Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் வேண்டும் (சிறுகதை) - மீரா குகன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஞ்சினியின் கண்கள் மீண்டும் கடிகாரத்தை நோக்கியது . மணி 6.3 யை காட்டியது . இவள் 5 மணியிலிருந்து இப்படி தான் அடிக்கடி கடிகாரத்தை நோக்கிக் கொண்டிருந்தாள் . ஆம் ஆசைக்கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரமாகி விட்டதல்லவா ! திருமணமாகி மூன்று மாதங்களே ஆகி இருந்த அவளுக்கு, கணவன் காதல் கணவனாக தெரிந்தாலும் அவனுக்கு என்னவோ அவளிடம் அதே ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை . வர வர வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக பிற்போடப் பட்டுக்கொண்டே இருந்தது .

ரஞ்சினிக்கும் இது கொஞ்சம் உறைக்கத்தான் செய்தது . என்றாலும் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள காலம் தேவை . என்னை அவர் நன்றாக தெரிந்துகொண்ட பின்னர் எல்லாம் சகஜ நிலைக்கு வரும் என்று தன்னையே சமாதானப்படுத்திகொண்டாள். அன்றும் அறுசுவையுடன் சமைத்து கணவனுக்கு பரிமாறவே அவன் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

 

ஒருவாறு மணி 7 யை நெருங்கையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது . உள்ளே வந்த ராஜன் ரஞ்சினியின் கணவன் தன் சப்பாத்துக்களை கலட்டி விட்டு அப்படியே சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தான் . ரஞ்சினி கொஞ்சம் தயங்கினாள். வேலை முடிந்து தாமதமாக வந்த கணவன் அவளிடம் ஒரு காரணமும் கூறாது நேரே தொலைக்காட்சியே கதி என்று அமர்ந்தால் பாவம் ரஞ்சினியின் மனம் தடுமாறத் தானே செய்வாள் . சுதாகரித்த ரஞ்சினி ஏன் ராஜன் உங்களுக்கு ஆபீஸ்ல வேலை அதிகமா? களைத்து வந்திருப்பீர்கள் . வாருங்கள் நான் சாப்பாடு பரிமாறுகிறேன் . என்று கூறி முடிக்கும் முன்னரே , திரும்ப என்ன சமைத்து வைத்திருக்கிறாய்? என்ற ராஜனின் குரல் அவளை நிறுத்தியது . முகம் மலர்வுடன் நான் சோறுக்கு மீன் கறி சமைத்திருக்கிறேன். அதனுடன் கீரை, லீக்ஸ் வரை , சோயா மீட் பொரியல் என்று அடுக்கிக் கொண்டே போகஎன்ன இன்றைக்கும் சோறா? உனக்கு வேற ஒன்றும் சமைக்க தெரியாதா? ஒவ்வொரு நாளும் சோறை சமைத்தால் எப்படி மனுஷர் சாப்பிடுவது !. இதை தெரிந்து தான் நான் ஆபீஸ் முடிந்து அப்படியே நண்பருடன் பப் ஒன்றுக்கு சென்று அங்கேயே சாப்பிட்டு விட்டேன் . நீ வேண்டுமானால் போய் சாப்பிடு என்று தொலைகாட்சியின் நிகழ்ச்சியை மாற்றினான் .

அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள் ரஞ்சினி . ராஜன் எனக்கு ஒன்றுமே கூறாது இரவு உணவையும் முடித்து விட்டு வந்திருக்கிறானே. ஒரு சிறிய தொலைபேசி அழைப்பில் அழைத்துச் சொல்லி இருக்கலாமே . ஒவ்வொரு நாளும் சோறு என்றும் வேறு குறை கூறுகிறான் . தனக்கு வேறு உணவு செய்ய சொல்லி இருந்தால் நான் ஆசையாக செய்திருப்பேனே . ரஞ்சினியின் கண்ணில் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது . அப்படியே மென்று விழுங்கிக்கொண்டு சரி, ராஜன் அப்ப நான் உங்களுக்கு சூடா தேத்தண்ணீர் கொண்டு வரவா? என்று வினவினாள். ராஜன் அவளை கேலியாக பார்த்தான் . என்ன கேட்கிறாய் ? இப்ப தானே நான் பப்க்கு சென்று வருகிறேன் என்று கூறினேன் . 2 கிளாஸ் பியர் அருந்தி விட்ட எனக்கு எப்படி தேத்தண்ணீர் குடிப்பது . இது தான் மேல்நாட்டு நாகரீகம் தெரியாதவளை கலியாணம் செய்தால் இங்கத்தைய பழக்கம் ஒன்றும் தெரியாது நான் தான் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது அவன் கொஞ்சம் விறைப்பாகவே சொல்லி முடித்தான் .

ரஞ்சினி அவளது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது உடனே சமையல் அறையை நாடி ஓடினாள். ஏன் இவன் இப்படி மனதை நோகப்பண்ணுகிறான். என் படத்தைப் பார்த்து விரும்பி தானே கலியாணம் செய்தவன் . ஒரு வேலை நேரில் கண்டவுடன் ராஜனுக்கு என்னை பிடிக்காமல் போய் விட்டுதோ . அப்படி நான் அழகில்லாதவள் அல்லவே . அங்கு ஊரில் எத்தனை பெடியன்கள் சைக்கிளில் எனக்கு பின் திரிந்தார்கள் . அதுவும் பக்கத்து வீட்டு ராஜி அக்கா, ரஞ்சினி உன்ட பேரழகுக்கு ஒரு ராஜகுமாரன் தான் சரி. எங்கட ஊரில திரியிற பெடியன்கள மட்டும் பார்த்திடாயடி . நீயே பார் உனக்கு வெளிநாட்டில இருந்து ஒரு கோடீஸ்வரன் ஒருவன் வந்து அப்படியே தூக்கிக்கொண்டு போகப்போறான் . ஒரு ராணி மாதிரி இருக்கப்போகிறாய் ! அப்ப இந்த ராஜி அக்காவை மட்டும் மறந்துடாதடி , என்று இவளை கிள்ளி விடும்பொளுதெல்லாம் ரஞ்சினி எப்படி எல்லாம் இறுமாப்புக் கொள்வாள் .

எத்தனை எத்தனை கற்பனைகள் அவள் மனதில் ஓடி இருக்கும் . தன் கணவன் தன்னில் அப்படியே மயங்கிப்போய் ஆழ்ந்த காதலில் இருப்பதாகவும், இருவரும் சேர்ந்து இணைபிரியாத காதலர்கள் போல் அன்பிலே மூழ்கி இருப்பது என்றும் கற்பனைகள் செய்து ஆயிரமாயிரம் ஆசைகள் வளர்த்திருந்தாள்.

ராஜன் இவளது படத்தை பார்த்து உடனே சம்மதித்து தான் இலங்கை வர முடியாது அதனால் இவளை இங்கிலாந்து நாட்டிற்கு அழைப்பதாக கூறியதையும் கேட்டு ரஞ்சினி எவ்வளவு புளகாகிதம் அடைந்தாள். ஆனாலும் பெற்றோர் உறவினர் கூடி திருமணம் யாப்பாணத்தில் தன் நண்பிகள் மத்தியில் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அகதி அந்தஸ்த்தில் இங்கிலாத்தில் வசிக்கும் ராஜன் இலங்கை வர அனுமதி இல்லை என்பதை உணர்ந்த பொழுது அவள் தன்னையே தேற்றிக்கொண்டாள். பெற்றோர் ஊரவர் என எல்லாவற்றையும் விட்டு கணவனே துணை என்று நம்பி பல தூரம் கடந்து ராஜனை நம்பி வந்தவளுக்கு இன்று ராஜனின் நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தை தந்தது . ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ கொஞ்சம் அவகாசம் தேவை தான் . ஆனாலும் அவன் அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காது ஒரு ஓட்டாமையுடன் பழகுவது இவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது . பெருமூச்சுடன் சமைத்த உணவுகளை ப்ரிஜில் வைத்து விட்டு படுக்க சென்றாள்.

அடுத்த நாள் காலை வழமை போன்று ராஜன் வேலைக்கு கிளம்ப எல்லாம் தயார் நிலையில் வைத்து விட்டு காபியையும் கலந்து கொடுத்தாள். காலை உணவையும் தயார் நிலையில் வைத்து விட்டு மெல்ல தயங்கிய படியே இன்று இரவு வீட்டில் சாப்பிடுவீர்கள் தானே ? உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொன்னால் அதன் படியே செய்து வைக்கிறேன் . இடியப்பம் அல்லது புட்டு செய்து வைக்கவா ? என்ன கறி என்று சொல்கிறீர்களா? மெல்லிய குரலில் கேட்டாள். ராஜன் ம்ம்ம் இல்லை இடியப்பமே செய்து வை . ஆ.. நான் நேற்று சொல்ல மறந்து விட்டேன் . எனது அலுவலக பொறுப்பதிகாரியும் நேற்று என்னுடன் பபுக்கு வந்திருந்தார் . எமது திருமணம் பற்றி அறிந்தவர் உடனே தனது குடும்பத்துடன் உன்னை பார்ப்பதற்காக நாளை இரவு உணவிற்கு வரப்போவதாக கூறினார் . என்னால் உடனே வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை . என்ன இருந்தாலும் அவர் எனக்கு தலைமை அதிகாரி ! அவரை நன்கு வரவேற்று உபசரித்தால் மட்டுமே எனக்கு வேலை இடத்தில் நன்மை கிடைக்கும் . நீ எப்படி அவர்களுக்கு ஏற்றாப்போல உணவு தயார் செய்து கொடுக்க போகிறாயோ தெரியவில்லை . அவர்கள் மேலையத்தவர்கள் . உணவில் உறைப்பு சேர்க்க மாட்டார்கள் . யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தால் இது தான் எனக்கு வேண்டும் மீண்டும் குறைப்பட்டான் .

ரஞ்சினிக்கு சுருக்கென்று பட்டது . மௌனமாக கொஞ்ச நேரம் நின்றவள் மீண்டும் மெல்லிய குரலில் கவலைப் படவேண்டாம் ராஜன், உங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே எல்லாம் சமைத்து வைக்கிறேன் . பதில் எதுவும் கூறாமல் ராஜன் தன் ஆபீஸ்க்கு கிளம்பினான் . ரஞ்சினி கொஞ்ச நேரம் யோசித்தாள், ஒருவேளை உண்மையாகவே நான் ராஜனுக்கு பொருத்தம் இல்லையோ . அவன் இந்த இங்கிலாந்து நாட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறான் . அவனும் வெள்ளையர்களின் பழக்க வழக்கங்களை அப்படியே ஏற்றுக்கொண்டான் போல . அது மட்டுமின்றி உத்தியோகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால் தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு ஏற்றாப்போல வாழப் பழகிக்கொண்டல் மாத்திரமே அவர்களும் இவனை மதிப்பார்கள் .

அப்படி இருக்கையில் காலாச்சாரம் நிமித்தம் அவன் ஒரு தமிழச்சியை கலியாணம் செய்தாலும் நான் இவர்களது வாழ்க்கை முறைக்கு முற்றாக வேறுப்பட்டவள். ராஜனுக்கு இது பெரும் சங்கடத்தை தருகிறது போலும் . இதன் காரணத்தாலேயே என்னவோ ராஜனால் என்னுடன் அன்பாக இருக்க முடியாமல் போகிறது போலும் . அட நான் தானே என் கணவருக்கு ஏற்றாப்போல் மாற வேண்டும் . ரஞ்சினி தன்னையே குறை கூறிக் கொண்டாள்.

அது சரி , நாளை என்ன விருந்திற்கு சமைக்கலாம் என்று உடனே யோசனை செய்ய தொடங்கினாள் ரஞ்சினி . அவளால் ராஜன் கேட்பது போல் ஸ்டீக் , பிஸ்சா, ஸ்பகெட்டி என்று வெளி நாட்டு உணவு செய்து பழக்கம் இல்லாதமையினால் தனக்கு தெரிந்த உணவு வகைகளையே கொஞ்சம் மாற்றி அழகாக அலங்கரித்து படைத்தாள் நிச்சயம் ராஜனின் தலைமை அதிகாரியின் குடும்பத்தை கவரும் என்றும் தீர்மானித்துக்கொண்டாள். அடுத்து தன்னையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது. உடனே தொலைபேசியை எடுத்து சிகை அலங்கரிப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு நேரத்தையும் முன்பதிவும் செய்தும் கொண்டாள். ரஞ்சினிக்கு ஒரே ஆர்வமாக இருந்தது . மனதினுள் பட்டாம்பூச்சி பறப்பது போல் குதூகலித்தாள் . நாளையுடன் தனது வாழ்வு மலர்ப்போவதை எண்ணி அவளுக்கு விருப்பமான பாட்டை முனுமுனுக்க தொடங்கினாள் . ரஞ்சினி மிகவும் கெட்டிக்காரி. சமையலிலும் மிகவும் கைதேர்ந்தவள் . நாளை ராஜன் இவளிடமிருக்கப் போகிற மாற்றத்தைப் பார்த்து அதிசயிக்கப் போவதை எண்ணி பரவசப்பட்டாள் .

 

ஆனால் மறுநாள் ராஜன் அவளில் ஏற்றப்பட்ட மாற்றத்தை கவனித்ததாகவே தெரியவில்லை. ரஞ்சினி சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று வந்ததிலிருந்து இவன் தன்னை கவனிப்பானா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது முடியை மிக நேர்த்தியாக ஆனால் நீளம் குறையாது அலங்கரித்திருந்தனர் அச்சிகை அலங்கரிப்பாளர் . அவளே ரஞ்சினியை பார்த்து யூ அர் வெரி பியுட்டி புல்! என்று புகழ்ந்து தள்ளி இருந்தாள்.

தன் கணவன் தன்னில் மயங்கப்போகிறான் என்று இவள் ரகசியமாக புன்னகைத்தாள். ஆனாலும் சமைப்பதில் மும்முரமாக இருந்தபடியால் கணவனால் இவளை நன்கு கவனிக்க முடியாமல் போய் விட்டது போலும் . விருந்தினரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்தார்கள் . உள்ளே வந்தவர்கள் ரஞ்சினியிடம் கைலாகு கொடுத்தனர். ராஜனின் அதிகாரி திரு ஜோர்ஜின் மனைவி அப்படியே ரஞ்சினியை தழுவிக்கொண்டு ராஜன் எங்கு போய் இப்படி ஒரு பேரழகியை கண்டு பிடித்தாய் . உன்னை பாராட்டுகிறேன் என்ற கூறுகையிலே தான் ராஜனும் தன் மனைவியை நன்றாக நோக்கினான் . அவளிடம் பெரும் மாற்றம் தென்பட்டது . உடை உடுத்தியிருந்த விதத்திலும் ஒரு மாற்றம் தெரிந்தது . வழமையான சல்வார் கமீசிலிருந்து விடுபட்டு ஒரு அழகிய உடை அணிந்திருந்தாள் . இப்பொழுது அவளை யார் பார்த்தாலும் இவள் வெளிநாட்டிலே பிறந்து வளர்ந்தவள் என்று தான் கூறுவார்கள் . ரஞ்சினி இவனது பார்வையை விளங்கிக்கொண்டாள் . திரு ஜோர்ஜையும் அவர் மனைவியையும் உபசரித்து உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு முன் உணவாக கட்லட்ஸ்யை பரிமாறினாள். அதன் பின் பிரதான உணவாக பிரட் ரைஸ் , தண்டூரி பொரியல் , கிழங்கு பிரட்டல் என்று வெள்ளையவரையும் கவரும் விதமாக பலவகையாறக்களை பரிமாறினாள். விருந்துக்கு வந்தவர்களோ வயிறு நிறைய உண்டார்கள் . உண்டது மட்டுமின்றி ஒரேயடியாக சாப்பாட்டை பற்றி புகழ்ந்து தள்ளினர் .

ராஜனைப் பார்த்து நீ மிகவும் அதிஷ்டசாலி . ஒரு அழகிய மனைவி மட்டுமின்றி இப்படி சுவையாக சமைக்கும் பெண்டாட்டியும் கிடைத்து விட்டாள். நீ எமக்கு முதலே கூறியவாறு ஸ்பகெட்டி தயார் செய்திருந்தால் நாம் இப்பொழுது உண்ட மாதிரி சாப்பிட்டிருக்க மாட்டோம் . உன் மனைவி எமக்கு ஏற்றாப்போல் காரத்தை குறைத்து எவ்வளவு கவனமாக சமைத்திருக்கிறாள் . அவளுக்காகவேனும் உன் வேலையில் பதவி உயர்வு மிக விரைவில் காத்திருக்கிறது என்று வேறு பாராட்டிச் சென்றனர் . ராஜனுக்கும் ஒரு புறம் மகிழ்ச்சி . ரஞ்சினி எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக தான் செய்திருந்தாள். விருந்தும் மிக வெற்றியாகவே முடிந்து விட்டது அது மட்டுமின்றி அவனுக்கு பதவி உயர்வு வேறு கிடைக்கிறது. வேறு என்ன வேண்டும் ! அன்று எல்லாமே சந்தோஷமாக நிறைவு பெற்றது. ரஞ்சினி கணவனிடம் மாற்றத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள்.

அடுத்த நாள் காலை காப்பியைக் கலந்து ராஜனிடம் கொடுத்து விட்டு மகிழ்வுடன் ராஜன் இன்று நீங்கள் வேலை முடிந்து வந்த பிறகு நாம் இருவரும் வெளியே செல்வோமா? என்று ஆர்வத்துடன் கேட்டாள் . ராஜன் உடனே வெடுக்கென்று நேற்று ஜோர்ஜ் கூறினார் என்று இன்று கட்டை சட்டை போட்டுக் கொண்டு கிளம்ப வேண்டாம் . எனக்கு வேலை முக்கியம் . நான் மட்டும் தான் இந்த குடும்பத்தில் உத்தியோகம் பார்க்கிறேன் . மற்ற மற்ற குடும்பகளில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைக்கிறார்கள் . நீ வீட்டில இருக்கிறவள். கொஞ்சம் எனக்கு ஏற்றமாதிரி சமைக்கவேனும் பழகிக் கொள் . ஜோர்ஜை பார்த்து பல்லை இழித்துக் கொண்டு நின்ற மாதிரி எல்லோரிடமும் இழிக்காதே . என்ன நான் சொல்வது புரிந்ததா ? ஒரேயடியாக பொரிந்து தள்ளி விட்டு ராஜன் விடு விடுவென்று கிளம்பினான் .

ரஞ்சினி அப்படியே உறைந்து போய் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள். அவளுக்கு ராஜி அக்கா எப்பொழுதும் கூறும் பலர் பலவிதம் , சிலர் சிலவிதம் , அதில் இவர் தனி விதம் என்று கூற்று உடனே நினைவில் வந்தது . தன்னிடம் ஒரு குறையும் இல்லை ! ராஜனிடம் தான் குறை இருக்கிறது . அவனது குணமே இது தானோ . இக்குணம் என்றாவது மாறுமோ அல்லது வாழ்நாள் போதும் நான் அவதியுற வேண்டி இருக்குமோ ? என்று ரஞ்சினி கவலைப் பட தொடங்கினாள் . பேதை ரஞ்சினிக்கு தன் கணவன் குணம் மாற வேண்டும் என்ற ஏக்கம் அவளிடம் அப்படியே ஒட்டிக்கொண்டது.

மீரா குகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவிலையே .

கதை நன்றாக இல்லையா ?

குறைகளை தெரிவித்தால் என்னை திருத்திக்கொள்ள முடியும் அல்லவா  .

நன்றி யாழ் சகோதர , சகோதரிகளே .

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது மீரா. இப்படித்தான் எத்தனையோ பேர். சுயநலமிகளாக பெண்களை வெறும் பொருட்களாக எண்ணிக் காலங்களிக்கின்றனர். மற்றவர் கருத்திடாவிட்டாலும் நிறையப்பேர் பார்த்திருக்கிறார்கள் உங்கள் கதையை. அதனால் தொடர்ந்து எழுதுங்கள். கவலையை விட்டு.


இன்னும் கொஞ்சம் சிறிதாகப் பந்தி பிரித்தீர்கள் என்றால் வாசிக்க இலகுவாக இருக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்

நீ வீட்டில இருக்கிறவள். 

இப்படியான நினைப்புதான் ராஜன் போன்றவர்களின் அடாவடிக்கு மூலதனம். பெண்கள் தற்சார்பு அடையும்போது மட்டுமே இத்தகைய அலங்கோலங்கள் குறையும்.

உங்கள் கதை நன்றாக இருக்கு.. :D ஆனாலும் எங்களில் கொஞ்சப்பேர் வாசிக்க பஞ்சி பிடிச்ச ஆக்கள்..! :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையின் கரு நன்றாக இருக்கு..

 

தொடருங்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையின் கரு நன்றாக இருக்கு..

தொடருங்கள்..........

என்னத்தை தொடருறது?? :unsure: கதை முடிஞ்சிட்டுது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ இன்னமும் அந்தக்காலத்திலேயே இருக்கின்றா ... கதையின் நாயகியைப் பற்றிச் சொல்கின்றேன்.
இப்பவெல்லாம் திருமணம் என்பது ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே நடக்கின்றது.

 

பிடிக்கவில்லையென்றால் அடுத்த கட்டத்திற்கான ஆயுத்தங்களைச் செய்ய வேண்டும் :wub::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக எழுதியுள்ளீர்கள் மீராகுகன் வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று எத்தனையோ வீடுகளில் இப்படியான கதை இருப்பதை பார்க்கிறோம். பெண்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையை ஒதுக்கிவிட்டு இசை சொன்னதுபோல் தற்சார்பு நிலையை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் தம் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். நல்ல கரு தொடர்ந்தும் எழுதுங்கள்.

வெளிநாட்டு கனவுகளுடன் வாழ்க்கைப்பட்டு வந்த எத்தனையோ பெண்களின் உண்மை நிலை இது!
நன்றாக எழுதியுள்ளீர்கள் மீரா. பாராட்டுக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை தொடருறது?? :unsure: கதை முடிஞ்சிட்டுது.. :lol:

 

 

இதைத்தான் நானும் நினைத்தேன்

கரு நல்லா இருக்கு  என எழுதியதற்று இதுவே காரணம்

கதையில் ஏதோ ஒன்று தொங்கி நிற்குது... :)

 

 

தொடருங்கள்.

என எழுதியது

அடுத்த கதைகளுக்காக..... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கதையில் ஏதோ ஒன்று தொங்கி நிற்குது... :)

 

 

 

கதையைத் தொடர்ந்தால் இப்படியே காலம் கடக்கும் போது

ரஞ்சனி வேலைதேடிச் செய்யும்போது யாருடனும் எஸ்கேப் ஆகிவிடலாம்

அதனால் இப்போதே கதை கட் :):D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நன்றாக இருக்கிறது மீரா. இப்படித்தான் எத்தனையோ பேர். சுயநலமிகளாக பெண்களை வெறும் பொருட்களாக எண்ணிக் காலங்களிக்கின்றனர். மற்றவர் கருத்திடாவிட்டாலும் நிறையப்பேர் பார்த்திருக்கிறார்கள் உங்கள் கதையை. அதனால் தொடர்ந்து எழுதுங்கள். கவலையை விட்டு.

இன்னும் கொஞ்சம் சிறிதாகப் பந்தி பிரித்தீர்கள் என்றால் வாசிக்க இலகுவாக இருக்கும்

 

மிகவும் நன்றி சகோதரி சுமேரியர் . உங்கள் பாராட்டு என்னை சந்தோஷப்பட வைத்தது .

யாழில் இணையும் முன்னரே உங்கள் போருக்கு பின்னைய சம்பவம் ஒன்றை பற்றி எழுதிஇருந்தீர்கள் . 

அக்கதை என்னை மிகவும் பாதித்தது .

நிச்சயம் அடுத்த கதையில் சிறிய பந்திகளாக எழுதுகிறேன் . நன்றி

கதையைத் தொடர்ந்தால் இப்படியே காலம் கடக்கும் போது

ரஞ்சனி வேலைதேடிச் செய்யும்போது யாருடனும் எஸ்கேப் ஆகிவிடலாம்

அதனால் இப்போதே கதை கட் :):D

 

 

என்ன வாத்தியரே , நீங்களே கதையை தொடர்ந்து முடிவையும் கூறி விட்டீர்கள் .

சீச்சீ, நம் தமிழ் பெண்கள் அப்படி இல்லையே .

இதைத்தான் நானும் நினைத்தேன்

கரு நல்லா இருக்கு  என எழுதியதற்று இதுவே காரணம்

கதையில் ஏதோ ஒன்று தொங்கி நிற்குது... :)

 

 

தொடருங்கள்.

என எழுதியது

அடுத்த கதைகளுக்காக..... :icon_idea:

 

நன்றி விசுகு பாராட்டுகளுக்கு .

உண்மை தான் முடிவில் மாற்றத்தை எதிர்பார்த்து முடிவில்லாமல் முடித்து விட்டேன் .

வெளிநாட்டு கனவுகளுடன் வாழ்க்கைப்பட்டு வந்த எத்தனையோ பெண்களின் உண்மை நிலை இது!

நன்றாக எழுதியுள்ளீர்கள் மீரா. பாராட்டுக்கள்!!!

 

மிகவும் நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு தமிழினி .

உண்மை தான் எமது பெண்களின் நிலை மாற வேண்டும் .

தாங்களே தங்களுக்குள் கொஞ்சம் தன்னம்பிகையை வளர்த்து கொள்ள வேண்டும் .

கதை நன்றாக எழுதியுள்ளீர்கள் மீராகுகன் வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று எத்தனையோ வீடுகளில் இப்படியான கதை இருப்பதை பார்க்கிறோம். பெண்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையை ஒதுக்கிவிட்டு இசை சொன்னதுபோல் தற்சார்பு நிலையை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் தம் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். நல்ல கரு தொடர்ந்தும் எழுதுங்கள்.

 

மிகவும் நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு கண்மணி .

சரியாக சொன்னீர்கள் . உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி .

இவ இன்னமும் அந்தக்காலத்திலேயே இருக்கின்றா ... கதையின் நாயகியைப் பற்றிச் சொல்கின்றேன்.

இப்பவெல்லாம் திருமணம் என்பது ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே நடக்கின்றது.

 

பிடிக்கவில்லையென்றால் அடுத்த கட்டத்திற்கான ஆயுத்தங்களைச் செய்ய வேண்டும் :wub::D:lol:

 

வாத்தியாரே , ஒரு கணம் திடுக்கிட்டுடன். பேந்து தான் தொடர்ந்து வாசிச்சு நிம்மதியாச்சு ,

என்ன நீங்க சரியான முற்போக்குவாதியாக இருக்கிறீங்க .!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான நினைப்புதான் ராஜன் போன்றவர்களின் அடாவடிக்கு மூலதனம். பெண்கள் தற்சார்பு அடையும்போது மட்டுமே இத்தகைய அலங்கோலங்கள் குறையும்.

உங்கள் கதை நன்றாக இருக்கு.. :D ஆனாலும் எங்களில் கொஞ்சப்பேர் வாசிக்க பஞ்சி பிடிச்ச ஆக்கள்..! :lol::o

 

உண்மை இசை . ராஜன் போன்றவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும் .ஆனால் நம் தமிழீழ பெண்களின்

சுபாவமே இது தானே . தங்கள் கணவர்களை சந்தோஷப்படுத்தவே எப்பவுமே முயலுவர் .

 

யாழ் சகோதர சகோதரிகள் நான் கேட்டவுடன், தங்கள் நேரத்தை ஒதுக்கி உடனே வாசிச்சு தங்கள் கருத்துகளையும்

தெரிவித்து விட்டீர்கள் . உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

யாழில் ஒரே குடும்பத்தில் உள்ள அங்கத்தவள் போன்று உணர்கிறேன் . மிக அண்மையில் இணைந்த என்னை நீங்கள்

எல்லோரும் இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மீராகுகன முடிவைக் கேள்விக்குறியாக்கிவிட்டு நிறுத்திவிட்டீர்கள். துணைவனுக்கான விட்டுக்கொடுப்புகள் அவனுக்காகவே அவன் விரும்பியவாறே என்று பெண்ணை மிகவும் பிற்போக்குத்தனமாக கதாப்பாத்திரத்தின் ஊடாக அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். எப்போது ஒரு பெண் தன் சுயத்தை தொலைத்து முடக்கப்படுகிறாளோ அதற்குப் பின்னால் அவளுக்கான எதிர்பார்ப்பு என்பது எதுவுமே இல்லை. மாற்றத்திற்கான சாத்தியத்தை தராத வகையில் ஆணின் ஆளுமையை ஓங்க வைத்திருக்கிறீர்கள்... இன்றைய காலத்தில் இவ்வகையான நிலை குறைவு ஓரளவுக்காகிலும் பெண்களை ஆண்கள் மதிக்கும் நிலையைக் காணமுடிகிறது.

 

மீராகுகன் மேலே இசை சொல்வதுபோல வாசிக்க பஞ்சிப்படும் பழக்கம் இப்போது அதிகந்தான் அதற்காக நேரம் குறைந்தவர்களை அந்தவகையில் சேர்த்துவிடாதீர்கள்.  தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை இடுங்கள் வாசிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீராகுகன முடிவைக் கேள்விக்குறியாக்கிவிட்டு நிறுத்திவிட்டீர்கள். துணைவனுக்கான விட்டுக்கொடுப்புகள் அவனுக்காகவே அவன் விரும்பியவாறே என்று பெண்ணை மிகவும் பிற்போக்குத்தனமாக கதாப்பாத்திரத்தின் ஊடாக அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். எப்போது ஒரு பெண் தன் சுயத்தை தொலைத்து முடக்கப்படுகிறாளோ அதற்குப் பின்னால் அவளுக்கான எதிர்பார்ப்பு என்பது எதுவுமே இல்லை. மாற்றத்திற்கான சாத்தியத்தை தராத வகையில் ஆணின் ஆளுமையை ஓங்க வைத்திருக்கிறீர்கள்... இன்றைய காலத்தில் இவ்வகையான நிலை குறைவு ஓரளவுக்காகிலும் பெண்களை ஆண்கள் மதிக்கும் நிலையைக் காணமுடிகிறது.

 

மீராகுகன் மேலே இசை சொல்வதுபோல வாசிக்க பஞ்சிப்படும் பழக்கம் இப்போது அதிகந்தான் அதற்காக நேரம் குறைந்தவர்களை அந்தவகையில் சேர்த்துவிடாதீர்கள்.  தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை இடுங்கள் வாசிப்போம்.

 

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சஹாரா . இக்கதை ஒரு உண்மை கதையாகவே கொள்ளலாம் . நம் தமிழ் பெண்கள் பொதுவாகவே எமது ஊரிலிருந்து நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்து பின் பலவகைகளில் ஏமாந்து போனாலும் நாம் வாழ்ந்த கட்டுகோப்பான வாழ்க்கை முறை மற்றும் எமது காலாச்சாரம் நிமித்தம் இன்னும் துணிந்து எந்த முடிவுகளையும் எடுக்க தயங்குகிறார்கள் . எல்லோராலும் மதிக்கும் குடும்பத்திலிருந்து வருபவர்கள் தமது பெற்றோர் உறவினர் மத்தியில் தலைகுனிய வைக்க விரும்பாது என்றாவது ஒரு மாற்றம் வருமா என்று காத்திருக்கும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள் . கனடா நாட்டில் பல பெண்கள் வேலை செய்வதனால் அவர்கள் தங்கள் கால்களில் நிற்க முடியுமாதலால் முன்னேறியிருக்கிறார்கள் . ஆனால் ஜேர்மன் நாட்டில் மொழி பிரச்சனை காரணமாக படித்த பெண்களே ஒரு நல்ல வேலையில் இணைய முடியாது இன்னும் வீட்டில் கணவனை நம்பி வாழும் நிலை உள்ளது . உங்களுக்கு தெரியுமா ? அங்கு பெண்ணின் அழகில் மயங்கி அவசரப்பட்டு கலியாணம் செய்து கொண்டு வந்து பின் இங்கேயே வாழும் கணவனின் பெற்றார் எங்கே தங்கள் மகன் பெண்டாட்டிக்கு மயங்கி தங்களை கவனிக்க முடியாது போய் விடுவானோ என்ற பயத்தில் கணவன் மனைவிக்கு இடையில் வேண்டுமென்றே கருத்து வேறுபாடு கொண்டு வந்து சுயலாபம் கொள்பவர்களும் இருக்கிறார்கள் . நான் சொல்வது முற்றிலும் உண்மை . ஆனால் அந்த அப்பாவி பெண் குழந்தைகள் , சுற்றாடல் என்று பலவித காரணங்களினால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது . தனது குடும்பம், உறவினர் ஒருவரும் அருகில் இல்லாது அவள் தனிமை படுத்தபட்டிருப்பதும்  ஒரு காரணமாகும். உலகம் எவ்வளவோ முன்னேறியிருந்தும் எம் தமிழ் பெண்களை எமது கலாச்சாரம் , ஆண்கள் இன்னும் ஓரளவுக்கு அடிமைப்படுத்த தான் செய்கிறார்கள் .

மனதிலிருந்ததை அப்படியே கொட்டி விட்டேன் . பிழையாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும் .நீங்கள் தொடர்ந்தும் எனது பிழைகளை தயவு செய்து சுட்டிக்காட்டவும் . மிகவும் சமீபமாகவே நான் எழுத தொடங்கியுள்ளேன் . ஆகவே ஒவ்வொருவரது கருத்தும் என்னை திருத்தி மெருகூட்ட உதவி செய்யும் . மிகவும் நன்றி சஹாரா . மீரா என்றே அழையுங்கள் .

நன்றாக எழுதுறீங்கள் மீரா. உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் சொற்களும் அழகாக இருக்கின்றன. தொடருந்தும் எழுதுங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக எழுதுறீங்கள் மீரா. உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் சொற்களும் அழகாக இருக்கின்றன. தொடருந்தும் எழுதுங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

 

உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி பகலவன். நீங்கள் தரும் ஊக்கம் நிச்சயம் என்னை வளப்படுத்தும் .

நான் எழுதும் காதல் தொடர் கதையை வாசித்தீர்களா ?

உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி பகலவன். நீங்கள் தரும் ஊக்கம் நிச்சயம் என்னை வளப்படுத்தும் .

நான் எழுதும் காதல் தொடர் கதையை வாசித்தீர்களா ?

வாசித்தேன் நன்றாக இருக்கிறது. உங்கள் எழுத்து வித்தியாசமாக இருக்கிறது. உணர்விலே எழுதுவது போல அருமையாக இருக்கிறது. கிட்ட இருந்து பார்ப்பது போல இருக்கிறது. தொடர்ந்தும் எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.