Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே: இரா.சம்பந்தன்

Featured Replies

article_1430144827-Sampanthan.jpg
 
மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 
 
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர். 
 
இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன், 'நாடாளுமன்றத்தின் மீது எந்த நேரத்திலும் பாரிய தீங்கை விளைவிக்கக்கூடிய ஒன்றாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் இருந்தது. அது, ஜனாதிபதியின் தயவில் நாடாளுமன்றம் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது' என்றார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

article_1430144827-Sampanthan.jpg
 
மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 
-----

 

இவர் தானே.... அவரை ஜனாதிபதியாக்கியவர்.

இப்ப... ஏன் இருந்து புலம்புறார்.

 

முதலில்.... சம்பந்தன், ஜனாதிபதி தேர்தலில்.... ஏன் ஓட்டுப் போடவில்லை என்பதை... வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

 

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். 

மீண்டும் மீண்டும் தமிழரசுக் கட்சி & TNA  தலைவர் பதவியில் இருக்க ஆசைபடும் ஒருவர் , மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார் என கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது. ஊருக்குதான் உபதேசம் உனக்கு இல்லையடி .... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இவை எதிர்கட்சி ஸ்தானத்தில் இருக்கும் போது தான்.. ஜே ஆர் இவற்றைக் கொண்டு வந்தார். அப்பவும் அதற்கு முதலும்.. ஒன்றுமே இவர்களால் புடுங்க முடியல்ல. சிங்களவன் தான் நினைச்சதை எல்லாம் தமிழினத்தின் மீது செய்திட்டு இப்ப உலகிற்கு ஒப்புக்காட்ட இதுகளை தங்க இஸ்டத்துக்கு குறைகிறான்.. அதுவும் தங்களின் தேவைகளுக்கு. இவர் இப்பவும் கிடந்து தானும் தானும் என்று புலம்பிறார்.
 
இவர் போய் சிங்களவனின் சுதந்திர தினத்தில் குந்துவார்.. சொந்த மக்களின் பிள்ளைகளான.. மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யமாட்டார். அப்படிப்பட்ட ******.. இதைச் சொல்லி சிங்களவனுக்கு ஆகப் போவது.. தமிழ் மக்களின் போராட்டத்தை உலக அரங்கில் கொஞ்சைப்படுத்த வாய்ப்புத்தான்.
 
இந்த ******.. தமிழ்  மக்களின் போராட்டத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ.. தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்த முடியுமோ.. அதைச் செய்துகிட்டே இருக்கின்றார். ஆனால் சிங்கள எஜமானர்கள் மனம் கோணக்கூடாது என்பதில் மிக அக்கறையாக உள்ளார். :icon_idea::rolleyes::)

 

 

 

நியானி: அரசியல் தலைவர்களை அஃறிணையில் விளிப்பதையும், அவமரியாதையான வார்த்தைகளைப் பாவிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தமிழ் மக்களுக்குத் தலைவராகத் தகுதியற்றவர்.இப்படிச் சொல்லுவதிலும் பார்க்க ஏதாவது ஒரு சிங்களக் கட்சியில் சேர்ந்து அரசியல் செய்வது நல்லது.ஜனாதிபதி அருமையானவர்.ரணிலும் நல்லவர். ஆகவே அவர்களை எதிர்த்து ததேகூட்டமைப்பு சார்பில் தேர்தலில் நிற்காது அவர்களின் கட்சியிலேயே தேர்தலுக்கு நிற்கவும்.தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்த் தேசியம் பேசிக்கிட்டு வந்தால் நடக்கிறடீத வேற.வாயில மரியாதைக் குறைவான வார்த்தைகள்தான் வருது.எப்போதும் நல்ல வார்த்தைகளைப் பேசும் என்னை தரக்குறைவான வார்த்தைகளைப் பேச வைத்திடுவார் போல இருக்குது.தமிழினத்தை விற்றப் பிழைக்கும் இவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே: இரா.சம்பந்தன்

 

சரணம் மைத்திரி ஐயா...

சரி

ஏதாவது தமிழருக்கு தருவாரா கேட்டுச்சொல்லுங்க சம்பந்தர் ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்

 

article_1430144827-Sampanthan.jpg
 
மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

 

அருமையானதொரு சனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளபோது! எதற்காக அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்..!! நல்லவரிடம் அதிகாரம் இருந்தால், அவர் நல்லவற்றை அதிகாரத்துடன் செய்யமுடியும். மற்றவர்களின் தயவைநாடிச் செல்லவேண்டிய தேவையும் ஏற்படாது. நல்லவற்றைச் செய்து முடித்தபின்  சனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்துவிட்டால், தொடர்ந்து வரக்கூடிய சனாதிபதிகள் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்திலும், அவர்களால் மக்களுக்குத் துன்பம் வராது பாதுகாக்க முடியும்.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.