Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபஞ்ச மாயை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"jvs8x1.jpg"

 

மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஒரு கமராவினால் அண்ணளவாக 1சதுர மில்லி மீற்றர் பரப்பளவுள்ள தொளையினூடாக இரவில் எடுக்கப்பட்ட தெளிந்த வானத்தின் படம். அந்தக் கமராவினால் அந்தக் கணப்பொழுதில் நம் கண்முன்னே தெரியும் முழுவானத்தையும் படம் பிடிக்க முடியுமானால், கிட்டத்தட்ட 13000000 தடவைகள் ஒன்றையொன்று தழுவாத படங்களாகக் கிளிக் செய்ய வேண்டும். இது இலகுவானதொன்றல்ல.  

 

நமது பூமி விரைவாகச் சுற்றுகிறது.  பூமத்திய ரேகையை வைததுக் கணக்கிட்டால்  ஒருமுழு நாளான 23மணி 56நிமிடம் 4செக்கன்களில் பூமியின்  அதிகூடிய அண்ணளவான விட்டமான 40,075 கிலோ மீற்றர்களைப் பூமி சுற்றிவிடுகிறது.  அப்படி வைத்தப் பார்க்கும்போது பூமியின் வேகம் மணிக்கு 1667 கிலோ மீற்றர்களாகும்.  அதாவது அண்ணளவில் செக்கனுக்கு 460 மீற்றர்களாகும்.  இதைவிட பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது அது கிட்டத்தட்ட செக்கனுக்கு 30 கிலோ மீற்றர்களாகும்.  அத்தோடு, ஒரு வருடத்தில் பூமி இருபத்தி மூன்றரைப் பாகை வடக்குத் தெற்காகத் தனது அச்சில் சரிந்து சுறற்றுவதால் பிரபஞ்சத்தில் தனது நிலையை மொத்தம் 47 பாகைக்குள் மாற்றியும் கொள்கிறது.  இந்த இயற்கை நிகழ்வுகளால் ஒரு கணத்தில் நாம் காணும் பிரபஞ்சம் அடுத்த கணத்தில் மாறிவிடுகிறது. அதனால் நாம் பூமியிலிருந்து எடுக்கும் படங்களும் நிறைவானதல்ல.

 

மேற்படி படத்தை அவதானிக்கும் போது அதில் இரண்டேயிரண்டு நட்சத்திரங்களே உள்ளதாகவும் ஏனைய எல்லா ஒளிரும் புள்ளிகளும் நமது பால்வெளி மண்டலத்தைப் போன்ற கலக்சிகளே – அதாவது நட்சத்திரக் கூட்டங்களேயென்றும் கூறுகிறார்கள்.  படத்திலுள்ள கலக்சிகளின் எண்ணிக்கை எறக்குறையப் பத்தாயிரமாகும்.  ஆக,  நாம் காணும் வானத்தில் 1சதுர மில்லிமீற்றர் பரப்பளவிலுள்ள கலக்சிகளே இத்தனை. இதன் 13000000 மடங்கு அதாவது> 130 பில்லியன்; கலக்சிகள் நம் கண்முன்னேயுள்ள வானத்தில் காணப்படுகின்றன.
ஓவ்வொரு கலக்சியும் நாமிருக்கும் கலக்சியான பால்வெளி மண்டலத்தைப் போன்று கோடிக்கணக்கான நடசத்திரங்களால் ஆனவை.  நமது பால் வெளியில் மட்டும் பெரிதும் சிறிதுமாய் கிட்டத்தட்ட 400 பில்லியன் நடசத்திரங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றது.  அவ்வாறு நோக்குகையில் 400 தரம் 13000000 சமன் 7200000000 பில்லியன் நட்சத்திரங்கள் நாம் கண்முன்னே காணும் வானத்திலுள்ளன. ஆனால் எல்லா நட்சத்திரங்களும் தமக்கெனக் கோள்களைக் கொண்டு சூரியக் குடும்பங்களாக இருக்குமென்றில்லை.

 

இதுவரை நாம் நமது தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துள்ள சூரியக் குடும்பங்கள் 500 இற்கு மேலிருந்தாலும் அவையனைத்தும் நமது பால்வெளி மண்டலத்தினுள்ளேயே உள்ளன.  ஆனால் 100 பில்லியனுக்கு மேல் நமது பால்வெளியில்; சு+ரியக் குடும்பங்கள்  இருக்கக் கூடுமென கருதப்படுகிறது.  அதாவது இங்கு கோள்களைக் கொண்ட நட்சத்திரங்களையே சூரியக் குடும்பமென்கிறோம். இந்த அளவு சூரியக் குடும்பங்களுள்ள பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் எம்மைப் போன்ற அல்லது வேறுபட்ட தோற்றத்தோடு இன்னொரு உயிரினம் இல்லாமலா போய்விடப் போகிறது?  இந்தப் பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் (ஊழி அல்லது பிரளையம்) உருவானபோது நமது பூமி மட்டும்தான் உயிர் தோன்றவும் வாழவும் ஏற்ற சூழ்நிலைகளோடு உருவாகியதா?  இல்லை அப்படியிருக்க முடியாது.  உயிர் வாழ்க்கைக்கு ஏதுவான போதிய தட்ப வெப்ப சு+ழ்நிலைகளோடு இன்னும் பல கிரகங்கள் இருந்தேயாக வேண்டும்.  மொத்தத்தில் நாம் இந்த அண்டவெளியில் தனித்து விடப்படவில்லை.

 

இது நிற்க, அடுத்த விடயத்திற்கு வருவோம். அண்டம் முழுவதும் நிலம்,  நீர்,  தீ,  காற்று என்னும் நான்கு சடப்பொருள்களோடு ஆகாயமென்னும் வெற்றிடமும் உள்ளதென்று முன்னோர் கூறினார்கள்.  பின்னர் அந்தச் சடப்பொருள்கள் அணுக்களாலானவையென அறியப்பட்டு அந்த அணுக்களும் இலத்திரன், புரோட்டன், நியூட்றன் ஆகிய அடிப்படைத் துகள்கள்களாலானதெனக் கண்டார்கள். அத்தோடு நம்முன்னோர் சொன்ன அண்டத்தின் ஒரு சடப்பொருட் கூறாகிய தீயில் ஒளியைத்தருவது போட்டன்களென்னும் அலைவடிவத் துணிக்கைகள் என்றும அறியப்பட்டு, ஆய்வுகள் மேம்பட்டு, தற்போது அடிப்படைத் துகள்களுக்குத் திணிவைக் கொடுப்பது “ஹிக்ஸ் போசான்;” என்னும் கடவுள் துணிக்கைகளாயிருக்கலாம் என்பது வரை  அனுமானங்கள் உள்ளன.

 

இங்கே நாம் கருத்திலெடுக்கவுள்ள விடயம் ஆகாயமென்னும் திணிவற்ற வெற்றிடத்திற்கும் சடப்பொருள்களென்னும் திணிவுள்ள துணிக்கைகளுக்குமான தொடர்பாகும்.  இதனை நாம் நூற்று வீதத்திலேயே கணக்கிட முடியும்.  அவ்வகையில் கணக்கீடுகனின்படி பிரபஞ்சத்தில்; மொத்தத் திணிவு பிடித்துள்ள இடம் 0.0000000000000000000042 வீதமாகும். இது பிரபஞ்சத்தின் அளவோடு ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்க அளவாகும். மொத்தத்தில் இப்பிரபஞ்சம் மிகுந்த வெற்றிடமான பெருவெளியாகவேயுள்ளது.  

 

இதுமட்டுமா! எம்மை உருவாக்கியுள்ள சடப்பொருள் மூலகங்களுக்குத் திணிவைக் கொடுக்கும் அணுக்கருவானது ஒரு விளையாட்டு மைதானத்திலுள்ள ஒரு பந்தின் அளவேயுள்ளது.  வெளியோட்டில் சுற்றிவரும் இலத்திரன்கள் நீங்கலாகப் பார்த்தால் அணுவும் வெறும் வெற்றிடமே.  பிரபஞ்சத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையை ஒரு குத்து மதிப்பில் 10இன்78 இலிருந்து 10இன்82 ம் அடுக்கு என்று கணக்கிடுகிறார்கள். http://www.universetoday.com/36302/atoms-in-the-universe/ 

 

தனியே திணிவைக் கொடுக்கும் அணுக் கருவையும் அதன் கவர்ச்சிப் புலத்தினுள் சுற்றிக்கொண்டிருக்கும் இலத்திரன்களையும் விட்டுவிட்டுப் பார்த்தால்  பிரபஞ்சத்தின் மொத்தத் திணிவு பிடித்துள்ள இடம் அதன் வெற்றிடத்தினோடு ஒப்பிடுகையில் மிக மிகப் புறக்கணிக்கத் தக்கதாகும். அணுவின் மையக் கருவையும்> அதன் கவர்ச்சி விசையால் அதைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும இலத்திரனையும் மேலும் மேலும் உடைத்தால் இறுதியில் மிஞ்சப்போவது என்னவென்று அறியோம். விடாது காரண காரியத் தொடர்புகளை ஆராய்ந்து இந்த இயற்கையின் இயல்புக்கு விளக்கம் கூற "குவாண்டம் பெளதிகம்" என்ற துறையில் பலபேர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் செய்தாலும் கிடைக்கப் போகும் இறுதி விடை ஒன்றுதான்:

 

"உண்மையில் எங்கும் எதிலும் வெற்றிடமே அதாவது சூனியமே விரவிக்கிடக்கின்றது". ஆக, இந்தப்பிரபஞ்சம் என்பது ஓர் மாயப் பெருவெளி. இதிலிருந்து,  ஐம்பூதங்களாலான அதாவது அணுக்களாலான நாம் எவ்வளவு புறக்கணிக்கத்தக்கவர்கள் என்பதை உணரலாம்.   
மாயையைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாத புத்தி ஜீவிகளுக்கு இத்தகைய அறிவியல் விளக்;கங்களின் மூலமே இவ்வுலகமும் பிரபஞ்சமும் நாமும் மாயையின் வடிவங்களென்று புரிய வைக்க முயற்சிக்கலாம். புரியாதோர், மும்மலங்களில் முதலான ஆணவத்தின் செல்வாக்கால் அகந்தையை விடார்.  அகந்தை பின்வருமாறுதான் சொல்லும்.

 

நானே பெரியோன் நானே அறிவாளி
என்னளவுள்ள எல்லாப் பதர்களிலும்
என்னுட் சிறிய மணியொன்றிருக்கிறது     -      நானே பெரியோன்..

பூச்சி பிடித்துப் புழுவரித்த கும்பலினுள்
பாதி மணியாய் இருக்கின்ற
என் பெருமை சாலப் பெரிதே!

குப்பையிலே என்னைக் கொட்டித்தான் விட்டாலும்
குப்பைக்குள்ளேயோர் குண்டு மணியாகக்
கண்ணைச் சிமிட்டி ஒளிபரப்ப - இங்கு
என்னைத் தவிர எவரால் முடியும்?

கார்கால மேகக் கறை படிந்த வானத்துக்
கும்மிருட்டைச் சீறி அழிக்க முயலுமொரு
மின் மினி நான் என் பெருமை சாற்றல் அரிதே!
வெண்ணிலவு இல்லை விளக்கில்லை - வானத்து
விண் மீன்களில்லை இம் மின் மினியே பெரிது    -    நானே பெரியோன்..

 

-by Karu-


 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கரு...!

 

ஒன்றும் சொல்லத் தெரியவில்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கரு...!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் இந்த மாதிரியான விளக்கங்கள் கொடுப்போர் மிகக் குறைவு . பதிவுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கட்டுரையைப் பாராட்டிப் பதிலெழுதிய சுவி, விசுகு,  நில்மினி ஆகியோருக்கு அன்பு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்..நிறுத்தாமல் படித்தேன்.. நன்றி பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தை... நினைக்க, பிரமிப்பாக உள்ளது.
அருமையான ஒரு, விண்வெளி கட்டுரை.
இணைப்பிற்கு... நன்றி கரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சுபேஸ், தமிழ் சிறீ !  உங்கள் பாராட்டுகள் என்னை ஊக்குவிக்கும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான கட்டுரைக்கு நன்றி கரு. Dark matter (கரும்பொருள்), dark energy (கரும்சக்தி) என்பனவற்றையும் அறிந்தால் பரம்பொருளையும் அறிந்துவிடலாம் என்று விஞ்ஞானம் கருதுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dear Kirupan

 

எதற்கு டாக் மற்றர், டாக் எனெர்ஜி, ஹிக்ஸ் போசான், அன்ரி மற்றர், அன்ரி யுனிவேஸ் என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தில் பரம்பொருளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.  இந்தப் பிரபஞ்சமே பரம்பொருளாயிருக்கும் போது.  கண்ணைத் திறந்து பாருங்கள், முன்னே இருப்பது பரம்பொருள்தான். அதை அனுபவித்து உணர்வதுதான் கடினமாயிருக்கிறது. 

 

கண்ணுக்கு முன்னே ஒரு டம்ளரில் ஆப்பிள் ஜுஸை வைத்துக்ககொண்டு அதை ஆப்பிள் ஜுஸென்று கூறமுடியாது.  சுவைத்துத்தான் பார்க்க வேண்டும்.  சுவை அப்பிள் ஜுஸிலா அல்லது எம்மிலா இருக்கிறது.  நமது நாக்கு ஜுஸைத் தொட்டாலன்றி சுவை தெரியுமா.  உயிரில்லாத நாக்கும் அதையுணராது.   அவ்வாறுதான் இந்தப் பிரபஞ்சப் பரம்பொருளையும் சுவைத்தறிய வேண்டும். உள்ளே பாருங்கள் பரம்பொருளின் சுவை தெரியும்.   பின் வெளியேுயுள்ள பரம்பொருளை இலகுவாக உணரமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.