்கு போக குண்டு சோமன் என்ன விடயம் அவர்கள் உன்னை தேடிவந்தார்கள் என்று கேட்டார் ,தெரியாது என்றேன் .ஒரு வித பார்வையுடன் போய் இருக்கையில் இருக்க சொல்லிவிட்டார் .
 
சற்று கூட கடவுள் பக்தி இல்லாத எனது குடும்பத்தில் ஒரு அக்கா மட்டும் கொஞ்சம் கடவுள் பக்தியாக இருந்தார் .உயர்தரப்பரீட்சை எடுத்துவிட்டு ரிசல்ட் வரமட்டும் வெள்ளிக்கிழமைகளில் நல்லூர் போய் வந்தார் .அங்கு அக்காவை பார்த்தவர் தான் நண்பருடன் பாடசாலைக்கு என்னை தேடி வந்திருக்கின்றார் .அவர் யாழ் இந்து பழைய மாணவன் .முன்னாள் பிரபல கிரிக்கெட் உதைபந்து ஆட்டக்காரர் . எனவே ஏதோ தனது வீடு போல பாடசாலைக்குள் திரிந்தார் .வாரத்தில் ஒரு நாள் எனது வகுப்பிற்கு வந்து ஏதாவது சும்மா கதைத்துவிட்டு போவார் .வகுப்பில் கிசு கிசு தொடங்கிவிட்டது .வீட்டிலும் வாயை திறக்க பயம் .வகுப்பிற்கு அவர் வரக்கூடாது என்று நேர்ந்து கொண்டு திரிந்த நாட்கள் அவை .
 
Under 14 டீமிற்கு ஆட்களை பயிற்சிக்கு வரசொல்லிவிட்டார்கள் .இவர்தான் பயிற்சியாளர் .லஞ்சிற்கு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடுவதுடன் சரி .ஒன்பதாம் வகுப்பு ஏதும் அறியாத பருவம் பயத்தில் பயிற்சி பக்கமே போகாமல் விட்டுவிட்டேன் .முழு வட மாகாண டீம்களையும் வெற்றி கொண்டு கொழும்பில் போய் அரையிறுதியும் வெற்றி கொண்டு இறுதி ஆட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரியிடம் தோற்றார்கள் .அந்த டீமில் விளையாடியது ஒன்பதாம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் .பலர் எனது நண்பர்கள் .பாடசாலையில் விளையாடவிட்டாலும் ஊரில் கிரிக்கெட் தொடர்ந்துகொண்டே இருந்தது .
 
அக்கா பேராதனை கலைப்பிரிவில் அனுமதி கிடைத்து போய்விட்டார் .கிசு கிசு இப்போ உண்மையாகி அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது .வீட்டிலும் செய்தி கசிந்துவிட்டது .உதைபந்தும் அவர் தான் ஒரு பயிற்சியாளர் .யாழ் இந்து மைதானம் நான் எட்டிப்பார்க்காத இடமாக மாறிவிட்டிருந்தது .இந்த நேரம் அவர் லண்டன் போக போவதாக ஒரு செய்தி வந்து ஓரளவு நிம்மதியாக இருந்தது .அவர் லண்டன் போக களத்தில் இறங்குவம் என்று காத்துஇருக்கின்றேன் 
ஆனால் மீண்டும் விதி வேறு பக்கமாக எனது பாடசாலை கிரிக்கெட் ஆசைக்கு ஆப்பு வைக்கின்றது .
 
பைத்தியம் தொடரும் .

இப்பிடி ஒரே அடியாய் கதையை எழுதினா  :o கதை நல்லாய் இருக்கு  :)

  • தொடங்கியவர்
லண்டன் செல்லும் பிசியிலோ என்னவோ இப்போது பாடசாலை பக்கம் அவரை அதிகம் காணமுடியவில்லை .அடுத்த கிரிக்கெட் சீசன் எப்படியும் கிரிக்கெட் விளையாடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.யாழ் இந்துவிற்கு புதிய அதிபர் யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வருகின்றார் . மாலையுடன்  பெரும் வரவேற்பு நடைபெறுகின்றது அதற்குள் யாரோ மாணவன் பகிடி விட்டார் என்று முதன் நாளே கையை வைத்துவிட்டார்  புதிய அதிபர் . மிகவும் கண்டிப்பான அதிபர் என்று யாழ்பாணத்தில் பெயர் வாங்கியவர் . அந்த அதிபர் வேறு யாரும் இல்லை பயிற்சியாளரின் தந்தை .
 
தந்தை யாழ் இந்துவிற்கு வந்த பின் அவர் என்னை தேடி வரவில்லை .சில மாதங்களில் பின் லண்டன் சென்றுவிட்டார் .லண்டன் செல்ல முதல் எமது வீட்டிற்கு முதல் நாள் என்னை தேடிக்கொண்டு வந்தபோது வந்த அதே நண்பருடன் வந்தார் .அப்பா வீட்டில் இல்லை அம்மா வாசலில் வைத்தே அவரை அனுப்பிவிட்டார் .
 
லண்டனில் இருந்து பேராதனைக்கு தொடர்புகள் இருந்ததாக பின்னர் அறிந்தேன் .கிரிக்கெட் சீசன் தொடங்கிவிட்டது .விளையாட்டு ஆசிரியராக புதியவர் ஒருவர் வந்தார் .இவர் எனது ஊரை சேர்ந்தவர் .பயிற்சிக்கு போன முதன் நாளே அந்த குரங்கு (அவ்வளவு கோவம் ) .என்னிடம்  அக்காவின் லவ் எப்படி போகுது என்று கேட்டார் . இவர் ஒரு மோட்டார் பைக் விபத்தில் பின்னர் இறந்தார் .இரண்டு கிழைமைகள் பயிற்சிக்கு போனதுடன் அதையும் நிற்பாட்டி விட்டேன் .இந்த இரண்டு கிழமைகள் பயிற்சி கூட வீட்டிற்கு தெரியாமல் ஹோஸ்டலில் இருக்கும் நண்பரிடம் சப்பாத்தை வைத்து எடுத்து போடுவேன் . டீமில் இடம் கிடைத்தும் வீட்டில் சொல்லாலாம் என்று நினைத்திருந்தேன் . அம்மா கொஞ்சம் கட்டுப்பாடு அதிகம் .
 
இந்துவில் லெதர் போல் கிரிக்கெட்  கனவாகவே போய்விட்டது .எனது நண்பர்கள் பலர் கிரிக்கெட் டீமில் இருந்தார்கள் .இருவர் யாழ்பாண டீமில் பாகிஸ்த்தான் டீமிற்கு எதிராக ஆடினார்கள் .யாழ்பாண அணிக்கு வட்டு ஜப்னா கல்லூரி கப்டன் குணசேகரம் தலைமை தாங்கினார் .
 
இந்நேரம் ஊரில் முதல் தர டீமிற்கு காப்டன் ஆகிவிட்டேன் .டென்னிஸ் பந்தில் பாட்டிங் போலிங் இல்  பல வித்தைகள் வேறு கற்று ஆகிவிட்டது .வேறு ஊரில் இருந்தும் சில வேலைகளில் தமது டீமிற்கு விளையாடகூப்பிடுவார்கள் . 
அக்கா இரு வீட்டாரின் அனுமதியுடன்   அவரை மணம் முடிக்க லண்டன் சென்றுவிட்டார் . உயர்தர வகுப்பில் அதிபர் தான் எனக்கு ஆங்கில ஆசிரியர் .நான் படிப்பு முடிக்கும் வருடம் தான் அதிபரும் ஓய்வு பெற்றார் .
 
லண்டன் வந்து முதல் வருடமே லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாட நெட் பயிற்சிக்கு போனேன் .முன்னாள் யாழ்பாண அணி காப்டன் குணசேகரம் கேட்டார் எந்த பாடசாலையில் விளையாடினீர் பந்து அந்த மாதிரி திரும்புது என்று .
முற்றும் .
 
குறிப்பு -லண்டன் ,டெல்கி ,கே கே நகர் கனடா என்று கடைசிவரை கிரிக்கெட்டை நான் விடவில்லை கிரிக்கெட்டும் என்னை விடவில்லை .
 
மனைவி நிறை மாத கர்ப்பம் கிரிக்கெட் விளையாட போய்விட்டேன் .மாட்ச் முடியவில்லை இடையில் வந்து மனைவிக்கு பப்ளிக் தொலைபேசியில் கோல் எடுத்தேன் உடனே வரச்சொன்னார் .வெள்ளையும் வெள்ளை உடுப்புடன்  மனைவியை ஆசுபத்திரிக்கு கொண்டு செல்ல ஒரு மணித்தியாலத்தில் மகன் பிறந்துவிட்டார்.
 
இரண்டாவது மகன் பிறந்த அன்று 96 உலக கோப்பை இலங்கை -இந்திய ஆட்டம் .கையில்  ஆசுப்பத்திரியில் தந்த பான்ட் வேறு கட்டியிருந்தேன் .இரவு பதினோரு மணி வர மனைவியை நித்திரை கொண்டு ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு ஸ்போர்ட்ஸ் பாருக்கு மாட்ச் பார்க்க போய்விட்டேன் .மனோஜ் பிரபாகரின் பந்துக்கு ஜெயசூரியா வெழுத்து கட்டியது அந்த மாட்ச் தான் . 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்துவில் பிரிவு "எவ்" இல் படிச்ச ஆள் என்றால் மொக்குகூட்டமாயோ, ரவுடியாயோ இருக்க வாய்ப்பு அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். புதிய மாணவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி பிரிவு ஏ, பி யினுள் பின் கதவினால் புகுவதும் வழமை என்று கேள்விப்பட்டுள்ளேன். யாழ் இந்துவில் புதிதாக இணைந்த மாணவர்களில் பலர் தம்மை டீ, ஈ, எவ், எச்சில் சேர்த்தமையால் வெறுப்புற்றதையும் அறிந்தேன். பொதுவாய் ஏ, பி, சீ என்று போகும்போது ரவுடீசம், குழப்படிகள் அதிகரித்துக்கொண்டும், படிப்பு குறைந்துகொண்டும் போகுமாம். சிலவேளை விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்காக, நீங்கள் மொக்குக்கூட்டம் என்று இதை வைத்து நிறுவ வரவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன்.  :icon_idea:

Edited by கிழவி

  • தொடங்கியவர்

இந்துவில் இந்த பாகுபாடு ஒரு காலமும் இருக்கவில்லை .அப்படி அவர்கள் தரம் பிரிப்பதும் இல்லை .

அவர்கள் இலங்கையில் இருக்கும் முதல் தர பாடசாலைகளில் யாழ் இந்துவும் ஒன்று ,மற்ற பாடசாலைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்த பாடசாலை .

வெகு நேர்த்தியாக சீராக அலுவல்கள் நடக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாகுபாடு பிற்காலத்தில் வந்திருக்ககூடும். யாழ் இந்துவில் படித்த சிலர் மூலமே இந்த வகுப்பு பிரிவுகள் பற்றி கேள்விப்பட்டேன். படிப்பில் அவ்வளவு வேறுபாடு காணப்படாவிட்டாலும் குழப்படிகள் பின் பிரிவுகளில் அதிகம் என்று கூறக்கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை... அசை போட வைத்த, கிரிக்கெட் கதை நன்றாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பழைய ஞாபகங்கள் . எமக்கு விளையாடும் இடத்துக்கு என்றுமே பிரச்சினையில்லை. யாழ் இந்து மைதானம்தான் .ஶ்ரீ ஸ்கந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் எங்களுடையது. நீராவியடி கேணிக்கு அருகிலும் ஒரு டீம். யோகசங்கரி (நீங்கள் நினைப்பவர்தான்) ஶ்ரீ ரங்கன், ராஜேஸ் போன்றவர்களுடையது. அக் காலத்தில் யாழின் அனேகமான அணிகளுக்கு விக்கட்டுகள் பாட்டுகள் எல்லாம் நம்ம சப்ளைதான். நாங்கள் எந்த ஊருக்கு விளையாடப் போனாலும் பிளவுஸ் ரொட்டியும் றோஸும் இரண்டு பார்சல் கொண்டு போவோம். இடைவேளையின்போது  எதிரணிக்கும் ஒரு பார்சல் கொடுப்போம்.சிலசமயம் விளையாட்டில் சன்டைகள் வந்தாலும் (பெரும்பாலும் வெளியாட்கலால்தான் வரும்) ஒருமாதிரிச் சமாளித்துக் கொண்டு வருவதுண்டு. :rolleyes:  :)

 

அன்று தொட்டு இன்றுவரை யாழ் இந்துவில் மினிமம் இரண்டு மூன்டு பேர் எனது உறவிணர்களாக இருப்பார்கள். 

யாழ் இந்துவில் பிரிவு "எவ்" இல் படிச்ச ஆள் என்றால் மொக்குகூட்டமாயோ, ரவுடியாயோ இருக்க வாய்ப்பு அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். புதிய மாணவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி பிரிவு ஏ, பி யினுள் பின் கதவினால் புகுவதும் வழமை என்று கேள்விப்பட்டுள்ளேன். யாழ் இந்துவில் புதிதாக இணைந்த மாணவர்களில் பலர் தம்மை டீ, ஈ, எவ், எச்சில் சேர்த்தமையால் வெறுப்புற்றதையும் அறிந்தேன். பொதுவாய் ஏ, பி, சீ என்று போகும்போது ரவுடீசம், குழப்படிகள் அதிகரித்துக்கொண்டும், படிப்பு குறைந்துகொண்டும் போகுமாம். சிலவேளை விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்காக, நீங்கள் மொக்குக்கூட்டம் என்று இதை வைத்து நிறுவ வரவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன்.  :icon_idea:

:D  :D  :lol:  உண்மைதான் கிழவி எனது யாழ் இந்து நண்பர்களும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் :icon_idea:

  • தொடங்கியவர்

11102808_1070143863001695_35908303405222

  • கருத்துக்கள உறவுகள்

11102808_1070143863001695_35908303405222

 

வினை  விதைத்தவன் வினை அறுப்பான்

இதுவும் உங்களுக்குத்தான் அண்ணை...

 

எதிலும் குறை...

இதை நீங்க சொல்லக்கூடாது.....

 

நான்  அம்மாவின் வருத்தம் விருப்பம் பற்றி எழுதிய திரிக்குள்ளேயே

விசத்தை விதைத்தவர் தாங்கள்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D  :lol:  உண்மைதான் கிழவி எனது யாழ் இந்து நண்பர்களும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் :icon_idea:

 

ஒரு குறிப்பிட்ட அதிபரின் காலத்தில் அப்படி இருந்ததாகக் கேள்வி. குமாரசாமி என்பவர் அதிபராக இருந்த காலமாக அது இருக்க வேண்டும். ஆனால்.. போர்க்கால சூழலில் அதற்குப் பின்னர் நிலைமையை மாறிவிட்டது.

 

உயர்தரத்தில் ஏ - சி  கணிதப் பிரிவுக்கும்..

 

டி மற்றும் ஈ உயிரியலுக்கும்..

 

மற்றையவற்றில்.. ஒன்று வர்த்தகம்.. மற்றது கலைக்கும் என்றிருந்தது.

 

சாதாரண தரத்தில்.. பெறப்பட்ட பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்கள் கலந்து வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். வெளி மாணவர்கள்.. புள்ளி அடிப்படையில் உள்வாங்கப்பட்டு அவர்களும் கலந்தே விடப்பட்டனர்.

 

டி..ஈ.. எவ் இல் படித்து பல்கலைக்கழகம் போன பலர் உள்ளனரே..!!

 

மருத்துவத்துறையில் உள்ள மாணவர்கள் டி.. ஈ யில் படித்தவர்களாகவே இருப்பர்.

 

உங்கள் நண்பர்கள்.. எந்தக் காலத்தில் யாழ் இந்துவில் படித்தார்கள்.. உண்மையில்.. கல்லூரி நடைமுறைகளை சரியாக தெரிந்து கொண்ட நண்பர்களா அவை என்றும் ஒருதரம் சோதிக்கம். சிலர் விலாசம் காட்ட மட்டும் கல்லூரிக்கு வந்து போவதுண்டு. அவர்கள் எப்பவும் கடைசி நிரை தான் வகுப்பில். அவர்களிடம் விசாரித்தால்.. இல்லாத பொல்லாததை தான் சொல்வார்கள்.  :icon_idea:  :lol:

இடைநிலைப்பிரிவில்.. போட்டிப்பரீட்சை புள்ளி அடிப்படையில் கலந்து.. மட்டுமன்றி.. தெரிவு செய்யும் பாடங்களின் அடிப்படையில் தான்... வகுப்புகளில் மாணவர்கள் இடப்பட்டுள்ளனர்.  :)

குறிப்பாக வர்த்தகம்.. விவசாயம்.. சங்கீதம்.. சித்திரம்.. தொழில்நுட்பம்.. இந்தப் பாடங்களுக்கான தெரிவு மாணவர்களை வெவ்வெறு பிரிவுகளில் கொண்டு போய் சேர்க்கும்.  :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்கர் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D  :D  :lol:  உண்மைதான் கிழவி எனது யாழ் இந்து நண்பர்களும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் :icon_idea:

 

உதுகள் எல்லாருக்கும் தெரிந்த உண்மைதானே தம்பி. விட்டுத்தள்ளு ராசா. புளுத்த குழப்படிக்கார பெடியங்களை எல்லாம் பிரிவு டீ இல் இருந்து ஈ எச் என்று சற்று தள்ளி வைக்கிறதில நல்லாய் படிக்கிற ஒழுக்கமான பிரிவு ஏ, பி மாணவர்களுக்கு நல்லது தானே. இலலவிட்டால் உந்த குழப்படியள் நல்ல பிள்ளைகளையும் பழுதாக்கி அல்லோபோடுங்கள். 

 

நாங்கள் எட்டாம் வகுப்பு பிரிவுகள் பற்றி கதைக்கிறம். ஒருத்தர் வந்து உயர்தரம் பிரிவுகளூக்கு விஞ்ஞன விளக்கம் கொடுக்கின்றார். இவரும் எட்டாம் வகுப்பில் பிரிவு எச்சில் படித்தாரோ என்னமோ. ஒவ்வொருத்தருக்கும் தன் தன் பாடசாலையின் கெளரவம் முக்கியமாய் போச்சிது. உதுகள் விளங்கினவையள் படிக்கிற காலத்திலும் கொசப்பு வேலைகள் செய்யாமல் ஒழுக்கமாய் படித்து கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து இருக்கலாம் தானே.  :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எட்டாம் வகுப்பு பிரிவுகள் பற்றி கதைக்கிறம். ஒருத்தர் வந்து உயர்தரம் பிரிவுகளூக்கு விஞ்ஞன விளக்கம் கொடுக்கின்றார். இவரும் எட்டாம் வகுப்பில் பிரிவு எச்சில் படித்தாரோ என்னமோ. ஒவ்வொருத்தருக்கும் தன் தன் பாடசாலையின் கெளரவம் முக்கியமாய் போச்சிது. உதுகள் விளங்கினவையள் படிக்கிற காலத்திலும் கொசப்பு வேலைகள் செய்யாமல் ஒழுக்கமாய் படித்து கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து இருக்கலாம் தானே.  :D

 

இடைநிலைப்பிரிவில்.. போட்டிப்பரீட்சை புள்ளி அடிப்படையில் கலந்து.. மட்டுமன்றி.. தெரிவு செய்யும் பாடங்களின் அடிப்படையில் தான்... வகுப்புகளில் மாணவர்கள் இடப்பட்டுள்ளனர்.   :)

 

குறிப்பாக வர்த்தகம்.. விவசாயம்.. சங்கீதம்.. சித்திரம்.. தொழில்நுட்பம்.. இந்தப் பாடங்களுக்கான தெரிவு மாணவர்களை வெவ்வெறு பிரிவுகளில் கொண்டு போய் சேர்க்கும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.