Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி

Featured Replies

கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி APR 23, 2015by கார்வண்ணன்in செய்திகள்

flag-3-300x200.jpgகோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும், சிறிலங்காவின் தேசியக் கொடியை ஒத்த சிங்கக்கொடிகள் காணப்பட்டன.

சிறிலங்காவின் தேசியக்கொடியில், தமிழ், முஸ்லிம் இனங்களை அடையாளப்படுத்தும், செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பகுதிகள் நீக்கப்பட்டு அந்தக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் தேசியக்கொடியின் வடிவமைப்பின் மாற்றம் செய்வது குற்றமாகும்.

flag-1.jpg

flag-2.jpg

flag-3.jpg

flag-4.jpg

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

அந்த தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறித்தும் நீதிமன்றத்துக்கு காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/04/23/news/5486

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நன்மைக்கே..

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தியோராம் நூற்றாண்டில்... வாழும் கோவணாண்டிகள்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கொடிகளில், முஸ்லீம் மக்களை அடையாளப் படுத்தும், பச்சை நிறம் இல்லை.
அதற்கு...  அந்த, சோம்பேறி புத்திசாலியான...... நய வஞ்சக இனமே, அமைதியாக இருக்கும் போது,

நாம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

 

tamileelam_national_flag.jpg

 

எமது, கொடி... புலிக் கொடி.   :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை பிரித்து விட்டார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.